டக்ளஸ் படுகொலை ஸ்ரீதரன் கொதித்தார்
Posted in இலங்கை செய்திகள்

டக்ளஸ் படுகொலை ஸ்ரீதரன் கொதித்தார்

டக்ளஸ் படுகொலை ஸ்ரீதரன் கொதித்தார்

டக்ளஸ் படுகொலை ஸ்ரீதரன் கொதித்தார் .ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா Sreedharan enraged by Douglas murder

நிமலராஜன்,அற்புதன் Nimalarajan, wonderful

பொன்னையா என்பவர் ‘ நிமலராஜன்,அற்புதன் . நிக்கிலஸ் ஆகியோரை ஈ.பி.டி.பி தான் படுகொலை செய்வது என்று ஊடக சந்திப்பு நடத்தி அறிவித்துள்ளார் .

எனவே இது தொடர்பான விசாரணைகளை அரசு ஆரம்பிக்குமா எனக்கேள்வி எழுப்பிய தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யுமான சிவஞானம்

சிறீதரன்,அரசாங்கம் இராணுவத்தை பாதுகாக்கவே முயற்சிக்கிறது. .இலங்கை நீதியின் வழியில் செயற்பட்டிருந்தால் ஏன் வெளியக விசாரணைக்கு மறுக்க வேண்டும் எனவும் கேட்டார்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம் பெற்ற தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்விகளை எழுப்பிய அவர் மேலும் பேசுகையில்,

சதா எனும் சுப்பையா பொன்னையா Oh, my dear, the one who is always happy.

ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகாலமாக ஒன்றாக இருந்த சதா எனும் சுப்பையா பொன்னையா என்பவர் 2025.09.09 ஆம் திகதியன்று யாழ்ப்பாணம்

.ஊடக மையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அத்துடன் ஈ.பி.டி.பி தான் பல கொலைகளை செய்ததாகவும் சதா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான விசாரணைகளை அரசு ஆரம்பிக்குமா?

நிமலராஜனின் கொலை முறையாக விசாரிக்கப்படவில்லை என்று சர்வதேச நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன.

இசைப்பிரியா இலங்கை இராணுவத்தால் மிக மோசமாக கொலை செய்யப்பட்டார்.

இதேபோல் பல பெண்கள் கொலை செய்யப்பட்டார்கள். நீங்கள் இராணுவத்தை பாதுகாக்கவே முயற்சிக்கின்றீர்கள்.

இலங்கை நீதியின் வழியில் செயற்பட்டிருந்தால் ஏன் வெளியக விசாரணைக்கு மறுக்க வேண்டும்?.

வெளியக பொறிமுறைக்குள் வராவின் இந்த நாட்டில் நீதி ,சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஒருபோதும் உறுதிப்படுத்தப்படாது என்றார்.

டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்

டக்ளஸ் க்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள்

யாழ் மாவட்டத்தில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஏனைய கட்சிகள் ஆதரவு கொடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சங்கு, சைக்கிள் கூட்டணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகிய தரப்புக்கள் தம்மை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில்

ஆதரவு கோரியதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நண்பர் தர்மலிங்கம் சித்தார்த்தன் என்னை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தொடர்பாக கலந்துரையாடினார்.

அரசியல்வாதியாக இல்லாமல் நட்பு ரீதியாக அந்த சந்திப்பு நடைபெறும்.

உள்ளூராட்சி சபைகளை ஆளுவது தொடர்பாக அண்ணன் சி.வீ.கே.சிவஞானமும். குறுஞ்செய்தியை அனுப்பி சந்திப்பதற்கு கோரியிருந்தார். இருவரையும் சந்திக்க தீர்மானித்துள்ளேன்.

எங்களுடைய கட்சியினுடைய நிலைப்பாடு பக்கம் சாராது மக்கள் நலன் சார்ந்து இருக்கும். எந்த இடத்திலும் ஆட்சியை பொறுப்பெடுப்பதற்கோ ஆட்சியில் பங்கெடுப்பதற்கோ நாங்கள் தயாராக இல்லை.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உள்ளோம்.

உத்தியோகபூர்வமாக எந்த கட்சிகளும் இதுவரை என்னோடு கதைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் எங்களுடைய கட்சி முக்கியஸ்தர்களிடம் தங்கள் ஆதரவை கோரியுள்ளனர்.

