Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த சிங்கள காவல்துறை முகாம்

தீயில் எரிந்த சிங்கள காவல்துறை முகாம்

இலங்கை -களுத்துறை பகுதியில் உள்ள சிங்கள விசேட அதிரடிப்படையினரின் முகாம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது .

படையினர் தங்கி இருந்த இரண்டாவது அடுக்கு மாடியில் இந்த தீ பரவியுள்ளது ,எனினும் எவருக்கும் உயிர் சேதம்

இன்றி தப்பித்து கொண்டதாக படைத்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இந்த தீ விபத்துக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

Posted in இலங்கை செய்திகள்

யாழில் தீக்குளித்து தமிழர் தற்கொலை

யாழில் தீக்குளித்து தமிழர் தற்கொலை

இலங்கை – யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பாக குறித்த குடும்பஸ்தரை பொலிஸார் வலைவிரித்து தேடியுள்ளனர்

இந்த போலீசார் தேடுதலினால் அச்சம் கொண்ட அவர் – தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு ரயிலில் முன்பாக

பாய்ந்து தற்கொலை புரிந்துள்ளார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரனைகளை நடத்திய வண்ணம் உள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

நான் துரோகி என பிரபாகரன் கூறவேண்டும் -கருணா

என்னை துரோகி என்று கூற ஒருவருக்கே உரிமை உள்ளது. அது எங்களுடைய தேசிய தலைவர் அவருக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் இறுதிவரை தலைவர் என்னை துரோகி

என்று கூறவில்லை. சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருப்பேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி

அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

வெதமுல்லை தோட்டத்தின் பஸ் நிலையம் எங்கே..?

வெதமுல்லை தோட்டத்தின்
பஸ் நிலையம் எங்கே

கண்டி நுவரெலியா பிரதான பாதையில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட லெதமுல்லை தோட்;டத்தில் காணப்பட்ட பஸ் நிலையத்தின் செயற்பாடுகள் இடை

நிருத்தப்பட்டு இருந்த பதாதையும் காணாமல் போய் உள்ளது. நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி செல்லும் பஸ்கள் நிருத்துவதற்காகவே இந்த பஸ் நிலையம்

அமைக்கபட்டது. இதற்கான உரிய கட்டடம் இல்லாத போதும் பஸ் நிருத்துவதற்கான பதாதை காணப்பட்டது. பஸ்களும் நிறுத்தபட்டு வந்தன. தற்போது அது அகற்றப்பட்டு உள்ளது.

அன்மையில் இந்த தோட்டத்தை பெண் ஒருவர் நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற பஸ்ஸில் வந்து வெதமுல்ல பிரதேசத்தில் இறங்கி பாதையை கடக்கும்

போது எதிரே வந்த லொரி ஒன்றில் மோதி ஸ்தலத்திலேயே மரணமானார். இதனால் பதற்ற நிலை ஏற்பட்டு லொரி சாரதி வன்மையாக தாக்கபட்டு லொரியும்

சேதமாக்கபட்டது. இதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தவர்கள் தோட்ட மக்களே. இனி இவ்வாறு நடக்க கூடாது என்பதற்காகவே இந்த பஸ் நிலையம்

அமைக்கப்பட்டது. தற்போது இதன் செயற்பாடுகள் பூச்சிய நிலையை அடைந்துள்ளது. இந் நிலை தொடருமானால் எதிர்காலத்தில் பல விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள்

உள்ளன. எனவே இதனை கருத்திற் கொண்டு இந்;த இடத்தில் முறையான பஸ் நிலையத்தை அமைத்து

மக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தபட்டவர்கள் மேற்க் கொள்ள வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்படுகின்றது.வெதமுல்லை தோட்டத்தின்

வெதமுல்லை தோட்டத்தின் பஸ்
வெதமுல்லை தோட்டத்தின்   பஸ்
Posted in இலங்கை செய்திகள்

பாலத்தின் ஒரு பாதியை காணவில்லை -இலங்கையில் அதிசயம் photo

பாலத்தின் ஒரு பாதியை காணவில்லை -இலங்கையில் அதிசயம் photo

கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட கம்பளை நகர சபையையும் கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கு உட்பட்ட கம்பளவெல பிரதேசத்தையும்

