யோஷித ராஜபக்ச வழக்கு ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

யோஷித ராஜபக்ச வழக்கு ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ச வழக்கு ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ச வழக்கு ஒத்திவைப்பு ,யோஷித ராஜபக்ச வழக்கை நவம்பர் 12 ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த

வழக்கின் முன் விசாரணை மாநாட்டை நவம்பர் 12 ஆம் தேதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று நிர்ணயித்துள்ளது.

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதிகளுடன், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் குற்றப்பத்திரிகையில் இருவர் மீதும் பணமோசடி தொடர்பான குற்றங்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது,

மேலும் முன் விசாரணை மாநாட்டு விசாரணைக்கு முன்னதாக நடைமுறை விஷயங்களை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு ,மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மனித புதைகுழி தொடர்பான வழக்கு

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் உட்பட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

கடந்த 11-09-2025அன்று நீதிமன்றில் கொழும்பு பிரதம சட்டவைத்திய அதிகாரியினால் சமர்பிக்கப்பட்டிருந்த செலவு நிதி அறிக்கை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மேல்

நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சு

நீதிமன்றம் ஊடாக நிதி அமைச்சு,நீதி அமைச்சுக்கு அனுப்புவதற்கான கட்டளை கடந்த அமர்வில் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிக்கையின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன் குறித்த அறிக்கையானது மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்;டது.


இதனடிப்படையில் குறித்த வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்துழைப்பு தற்போது ஆளுகிற அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர பட்டது .

பிரதி பாதுகாப்பு அமைச்சர்

இந்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் என்பவர் முன்னாள் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசகுரவுக்கு எதிராக இந்த நம்பிக்கை கொண்டுவர கோரிக்கை விடுக்க பட்டது .

இவர் இறுதி முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழர்களை அழித்ததில் பிரதானியாக கடமையாற்றி இருந்தார்.

அவரே தற்போதுமேயர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக பதவி விலக்க வேண்டும்

இவரை உடனடியாக பதவி விலக்க வேண்டும் எனக் கூறி பாராளுமன்றத்தில் சஜித் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நம்பிக்கையில் பிரேரணை கொண்டு வந்தனர்.

அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் அறிவித்தார் .இதனால் பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த அமைதியின்மை காரணமாக சபை 10 நிமிடங்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹரின் நீதிமன்றில் ஆஜர்வழக்கு ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஹரின் நீதிமன்றில் ஆஜர்வழக்கு ஒத்திவைப்பு

ஹரின் நீதிமன்றில் ஆஜர்வழக்கு ஒத்திவைப்பு

ஹரின் நீதிமன்றில் ஆஜர்வழக்கு ஒத்திவைப்பு ,முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (26) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக,

நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு

நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்காக அவர் இன்று ஆஜரானார்.

இதன்போது, பதுளை நீதவான் நுஜித் டி. சில்வா வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு மாற்றும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த அரசாங்கம் இந்த அலுவலகங்களை இடமாற்றம் செய்ய திட்டமிட்டதுடன், இதன் மூலம் அவற்றின் தற்போதைய கட்டிடங்கள் கொழும்பு பாரம்பரிய கட்டிடங்களாக சுற்றுலாத்துறைக்காக அபிவிருத்தி செய்யப்படுவதற்காக எத்தனிக்கப்பட்டது.

கடந்த அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த திட்டம் தற்போதைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான மாற்றுத் திட்டம்

குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் மாதி​வெலவில் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் புதிய ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிக்க

திட்டமிட்டிருந்தது. இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த ஆட்சியில் அதனை மீள்பரிசீலனை செய்து அதை

முன்னெடுத்து செல்ல முடிவெடுக்கும் வரை சந்திரிக்காவுக்குப் பின் வந்த அரசாங்கங்கள் அதில் கவனம் செலுத்தவில்லை.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை நன்கு அறிந்த ஒரு தரப்பு, குறித்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு பறவைகள் பூங்காவிற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இதேபோன்ற சில திட்டங்களை புதிய அரசாங்கம் கைவிட்டுள்ளதுடன், நுவரெலியாவில் அமைந்துள்ள

பிரசித்தி பெற்ற தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலாவிற்கு பயன்படுத்துவதற்கான திட்டமும் இதில் ஒன்றாகும்.

அதனை தபால் திணைக்களத்தின் பிரத்தியேக பாவனைக்காக தக்கவைக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், புதிய அரசாங்கம், அரச பங்களாக்களை அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாக ஒதுக்காமல் பொருளாதார பயன்பாட்டிற்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 3 ஆம் கூட்டத்தொடர் இன்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி பாராளுமன்றின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை அச்சிடுவதற்காக
அரசாங்க அச்சகத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் செய்தியை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு

பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு

பாராளுமன்ற வளாகத்தில் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு

பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினர் சபைக்குள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சபைக்கு ஓரிடத்தில் ஒன்றாக கூடிநின்றவர்கள், ஆளும் கட்சியினர் பதிலளிக்க

வேண்டுமென கோஷமெழுப்பினர். அத்துடன், சபைக்குள் இறங்கவும் முயற்சிச்செய்தனர் இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக,
சபை நடவடிக்கைகள் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.