கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

கணவன் இறப்பு மனைவி தற்கொலை

கணவன் இறப்பு மனைவி தற்கொலை

கணவன் இறப்பு மனைவி தற்கொலை ,கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து சம்பவம் நெடுங்கேணியில் இடம்பெற்றுள்ளது .

மாரடைப்பால் கணவன் மரணம்

நெடுங்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் 49 வயதுடைய கணவன் மாரடைப்பால் மரணமானார் .

கணவன் இறந்த செய்தி மனைவிக்கு தெரியப்படுத்தியதை அடுத்து ,அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் .

பிள்ளைகள் அனாதை

இறந்தவர்களுக்கு 18மற்றும் 15 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் .

தந்தை தாய் இல்லா நிலையில் ,இரு பெண் பிள்ளைகளும் இப்பொழுது அனாதையாக உள்ளனர் .

மனைவி கணவன் மீது அதீத நேசம் வைத்த காரணத்தினால் ,பிள்ளைகளை மறந்து ,உணர்ச்சிக்கு அடிமையாகி இவ்விதமான முடிவை எடுத்துள்ள செயலானது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உடன்கட்டை ஏறிய மனைவி

உடன்கட்டை ஏறிய மனைவி எடுத்த தவறான முடிவினால் தற்போது பிள்ளைகள் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது என மக்கள் பேசிக்கொள்கின்றனர் .

அந்த கிராம மக்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வாழ்க்கை பட்ட கணவன் இறந்த நிலையில் பிள்ளைகளை எவ்வாறு வளர்த்து என்கின்ற அச்ச நிலை தோன்றியதால் கூட இவ்விதமான முடிவை ,துணைவியார் எடுத்து இருக்கலாமென மக்கள் பேசி கொள்கின்றனர் .

விநோதரலிங்கம் மாரடைப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

விநோதரலிங்கம் மாரடைப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதி

விநோதரலிங்கம் மாரடைப்பு காரணமாக மருத்துவனையில் அனுமதி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் மாரடைப்பு காரணமாக புதுக்குடியிருப்பது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டார் .

அங்கிருந்து பின்னர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்ற பட்டார்

.தற்போது அவரின் உடல் தேறி வருவதாக ,யாழ்ப்பாண வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் .

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ,விநோதரலிங்கம்லண்டனுக்கு பயணம் செய்து நாடு திரும்பி இருந்தமை குறிப்பிட தக்கது.

Posted in உலக செய்திகள்

காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய்

காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய்

மாரடைப்பு, பக்கவாத நோய் தாக்குதல் போன்றவற்றுக்கு காற்று மாசு முக்கிய காரணமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய் ஏற்படும்
மாரடைப்பு
லண்டன்:

போகி பண்டிகையான இன்று பழைய பொருட்களை எரித்ததால் காற்றில் அதிக அளவில் மாசு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே வாகன புகை, தொழிற்சாலை நச்சுக்கள் போன்றவை காற்றில் கலப்பதால் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

இது, மனிதனுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குவதுடன் சுற்றுப்புற சூழலுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் காற்று மாசுவினால் நச்சு உருவாகி அது மனிதனுக்கு உயிருக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.

அதாவது, மாரடைப்பு, பக்கவாத நோய் தாக்குதல் போன்றவற்றுக்கும் காற்று மாசு முக்கிய காரணமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு

காற்று மாசுவினால் மாரடைப்பு- பக்கவாத நோய்

இங்கிலாந்தில் உள்ள ஹார்ட் பவுண்டேசன் நடத்திய ஆய்வில் இங்கிலாந்து நாட்டில் காற்று மாசு காரணமாக

ஒவ்வொரு நாளும் 40 பேர் வரை மாரடைப்பு மற்றும் அது தொடர்பான நோய்களால் உயிர் இழப்பதாக தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தற்போது 11 ஆயிரம் பேர் காற்றுமாசுவினால் உயிர் இழக்கின்றனர். இந்த காற்று மாசு

இன்னும் அதிகரித்து அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை இங்கிலாந்தில் உயிர் இழப்பார்கள் என்று கூறி உள்ளனர்.

