Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
என்னை திட்டாமல், நான் வலியுறுத்தும் கொரொனா பரிசோதனையை அதிகரியுங்கள்-மனோ
என்னை திட்டாமல், நான் வலியுறுத்தும் கொரொனா பரிசோதனையை அதிகரியுங்கள்-மனோ
அரசுக்கு மனோ வலியுறுத்தல்
என்னை திட்டி தீர்க்காமல், எனது யோசனையை, கொரொனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில், ஒன்றாக உறங்கி, வேலை
செய்து, பயணித்து வாழ்ந்த, ‘முதல் தொடர்பாளர்’களை (First Contact Persons) கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து
சோதனை செய்யுங்கள் என்று சொன்னேன். ‘முதல் தொடர்பாளர்’என்றால், இன்று கொழும்பில் சோதனையின் பின்னர்
கண்டுபிடிக்கப்பட்ட, 24 பேர் போன்றோர். நாட்டை முழுமையாக திறந்து, இயல்பு நிலைமை திரும்பி விட்டது எனக்காட்ட முன், ‘முதல்
தொடர்பாளர்’களை கண்டறிந்து சோதனை செய்து முடியுங்கள் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக
மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது,
இந்த ‘முதல் தொடர்பாளர்’ 40,000 பேரையும் பரிசோதியுங்கள் என்று ஊடக மாநாட்டில்நான் நான் கூறியதை பிடித்துக்கொண்டு, நான்
அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் போட “பொய் தகவல்” தந்ததாக, என் கருத்தை திரித்து கூறினார்கள்.
அமைச்சர்கள் எஸ்பி திசாநாயக்க, முன்னாள் எம்பி கம்மன்பில, இன்னும் பல அரசாங்க அமைச்சர்கள் உள்ளிட்டு, கடந்த
ஆட்சிகாலத்திலிருந்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துகளை வெளியிட்டுவரும் டேன் பிரியசாத் என்ற சிங்களே
தேசிய இயக்கத்தை நடத்துவரும் நபர் உட்பட பலர் என்னைப்பற்றி கேவலமாக பேசினார்கள். இவர்களது இணையம் முழுக்க என்னை
, “வெளிநாட்டுக்காரன், கள்ளத்தோணி, பறத்தமிழன், சக்கிலியன், புலி, பிசாசு” என்றெல்லாம் சுந்தர சிங்களத்தில் திட்டிதீர்த்தார்கள்.
அரசு ஆதரவு தமிழ் முகநூல் போலி கணக்குகளும் என்னை விமர்சனம் செய்தன.
இதற்கிடையில் பௌத்த தகவல் நிலைய இயக்குனர் ஜிநானந்த தேரர் என்னை கைது செய்யும்படி பொலிஸ் மாதிபரிடம் புகாரும்
செய்தார். பொலிஸ் வீட்டுக்கு வரும்வரை பார்த்துகொண்டு இருந்தேன். ஆனால், என்னை தேடி பொலிஸ் வரவில்லை.
தமிழரோ, முஸ்லிமோ, அரசியல்வாதிகள், தேசிய பிரச்சினைகள் பற்றி பேசக்கூடாது. வாயை மூடிக்கொண்டு வீசுவதை
பொறுக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்பது இவர்களது எழுதப்படாத சட்டம். எல்லோரையும் போல் நான் “கப்சிப்” ஆள் இல்லை என இவர்களில் சிலருக்கு இன்னமும் தெரியவில்லை.
‘முதல் தொடர்பாளர்’ என்ற இப்படியானோர், சுமார் 40,000 பேர் இருப்பதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா கட்சி தலைவர்
கூட்டத்தில் சொன்னதைதான் நான் சொன்னேன் என்று நேற்று விசேட ஊடக மாநாட்டில் நான் சிங்களத்தில் உரக்க சொன்னதும்,
இவர்கள் “கப்சிப்” ஆகி விட்டார்கள். பெரிய இடத்தில், இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோ,
என்னவோ! போதாதற்கு அவர் பாடசாலை, பல்கலைக்கழக திறப்புகளுக்கு எதிராகவும் பேசியுள்ளார்.
இந்நிலையில், இன்று கொழும்பில் சோதனையின் போது ஒரே நாளில், ஒரே இடத்தில் 24 பேர் அகப்பட்டவுடன், என்னை திட்டிய
நபர்கள் இப்போது “இஞ்சி தின்ற குரங்குகளை” போல முழிசிக்கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் ஊரடங்கை நீடித்துள்ளார்கள்.
இவற்றையிட்டு நான் மகிழ்ச்சியடையவில்லை. தேர்தல் நடத்த வேண்டும் என்ற அசிங்க அவசரத்தை கைவிட்டு, அரசாங்கம்
எங்கள் கருத்துகளையும் உள்வாங்கி, சுகாதார நிவாரண, வாழ்வாதார நிவாரண நடவடிக்கைகளையும் முன்னெடுக்க
கூறுகிறேன். முதற்கட்டமாக, ‘முதல் தொடர்பாளர்’ களை தேடிப்பிடித்து, “சோதனை, சோதனை, சோதனை” செய்யுங்களப்பா…. அவ்வளவுதான்!
