மொறு மொறு காலிஃபிளவர் சில்லி இப்படி செய்து அசத்துங்க
Posted in சமையல் cook

மொறு மொறு காலிஃபிளவர் சில்லி இப்படி செய்து அசத்துங்க

மொறு மொறு காலிஃபிளவர் சில்லி இப்படி செய்து அசத்துங்க

மொறு மொறு காலிஃபிளவர் சில்லி வீட்டில இப்படி செய்து அசத்துங்க .மிகவும் இலகுவான முறையில் கொட்டல் சுவையில் இப்படி செய்து பாருங்க .

காலிஃபிளவர் சில்லி செய்வது எப்படி ..?

இப்போ காலிஃபிளவர் சில்லி செய்வது எப்படி என்கின்ற உங்கள் கேள்விக்கு ,இதோ இதில் செய்முறை விளக்கத்துடன் பதில் உள்ளது .

காலிஃபிளவர் சில்லி இனி இப்படித்தான் செய்வீங்க .காலிஃபிளவர் சில்லி செய்முறைக்குள் போகலாம் வாங்க .

காலிஃபிளவர் சில்லி செய்முறை ஒன்று .

இந்த காலிஃபிளவர் சில்லி செய்வதற்கு 250 கிராம் காலிஃபிளவர் எடுத்து கொள்ளுங்க .

அதனை கொஞ்சம் சின்னத்தாக வெட்டி தண்ணீரில் போட்டு கழுவி கொள்ளுங்க .அதன் பின்னர் நீர் சேர்த்திடுங்க .கூடவே அரை கரண்டி மஞ்சள் ,கொஞ்சமா உப்புச சேர்த்து கலக்கி விடுங்க .

இப்போ இதை அடுப்பில வைத்து நன்றாக கொதிக்க வைத்து ,நல்ல கொதி வந்ததும் அடுப்பை அணைத்து கொள்ளுங்க .

இப்போ காலிஃபிளவர வடி கட்டி எடுத்திருங்க .

அதன் பின்னர் ஒரு சட்டியில் அரை கப் அளவு மைதா மா ,அரை கப் சோளம் மா ,சில்லி பவுடர் ,மல்லி தூள் ,கரம் மசாலா , தேவையான உப்பு ,மஞ்சள்தூள் ,தக்காளி சோஸ் .சில்லி சோஸ்,சோயா சோஸ் ,எல்லாம் போட்டு மாவை நன்றாக பிசைந்து குழைத்திடுங்க .

தோசை மாவு பதத்திற்கு கரைத்து எடுத்து ,அதற்குள்ள ரெடியாக அவித்து வைத்த காலிஃபிளவர போட்டு கலக்கி கொள்ளுங்க .ஐந்து நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்க .

காலிஃபிளவர் சில்லி செய்முறை இரண்டு

இப்போ அடுப்பில கடாய வைத்து ,காலிஃபிளவர் சில்லி பொரித்திட தேவையான எண்ணெய் விட்டு சூடாக்கி கொள்ளுங்க .

இப்போ செஞ்சி வைத்துள்ள காலிஃபிளவர ஒன்று ஒன்றாக எண்ணெய்யில போட்டு நன்றாக பொரித்து எடுத்திருங்க .

இறுதியாக ஒரு கொத்து கருவேப்பிலை பொரித்து எடுத்து .அதனை பொரித்து வைத்துள்ள காலிஃபிளவர் சில்லி மேல போட்டு எடுத்து சாப்பிடுங்க .

இப்படித்தாங்க காலிஃபிளவர் சில்லி செய்து கொள்வது .இது போலவே வீட்டில் இப்படி செய்து அசத்துங்க மக்களே .

எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு

எயிட்ஸ் நோயால் 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு

இலங்கையில் எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் தாக்குதலில் சிக்கி 50 பல்கலைக்கழக மாணவர்கள் பாதிக்க பட்டுள்ளதான ,புதிய புள்ளி விபரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் ,இந்த கொடிய எயிட்ஸ் நோய்க்கு மாணவர்கள் உள்ளாகியுள்ளனர் என்கிறது அந்த விபரம் .

