Posted in Uncategorized

பெண்களை கேவல படுத்தினால் சட்ட நடவடிக்கை மிரட்டும் – இராணுவ மந்திரி

பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என,

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள பெண்களுக்கு

விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க அரசாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் வீரப் பெண்கள் செய்த மகத்தான சேவையை அங்கீகரிப்பதற்காக

நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

போர்வீரர்களின் தாய் மற்றும் மனைவி உள்ளிட்டவர்கள் போரின் போது அனுபவித்த கஷ்டங்களையும் மன அழுத்தத்தையும்

பார்க்கும்போது, அவர்கள் முழு தேசத்தின் மதிப்புக்கு உரியவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Home » கமல் குணரத்ன
Posted in இலங்கை செய்திகள்

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய இராணுவ மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளரால் பாராட்டு

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கிய இராணுவ மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளரால் பாராட்டு

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியில் முதன்முறையாக இராணுவ மருத்துவ முதுமாணி கற்கை நெறிஆரம்பம்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும் கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தும்

செயற்பாடுகளிலும் இராணுவ மருத்துவ குழுக்கள் முழு அர்ப்பணிப்புடன் அச்சமின்றி அரசுக்கு சிறந்த ஒத்துழைப்புக்களை

வழங்கியதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (ஜூலைஇ23) இடம்பெற்ற இராணுவ மருத்துவக் கல்லூரியின் இராணுவ மருத்துவத்துறை

முதுமானி கற்கை நெறி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யுத்தத்தின் போது காயமடைந்தோருக்கு சிகிச்சை வழங்கி அவர்களின் உயிர்களை பாதுகாத்தன் ஊடாக முப்படைகளின் மருத்துவ குழுக்கள் தமது நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளனர்

என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்தன உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளின் போது இராணுவத்தினரே முதலில் நின்று பணியாற்றுபவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘அது ஒரு களப் போராகவே அல்லது எந்தவொரு அனர்த்தமாக இருந்தாலும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பகமான சேவையை வழங்குபவர்கள் இராணுவ மருத்துவர்கள்; இராணுவ வீரர்களோ

அல்லது சிவிலியனோ அது யாராக இருந்தாலும் சரி ஆரம்பம் முதல் இறுதிவரை தமது சேவையை வழங்குபவர்களாக இராணுவ மருத்துவ பிரிவினர் திகழ்கின்றனர் ‘ என்று அவர் கூறினார்.

இராணுவ மருத்துவர்களால் வழங்கப்படும் சேவையின் வகிபாகமானது அரச பொறிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அத்தியாவசிய சேவையாக கருதப்படுவதுடன் இதன்மூலம்

எந்தவொரு வழக்கமான அல்லது பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இங்கு சிறப்புரையாற்றிய செயலாளர் ஐக்கிய நாடுகளின் பணிகளில் ஈடுபடுவதற்கு இராணுவ மருத்துவ பணியாளர்கள்

தேவை எனவும் உலகளாவிய ரீதியில் பல்வேறு நாட்டவர்களுக்கும் சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பை அது வழங்கும் எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

‘அங்கீகாரம் கிடைத்தவுடன் பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியிலிருந்து பங்கேற்பாளர்களை கவர்ந்திழுக்கும் ஒரு பன்னாட்டு அமைப்பாக எமக்கு இதை மேம்படுத்த முடியும் எனவும் அவர்களின்

சேவைகள் தேவைப்படும் எந்தவொரு நிலையிலும் அவர்களுக்கு சேவை வழங்கும் அதே வேளை சிறந்த கல்விப் பின்னணியுடன் அவர்களை சேவையில் ஈடுபடுத்துவது அதன் தேவையாக உள்ளது.’

எனவும் தெரிவித்தார் மேலும் இராணுவ மருத்துவ துறையில் முதுமானி கற்கை நெறி திட்டத்தை அறிமுகப்படுத்தும் மருத்துவ கல்லூரியை இதன்போது பாராட்டினார்.

முப்படைகளை சேர்ந்த மருத்துவத் துறையின் இளம் தலைமுறையினர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆயுதம் ஏந்தும் பிரச்சினைகள், இயற்கை அனர்த்தம், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள். தொற்றுநோய்கள் போன்ற முக்கியமான

சூழ்நிலைகளின் போது அதனை எதிர்த்துப் போராடுவதற்கான பரந்த அளவிலான அறிவை வளர்ப்பதற்கு இப்புதிய கற்கை நெறித்திட்டம் பங்களிப்பு வழங்கும் என மேலும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் கீழ் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இக்கற்கைநெறி போர், மருத்துவம் மற்றும் தடுப்பு மருந்து ஆகியன முப்படை நிபுணர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதுடன், இராணுவ நெறிமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், பேர் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் இராணுவ உளவியல் போன்ற பாடநெறிகள் இலங்கை இராணுவத்தினாலும் விமான போக்குவரத்து பாடநெறி விமானப்படையினாலும், சுழியோடல் மற்றும் ஹைபர்பாரிக் மருத்துவம் பாடநெறிகள் கடற்படையினராலும் மேற்கொள்ளப்படும்.