இணைக்கும் கம்பலவெல பிரதான பாலத்தின் ஒரு பகுதி உடைவடைந்து உள்ளது. இந்த பாலம் உடைவடைந்து 06 வருடங்கள் ஆன போதும் இதனை திருத்துவதற்கான

எந்தவித நடவடிக்கைகளும் இது வரைக்கும் யாராலும் முன்னெடுக்கவில்லை. இதனால் கம்பளை நகர சபைக்கும் கங்கஹிகலகோரல பிரதேச சபைக்கும் உட்பட்ட

பிரதேசங்களின் தொடர்பு முற்றாக துண்டிக்கபட்டுள்ளதுடன் குறித்த பிரதேசங்களுக்கு செல்வதற்கு பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது

பாலத்தின் ஒரு பாதியை காணவில்லை -இலங்கையில் அதிசயம் photo

. இந்த பாலத்தை அமைத்து தருமாறுகோரி மக்கள் ஆர்பாட்டங்களையும் நடாத்தினர். இது வரைக்கும் அவையும் வெற்றியளிக்கவில்லை.

இந்த பாலத்தின் ஊடாகவே கம்பலவெல பிரதேச மக்கள் தங்களின் நாளாந்த தேவைகளுக்காவும் மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவும் கம்பளை

நகரத்திற்கு வந்து செல்கின்றனர். தற்போது இதற்காக பல கிலோ மீற்றர் தூரம் நடந்தும் வாகனங்களுக்கு அதிக பணம் கொடுத்தும் தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இந் நிலையில் இந்த பாலத்தினை சம்பந்தபட்டவர்கள் கவனத்தில் கொண்டு திருத்தி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாலத்தின் ஒரு பாதியை
பாலத்தின் ஒரு பாதியை
பாலத்தின் ஒரு பாதியை
Posted in இலங்கை செய்திகள்

பறந்த விமானத்தில் இறந்த இருவர் -இலங்கையில் அவசர தரை இறக்கம்

பறந்த விமானத்தில் இறந்த இருவர் -இலங்கையில் அவசர தரை இறக்கம்

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் இருந்து இந்தோனேசியாவின் சுரபாயவை நோக்கி பயணித்த

தாய்லாந்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் பயணித்த பயணிகள் இருவர் சுகயீனம் அடைந்துள்ளதாக தெரிவித்து இன்று அதிகாலை 2.45

அளவில் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிரக்கப்ட்டுள்ளது.

எவ்வாறாயினும் சுகயீனமுற்றிருந்த குறித்த இரு பயணிகளையும் வைத்தியர்கள் பரிசோதிக்க முன்னரே

அவர்கள் இருவரும் உயிரிந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

தமிழர்கள் வந்தேறிகள்- சிங்கள அரசு

தமிழர்கள் வந்தேறிகள்- சிங்கள அரசு

இலங்கையின் பூர்வி குடிகளான தமிழர்கள் வந்தேறிகள் என வந்து குடியேறிய சிங்களவர்கள் பேசி வருகின்றமையும் ,

பிக்குகளை கொண்டு தமிழர்கள் மீது வன்முறையை தூவி வருவதையும் நடப் பாண்டு ஆட்சியில் மக்கள் அவதானிக்க முடிகிறது


நல்லிணக்கத்தை சிதைத்து ,ஒன்று பட்ட இலங்கையர்களாக மக்கள் ஒன்றித்து வாழ்வதை ஆளும் இனவாத அரசு விரும்பவில்லை .


தனி பெரும் பான்மை வாக்குகள் பெற்று எம்மை அதிகாரத்தில் சிங்களவர்களே வைத்தனர் .

அதனால் தமிழர் பகுதியில் அவர் தம் பிரச்சனைக்கு தீர்வு இல்லை ,என்பதையும் பேச்சளவில் மட்டும் அபிவிருத்தியை பேசி வருகிறது ஆளும் வர்க்கம் ,

நால்லாட்சி தத்துவம் பிடுங்கி ஏறிய பட்டு வன்மம் தேய்ந்த இனவாத ஆட்சி நாட்டில் பரவி கிடக்கிறது .