மேலும் இந்த எயிட்ஸ் நோயின் தாக்குதலுக்கு இரண்டு புத்த பிக்குகளும் உள்ளாகியுள்ளது ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை எங்கும் பரவலாக போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுவதால் ,அதற்கு அடிமையான மாணவர்கள் ,மக்கள் ,செக்ஸ் தொடர்பில் உரிய பாதுகாப்பு முறைமையை கடை பிடிப்பதில்லை .

இதனாலேயே இந்த உயிர்கொல்லி எயிட்ஸ் நோய் தாக்குதல் , அதிகரித்து காண படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்
Posted in இலங்கை செய்திகள்

ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்

ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்

பெரும் வரலாற்று சரித்திரம் இருப்பதாக கூறினாலும், ராஜபக்சர்களால் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட உலகம் முழுவதும் பிச்சை எடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார் .

இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இன, மத, சாதி, நிற பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அதற்கான சரியான வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு நல்ல அணியைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாஸ,

தேர்தலில் வெற்றி பெற்றால், அதன் உண்மையான வெற்றியாளர்கள் தாய் நாடும் அதன் 220 இலட்சம் மக்களும் தான் எனவும் தெரிவித்தார்.

கலகெதர தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கடந்த (23) ஆம் திகதி கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்மார்ட் தீர்வுகள், புத்திசாலித்தனமான தீர்வுகளை வழங்குவதாகக் கூறி ஆட்சி வந்த சேர்மார்கள் இறுதியில் நாட்டையே வக்குரோத்தாக்கினர் என்கிறார் .

ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்

இதனால், சிறு குழந்தை முதல் கர்ப்பிணித் தாய் வரை அனைத்து மட்டங்களிலுமுள்ள குடிமக்கள் தற்போது மிகவும் அவல நிலையில் இருப்பதாகவும், இறுதியாக உணவு வேளையைக் கூட தயாரிக்க முடியாத நிலையில் உள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கல்வித் துறையின் பிரச்சினைகள், சுகாதாரத் துறையின் பிரச்சினைகள், கைத்தொழில் துறையின் பிரச்சினைகள் உட்பட பல தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது வலியுறுத்தினார்.

அரசாங்கம் போராட்டத்திற்கு பயந்து பல்வேறு கட்டளைச் சட்டங்களைப் பிரயோகித்து மக்களை ஒடுக்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த அடக்குமுறையைத் தாங்கும் உச்ச வரம்பை மக்கள் எட்டிவிட்டனர் .

அதன் காரணமாக பல்வேறு துறைசார் தொழில் வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலட்சக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

விரைவில் முழு நாட்டு மக்களும் வீதியில் இறங்கி மக்களுக்கு பக்கபலமாக இருக்கும் பொது மக்கள்
ஆட்சியொன்றை உருவாக்குவர் எனவும் சுட்டிக்காட்டினார்.

வீட்டில் பதுக்கி வைக்க பட்ட ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வீட்டில் பதுக்கி வைக்க பட்ட ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது

வீட்டில் பதுக்கி வைக்க பட்ட ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது

இலங்கை வெல்லாம் பிட்டிய பகுதியில் வீடொன்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்க பட்ட வாள்கள் ,கத்திகள் மற்றும் ஆயுதங்களுடன் ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

இவர்களினால் பதுக்கி வைக்க பட்ட ,கொடிய கூரிய ஆயுதங்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,குறித்த வீடு சுற்றிவளைக்க பட்டு ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளன .

குறித்த குழுவினர் ,கொள்ளை மற்றும் ,சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்க படுவதால் ,உரிய முறை கவனிப்புடன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வீதியில் எரிந்த ஆட்டோ தப்பிய குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் எரிந்த ஆட்டோ தப்பிய குடும்பம்

வீதியில் எரிந்த ஆட்டோ தப்பிய குடும்பம்

ஒரே குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று நேற்று (25) தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து முச்சக்கரவண்டிக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு நுவரெலியா லவர்ஸ்லிப் பகுதியில் உள்ள வீட்டுக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே, நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் இவ்வாறு முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்துள்ளது.

முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்த போது அருகில் இருந்தவர்கள் பல வழிகளில் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முச்சக்கரவண்டி இவ்வாறு தீப்பற்றி எரிந்த போது, முச்சக்கரவண்டிக்குள் தாய், தந்தை மற்றும் மகளும் பயணித்துக்கொண்டிருந்ததுடன், தந்தையே முச்சக்கரவண்டியை செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த மூவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

பாரிய மண்சரிவு போக்குவரத்து தடை மக்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

பாரிய மண்சரிவு போக்குவரத்து தடை மக்கள் அவதி

பாரிய மண்சரிவு போக்குவரத்து தடை மக்கள் அவதி

நுவரெலியா தலவாக்கலை பூண்டுலோயா பிரதா வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது .இந்த மண் சரிவினால் அந்த வழி போக்குவரத்து முற்றாக பாத்திக்க பட்டுள்ளது .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பருவகால மழை காரணமாக ,ஏற்பட்டுள்ள அதிக மழை வீழ்ச்சியினால் இந்த மண்சரிவு மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .

பாதிக்க பட்ட சாலைகளில் உள்ள மண்சரிவுகளை அகற்றும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மலைவாழ் மக்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

கொழும்பு கடலில் காத்துநிற்கும் எண்ணெய் கப்பல் பணம் இன்றி தவிக்கும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்தடைந்த நிலக்கரி கப்பல்

இலங்கை வந்தடைந்த நிலக்கரி கப்பல்

இலங்கைக்கு நிலக்கரியை ஏற்றிய படி கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது .இந்த கப்பலில் 60.00. மெட்ரிக் தொன் நிலக்கரிகள் உள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது .

கப்பலில் உள்ள நிலக்கரிகளை இறக்குமதி செய்திடும் வேலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

தற்கால பொருளாதார நெருக்கடியை மீள் இயல்பு நிலைக்கு எடுத்து செல்லும் நகர்வில் ,ஆளும் ரணில் அரசு முழு வீச்சில் செயல் பட்டு வருவதாக சுட்டி கட்டட படுகிறது .

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் - பரோட்டா ஆட்டம் ஆரம்பம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்

பிரிட்டன் முன்னாள் பிரதமர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்து தப்பி ஓடிய அம்மணி ,மீளவும் அதே அமைச்சு பணியில் அமர்த்த பட்டுள்ளார் .

இவரது இந்த மீள் நியமனம் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

பாராட்டோ பரோட்டா ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் என்கின்ற ,சமூக வலைத்தள கருத்துக்கள் சூடு பிடிக்கின்றன .

அகதிகள் மற்றும் குடிவரவு விடயத்தில் ,முன்னாள் பரோட்டா அமைச்சர் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தி இருந்தார் .

தப்பி ஓடிய அம்மணி மீளவும் அதே அமைச்சரானார் – பரோட்டா ஆட்டம் ஆரம்பம்

அது அகதிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் மத்தியில், ஆளும் கட்சிக்கு எதிரான அலையை கிளப்பியுள்ளது .

அதே கடும் போக்கு கொள்கையை , ஆளும் ரிஷி சுனெக் கடைப்பிடிக்க முனைந்தால்,மக்கள் எதிர்ப்பு அதிகம் காண படும் எனலாம் .

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவை போல ,இந்த இந்தியர் சுனெக் ஆட்சி அமையுமா என்கின்ற கேள்வி எழுகிறது .

பார்க்கலாம் சில மாதங்களில் சுனெக் ஆட்டங்கள் எவ்வாறு உள்ளது என்பதை ,பரோட்டா பரோட்டா தான் என்பதை காண்பிக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் .

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

சோமாலியா மத்திய பகுதியை இலக்கு வைத்தது ,அரச இராணுவம் நடத்திய தேடி அழிப்பு இராணுவ நடிக்கையில் 100 க்கு மேற்பட்ட ,அல் சபா தீவிரவாதிகள் கொன்று குவிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

சோமாலிய அரச இராணுவத்தை இலக்கு வைத்து அலசபா போராளி குழுக்கள் ,அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தேடி அழிப்பு தாக்குதல் 100 தீவிரவாதிகள் சுட்டு கொலை

இவர்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதலினால் , அரச இராணுவம் பாரிய இழப்பை சந்தித்து வருகிறது .