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தனது அதிகாரபூர்வ முகநூலில் எழுதியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்க குற்ற தடுப்பு பிரிவினரால் கைது
செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் ,அவர் தற்பொழுது விடுதலை பிணையில் செய்யப் பட்டுளளார்
ஆளும் அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன
அதன் தொடர்ச்சியே இவ்வாறான மிரட்டி ,அடிபணிய வைக்கும் கைதுகள் என தெரிவிக்க படுகிறது

கொரோனா நோயால் 295 பேர் பாதிப்பு
இன்றைய தினம் (2020.04.20) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்கு
உள்ளாகி உறுதி செய்யப்பட்ட பதிய நோயாளர்கள் 24 பேர் பதிவாகியிருப்பதாக
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 295 ஆகும்.
இன்றை தினத்தில் பதிவான அனைத்து நோயாளர்களும் கொழும்பு 12 பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் தனிமைப்படுத்தல்
நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் மத்தியில்
இருந்து அடையாளங்காணப்பட்டவர்கள் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்
ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும் நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.
ஏப்ரல் 24 வெள்ளி இரவு 8.00 மணிக்கு இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.
அந்தவகையில் வார இறுதி நாட்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகள்
போன்றவை தொடர்பில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள், அறிவுறுத்தல்களில் மாற்றங்கள் இல்லை
இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்
இலங்கையில் வெடிக்க இருந்த குண்டு – தப்பிய மக்கள்
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பின்னரும் மற்றுமொரு
பயங்கரவாத தாக்குதலை நடக்க திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதுதொடரபாக மேலும்
தெரிவிக்கையில் ,கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து மேற்கொள்ள
திட்டமிடப்பட்ட இரண்டாவது தாக்குதல் குறித்து தகவல்கள் புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம்
கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் இந்த தாக்குதலைத் திட்டமிட்டமை தொடர்பில் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு
பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவரது தொழில் ரீதியான தொடரின் அடிப்படையில் இடம்பெற்ற தொடர்பு மற்றும்
தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவில்லை. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சமிபத்தில்
மேற்கொண்ட விரிவான விசாரணையின் அடிப்படையிலேயே சட்டத்தரணி கைது இடம்பெற்றதாகவும் கூறினார்.
ஒரு சில அமைப்புகளை ஆரம்பித்து அதற்கு தலைமைத்துவம் வழங்கி, அதற்கு நிதியுதவி வழங்கிய நபர்கள் குறித்த விடயங்களும்
தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவ்வாறானோரும் தற்போது
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் . உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர்
பயங்கரவாத தலைவர் ஸஹ்ரான் ஹாசிமின் குழு இரண்டாக பிளவுபட்டதாகவும், அதில் ஒரு குழு பிரிந்து சென்றதோடு, மற்றைய
குழுவே இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன புலனாய்வுப் பிரிவினரை திசைதிருப்புவதற்காக பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி இது என்றும் கூறினார்.
இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்துவதற்காக சில அமைப்புகளுடன்
இணைந்து பணியாற்றியுள்ளமை மற்றும் இஸ்லாத்தை தவறான விளக்கங்கள் மூலம் வெளிப்படுத்தி ஒரு சில இளைஞர்களை
பிழையாக வழி நடாத்திச் சென்றுள்ளனர். இதில் இக்குண்டுதாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.
இவ்வாறான திட்டத்திற்கு உதவி ஒத்தாசை, அதனைத் தூண்டியமை உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டவர்கள் தொடர்பிலும்
தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுகிறது. தெற்காசிய வலயத்திலுள்ள நாடொன்றில்
மேற்கொள்ளப்படும் தாக்குதலொன்றை அடுத்து, அதனை மேற்கொள்ளும் சில வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை, இரகசியமாக இலங்கைக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக வைத்திருக்க
உதவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை தொடர்பில் தகல்வகள் வெளிவந்துள்ளன என்று தெரிவித்த அவர் உயிர்த்த ஞாயிறு
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் ஓரிரு மாதங்களில் இடம்பெற்ற விசாரணைகளின்போதும், குறித்த சட்டத்தரணி விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்த அவர்
சமிபத்திய விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தொடர்பானவை அல்ல.
அவர் தனது கடமையில் தவறியமை தொடர்பில் வேறு குற்றத்தின் அடிப்படையிலானது எனவும் அவ்விசாரணை வேறாக
இடம்பெறுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தனர்.

ஆட வைக்கும் -சாந்தன் மகன் பாடிய காதல் பாடல் -video
ஆட வைக்கும் -சாந்தன் மகன் பாடிய காதல் பாடல் -video
ஈழ விடுதலை பாடல்களை பாடிய தேனிசை குரலோன் சாந்தன் அவர்களை புதல்வன் ,மற்றும் அவர் தம் குழுவினர் பாடிய
காதல் பாடல் தற்பொழுது இணையத்தில் பட்டையை கிளப்புது ,அந்த பாடலை நீங்கேளே பாருஙகள் ,திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்
கண்ணை காட்டியே,…கண்ணை காட்டியே ….உன் பக்கம் என்னை நீ முழுசாய் சாய்கிறாய்…..
