Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!

உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!

ஊரும் கதற உறவும் கதற
உன்னை தேடுறேன் – நீ
உள்ளம் தந்தால் போதும் நானும்
உயிரே வாழுவேன்

ஆசை உன்னில் வைத்து விட்டேன்
அதனால் பாவமே – என்
ஆயூள் முடிவை நீயே சொல்வாய்
அன்பே தாங்குவேன்

நீரை போல ஓடி வரும்
நீளம் தாண்டுவேன்
நீயும் வந்தால் போதும் – இந்த
நிலவை வாங்குவேன்

காடும் மலை கடந்து வந்தால்
காட்சி காணலாம்
கடைசி வரை வாழும் வாழ்வில்
நீட்சி பேணலாம்

உன்னில் ஒன்றை மட்டும் தானே
உயிரே கேட்க்கிறேன்
உன் உள்ளம் தந்தால் போதும்
உன்னை தாங்குவேன் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-06-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

    12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்

    12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்

    முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியை சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் தப்பி ஓடியுள்ளார்

    இவர் தமது வீட்டை விட்டு காதலனுடன் தப்பி போக முன்னர் ,அங்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்

    காதலனுடன் ஓட்டம்
    அதில் என்னை தேட வேண்டாம் நான் வீடு வரமாட்டேன் என அதில் குறிப்பிட்ட பட்டிருந்தது
    அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை கடிதத்துடன் காவல்துறை நிலையம் சென்று முறையிட்டுள்ளார்
    அப்போது சிறுமியான மகள் தந்தையின் பணம் ,மற்றும் கைபேசி என்பனவற்றை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளது தெரியவந்துள்ளது

    சிறுமி கண்டு பிடிப்பு
    போலீசார் சிறுமியின் கைபேசியில் தொடர்பு கொண்டு
    வினவிய பொழுது அவர் கட்டனில் உள்ளது கண்டு
    பிடிக்க பட்டுள்ளது ,சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்ற சாட்டில் காதலன் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

    காதல் புரிந்த அலங்கோலம்

    அறியா பருவத்தில் புரியா வந்த காதல் மோகத்தினால் தனது எதிர்கால வாழ்வினை குழி தோண்டி புதைத்துள்ளளார் இந்த சிறுமி ,பெற்றவர்களை மறந்து அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை திருடி கொண்டு காதலனுடன் ஓடிய மகளின் செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

    12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்

    பட்டினி கிடந்தது பகலிரவாய் பிள்ளைகளுக்கு என உழைத்த தந்தை , தயார் இவருடன் கூடி பிறந்தவர்கள் வாழ்வில் மண்ணை தூவி இன பால் கவர்ச்சியில் சிக்கி சீரழிந்து போகும் இந்த சிறிசுகளை என்னவென்று சொல்ல

    பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்

    குறித்த காதலனுடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி சிறுமி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் ,அவரது இனிப்பான பேச்சும் அந்தரங்க உரையாடல்களும் இன்று சந்தி சிரிக்க வைத்துள்ளது

    பிள்ளைகள் விரும்பும் கைபேசியை அவர்களுக்கு வழங்கியதன் ஊடாக அவர்கள் பேஸ்புக் மூலம் காதல் வலையில் சிக்கி குடும்ப மானத்தை ரோட்டில் விற்றுள்ளனர் ,

    இந்த விடயங்கள் அனைத்திற்கும் பிள்ளைகள் மீது பெற்றவர்கள் வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் , பாசமுமே காரணம் ,அதனை புரியாது பிள்ளைகள் பெற்றவர்களை ஏமாற்றியதாக கருதி தம்மை தாமே ஏமாற்றி கொள்ளும் இழி செயல்களே இவையாகும்

    இளைய சமுதாயமே கொஞ்சம் சிந்தியுங்கள் ,அழகான வாழ்வை அறியா பருவத்தில் தொலைத்து விடாதீர்கள் ,வாழ்க்கை வாழ்வதற்கே ,இடையில் கண்ணீரில் அலைவதற்க்கு அல்ல ,ஒன்றை செய்திட முன்னர் கொஞ்சம் யோசியுங்கள் .

    12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம் எங்கே செல்கிறது எமது தேசம் ..?

    • வன்னி மைந்தன் –
      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

      மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி

      மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி

      இலங்கை மொனராகலை எதிமலே பொலிஸ் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் அதே குடும்பத்தை சேர்ந்த மூவரால் கற்பழிக்க பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது

      வயிற்று வலியால் துடித்த சிறுமி மொனராகல மருத்துவ மனைக்கு அழைத்து சென்று நடத்திய சோதனையில் கூட்டாக கற்பழிக்க பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது

      நடந்தது என்ன
      பதின் மூன்று வயதான சிறுமியை அவரது மூத்த சகோதரன் ,மற்றும் தாத்தா,மற்றும் தாயின் தம்பி ,மாமா கூட்டாக இணைந்து கற்பழித்துள்ளனர்

      இந்த கூட்டு கற்பழிப்பு சம்பவம் பல மாதங்காளாக தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் இருந்துள்ளது ,சம்பவ தினம் கடுமையான வயிற்று வலியால் துடித்த சிறுமியை பெற்றவர்கல் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்ட பொழுதே மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது

      மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சாந்தேகத்தை அடுத்து பொலிசாருக்கு அறிவிக்க பட்ட நிலையில் ,பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மேற்படி திடுக்கிடும் விடயம் அம்பலமாகியுள்ளது

      போலீஸ் விசாரணை

      போலீசாரை மேற்கொண்ட தீவிர விசாரணையில் சிறுமி கற்பழிக்க பட்ட சம்பவம் உறுதியானது ,அந்த பாலியல் சம்பவத்தில் அதே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடத்திய

      செயல் உறுதியான நிலையில் தாத்தா,மாமா ,சகோதரன் ஆகியோரை கைது செய்யும் வேட்டையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்

      பெற்றவர்களின் அசமந்த போக்கும் சிறுமியின் தெளிவில்லா நிலையும் இந்த கூட்டு கற்பழிப்பு நடந்தேறியமைக்கு காரணமாக அமைந்துள்ளது

      மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி

      குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரலாம் என எதிர் பார்க்க படுகிறது,இதைவிட மேலும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது

      அதிர்ச்சியில் குடும்பம்

      தமது சிறு வயது மகள் தாத்தா,மாமா,சகோதரனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ள செயல் குடும்பத்தாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

      சிறுமியை கற்பழித்த அனைவரும் தண்டிக்க படவேண்டும் என அவர்கள் உரத்த குரலில் தெரிவித்து வருகின்றனர்

      இந்த செய்தி காட்டு தீயாக அந்த கிராமத்தில் பரவிய நிலையில் அந்த பகுதி மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்

      பதின் மூன்று வயது பாடசாலை மாணவி கற்பழிக்க பட்ட செய்தி ஊடகங்கள் வாயிலாக பரவிய நிலையில் ,சிறுமிகள் மீது அதிக கவனத்துடன் அவர்களை பராமரிக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் மட்டுமல்லாது இந்த செய்திகள் அறிந்த அனைவரும் உறுதி நிலை எடுத்துள்ளனர்

      சினிமா காட்சிகளில் வருகின்ற சம்பவம் போல இந்த கற்பழிப்பு குற்ற செயல் இடம்பெற்றுள்ளது,சிறுமியை சீரழித்த அனைவரும் தண்டிக்க படவேண்டும் என்பது மக்களின் கொதிப்பாக உள்ளது .