அதற்கு பதிலடி தரும் வகையில் ,அரச இராணுவத்தினர் ,இந்த தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர் .

கடந்த வாரம் அரச இராணுவத்தின் ஆயுத வினியோக அணியினை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ,அந்த இராணுவ பாதுகாப்பு அணியினர் முற்றாக அழிக்க பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்
Posted in உலக செய்திகள்

லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்

லண்டன் Ilford இருவர் சுட்டு கொலை ஒருவர் காயம்

லண்டன் Ilford பகுதியில் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் ,மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் ,அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான முதலாவது 20 வயது நபர் சம்பவ இடத்தில பலியானார்

.மறு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான் நிலையில் பின்னர் பலியாகியுள்ளார் .

மேற்படி சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது .

பிரிட்டன் மக்களுக்கு ரிஷி சுனெக் நல்லது செய்வார் செல்வந்தர் மாமா தெரிவிப்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு ரிஷி சுனெக் நல்லது செய்வார் செல்வந்தர் மாமா தெரிவிப்பு

பிரிட்டன் மக்களுக்கு ரிஷி சுனெக் நல்லது செய்வார் செல்வந்தர் மாமா தெரிவிப்பு

பிரிட்டன் மக்களுக்கு ஆளும் புதிய பிரதமர் ரிஷி சுனெக் ,நல்லது செய்வார் என அவரது செல்வந்தரான மாமா தெரிவித்துள்ளார் .

ரிஷி சுனெக் மாமனார் மிக பெரும் செல்வந்தராவார் ,பல மில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரனாக விளங்கி வருகிறார் .

அவ்வாறான செல்வந்தரே இந்த கருத்தை தெரிவித்துள்ளார் .கடந்த ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளை நிவர்த்தி செய்து, தான் பயணிப்பேன் என ரிஷி சுனெக் தெரிவித்துள்ளார் .

இவரது ஆட்சியில் புதிய அமைச்சரவை நியமிக்க பட்டு ,அதன் ஊடாக நாட்டினை வழிநடத்தி செல்வார் என அறிவித்துள்ளார் .

வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து

வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து

ஆண்ட பரம்பரை வீழ்ந்து படுத்தது
ஆண்ட தேசத்தில
அடிமையானவர் அடக்கியாண்டவர்
ஆள்கிறான் தேசத்தில

இங்கிலாந்திலும் இந்து ஆளலாம்
இங்கு நெறி இருக்கு
இன்று ஆளும் ரிஷி சுனெக்
இந்து தருமத்தில் இருக்கு

முந்தி வந்தெம்மை ஆண்டு மகிழ்ந்தவன்
முன்னே விழிக்கிறான்
முன்னேற்றம் காண நிலையிலே
முன்னேறி ஆள்கிறான்

வந்தவன் ஆள்கிறான் இங்கிலாந்து

வந்தவர் இங்கு ஆளும் புலமை
வாயிலில் இருக்கு
வாய் உரைக்கும் மொழியின் புலமை
வளத்தில் நிறைந்திருக்கு

ஈர் நூறண்டு வரலாறு
இன்று உடைந்தது
இங்கிலாந்தின் இளம் வயது
இவன் என்றே மலர்ந்தது

முதல் இந்திய குடிமகன்
முன் பெயரே ஒலித்தது
வந்தேறி குடி மகன் ஆளும்
வசதி நெறி கிடைத்தது

இந்திய நாடு இலங்கையில்
இது போலொரு நெறி உண்டோ
இங்கிலாந்தின் ஆட்சி முறை
இனியேனும் பற்றுமோ …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 25-10-2022
இங்கிலாந்தை ஆளும் இந்திய பிரதமர் ரிஷி சுனெக் 25/10/2022 பதவி ஏற்ற பொழுது

இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18,000 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18,000 பேர் பாதிப்பு

இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18,000 பேர் பாதிப்பு

இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18.000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .பாதிக்க பட்டவர்களை மீட்கும் மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .

பருவகால மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட நீர் அதிகரிப்பால் இந்த வெள்ளப்பெருக்கு இடம்பெற்றுள்ளது .