கொடூரமாக பழிவாங்க பட்டு வஞ்சிக்க பட்ட தமிழர் இனம் இதுவரை போர் வடுவை தாங்கியபடி நடை பயில்கிறது .

வீடு இன்றி ,உயிர் வாழ தகுந்த வீடின்றி ,இந்த குடும்பம் அல்லல் படுகிறது


குடும்ப உறவுகளை கொன்று வீசிய அதிகாரம் ,அதை மன்னித்து எமக்கு வாழ்வு கொடுங்கள் ,உங்கள் வாக்கை தாருங்கள் என்றால் வலி தாங்கிய சமூகம் என்ன செய்யும் ..?

ஒற்றை புரிதல் கூட இல்லாத இனவாத ஆளும் அரசு ,எதிர்காலத்தில் தமிழரால் எமக்கு ஒருபொழுதும் வாக்கு தாராமாட்டார்கள்

என்பதை உணர்ந்த நிலையில் ,அந்த தமிழ் பேசும் மக்களை பழிவாங்கும் அரசியல் வலையை விரிந்துள்ளது .

அதற்குள் சிக்கி தவிக்கும் அப்பாவி தமிழர்களை காப்பாற்ற யார் வருவார் என தமிழர் சமூகம் கண்ணீருடன் தவிக்கிறது .

தமிழ் தேசியம் பேசும் தமிழ் அரசியல் கட்சிகள் ,அவர் தம் தனி நலனை முன் நிறுத்தி ,தமது குடும்ப உறவுகளுக்கு

சொத்து சேர்க்கும் சுய அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்


வெள்ளாதல் பாதிக்க பட்ட தமிழர் பகுதி புறக்கணிக்க பட்டதில் இருந்து நாம் இந்த விடயங்களை மிக துல்லியமாக அவதானிக்க முடிகிறது

வஞ்சிக்க பட்ட தமிழர் இனம் என்று எழுந்து நிமிரும் ..?இனவாத சிங்களத்தை என்று வேரோடு பிரட்டும் ..?

  • வன்னி மைந்தன்-
Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் -தமிழரை இடித்து கொன்ற கடற்படை வாகனம்

முல்லையில் -தமிழரை இடித்து கொன்ற கடற்படை வாகனம்

இறுதி போர் உக்கிரம் இடம்பெற்ற முல்லைதீவு வட்டு வாகல் பகுதியில் ஊந்துருளியில் சென்ற நபர்களை

இலக்கு வைத்து இராணுவத்தின் கடற்படை வாகனம் மோதி தள்ளியது .

இதில் 28 வயதுடைய வாலிபர் சம்பவ இடத்தில பலியானார் .

மேலும் மனைவி படுகாயமடைந்த நிலையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,


மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

யாழில்- ரயிலுடன் மோதி சிதறிய உழவு இயந்திரம்

யாழில்- ரயிலுடன் மோதி சிதறிய உழவு இயந்திரம்

வடக்கு தமிழர் அதிகம் வசிக்கும் ,யாழ்ப்பாணம் காங்கேசன் துறையில் -கொழும்பில் இருந்து காங்கேசன்

துறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு விபத்தில் சிக்கியது .

இதில் உழவு இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளது

ரயிலை கண்டதும் சாரதி உழவுஇயந்திரத்தில் இருந்து குதித்து தப்பித்தார் ,இதனால் உயிர் சேதம் தவிர்க்க பட்டுள்ளது

சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

19தாவது சட்டத்தை இரத்து செய்ய அனுமதியோம் – சுமந்திரன்

19தாவது சட்டத்தை இரத்து செய்ய அனுமதியோம் – சுமந்திரன்

இலங்கையில் ஆளும் பவுத்த இனவாதியான கோட்டபாய ஆட்சியில் தமிழர் நலன்கள் தொடர்பான பல விடயங்கள் சட்ட மூலோபாய மூலம் அகற்ற பட்டு வருகிறது .

