நகைத் திருடன் மடக்கிப் பிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நகைத் திருடன் மடக்கிப் பிடிப்பு

நகைத் திருடன் மடக்கிப் பிடிப்பு

நகைத் திருடன் மடக்கிப் பிடிப்பு ,நகைத் திருடன் மடக்கி பிடிப்பு என இலங்கை காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.

பெரிய நீல அவனை போலீஸ் காவல்துறை பிரிவில் 16 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பெறுபதியான ,தங்க நகைகளை திருடிய நபர் ஒருவர், தற்பொழுது காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது கொள்ளையடிக்கப்பட்டு இருந்த மூன்று தங்க வளையல்கள் ஒரு பிரஸ்ட் இரண்டு தோடுகள் மற்றும் இரண்டு மோதிரங்கள் என்பனவற்றை காவல்துறை முற்றுள்ளனர்

சம்பவத்தூரில் மருதாணியில் மூன்று பகுதியைச் சேர்ந்த 37 வயதான சந்தேக நபரை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது .

ஆளில்லாத வீடுகளை பார்த்து நுழையும் ஆசாமிகள் அங்கு திடீர் கொள்ளை நடத்திவிட்டு தப்பி செல்கின்றனர்.

ஆனால் கொள்ளையின் பொழுது சில சான்றுகளை அவர்கள் தவற விட்டுச் செல்வதால் அதில் சிக்கி விடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட நகைக் கொள்ளையனிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது .

காவல்துறையர் மேற்கொள்ளும் விசாரணையின் பின்னர் அவர் நீதிமன்றில் பாரப்படுத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடன் மடக்கி பிடிக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளையடித்தருடைய நகை கொள்ளை அடித்த வீட்டில் திருப்பி ஒப்படைக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலத்துடன் மோதிய கடற்படை கப்பல்
Posted in உலக செய்திகள்

பாலத்துடன் மோதிய கடற்படை கப்பல்

பாலத்துடன் மோதிய கடற்படை கப்பல்

பாலத்துடன் மோதிய கடற்படை கப்பல் ,பாலத்துடன் மோதிய கடைபடை கப்பல் ஒன்றினால் அமெரிக்க நீ யோக் சிட்டி பாலம் பலத்தமான சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் ஒன்று அமெரிக்கா யுனிவர்சிட்டி பாலத்துக்கு கீழ் பயணித்த பொழுது அந்தக் கப்பல் அந்த பாலத்தில் மோதி சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னரும் ஒரு கப்பல் ஒன்று மோதியதில் பல மில்லியன் இழப்பு அந்த பாலத்துக்கு ஏற்பட்டிருந்தது.

அதனை அடுத்து தற்பொழுது இந்த கப்பலும் இந்த பாலத்தின் வழியாக சென்றதால் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேவி கப்பலோடு இவ்வாறான வழி ஊடாக பயணிக்கின்ற பொழுது பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதானது ,அது பாதுகாப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளதா? அல்லது

திட்டமிடப்பட்டு இவ்வாறான கப்பல்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான சந்தேகத்தை இது மீளவும் எழுப்பியுள்ளது.

இன்னொரு தடவை இதே காலத்தில் இவ்விதமான சம்பவம் இடம்பெற்ற பொழுது மீளவும் அதை திருத்தி அமைக்கின்ற பொழுது அதை உயரத்தில் அமைத்தது ஏன் என்ற கேள்வியை இது எழுப்பி நிற்கிறது.

குறித்த கப்பல் பாலத்தில் மோதியது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம்
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம்

சூறாவளி வீடுகள் சேதம்

மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம் ,மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம் என மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பேரறிவு பற்றி பிரதேச பிரிவு பகுதியில் வீசிய கடும் மினி சூறாவளி காரணமாக அங்கு பல வீடுகள் சேதமடைந்த காணப்பட்டுள்ளது .

சூறாவளியின் பொழுது கூட வந்து மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் அங்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,

வீட்டினுடைய கூரைகள் காட்டில் அடித்துச் செல்லப்பட்டு நிலையில் காணப்படுகிறது அது தவிர அங்கிருந்த உலபு இயந்திரங்கள் மீதும் அந்த தகரங்கள் விழுந்து தான் சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

அதேபோன்று அதே பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் கிராம சேவலுக்கு அறிவிக்கப்பட்டு அதனுடைய அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது,

இரவில் அர்த்த முகாமத்துவ அமைச்சின் ஊடாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான இழப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,

முள்ளுவாய்க்கால் தினத்தில் இவ்வாறு சிங்கள தமிழர் பகுதிகளில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற குறிப்பிடத்தக்கது.

