Tag: சடலமாக மீட்பு
இரத்தின வியாபாரி சடலமாக மீட்பு
இரத்தின வியாபாரி சடலமாக மீட்பு
இரத்தின வியாபாரி சடலமாக மீட்பு ,கஹவத்தையில் சுரங்கக் குழியில் இரத்தின வியாபாரி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்
காணாமல் போன 61 வயது இரத்தின வியாபாரியின் சடலம்
கஹவத்தை பகுதியில் காணாமல் போன 61 வயது இரத்தின வியாபாரியின் சடலம் நீலகமவில் உள்ள ஒரு சுரங்கக் குழிக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கஹவத்தை, கட்டங்கேயைச் சேர்ந்தவரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான இவர்,
கஹவத்தை–நீலகம சாலையில் பயணித்தபோது மர்மமான முறையில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
சனிக்கிழமை (28) மதியம் அவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணம் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், அவரது மோட்டார் சைக்கிள் அதே சாலையின் ஒரு வளைவு அருகே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
தேயிலைத் தோட்டம்
அருகிலுள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (29) அவரது கைபேசியையும் போலீசார் மீட்டனர்.
இறப்புக்கான சூழ்நிலைகளைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

அமெரிக்கப் பெண் சடலமாக மீட்பு
அமெரிக்கப் பெண் சடலமாக மீட்பு
அமெரிக்கப் பெண் சடலமாக மீட்பு ,இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் இறந்து கிடந்தார்.
சுற்றுலா விசாவில் இலங்கை
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லின் ஜூலி கிளார்க் (55)
என அடையாளம் காணப்பட்ட இறந்தவர், மூன்று மாதங்களாக வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்தார்.
முந்தைய நாள் அவர் சிகிரியாவுக்குச் சென்று திரும்பி வந்தார்.
அவர் கடுமையான போதைப் பழக்கத்திற்கு அடிமையானவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இன்று பிரேத பரிசோதனை
இன்று பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய மருத்துவமனையின் பிணவறைக்கு உடல் அனுப்பப்பட்டது.
கண்டி சுற்றுலா காவல்துறையின் பொறுப்பதிகாரி சிஐ லலித் மகாக்தர மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
உத்தரபிரதேசத்தில் இலங்கை பெண் சடலமாக மீட்பு
உத்தரபிரதேசத்தில் இலங்கை பெண் சடலமாக மீட்பு
உத்தரபிரதேசத்தில் இலங்கை பெண் சடலமாக மீட்பு ,உத்தரபிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் 71 வயது இலங்கை பெண் ஒருவர்
இறந்து கிடந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை (22) தெரிவித்தனர். இறந்த பெண் சுனில் சாந்தி டி சில்வாவின்
மனைவி கோத்தாகொட
மனைவி கோத்தாகொட என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இலங்கையைச் சேர்ந்த 46 சுற்றுலாப் பயணிகள் குழு மாநிலத்தில் உள்ள ஷ்ரவஸ்தியில் உள்ள புத்த மத தலத்தைப் பார்வையிட
வந்திருந்தனர். கோத்தாகொட தனது அறையை விட்டு செவ்வாய்க்கிழமை(21), வெளியே வராததால், சுற்றுலாப் பயணிகள், ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் கதவைத் திறந்து, பெண்ணின் உடலைக் கண்டனர்.
இதைத் தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர்கள் மேலாளரை அழைத்தனர், அவர் சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகள்
தகவல் கிடைத்ததும், பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி
(SHO) லால் சாஹேப் சிங் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
பெண்ணின் மரணம் குறித்து தகவல் கிடைத்தவுடன் இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் (SP) ராகுல் பாட்டி தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கை சாதாரணமாக இருந்தது, மேலும் உடலை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு வசதியாக தூதரகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
இஸ்ரேல் கைதிகள் மூவர் சடலமாக மீட்பு
இஸ்ரேல் கைதிகள் மூவர் சடலமாக மீட்பு
இஸ்ரேல் கைதிகள் மூவர் சடலமாக மீட்பு,என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து மக்கள் தற்போது கொதிநிலையில் காணப்படுகின்றனர் .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு
மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு
மருத்துவமனையில் இருந்து தப்பி சென்றவர் சடலமாக மீட்பு ,வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
அவ்வாறு தப்பிச் சென்றவர் வவுனியா கோவில் குளம் ராணி மில் வீதி சந்திப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து தப்பி சென்றவர் எவ்வாறு இந்த பகுதியில் சடலமாக அமைக்கப்பட்டார் என்பதற்கான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியவரை அடித்து கொன்ற வாகனம்
வீதியில் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பு சென்றுள்ளதாகவும் ,அதன் பொழுதே அவர் இந்த இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் இருந்த தப்பி சென்றவர் வீதியை வேகமாக கடக்க முற்பட்ட பொழுது அங்கிருந்து வேகமாக வந்த வாகனம் ஒன்று அவரை மோதி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது .
தப்பிச் சென்ற வாகனத்தினை சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் விசாரணையில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தப்பி ஓடிய வாகன சாரதியை தேடும் பொலிஸ்
விசாரணைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்ற இந்த வேளையில் வாகனமும் வாகனச் சாரதியும் விரைவில் போலீஸாரினால் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது .
இலங்கையில் திட்டமிடப்பட்டு வாகன விபத்துகளின் ஊடாகவும் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .
அவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ள நபர்கள் வீதிபத்தில் இறந்ததாக காரணத்தை சொல்லி கதைகள் முடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
சில வன்முறை சம்பவங்கள் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல் கட்சியில் ஊடாகவே இந்த வாகன விபத்துக்கள் இடம் பெறுவதாகும் அதனூடாக பலரை போட்டு தள்ளுகின்ற நடவடிக்கை இடம்பெறுகிறது .
இலங்கையில் தற்பொழுது இது இரண்டாக போய்க்கொண்டிருப்பதாகவும், சில மக்கள் இவ்வாறு சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
நாள்தோறும் இலங்கை வீதிகளில் மக்கள் சடலங்கள் மீட்கப்படுகின்ற சம்பவம், மக்களை ஆச்சுறுத்தும் நடவடிக்கை தொடர்ச்சி என்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

கடற்கரை பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
கடற்கரை பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு .
பேருவளை மாகல்கந்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (12) 09.00 மணியளவில் குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகவும், அவர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் பெண் சடலமாக மீட்பு
கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் பெண் சடலமாக மீட்பு
கைவிடப்பட்ட வீடு ஒன்றுக்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
கட்டுநாயக்க வல்பொல பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாழடைந்த வீடொன்றிற்கு அருகில் நேற்று (29) காலை குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடியல தெமங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவரின் தாய், தந்தை மற்றும் மகளுடன் வசித்து வந்த இவர் கடந்த 25ஆம் திகதி வல்பொல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் அறையொன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது .
மேலும் குறித்த நபர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் எனவும், உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் இன்றைய தினம் (04) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்படை முகாமிற்கு வெளியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட கடற்படைச் சிப்பாய் 33 வயது உடையவர் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிய வந்துள்ளது.
முள்ளிக்குளம் கடைப்படை முகாமில் உள்ள கடற்படையினரின் விடுதியில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குறித்த கடற்படை சிப்பாய் வாழ்ந்து வந்துள்ளார்.
கடற்படை சிப்பாய் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு
குறித்த கடற்படை சிப்பாய் கடந்த இரண்டாம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் குறித்த கடற்படை முகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற நிலையில் அவர் மீண்டும் முகாமிற்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனது கணவர் காணாமல் போனமை குறித்து அவரது மனைவி நேற்றைய தினம் (03) சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையிலே குறித்த கடற்படை சிப்பாய் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (04) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிலாபத்துறை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஏழு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு
ஏழு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு
வீட்டில் இருந்து காணாமல் போன ஏழு பிள்ளைகளின் தாயின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (17) மீட்டெடுக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் வென்சர் தோட்டத்தில் வசித்து வந்த ஏழு பிள்ளைகளின் தாயான பெருமாள் ராகம்மா (82) என்பவரின் சடலம் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்துள்ளது.
