தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ,தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நானுஓயா ரயில் நிலையத்தின் கள விஜயத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தோட்டத் தொழில்கள்

அமைச்சகமும் நிதி அமைச்சகமும் இது தொடர்பாக தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும் கூறினார்.

டிப்போக்களுக்கு போனஸ் வழங்குவதற்கு நடவடிக்கை

மேலும், எதிர்காலத்தில் இலாபகரமான டிப்போக்களுக்கு போனஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது

கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது

கொலைச்சம்பவம் 7சந்தேக நபர்கள் கைது ஈரியகஹலிந்த வீதிப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் நேற்று (14) 7 சந்தேக நபர்களை கைது செய்தனர்.

தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது

தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவிடமிருந்து மூன்று மன்னா கத்திகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்கள் சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 17, 18, 21, 25, 27, மற்றும் 44 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள்

சந்தேக நபர்கள் இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 12 அன்று இரவு, ஈரியகஹலிந்த பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக சீதுவை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

தாக்குதலில் படுகாயமடைந்த 40 வயது நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

சீதுவை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் விபத்து

எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் விபத்து

எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் விபத்து ,எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனமும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

பண்டாரவளை வைத்தியசாலை

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில், தெமோதரை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள்

காயமடைந்தவர்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பில், எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்

ரயில் நிலைய கண்காணிப்பு விஜயம்

ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ,போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் .

அமைச்சர் பிமல் ரத்நாயக்க

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (14) பிற்பகல் நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின்போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர, ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன,

பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி உள்ளிட்ட மாவட்ட அரச அதிகாரிகள் உடனிருந்தனர்.

அமைச்சர் நானுஓயா ரயில் நிலையத்தை பார்வையிட்டு, பிரதான அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, திருத்தப் பணிகள்,

நவீனமயமாக்கல் மற்றும் நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்ந்தார்.

சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் நானுஓயாவிலிருந்து பதுளை

செல்லும் ரயில்களுக்கு கூடுதல் பெட்டிகளை இணைத்து, அவற்றை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புனரமைப்பது குறித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், ரயில் நிலைய பணியாளர்களின் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகளின் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் காற்றாலை மின்திட்டம் நிறுத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் காற்றாலை மின்திட்டம் நிறுத்திவைப்பு

மன்னார் காற்றாலை மின்திட்டம் நிறுத்திவைப்பு

மன்னார் காற்றாலை மின்திட்டம் நிறுத்திவைப்பு ,மன்னார் காற்றாலை மின் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது தொடர்பில்

போராட்டத்தில் ஈடுபடுவோருடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

2ஆம் கட்ட காற்றாலை அபிவிருத்தி் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கை

குறித்த போராட்டத்தை கைவிடுமாறு அரசாங்க அதிபர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளார் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வை முற்றிலும் நிறுத்த கோரி மன்னார் மக்கள் சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மன்னார் மக்கள் சார்பாக ஐந்து பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் (13) ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

அந்த சந்திப்பில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்தி, அந்த காலப்பகுதியில் அதன் சாதக பாதகங்கள்

தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கும், மக்களின் கருத்துக்களை கேட்டு அறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு

ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு

ஓரினச்சேர்க்கை ஊக்குவிப்பு ,நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர்

செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தர்ம கீர்த்தி ஸ்ரீ கலாநிதி அகுரெட்டியே நந்த நாயக்க தேரருக்கு மியன்மார் அரசாங்கத்தால் ‘அக்கமஹா பண்டிதர்’ கௌரவப் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கர்தினால் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசியலமைப்புத் திருத்தத்தில் மனித உரிமைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கண்டலமே ஹெடகாரயா" யானை உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கண்டலமே ஹெடகாரயா” யானை உயிரிழப்பு

கண்டலமே ஹெடகாரயா” யானை உயிரிழப்பு

கண்டலமே ஹெடகாரயா” யானை உயிரிழப்பு ,6 மாதங்களுக்கும் மேலாக கண்டலம ஏரி பகுதியில் சிகிச்சை பெற்று வந்த ‘கண்டலமே ஹெடகாரயா’ யானை இன்று (13) பிற்பகல் உயிரிழந்தது.