அவ்விதம் இலங்கை சரத்துக்களில் உள்ள 19 தாவது சட்ட மூலத்தை தாம் அகற்ற ஒருபோதும் இடமளியோம் என

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ,முக்கிய நபருமான சுமந்திரன் தெரிவித்துளளார் .

சட்டவாதியாகவும் ,கோட்டபாயவின் செல்ல பிள்ளையாகவும் விளங்கும் இவரது இந்த பேச்சு தமிழர்கள் மத்தியில் காமெடியாக வலம் வருகிறது

Posted in இலங்கை செய்திகள்

பிக்குகளை ஆசிரிய ராக்கும் மகிந்தா

பிக்குகளை ஆசிரிய ராக்கும் மகிந்தா

இலங்கையில் ஆளும் பவுத்த வெறிபிடித்த மகிந்தா ,கோட்டாபய ஆட்சியில் படித்த பட்டதாரி பிக்குகளை

நாட்டின் முக்கிய சிங்கள பாடசாலைகளில் ஆசிரியராக பணியில் அமர்த்த ஆளும் இலங்கை பிரதமர் கட்டளை பிறப்பித்துள்ளார் ,

இவர்கள் மூலம் பவுத்த மத வழிப்பாட்டை மேலும் விஸ்தரிக்கவும் ,அடிப்படையில் சிங்கள மக்கள் மத்தியில்

,பவுத்த ,இன வரலாற்றை இடித்து இனவெறியை தூண்டவும் இந்த நகர்வை மகிந்தா மேற் கொண்டுள்ளார் .

இலங்கை ஒரு பவுத்த நாடு என்பதும் ,சிங்களவர்களே அதில் முதன்மை குடிகள் என்பதையும் ஆளும் இந்த வெறி பிடித்த

அரசு அதிகாரங்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 15 வயது சிறுமியை கற்பமாக்கிய வாலிபர்

வவுனியாவில் 15 வயது சிறுமியை கற்பமாக்கிய வாலிபர்

இலங்கை – வவுனியா எ- ஓமந்தை பகுதியில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் வாலிபர் ஒருவர் தொடர்ந்து பல

மாதங்களாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் .

இதில் அவர் தற்போது கற்பமாகிய நிலையில் ,மருத்துவ சோதனைக்கு உட்படுத்த பட்டுளளார் .

குறித்த குற்றத்திற்கான வாலிபர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார் .


இவ்வாறான குற்றங்கள் நாட்டில் தற்போது அதிகரித்து செல்கிறது .

இதற்கு மகிந்த ஆட்சியில் பாலியல் கல்வி ,விழிப்புணர்வு ஊட்டல் கற்கையை உருவாக்க முனைந்த பொழுதும் இறுதியில் எழுந்த எதிர்ப்பால் ,கைவிட பட்டது .

வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் இவை அடிப்படை கல்வியாக மாணவர்களுக்கு போதிக்க படுகிறது ,

குறிப்பாக பெண்களுக்கு இது தொடர்பான விளக்கங்கள் செய் முறை கட்சிகளுடன் கற்பிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

மகளை கற்பழித்த தந்தை கைது

மகளை கற்பழித்த தந்தை கைது

இலங்கை – கந்தளாய் பகுதியில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை பிடித்த தந்தை செயலால் மனைவி முன் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார் .

இவ்வேளை அங்கு உறங்கிய 11 வயது மகளை தந்தை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்
.
பாதிக்க பட்ட மகள் விடயத்தை தாயிடம் தெரிவித்த நிலையில் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

ராஜனியை இலங்கை வருமாறு அழைக்கும் விக்கி – தமிழர்க்ள கொதிப்பு

ராஜனியை இலங்கை வருமாறு அழைக்கும் விக்கி – தமிழர்க்ள கொதிப்பு

இந்தியா – தமிழகம் சென்றுள்ள வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் ராஜனியை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார் .

அவரை இலங்கை யாழ்ப்பாணம் வருமாறு விக்கிக்கேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார் .

ரஜனி தமிழகத்தில் கட்சி தொடங்கவுள்ள நிலையில் விக்கினேஸ்வரன் ராஜனியை சந் தித்துள்ளார் .