இராணுவ மருத்துவ கற்கை நெறியை அறிமுகப்படுத்தியதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவை பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், இராணுவ மருத்துவக் கல்லூரி மற்றும் கொழும்பு பல்கலைக்கழக முதுமாணி மருத்துவ கற்கை நிலையம் ஆகியவற்றினால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பையும் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, உயர்கல்வி தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் செயலாளர் அனுரா திசாநாயக்க, பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியும் இலங்கை இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சந்திரிகா விஜேரத்ன, மருத்துவ முதுமாணி கற்கை நிலைய பணிப்பாளர் பேராசிரியர் செனக ராஜபக்ஷ, சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் மருத்துவ முதுமாணி கற்கை நிலைய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்புபோம் – இராணுவ மந்திரி கூவல்

இலங்கையில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்புபோம் – இராணுவ மந்திரி கூவல்

கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்படும் மற்றும் உதவி புரியும் சிறைச்சாலை, சட்ட அமலாக்க மற்றும் ஏனைய

அதிகாரிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்காக எதிரிகளை அடையாளம் காண மற்றும் உறுதிப்படுத்த முறையான செயற்பாடு அவசியம்

எதிர்கால சந்ததியினருக்காக அனைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் சட்டத்தின் முன் கொண்டு வர வலியுறுத்து


ஊழல் மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் என்பவற்றினூடாக பாதாள உலக குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள்

தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ,ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக துஷ்பிரயோகம் செய்யும்

சீருடை அணிந்த அதிகாரிகளை அடையாளம் காண சட்ட அமலாக்க அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார் .

“நாங்கள் இராணுவ கலாசாலையில் இருந்தபோது, ​​மிகவும் ஆபத்தான எதிரி யாரெனில் அவர்கள் எமக்குள்ளே இருக்கும்

எதிரிகளாகும் என எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க நமக்குள் இருக்கும் இந்த எதிரியை நாம்

இப்போது அடையாளம் கண்டு உறுதிப்படுத்த வேண்டும். இல்லையெனில் அது ஒரு பயனற்ற முயற்சியாக அமைந்துவிடும் ”என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

நிட்டம்புவ தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையில் ஜூன் 26 காலை இடம்பெற்ற புதிய புனர்வாழ்வு நிலையக்

கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் உரையாற்றிய அவர், விரைவில் இலங்கையிலிருந்து

போதைப்பொருளை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக உறுதியளித்தார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு பயனுள்ள வாழ்க்கையை தொடங்குவதற்காக

அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் இதற்காக அவர்களுக்கு அனுதாபம், பரிவு

மற்றும் உதவி என்பன அவசியமாகும் என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

ஏறக்குறைய 1,000 போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளிப்பதை இலக்காகக் கொண்ட முழுமையான

புனர்வாழ்வு மையம் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தின் (UNODC) உதவியுடன் நிர்மாணிக்கப்படும்.

‘போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை’ முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தவறான செயல்களைச் செய்வதன் மூலம் சம்பாதித்த பணத்திலிருந்து தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கும் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் அதற்காக

வெட்கப்பட வேண்டும் என் கூறிய பாதுகாப்பு செயலாளர், போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாமல் ஆக்குவது ஒரு

மகத்தான பணியாகும் என தெரிவித்ததுடன், எதிர்கால சந்ததியினருக்காக அனைத்து போதைப்பொருள்

கடத்தல்காரர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய அவசியத்தையும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் , முதலாவதாக போதைப்பொருள் பாவனைக்கு இரையாகியுள்ள

சிறுவர்களையும் மீட்பதும், இரண்டாவது நமது எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவதும், மூன்றாவது தவறு

செய்பவர்களுக்கு உதவியளிக்க உத்தியோகத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களை அடையாளம் காண்பதும் ஆகும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தலைவர் டொக்டர் லக்நாத் வெலகெதர, 1984

முதல் 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை


‘போதை மருந்து இல்லாத, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான தேசத்தை உருவாக்குவதற்காக’ ஜனாதிபதி கோட்டபய

ராஜபக்ஷவின் வளமான தேசம் எனும் எண்ணக்கருவிற்கு அமைய சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு வசதிகளை விரிவுபடுத்துவதாக தெரிவித்தார்.

சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்திற்கான ‘நவ திகந்தய’ புதிய கட்டிடம் ஜெர்மனிய அரசு மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்

நிதியுதவியுடன் நிர்மானிக்கப்படவுள்ள அதேவேளை, நிர்மாணம் பணிகள் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் போது உரை நிகழ்த்திய ஜேர்மனியின் பிரதி தூதுவர் ஆண்ட்ரியாஸ் பெர்க், பயனுள்ள குற்றவியல் நீதி பதில்களின் மூலம் பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தைத் தடுக்கவும்

எதிர்வினையற்றவும் இலங்கையின் திறனை வலுப்படுத்தும் மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனி இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது என தெரிவித்தார்.

“இந்த புனர்வாழ்வு நிலையத்தின் விரிவாக்கமானது, தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில நான்காவது திட்டமாகும்.

இது சிறைத் துறையில் திறனை வலுப்படுத்த ஏதுவாக அமையும் ” என அவர் தெரிவித்தார்.

தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் புதிய கட்டிய விரிவாக்கமானது, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான போதைப்பொருள்

பாவனையாளர்களை சிறைச்சாலைகளிலிருந்து நீக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என பெர்க் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலின் சவால்களை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இந்த திட்டம்

பூர்த்தி செய்யும் என்றும், இந்த பிரச்சினையை தீர்ப்பதில் சிகிச்சையை ஒரு தண்டனை முறையாக கருதவில்லை என அவர் தெரிவித்தார்.

“போதைப்பொருள் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதில் அரசாங்கம், தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, சிவில் சமூகம், நீதித்துறை மற்றும் சிறை அதிகாரிகள்

ஆகியோருடன் இணைந்து பணியாற்ற நாம் விரும்புகிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தலைவர் ஆலன் கோல் கூறுகையில், கொவிட்-19

முடக்கங்களுக்கு மத்தியில் போதைப்பொருள் கடத்தலுக்கான நில வழிகள் தடைசெய்யப்பட்டுள்ளதால், போதைப்பொருள்

கடத்தல்காரர்களுக்கு கடல் மார்க்கம் இலகுவானதாக மாறியுள்ளது. எனினும் இலங்கை கடற்படை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பிராந்திய போராட்டமானது முக்கிய பங்குவகித்தது.

சிறைச்சாலைகள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதாக உறுதியளித்த கோல்,

சிறைச்சாலை அமைப்பிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான அரசாங்கத்தின் புதிய

மூலோபாயத்தையும், அவர்களை மறுவாழ்வு செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட முயற்சிகளையும் கோல் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் ரவிநாத அரியசிங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா,

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) தர்சன ஹெட்டியாராச்சி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா

உபுல்தெனியா, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மலிக சூரியப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      முப்படைகளினால் நாள் சம்பளத்தை அரசுக்கு இலவசமாக வழங்க முடியாது – இராணுவ மந்திரி

      முப்படைகளினால் நாள் சம்பளத்தை அரசுக்கு இலவசமாக வழங்க முடியாது – இராணுவ மந்திரி

      கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு

      ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு

      பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

      கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கத்திற்கு

      ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் திட்டமானது முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையிருக்கு

      பொருத்தமற்றது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

      மேற்படி கோரிக்கையைத் தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள திதி நெருக்கடிகளை சமாளிக்க அமைச்சின் கீழ் வரும் அனைத்து

      நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து அரைச் சம்பளம், வார சம்பளம் அல்லது மே

      மாதத்தின் ஒரு நாள் சம்பளத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு கோரி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

      ஜனாதிபதியின் செயலாளரர் கலாநிதி பி.பி. ஜெயசுந்தரவின் வேண்டுகோளுக்கு பங்களிக்க விரும்புபவர்கள் மாத்திரம்

      அவர்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு நாங்கள் கோரியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

      முப்படையினர் மற்றும் பொலிஸாரிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தை வழங்கமாறு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக சில சமூக

      ஊடகங்களில் வெளியான கருத்துக்களை முற்றாக மறுத்த மேஜர் ஜெனரல் குணரத்ன, நன்கொடை வழங்கும் இந்த கோரிக்கை

      இராணுவ, கடற்படை, விமானப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் படையினருக்கு
      அவசியமற்றது என உறுதிப்படுத்தினார்.

      எவ்வாறாயினும், ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவது முப்படை, பொலிஸ், மற்றும் சிவில் பாதுகாப்புப்

      படைக்கு பொருத்தமற்றது என பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு

      திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          உயிர்த்த ஞாயிறு தாக்குல் – குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்

          உயிர்த்த ஞாயிறு தாக்குல் – குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்

          தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ அல்லது தனிநபர்களுக்கோ இடமளிக்கப்படமாட்டாது

          குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து, அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன்

          மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும். சுமார் 270 க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும் 500க்கும்

          அதிகமானனோரின் படுகாயத்திற்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை, திட்டமிட்டு, நிதியுதவியளித்து,

          ஆதரவளித்த அனைத்து குற்றவாளிகளையும் அரசாங்கம் வெளிக்கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

          மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள் ஆகியவற்றில் உள்நாட்டைச் சேர்ந்த

          இஸ்லாமிய தீவிரவாத குழுவினால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்று ஒரு ஆண்டு

          நிறைவடைந்துள்ளதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ

          அல்லது தனிநபர்களுக்கோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

          உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள

          பாதுகாப்புச் செயலாளர், இந்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து,

          அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.

          தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், நாட்டு மக்கள்

          அனைவருக்கும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திலிருந்து பூரண பாதுகாப்பு அளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

          “நாம், எமது நாட்டு மக்கள், இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவங்களினால் மீண்டும் பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும்

          அனுமதிக்கமாட்டோம். பயங்கரவாத அல்லது தீவிரவாத நடவடிக்கைகளை, அதன் ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம்

          காணும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

          தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் உதவி மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பங்களிப்பு ஆகியவற்றின்

          முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டிய பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய, நாட்டின் அனைத்து

          புலனாய்வு அமைப்புகளும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு, அவை பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

          கமல் குணரத்ன
          கமல் குணரத்ன
          Posted in இலங்கை செய்திகள்

          முப்படை, பொலிஸார் சுகாதார அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு

          முப்படையினர், பொலிஸார் சுகாதார அதிகாரிகளின் அர்ப்பணிப்பை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பாராட்டியுள்ளார்.

          யாழ் குடா நாட்டில் கொவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுவருகின்ற நூற்றுக்கணக்கான முப்படையினர், விஷேட

          பொலிஸ் அதிரடிப் படையினர், மற்றும் பொலிஸ் ஆகியோரை பாராட்டும் முகமாகவும் அவர்களுக்கு இனிய புத்தாண்டு

          நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் முகமாகவும், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள்,

          யாழ்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டதோடு, தங்கள் சொந்த உயிருக்கான

          ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல், பாராட்டத்தக்க மனிதாபிமான சேவைகளைச் செய்யும் படையினர் மற்றும் பொலிஸார் மத்தியில் உரையாற்றினார்.

          கூட்டத்தின் மத்தியில் அவர் உரையாற்றுகையில், அவர் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்த்தோடு, அதிமேதகு

          ஜனாதிபதியின் பாரம்பரிய இனிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் தடுப்பு

          நடவடிக்கைகளுக்காக முன்வைக்கப்பட்டுள்ள சவால்களை பற்றியும் விவரித்தார்.

          “யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய ஆபத்தான மாவட்டங்களில் உங்களால் மேற்கொண்ட

          அர்ப்பணிப்பானது, சுகாதார அதிகாரிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து. பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு பல்வேறு நிலைகளில் பல தொடர்புகள் இருந்தன, மேலும் அவர்கள் தங்கள் அறிவுக்கெட்டிய

          வகையில் இல்லாமல் வைரஸை பரப்பியிருக்கலாம். அதேபோல், அந்த நபர்களில் பலர் தாங்கள் சென்ற இடங்கள் மற்றும் பற்றிய தகவல்களை மறைக்க முயற்சி செய்துகொண்டிருந்தமையினால்

          , எங்கள் படைகளும் பொலிஸாரும் பலவழிகளில் செயல்பட வேண்டியிருந்தது. ஏனெனில். எங்கள் அர்ப்பணிப்புள்ள படையினரும் பொலிஸாரும் அவர்களின் 2 ஆவது, 3 ஆவது,மற்றும் 4

          ஆவது கட்ட தொடர்புகளை சரியாக உறுதிப்படுத்த இரவும் பகலும் உழைக்க வேண்டியிருந்தது. அவர்களின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய அனைத்து தொடர்பு

          முறைகளையும் கண்காணித்து அல்லது கண்டறிய வேண்டியிருந்ன. உங்களால் கண்டறியப்பட்ட அனைத்து தொடர்புடைய தகவல்களும் ,எங்கள் புலனாய்வுத்துறை மற்றும்

          பொலிஸார் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டனர், ”என்று அவர் சுட்டிக்காட்டினார்.

          மக்களின் அத்தியாவசிய சேவைகளைப் பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட அனைத்து சிவில் அதிகாரிகளுக்கும் அவர்களின் சிறந்த பணிகளையும்

          உதவிகளையும் தொடருமாறு கேட்டுக்கொண்ட அவர், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், பாரா மருத்துவ ஊழியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள்

          மற்றும் யாழ் மக்களின் நலன் கருதி கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு எதிராக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

          இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட

          கடற்படை, விமானப்படை, விஷேடபொலிஸ் அதிரடிப் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், பொலிஸ்

          அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் உட்பட பலர் பாதுகாப்பு செயலாளரின் உரையில் கலந்து கொண்டனர்.

          முப்படை பொலிஸார் சுகாதார
          முப்படை பொலிஸார் சுகாதார