25 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்த யானையின் முன்னங்கால் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளாகியதன் காரணமாக

கடந்த சில மாதங்களாக பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்திருந்தது.

மனித-யானை மோதலின் விளைவாக இந்த காட்டு யானை பல சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருந்தது.

இந்த யானையின் உயிரைக் காப்பாற்ற வனவிலங்கு அதிகாரிகள் பல்வேறு வகையான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு ,மீகொட, முத்துஹேனவத்த, நதுன் உயன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று (13) இரவு 10 மணியளவில் மோட்டார்

சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

9 மில்லிமீற்றர் ரக தோட்டா கொண்ட பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாவும், தோட்டாவும் தோட்டா உறையும் வீட்டுக்கு

முன்னால் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, மோட்டார் சைக்கிள் முத்துஹேனவத்த வீதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளதோடு,

சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு

இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு

இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு ,இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகளில் கடுமையான சிக்கல்கள் இருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த 2024 அறிக்கையை வெளியிடும்

போது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பொறுப்புக்கூற

வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளையே மேற்கொண்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தனிநபர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, விளக்கமறியலில் இருக்கும்போது கொலைகள், ஊடகவியலாளர்களை துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான

கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

2022 போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், மனித உரிமை மீறல்களுக்குப்

பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக மிகக் குறைந்த நடவடிக்கையே எடுத்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்தல், பெண்கள் கட்டாய கருத்தடைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், பொலிஸ் காவலில் வைத்து 7 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான எந்தவொரு சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், போரில்

பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து ,மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக மன்னார் மாவட்ட மக்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் நேற்று (13) மாலை ஜனாதிபதி செயலகத்தில்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திட்டத்தை மறு ஆய்வு செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளார்.

மேலும், இந்தத் திட்டம் திறமையான அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையாகச் செயல்படுத்தப்படும் என்றும், மக்களுக்கு எவ்வித சிரமமும்

ஏற்பட்டால் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கலந்துரையாடலின்பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கையில்,

பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்
Posted in இலங்கை செய்திகள்

பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்

பொறுப்பேற்றார் பொலிஸ்மா அதிபர்

பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர் ,புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார்.

பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட அவர், தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று குறிப்பிட்டார்.

பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வை

பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தாம் பணியாற்றி வருவதாகவும், இதற்காக அனைத்து பொலிஸ்

அதிகாரிகளிடமிருந்தும் உயர் செயல்திறனை எதிர்பார்ப்பதாகவும், புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

ஒழுக்கமான பொலிஸ் துறை

ஒழுக்கமான பொலிஸ் துறையை நிறுவுவதே தனது ஒரே நோக்கம் என்றும், அதனை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, பொலிஸ்மா அதிபராக நியமித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இதன்போது தெரிவித்தார்.

அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்

அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்

அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் ,வைத்தியசாலையில் மருந்தாளுநர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்

குருநாகல் போதனா வைத்தியசாலை

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.

அதன்படி, இந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தகுதிவாய்ந்த மருந்தாளுநர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் போது, சேவை அவசியமின்றி ஒரு மருந்து கலவை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது

சுகாதார சேவைகள் பணிப்பாளர்

குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இரண்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் திலகரத்ன குறிப்பிட்டார்.

இருப்பினும், அதிகாரிகள் இந்த விடயத்தை புறக்கணித்ததன் காரணமாக இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி
Posted in இலங்கை செய்திகள்

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி

ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி ,இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி

விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன

விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி விமானப்படை மற்றும் இராணுவ விசேட

படையைச் சேர்ந்த 6 வீரர்களின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பான வழக்கு தெஹியத்தகண்டிய நீதவான்

பிரியந்த ஹால்யால முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலைமை விமானி சாட்சியமளிக்கும் போதே இவ்வாறு நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியமைக்கு காரணம் தனது தவறு அல்ல என்று தான் நம்புவதாக

தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன

தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன மேலும் சாட்சியமளித்தார்.

ஹெலிகொப்டர் ஏதேனும் ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார், ஆனால் ஒரு குறிப்பிட்ட காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விபத்தில் இறந்த இரண்டு விமானப்படை வீரர்கள்

மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளார்.