      • வன்னி மைந்தன் –
        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

        உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

        உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

        உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போரினால் உலகில் உணவு பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது


        உக்கிரேனில் இருந்து அதிக உணவு மற்றும் ஒயில் வகைகள் ரசியாவிடம் இருந்து தானிய வகைகளும் ஐரோப்பா முதல் உலக எங்கும் இறக்குமதி செய்ய படுகின்றன

        இந்த ஒயில் உக்கிரேன் துறைமுகத்தில் தேங்கி கிடக்கிறது எனவும் அதனை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட முடியா நிலையில் ரசியா போரினை தொடுத்து வருவதால் உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா கவலை வெளியிட்டுள்ளது

        ஒயில் உணவு இறக்குமதி தடை பட்டால் ஐரோப்பாவில் உள்ள பல உணவகங்கள் அடித்து பூட்டும் நிலை ஏற்பட போவதாக இவர்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது

        உக்கிரேன் மீதான போர்நிறுத்த படாவிட்டால் உலகலாவிய ரீதியில் பெரும் உணவு பஞ்சம் ஏற்பட்டு அதுவே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது ஐநா வாதமாக உள்ளது


        முடிவில்லா மேலும் போர் நீண்டு தொடர்ந்தால் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் உணவு பஞ்சம் ஏற்படும் என அவர்கள் வெளியிட்ட கவலை மெய்ப்பிக்கும் நிலை ஏற்பட்டு விடும்


        உக்கிரேன் மீதான போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவின் நேச நாடுகல் ஐநா உள்ளிட்ட, அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்து வருகின்றன

        உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

        ஆனால் ரசியா ஜனாதிபதி பிளாடீர் மீர் புட்டீனோ உகிரேனை ஆக்கிரமிக்காமல் விடுவதில்லை என்ற நிலையோடு கட்டளைகளை பிறப்பித்த வண்ணம் உள்ளார்

        உலகளவில் உணவின் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, ஐநா விடுத்துள்ள உணவு பஞ்ச அபாய எச்சரிக்கையின் பின்னர் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது

        உலக மக்கள் உணவின்றி பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்பட்டால், உலக நாடுகள் ஒன்றிணைந்து போரை தொடுக்க வேண்டிய கடினமான காலம் ஒன்று உருவாகும் என்பதாக கணிக்க பெறுகிறது

        அவ்வாறு இடம்பெற்றால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாற்றம் பெற்றுவிடும் அபாயம் எழுந்துள்ளது

        உணவு பஞ்சம்
        இலங்கையில் உணவு பஞ்சம் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளது, அதுபோலவே ஐரோப்பாவிலும் எரிவாயு மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால், மக்கள் குளிரில் நடுங்கி இறக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்பதை களநிலவரமாக உள்ளது

        குளிர்வலய நாடுகளில் வசிக்கும் மக்களே பெரிதும் பாதிக்க படும் நிலை ஏற்படும் என்பதே ஆய்வாளர்களின் அச்சமாக உள்ளது

        உணவு உற்பத்தியில் முன்னிலை வகித்து அதிக ஏற்றுமதியை தன்னகத்தே வைத்திருக்கும் உக்கிரேன் ரசியா மோதல் உலக நாடுகள் வரை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது


        விரைந்து ரசியா உக்கிரேன் போரை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் எனின் ரசிய கூறும் ஆயுத விநியோகிப்பை பிரிட்டன் அமெரிக்கா நாடுகள் உடன் நிறுத்த வேண்டும்

        அதற்கு அமெரிக்கா பிரிட்டன் சம்மதிக்குமா ..? உணவா போரா அமெரிக்கா பிரிட்டன் காலில் பந்தை அடித்து விட்டுள்ளது ரசியா ,இது தான் மக்களே கள யதார்த்த நிலை .

        • வன்னி மைந்தன் –
        Posted in உலக செய்திகள்

        ரசியா வதை முகாமில் 600 உக்கிரேனிய மக்கள்

        ரசியா வதை முகாமில் 600 உக்கிரேனிய மக்கள்

        உக்கிரேன் நாட்டின் மீது வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் ரசியாவின் அகோர தாக்குதலில் சிக்கி உக்கிரேன் பேரழிவை சந்தித்து வருகிறது
        இதுவரை ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட உக்கிரேன் மக்கள் பலியாகியுள்ளனர்

        தொடர்ச்சியாக முன்னேறி வரும் ரசியா இராணுவத்தினரால் உக்கிரேன் முக்கிய நகரான Kherson பகுதியில் வைத்து அறுநூறு அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்


        ரசியா இராணுவத்தால் கைது செய்ய பட்ட அறுநூறு மக்களும் Kherson மாவட்டத்தின் chambers பகுதியில் கைதானவர்கள் ,அவர்களே கோர வதைகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

        இங்கு சிறை பிடிக்க பட்ட அறுநூறு மக்களும் Crimea மானில பகுதிக்கு அழைத்து செல்ல பட்டு அங்கு கோர வதைகளிற்கு உள்ளாக்க பட்டு வருவதாக உக்கிரேன் உளவுத்துறை ஆதார தகவலுடன் செய்தி வெளியிட்டுள்ளது

        ரசியா நாட்டின் இந்த சம்பவம் மனித உரிமை மீறலாக பதிய பெற்றுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபை முதல், பல நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன

        ரசியா வதை முகாமில் தடுத்து வைக்க பட்டுள்ள மக்கள் அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது,
        ஆனால் ரசியா நாடோ உக்கிரேனின் இந்த தகவலை மறுத்து வருகிறது

        ரசியாவின் இந்த மறுப்பு தகவலின் வெளிப்பாடு அங்கு கைது செய்ய பட்டு வதைகளிற்கு உள்ளாக்க பட்டு வரும் அனைவரும் படுகொலை செய்யபடலாம் என அஞ்ச படுகிறது

        ரசியா வதை முகாமில் 600 உக்கிரேனிய மக்கள்

        இதுவரை இரு நூற்றுக்கு மேலான மனித புதைகுழியை தாம் கண்டு பிடித்துள்ளதாக உக்கிரேன் தெரிவித்து வருகிறது,அந்த புதை குழிகளிற்குள் கண்கள், கைகள் கட்ட பட்ட சடலங்கள் மீட்க பட்டுள்ளன


        ரசியா வதை முகாமில்

        உக்கிரேன் மண்ணில் இடம்பெறும் மனித படுகொலைகளும் ,அங்கு இடம்பெறும் அநீதிகளுக்கு ,மக்கள் வாழ்விடங்கள் அழிவிற்கும் யார் பொறுப்பு கூறுவது என்ற கேள்வி எழுகிறது

        உக்கிரேன் மண்ணில் இடம்பெறும் இந்த பேரழிவுகளுக்கு உக்கிரேன் ஆளும் அதிபரே கரணம் என்கிறது உக்கிரேன் நாட்டின் மக்கள் குழு ஒன்று

        ரசியா வதை முகாமில் உயிருக்கு போராடுவது உக்கிரேனிய மக்கள் மற்றும் நாட்டை பாதுகாக்க துணைப்படைகளாகவும் ,இராணுவமாக மாறிய அப்பாவிகளே இரு நாட்டு அரச அதிபர்களின் கடும் போக்கால் பலியாகிய வண்ணம் உள்ளனர் என்பதே கள நிலவரம்

        முள்ளி வாய்க்காலில் சிங்கள இராணுவம் அப்பாவி தமிழர்களையும் விடுதலை புலிகள் உறுப்பினர்களையும் இவ்வாறே கட்டி வைத்து வெட்டி கொன்றது ,போரில் இவ்வாறான காட்சிகள் இயல்பான ஒன்றே என்பதை இந்த சம்பவங்கள் மீள் இடித்து உரைக்கின்றன