காற்றுமாசுவினால் ஏற்படும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு இந்த உயிர் பலியை ஏற்படுத்தும் என்றும் கூறி உள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம் காற்றில் எந்த அளவுக்கு அதிகபட்சமாக நச்சு துகள்கள் இருக்கலாம் என்று

குறிப்பிட்டு இருக்கிறதோ அதைவிட மிக அதிகமாக இங்கிலாந்தில் காற்று மாசு இருக்கிறது.

இதனால் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஆய்வு குழுவினர் கூறி இருக்கிறார்கள்.

மேலும் உலக சுகாதார நிறுவனம் காற்று மாசு வரையறை தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.

அதை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்கள்.

Posted in மருத்துவம்

மாரடைப்பு வர காரணம் என்ன

நெஞ்சு வலிக்காமலேயே மாரடைப்புஏற்பட்டால், அதை ‘சைலன்ட் அட்டாக்‘ என்பர். அதிகம் மாரடைப்பு வருவதற்கு காரணம் என்ன ..? தெரியுமா..?

வயது முதிர்ந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நரம்பு கோளாறு உள்ளவர்களுக்கும் இவ்வகை மாரடைப்புஏற்படும் வாய்ப்பு அதிகம்.

அதே போல எவ்வித உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இன்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை

பார்ப்பவர்களுக்கும் வலியில்லா மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேல்வயிறு, தோள்பட்டை, கழுத்து வலி, சில

நேரங்களில் தலை வலி, மயக்கம் போன்றவை கூட இம்மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கும்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், திடீரென்று மூச்சு வாங்குதல்,

வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால், இது மாரடைப்பா என்பதை இ.சி.ஜி., மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வருடத்திற்கு ஒருமுறை எக்கோ பரிசோதனை, டிரெட்மில் எனப்படும் பரிசோதனை ஆகியவற்றை செய்ய வேண்டும்.

இப்பரிசோதனைகளின் போது நமது நாடித்துடிப்பு 100-க்கும் மேல் செல்லும். எனவே இதயத்தின் வேலைப்பளு கூடுகிறது. இவ்வாறு கூடும்போது,

மாரடைப்பு வர காரணம் என்ன

இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறதா? என தெரிந்துகொள்ளலாம். இதயத்திற்குரிய முக்கிய பரிசோதனைகளை வருடத்திற்கு ஒரு முறை செய்வது

நல்லது. அவ்வாறு செய்தால் இதயத்தின் சிறுகோளாறுகளை கூட உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை பெற முடியும். வலியில்லா மாரடைப்பை தவிர்க்கலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் முழுமையாக நிற்பதற்கு முந்தைய காலகட்டங்களில் மாரடைப்புவரும் வாய்ப்பு குறைவு.

மாதவிடாய் நின்றவுடன் மாரடைப்புக்கான வாய்ப்பு ஆண்களை விட அதிகம். நம் நாட்டில் உள்ள பெண்களின் வாழ்வியல் முறையும் மாரடைப்புக்கான முக்கிய

காரணமாகும். பல பெண்கள் முறையாக உடற்பயிற்சி செய்வதில்லை. மாறாக தொலைக்காட்சியில் அதிக நேரம் மூழ்கிவிடுகின்றனர். அப்போது ஏதாவது

நொறுக்குத்தீனியையும் சாப்பிடுகின்றனர். மேலும் இப்போதைய பெண்கள் எளிதில் மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர்.

சிறிய வி‌‌ஷயங்களை கூட சகிக்கும் தன்மை இல்லை. எனவே பெண்கள் மாரடைப்பில் இருந்து தப்பிக்க சோம்பலான வாழ்வியல் முறையில் இருந்து விடுபட வேண்டும்

அதிக இரதம் அழுத்தத்தை குறைக்க உங்களை குஷி படுத்துங்கள் ,மாரடைப்புஎனும் கொடிய யமன் உங்களை நெருங்கி வர மாட்டான் .