வீடுகளுக்குள் நீர் புகுந்ததினால் வீடுகள் பலத்த சேதமடைந்து ,உடைமைகள் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .


பாதிக்க பட்ட மக்கள் பாடசாலைகளில் தங்க வைக்க பட்டுள்ளனர் .

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து இரு வாலிபர்கள் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து இரு வாலிபர்கள் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து இரு வாலிபர்கள் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பருத்துறை புலோலி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இரண்டு வாலிபர்களா சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

கிணற்றுக்குள் எவ்வாறு இவர்களது சடலங்கள் சென்றன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து ,இவ்வாறு சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் நான்கு மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது .

இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் செயல் படுகின்றவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை கண்டு பிடிக்க படவில்லை .

காணாமல் போனவர் குப்பையில் இருந்து சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போனவர் குப்பையில் இருந்து சடலமாக மீட்பு

காணாமல் போனவர் குப்பையில் இருந்து சடலமாக மீட்பு

இலங்கை மெல்சிறிபுர, ரேஸ்வத்த பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் ,வீட்டின் அருகில் உள்ள குப்பை மேட்டில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரது சடலம் துணியால் சுற்ற பட்ட நிலையில் கண்டெடுக்க பட்டுள்ளது .

இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு பின்னர் குப்பை மேட்டில் வீச பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சதேகிக்கின்றனர் .

இதனால் விசாரணைகள் தீவிரம் பெற்றுள்ளது .இலங்கையில் இவ்விதமான கொலைகள் அதிகரித்து காணப்படுகிறது .

பொங்கலுக்கு தமிழ் கைதிகள் விடுதலை மனோவிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பொங்கலுக்கு தமிழ் கைதிகள் விடுதலை மனோவிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

கொழும்பு பொலிஸ் பதிவு பற்றி பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை: பொங்கலுக்கு மீண்டும் தமிழ் கைதிகள் விடுதலை மனோவிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு,

கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் பொலிஸ் பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி பொலிஸ் மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார்.

அதேபோல், பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் தலைமையில் அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பீக்கள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் உரையாடினோம்.

இப்போது சமாதான காலம் நிலவுவதால், வீடு வீடாக சென்று பொலிஸ் பதிவு பத்திரங்களை விநியோகம் செய்து, விபரங்களை திரட்ட வேண்டிய அவசியம் என்ன என நான் கேட்டேன். மேலும் இப்படி திரட்டப்படும் விபரங்கள் தவறான நபர்கள் கைகளுக்கு போவதை தடுக்க முடியாது எனவும் கூறினேன்.

தற்போது யுத்தம் இல்லை என்பதால் இதற்கென்ன அவசியம் என்று அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் கருத்து கூறினார். பொலிஸ் பதிவு பற்றி ஐஜிக்கு பணிப்புரை விடுப்பதாக ஜனாதிபதி சொன்னார்.

நேற்று விடுவிக்கப்பட்டதை போல், பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாக ஐனாதிபதி மேலும் சொன்னார்.

அருகிலிருந்த பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பீக்கள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோரும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றி சாதகமாக கருத்து பகிர்ந்தனர்.

இதன் மூலம் தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி சொன்னார்.

இத்தகைய நடவடிக்கைகள், நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளாக (Confidence Building Measures) கருதப்படும் என நான் ஜனாதிபதியிடம் கூறினேன். இவற்றை தொடர்ந்து செய்யும்படி வேண்டுகோள் விடுத்தேன்.

அரகல கிளர்ச்சி மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு ஆகியவை தொடர்பில் கைதாகி உள்ளோர் தொடர்பில் தயகாக்ம் இருப்பதாக ஜனாதிபதி மற்றும் அரசு தரப்பினர் கருத்துகளில் இருந்து தெரிய வந்தது.

அவர்களையும் விடுவிக்க வேண்டும் மற்றும் பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையாவது இடை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், ஆனால், தமிழ் கைதிகள் விடுவிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு என நான் ஜனாதிபதியிடம் கூறினேன்.

ஐந்து முதல் இருபது வருடங்கள் வரை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் பிரச்சினை விசேடமாக கருதப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.