        அப்பாவிகளின் உயிர்களை காப்பாற்ற முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் இதுவே உலக நாடுகளின் எதிர் பரப்பாக உள்ளது

        • வன்னி மைந்தன்
          Posted in சீமான் பேச்சு

          புழல் சிறையில் துரைமுருகனுடன் சீமான் சந்திப்பு

          புழல் சிறையில் துரைமுருகனுடன் சீமான் சந்திப்பு

          நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் புழல் சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ள கட்சி உறுப்பினர் துரைமுருகனுடன் சந்தித்து பேசியுளளார்

          வலையொளியில் பதிவிட பட்ட காணொளி காட்சி ஒன்றில் அரசுக்கு எதிராக சதி செய்ததாக கூறி நாம் தமிழர் துரைமுருகன் சிறையில் அடைக்க பட்டுள்ளார்

          சாட்டை துரை முருகனின் இந்த சிறை அடைப்பின் மூலம் அவரை தனிமை படுத்தி மிரட்டும் ஆளும் அதிகாரத்தின் செயல் என நாம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்

          புலால் சிறையில் அடைக்க பட்டுள்ள துரைமுருகனுடன் நாம் தமிழர் கட்சி சீமான் சந்திப்பு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

          தந்தை மகன் பாசம் போல இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என சீமான் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

          சாட்டை துரை முருகன் சிறையுடைத்து வெளியில் வந்து சீமான் தம்பி என்பதை சாட்டை மூலம் காண்பிப்பர் என்பது சட்டையின் வளையொலி விரும்பிகள் கருத்தாக பதிய பெறுகிறது

          புழல் சிறையில் துரைமுருகனுடன் சீமான் சந்திப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை
          ஏற்படுத்தியுள்ளது ,இது தான் நாம் தமிழர் சீமான் என்கின்றது மக்கள் மன்றம்

          இதில் அழுத்தி காணொளி பார்க்க

          Posted in உலக செய்திகள்

          ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

          ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

          உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ தாக்குதலுக்கு எதிராக உக்கிரேனும் தாக்குதல் நடத்தி வருகிறது இந்த தாக்குதலில் ரசியா இராணுவத்தின் 1390 முதல் தர தாக்குதல் டாங்கிகள் அழிக்க பட்டுள்ளன

          முன்னேறி வரும் ரசிய இராணுவதின் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் பேரழிவை சந்தித்துள்ளது ,ஆனாலும் மேற்குலக நாடுகள் வழங்கி வரும் போராயுதங்கள் துணையுடன் தொடர்நது போராடி வருகிறது

          பிரிட்டன் அமெரிக்கா வழங்கும் நவீன ஆயுதங்கள் மூலம் தனது தலை நகரை உக்கிரேனது இராணுவம் தக்க வைத்துள்ளது

          நூற்றி மூன்று நாட்கள் கடந்து நடைபெறும் உக்கிர சமரில் ரசியா படைகளில் 31 600 பேர் பலியாகியும் ,இருபதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்

          பல நூறு முக்கிய ஆயுத தளபாடங்கள் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளது

          இன்று வரை தொடர்ந்து வரும் ரஷியா இராணுவத்தினரது மோதல்களில் உக்கிரேன் பேரழிவை சந்தித்துள்ளது ,முக்கிய பகுதிகள் சூடு காடாக காட்சி அளிக்கிறது

          ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

          ரசியா படை முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக மார் தட்டும் உக்கிரேன் நாடு சந்தித்துள்ள பேரழிவில் இருந்து அந்த நாட்டை மீள கட்டியெழுப்ப பல்லாண்டுகள் செல்லும் என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது

          எதிர் வரும் கோடை காலத்திற்குள் தமது எதிரிகளது நாட்டின் மீதான போர் முடிவுக்கு வந்து விடும் என ரஷியா இராணுவம் தெரிவித்து வருகிறது

          இவர்களின் இந்த கூற்று மெய்ப்பிக்கும் வகையில் சமீப நாட்களில் ரசியா இராணுவம் பாரிய படையெடுப்பை மேற் கொள்வதுடன் அதிக எறிகணை தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

          ரசியா, டாங்கிகள், அழிப்பு,

          ரசியாவின் தாக்குதல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் அமெரிக்கா ,பிரிட்டன் படைகள் நீண்ட தூர பல் குழல் ரொக்கட் ஏவுகணைகளை வழங்கினர்

          இதன் ஊடாக மேற்கொள்ள பட்ட தாக்குதலில் ரசியா நாட்டு இராணுவத்தின் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை செய்ய பட்டுளளார் இவரது இளப்பு பேரிழப்பாக பார்க்க படுகிறது

          தமது தாய் மண்ணை மீட்க இறு திவரை போராடுவோம் என உக்கிரேன் மக்கள் சபதம் எடுத்து களத்தில் நிற்கின்றனர்
          இது வரை எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டைய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்

          ரசியா இராணுவம் அதிகம் முன்னேற்ற நட வடிக்கைக்கு பயன் படுத்த படும் டாங்கிகள் அழிப்பு ,ரசியா இராணுவத்திற்கு பெரும் பின்னடைவு என உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது

          ரசியா இராணுவ டாங்கிகள் அழித்துள்ள காட்சிகளை உக்கிரேன் இராணுவம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது ,தாமே வென்றவர்கள் என உலகில் காட்டி மகிழ்கிறது

          இது உக்கிரேனுக்கு கிடைத்துள்ள தற்கால மகிழ்ச்சி என்பது ரசியா நாட்டின் பதிலாக வீழ்ந்துள்ளது , உக்கிரேன் போரில் வெல்ல போவது ரசியாவா உக்கிறேனா ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .

          • வன்னி மைந்தன் –
            Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

            ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

            ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

            ஈரான் நாட்டை சேர்ந்த பதினாறு பேருக்கு எதிராக அமெரிக்கா அரசினால் தடைகள் விதிக்க பட்டுள்ளது


            இவர்கள் ஈரானை விட்டு வேறு நாடுகள் எங்கும் செல்லா முடியா வண்ணம் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

            ஈரானுக்கு விதிக்க பட்ட புதிய தடைகளில் ஈரான் நாட்டு புரட்சிகர படைப் பிரிவை சேர்ந்த முக்கிய தளபதிகளும் அடக்கம் பெறுகின்றனர்

            கிரேக்க பகுதியில் வைத்து இரண்டு அமெரிக்கா எண்ணெய் கடத்தல் கப்பல்களை ஈரான் கடலோர காவல் படையினர் சிறை பிடித்து சென்று இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா அரசினால் இந்த பயண தடை விதிக்க பட்டுள்ளது

            அமெரிக்கா அரசினால் பிரகடன படுத்த பட்டு அறிவிக்க பட்டவர்கள் தீவிரவாதாத்துக்கு பண பரிவர்தனம் செய்து வருகின்றனர் எனவும் இந்த பணப்

            பரிமாற்றம் Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia and the UAE குறித்த நாடுகளில் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் அமெரிக்கா சுட்டி காட்டியுள்ளது

            அப்படி என்றால் அமெரிக்காவினால் மேலும் பலர் இந்த நாடுகளில் குறி வைக்க பட்டுள்ளனர் என்பதும் அவர்களுக்கும் விரைவில் இவ்விதமான அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கலாம்

            ஈரானுக்கு அமெரிக்கா விதித்த இந்த புதிய தடைகள் ஈரான் நாட்டை பாதிக்குமா என்பதே சந்தேகம் ஆனாலும் விதித்துள்ளது

            ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு


            பொருளாதார தடைகளை விதித்து ஈரானிய நாட்டினை அடி பணிய வைக்கும் முயற்சியில் அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈடுபட்டு வருகிறது ஆனால் அதில் அவர்கள் தோல்வியை தழுவியுள்ளன

            பல தொடர் தடைகள் விதிக்க படுகின்ற பொழுதும் ஈரானோ அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை, மாறாக தனது பொருளாதாரத்தை அசுர வேகத்தில் மேம்படுத்திய வண்ணம் தனது அபிவிருத்தி மற்றும் செல்வ சேர்ப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது

            தனது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்ப ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளது ,தற்போது அணுகுண்டு தயாரிக்கும் அணுஉலை சோதனையும் முக்கிய கட்டத்தை அண்மித்துள்ளது

            இவ்வாறான நெருக்கடிகளை தகர்த்து பயணிக்கும் ஈரானுக்கு புதிய தடைகள் ஈரானை பதற வைக்குமா நிலை குலைய வைக்குமா என்பதே சந்தேகமே ..!

            • வன்னி மைந்தன் –
              Posted in உலக செய்திகள்

              ரசியா இராணுவ அதிகாரி படுகொலை

              ரசியா இராணுவ அதிகாரி படுகொலை

              ரசியா நட்டு இராணுவத்தினர் உக்கிரேன் மீது பெரும் போர் ஒன்றை தொடுத்து வருகின்றனர்


              இவர்களின் இந்த இராணுவ நகர்விற்கு தலைமை வகித்து வந்த முக்கிய மேயர் ஜெனரல் தரத்தை
              சேர்ந்த Russian Major General Roman Kutuzov iதளபதி Popasna பகுதியில் மேற்கொள்ள பட்ட உக்கிரேனின் தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளார்

              இவருடன் மிக பெரும் மூன்றாவது முக்கிய இராணுவ அதிகாரிகள் உக்கிரேன் இராணுவத்தால் படு கொலை செய்ய பட்டுள்ளனர்

              ரசியா இராணுவத்தின் மிக முக்கிய தாக்குதல் மூளையாக செயல் பட்டு வந்த Russian Major General Roman Kutuzov படுகொலை ரசியா இராணுவத்தில் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

              எனினும் இதற்கு பதிலடியாக ரசியா இராணுவத்தினர் உக்கிர தாக்குதல்களை உக்கிரேன் மீது மேற்கொள்ள கூடும் என எதிர் பார்க்க படுகிறது

              பரம எதிரியாக விளங்கும் உக்கிரேன் தனது முதல் நிலை எதிரிகளிடம் இருந்து ஏவுகணைகளை பெற்று தாக்குதல் நடத்தி வருகிறது

              ரசியாவை வீழ்த்தும் நோக்குடன் ரசியா எதிரிகளான அமெரிக்கா பிரிட்டன் தொடராக ஏவுகணைகளை வழங்கிய வண்ணம் உள்ளன

              பல் குழல் ஏவுகனை செலுத்திகள் முன்னேறி வரும் ரசியா இராணுவத்தினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது

              ரசியா இராணுவ அதிகாரி படுகொலை

              உலகில் முதல் வல்லரசாக விளங்கிய சோவியத் ரசியா உக்கிரேனில் இடம்பெற்று வரும் இந்த நூறு நாள் போரில் , ரசியாவின் ஆயுத பாலத்தின் மீதும் அந்த நாட்டு இராணுவத்தின் பலத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது

              ராசியா அதிபருக்கு மிக நெருக்கமான நம்பிக்கை தரும் ஒருவராக விளங்கி வந்த Russian Major General Roman Kutuzov மரணம்
              ரசியா ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              உக்கிரேன் நாட்டின் இராணுவ தலைமையகம் ரசியா நாட்டின் இராணுவ தளபதியின் மரணத்தை உறுதி செய்துள்ளதுடன் அவர் இறந்து கிடக்கு காட்சிகளையும் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தி வருகிறது

              அமெரிக்கா உளவுத்துறையினர் வழங்கிய துல்லியமான உளவு தகவலின் அடிப்படையில் ரசியாவின் முக்கிய தாக்குதல் மூளையாக செயல் பட்டு வரும் இவ்வாறான இராணுவ உயர் அதிகாரிகள் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்

              ரசியாவின் இராணுவ நகர்வுகள் அவர்களின் முக்கிய ஆயுத தளபாட நகர்வுகளை செய்மதி ஊடாக கண்காணிக்கும் அமெரிக்க்கா இராணுவம் உக்கிரேன் இராணுவத்தினருக்கு வழங்கியா பின்னர் இராணுவம் இந்த தேடி அழிக்கும் தாக்குதலில் நடத்தியுள்ளது

              பிரிட்டன் அமெரிக்கா வழங்கிய குறும் தூர ஏவுகணை செலுத்திகள் ஊடான இந்த தாக்குதல்கள் ரசியாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது ,அப்படி என்றால் ரசியா

              இராணுவம் முக்கிய தாக்குதல் நிலைகளுக்குள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவை உள்ளடக்குமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது

              அதற்கான வலிந்து தாக்குதல்களை தீவிரமாக பிரிட்டன் அமெரிக்கா திட்டம் போட்டு நகர்த்தி செல்கின்றன

              இவ்வகையான தாக்குதல் போர் மூன்றாம் உலக போர்

              ஒன்றை நேரடியாக விரைந்து உருவாக்கும் சாத்தியங்களை அதிகரித்து செல்வதாக எதிர் பார்க்க படுகிறது

              • வன்னி மைந்தன் –
                Posted in உலக செய்திகள்

                உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்

                உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்

                உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி அந்த மண்ணை ஆக்கிரமித்து வருகிறது

                ரசியாவின் இந்த நில ஆக்கிரமிப்பிற்கு கு எதிராக அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ உள்ளிட்ட நேச நாடுகள் கடும் அதி திருப்தியை வெளியிட்ட வண்ணம் உள்ளன

                உக்கிரேன் எதிரி ரசியா படைகள், அந்த மண்ணில் துடைத்தழிக்க பட்டு ,ரசியா இராணுவத்தின் பலம் சிதைக்க பட்டு வருவதாக அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட உளவுத்துறைகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன

                உக்கிரேனில் வைத்தே ரசியாவுக்கு சமாதி கட்ட வேண்டும் என அமெரிக்கா நேச நாடுகள் கங்கணம் கட்டி தொடராக புதிய ஆயுதங்களை வழங்கிய வண்ணம் உள்ளது ,

                அத்துடன் நிற்காது செய்மதி வெளியான தமது உளவு தகவல்களையும் உக்கிரேன் இராணுவத்தினருக்கு வழங்கிய வண்ணம் உள்ளன

                தொகுதி தொகுதியாக பல மில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கிய வண்ணம் உள்ளன ,அமெரிக்கா,பிரிட்டன் முதுகில் ஏறி நின்றவறே உக்கிரேன் இராணுவத்தினர் எதிரியாக விளங்கும் ரசியா படைகளுக்கு எதிராக போர் புரிந்த வண்ணம் உள்ளனர்

                கருங்கடல் பகுதியில் இருந்து உக்கிரேன் தலை நகர் மற்றும் அதனை அண்மித்த ரயில்வே நிலையங்கள் மீது எல்லாம் எதிரி படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன

                உக்கிரேனில் வெடித்து பறக்கும் பிரிட்டன் பல்குழல் ரொக்கட்

                இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் முகமாவே பிரிட்டன் பல் குழல் ரொக்கட் செலுத்திகளை உக்கிரேனுக்கு வழங்கியுள்ளது

                உக்கிரேனுக்கு எவர் எல்லாம் ஆயுதம் வழங்கு கிறார்களோ அவர்கள் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரசியா ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் மிரட்டல் விடுத்துள்ளார் ,ஆனால் அதனை மேற்குலக நாடுகள் புரிந்து கொள்வதாக இல்லை

                ரசியா உங்கள் எதிரி மட்டும் அல்ல எங்கள் எதிரி கூட என்றே அமெரிக்கா,பிரிட்டன் நேச நாடுகள் கூறி வருகின்றன

                உக்கிரேன் ரசியாவிடம் முற்றாக வீழ்ச்சியுற்றால் அதுவே ஐரோப்பாவுக்கு பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்பதால் பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வேக வேகமாக நவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றது

                இவர்களின் இந்த நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ளாமலா ரசியா இருக்கும் ..?
                எதிர் வரும் நாட்கள் உக்கிரேன் களம் என்றும் இல்லாதவாறு குண்டுகளினால் அதிர போகிறது ,பல்லாயிரம் மக்கள் பலியாக போகின்றனர்

                பிரிட்டன் அமெரிக்கா ஆயுதங்கள் ரசியா மேற்கொள்ள போகும் புதிய ஆயுத பாவனை முன்னால் தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

                • வன்னி மைந்தன் –
                  Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                  வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

                  வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

                  வடகொரியா நாடானது தற்போது குறும் தூர ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளது


                  தென் கொரியா கடல் பகுதியில் ,தென்கொரியா இராணுவம் மற்றும் அமெரிக்கா படைகள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது

                  தென் கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,குறித்த ஏவுகணைகள் நான்கு நிலைகளில் இருந்து வட கொரியா ஏவி சோதனை புரிந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது

                  வட கொரியா ஏவிய இந்த குறும் தூர ஏவுகணையின் வீச்சு எல்லை 110 முதல் 670 கிலோ மீட்டர் ஆகும் என தென்கொரியா தெரிவித்துள்ளது


                  எனினும் வடகொரியா இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக எதனையும் அறிவிக்கவில்லை

                  வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வந்த பொழுதும் ரொக்கட் கிங் அடங்குவதாக தெரியவில்லை

                  அவர் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்திய வண்ணம் உள்ளார் ,

                  தமது நாட்டை எதிரி இராணுவத்திடம் இருந்து பாதுகாத்து கொள்ள, வேண்டுமெனின் எமக்கு இது போன்ற ஏவுகணை சோதனைகள் அவசியம் என வடகொரியா இராணுவம் அடித்து கூறுகிறது

                  வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

                  உலக நட்டு தலைவர்களதும் ,உலக சண்டியர்களின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி வருகிறார் ரொக்கட் கிங்

                  மத்திய கிழக்கு நாடுகள் மீது பயங்கரவாதம் என்ற போர்வையில் அமெரிக்கா போரை நடத்தி தோற்று போயுள்ளது ,தற்போது தென் ஆசியா மீது தனது பார்வையை திருப்பியுள்ளது ,

                  வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் தற்போது அதிவேகமாக தமது ஆயுத உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன ,இது அமெரிக்கா வல்லாதிக்க சக்திகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                  வட கொரியா தொடராக நடத்தும் இவ்விதமான ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை மேலும் பீதியடைய வைத்துள்ளது .

                  • வன்னி மைந்தன் –
                    Posted in உலக செய்திகள்

                    டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் கொலை

                    டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை

                    உக்கிரேன் மீது பாரிய இராணுவ படையெடுப்பை மேற்கொண்டு வரும் எதிரி படைகள் மீது உக்கிரேன் அரச இராணுவம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியால மேற்கொண்ட தாக்குதல்களில் மட்டும்

                    ஐந்து டாங்கிகள் 13 armoured combat vehicles, 8 UAVs, and 23 pieces of automotive equipment

                    மற்றும் எரிபொருள் பவுசர்கள் இவற்றுடன் 100 ரசியா இராணுவத்தினரும் படு கொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது

                    நூற்றி ஒரு நாட்களை கடந்து பயணிக்கும் இந்த கொடிய போரில் தாம் வெற்றியை தம தாக்கி வருவதாக உக்கிரேன் அரச இராணுவத்தினர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்

                    முன்னேறி வரும் ரசியா டாங்கிகள் பலமாக அழிக்க பட்டு வருகிறது ,அந்த போர் ஆயுத

                    வண்டிகளில் பயணிக்கும் இளம் வயதுடைய ரசியா எதிரி படைகளும் பலியாகி சிதறி கிடக்கும் காட்சிகள் வெளியிட பட்டு வருகின்றன

                    துருக்கிய இராணுவத்தின் உளவு விமானங்களின் துல்லியமான களமுனை காட்சிகள் ஊடாகவே உக்கிரேனிய அரச இராணுவத்தினர் ரசியா டாங்கிகள் மற்றும் அதன் இராணுவம் மீது துல்லியமான தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளன

                    உக்கிரேன் போர்க் களத்தில் ரசியா எதிரி படைகள் பலமான இழப்புக்களை சந்திக்க துருக்கிய தயாரிப்பான ஆள் இல்லாத உளவு விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது

                    டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை

                    இதனால் என்னவோ உக்கிரேனுக்கு குறித்த உளவு விமானங்களை வழங்க வேண்டாம் என துருக்கியை ரசியா அரசு வேண்டி நின்றது

                    இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசியா டாங்கிகளை தாம் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபாரங்களுடன் அதன் வகைகளை குறிப்பிட்டுள்ளது

                    இந்த டாங்கிகள் யாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மூலம் அழிக்க பட்டுள்ளமையும் ,அதன் திறம்பட்ட தாக்கும் திறன் இந்த படைக்கல இழப்பின் ஊடாக உலகத்திற்கு காண்பிக்க பட்டுள்ளது

                    உக்கிரேன் கள முனையில் ரசியாவின் டாங்கி படையின் முன்நகர்வு அளப்பரிய ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

                    • வன்னி மைந்தன் –
                      Posted in உலக செய்திகள்

                      ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்

                      ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்

                      உக்கிரேன் கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வான் வழி தாக்குதல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த எதிரி விமனங்கள் நான்கை தமது வான் எதிர்ப்பு படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் அரச இராணுவம் அறிவித்துள்ளது

                      இந்த எதிரி விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்த பொழுது ,தமது ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

                      உக்கிரேன் மீது எதிரி படைகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இந்த தாக்குதல்களில் எதிரிகளின் போர் விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது

                      இவர்களின் துல்லியமான தாக்குதல் ஊடாகவே உக்கிரேன் அரச இராணுவத்தினருக்கு ரசியா போர் விமானங்களால் பாரிய சேதங்களை ஏற்படுத்த பட்டு வருகிறது

                      இதுவரை முப்பத்தி ஓராயிரத்து ஐநூறு ரசியா எதிரிகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

                      நூறு நாட்களை கடந்து தொடரும் போரில் இரு தரப்புக்கும் பலத்த ஆளணி மற்றும் ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளது

                      மேலும் இரு நாடுகளின் பொருளா தாரத்திலும் பலத்த அடி வீழ்ந்துள்ளது ,ஆனால் அதனை கருத்தில் கொள்ளாது போரில் மட்டும் நாட்டம் காட்டிய வண்ணம் போரை நடத்திய வண்ணம் உள்ளனர்