ஏழு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு
வென்சர் தோட்டத்தின் கீழ் பகுதியில் உள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீரேந்தி செல்லும் கெசல்கமுஓயாவிற்கு அருகில் உள்ள, தனது வீட்டில் வசித்து வந்தவரைகடந்த 10 ஆம் முதல் காணவில்லை என நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்த பெண்ணின் சடலம் நோர்வூட் மரண விசாரணை அதிகாரி நடராஜா ரவிக்குமார் முன்னிலையில் பொலிஸாரால்
மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு
முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு
மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்திலுள்ள வீதியோரத்தில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சடலமாக இன்று (28) மீட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை விமானப் படையில் விமானப் படை வீரராக பணிபுரிந்த நிலையில், அதிலிருந்து விலகியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றதுடன், முதற்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு
இதன்போது புத்தளம் பிராந்திய பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரனைகளை முன்னெடுத்தனர்.
மேலும், பொலிஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அங்கு பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இது ஒரு கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், பல கோணங்களில் விசாரணைகளையும், முறைப்பாடுகளையும் பதிவுசெய்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் , சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு
மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு
பேராதனை நகரில் மண்சரிவில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாயகிய பிரதேசத்தில் தொலைபேசி சேவை நிலையத்தை நடத்தி வந்த திருமணமாகாத அனுர ஜயவீர (வயது 68) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மண்சரிவில் சிக்கியவர் சடலமாக மீட்பு
இன்று (22) அதிகாலை 12.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளுடன் இராணுவ அதிகாரிகள் இணைந்து
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது உயிரிழந்தவரின் சடலம் அதிகாலை 5.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
பேராதனை நகரில் சுமார் நான்கு வர்த்தக நிலையங்கள் மண்சரிவினால் அழிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இளைஞன் சடலமாக மீட்பு
இளைஞன் சடலமாக மீட்பு
புத்தளம் நகரில் உள்ள அரச திணைக்களம் ஒன்றுக்கு சொந்தமான விடுதியொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் நேற்று (15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தளம் நகரைச் சேர்ந்த மரியதாஸ் கிருஷாந்த (வயது 23) எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் நேற்று காலை 6 மணிக்கும் 6.30 இற்கும் இடைப்பட்ட நேரத்தில் அரச திணைக்களம் ஒன்றுக்கு சொந்தமான விடுதியிலுள்ள குளியலறையில் வைத்து விற்றராசினை கையில் எடுத்து தனது இரண்டு
கைகளினாலும் நேராக இழுக்க முற்பட்ட போதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தனது இரண்டு கைகளாலும் தனது சக்தியை பயன்படுத்தி விற்றராசினை இழுத்த போது, குறித்த தராசின் முன்பக்கமாக உள்ள கூர்மையான பகுதி இளைஞனின் கழுத்தில் குத்தி கடுமையாக காயப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
குறித்த இளைஞன் குளியலறையில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்டதை அடுத்து, அங்கிருந்த குடும்பத்தினர் அந்த இளைஞனை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரவித்துள்ளனர்.
இளைஞன் சடலமாக மீட்பு
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்
அத்துடன், புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால், சம்வம் இடத்திலும், வைத்தியசாலையிலும் நீதிவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை தந்தையிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு
மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் கொண்டு வருவதற்கு சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போய் இருந்த நிலையில், அதில்
ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அடிவாரத்தில் இருந்து நேற்று (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என்று திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி மோகன்ராஜ் (42) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே தோட்டத்தைச் சேர்ந்த பாலமாணிக்கம் பிரேம்குமார் (51) என்பவரே காணாமல் போயுள்ளார்.
இவர்கள் இருவரும் உறவினர்கள் எனவும், கடந்த 11 ஆம் திகதி மாலை ஆறு மணியளவில் மதுபானம் வாங்க சென்றனர் எனவும், அவர்கள் திருப்பி
வராததால் 12 ஆம் திகதி அவர்களது உறவினர்கள், பொலிஸில் முறையிட்டனர் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இதனை அடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு
இவர்கள் இருவரும் தாம் வசிக்கும் தோட்டத்தில் இருந்து மதுபான சாலைக்கு செல்வதற்காக பத்தனை ஆறு ஊடாக உள்ள சிறிய அணையைக் கடக்க முற்பட்ட போது, இருவரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மீட்கப்பட்டுள்ள சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, காணாமல்போனவரை தேடும் பணி இடம்பெறுகின்றது.