கடந்த கால கசப்புகளை கருத்திற்கொண்டு எதுவுமே உத்தியோகபூர்வமாக இருந்தாலே அது நல்லது என்பது என்னுடைய அனுபவம் – என்றார்.

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்

ஜனாதிபதிக்கு டக்ளஸ் எழுதிய கடிதம்

ஜனாதிபதி அனுரவுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் அனுப்பியுள்ளார்.

வடக்கு, கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் எமது கடல் வளத்தையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துப் பேரழிவைத் தடுக்குமாறு கோரி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக

எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தும், அவை முழுமை பெறவில்லை.

தற்போது மீனினங்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் தொழில் நிமித்தம் வருவதில்லை.

இது ஒவ்வொரு வருடமும் நிகழ்வதாகும். அந்தவகையில் இந்த வருடம் இக்காலகட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொடங்கி எதிர்வரும் 15ஆம் திகதி முடிவடைகின்றது.

இந்தக் காலகட்டம் முடிவடைந்த நிலையில் – அதாவது எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பின்னர் ஆயிரக்கணக்கிலான இந்திய இழுவை மடி வலைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நிச்சமயாக வரும்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் தங்களது அவதானத்தைச் செலுத்தி, ஒரு பக்கத்தில் இது தொடர்பான இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளை இந்திய அரசுடன் மேற்கொண்டும்,

மறு பக்கத்தில் இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டும், இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் இலங்கைக் கடற்பரப்புக்குள்ளான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றுள்ளது.

டக்ளஸ் எம்பி கைது
Posted in இலங்கை செய்திகள்

டக்ளஸ் எம்பி கைது

டக்ளஸ் எம்பி கைது

டக்ளஸ் எம்பி கைது , டக்ளஸ் தோவனந்தாவின் கட்சியில் வவுனியாவில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் காசோலை மோசடியில் குற்றச் சுமத்தப்பட்டு தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வந்த திலீபன் அவர்கள் அங்கு பல வர்த்தகர்கள் மக்களை மிரட்டி கப்பம் பெறும் நடவடிக்கையிலும் அவருடைய தொழில்துறைகளுக்கு தடைகளை விதித்து வந்ததான குற்றச்சாட்டு கடந்த காலங்களில் பதிவாகி இருந்தது.

அவ்வாறான நிலையில் தற்போது டக்லஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் கட்சியில் போட்டியிட்ட இந்த திலீபன் எனப்படுகின்ற முன்னாள் எம்பி தற்போது கைது செய்யப்பட்டுள்ள தகவல் பரபரப்பாக பரவி வருகின்றது .

இந்த செய்தி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது .மக்களுக்கு உதவி செய்வது மக்களை மிரட்டி கப்பம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் .

போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காணி வழங்குவதற்காக 20 லட்சம் ரூபாய் காசடி மோசடியில் இவர் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே ,

தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சேவை செய்ய வந்ததாக தெரிவித்துக் கொண்டிருக்கும் இவர்கள் எங்களது சேவைகளை மறந்து தமது தனிநல அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே ,

தற்போது மேற்படி விடயம் பரபரப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது .

வவுனியா மாவட்டத்தில் இந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலீபர் அவர்கள் பல்வேறுபட்ட மோசடி நடவடிக்கை மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு முன் நாட்களில் வைக்கப்பட்டிருந்தமை இங்கே கவனியுங்கள் .

இதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பதில் எதுவாக இருக்கும் என்பதை மக்களுக்கு கேள்வியாக இருக்கிறது .

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம்

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம்

ஜனாதிபதியாக ரணில் வேண்டும் டக்ளஸ் விருப்பம் ,இலங்கையில் ரணில் விக்ரம சிங்காவே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீர் குலைந்து காணப்படும் பொருளாதாரத்தை தலைநிறுத்தியதில் ,மிகவும் முக்கியமானவராக ரணில் விக்ரமசிங்க காணப்படுகின்றார் .

ரணில் விக்கிரமசிங்க ஒருவரே நாளைய இலங்கைனுடைய பொருளாதாரத்தை காட்டி காப்பாற்ற முடியும் என்கின்ற நிலையில் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

தற்பொழுது ஆரம்பத்தில் விக்ரமசிங்க ஆட்சியிலேயே அமைச்சு பதவி கொடுக்கப்பட்டு அவர் அழகு பார்க்கப்பட்டார் .