                      ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்

                      இந்த கொடிய போரினை தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற் கொள்ள பட்டு வருகிறது பொழுதும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் தொடர் ஆயுத உதவிகளுடன் உக்கிரேன் பெரும் எதிர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

                      உக்கிரேனில் எதிரியாக விளங்கும் ரசியா இராணுவம் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே போரை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளன

                      அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகள் மூலம் ரசியா விமானம் சுட்டு வீழ்த்த படுதல் தொடர்நது வருகிறது ,இது எதிரி இராணுவத்தினருக்கு பெரும் படைக்கல இழப்பை ஏற்படுத்தியுள்ளது

                      இது மேற்குலக வல்லரசுகளின் பழி வாங்கும் தாக்குதல் என உளவுத்துறை ஊடகங்கள் சாடி வருகிறது ,

                      அமெரிக்கா அதன் நேச நாடுகளின் முதுகில் ஏறி இருந்து சவாரி செய்யும் உக்கிரேன் இந்த போரில் தோல்வியை தழுவும் என்பதே நமது அவதானிப்பாக உள்ளது

                      எதிர் வரும் நாட்களில் எதிரி இராணுவம் கெமிக்கல் தாக்குதல்களை நடத்த கூடும் என அச்சம் மேலோங்கி காணப்படுகிறது

                      • வன்னி மைந்தன் –
                        Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

                        மக்களே உதவுக சீமான் video

                        மக்களே உதவுக சீமான் video

                        மக்களே போரால் பாதிக்க பட்டுள்ள எமது மக்கள் தற்பொழுது ராஜபக்ஸ்சா
                        ஆட்சியில் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கின்றனர்

                        இவ்வேளை உதவி அற்று துடிக்கின்ற மக்களுக்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ


                        உதவிகளை அனுப்புங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்

                        செந்தமிழன் சீமான் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்

                        மக்களே உதவுக சீமான் video

                        மேலும் பணம் அனுப்பிட விரும்புகிறவர்கள் தமது இந்திய வங்கி கணக்கு அனுப்பி வைக்கும் படி அதன் விபரங்கள் வழங்க பட்டுள்ளது

                        உலகம் எல்லாம் பரவி வாழும் மக்களே உங்கள் உதவிகளை இங்கே வழங்குபடி செந்தமிழன் சீமான் அவர்கள் வேண்டியுள்ளார்

                        மக்களே உதவுக சீமான் video
                        மக்களே உதவுக சீமான் video


                        மக்களே உதவுங்கள் சீமான் வேண்டுகோள் ,சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றித்து இந்த உதவிகளை வழங்குவீர்கள் என அவர் எதிர் பார்க்கிறார்

                        இதில் அழுத்தி காணொளி பார்க்க

                        Posted in உலக செய்திகள்

                        குப்பையில் எறிந்த பானை சாப்பிட்ட வாலிபன் – பெண் செய்த காரியம் video

                        குப்பையில் எறிந்த பானை சாப்பிட்ட வாலிபன் – பெண் செய்த காரியம்

                        குப்பையில் உள்ளவற்றை நீங்கள் சாப்பிடலாமா ..?

                        வீதி வழியாக கழிவு பொருட்களை சேமிக்கும் நபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார் ,
                        வழமை போன்று அவர் தனது வேளையில் கவனம்செலுத்தியவாறு நகர்ந்த வண்ணம் இருந்தார்

                        அப்போது ஒரு வீட்டின் முன்பாக குப்பை மூடைகள் வைக்க பட்டு இருந்தன ,அந்த குப்பை மூடைகளை ஒவ்வொன்றாக அந்த மனிதர் பிரித்து பார்க்கிறார்

                        அப்பொழுது அவர் முகத்தில் புன்னகைபொங்க , அந்த குப்பை மூடடையில் எறிந்த பானை எடுத்து சாப்பிடுகிறார் .அந்த வாலிபன்,

                        இதனை அவ்வழியே மோட்டர் சைக்கிளிளில் வந்த பெண்மணி ஒருவர் பார்க்கிறார் ,உடனே அதனை சாப்பிடாதே உங்களுக்கு உதவுகிறேன் என அவர் உரக்க சொல்கிறார் ,
                        அவரோ அதனை சாப்பிட்ட வண்ணமே உள்ளார்

                        அந்த பெண்மணியின் வீடே அந்த குப்பை மூடை வைத்திருந்த பகுதியாகும் ,
                        வீட்டுக்குள் சென்ற பெண், தான் கடையில் கொள்முதல் செய்து வைத்திருந்த உணவு பொருட்களில் பெருமளவானவற்றை அந்த மனிதருக்கு வழங்குகிறார்

                        குப்பையில் எறிந்த பானை சாப்பிட்ட வாலிபன் – பெண் செய்த காரியம்

                        பசியால் வாடிய வாலிபன் திகைத்து போய் நிற்கிறார் ,அந்த உணவு பொதிகளை பெற்று கொண்ட அவர் ,அந்த வீட்டின் வாசலில் இருந்தவாறே அந்த அழகிய பெண்ணுக்கு பிரார்த்தனை செய்கிறார்

                        குப்பையில் இருந்த பானை சாப்பிட்ட இந்த வாலிபர் காணொளி காட்சி ,சமுக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது

                        குப்பையில் கிடந்த பானை சாப்பிட்ட வாலிபருக்கு உணவளித்த அந்த பெண் மணிக்கு பாராட்டும் ,வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது,இல்லாதவருக்கு இருப்பதில் கொஞ்சம் வழங்கு என்பதை இந்த பெண் செய்கிறார்

                        பல மக்கள் கண்ணீர் ததும்பும் வாசகங்களை அவருக்கு பதிவிட்டுள்ளது நமக்கும் கண்ணீரை தந்தது

                        குப்பையில் எறிந்த பானை சாப்பிட வாலிபன் – பெண் செய்த காரியம்

                        பசியால் வாடும் ஒருவருக்கு உணவளித்தால் அதுவே தருமம் என்பதும் ,அன்ன தானம் என்பதும் இந்த பெண் செய்த அந்த செயலில் இருந்து தெரிகிறது

                        குப்பையில் எறிந்த பானை சாப்பிட்ட வாலிபன் காணொளியை யார் பார்த்தாலும் கண்கள் உங்களை அறியாது கண்ணீர் சொரியும் .இதோ கீழே அந்த காணொளி பாருங்கள்

                        கடவுள் உருவில் அந்த வாலிபன் முன் வருகை தந்த இந்த அழகிய மனமுள்ள பெண் இவருக்கு கடவுள் என்றால் மிகையாகாது


                        இப்படியும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்,அதனால் தான் என்னவோ நீதி நிலைத்து நிற்கிறது

                          Posted in உலக செய்திகள்

                          ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ

                          ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ

                          ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ ,ரசியா நாட்டு இராணுவம் உக்கிரேன் நாட்டின் மீது பெரும் போரை தொடுத்துள்ளது
                          உக்கிரேன் எதிரி அல்ல என கூறி வந்த ரசியா தொடுத்துள்ள இந்த போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

                          ரசியா, எதிரி அழியும் வரை தமது போர் தொடரும் என்ற ,கோட்பாட்டின் கீழ் உக்கிரேன் மீது,தொடர்ந்து இராணுவ தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

                          கொடிய போரில் இருந்து உக்கிரனை காப்பாற்றி விட

                          ரசியாவின் இந்த கொடிய போரில் இருந்து உக்கிரனை காப்பாற்றி விட அமெரிக்கா,நேச நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளன

                          இதற்காக ரசியா தமது பரம எதிரி என தெரிவித்து அந்த நடடின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன

                          இந்த தடைகளை கருத்தில் கொள்ளாது பிளாடிமீர் புட்டீன் தனது இராணுவ தாக்குதல்களை தீவிர படுத்தி வருகிறார்

                          இதுவரை முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட எதிரி நாட்டு இராணுவத்தை கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் தெரிவித்து வருகிறது

                          தொடர்ந்து தாம் தமது இழந்த நில பரப்புக்களை மீட்டவாறு முன்னேறிய வண்ணம் உள்ளோம் எனவும், எதிரி நாட்டு இராணும் இருபது வீத பகுதிகளை மட்டும் ஆக்கிரமித்துள்ளதாக உக்கிரேன் அதிபர் தெரிவித்து வருகிறார்

                          ரசியாவோ தாம் எதிர் வரும் கோடைகாலம் முடிவதற்குள் போரை முடிவுக்கு கொண்டு வந்து விடுவோம் என மார் தட்டடி சொல்கிறது

                          ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ

                          எதிரி என்று ரசியாவை உக்கிரேன் கூறினாலும், அவர்களுடன் பேசுவதற்கு தயார் என்ற அறிவித்தலையும் விடுத்தது வருகிறது

                          ஆனால் , எதிரியாக விளங்கும் ரசியா நாடானாது தாம் விதிக்கும் நிபந்தனைக்கு உக்கிரேன் ஏற்க மறுத்து வருவதாக குற்றம் சுமத்தி வருகிறது

                          தொடரும் இந்த கொடிய போரை தடுக்க துருக்கி தலைமையில் நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகிற பொழுதும் ரசியாவின் மனங்களில் மாற்றத்தை காண முடியவில்லை

                          எதிரி யார் என தெரியாது கூட்டு வைத்தது அவர்கள் முதுகின் மேல் ஏறி ஆட்டம் போடும் உக்கிரேன்


                          ,அதே எதிரி நண்பர்கள் மூலம் அழிக்க படும் அபாயகர ஆட்டத்தை ஆடிய வண்ணம் உள்ளது

                          எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கருத்தியலை ஏற்று உக்கிரேன் சென்றிருந்தால்
                          இந்த நாடு இவ்விதமான பாரிய இழப்பை சந்தித்து இருக்காது என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது ,

                          ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ


                          எதிரி யார் என்பதை எதிரியின் நண்பன் தீர்மானிக்கும் போராக உக்கிரேன் களம் மாற்றம் பெற்றுள்ளது

                          ரசியா எங்கள் எதிரி என்று கோட்பாட்டு ரீதியில் கருதிய நேட்டோ தனது கூட்டமைப்பு நாடுகளில் எதிரியை எதிர்த்து தாக்கும் அணைத்து இராணுவ முன் நகர்வை மேற்கொண்டுள்ளது

                          வரும் முன் தடுத்திட வேண்டும் என்ற போரியல் விதிக்கு ஏற்ப முன் ஏற்பாட்டு மக்காவில் நேட்டோ ஈடுபட்டுள்ளது

                          நேட்டோவின் இந்த முன் ஏற்பாடு அவரகளை எதிரி நாட்டு இராணுவ தாக்குதலில் இருந்து பாதுகாத்து
                          கொள்ளுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

                            Posted in உலக செய்திகள்

                            கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு –

                            கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு – புதிய கண்டுபிடிப்பு

                            அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் அறுபத்தி ஆறு விகிதம் மக்கள் ,நாள் தோறும் கோப்பி குடித்து வருகின்றனர் ,

                            இவ்விதம் கோப்பி குடித்து வரும் மக்களின் ஆயூள் காலம் அதிகரித்துள்ளது புதிய ஆரய்ச்சியாளர்கள் கண்டு பிடிப்பாக உள்ளது

                            அமெரிக்காவில் வாழும் இதே சம அளவான மக்கள் குழாய் நீரையே அருந்தி வருகின்றனர் ,அதனால் அவர்களுக்கு எவ்வித நோயின் தாக்குதலும் ஏற்படவில்லை

                            இவர்கள் குடிக்கும் கோப்பியில் சீனியின் அளவு குறைந்தோ ,அல்லது இன்றி அருந்தினாலும் அதன் கணிப்பு சமனாகவே உள்ளது என்பது ஆரய்ச்சியாளர்கள் வாதமாக உள்ளது

                            தேயிலை தேநீர் அருந்தும் மக்களின் ஆயூள் காலத்தை விட ,கோப்பி அருந்தும் மக்கள் அதிக நாள் உயிர்வாழ்தல் ,பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

                            இந்த புள்ளி விபர ஆய்வு அறிக்கை வெளியான பின்னர் ,காப்பி அருந்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் ,

                            இதனால் மக்கள் நோயின்றி நீண்ட நாள் உயிர் வாழும் காலம் அதிகரிக்க படும் என்பது இவர்கள் கணிப்பாக உள்ளது

                            நாக பாம்பு கறி சாப்பிட இதில் அழுத்துங்க

                            இந்த புதிய கண்டுபிடிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் ,டாக்சி ஓடும் வெள்ளையர்கள் அதிகம் காப்பி அருந்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்

                            ,ஆசிய நாட்டவர்கள் மூவேளையும் தேனீர் பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

                            இதனால் இவர்கள் சரா சரி ஐம்பது வயதை கடக்கும் முன்பாக இறந்து விடுகின்றனர் ,
                            மேலும் சர்க்கரை நோயினாலும் இவர்கள் அவஸ்தை பட்ட வண்ணம் உள்ளது அதிகரித்து வருகிறது

                            கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு – புதிய கண்டுபிடிப்பு

                            மாறி வரும் கால நிலைகளுக்கு ஏற்ப எமது உணவு பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலையில் மானுட சமுதாயம் உள்ளமை கண்டுபிடிப்புகளின் கருத்தியலாக உள்ளது ,

                            நாள் தோறும் அதிகரித்து செல்லும் புதிய நுகர்வோர் உறவு முறையினால் உணவுகளிலு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன ,
                            ஆகவே மக்களே கோப்பியினை குடித்தால் ஆயூள்
                            அதிகரிக்கும் என்ற புதிய கண்டுபிடிப்பு மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது

                              Posted in மருத்துவம்

                              விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்

                              விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்

                              பெண்கள் கர்ப்பமாவதற்கு ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், பழங்கள் சிறந்த உணவாக விளங்கும்.

                              முட்டைக்கோஸ் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக உதவிடும். அதற்கு காரணம் அதிலுள்ள டி-இண்டோல் மீதேன் என்ற ரசாயனம். இது ஈஸ்ட்ரோஜன்

                              மெட்டபாலிசத்தில் முக்கிய பங்கை வகிப்பதால், நார்த்திசுக்கட்டிகள் மற்றும் இடமகல் கருப்பை அகப்படலம் போன்றவைகள் உருவாகாமல் தடுக்கப்படும்.

                              ப்ராக்கோலி

                              கர்ப்பமாக திட்டமிடும் பெண்களுக்கு அருமையான உணவாக விளங்குகிறது. அதிலுள்ள ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் இதர அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் அதனை ஒரு முழுமையான உணவாக மாற்றுகிறது.

                              கருமுட்டையை முதிர்ச்சியடைய செய்யவும், கருமுட்டை வெளிப்படுதல் செயல்முறைக்கும், கருப்பைகளுக்கு தேவையான வைட்டமின் சி-யும் இதில் அளவுக்கு அதிகமாக உள்ளது.

