யார் மேல் குற்றம்

யார் மேல் குற்றம்
Spread the love

யார் மேல் குற்றம்

உன்னை நானும் பார்க்கல
உன் உறவை நானும் கேட்கல
என்னை நீயும் தேடல
என்ன கேட்டாய் கேடில

பொல்லா வார்த்தை போடுறாய்
போலியாக தூவுறாய்
கண்ணா என்ன கேட்கிறாய்
காதில் என்ன ஓதுறாய்

விண்ணில் ஏறி பறக்கத்தான்
விண் வெளியை அளக்கத்தான்
காடு மலை ஏறுறேன்
கண்ணாம் பூச்சி ஆடுறேன்

ஓடுகிற ஆற்றில -காற்று
ஆடும் அந்த ஆற்றிலே
ஓங்கி எழும் அலையிலே
ஓர் தேசம் நனையுதே

எல்லாம் இங்கு ஒண்ணுதான்
ஏழை இங்கு பாவம் தான்
சொன்னா இங்கு கேடுதான்
சொல்லாம தூங்குறான் ……

ஆக்கம் – 09-05-2025
வன்னி மைந்தன்