வம்பாய் பேசியா …வம்பாய் பேசியே …..உன்னிடை முழுதாய் நினைக்க வைக்கிறாய்…..
இசை : இசை நவீனம் ஸ்ரீ நிர்மலன்
பாடியவர் : கோகுலன் சாந்தன் -பிரதா கந்தப்பு
பாடல் வரிகள் : கி.தீபன்
அருமை அட்டகாசம் ,வாழ்த்துக்கள் ,அசத்துங்க ,,,இதுபோல மேலும் பல பாடல்களை எதிர் பார்க்கிறோம் .

இணையத்தில் வைரலாகும் கொரனோ யுத்த பாடல் – வீடியோ
இணையத்தில் வைரால்கும் கொரனோ யுத்த பாடல் – வீடியோ
இலங்கையில் நீண்ட காலமாக முன்னணி இசைக்குழுவை நடாத்தி
சந்தவரான மூத்த இசையமைப்பாளர் கல்முனை சிவா அவர்கள்
இசையமைத்து வெளிவந்திருக்கும் புதிய கொரோனா பாடல் வெளிவந்துள்ளது.
பழமை என்பது எப்போதும் இனிமை. அதற்கமைய
இசையமைப்பாளர் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் பாடலுடன் தொடர்ந்து இசையமைப்பாளர் இசையமைத்த
பாடல்கள் பல வெளிவரவுள்ள.
உங்கள் அயராத உழைப்பிற்கும் ,தளராத துணிவிற்கும் ,ஓயாது இசைக்கும் படைப்பிற்கும், எமது மனமார்ந்த ,வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள்

இலங்கையில் 22, அரச நிறுவனங்களை திறக்க உத்தரவு – தடை நீக்கம்
இலங்கையில் 22, அரச நிறுவனங்களை திறக்க உத்தரவு – தடை நீக்கம்
ஏப்ரல், 22 புதன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களின்
செயற்பாடுகள் குறித்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் 22 புதன் முதல் ஒன்றுகூடி
தமது நிறுவனங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து திட்டமிட வேண்டும்.
ஏப்ரல் 22,23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் தமது பிரதித் தலைவர்கள்
உட்பட ஏனைய முக்கிய அதிகாரிகளை ஒன்றுகூட்டி அந்தந்த நிறுவனங்களின் சேவைக்கு அழைக்கப்படவுள்ள ஊழியர்களின்
எண்ணிக்கை, அழைக்கப்பட வேண்டிய அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் ஆகியவற்றை
தீர்மானிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் செயற்திட்டமொன்றை தயாரித்து 27 திங்கள் முதல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
திட்டம் பற்றி ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்குமாறும் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆக உயர்வு
இலங்கையில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 269 ஆகும்.
இன்றைய தினம் (2020.04.19) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றினால் உறுதி செய்யப்பட்ட 15 நோயாளர்கள்
பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதி செய்தார்.
இந்த நோயாளர்கள் 15 பேரும் கொரோனா தொற்று நோயாளர்களுடன்
நெருக்கமாக தொடர்பை கொண்டிருந்ததினால் கொழும்பு பிரதேசத்தில்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நினைவுகூரப்பட்ட முதன்நிகழ்வாக அன்னை பூபதி !!
மெய்நிகர் தொழில்நுட்பத்தில் நினைவுகூரப்பட்ட முதன்நிகழ்வாக அன்னை பூபதி !!
தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது மூலோபாயங்களை அடைய, காலத்தின் நிலைமைகளுக்கு அமைய தனது தந்திரோபாயங்களை
வகுத்துக் கொள்வது போல், தற்போதைய உலக நிலைமைகளுக்கு அமைய, நினைவேந்தல் நிகழ்வுகளையும், மக்கள்
சந்திப்புக்களையும் மெய்நிகர் தகவல்தொழில்நுட்ப பரிமாணத்தில் மாற்றியுள்ளதன் முதன்நிகழ்வாக தமிழீழத் தாய்மார்களது
தியாகத்தின் குறியீடாக இருக்கின்ற நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 32வது ஆண்டு தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நினைவுகூரப்பட்டது.
1988ம் ஆண்டுகளில் தமிழர் தாயகத்தில் நிலைகொண்டு தமிழர் தரப்புக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவம் யுத்தநிறுத்தத்தினை மேற்கொண்டு, தமிழீழ விடுதலைப்
புலிகளுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபடவேண்டும் என கோரிக்கையுடன் 1988ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி தனது
சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கிய அன்னை பூபதி, 31 நாட்களின் பின்னர், ஏப்ரல் 19ம் நாள் தனதுயிரை தமிழீழ தேசத்துக்கு காணிக்கையாக்கியிருந்தார்.