                              உருளைக்கிழங்கு

                              உருளைக்கிழங்கு கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அவித்த உருளைக்கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

                              உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் பி மற்றும் ஈ, அணுக்கள் பிரிவை அதிகரிக்க உதவும். இதனால் பெண் கருவில் உருவாகும் சினை முட்டை ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

                              மாதுளை

                              மாதுளையில் உள்ள பல வித உடல் நல பயன்களை தவிர, இரண்டு பாலினருக்கும் லிபிடோவை ஊக்கப்படுத்தவும் உதவுகிறது.

                              வாழைப்பழம்

                              சீரான மாதவிடாய் சுழற்சியில் உள்ள பெண்களுக்கு மலட்டுத்தன்மை இடர்பாடும் கர்ப்ப சிக்கல்களும் குறைவாகவே இருக்கும். அதனால் கர்ப்பமாக திட்டமிடும்

                              விரைவில் கர்ப்பமாவதற்கு உதவும் காய்கறிகள், பழங்கள்

                              பெண்கள் வாழைப்பழங்கள் உண்ண வேண்டும். அதற்கு காரணம் அதிலுள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் பி6. சீரான மாதவிடாய் சுழற்சிக்கு இந்த வைட்டமின் அதிமுக்கிய ஒன்றாகும். இதனால் கருவுறும் தன்மையும் மேம்படும்.

                              அன்னாசிப்பழம்

                              அன்னாசிப்பழத்தில் அளவுக்கு அதிகமான மாங்கனீசு உள்ளது. பல வித இனப்பெருக்க ஹார்மோன்கள் சுரப்பதற்கு இந்த கனிமம் முக்கிய பங்கை வகிக்கிறது. கூடுதலாக,

                              உடலில் மாங்கனீசு அளவுகள் குறைவாக இருப்பதற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு உள்ளது.

                              முட்டை

                              முட்டைகள் கருவுறும் தன்மைக்கு சந்தேகமே இல்லாமல் சிறந்த உணவாக விளங்குகிறது. முட்டையில் கோலின், ஃபோலிக், ஒமேகா 3 கொழுப்பமிலங்கள் மற்றும்

                              வைட்டமின் டி வளமையாக உள்ளதால், கர்ப்பமாக திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது முழுமையான உணவாக விளங்கும்.

                              மஞ்சள்

                              சமைக்கும் போதெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, ஆரோக்கியமான கர்ப்பத்தையும் மேம்படுத்தும்.

                              இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளதால், கருவுறும் தன்மையை
                              ஊக்குவிக்கும் சக்தி இந்த அதிசய மசாலாவிற்கு இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.

                                Posted in சீமான் பேச்சு

                                வழக்கில் சிக்க வைக்கப்பட்ட சீமான் வீடியோ

                                வழக்கில் சிக்க வைக்கப்பட்ட சீமான் வீடியோ

                                செந்தமிழர் சீமான் வர்கள் மீது தொடராக வழக்கு தொடுக்க பட்டு
                                அவர் உள உரனில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சிறை வழக்கு என
                                சிறை படுத்தும் பயமுறுத்தலை ஆளும் ஆட்சிகள் தொடுத்த வண்ணம் உள்ளன

                                அதனை எதிர் கொண்டு செந்தமிழ் சீமான் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளார்


                                இவரை சிறையில் அடைத்தால் ,நாம் தமிழர் கட்சி செயல் இழந்து விடும் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது

                                வழக்கு தொடுக்க பட்டு சிறையில் அடைக்க பட்ட சீமான் வெகுண்டெழுந்து ஆட்சியில் அமர்வார் என்பது
                                தமிழர்கள் கருத்தாக உள்ளது

                                இதில் அழுத்தி காணொளி பார்க்க

                                Posted in உலக செய்திகள்

                                உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை

                                உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் கொலை

                                உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போருக்கு

                                எதிராக உக்கிரேனிய இராணுவம் கடும் சமராடி வருகிறது

                                முன்னேறி வரும் எதிரி படைகளை திணறடித்த வண்ணம் உக்கிரேனிய இராணுவம் போரிட்ட வண்ணம் உள்ளது ,உக்கிரேன் மீதான எதிரிகளின் படையெடுப்பு

                                மேற்கொள்ள பட்டு நூறு நாட்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை முப்பத்தி ஓராயிரம் எதிரி படைகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது

                                மேற்குலக நாடுகளின் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு தொடர்ந்து வல்லரசாக வலம் வரும் ரஷியா இராணுவத்திற்கு எதிராக நூறு நாட்கள் உக்கிரேன் இராணுவம் கடும் எதிர் சமர் புரிந்துள்ளது

                                இதுவரையில் உக்கிரேன் பகுதியில் எதிரி இராணுவத்தால் ஐந்தாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                                மேலும் எட்டாயிரம் பேர் வரை படு காயமடைந்துள்ளனர் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளது ,
                                இழப்புக்களை எதிர் கொண்டவாறு ரசியா இராணுவம் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளது

                                ,தமது இறுதி மூச்சு இருக்கும் வரை தமது தாய் மண்ணை விட்டு கொடுக்க மாட்டோம் என உக்கிரேன் இராணுவம் எதிரி படைகளுடன் சமராடி வருகிறது

                                உக்கிரேனில் இடம்பெறுவது இனப்படுகொலை என உக்கிரேன் உரத்து கூறி வருகிறது ,சர்வதேச நீதிமன்றில் ரசியா நிறுத்த பட்டு தண்டிக்க படும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது

                                உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை

                                உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க படும் நாடுகளுக்கு ரசியா எச்சரித்திருந்தது

                                ,ஆனால் அத்தனையும் மீறி பிரிட்டன்,அமெரிக்கா எண்பது கிலோ மீட்டர் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை பல மில்லியன் டொலருக்கு வழங்கியுள்ளது

                                மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளுடன் வல்லரசாக விளங்கி வரும் எதிரி இராணுவத்தை வீழ்த்தி உக்கிரேன் இராணுவம் வெற்றி கொள்ளுமா என்பது சந்தேகமே

                                அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை நம்பிய இராணுவ குழுக்கள் ,அதே

                                இராணுவத்தால் கைவிட பட்டு அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதை மத்திய கிழக்கு அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கான போர் பாடம் புகட்டுகிறது

                                அவ்விதம் உக்கிரேனும் சம காலத்தில் கைவிட பட்டு ,எதிரியிடம் மண்டியிடும் நிலைக்கு உக்கிரேன் செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம்

                                தனது பலத்தில் உள்ளவன் மட்டுமே, எதிரி முன்னேற்றம் குறித்தும்,அவன் பலம் குறித்தும் ஆழ்ந்து யோசித்து
                                போராடுவான் என்பது போரியல் நிலையாக உள்ளது ,

                                உக்கிரேன் ரசியா போர் கோடை காலத்தில் முடிவுக்கு வரும் என கூறும் எதிரியாக உள்ள ரசியாவின் கூற்று சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்தது பார்க்கலாம்

                                உக்கிரேன் கூறும் எதிரி இராணுவத்தின் ஆயுத தளபாட மற்றும் ஆளணி அழிப்பு என்பது ரசியாவுக்கு நெருக்கடி தரும் ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது ,

                                வரும் எதிர்ப்புக்களை உடைத்து எதிரி நாட்டை தம் வசப்படுத்துவோம் என்கின்ற ரசியாவின் கனவு பலிக்குமா ..?

                                உக்கிரேன் ரசியா போர் எது வரை நீளும் ..?
                                அது சொல்ல போகும் செய்தி என்ன ..?

                                • வன்னி மைந்தன் –