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி
Posted in இலங்கை செய்திகள்

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி ,மன்னார் மாவட்டம் ஆட்காட்டி வலி என்கின்ற கிராமத்தில் இன்றைய நிகழ்வு நடைபெற்றது

அனைவருக்கும் வணக்கம் இன்றைய நாள் முள்ளி வாய்க்கால் நினைவு நாளாக இறுதி இறுதி யுத்தத்தின் போது எங்கள் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது பசி பட்டினியோடு

இருந்த பச்சிளம் குழந்தைகள் வரை அனைவரின் பசியை போக்கியது உன்னதமான இந்த கஞ்சி ஒவ்வொரு தமிழனும் உயிர் உள்ளவரை எங்கள் நெஞ்சில் இருந்து அழியாத ஒரு சுவடு தான் இந்த கஞ்சி

போராட்டத்தின் போது வீரை சாவை தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கும் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட

எமது உறவுகளுக்கும் ஒரு நிமிடம் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுவோம் அனைவருடைய ஆத்மாவும் சாந்தி அடைய

ஹவுதி தலைவரை கொல்வோம் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

ஹவுதி தலைவரை கொல்வோம் இஸ்ரேல்

ஹவுதி தலைவரை கொல்வோம் இஸ்ரேல்

ஹவுதி தலைவரை கொல்வோம் இஸ்ரேல் ,கௌரி தலைவரை கொல்வோம் இஸ்ரேல் மிரட்டல்.

தேமன் ஹவுதி அன்சருல்லா பண்டிகளின் தலைவர் அவர்களை படுகொலை செய்பவனம் அந்த தலைமையை முற்றாக அழிப்போம் என யூத படைகள் தெரிவித்துள்ளன.

ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் தலைமைகளை முற்றாக அழித்து விட்டால் இந்தப் போர் ஓய்ந்து விடுமென அவர்கள் கருதுகிறார்கள்.

அதனால்தான் லெபனான் அதேபோன்று பாலஸ்தீனத்தினுடைய தலைவர்கள் தளபதிகளை அழித்தார்கள் .

ஆனால் அந்த அழிப்பின் பின்னால் அந்தப் போர் ஒய்ந்ததா.

புதியவர்கள் வருகின்ற பொழுது, அனுபவம் இல்லாதவர்கள் வருகின்ற பொழுது, அந்த அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டு விடும் என இஸ்ரேல் நம்புகிறது.

தனது உளவு பணிகள் எந்த இடத்திலும் எப்பொழுதும் எந்த தாக்குதலை நடத்த வல்லமை பொருந்தும் என்பதை மொசாட் தொடர்ந்து அறிவித்து வருகிறது.

துணிகரமான பல தாக்குதல்களையும். பல படுகொலைகளையும் மிக முக்கியமான தளபதிகளை அது வெற்றிகரமாக போட்டு தள்ளி இருக்கிறது.

அந்த வரிசையில் இப்பொழுது ஏமன் ஹவுதி அன்சார் அல்லாவின் தலைவர் குறி வைக்கப்பட்டு இருக்கிறார்.

இந்தத் தலைவருடைய தலை எப்பொழுதும் உருட்டப்படும் என்பதை மீளவும் ஒரு முறை இடித்து உரைத்திருக்கிறது இஸ்ரேல் .

இந்த மிரட்டல் அவரை அடக்குமா அல்லது மேலும் எழுந்து வெடிக்க வைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்
Posted in உலக செய்திகள்

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார்

வடகொரியா அறிவிப்பு போருக்குத் தயார் உலக அரங்கில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவில் அமெரிக்கா படைகள் தென் கொரியா இராணுவம் இணைந்து கூட்டு பயிற்சி ஈடுபடுவதும் ,கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்ட நிலையில் ,இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எம்மை தொட்டவன் செத்தான் வடகொரியாவின் இரும்பு மனிதன் கிங் யான் ஊன் அவர்கள் தெரிவித்து வருகின்றார்.

பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட பொழுதும் ,வடகொரியா தொடர்ந்து தனது நாட்டின் ,தேசிய பாதுகாப்பிற்காக ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறார்.

இந்தச் சோதனைகள் அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளே மிரள வைத்து வருகிறது.

எங்களை எந்த நாடு தொடுகிறதோ ,அந்த நாடு அழிந்து போகும் என வட கொரிய அறிவித்துள்ளது .

இந்த வட கொரியாவிலிருந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை ஏவுகணைகள் மூலம் 45 நிமிடங்களுக்கு அழிக்க முடியும் என சூளுரைத்துள்ளது.

இவ்வாற நிலையில், வடகொரியா ஏவுகணைகள் அமெரிக்காவினை தாக்குமா ..?தென்கொரியா ஜப்பானை பதம் பார்க்குமா..?

மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறதா, அடுத்தடுத்த தொடராக அளப்பெரிய கேள்விகளை அள்ளி விசுக்கி விட்டுள்ளது .

ஆக மொத்த உலகம் மூன்றாம் போர் ஒன்றுக்கு தயாராகி வருவதையும், வல்லாதிக்க நாடுகளின் வளர்ச்சியும் போட்டிகளுமே இந்த நிலையை எட்டிப் பிடிக்க போவதாக பார்க்கப்படுகிறது.

தயார் போருக்கு தயார் வடகொரியா அறிவித்தது. அலறும் எதிரிகள்.

அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்

அமெரிக்காவில் புயல் 42பேர் காயம்

அமெரிக்காவில் புயல் 42பேர் காயம் ஆறு பேர் பலியான அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் வீசிக்கொண்டிருக்கும் புயல் காரணமாக, இதுவரை 42 பேர் காயமடைந்துள்ளார்கள்.

ஆறு பேர் பலியாகி உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐந்தாயிராத்திற்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன .

பாதிக்கப்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 35 தற்காலிக கூடாரங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் திருத்தமாக இடம்பெற்று கொண்டுள்ளன .

அவசர பிரகடனம் நடைமுறைத்த பட்டு இராணுவமும் மீட்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ,அங்கிருந்து ஒரு செய்திகள் தெரிவித்துள்ளன .

இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதியில் மின்சாரம் குடிநீரும் , தடைபட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றது .

அமெரிக்காவைத் தொடர்ந்து தாக்கிவரும் புயல் வெள்ளம் காரணமாக பலத்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகிறது.

இங்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு பல மில்லியன் டொலர்களை தாண்டி உள்ளதாகவும், அதனை சீர் செய்ய பல மாதங்கள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் ரவுடிகள் கனடாவில் கைது
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் ரவுடிகள் கனடாவில் கைது

தமிழ் ரவுடிகள் கனடாவில் கைது

தமிழ் ரவுடிகள் கனடாவில் கைது ,டொராண்டோவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல் தலைவரை நாடு கடத்த கனடா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்
உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்


2022 ஆம் ஆண்டு பாரிஸ் அருகே ஒரு போட்டி கும்பல் மீது நடந்த கொடிய தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு டொராண்டோவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல் தலைவரை நாடு கடத்த ஒன்ராறியோ நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

டொராண்டோ தெற்கு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரசன்னா நல்லலிகம், கனடாவின் நீதித்துறை

அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 30 நாட்களுக்குப் பிறகு பிரான்சிடம் சரணடையப்படுவார்.

வழக்கின் ஒரு சர்ச்சைக்குரிய பதிவின்படி, செப்டம்பர் 21, 2022 அன்று, நல்லலிங்கம் AAVA கும்பலின் நான்கு உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை

வழங்கி, போட்டி கும்பலின் “வாகனத்தை அடித்து நொறுக்க” பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள லா கோர்னியூவ் என்ற கம்யூனுக்குச் செல்லும்படி அறிவுறுத்தினார்.

நள்ளிரவுக்கு சற்று முன்பு, அந்தக் குழு இரண்டு கார்களில் லா கோர்னியூவுக்குச் சென்றது.

பாதுகாப்பு காட்சிகளில், நல்லலிங்கத்தின் கூட்டாளிகள் எனக் கூறப்படும் நான்கு பேர், ஒரு வாகனத்திலிருந்து வெளியேறி, வாள்கள், கத்திகள் மற்றும்

கத்திகளைப் பயன்படுத்தி போட்டியாளரின் காரையும், இறுதியில் அதில் இருந்தவர்களையும் தாக்குவது காணப்பட்டது.

தாக்குதல் நடத்தப்பட்டபோது, ​​நல்லலிங்கம் என்று அவரது வழக்கறிஞர்களால் கூறப்படும் ஒருவர், இரண்டு வாகனங்களில் ஒன்றிற்குள் இருந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​பிரெஞ்சு அதிகாரிகள் இரண்டு பாதிக்கப்பட்டவர்களை “வேதனையில்” கண்டனர். ஒருவர் பின்னர் காயங்களுக்கு ஆளானார்.

நல்லலிங்கம் மே 2024 இல் டொராண்டோவில் குடியேற்ற விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் கைது செய்யப்பட்டார்.

சில வாரங்களுக்குள், நிலுவையில் உள்ள கைது வாரண்டில் அவரை நாடு கடத்த பிரான்ஸ் விண்ணப்பித்தது.

இவர்கள் சிறை பிடிக்க பட்ட செய்ய ;ல் தமிழ் ரவுடிகள் அடக்க அரசுக்குகள் மேற்கொள்ளும் ஆகிடும் முயற்சியை காண்பிக்கிறது .

வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு

வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு

வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு என வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் விழுந்து போய் இருக்கிற இவ்வாறான பகுதியில் ,வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய பலர் விருப்பப்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இந்த வருடம் மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையத்தில் ஒரு லட்சம் பேர் விண்ணப்ப படிவங்கள் செய்துள்ளதாகவும் ,வேலை பெற்ற பல

ஆயிரக்கணவர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக அரபிய நாடுகள், சீனா, கொரியா , போன்ற நாடுகளுக்கு பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்று வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்விதமான நிலையில் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்ற பலர் இறந்தும் காணாமல் போய் உள்ள நிலை காணப்படுகிறது.

அரபிய நாடுகளுக்குச் சென்ற பல ஆண் பெண்கள் இவ்வாறான நிகழ்ச்சிக்கு காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலை கிடைச்சாலும் இவர்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து மிகப்பெரும் அவமானங்களை சந்தித்து தற்கொலையா மற்றும் கொலைகள் முடிந்துள்ள சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

வெளிநாடு செல்பவர்கள் மரணம் முதல் காணாமல் போன விபரங்களை மறைத்து ,வெளிநாட்டுக்கு மக்கள் சேர்ந்து வேலை செய்ய அதிகம் காத்துள்ளர்கள் .

என்ற செய்தியை மட்டும் இவ்விதமான நிறுவனங்கள் வெளிப்படுத்தி வருகின்றதான குற்றச்சாட்டு வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு

ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு

ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு ,தொடர்ந்து விடப்பட்ட வண்ணம் இருக்கின்றது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தற்பொழுது பல கட்சிகள் தோல்வியை ஆட்சி அமைக்க முடியாத நிலையில் சிக்கி இருக்கின்றன .

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்

இதனை அடுத்து தமது சக பாடி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டிருக்கின்றன.

பேரம் பேச்சுக்கள் உக்கிரமடைந்து வருக நிலையில் தற்போது டீல் பேச்சு காணப்படுகிறது.

விரைவில் ஒரு இணக்கப்பாட்டு தீர்வினை எட்டி , அதனூடாக ஆட்சி அமைத்து மக்கள் சேவைக்கு வருவோம் என கூறுகிறார்கள்.

தனி பெரும்பான்மை ஏற்ற கட்சிகளாக பல பகுதிகளில் தொகுதிகளில் காணப்படுகின்றன.

அதனால் அவ்வாறான பகுதிகளில், தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் .சக பாடி கட்சிகள் ஆதரவு தேவைப்படுகின்றன .

இதனை அடுத்து பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள், தீவிர கலந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

விரைவில் ஒரு இணக்கப்பாட்டு முடிவுக்கு வந்து ,இணக்கமான ஒரு ஆட்சி அமைப்பை நிறுவ அவர்கள் முற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்வாசல் வழியாக பல்வேறு பட்ட பேச்சு இடம் பெறுவதாகவும் போட்டிகள் கைமாற தயாராகி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

துப்பாக்கி சூடு வெளிவந்த மர்மம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு வெளிவந்த மர்மம்

துப்பாக்கி சூடு வெளிவந்த மர்மம்

துப்பாக்கிச் சூடு வெளிவந்த மர்மம் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,அதனுடைய மர்மங்கள் வெளிவந்திருக்கின்றன.

கொட்டஞ்சேனை பகுதியில் நடத்தப்பட்ட ,துப்பாக்கி சூட்டில் 42 வயது மற்றும் 70 வயதுடைய நபர்கள் காயமடைந்தனர் .

காயப்பட்ட ஆண் பெண்கள் வழங்கிய தகவலில் இருவரும் வீட்டில் இருந்த பொழுது அங்கு இவர்கள் மீது இருமுறை துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது .

கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தெளிவாகதெரிகிறது .

காவல்துறையினர் மேற்கொண்ட குற்றப்புலனாய்வு விசாரணையில், இந்த நபர் பல்வேறுபட்ட வழக்குகள் சிக்கி இருப்பதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் ஒன்பது மில்லி மீட்டர் ரக கை துப்பாக்கிய பயன்படுத்தியது விசாரணைகள் மூலம் வெளி வந்திருக்கிறது.

தேடப்படும் ஒரு குற்றவாளியாகவும் காவல்துறை தேடிக் கொண்டிருக்கிறது .

அவ்வாறு காணப்படும் அந்த கொலையாளியை, விரைவில் கைது செய்து விடுவோம் என காவல்துறை அறிவிக்கிறது.

முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது
முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது

இலங்கையில் பல்வேறுபட்ட குற்றச் செயல்களை செய்துவிட்டு இலகுவாக இவரால் தப்ப முடியும் என்றால் அது எப்படி என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

அப்படியென்றால் இவர் திட்டமிடப்பட்டு அரசியல்வாதிகளால் இறக்கி விடப்பட்ட கூலிக்கு கொலை செய்யும் கூலியாள் ,அரசியல்வாதிகள் அடியாள் என்பதாகவே பார்க்கப்படுகிறது.

அனுரா ஆட்சியில் இதுவரை 30க்கு மேற்பட்ட துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றுள்ளது.

26க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளதான புதிய தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது

முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது

முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது ,முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்து அடைந்துள்ளதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு
காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடுகாவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு

இலங்கை இனவாத அரசுகளினால் தமிழர்கள் கொன்றளிக்கப்பட்ட 16வது ஆண்டு நினைவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் திலீபன் மன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவுனியாவை வந்து அடைந்துள்ளது.

வலி சுமந்த வாரமாக இருக்கிற இந்த காலத்தில் ,வலி சுமந்த மக்கள் ஊத்தியில் மாலை போட்டு பூக்களை தூவி அஞ்சலித்தனர்.

இவ்வேளை முள்ளிவாய்க்கால் வாரத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாநிலங்களில் இன்றும் கஞ்சிகள் வழங்கப்படுகின்றன.

இன்று முள்ளிவாய்க்காலின் இறுதி நாள் தமிழர்கள் எண்ணங்கள் கரைந்த நாள், சடலங்கலாக எங்கள் உறவுகள் அந்த மண்ணில் விழுந்த நாள்.

இறுதியாக எங்கள் தமிழினம் கழுத்து நெரித்து நசிக்கப்படுகிற அந்த நாள். அது இந்த நாள் .அந்த நாளை முன்னிட்டு இந்த ஊதி இங்கே வந்தது.

மறக்க முடியாத வலிகளையும், மறக்க முடியாத ரணங்களையும், தந்த அந்த நாளை தமிழ் பேசும் மக்கள் மறக்குமா சிங்கள தேசம் இன்னும் சிரிக்குமா.

வேதனையோடு மக்கள் தவிக்கிற அந்த நாளில், இந்த உறுதி திலீபன் முன்றலிலிருந்து வவுனியா வந்தடைந்ததுள்ளது மக்களின் ,மனா குமுறலையும் எழுச்சிகளை காண்பிக்கிறது.

காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன்

காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன்

காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன் என தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினராக விளங்கும் சுமந்திரன் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழர் நிலத்தை அபகரிக்க ஒரு பொழுதும் ஆளும் அடக்கி ஆளும் அரசுகளை விட மாட்டோம் என அவர் சூழ் உரைத்துள்ளார் .

தமிழரசு கட்சியை உடைத்து சிதைத்து அது குளிர்காயும் ஒருவராக சுமந்திரன் உள்ளார் ,என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இப்படி சுமந்திரன் ஐயா அறிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய விடுதலையை எப்படி மீட்பது அதனை எப்பொழுது பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக ,புலம்பெயர் வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத்தவர்கள் எண்ணிக்கொண்டு இருக்க ,அதனை நோக்கி அரசியல்வாதிகள் பயணிக்கவில்லை என்பது கவலையான விடயம்.

அவ்வாறான நிலையில் அவருடைய காடுகளை அபகரித்தால் ,அதற்கு எதிராக போராட்டம் வெடிக்குமென தெரிவித்து உள்ளார் .

இவர் போராட்டம் என்று சொல்வது சட்டப் போராட்டமா ,அல்லது தமிழர்கள் மக்கள் எழுச்சி போராட்டமா, என்பதை ஐயா இப்பவும் தெரிவிக்கவில்லை.

தான் ஒரு சட்டத்தரணி என்பதை ,இதன் ஊடாக சட்டத்தின் நுணுக்கத்தின் ஊடாக பாவிக்கிறார் என்னவோ.

எது எப்படி இருப்பினும் சுமந்திரனை ,தமிழரசு கட்சியிலிருந்து விரட்டும் வரை ,தமிழர் போராட்டம் ஓயாது என்பது தமிழர் நிலைப்பாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல் ஒன்று எதிரி இணையத்தினால் கடந்த தினம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற நிகழ்கால நிகழ்வுகள், யாழ்ப்பாணத்தின் வீரம் ,இன்று யாழ்ப்பாணம் இன்று எவ்வாறு சிதைந்து கொண்டிருக்கிறது ,என்கின்ற சமூக அக்கறையுடனும் ,வீரத்தினுடைய பறை சாட்டுதலுடன் இந்த பாடல் வெளியாகி உள்ளது.

எங்களுடைய யாழ்ப்பாணம் மன்னே, வீரமான மண், தலைவர் பிறந்த மண் ,அந்த மண்ணில் தறுதலைகளாக ,கஞ்சா ,போதை தலைவிரித்து ஆடுவதை, இந்த பாடலில், பாடல் ஆசிரியர் ராகவி லண்டனையைச் சேர்ந்தவர் குறிப்பிட்டு பாடலை அசத்தியிருக்கின்றார்.

இந்தப் பாடலுக்கான இசையை ,சிறந்த முறையில் இளங்கோ செல்லப்பாவும், மதுரை குரலோன் எங்கள் அன்பு தம்பி பாவேந்தன் அவர்களும் பாடிய அசத்தியிருக்கிறார்கள்.

பாடல் வெளியான சில நிமிடங்களில், வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதை ஒளிபரப்பப்பட்ட பொழுது ,மக்கள் மத்தியில் இருந்து ஏராளமான வாழ்த்துகள் குவிந்தன.

வரிகள் என்பது சடலம் ,இசை என்பது உயிர் ,ஆகவே அதை உயிரோட்டமாக கொடுத்து இருக்கிறார்கள் .பாவேந்தன் அவர்களும் இளங்கோ செல்லப்பா அவர்களும் .

புதிய பாடல் ஆசிரியர்கள் 100 பேரை அறிமுகம் செய்யும் திட்டத்தில் வன்னி மைந்தன் டிக் தளம் களமிறங்கியது.

அவ்வாறான அடிப்படையில் வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாகவும் ,எதிரி இணையம் என்பன இணைந்து மூன்றாவது பாடலாசிரியராக, ராகவி அவர்களை இந்த உலக மக்களிற்கு நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

லண்டன் ராகவி படைத்த யாழ் மண்ணே என்ற பாடலை ,நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.

கீழே இணைப்பு உள்ளது இவர் போன்று நீங்களும் பாடல்கள் எழுத விரும்பினால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள் 0044 7536707793

புதிய பாடல்களை அறிமுகப்படுத்த இளங்கோ செல்லப்பா ,பாவேந்தன் அவர்கள் இணங்கி இருப்பது பாராட்டுதலுக்கு .உரியது .

நாள்தோறும் புதிய புதிய பாடல்கள் வெளியாக இருக்கின்றன .

அதைக் கேட்க சிறந்த காணொளி காட்சி அமைப்புக்களை பார்க்க மறக்காதீங்க எம் சொந்தங்களே .

பார்வையாளராக உள்ள நீங்களும் இதில் பங்காளியாக மாற இன்றே வாருங்கள்.தமிழை வளர்ப்போம் புதிய புரட்சி படைப்போம் .

எதிரிஇணையம் ,வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தின் புதிய பாடலாசிரியராக மூன்றாம் இடத்தையும் ,முதலாவது பெண்ணாகவும் ராகவி அவர்கள் தடம் பதித்து சாதனை படைத்துள்ளார் .

வாழ்த்துக்கள் ராகவி அவர்களே.மிக்க நன்றி இளங்களோ செல்லப்பா மற்றும் பாவேந்தன் ஆகியோருக்கும் .

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும் .

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

வன்னி மைந்தன் tiktok தளம் ,எதிரி இணையம் என்பன இணைந்து புதிதாக முன்னெடுக்கும், 100 பாடல் உருவாக்கத்தில் ,புதிய பாடல் ஆசிரியர்களை உருவாக்குதல் என்ற சிந்தனையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் வன்னி மைந்தன் டிக் டாக் திட்டத்தின் ஊடாக ,இரண்டாவது பாடல் ஆசிரியராக லண்டனச் சேர்ந்த ராஜ் அண்ணா அவர்கள் இணைந்து இருக்கின்றார்.

மாவீரன் செல்வங்களே என்கின்ற பாடலை எழுதி ,எங்களுடைய தேசத்தின் விடுதலையின் உடைய கனவு சுமந்து அந்த பாடல் வெளிவந்துள்ளது.அதனை எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது .

அந்தப் பாடலுக்கு .பாடல் வரிகள் ராஜ் லண்டன் ,கந்தக இசையமைப்பாளர் இளங்கோ செல்லப்பா அமைக்க ,பாடியவர் -மதுர குரலோன் பாவேந்தன் ஆகியோர் ,அதை பாடி அசத்தி பலம் சேர்த்து இருக்கிறார்கள்.

கேட்கும்போதே இனிமையாய் இருக்கக் கூடிய அந்த பாடல், திரும்பத் திரும்ப கேட்கும் வண்ணம் உணர்வை தூண்டுகிற வகையில் உள்ளது.

சிறந்த வரிகள் சிறந்த இசை, சிறந்த குரலாக மீண்டும் கலந்து நேர்த்தியாக இருக்கிறது.


காணொளி காட்சி அமைப்பும், அதுபோன்று இருக்கின்றது. அந்த பாடலை நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்கள் .

முள்ளிவாய்க்கால் தினத்தில் வலிபட்ட தினத்தில் ,மூன்று பாடல்கள் இதுவரை வன்னி மைந்தன் டிடாக் மற்றும் எதிரி இணையம் வெளியிட்டு .இருக்கின்றன.

நீங்கள் கேட்பதோடு வரை நிறுத்தாது ,அதனை மற்றவருக்கும் பகிர்ந்து எங்கள் தேச நினைவுகளை மீளவு நினைவில் கொள்ளுங்கள்.

இந்த வழியில் புதிய பாடல்களை அறிமுகப்படுத்த இணங்கி அதற்கு ஆதரவு தந்திட ஒத்து கொண்டு புதியவர்களை வாய்ப்பு கொடுக்கும் அண்ணன்

இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் தம்பி பாவேந்தன் அவர்களுக்கும் ஐயா செல்லப்பா அவர்களுக்கு அந்த வழியில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.

என் செல்ல நாய்க்குட்டியே
Posted in கவிதைகள்

என் செல்ல நாய்க்குட்டியே

என் செல்ல நாய்க்குட்டியே

செல்லமாக நான் வளர்த்த நாய்க்குட்டியே
சொல்லாமல் எங்கு சென்றாய் இன்று நீ
கடுங்கோவங்கொண்டு பிறர் உனை
கடி நாய் என அழைத்த போதிலும்

ரொம்ப பாசத்தோடு நான் உனை
ரொம்மி என நாமமிட்டு அழைக்கையில்
செல்லமாக வாலை ஆட்டி வேகமாக வந்து
மெல்ல என் காலடியில் இருக்கும் என்குட்டியே

காலை மாலை என தவறாமல்
பாலை நான் தட்டில் ஊற்றுகையில்
நன்றியோடு என நோக்கி நாவால் வருடும்
நான் வளர்த்த செல்ல நாய்க்குட்டியே

எங்கு நான் வெளியில் சென்றிடினும்
என் வழித்துணையாக வந்த உனை
எவர் கடத்தி சென்றனர் இன்று
எப்படி இருக்கின்றாய் அங்கு நீ

நான் உறங்கிய போதில் என்னருகில்
விழித்திருந்து காவல் செய்வாயே
நீ இன்று இல்லாத இந்த நாட்களில்
விழிகள் துயில மறுப்பதை புரிவாயா

குரைக்க தெரிந்த என் அன்புஜீவன் நீ
என் குரலைக் கேட்டு மடியில் தவழும் உயிரே
இச்சாலை வழியே உனைத்தேடி நடக்கின்றேன்
என் பாதச் சுவடறிந்து மீண்டும் வந்துவிடு

உன்னோடு பழகிய நினைவுகளை
என் மனச்சுமைகளாக்கி இன்று நான்
கண்ணீரோடு காத்திருக்கின்றேன்
உனை கட்டியணைத்து முத்தம் தருவதற்கு

தமிழருக்கு ஆதரவு தருவோம் அமெரிக்கா தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எமது ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா

ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா

எமது ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா தமிழருக்கு ஆதரவு தருவோம் அமெரிக்கா ஈழத் தமிழருக்கு என்றுமே எமது ஆதரவு உண்டு என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையில் தமிழர் இனப்படுகொலையின் 16 வருடத்தினை நான் நினைவு கூருவதற்காக உரையாற்றுகின்றேன்.