ஆயிரம் ஆயிரம் மாவீரர்களை தந்த தமிழீழத் தாய்மார்களது குறியீடாக அன்னை பூபதி ஆண்தோறும் நினைவுகூரப்பட்டு வரும்
நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகத்தை முடக்கியுள்ள நிலையிலும் அன்னை நினைகூரப்பட்டுள்ளார்.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் தாய்மார்கள், தமிழர் தாயகத்தில் நினைவேந்தியிருக்க, மெய்நிகர்
தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் ஊடாக புலம்பெயர் தேசங்களையும், தமிழ்நாட்டையும் ஒருங்கிணைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
கவிதை, அன்னையின் நினைவுப் பகிர்வுகள், சிறப்புரை என அமைந்திருந்த இவ்மெய்நிகர் கூட்டத்தில் அமெரிக்கா, கனடா,
பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா உட்பட தமிழ்நாட்டில் இருந்து தமிழ்உறவுகள் பங்கெடுத்து நினைவேந்திக் கொண்டனர்.
தமிழீழ தாய்மார்களின் குறியீடாக அன்னை பூபதி இருப்பதற்கு சான்றாக இன்று தமிழர் தாயகத்தில் தொடர்சியாக நீதிக்கான
போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்களது ஓயாத போராட்டத்தினை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த உறுப்பினர் பாலா அண்ணா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
தமிழீழ தேசத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் நாம் அனைவரும் நாட்டுப்பற்றாளர்களாக பங்காற்ற வேண்டுமென
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டிருந்தார்.

40,000 கொரொனா நோயாளிகள் உள்ளதாக நானா கூறவில்லை – மனோ மறுப்பு
40,000 கொரொனா நோயாளிகள் உள்ளதாக நானா கூறவில்லை – மனோ மறுப்பு
கொரொனா சோதனை பற்றிய என் கருத்தை எஸ்.பி. திசாநாயக்க திரிக்கிறார். இவரது தலையையும் சோதனை செய்ய வேண்டும்.
மனோ கணேசன்
கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பில், நேற்று முதல் நாள் தெரிவித்த கருத்தை அமைச்சர் எஸ்.பி.
திசாநாயக்க திரித்து பேசுகிறார். அதை பிடித்துக்கொண்டு ஒரு தேரர் என்னை கைது செய்ய வேண்டும் சீஐடியில் சென்றுமுறையீடு செய்கிறார்.
இவர்களை பொறுத்தவரையில் தேசிய பிரச்சினைகள் தொடர்பாக் “நாங்கள்” எதுவும் பேசக்கூடாது என நினைக்கிறார்கள்.
இந்நாட்டில் 40,000 கொரொனா நோயாளிகள் (Corona Positive) இருப்பதாக நான் கூறவேயில்லை. 40,000 “முதல் தொடர்பாளர்கள்” (First Contact Persons) இருக்கின்றார்கள் என்ற நான் கூறினேன்.
“முதல் தொடர்பாளர்கள்” என அறியப்பட்டவர்கள், கொரொனா நோயாளிகளுடன், தம் நாளாந்த வாழ்வில் நேரடியாக
சம்பந்தப்பட்டு ஒன்றாக, வாழ்ந்து, இருந்து, உண்டு வாழ்ந்தவர்களாகும். “முதல் தொடர்பாளர்கள்” என்றுதான் இவர்களை மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த, “முதல் தொடர்பாளர்கள்” பற்றி எங்களுக்கு யார் சொன்னது? மார்ச் 24ம் திகதியன்று அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில்
நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், இராணுவ தளபதி சவேந்திர சில்வாதான் தனது உரையில், இதை கூறினார். இராணுவ,
பொலிஸ் புலனாய்வாளர்கள் வீடு வீடாக போய், தெருத்தெருவாக போய், கொரொனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரென அடையாளம் கண்டுள்ளார்கள் என அவர் மேலும் கூறினார்.
இது முக்கியமான ஒரு பணி. இதையிட்டு நான் பாதுகாப்பு துறையை பாராட்டுகிறேன்.
சில அரசாங்க அரசியல்வாதிகள், மனோ கணேசனுக்கு எப்படி இந்த அரசாங்க இரகசிய தகவல்கள் கிடைக்கின்றன என கேட்கிறார்கள்.
கடவுளே, இவை இரகசிய தகவல்கள் இல்லை. கட்சி தலைவர் கூட்டத்தில் பகிரங்கமாக இராணுவ தளபதி கூறியதாகும்.
நான் கூட்டங்களுக்கு போனால், அங்கு தூங்குவதில்லை. கூட்டங்களில் பேசப்படுவது அனைத்தையும் காது கொடுத்து கேட்கிறேன்.
என்னிடம் கேள்வி கேட்கும், இந்த அரசாங்க அரசியல்வாதிகள், கட்சி தலைவர்கள் அல்ல. இதனால், இவர்கள் இந்த கூட்டங்களுக்கு வருவதில்லை. இதற்கு நான் என்ன செய்ய முடியும்?