விமான விபத்து தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெஹியத்தகண்டிய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம்
Posted in இலங்கை செய்திகள்

அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம்

அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம்

அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம் ,அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதற்கட்டமாக 40 தொழிநுட்ப கருவிகளை பேருந்துகளில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

சாரதிகள் சோர்வாக இருந்தால்

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சாரதிகள் சோர்வாக இருந்தால், தூக்கத்தில் இருந்தால், நித்திரைக் கலக்கம் இருந்தால் அல்லது பணியில் இருக்கும்போது செய்யக்கூடாத பிற விடயங்களைச் செய்தால், அவர்களுக்கு

நினைவூட்ட இந்த AI தொழில்நுட்பம் பயன்படும். இந்த அம்சங்களை இலங்கையில் உள்ள நிறுவனங்கள் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவை இலங்கையில் பொதுப் போக்குவரத்திற்கு,

மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை

குறிப்பாக மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படவில்லை. எனவே, அவர்களுடன் பேசிய பிறகு, அவர்கள்

தங்கள் நிர்வாக அறிவு, தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்க விருப்பத்துடன் முன்வந்தனர். முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 40 கருவிகள் வழங்கப்படும்.

தமிழரை அலறவிட்ட படுகொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

தமிழரை அலறவிட்ட படுகொலைகள்

தமிழரை அலறவிட்ட படுகொலைகள்

தமிழரை அலறவிட்ட படுகொலைகள் ,தமிழரை அலறவிட்ட படுகொலை சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

தமிழர் வடக்கு பகுதியில் அதிகமான படுகொலைகள் சமீப நாட்களாக இடம்பெற்ற வண்ணம் காணப்படுகிறது .

வீதிகள் ,ஆறுகள், நீர்நிலைகள் ,கிணறுகள், பற்றை காடுகள்

வீதிகள் ,ஆறுகள், நீர்நிலைகள் ,கிணறுகள், பற்றை காடுகள் பாலடைந்த வீடுகள் என ,பல்வேறு தரப்பட்ட பகுதிகளிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

ஆண் பெண்கள் என இரு பாலருடைய சடலங்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருவதால் இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்கு ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் இந்த படுகொலைகள்

ஆளுகின்ற அரசின் புலனாய்வு கட்டமைப்பு நன்கு ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் இந்த படுகொலைகள் இடம் பெறுகிறதா

என்கின்ற சந்தேகத்தை இந்த படுகொலைகள் வெளிக்காட்டி உள்ளதாக மக்கள் இப்படி தெரிவித்து தமது அச்சத்தை வெளியிட்டு வருகின்றனர்.

50000 பேருக்கு காணி உறுதி
Posted in இலங்கை செய்திகள்

50000 பேருக்கு காணி உறுதி

50000 பேருக்கு காணி உறுதி

50000 பேருக்கு காணி உறுதி ,காணி உரிமைப் பத்திரங்கள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘ஹிமிகம’ தேசிய திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, கிளிநொச்சி – பளை மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தினூடாக ஆண்டு இறுதிக்குள் 50,000 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில், மோதலால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதனிடையே, முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 105,045 ஏக்கர் காணியில் 91% விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுனில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 26,330 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன.

வனவள திணைக்களம் மற்றும் பிற அரச நிறுவனங்களின் கீழ் உள்ள காணிகளும் இவற்றில் அடங்குவதுடன், எல்லை திருத்தங்களுக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் மீள கையளிக்கப்படும் என அவர் முன்னதாக தெரிவித்தார்.

அரசியல் மற்றும் சட்ட சவால்கள் இருந்தபோதிலும் நீண்டகால காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதியமைச்சர் சுனில் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்

வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்

வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்

வெளியான சிங்கள படுகொலை விபரங்கள் ,எமது தமிழ் இனத்தின் வரலாற்றை மாற்றி அமைக்க அப்பாவி பொது மக்களை ஈனரக்கம் இன்றி கொலை கடத்தல் கற்பழிப்பு ரயர்களுக்குள் போட்டு அரை.குறை.உயிரோடும்

கொலைவெறி கொண்டு ராணுவ புலனாய்வு மற்றும் ஊர் காவல் படையோடு இணைந்து நீங்கள் நடத்தியது எம்மால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது கடந்து போகவும் முடியாது.