அவ்வாறான நிலையில் தற்பொழுது மீண்டும் நான் விக்ரம் சிங்காவை ஆட்சிக்கு வரவேண்டும் என்கின்ற தனது விருப்பத்தையும் ,கருத்தையும் மக்கள் ஊடகங்கள் உருவாக அவர் தெரிவித்து இருக்கின்றார்.

வடக்கு பகுதியில் மக்களுக்கு ஓரளவு உதவி செய்யக் கூடிய வகையில் டக்கிளஸ் தேவானந்தா உள்ளார் .

என்கின்ற கருத்து தற்பொழுது மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்ற நிலையில் இம்முறை மிகவும் ரணில் விக்ரம் சிங்கா வரவேண்டும் என்கின்ற விருப்பம் சற்று உற்று நோக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை வேட்டிகள் தமது நலன் சார்ந்த மற்றும் பயணிக்கிறார்கள் மக்களுக்கு உதவி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இப்படி வைக்கப்படுகின்றது .

ஆனால் வெள்ளை வெட்டிகள் அதனை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ்
Posted in இலங்கை செய்திகள்

பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ்

பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ்

பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ் இப்படிச் சொல்கிறார் ,

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கட்சிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன .

அவ்வாறு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் அது இலங்கைக்கு பயனற்ற ஒன்றாக மாற்றம் பெறும் என் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவின் ஆலோசனை அடிப்படையில் இலங்கையில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி போட்டியிடுவது தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகள் முடிவு செய்துள்ளனர் .

பொது வேட்பாளராக ஸ்ரீதரன் எம்பி அவர்கள் நிற்க போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டால் ,அதற்கு அடுத்த கட்சிகளும் ஒன்றிணைந்து வாக்குகளை அளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைக்க பட்டுள்ளது.

வெற்றி பெற்றால்

அதே போலை இவ்வாறு நிறுத்தப்பட்டு அவர் வெற்றி பெற்றால் அது இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் .

அதேபோல தோற்கடிக்கப்பட்டால் அதுவே தமிழ் தேசிய கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .

அவ்வாறான ஒரு நெருக்கடி வாய்ந்த இறுக்கமான போர்க்களமுனை ஒன்றில் ஜனாதிபதி வேட்பாளராக போது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி அதற்கு அனைத்து கட்சிகளும் இணைந்து வாக்கு அளிக்க நினைக்கின்ற .

இந்த விடயம் மிகவும் ஒரு முக்கியமான விடயமாக செய்தியாக இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆபத்தான விளையாட்டில் அவர்கள் இறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனினும் பொது வேட்பாளர் தேர்தலில் தோல்வி அடைந்தார் அதுவே பெரு நெருக்கடியை தலைமை சந்திக்க நேரிடும் என்ற கருத்துக்களும் இப்பொழுது வைக்க தவறவில்லை.

அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள சவால்
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு தீர்வு

இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு தீர்வு

இரண்டு உயிர்களை பலியெடுத்த இணுவில் புகையிரதக் கடவைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் சுமார் 80 இலட்சம் ரூபாய்

செலவில் சமிக்ஞை விளக்கு மற்றும் பாதுகாப்பு கதவு ஆகியன பொருத்தப்பட்டு, நேற்று (04) அதன் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி, வேனில் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பத்தினர், இணுவில் பகுதியில் அமைந்திருந்த குறித்த பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது ரயிலிலுடன்

மோதுண்டனர். இதனால் இளம் குடும்பத் தலைவரும் சில மாதங்களேயான பச்சிளம் குழந்தையும் ஸ்தலத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர். குழந்தையின் தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்தினையடுத்து, பிரதேச மக்களினால் புகையிரத கடவையில் நடாத்தப்பட்ட எதிர்ப்பு போரட்டத்தை அடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தற்காலிக தீர்வொன்றினை உடனடியாக

அமுல்ப்படுத்தியதுடன், நிரந்தர தீர்வாக ஓசை எழுப்பும் வகையிலான ஒளி சமிஞ்சை விளங்கு மற்றும் பாதுகாப்பு படலை ஆகிவற்றை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அரசாங்க தரப்புக்களின் ஊடாக முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில், சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் ரயில்வே திணைக்களத்தினால் பொருத்தப்பட்ட சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பினை

செயற்பாடுகளை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கைக்கு வந்து இறங்கலாம்

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கைக்கு வந்து இறங்கலாம்

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினாவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கையில் வந்து இறங்கலாம் என்ற கட்டத்தில்தான் நிலைமை உள்ளது.

சாந்தனுடைய தாயார், சகோதரி, சகோதரன் உள்ளிட்டோர் என்னிடம் வந்து கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர்.

சாந்தன் எந்த நிலையிலும் இலங்கைக்கு வந்து இறங்கலாம்

சாந்தனும் தன்னுடைய வழக்கறிஞருக்கூடாக ஒரு கோரிக்கையை எனக்கு எழுத்தில் அனுப்பியுள்ளார். இவற்றை வைத்து அமைச்சரவையில் இது தொடர்பில் பேசியிருந்தேன்.

அதற்கு ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்டோர் அவர் இங்கு வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களிற்கு அறிவித்துள்ளோம். அங்கு அதற்கான நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கிறது.

அவரை அவரது உறவினர்கள் எந்த நேரத்திலும் அழைத்து வரலாம் என தெரிவித்தார்.

அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வு

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் நிரந்தர புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும் வரை புகையிரத கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் ஏற்பட்ட புகையிரதத்துடன் வான் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக சிறு குழந்தை உள்ளிட்ட இருவர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (16) களவிஜயம் மேற்கொண்டு நிலைமைகளை பார்வையிட்டிருந்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வு

நிலைமைகளை ஆராய்ந்த அமைச்சர் துறைசார் திணைக்களத்துடன் கலந்துரையாடி சமிஞ்ஞை விளக்கை பொருத்துவதற்கான் நடவடிக்கை மேற்கொண்டார்.

குறித்த நடவடிக்கை நடைபெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் அதுவரை தற்காலிக ஏற்கபாடாக கிராமத்து இளைஞர் இருவரை காவல் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன் அதற்கான மாதாந்த கொடுப்பனவை கட்சி நிதியில் இருந்து வழங்குவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு

குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ்

தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை மேற்கொள்ளும் நெடுந்தீவு பயணிகள் படகுகளிற்கே இறங்கு துறையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நேர அட்டவணைப்படி சீராக இறங்கு துறையில் படகுகள் தரித்து மக்களுக்கு அசௌகரியமற்ற சேவை வழங்குவதை ஒழுங்குபடுத்தி உறுதிப்படுத்துவதற்காக இரண்டு கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிக்கட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற படகுகளை தரிப்பதற்கு ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படாமையினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு

குறிப்பாக, மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை மாத்திரம் பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடுகின்ற நெடுந்தீவு மக்களும் அரச ஊழியர்களும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறிகட்டுவானுக்கான கண்காணிப்பு விஜயத்தினை இன்று(29) மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவு மற்றும் நயினாதீவு பயணிகள் படகு சேவை உரிமையாளர்கள், கடற்படை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து கலந்துரையாடியதை தொடர்ந்து தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

கடற்றொழில்சார் சட்ட விரோத செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான 24 மணித்தியாலங்களும் செயற்படும்

பொறிமுறை ஒன்றினை கடற்படையினருடன் இணைந்து உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், மண்ணெண்ணை விநியோகம் மீ்ண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும்

மண்ணெண்ணை கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன், அதுதொடர்பான அறிக்கையினை தனக்கு சமர்பிக்குமாறும் கடற்றொழில் அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

அதேவேளை கடலட்டை வளர்ப்பு தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றமையினால்,

அவர்களைப் பயன்டுத்தி, உடனடித் தேவையாக எமக்கு இருக்கின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க வேண்டும எனவும கற்றொழல் அமைச்சர் தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சில் 24.08.2022 நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர்,


கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்னான அனுமதி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

    கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்னான அனுமதி – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

    கச்சதீவு திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில்

    ஜனாதிபதியுடன் கதைத்து முடிவை அறிவிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

    யாழ்ப்பாணம் – பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று

    (20)ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    முன்பதாக யாழ்ப்பாணம் – பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

    நேற்றுமாலை இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன்,

    கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்

      இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்

      இந்தியக் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர்.

      தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்றது.

      முன்பதாக

      இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.

      இச்சந்திப்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று(07) நடைபெற்றது.

      மயிலிட்டி மீ்ன்பிடித் துறை முகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

      இதனிடையே

      இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சின் முன்பாக தென்னிலங்கை கடற்றொழிலாளர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

      போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களை நேரடியாக சென்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      கடற்றொழில் அமைச்சர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம்

      கடற்றொழில் அமைச்சர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு விஜயம்

      கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

      கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சாத்தியமான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் வகையில் இந்த விஜயம் அமையவுள்ளது.

      அதனடிப்படையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கள விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாளை

      அம்பாறை மாவட்டத்தில் கள விஜயங்களை மேற்கொள்ள இருப்பதுடன், கடற்றொழில்சார் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

      அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்களையும் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

      இவ்விரு மாவட்டங்களிலும் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை போன்றவற்றில் மேற்கொள்ளக் கூடிய அபிவிருத்திகள் தொடர்பாகவும் மூன்று நாள் விஜயத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளை

        கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான சேதன பசளை

        கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு சேதன திரவம், நைதரசன் சாறு, களைநாசினி போன்றவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

        கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இரசாயன உரங்களை முழுமையாக தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

        இரசாயன உரப் பாவனையை தடை செய்வது என்பது, உடனடித் தீர்மானம் இல்லையெனவும் ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதன் அடிப்படையில் இரசாயன கலப்பற்ற உணவுகளை மக்களுக்கு வழங்கும் நோக்கத்திலான தீர்மானம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

        அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக சேதனத் திரவம், நைதரசன் சாறு போன்றவற்றை உடனடியாக பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் டக்ளஸ்

        இலங்கையின் மீன்பிடி சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் டக்ளஸ்

        சர்வதேச கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற இலங்கையின் மீன்பிடிக் கலன்கள் பின்பற்ற வேண்டிய கடப்பாடுகள் மற்றும் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்த முன்வரைபு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

        குறித்த கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்கா,

        கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கடற்றொழில் அமைச்சில் (01) நடைபெற்றது.

        தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இலங்கை கடற்றொழிலாளர்களின் நலன்களை பாதுப்பதையும் இலங்கை கடற்றொழில் செயற்பாடுகளை வினைத் திறனுடன் மேற்கொள்வதையும் உறுதிப்படுத்தும் வகையில், குறித்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        பூநகரி – வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணை

        பூநகரி – வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணை

        கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்துள்ள பூநகரி, வலைப்பாடு கிராம மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடல்

        கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி நக்டா தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதாகாரசபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

        இதேநேரம் பூநகரி, வலைப்பாடு கடற்றொழிலாளர்களுக்கான விண்ணப்பத்தின் அடிப்படையில், கடலட்டை பண்ணைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக சென்ற

        அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சங்குப்பிட்டி பாலத்தின் ஓரத்தில் இறால் அறுவடை செய்யும் தொழிலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

        அத்துடன் பூநகரி, சங்குப்பிட்டி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

        கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          சட்டவிரோத கடலட்டை செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் பணிப்பு

          சட்டவிரோத கடலட்டை செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சர் பணிப்பு

          குருநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கடலட்டை செயற்பாடுகளை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவறுத்தப்பட்டுள்ளது.

          நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் அடையாளப்படுத்தபட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இழுவைவலைப் படகுகளைப் பயன்படுத்துவதற்கு

          தடைவிதிக்கப்படடுள்ள நிலையில், அதனை மீறுகின்ற வகையிலும் கடற்றொழில் சங்க ஒழுங்கு விதிகளை மீறும் வகையிலும் சுமார் 39 இழுவை வலைப்படகுகள் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு

          வருவதாக குருநகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளினால் நேற்று (21.07.2021) கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

          இதனையடுத்து, தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் அனைத்தும் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழுவை வலைப் படகுகளைப் பயன்படுத்

          தி கடலட்டை தொழில் ஈடுபடுகின்றவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.மாவட்ட பிரதானி ஜெ. சுதாகரனுக்கு கடற்றொழில் அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          மக்களுக்கான திட்டங்கள் தொடரும்- அமைச்சர் டக்ளஸ்

          மக்களுக்கான திட்டங்கள் தொடரும்- அமைச்சர் டக்ளஸ்

          வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

          கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் நிலையத்தினை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

          அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

          கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம் எமது பிரதேச மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்களையும் பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற

          அடிப்படையில், ஆய்வு ரீதியாகப் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

          கடலட்டைப் பண்ணைகள் தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள புரிதல் காரணமாக ஏராளமானோர் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கடந்த

          ஒன்றரை வருடங்களில் நூற்றுக்கணக்கான பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் ஆயிரக்கணக்கான பண்ணைகளை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகின்றன.