சீன அரசு, 40,000 பரிசோதனை கருவிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக அறிந்துள்ளேன். இந்த முதல்
தொடர்பாளர்களை, இந்த பரிசோதனை கருவிகளை பயன்படுத்தி பரிசோதிக்கும்படி நான் அரசாங்கத்தை கோருகிறேன்.
கொரொனா நோயாளர்கள் இருந்தால், அவர்கள் இந்த பிரிவிற்குள்தான் அதிகமாக இருக்க முடியும். ஆகவே அவர்களை
முதலில் சோதியுங்கள் என கூறுகிறேன். சோதனை வேகத்தை அதிகரியுங்கள் எனவும் கூறுகிறேன்.
இதை நான் மட்டும் கோரவில்லை. GMOA உட்பட முழு வைத்திய சமூகமே இதைதான் சொல்கிறது.
தொடர்ந்து இப்படி முகத்தை மூடிக்கொண்டு வீடுகளுக்குள் இருக்க முடியாது. நாட்டை திறந்து விட வேண்டும். ஆனால், அதற்கு முன்
மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். ஆகவே சோதனைகளை அதிகரியுங்கள்.
நான் சொல்வதை சரியாக புரிந்துக்கொள்ள முடியாத அமைச்சர் திசாநாயக்க, நான் சொல்லாததை சொன்னதாக கூறுகிறார். பொய்
சொல்கிறார். கொரொனா நோயாளர்கள் பரிசோதிக்கப்படுவதை போன்று, அமைச்சர் திசாநாயக்கவின் தலையையும் சோதனை செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்.

கொரனோ பொலிஸ் வைரல்-சிரிச்சே வயிறு வலிக்கும் இந்த video
ஊரடங்கு வேலையில் கரன் போர்ட் விளையாடியவர்களை துரத்தும் போலீஸ் டிரோன் ,கொஞ்சம் நிண்டு பாருங்க ,,வயிறு நோகும்

மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த வன விலங்கு அதிகாரிகள்
மரத்தி ஏறிய புலி சுட்டு பிடித்த வன விலங்கு அதிகாரிகள்
இலங்கை மஸ்கொலியா சேமநல காட்டு பகுதியில் புலி ஒன்று மரத்தின்
மீது ஏறிய நிலையில் கண்டு பிடிக்க பட்டது .மேற்படி தகவல் வனவிலங்கு
அதிகாரிகளுக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து அந்த புலி மயக்க மருந்து அடித்து சுட்டு பிடிக்க பட்டது
இவ்வாறு பிடிக்க பட்ட புலி மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளது

நாளை முதல் 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் கொழும்பு, கம்பஹா,
களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 20 ஆம்
திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு அன்று இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மறு அறிவித்தல் வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் தினமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொட, அக்குரணை, வரகாபொல மற்றும் அக்கரைப்பற்று
பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 20 ஆம் முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பொலிஸ் பிரிவுகளில்
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும்.
அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலப்பிட்டி, வாழைத்தோட்டம், மருதானை
கொத்தடுவ, முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கல்கிஸ்ஸ, தெஹிவளை மற்றும் கொஹுவல ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும்
கம்பஹா மாவட்டத்தில் ஜா-எல, கொச்சிக்கடை மற்றும் சீதுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் 254 பேர் கொரனோவால் பாதிப்பு 7 பேர் பலி
இலங்கையில் 254 பேர் கொரனோவால் பாதிப்பு 7 பேர் பலி
இலங்கையில் இடம்பெற்று வந்த கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை 254 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஏழுபேர்
பலியாகியுள்ளனர் .
தனிமை படுத்தலுக்கு உள்ளான பல்லாயிரம் பேர் தற்பொழுது அந்த நோயின்
தொற்று இல்லை என கண்டு பிடிக்க பட்ட பின்னர் வீடுகளுக்கு
அனுப்பி வைக்க படுகின்றனர் என இராணுவம் தெரிவித்துள்ளது

மாதுறு ஓயா நீர் தேக்கத்தில் வீழ்ந்த யானை மீட்பு
மாதுறு ஓயா நீர் தேக்கத்தில் வீழ்ந்த யானை மீட்பு
இலங்கை மாதூறு ஓயா நீர் தேக்கத்தில் வீழ்ந்த யானை ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது
இதன் பொழுது அங்கு திரண்ட மக்கள் அதனை காப்பாற்றி கரை சேர்த்தனர்
இந்த மீட்பு பணிகள் சுமார் ஆறு மணித்தியாலங்கள் இடம்பெற்றன

மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்
மின்னல் தாக்கி பத்து வயது சிறுமி பலி – கண்ணீரில் குடும்பம்
இலங்கை மகவெலகம பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில்
பத்து வயது சிறுமி ஒருத்தி பலியாகியுள்ளார்
வானிலை மையம் சீரற்ற காலநிலை இடம்பெறும் என தெரிவிக்க பட்டு
முன் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்த பொழுதும் இந்த மின்னல்
தாக்கி சிறுமி இவ்விதம் பலியாகியுள்ளார்
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஆற துயரை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் – பின் போடப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்
கொரோனா வைரஸ் – பின் போடப்பட்ட பாராளுமன்றத் தேர்தல்
அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் அண்மைக் காலத்தில் துரிதமான பொருளாதார வளர்ச்சியை அடைந்துக்
கொண்டு, பலமாக காணப்பட்ட நிலையிலேயே அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பு ஏற்பட்டது.