இவரது இந்த சந்திப்பு தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பணம் தர மறுத்த – தாய் நஞ்சு அருந்திய மகன்

பணம் தர மறுத்த – தாய் நச்சு அருந்ய மகன்

இலங்கை – கந்தளாய் பகுதியில் 17 வயது வாலிபன் ஒருவர் தாயிடம் பண கேட்டு தகராறு செய்துளளர் ,தாயோ

பணத்தை வழங்க மறுத்த நிலையில் அலரி விதைகளை உட்கொண்டுள்ளளார் .

தற்போது மருத்துவ மனையில் மகன் மிக ஆபத்தான நிலையில் அவர் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு செல் வந்தர் தமிழர் பகுதியில் முதலீடு செய்ய அழைக்கும் விக்கி

வெளிநாட்டு செவந்தரை தமிழர் பகுதியில் முதலீடு செய்ய அழைக்கும் விக்கி

இலங்கையில் இருந்து வெளி நாடுகள் தப்பி சென்று பெரும் செல்வந்தர்களாக உருவெடுத்துள்ள தமிழர்கள் இலங்கை வந்து முதலீடுகளை செய்ய வேண்டும் என விக்கினேஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்

இலங்கை அரசு கூறும் அதே செய்தியை விக்கியும் கூறுகிறார் .


தமிழர்களை கொன்றவர்கள் ஆளும் ஆட்சியில் தமிழர்கள் புறக்கணிப்பட்டு வரும் நிலையில் சிங்கள சம்பந்தி விக்கி

சிங்கள கொலையாளிகளுக்கு ஒத்து ஊத்தி வருவது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

மகிந்தா அணியின் கைக்கூலியாக விக்கி உள்ளாரா என்ற ஐயத்தை விக்கியின் சமீப கால் பேச்சு காண்பிக்கிறது

Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நல்லவர் -கைது

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நல்லவர் -கைது

இலங்கை – அம்பாறை மாவட்டத்தில்;காவல்துறை அதிகாரி மீது சரமாரியாக தகுத்ததால் நடத்திய நால்வரை

காவல்துறையினர் திடீர் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்துள்ளனர் .

கைதானவர்கள் மீது தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

யானை கட்சிக்குள் குத்து சண்டை

யானை கட்சிக்குள் குத்து சண்டை

இலங்கையில் -ஐக்கிய தேசிய கட்சிக்குள் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் பதவியை

வகித்து வரும் ரணிலுக்கு எதிராக யானை தேசிய கட்சி உறுப்பினர்கள்போர் கொடியை தூக்கியுள்ளனர் .

இதனால் தற்போது அந்த கட்சியின் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்கும் படி கட்சிக்குள் உட்கட்சி மோதல்கள் இடம் பெற்றுள்ள

நிலையில் இரண்டு பிரதான பதவிகளையும் ரணில் சஜித்துக்கு வழங்குவார் என தெரிவிக்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த பெண் கைது

இலங்கையில் – இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி அங்கு வேலை வாய்பபை பெற்று தருவதாக கூறி

பணசேர்ப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .

இவரது ஆசை வார்த்தையை நம்பிய மக்களில் சிலர் பெரும் தொகை பணத்தை வழங்கி அமர்ந்துள்ள நிலையில் மேற்படி பெண் கைது செய்ய பட்டுள்ளார் .

போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

குண்டு தாக்குதல் நடத்திய 39 பேரிடம் விசாரணை .

குண்டு தாக்குதல் நடத்திய 39 பேரிடம் விசாரணை .

இலங்கையில் தொடராக இடம்பெற்ற எட்டு குண்டு தாக்குதலுடன் தொடர்பு பட்ட சுமார் 39 பேரிடம் இலங்கை

குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மேலும் விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளன ,ஆனால் குற்ற சட்ட பட்ட முக்கிய முஸ்லீம் முன்னாள்

அமைச்சர்கள் இதுவரை விசாரணைகளுக்கு உட்படுத்த படவில்லை என்பது குறிப்பிட தக்கது