சிங்கள மக்கள் மத்தியில், தமிழ் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் சாதகமான எண்ணப்பாடு இன்று நிலவுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பீ சாகல ரத்னாயக்க ஆகியோரும் கூறினர்.

மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்ட பிரிவினர் பற்றி நான் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.

பெருந்தோட்ட பகுதிகளிலேயே 51 விகித உணவின்மை பிரச்சினையும், இதையடுத்தே, நகரங்களில் 43 விகிதமும்,
கிராமங்களில் 34 விகிதமும் உணவு பாதுகாப்பின்மை இருப்பதாக ஐநா நிறுவனங்கள் கண்டறிந்து கூறி இருப்பதை நான் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.


பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க விசேட ஒதுக்கீட்டு திட்டம் ஒன்றையும்,
அவற்றை ஆராய ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்கவும் கோரினேன்.

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்

இலங்கை பொகவந்தலா ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது .
ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதை ன்கனுற்ற நபர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையா டுத்து சடலம் மீட்க பட்டுள்ளது .

சடல மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,.இவர் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டாரா அல்லது ,கொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 5 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .ஜெ ஆர் ஜேவர்தனா காலத்தில் ஆற்றில் சடலங்கள் மிதந்து போல ,ராஜபட்ச ஆடசி அதன் பின்னர் ரணில் ஆட்சியிலும் மிதக்கின்றமை ,இங்கே குறிப்பிட தக்கது .

ஆட்டோ கட்டணங்கள் குறைப்பு என அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டோ கட்டணங்கள் குறைப்பு என அறிவிப்பு

ஆட்டோ கட்டணங்கள் குறைப்பு என அறிவிப்பு

இலங்கையில் ஆட்டோக்கள் கட்டணங்கள் முதலாவது கிலோ மீட்டருக்கு 20 ரூபாவால் குறைக்க படுகிறது என
முச்சக்கர வண்டிகள் சங்கம், அறிவித்துள்ளது .

ஆட்டோக்களுக்கு எரிபொருள் மேலதிகமாக வழங்கிட அரசு இணங்கியுள்ளதால் ,
இந்த விலை குறைப்பு இடம்பெறுவதாக ஆட்டோக்கள் சங்கம் அறிவித்துள்ளது .

ரசியா ஜனாதிபதி புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்தார்
Posted in உலக செய்திகள்

ரசியா ஜனாதிபதி புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்தார்

ரசியா ஜனாதிபதி புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்தார்

ரசியா ஜனாதிபதி பிளடீர்மீர் புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்துள்ளதாக ,அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .புட்டீன் இருமல் மாற்று தும்மலினால் பாதிக்க பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் .

அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்திட சென்ற பொழுது ,சினைப்பர் சூட்டு தாக்குதலை நடத்தினார் .

இதன் போதே இவருக்கு கொரனோவின் அறிகுறியான இருமல் மற்றும் தடிமன் ஏற்பட்டுள்ளதாக மறைமுகமாக தெரிவிக்க பட்டுள்ளது .

இது எதிரி நாடுகளின் பரப்புரையா அல்லது ,உண்மையில் ரசியா ஜனாதிபதி புட்டீன் உண்மையில் நோய் வாய் பட்டுள்ளாரா என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .

வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்
Posted in உலக செய்திகள்

வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்

வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்

வடகொரியா தென் கொரியா என்பன பரஸ்பர எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .

வடகொரியாவின் கப்பல் ஒன்று தென் கொரியாவுக்குள் நுழைய முயன்றதாக தெரிவித்து ,தென் கொரியா வடகொரியா கப்பல் பயணித்த கடல்பகுதியை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நடத்தியது .

இதற்கு பதிலடியாக வடகொரியாவும் , ஏவுகணை மற்றும் எறிகணை தாக்குதலை நடத்தியது .

இரு நாடுகளுக்கு இடையில் விடுக்க பட்டுள்ள எச்சரிக்கை சூடு காரணமாக ,தற்போது இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .

உக்கிரேன் ரசியா போர் வெடித்துள்ள நிலையில் ,இரு கொரியாக்களும் மோதி கொள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது .