Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பாராளுமன்றத்துக்கு வந்த நாகபாம்பு
பாராளுமன்றத்துக்கு வந்த நாகபாம்பு
பாராளுமன்றத்துக்கு வந்த நாகபாம்பு ,பாராளுமன்ற வளாகத்தின் போக்குவரத்து அலுவலகம் அருகே ஒரு நாகப்பாம்பு காணப்பட்டது, இதனால் கடந்த வாரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாராளுமன்றத்தின் உதவி இயக்குநர்
பாராளுமன்றத்தின் உதவி இயக்குநர் (நிதி) ரோஹித பத்மசிறி முதலில் அந்த நாகப்பாம்பைக் கண்டார்.
அன்று மாலை பணியில் இருந்த அவர், நாகப்பாம்பைக் கண்டதும் உடனடியாக பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார்.
அதன்படி, அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள் நாகப்பாம்பைப் பிடித்து காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று வீசியதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
நாகப்பாம்புகள், விரியன் பாம்புகள் உட்பட பாராளுமன்ற வளாகத்திற்குள்
தியவன்னாவ நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள காட்டில் இருந்து பல்வேறு வகையான நாகப்பாம்புகள், விரியன் பாம்புகள் உட்பட பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து நீண்ட நாட்களாகிவிட்டன. முன்னதாக,
பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த பல பாம்புகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து வனப்பகுதிகளுக்கு எடுத்துச் சென்று வீசினர்.
இலங்கையில் கடும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை
இலங்கையில் கடும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை
இலங்கையில் கடும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை ,அடுத்த தசாப்தத்தில் இலங்கையின் பணியாளர்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இளைஞர்கள்
உலக வங்கி எச்சரிக்கிறது
இணைவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கிறது, ஆனால் அந்த நேரத்தில் 300,000 (3 லட்சம்) புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பது அவசியம் என்று உலக வங்கியின் பிரதித் தலைவர் ஜோஹன்னஸ் ஜூட்
கூறுகிறார். உலக வங்கியின் பிரதித் தலைவரின் இலங்கைக்கான முதல் அதிகாரப்பூர்வ விஜயத்தின் முடிவில் உலக வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
உலக வங்கி குழு தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்கும், போட்டித்தன்மை மற்றும் சேவை வழங்கலை வலுப்படுத்துவதற்கும், நாடு முழுவதும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்துடன் கூட்டாக இணைந்து செயல்படும்.
உலக வங்கியின் பிரதித் தலைவர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடனான தனது கலந்துரையாடலில், இலங்கை கடினமாக வென்ற பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாராட்டினார், மேலும்
வேலைவாய்ப்புகளை உருவாக்கும், தனியார் முதலீட்டை ஈர்க்கும் மற்றும் முக்கிய துறைகளை நவீனமயமாக்கும் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில்
அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்
அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். உலக வங்கியின் பிரதித் தலைவர் மேலும் கூறியதாவது:
“பொருளாதார மீட்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகள், முதலீடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய
வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தனியார்
மூலதனத்தைத் திரட்டுதல் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்த்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, இந்தப் பயணத்தில் இலங்கையை ஆதரிக்க உலக வங்கி குழு தயாராக உள்ளது.” என்றார்.
இறைச்சி கடையில் அடாவடி
இறைச்சி கடையில் அடாவடி
இறைச்சி கடையில் அடாவடி ,ஹட்டன் நகரில் இறைச்சி விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் , வாடிக்கையாளர்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்வதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இறைச்சி எலும்பு கலந்த இறைச்சி

தனி இறைச்சி எலும்பு கலந்த இறைச்சி இன்னும் சில ரகங்களில் இங்கு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. .எனினும் வாடிக்கையாளர்களின்
தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய விதத்தில் இறைச்சி முறையாக வகைப்படுத்தப்படுவதில்லை என தெரியவருகிறது.
தனி இறைச்சி என்னும் பெயரில் எழும்பும் கலந்து விற்பனை செய்கிறார்கள். அதுபோலவே எழும்புடன் விற்பனை செய்யப்படும் இறைச்சியில் அதிக
விகிதத்தில் எழும் இருப்பதாகவும் மிகவும் சொற்ப அளவிலான இறைச்சி இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர் .
தரம் குறைவாக ஏசி
தோட்டங்களில் வசிக்கும் மக்கள் இந்த கடையின் வாடிக்கையாளர்கள் என்பதால் அவர்களை அலட்சியம் செய்வதாகவும் இது தொடர்பாக பேசினால் அவர்களை தரம் குறைவாக ஏசி பேசுவதாகவும் தெரியவருகிறது.
“ஹட்டன் மாட்டிறைச்சி கடையில் வாடிக்கையாளர்களுக்கான மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை.வாடிக்கையாளர் இறைச்சி தொடர்பாக
ஏதாவது கேட்கையில் சரியான பதில் கிடைப்பதில்லை. மாறாக நக்கல் நையாண்டியாக பதில் கிடைக்கிறது விலைக்கு தகுந்த பொருள்
கிடைப்பதில்லை வியாபாரிகளின் பேச்சிகள் கேட்டு பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது” என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம்
சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம்
சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம் ,பேராதனையில் உள்ள புதிய கெட்டம்பே பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி கங்கையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் பாலத்தில் இருந்து குதித்திருக்கலாம்
அந்தப் பெண் பாலத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, மேலும் அவர் கொண்டு
வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பை பாலத்தின் மேலே இருந்து கண்டெடுக்கப்பட்டு, அது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சேற்றில் புதைந்துள்ளதால், சடலம் நீரில் அடித்துச் செல்லப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திலீபனின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
திலீபனின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
தியாக தீபம் திலீபனின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடகிழக்கில் உணர்வு பூர்வமாக இடம் பெற்று வருகிறது.
இந்த நிலையில் திலீபனின் ஊர்தி செவ்வாய்க்கிழமை (16) திருகோணமலையை வந்தடைந்தது. தியாக தீபம் திலீபனுக்கு திருகோணமலை மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு
ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு
ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள் மீட்பு ,கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17
புறக்கோட்டை பொலிஸார்
தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது குப்பைத் தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதைக் கண்ட ஊழியர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று தோட்டாக்களை கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பான பரிசோதனையில் 9MM வகை தோட்டாக்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
குப்பைத் தொட்டியில் தோட்டா
யாரோ ஒருவர் கழிப்பறைக்குள் நுழைந்து குப்பைத் தொட்டியில் தோட்டாக்களை கொட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் நாமல்
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் நாமல்
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் நாமல் ,இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்
பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கையை அடுத்து இந்திய உயர் ஸ்தானிகர் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, கொழும்பில்
உள்ள சீனத் தூதுவர், விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
பின்னர் சீனத் தூதர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மறுநாள் சந்தித்தார்.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டபோது, சீனத் தூதுவர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசியில் அழைத்து கைது குறித்து விசாரித்ததாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்
அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்
அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் நிர்வாக செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அரசு சேவைகள் முழுவதும் செயல்திறனை
மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாக, பொது நிர்வாக அமைச்சு அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை அங்கீகரிக்கும் விழா
உள்துறைப் பிரிவில் உள்ள அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கையொப்பங்களை அங்கீகரிக்கும் விழாவின் போது, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இந்த முயற்சியைத் தொடங்கி வைத்தார்.
பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதும், நவீன எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பொதுத்துறையை மாற்றுவதும் அரசாங்கத்தின் பரந்த நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
“மக்கள் எதிர்பார்க்கும் திறமையான பொது சேவையை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். இந்த டிஜிட்டல் கையொப்ப முயற்சி கிராம அலுவலர் மட்டத்தை கூட அடைய வேண்டும்,” என்று அபேரத்ன கூறினார்.
2006 ஆம் ஆண்டு 19 ஆம் எண் மின்னணு பரிவர்த்தனைகள் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த செயல்படுத்தல், உள்துறை பிரிவிற்குள் உள்ள
மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரி
மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகளுடன் தொடங்கியது. சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட லங்காபே மூலம் வழங்கப்படுகிறது.
இந்த முயற்சி ஆவண செயலாக்கத்தில் ஏற்படும் தாமதங்களை நீக்கி, வேகமான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான நிர்வாக பணிப்பாய்வுக்கு உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்
பஸ்மீது கிளேமோர் தாக்குதல் நடத்ததிட்டம்
பஸ்மீது கிளேமோர் தாக்குதல் நடத்ததிட்டம்
பஸ்மீது கிளேமோர் தாக்குதல் நடத்ததிட்டம் ,சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை தொடர்பிலான தகவல் அம்பலமாகியுள்ளது.
பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத்
தாக்குதலை நடத்தி கொல்லத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கெஹல்பத்தர பத்மே கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட பாதாள உலகக் கும்பலே இந்த திட்டத்தை தீட்டியிருந்துள்ளது.
பாதாள உலக கும்பலுக்கு மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ லெப்டினன்ட் கேணலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இது தெரியவந்தது.
சந்தேகத்திற்குரிய லெப்டினன்ட் கேணலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, பல சந்தர்ப்பங்களில் தன்னை தொலைபேசியில்
அழைத்த கமாண்டோ சாலிந்தா, இரண்டு கிளேமோர் குண்டுகளைக் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், சந்தேகத்திற்குரிய லெப்டினன்ட் கேணல், இரண்டு கிளேமோர் குண்டுகளை கமாண்டோ சாலிந்தாவிடம் கொடுத்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு ஹரக் கட்டாவைக் கொல்லும் திட்டம் தோல்வியடைந்தால், அடுத்த தாக்குதல் திட்டமாக கெஹல்பத்தர பத்மே
மற்றும் கமாண்டோ சாலிந்தா இந்த கிளேமோர் குண்டுத் தாக்குதலை நடத்தத் தயாராகி இருந்துள்ளனர்.
ஹரக் கட்டாவை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பஸ் புதுக்கடை நீதிமன்றத்தை நெருங்கும் போது, நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள சாலையில் ஒரு மோட்டார்
சைக்கிளில் கிளேமோர் குண்டை மறைத்து ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி வெடிக்க வைப்பதே பாதாள உலகக் கும்பலின் திட்டமாக இருந்ததாக தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இந்த பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டதால் ஒரு பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு கேமராவில் துப்பாக்கியை பொருத்தி அதை செயல்படுத்துவதன் மூலம் ஹரக் கட்டாவைக் கொல்லும் திட்டம் முன்பே தெரியவந்தது.
தாக்குதலில் ஈடுபடவிருந்த நபர் கைது செய்யப்பட்டார். தாக்குதலில் பயன்படுத்தத் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் முன்னர் கைப்பற்றப்பட்டது.
பத்மே மற்றும் பாதாள உலகக் கும்பல் கைது செய்யப்பட்டவுடன், அந்த திட்டம் நிறுத்தப்பட்டது, மேலும் திட்டத்தை தயாரித்தவர் அதற்குப் பயன்படுத்தப்பட்ட கேமராவையும் தீயிட்டு அழித்தார்.
கமாண்டோ சாலிந்தவுக்கு ஆயுதங்களை விற்றதாகக் கூறப்படும் லெப்டினன்ட் கர்ணல், பேலிகொட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வுத் துறையில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
46 பில்லியன் டாலர் கடனில் தவிக்கும் இலங்கை
46பில்லியன் டாலர் கடனில் தவிக்கும் இலங்கை
46 பில்லியன் டாலர் கடனில்தவிக்கும் இலங்கை 46 பில்லியன் டாலர் கடலில் தவிக்கும் இலங்கை இந்த கடனை எப்படி திருப்பி அடைக்கப் போகிறது. Sri Lanka is stranded at sea for $46 billion ( இன்றைய இலங்கை முக்கிய செய்திகள் )
இலங்கையில் வாழும் 22 மில்லியன் மக்களில் ஒருவரது தலைக்கு நான்கு லட்சம் ரூபாய் கடன் உள்ளது.
அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாடுகளிடம் கடனை வாங்கி குவித்து அதனூடாக பெற்று கொண்ட கடனுக்கு மீள் வட்டியை செலுத்தி தப்பித்துவருகிறது இலங்கை .
இவ்வாறான நடவடிக்கை தொடரும் பட்ஷத்தில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும்.
அப்படி நோக்குகின்ற பொழுது இன்றைய ஆளும் அணுக குமார திசநாயக்க ஆட்சி மிகவும் நெருக்கடியில் சிக்கி உள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து தம்மை மேம்படுத்திக் கொள்ள முடியாத நெருக்கடி நிலையில் அவர்கள் சிக்கி உள்ளார் .
இவ்வாறான நிலையில் அனுரா ஆட்சி அதிகாரம் வெகு விரைவில் கவிழ்க்கப்பட்ட அபாயம் காணப்படுகிறது .
அரசியல்வாதிகளை கைது செய்து சிறை அடைக்கும் அனுரா Anura arrests and imprisons politicians
அதனால்தான் தற்பொழுது அரசியல்வாதிகளை கைது செய்து சிறையில் அடைப்பதான தோற்ற பாட்டை ஏற்படுத்தி மக்களை திசை திருப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நாம் எழுப்புகிற கேள்வி என்னவென்றால் 46 பில்லியன் அமெரிக்கா டாலருக்கு மாதந்தோறும் இலங்கை.
இலங்கை வட்டித்தொகை எவ்வளவு How much is the interest rate in Sri Lanka?
இலங்கை வட்டித்தொகை எவ்வளவு என கேட்கிறோம் அதற்கு அருள் ஆட்சியும் அல்லது தமிழ் அரசியல்வாதிகளும் அதில் ஏதும் தெரிவிக்க மறுக்கிறார்கள்.
இதிலிருந்து ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ளலாம் சுத்துமாத்து அரசியலை மேற்கொண்டு வரும் தவறான அணுகுமுறை காரணமாக அறுவற ஆட்சி மிக விரைவில் கவிழ்க்கப்பட போகிறது .
என்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இதை எடுத்துக் கொள்ளுங்கள் எமது கேள்விக்கு பதில் இருந்தால் அனுராக் குமார திசநாயக்காவின் ஆட்சியில் உள்ளவர்கள் யாராவது எமது கேள்விக்கு திட்டக் பக்கத்தில் பதில் தருவீர்களா.
கால்வாயில் இருந்து துப்பாக்கி மீட்பு
கால்வாயில் இருந்து துப்பாக்கி மீட்பு
கால்வாயில் இருந்து துப்பாக்கி மீட்பு ,இலங்கை லோக்கல் ஆவா ஓயா வியன்னா கால்வாயில் இருந்து சிறிய அளவிலான துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . Gun recovered from canal ( இன்றைய இலங்கை செய்திகள் )
சிறிய ரக அதி நவீன துப்பாக்கி Small-caliber, ultra-modern rifle
இந்த சிறிய ரக அதி நவீன துப்பாக்கியை தாம் கண்டுபிடித்துள்ளதாக குற்றத்தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கியின் சேவை எண் மற்றும் அடையாள எண்ணும் பதிவு செய்யப்பட்டுள்ளது .
அதன் ஊடாக இந்த துப்பாக்கியை பயன்படுத்தியவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
மேலும் 12 துளைத்து துப்பாக்கி தோட்டாக்கள் ஐந்து டீ 56 தோட்டாக்கள் மற்றும் ஏழு ஒன்பது மில்லிமீட்டர் தோட்டாக்கள் என்பன ஒரு பொலித்தீன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர் .
இந்த நாட்களில் தண்ணீர் குறைந்து கால்வாயின் அடிப்பகுதி தெரியும் என்பதால் இந்த துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் தெரிந்தது என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள் .
துப்பாக்கியை கொள்முதல் செய்தது யார் Who purchased the gun?
இந்த துப்பாக்கியை கொள்முதல் செய்தது யார் ..? யார் இதை பயன்படுத்தினார்கள் ..
இதனை பயன்படுத்தி படுகொலைகள் ஏதும் இடம் பெற்றதா ..?என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இந்த துப்பாக்கி மீட்பு சம்பவத்தின் பின்புலத்தில் துப்பு துலக்கும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை
மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை
மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை , மட்டக்களப்பில் புண்ணை சோலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பணம் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் . Several lakhs stolen in house break-in in Batticaloa ( இலங்கை செய்திகள் )
இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பணம் More than two lakhs of money இன்றைய
வீட்டில் இருந்த இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பணத்தையும் , 32 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் .
வீட்டினுடைய சமையலறை வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கு அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த 32 தங்க நகை மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் என்பனவற்றை அலுமாறியில் இருந்து திருடி சென்றுள்ளனர் .
இந்த நூதன திருட்டு மேற்கொண்டதை அடுத்து தற்பொழுது பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடான் வீட்டில் இடம்பெற்ற கொள்ளை
சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவர்களை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கையில் [போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
வீடு புகுந்து நகைகளை திருடி செல்லும் வரைக்கும் வீட்டின் உரிமையாளர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருட்டை இவர்கள் எவ்வாறு மேற்கொண்டார்கள் How did they carry out this theft?
இந்த திருட்டை இவர்கள் எவ்வாறு மேற்கொண்டார்கள் என்கின்ற விடயம் தொடர்பாக தற்பொழுது கொள்ளை சம்பவங்களை மேப்பம் பிடிக்கும் குற்றவியல் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீட்டுக்குள் நுழைந்து திருட்டை மேற்கொண்ட திருடர்கள் சிக்குவார்களா அல்லது இந்த கொள்ளையர்களை இலங்கை காவல்துறையினர் தப்பிக்கப்படுவார்களா பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேற்படி திருட்டு சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
நீரில் மூழ்கி சிறுவன் மரணம்
நீரில் மூழ்கி சிறுவன் மரணம்
நீரில் மூழ்கி சிறுவன் மரணம் , ஹால வெல பகுதியில் நீர்த்தோக்கத்தில் நீராடிச் சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கிபலியாகியுள்ளார் .Boy dies after drowning ( இன்றைய இலங்கை செய்திகள் )
மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .It has caused shock among the people.
பரிதாபகரமாக பலியாகி உள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஹலவெல பகுதியை சேர்ந்த சிறுவனே சம்பவ இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
இவ்விதம் நீரில் மூழ்கிய சிறுவனை உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பொழுதும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
இலங்கையில் நீர் எரிகளில் Water fires in Sri Lanka
இலங்கையில் நீர் எரிகளில் இவ்வாறு நீராட செல்கின்ற மக்களில் வருடம் தோறும் 1800க்கு மேற்பட்டவர்கள் பலியாகி வருவதான புதிய புள்ளி விவரங்கள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
அவ்வாறு இருந்தும் இந்த விபத்துக்கள் நடப்பது தெரிந்தும் நீர் நிலைகளில் மக்கள் இறங்கி நீராடிச் செல்வது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் தெளிவின்மையும் இல்லாத காரணத்தினாலேயே இந்த இறப்புகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இல்லாத நீரேரிகளில் பாதுகாக்கப்பட்ட முறையில் நீராடச் செல்வதால் இந்த மரணங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை பேருந்து நிலையம் புனரமைப்பு
புறக்கோட்டை பேருந்து நிலையம் புனரமைப்பு
புறக்கோட்டை பேருந்து நிலையம் புனரமைப்பு புறக்கோட்டை பேருந்து நிலையம் உள்ள அமைக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அனுரா குமாரா திசநாயக்க அவர்கள் அறிவித்துள்ளார் . Reconstruction of the Purakottai Bus Stand ( இன்றைய இலங்கை செய்திகள் )
பேருந்து நிலையம் 60 ஆண்டுகளில் பின்னர் புனரமைப்பு Bus stand renovated after 60 years
1964 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் 60 ஆண்டுகளில் பின்னர் முதன்முறையாக பெரிய அளவில் திருத்தத்துக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு 424 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து புறக்கோட்டை பேருந்து நிலையம் புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டு மக்களை கவர்ந்த வகையில் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உலக நாடுகளிடம் நிதிகளை வேண்டி Requesting funds from the world’s nations
உலக நாடுகளிடம் நிதிகளை வேண்டி அபிவிருத்தி என்கின்ற பெயரில் இவ்வாறு பேரூந்து நிலையங்கள் தொடரூந்து நிலையங்களை வீதிகளை புணர் அமைத்து வருகிறது .
கடனை வேண்டி கடலில் தத்தளிக்கும் இலங்கை தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்டு ,இப்பொழுது இவ்வாறு செயல்பட்டு வருவது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
3பொலிஸாருக்கு 7வருட கடூழிய சிறை
3பொலிஸாருக்கு 7வருட கடூழிய சிறை
3பொலிஸாருக்கு 7வருட கடூழிய சிறை ,பொலன்னறுவையில் ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் ஒருவரை 2004 ம் ஆண்டு தாக்கியதில் அவர்
உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பொலிஸாருக்கு பொன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி 7 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வெள்ளிக்கிழமை (12) தீர்ப்பளித்தார். .
பொலன்னறுவை மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ்
பொலன்னறுவை மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் கடந்த 2004ம் ஆண்டு பொலிஸ் பரிசோதகர் தலைமையில் 4 பொலிஸார் ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோத மதுபானம் தேடி சென்று சோதனை நடத்திய நிலையில் அந்த
ஹோட்டலின் முகாமையாளருக்கும் பொலிஸாருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து முகாமையாளர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த 4 பொலிஸாரையும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர்
நீதிமன்ற பிணையில் வெளிவந்ததுடன் அவர்கள், பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணை பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில்
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்த நிலையில் பொலிஸ் பரிசோதகர் வசந்த, நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஏனைய 3 பொலிஸாருக்கு 2025 ம் ஆண்டு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பணியில் இணைந்து கொண்டதுடன் அவர்களில் ஒருவரான
பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெகத் பிரியந்த மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கும் ஏனைய இருவரும் வேறு மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டனர்
இவ்வாறான நிலையில் வெள்ளிக்கிழமை (12) மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது 3 பொலிசாரும் ஆஜராகிய நிலையில் நீதிபதி 3 பேரும் குற்றவாளிகள் என சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மூலம்
கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து 3 பேரையும் சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்று பொலன்னறுவை சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.
பழையமுறையின் கீழ் மாகாண சபைத்தேர்தல்
பழையமுறையின் கீழ் மாகாண சபைத்தேர்தல்
பழையமுறையின் கீழ் மாகாண சபைத்தேர்தல் ,எல்லை நிர்ணய செயல்முறையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட முட்டுக்கட்டையைச் சமாளிக்க, பழைய முறையின் கீழ் மாகாண சபைத்
தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலனை
தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறியமுடிகின்றது.
புதிய எல்லை நிர்ணய செயல்முறை சிக்கலானது நீண்ட காலமாக இருப்பதால், அடுத்த தேர்தலுக்கு 1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்
சட்டத்திற்கு மாற்றுவதற்கான திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“பழைய முறையின் கீழ் கடைசி முறையாக அதை நடத்துவது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம், இது எல்லை நிர்ணய செயல்முறையை முடிக்க நேரம்
கொடுக்கும், அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு மாகாண சபைச் சட்டத்தின் கீழ் தேர்தல்களை நடத்த முடியும்,” என்று அந்த தகவல் தெரிவித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தலை மேலும் தாமதமின்றி நடத்த அரசாங்கத்தின் மீது அழுத்தம்
மாகாண சபைத் தேர்தலை மேலும் தாமதமின்றி நடத்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. அதிகாரப் பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக
மாற்றுவதற்காக முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்தியாவின் முக்கிய குழு வலியுறுத்துவதால், அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது
இந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்தில், அதன் பின்னணியில் உள்ள முக்கியக் குழு, அரசியல் அதிகாரப் பகிர்வு குறித்த தனது உறுதிமொழிகளை
நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது, இது நல்லிணக்கத்திற்கும் அதன் மக்கள்தொகையின் அனைத்து உறுப்பினர்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கும் ஒருங்கிணைந்ததாகக் கூறியது.
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதன் மூலம் உள்ளூர் நிர்வாகத்தை மதிக்கவும், அரசியலமைப்பின் பதின்மூன்றாவது
திருத்தத்தின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் உட்பட அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயல்படுவதை உறுதி செய்யவும் அரசாங்கத்தை அது கோரியது.
இந்த வாரம் நடந்த UNHRC அமர்வில், இந்தியாவின் பிரதிநிதி, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்
“இலங்கையின் ஒட்டுமொத்த ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்குள் சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் அமைதிக்கான தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை ஆதரிப்பதே இந்தியாவின்
அணுகுமுறையாக எப்போதும் இருந்து வருகிறது. இது சம்பந்தமாக, இலங்கை அரசியலமைப்பை முழுமையாகவும் திறம்படவும் செயல்படுத்தவும், மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்தவும், அதிகாரங்களை அர்த்தமுள்ள
முறையில் பகிர்ந்தளிக்கவும் இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது,” என்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் அனுபமா சிங் கூறினார்.
1988 மாகாண சபை சட்டத்தின் கீழ், விகிதாசார பிரதிநிதித்துவ (PR) முறையின் கீழ் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் 2017 இல்
திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டம் PR மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் (முதல்-பின்-பதிவு) முறைகளுக்கு இடையில் கலவையை வழங்கும் பல உறுப்பினர் விகிதாசார முறையை அறிமுகப்படுத்தியது.
இருப்பினும், 2018 இல் செய்யப்பட்ட எல்லை நிர்ணய ஆணைய அறிக்கையின் மீதான வேறுபாடுகள், கடைசியாக 2014 இல் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதை தாமதப்படுத்தியுள்ளன.
உரிமங்கள் இல்லாத 2வாகனங்கள் சிக்கின
உரிமங்கள் இல்லாத 2வாகனங்கள் சிக்கின
உரிமங்கள் இல்லாத 2வாகனங்கள் சிக்கின ,உரிமங்கள் இல்லாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் வாகனங்களுடன் இரண்டு
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம்

சந்தேக நபர்களை கைது செய்வதில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் வெற்றி பெற்றுள்ளது.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு, மெனிக்ஹின்ன காவல் பிரிவு மற்றும் வத்தேகம காவல் பிரிவில் 13.09.2025 அன்று காலை இரண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி
உரிமங்கள் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜீப்களுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 38 மற்றும் 58 வயதுடைய மெனிக்ஹின்ன மற்றும் வத்தேகம பகுதிகளில் வசிப்பவர்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 13.09.2025 அன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15.09.2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கொழும்பில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
காதலியை கொல்லவந்த காதலன் திருந்தினார்
காதலியை கொல்லவந்த காதலன் திருந்தினார்
காதலியை கொல்லவந்த காதலன் திருந்தினார் ,தனது பிரிந்த காதலியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சென்ற காதலன், அவரது முகத்தை பார்த்து .
வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு
பரிதாபப்பட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்ற சம்பவமொன்று கோவிந்தபுரம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம், கோவிந்துபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தம ரிதிகஹவத்தே பகுதியில், கடந்த 11 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது.
புத்தம ரிதிகஹவத்தயைச் சேர்ந்த 24 வயது பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனுடன் உறவில் இருந்ததாகவும்,
இருவரும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து விட்டதாகவும் கோவிந்தபுரம் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மொனராகலை நகரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலை
அந்த பெண், தற்போது மொனராகலை நகரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். அவர் வேறொரு இளைஞனுடன் உறவில்
இருப்பதாக கேள்விப்பட்ட அவரது முன்னாள் காதலன், அப்பெண்ணின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டார்.
அந்த பெண், வீதியைக் கடந்து ஆடைத் தொழிற்சாலையில் பேருந்தை பிடிக்க தனது வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்த போது, அவளை சுட முயன்றார்.
அவரது முகத்தை பார்த்து பரிதாபப்பட்டு, பின்னர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.
கோவிந்தபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம். கருணா சாந்த, அவரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்
அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்
அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம் ,கடவத்தமீரி கமா அதிவக நெடுஞ்சாலைகள் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரா குமர திசைநாயக்க கட்டுமான பணிகள் ஆரம்பித்து வைக்க உள்ளார்.
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி
மேலும் திட்டத்தை தொடங்க சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வழங்கிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டவர் கடன் பெறப்பட்டுள்ளது.
31 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த அதி நெடுந்தாலையின் பணிகள் 2021 ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் நடவடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் கடவத்தை இடமறு வழி மாற்றுக்கருவத்திலிருந்து அதிவாக நெடுஞ்சாலைகள் முதல் 500 மீட்டர் பணிகளும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளது.
வீதியை அமைக்கும் இலங்கை
சீனாவிடம் கடனை வேண்டி வீதியை அமைக்கும் இலங்கை அதை எவ்வாறு மீள செலுத்த போகிறது.
46 பில்லியன் டாலர் கடன் இருக்கின்ற பொழுது மீளவும் கடனை வேண்டி குவிக்கின்றது ஆளும் அரசு குறிப்பிடத்தக்கது
மஹிந்தாவுக்கு வீடுகளை வழங்க முன் வந்துள்ள நண்பர்கள்
மஹிந்தாவுக்கு வீடுகளை வழங்க முன் வந்துள்ள நண்பர்கள்
மஹிந்தாவுக்கு வீடுகளை வழங்க முன் வந்துள்ள நண்பர்கள் .இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச வீட்டிலிருந்து வெளியேறிய
கொழும்பின் சுற்றுப்புறங்களில்
பின்னர் தற்பொழுது அவருக்கு கொழும்பின் சுற்றுப்புறங்களில் வழங்குவதற்கு அவரது நண்பர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சொகுசு வீட்டில் வசித்து சொகுசாக வாழ்ந்த ராஜபக்ச அதேபோன்று சொகுசு வாழ்க்கையை வாழ்வதற்கு அவரது நண்பர்கள் இந்த வீடுகளை வழங்க முன் வந்திருக்கிறதா .
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து
இதனால் ஐயா குஷியில் .உள்ளார் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு
குறைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளும் அரசினால் மூல பெறப்பட்டது .
அதனை அடுத்து மைத்திரி மற்றும் மஹிந்த ராஜபக்ஷாகத் சொந்த ஊரிலிருந்து அதனை அடுத்து தற்போது இந்த சலுகை நடவடிக்கையில் அவர்கள் நண்பர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது







