நீங்கள் எம் இனத்தின் மீது நடத்திய வெறியாட்டம் பின்வரும் பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

பொத்துவில் 233கொலை👈
வீரமுனை 13037கொலை👈
காரைதீவு 789கொலை👈
பாலமுனை 457கொலை👈


அட்டபள்ளம்324கொலை👈
விநாயகபுரம் 89கொலை👈
அக்கரைப்பற்று 229கொலை👈


திருக்கோயில் 148கொலை👈
நயினாகாடு 95கொலை👈
பனங்காடு 136கொலை👈
மல்லீகைதீவு 567கொலை👈


மல்வத்தை 390கெலை👈
வளத்தாபிட்டி290கொலை👈
கல்முனை 234கொலை👈
மாளிகைகாடு கல்முனைக்குடி 789கொலை👈


நற்பிட்டிமுனை 103கொலை👈
சவளக்கடை 93கொலை👈
சொறிக்கல்முனை145கொலை👈
வெப்பையடி சந்தி 56கொலை👈
வைக்கல ஓட்டு பேக்கரி 97கொலை👈


வெல்லாவெளி சந்தி 59கொலை👈
இந்தியன் ரெயின் பேஸ் பக்கம் 81கொலை👈
பெரிய நீலாவணை 358கொலை👈
பாண்டிருப்பில் 459கொலை👈
துறைநீலாவணை 654கொலை👈


மருதமுனை அரிசி ஆலையில் உள்ளே வேலை நிமித்தமாக இருந்த அப்பாவி
தமிழர்கள் 65கொலை👈


ஒந்தாச்சிமடம் மாரக்கேட்312கொலை👈 அருகாமையில்
மகிழூர் பெரிய பாடசாலை வீதி வெட்டி துண்டு துண்டாக வீசி ப 450கொலை 👈
பட்டிருப்பு சந்தி96 கொலை👈 களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் அருகாமையில் 387கொலை👈


பேருந்து நிலையம் மாங்காடு 54.கொலை👈குருக்கள் மடம்58கொலை👈 புதுக்குடியிருப்பு. 567கொலை👈


கிரான் குளம்.87கொலை👈 ஆரையம்பதி 480.கொலை👈
ஏறாவூர் களுவங்கேணி 234.கொலை👈


மாவடி வேம்பு.47கொலை👈 கிரான்123👈 புலி பாய்ந்த கல்36👈 சந்திவெளி123👈 பழைய.89கொலை👈 பொது நூலக வீதி


வாழைச்சேனை781👈கொலை பாடசாலை வீதி
சத்திர கொண்டான் 234 👈கொலை. பால் மீன்.123👈கொலை .திராய்மடு .598.கொலை👈


புதிய முகத்துவாரம்( லைட்👈 office)👈✍👈
சித்தாண்டி.287.கொலை பாடசாலையில்👈 தங்கி இருந்த மக்களை

பலவந்தமாக வீதியில் அழைத்து கைகள் கால்கள்✍ கண்களை கட்டியும் கொன்று குவித்தது இந்த இன வெறி பிடித்த தேசம்.👈✍

இவ்வாறு எல்லாம் அழிந்து விட்டு👈 குருக்கள் மடம் மட்டும் ஞாபகம் வருதா கக்கிம் ஐயா இனி அடி அத்திவாரம்✍ இருந்து எழுத தொடங்கினால் பின்னால் முன்னால் எல்லாம் மூட வேண்டிய நிலை வரும் ✍✍✍
மிச்சம் கவனம் 👈👈

இவை அனைத்தும் கிழக்கில் நிலை👈 கொண்டுள்ள முஸ்லிம் காடையர்களாலும் ஊர்வால் படையாலும்.அரங்கேற்றபட்டது

எழுத்துக்கள் மீண்டும் எழுதுவோம்.✍✍

தவறுகள் இருப்பின் தெரியப்படுத்தவும்…

மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி

மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி

மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .

இந்தியாவின் அதானி குடும்பத்திற்கு காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்கு காணிகள் பறிமுதல் செய்து அதனூடாக அங்கு காற்றாலை மின்சார உற்பத்திக்கு வித்திடப்பட்டது .

காற்றாலை மின்சாரம்

இந்த காற்றாலை மின்சாரம் அங்கு நிறுவுவதால் தமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் ஏனைய தொழில் வாய்ப்புகளுக்கு மிகப்பெரும்

நெருக்கடியை அதை ஏற்படுத்தும் என்கின்ற காரணத்தினால் மக்கள் போராட்டம் இடம்பெற்றது .

அதனை அடுத்து தற்பொழுது காற்றாலை மின்சார உற்பத்தி நிர்மாண பணிகள் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிற கபட நாடகம்

இது மாகாண சபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிற கபட நாடகமா ,அல்லது தேர்தல் முடிந்ததை பின்னர் மூலமும் தமது நடவடிக்கை அங்கு மேற்கொள்வர்களா என்ன சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

எது எப்படி இருந்தாலும் மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மிகப் பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக மக்கள் மன்றம் கருத்துரைத்துள்ளது .

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு

வடகிழக்கில் ஹர்த்தால்அறிவிப்பு

வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு ,வடகிழக்கு பகுதியில் கர்த்தால் இடம்பெற உள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது .

தமிழ் வாலிபன் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து படுகொலை

முல்லைத்தீவு பகுதியில் தமிழ் வாலிபன் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்க்கும் முகமாக இந்த கத்தால் கடைப்பிடிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமந்திரன் தலைமையிலான அணியினரே இந்த கர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் படு தோல்வியை சந்திக்க கூடும் என தகவல் வெளிவருகிறது.

முல்லைத்தீவு பகுதியில் ரவிகரன்

ஆனால் முல்லைத்தீவு பகுதியில் ரவிகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்ற காரணத்தினால், அங்கு முழுமையான ஹர்த்தால் இடம்பெறலாம் என்கின்ற கருத்து நிலவுகிறது

ஆகவே இது இரண்டு பட்ட நிலையை காண்பிப்பதுடன் குழப்பத்தை ஏற்படுத்தும் அணி தோற்பதுடன் ,குழப்பத்தை ஏற்படதா அணி மக்கள் நன்மதிப்பை பெற்று மக்கள் ஆதரவுடன் செயல்படுகின்ற நிலவரத்தை கானாபிக்கும் .

இந்த ஹர்த்தால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காண்பிக்கப் போவதாக அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தமிழன் மரணத்தில் ஒரு கட்சிக்குள் இரண்டு பட்ட நிலை முருகல் உச்சம் பெற்று இருப்பதை இதன் ஊடாக அனுமாணிக்க முடிகிறது.

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம் ,அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பித்துள்ளதாக தற்போது செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது .

ஜனாதிபதியாக விளங்கிவரும் அனுரா குமர திசநாயக்கா

ஜனாதிபதியாக விளங்கிவரும் அனுரா குமர திசநாயக்காவிற்கும் ,ஆளும் பிரதமர் ஹரிணிக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ளது.

இந்த அடிதடிகள் உச்சம் பெற்று வருகிற நிலையில் ,தற்பொழுது அனுரா ஆட்சி விரைவில் கவிழ்க்கப்படலாம் என்ற விடயம் தெளிவாகிறது .

இலங்கையினுடைய அரசியல் வரலாற்றில் குறைந்த காலத்தில் ஆட்சியை இழக்கும் அபாயத்தில் தற்பொழுது அனுரா குமரா திசாநாயக்க சிக்கி தவித்து வருகிறார் .

பொருளாதாரத்தில் தள்ளாடி வருகின்ற இலங்கை

பொருளாதாரத்தில் தள்ளாடி வருகின்ற இலங்கையினுடைய பொருளாதாரம். அனுரா அரசை ஓட விட்டுக் கொண்டிருக்க ,இப்பொழுது கட்சிக்குள் உள் வீட்டு சண்டை ஆரம்பித்துள்ளது.

இது அனுராவுக்கு மிகப்பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக அவதானிகள் உள்ளக செய்திகளுடாக தெரிவித்து வருகின்றனர்.

அப்படி என்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்க பட போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை பார்க்கலாம்.