எஹலியகொட OIC துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு
எஹலியகொட OIC துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு
எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது உத்தியோகபூர்வு குடியிருப்புக்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்
பிரான்ஸூக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் பெலராஸில் சடலமாக மீட்பு
பிரான்ஸூக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் பெலராஸில் சடலமாக மீட்பு
பிரான்ஸூக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின்
எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் (வயது 40) ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பிரான்ஸூக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் பெலராஸில் சடலமாக மீட்பு
பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் ரஷ்யா சென்று அங்கிருந்து பெலராஸ்,போலந்து,ஜேர்மன்
டாக பிரான்ஸ் செல்வதற்காக பெலராஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற போது உடல்
நிலை பாதிக்கப்பட்டு பெலராஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 7 ஆம் திகதி சனிக் கிழமை பெலராஸ் எல்லையில் இருந்து சில கிலோ
மீற்றர் தொலைவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வட்டக்கச்சியில்
உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும்
தெரிவித்தாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே அவர் இறுதியாக தொடர்பு
கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் தேடும் பணி இடம்பெற்று வந்தது.
நேற்று (14) மாலை வரை காணாத நிலையில் இன்று (15) 2 ஆம் நாளாக பணி முன்னெடுக்கப்ட்ட நிலையில் புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சதுரங்க எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார்.
சடலம் நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைகளை தொடர்ந்து உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்by நிருபர் காவலன்
- புத்தாண்டில் இருவர் படுகொலைby நிருபர் காவலன்
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றனby நிருபர் காவலன்
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலிby நிருபர் காவலன்
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்by நிருபர் காவலன்
பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலமீன்மடு ஆரம்ப வைத்தியசாலை வளாக பகுதியிலுள்ள பஸ் தரிப்பிட கட்டிடத்தில் ஆண் ஒருவர் இன்று (12) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பெகாக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது
குறித்த நபர் மைக்கல் என்று அழைக்கப்படுவதாகவும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தபகுதி பொது கட்டிடங்களான சந்தை மற்றும்
பஸ்தரிப்பிட கட்டிடங்களில்; தங்கி வாழ்ந்து வருதாகவும் இவர் தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவில்லை பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஸ் தரிப்பிடத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
by நிருபர் காவலன் - புத்தாண்டில் இருவர் படுகொலை
by நிருபர் காவலன் - புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
by நிருபர் காவலன் - புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
by நிருபர் காவலன் - கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
by நிருபர் காவலன்
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இளம் வர்த்தகர் ஒருவர் இன்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே இதில் உயிரிழந்துள்ளார்.
உடல் நலக்குறைவுக்காக மருந்து உட்கொண்டதாக கூறப்படும் இந்த நபர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக குருந்துவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்தார்.
கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
by நிருபர் காவலன் - புத்தாண்டில் இருவர் படுகொலை
by நிருபர் காவலன் - புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
by நிருபர் காவலன் - புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
by நிருபர் காவலன் - கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
by நிருபர் காவலன்
காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலிமுகத்திடல் துறைமுக நகரின் கடற்கரையில் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவர் யார் என்பது இதுவரை அடையாளங்காணப்படாத நிலையில், சுமார் 4 அடி 9 அங்குல உயரம், பழுப்பு நிற சட்டை அணிந்துள்ளதுடன், அவரது தலைமுடி கழுத்து வரை வளர்ந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காலிமுகத்திடல் பெண்ணொருவர் சடலமாக மீட்பு
இதற்கிடையில், தெஹிவளை பொலிஸ் பிரிவில் பீரிஸ் பிரதேசத்தின், கடலோர பகுதியில் சுயநினைவின்றி இருந்த நபர் ஒருவர் தெஹிவளை பொலிஸாரால் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் சுமார் 55-60 வயதாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்






