எனினும், இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் மத்தியிலேயே இந்த பேரிடருக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு
வரை இடம்பெற்ற மோசமான ஆட்சி காரணமாக எமது கடன் சுமை 71% இதனால் அதிகரித்தது. ரூபாயின் பெறுமதி 30% இதனால் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வளர்ச்சி வேகம் 2.7% வரை
குறைவடைந்தது. 2019 நவம்பரில் நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசாங்கமொன்றை அமைத்த போதிலும்,
எமக்குப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமையினால், கடந்த அரசாங்கத்தின் மருந்து மற்றும் உர வழங்குனர்களுக்கு
நிலுவைப் பணத்தைச் செலுத்துவதற்கேனும் இடைக்கால கணக்கறிக்கையொன்ற நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையேற்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 150(3) ஆம் உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு கிடைக்கும் நிதி தொடர்பான ஏற்பாடுகள் மாத்திரமே ஆறுதலாக உள்ளது. இந்த அனைத்து பாதகமான
நிலைமைகளின் மத்தியிலேயே நாம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது. கடந்த மார்ச் 11 ஆந் திகதி முதலாவது கொரோனா நோயாளி அடையாளங்
காணப்பட்டவுடன், நாம் நோயினை முன்னரே இனங்காணுதல், நோயாளிகளை வேறுபடுத்தி சிகிச்சையளித்தல், அபாயத்தை எதிர்நோக்கிய நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தல்,
நோயாளிகளுடன் பழகிய நபர்களைக் கண்டறிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற கட்டுப்பாட்டு முறைமைகளை அறிமுகப்படுத்தினோம். எமது வாழ்க்கையில் இவ்வாறானதொரு
நடவடிக்கையை ஒருபோதும் கண்டதில்லை. நோய் பரவுவதைத் தடுப்பதற்காக பல வாரங்கள் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியேற்பட்டது.
நாடு முழுவதும் தமது வீடுகளிலிருந்து வெளியேற முடியாத மக்களுக்கு உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான முறைமையொன்றைத்
தயாரிக்க வேண்டியேற்பட்டது. குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு உதவி வழங்க வேண்டியேற்பட்டது. நாட்டின்
உற்பத்திச் செயற்பாட்டை நடாத்திச் செல்வதற்காக விவசாயிகள், மரக்கறி விவசாயிகள் மற்றும் மீனவர்களின உற்பத்திகளைக்
கொள்வனவு செய்ய வேண்டியேற்பட்டது. இந்த அனைத்தையும் ஒரே தடவையில் மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஒழுங்குபடுத்திக்
கொள்ள முடிந்தமை உண்மையில் முகாமைத்துவத்தின் பிரதிபலனாகும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை இன்று முழு உலகமும் ஏற்றுக்கொள்கிறது. ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பாக
தனித்துவமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார். எமது அரசாங்கத்தின் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாட்தொகுதியினர் முழு உலகினதும் கவனத்தை
ஈர்த்துள்ளனர். நோயாளிகள் பழகிய நபர்களைக் கண்டறிவதில் எமது உளவுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ள திறமை, அர்ப்பணிப்பு
காரணமாகவும், தனிமைப்படுத்தல் செயற்பாட்டை மேற்கொண்டு செல்வதில் முப்படையினர் வெளிப்படுத்தியுள்ள வினைத்திறன் காரணமாகவும் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிசார் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலான அரச ஊழியர்களும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தின்
வெற்றிக்குப் பங்களிப்பு வழங்கியுள்ளனர். இன்று கொரோனா வைரஸ் காரணமாக பாதுகாப்பற்றதாக மாறியுள்ள உலகில் எமது நாடு மிகவும் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது. அழிக்கப்பட்ட
பொருளாதாரம், இயலுமான எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திற்கு இடையூறு விளைவிக்கின்ற, நாட்டின் மீது அன்பு
இல்லாத சந்தர்ப்பவாத எதிர்க்கட்சியொன்று இந்த நாட்டில் உள்ள நிலைமையிலேயே நாம் இவ்வாறான கட்டத்தை அடைந்துக் கொண்டோம்.
தனிமைப்படுத்தலுக்குச் செல்வதை நிராகரித்தவர்களை ஊக்குவித்தமை மூலம் எதிர்க்கட்சித்தலைவர் ஆரம்பத்திலிருந்தே கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தினைச் சீர்குலைக்க
முயற்சித்தார். அதன் பின்பு, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அரச நிதியை செலவிடுவதற்கு ஜனாதிபதிக்கு
அதிகாரம் இல்லை எனக் கூறி அவர்கள் சுகாதார சேவை உள்ளிட்ட அனைத்து அரச சேவைகளையும் சீர்குலைக்க முயற்சித்தனர்.
புதிய பாராளுமன்றம் ஜூன் இரண்டாம் திகதிக்கு முன்னர் கூட வேண்டும் எனவும், பாராளுமன்றத் தேர்தலை அதற்கு முன்னர்
நடாத்த முடியாது எனவும், அதனால் பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் இன்று அவர்கள் கூறி வருகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்தமையை நாம் அறிவோம். வழக்குகள் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கேனும் தேர்தலை
நடாத்துவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தமையினால் மாத்திரமே நீதிமன்றம் சென்று தேர்தலை குறிப்பான திகதியின்றி ஒத்திவைக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில்
முடிந்தது. 2017 ஆம் ஆண்டு மாகாண சபைகள் கலைக்கப்படுவதற்கு சில நாட்களே இருந்த சமயத்தில், மாகாண
சபைத் தேர்தல் நடாத்தப்படுவதைத் தடுப்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றியமைத்தது.
அந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் என சட்டமா அதிபர்
தெரிவித்தபோது, அவர்கள் பாராளுமன்றத்தின் நடைக்கூடத்தில் மேற்கொண்ட பேரம் மூலம் வாக்குகளுக்காக கொள்கைகளைக்
காட்டிக்கொடுத்து தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர்.
அந்த இழிவான கொடுக்கல் வாங்கலின் பிரதிபலனாக 2017 ஆகஸ்ட் 25 ஆந் திகதி நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்
சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ சதவீதம் 40% ஆக காணப்பட்டதுடன், அதன் ஒரு மாதத்தின் பின்பு நிறைவேற்றப்பட்ட
மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ சதவீதம் 50% ஆக காணப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் மனுச் சமர்ப்பித்து,
பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பாராளுமன்றத் தேர்தலை ரத்துச் செய்த அரசியல் கட்சிகள் உள்ள உலகின் ஒரே ஜனநாயக நாடு இலங்கையாகும். தற்போதைய பாராளுமன்றத் தேர்தலை
ஒத்திவைப்பதற்கு இன்று மேற்கொள்ளும் முயற்சி அந்த இழிவான வரலாற்றின் ஒரு நீட்சியாகும். நாட்டில் எந்த சந்தர்ப்பத்திலாவது
பொது சமூக வாழ்வு மீண்டும் ஆரம்பமாக வேண்டியுள்ளது. எமது 25 நிர்வாக மாவட்டங்களில், பதினொரு மாவட்டங்களில் கொரோனா
வைரஸ் தொற்றுள்ள ஒருவரேனும் இல்லை. மேலும் ஏழு மாவட்டங்களில் தொற்றுடைய ஒருவர் அல்லது இருவரே
அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு மாவட்டங்களில் ஐந்திற்கும் ஏழுக்குமிடையிலான எண்ணிக்கையைக் கொண்ட
நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஐந்து மாவட்டங்களில் மாத்திரமே குறிப்பிடத்தக்களவான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் இரண்டாம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் நடாத்தப்படும் திகதி ஏப்ரல் 25 எனவும், புதிய
பாராளுமன்றம் முதலாவது கூடும் திகதி மே 14 எனவும் அறிவித்தார். அதன் பிறகு பத்து நாட்களின் பின்பு முதலாவது கொரோனா நோயாளி கண்டறியப்பட்ட சந்தர்ப்பத்தில் தேர்தல் நடாத்தப்படும்
திகதியை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படவில்லை. 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 24(3) ஆம் பிரிவுக்கு ஏற்ப,
ஜனாதிபதி குறிப்பிட்ட திகதியில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த முடியாவிடின், அதற்கு வேறொரு திகதியைக் குறிப்பதற்கான கடப்பாடு தேர்தல் ஆணைக்குழுவுக்கு காணப்படுகிறது.
திகதியொன்றைக் குறிப்பிடாது பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடையாது. எதிர்காலத்தில் பல வாரங்களில் அல்லது பல
மாதங்களில் இடம்பெற முடியுமான அல்லது இடம்பெற முடியாத விடயங்கள் தொடர்பாக ஏற்படுத்திக்கொள்ளும் ஊகங்களின்
அடிப்படையில் கட்டாயமாகப் பின் பற்ற வேண்டிய சட்டரீதியான ஏற்பாடுகளை ஒதுக்கித்தள்ளி விட முடியாது.
தேர்தல் ஆணைக்குழு முதலில் 24(3) ஆம் பிரிவின் கீழ் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைப்பொறுப்பினை சட்டத்திற்கு
ஏற்புடையவாறு நிறைவேற்றி விட்டு, அதன் பின்பு கலந்துரையாட வேண்டிய விடயம் ஏதாவது இருப்பின், அது தொடர்பாக கவனஞ் செலுத்த வேண்டும்.
பிரதம அமைச்சர்
மஹிந்த ராஜபக்ஷ
கொரனோ ஆபத்து இன்னும் நிலவுகிறது – விசேட வைத்திய நிபுணர்
கொரனோ ஆபத்து இன்னும் நிலவுகிறது – விசேட வைத்திய நிபுணர்
கொவிட் 19 நிலமை இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள்ளாகியுள்ளது. இருப்பினும் கட்டுப்படுக்குள்ளாகியுள்ளது என்பதன் அர்த்தமாவது
ஆபத்து இல்லை என்பதல்ல. ஆபத்து நிலவுகின்றது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்களினால் கொவிட் 19 ஆபத்தின்
தற்போதைய நிலைமை தொடர்பில் தெரிவிக்கப்பட்ட விசேட கருத்துக்கள் பின்வருமாறு
‘இலங்கையில் கொரோனா வைரசின் ஆபத்து குறைந்திருப்பதாக, தாம் தெரிவித்ததாக இன்றைய தினம் முக்கிய
பத்திரிகையொன்றில் தலைப்பு செய்தியாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தலைப்பு செய்தி பெரும்பாலும் பிழையானது. இருப்பினும்
இந்த செய்தியின் உட்பகுதியை வாசிக்கும் பொழுது இந்த விடயம் கிடைக்கப்பெற்றதன் கூற்று என்ன என்பது தெளிவாகின்றது
உண்மையில் எடுத்துக்கொண்டால் தற்பொழுது இலங்கையில் கொவிட் 19 தொடர்பில் சமூக அளவிலும் ,சமூக பரவலும் அதாவது
அப்படியும் இல்லை என்றால் ளுழஉயைட வுசயளெஅளைளழைn நிலைமை இல்லை என்பதாகும். இது உண்மையில் சொல்லப்படும்
ஊடரளவநசள இற்கு வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தவரையறைக்குட்பட்ட விடயங்கள் கிடைக்கப்பெற்றமை
தொடர்ச்சியாக பெறப்பட்ட செயற்பாட்டு வழிமுறைகள் ஊடாக ஆகும்.
அப்படியென்றால் இந்த நிலைமைக்கு எம்மால் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக தனிந்துவிட்டது என்று கூறமுடியாது
என்பதாகும். இந்த பத்திரிகையில் இந்த விடயம் குறிப்பிடப்படுவது கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் எதிர்காலத்தில் சுகாதார அமைச்சைப் போன்று பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட அனைத்து
துறைகளும் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதாகும். இது சரியானதாகும். இதற்கமைவாக எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ள
வேலைத்திட்டங்கள் இந்த நாட்டில் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்த போதிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்., அது ஏனென்றால் இந்த ஆபத்து தொடர்ந்தும் இடம்பெறக்கூடும்
என்பதாகும். இருப்பினும் வேறு எதனையும் எம்மால் தெரிவிக்க முடிகின்றமை இந்த நாட்டில் கொவிட் 19 நிலமை இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள்ளாகியுள்ளது. இருப்பினும்
கட்டுப்படுக்குள்ளாகியுள்ளது என்பதன் அர்த்தமாவது ஆபத்து இல்லை என்பதல்ல. ஆபத்து நிலவுகின்றது. இருப்பினும்
தற்போதைய நிலவும் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்து இவ்வாறு அனர்த்த நிலை கட்டுப்பாட்டை மேலும் முன்னெடுப்பதன்
மூலம் இங்கு கூறப்படும் ஆபத்தான நிலையை முழுமையாக எதிர்காலத்தில் குறைப்பதற்கு சில கால எல்லைக்குள் எம்மால் முடியும்.’
கொரானாவுடன் தேர்தலை நடத்திட அவசரம் காட்டும் கோட்டபாய -அடிக்கும் இரத்த வாடை
கொரானாவுடன் தேர்தலை நடத்திட அவசரம் காட்டும் கோட்டபாய -அடிக்கும் இரத்த வாடை
இலங்கையில் தற்பொழுது கொரனோ நோயானது பரவி வரும் நிலையில் விதிக்க பட்ட தடைகள் விலக்க பட்டு மக்கள் இயல்பு
வாழ்விற்கு மீள் திரும்பும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளதாகவும் ,படிப்படியாக உறங்கு நிலை தளர்த்த படவுள்ளதாக அறிவிப்பு செய்துள்ளது
அரசு கூறும் காரணம் இதுவல்ல ,மக்கள் அனுதாபத்தை தான் தேடி கொண்டுள்ளதாகவும் ,இவ்வேளை ஏனைய கட்சிகள் மக்கள்
ஆதரவினை பெற முடியாது போகும் நிலை ஏற்படும் என்பதாலும்
தேர்தலை நடத்தும் முகமாக இந்த தடை விலக்கல் மேற்கொள்ள படுகிறது
மக்கள் பேரவலத்தில் தனது இருப்பை தக்க வைத்து கொள்ளும் கபட முயற்சியில் கோட்டாபய ஈடுபட்டுள்ளது வேதனையின் உச்சம்
என்பதும் ,இந்த சிந்தனை இரத்த வாடையின் நாற்றம் என அடித்து கூறலாம்
மக்கள் சாவில் அரசியல் நடத்தும் மகிந்த சிந்தனை கூட்டம் என்ன திருந்தவா போகிறது ..?