இன்றும் என்றும் நாங்கள் ஈழத்தமிழர்கள் சமூகத்தினர் உயிர்பிழைத்தவர்கள், அவர்களுடைய குடும்பத்தவர்கள் ,தொடரும் ஒடுக்குமுறைகளினை எதிர்கொண்டுள்ளவர்களுடன் ஐக்கியமாக இருக்கின்றோம்.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து அவர்கள் தங்கள் துயரங்களிற்கு நீதியை கோரும் வேளை நாங்கள் தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் அனுபவித்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.

அனைவரினது உரிமைகளையும் கௌரவத்தையும் மதிக்கும் அமைதி தீர்விற்காக நாங்கள் பரப்புரை செய்யவேண்டும்,

தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற அட்டுழியங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும்.

மிகமோசமான துன்பத்தின் மத்தியில் தமிழ் சமூகம் வெளிப்படுத்திய மீள் எழுச்சிதன்மை நீதிக்கான அவர்களின் உறுதிப்பாடு அசைக்க முடியாத உணர்வு ஆகியவற்றிற்கான வெளிப்பாடாகும்.

நாங்கள் அனைவரும் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகயிருப்போம்.

நாமலுக்கு பிரம்டன் மேயரின் அதிர்ச்சி பதில்
Posted in இலங்கை செய்திகள்

நாமலுக்கு பிரம்டன் மேயரின் அதிர்ச்சிபதில்

நாமலுக்கு பிரம்டன் மேயரின் அதிர்ச்சிபதில்

நாமலுக்கு பிரம்டன் மேயரின் அதிர்ச்சிபதில் கனடா இனப்படுகொலை நினைவுத்தூபி தொடர்பில் நாமல் அதிருப்தி தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்துள்ளார் பிரம்டன் மேயர்.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு

கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் சமூக ஊடக பதிவில்,

தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு,

அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை.

ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கைகொண்டிருந்தால் நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைள், வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு

சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்கு பதில், இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில், ஆடம்பரத்தில் மறைந்துள்ளது. இது வெட்கக்கேடான விடயம் எனவும் பிரம்டன் மேயர் இடித்துரைத்துள்ளார்.

ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போல்பொட் ,ஸ்லோபடான் மிலோசோவிக்,ஹென்றிச் ஹிம்லர்,

மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கும் மோசமானவை.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனவும்

பிரம்டன் மேயர் தனது பதிவில் நாமல் ராஜபக்க்சவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன்
Posted in இலங்கை செய்திகள்

சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன்

சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன்

சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன் ,இலங்கை தமிழர்சு கட்சிக்கும் சங்குக் கூட்டணிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகர சபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பதில் கட்சிகளுக்கு இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அந்த விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஒன்றுகூடினர்.

ஜனநாயகத் தமிழ்த்த் தேசியக் கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான

செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தர் க. சந்திரகுலசிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் க.துளசி

மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன்

இலங்கை சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன்

இனப்படுகொலை இடம்பெறவில்லையெனில் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் அஞ்சுவது ஏன் என கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால்,

சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும், இலங்கை அரசு எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள்?”

இவ்வாறு எவெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கனடாவின் பிரம்டன் நிகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம், கடந்த 10 ஆம் திகதி அந்நகர மேயர் பற்ரிக் பிரவுனால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,

எவ்வித ஆதாரமும் அற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டு மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் என்பன தொடர்பில் கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தினார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசின் முயற்சிகளைப் பெரிதும் பலவீனப்படுத்தி சிக்கலாக்குவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால், சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும்,

இலங்கை அரசு எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திட்டு, அதனூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏன் இடமளிக்கவில்லை என்றும் அவர் வினவியுள்ளார்.

“உண்மைக்கு அரசு அஞ்சுகின்றது என்பதே யதார்த்தமாகும். உண்மையின் ஊடாக மாத்திரமே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

இருப்பினும் முன்னைய அரசுகளைப் போன்று உங்களது அரசும் அதனைத் தொடர்ந்து நிராகரித்து வருகின்றது.” – என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. விசனம் வெளியிட்டுள்ளார்.