Tag: பேர் பாதிப்பு
9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு
9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 1,630 குடும்பங்களைச் சேர்ந்த 6,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
கடந்த இரண்டு நாட்களில் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய நிலைமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
9 மாவட்டங்களில் 6049 பேர் பாதிப்பு
கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 1,199 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக நாடு முழுவதும் 122 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
- தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணைby நிருபர் காவலன்
- பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- ராமன்ன பிரிவின் பிரதி தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கப்பெட்டியகோட சிரிவிமல தேரர் காலமானார்by நிருபர் காவலன்
- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்by நிருபர் காவலன்
- அக்போ’ என்ற ஆண் யானையைக் கண்டுபிடிக்க சிறப்பு இராணுவக் குழு அனுப்பப்பட்டதுby நிருபர் காவலன்
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18,000 பேர் பாதிப்பு
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18,000 பேர் பாதிப்பு
இலங்கை வெள்ளத்தில் சிக்கி 18.000 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .பாதிக்க பட்டவர்களை மீட்கும் மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
பருவகால மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட நீர் அதிகரிப்பால் இந்த வெள்ளப்பெருக்கு இடம்பெற்றுள்ளது .
வீடுகளுக்குள் நீர் புகுந்ததினால் வீடுகள் பலத்த சேதமடைந்து ,உடைமைகள் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
பாதிக்க பட்ட மக்கள் பாடசாலைகளில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
- தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை

- பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

- ராமன்ன பிரிவின் பிரதி தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்துக்குரிய கப்பெட்டியகோட சிரிவிமல தேரர் காலமானார்

- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்

- அக்போ’ என்ற ஆண் யானையைக் கண்டுபிடிக்க சிறப்பு இராணுவக் குழு அனுப்பப்பட்டது