          இவ்வாறான பண்ணைகளுக்கு இலட்சக்கணக்கான கடலட்டை குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்து வளர்க்க வேண்டிய தேவையுள்ளது.

          இந்நிலையிலேயே, 2016, 2017 காலப் பகுதியில் அப்போதைய அரசாங்கத்திடம் அனுமதிகளை பெற்று, அரியாலையில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை அமைத்த இலங்கை சீனக்

          கூட்டு நிறுவனம், கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்துள்ளனர். இதற்கு தேவையான சட்ட ரீதியான அனுமதிகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.

          கடலட்டைப் பண்ணையைப் பொறுத்தவரையில் அவசியமான அனுமதிகளைப் பெற்று செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டுமாயின் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படும்.

          எனவே, நாரா – நக்டா – கடற்றொழில் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஆலோசனைகளைப் பெற்று மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாது என்று

          அடையாளப்படுத்தப்படுகின்ற இடங்களில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு தழுவல் அடிப்படையிலான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

          அதேவேளை, எமது மக்களின் பொருளாதார நலன்களையும் நாட்டிற்கான அந்நியச் செலாவணியையும் பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

          இவ்வாறான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக இநதியா, மாலைதீவு, பங்களாதேஸ், நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி இருக்கின்றேன்.

          அண்மையில்கூட இந்தியத் தூதுவரை சந்தித்து எமது கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதார ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியிருக்கின்றேன். அதேபோன்று முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் கோரியுள்ளேன்

          இவ்வாறான நிலையில்தான், கடந்த அரசாங்கத்தினால் நாட்டினுள் செயற்பட அனுமதி அளிக்கப்பட்ட குயிலான் நிறுவனம் கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்திருக்கின்றது.

          இதுதொடர்பாக நேரடியாக நிலைமைகள் ஆராயப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கௌதாரிமுனை கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடி எமது மக்களுக்கும் நாட்டிற்கும் பாதிப்பில்லாத தீர்மானம் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

          மேலும், கௌதாரிமுனை கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையம் தொடர்பாக அரசியல் நோக்கத்தோடு மக்களைக் குழப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இவ்வாறான சுயநலப் பூச்சாண்டிகளினால் தன்னுடைய மக்கள் நலச்

          செயற்பாடுகளை தடுக்க முடியாது எனவும் மக்களுக்கு தேவையானதையும் சரியானதையும் செய்வதற்கு எதிராக எத்தகைய எதிர்ப்புக்கள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயங்கப்

          போவதில்லை. கடந்த காலங்களில் இவ்வாறான பல சலசலப்புக்களையும் சவாடல்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றமையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            யாழ்,வன்னியில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் – டக்ளஸ்

            யாழ்,வன்னியில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் – டக்ளஸ்

            வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ள அமைச்சர்

            டக்ளஸ் தேவானந்தா, வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நீர் வேளாண்மை பண்ணைகளை அமைப்பற்கு தேவையான காணிகள் தொடர்பாகவும் பிரஸ்தாபித்துள்ளார்.

            வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்காவுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

            வனஜீவராசிகள் அமைச்சில் நேற்று (07) இடம்பெற்ற சந்திப்பின்போது, வடக்கு மாகாணத்தில் தற்போது வனத்துறையினரினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர்

            காணிகளில், யுத்தத்திற்கு முற்பட்ட காலப் பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையினை அமைச்சர் டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைச்சர் சி.பி. இரத்நாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.

            அத்துடன், குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வடக்கு விவசாயிகள் ஆர்வமாக இருப்பதனையும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

            சம்மந்தப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தினை விரைவுபடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

            அதேபோன்று, வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஏற்றுமதித் தரத்திலான நண்டு, இறால், மீன் வளர்ப்பு பண்ணைகளை உருவாக்கி நீர் வேளாண்மையை விருத்தி செய்வதன் மூலம் மேலதிக வருமானத்தை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதுடன் அந்நியச் செலாவணியைப் பெற்றுக்

            கொள்வதற்கும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில், வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் நீர் வேளாண்மை பண்ணைகளை

            அமைப்பதற்கு பொருத்தமான இடங்களை விடுவித்து பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக குறித்த சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சரினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

            கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சி.பி. இரத்நாயக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை

            மேற்கொள்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.