தயார் நாட்டை கட்டியெழுப்ப அனுரா
Posted in இலங்கை செய்திகள்

தயார் நாட்டை கட்டியெழுப்ப அனுரா

நாட்டை கட்டியெழுப்பத் தயார் அனுரா

நாட்டை கட்டியெழுப்பத் தயார் அனுரா ,நாட்டின் பொருளாதாரத்தை விஸ்தரிப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி மஹியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “பொருளாதாரம் வரம்பில் சிக்கியுள்ளது.

ஏன் இவர்களுக்கு மட்டும் லஞ்சம் வாங்கும் அளவிற்கும் மட்டுமே பொருளாதாரம்? நாம் இதை விட பொருளாதாரத்தை பெரிதாக்குவோம்.

தனக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து துறைகளிலும் செயல்படும் ஒரு சிறந்த சமூகம், ஒரு சிறந்த கல்வி மாற்றம்.

அதுதான் நாடு… அப்படி ஒரு நாடு வேண்டாமா? அதைத்தான் நாங்கள் வழிநடத்துகிறோம்.

ரணில் விக்கிரமசிங்க எப்போதும் கேலி செய்கிறார்.

யோசியுங்கள்… 4,5,6 தபால் ஓட்டு. மூன்றாம் திகதி கூறுகின்றனர் சம்பளம் உயர்த்தப்படும் என்று.

இது கேலிக்கூத்து இல்லையா? யபஹுவே சென்று செப்டம்பரில் வெற்றி பெற்ற பின் உரம் இலவசமாக வழங்குவோம் என்கின்றனர். இப்போது சிறுபோகமும் முடிந்துள்ள நேரத்தில்.

நாங்கள் நாட்டை பொறுப்பேற்று கட்டியெழுப்ப தயார்” என்றார்.

மகனை குத்திக் கொலை செய்த தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மகனை குத்திக் கொலை செய்த தந்தை

மகனை குத்திக் கொலை செய்த தந்தை

மகனை குத்திக் கொலை செய்த தந்தை ,கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொருபன பிரதேசத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (11) காலை குடும்ப தகராறு முற்றிய நிலையில் கணவன் தனது மனைவி மற்றும் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பத்தில் ரத்மலானை பொருபன பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரின் மகனே​ உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல்

நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல்

நடந்த துரோகம் அர்ச்சுனா குமுறல் வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதனுக்கு நடந்த துரோக சம்பவம் தொடர்பாக தனது முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அந்த பதிவில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் தனக்கு பிணை வழங்கியது கிசோர் எனப்படும் அரசியல்வாதி தனது பிணை வழங்குதலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து கருத்து தெரிவித்ததாக தெறிவித்துள்ளார் .

தனக்கு ஆதரவாக பிணை வழங்கிய கிசோர் திடீரென எழுந்து தான் அதில் இருந்து விலகுவதாக நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளாராம் .


இவ்வாறு பிணை வழங்குதலில் இருந்து விலகுவதால் , அர்ச்சுனா இராமநாதனை சிறைக்கு உள்ளே அடைத்து விடலாம் என்ற நிலையில் அவர்கள் காணப்பட்டதாகவும் ,அவ்விதமான நகர்வு நீதிபதியின் கருணையால் அவர் தப்பியுள்ளார் எனப்படுகிறது .

26 ஆம் திகதி புதிய மூவர் பிணை வழங்குவதன் ஊடாக அதில் இருந்து அர்ச்சுனா வெளியில் வந்து விடுவார் எனப்படுகிறது .

கூட இருந்தே துரோகம் செய்யும் கிசோர் போன்றவர்கள் இன துரோகிகள் என்ற விடயத்தை அர்ச்சுனா இராமநாதன் கண்கலங்கிய நிலையில் தெரிவித்துள்ளார் .

யாராவது மக்கள் விரும்பினால் எனக்கு பிணை வழங்கு மாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .

தயவு செய்து அர்ச்சுனாவை நேசிக்கும் மக்கள் யாராவது இருந்தால் அவருக்கு பிணை வழங்க உதவுமாறு வேண்டி கொள்கிறோம் .


தயவு செய்து யாராவது தொடர்பு கொள்ளுங்கள்,மேற்படி விடயத்தை அர்ச்சுனா இரதமநாதனுக்கு தெரிவிப்போம் .

கலங்காது பயணியுங்கள் அர்ச்சுனா கடவுள் உங்களோடு துணை நிற்கிறார்.

பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் ரணிலுக்கு - வடிவேல் சுரேஷ்
Posted in இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் ரணிலுக்கு – வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் ரணிலுக்கு – வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் ரணிலுக்கு – வடிவேல் சுரேஷ் ,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெருந்தோட்ட மக்களின் 99 வீத வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெறுவார் எனவும் பெருந்தோட்ட சமூகத்தில் வேறு எந்த தீர்மானமும் இல்லை எனவும் தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குரிமையைப் பெற்றுக்கொடுத்தது முன்னாள் ஜனாதிபதி ஜெ. ஆர். ஜயவர்தன மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்று நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர், அதற்காக 10

மாவட்டங்களில் பரந்து வாழும் பெருந்தோட்ட மக்கள் ஒரே குழுவாக நன்றி தெரிவிப்பதற்கு ஒன்றிணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டிற்கு இனவாதமற்ற தலைவர் ஒருவரே தேவை எனத் தெரிவித்த அவர், உலகமே அங்கீகரித்த முதிர்ந்த, புத்திசாலி, தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரே தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இனவாதியல்ல என்றும் வலியுறுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்,

‘’இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் நடத்தும் பொதுக்கூட்டங்களை விட, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளும் பேரணிகளுக்கு ஒரு சிறப்பு இருக்கின்றது. ஜனாதிபதி

ரணில் விக்ரமசிங்கவின் பொதுக்கூட்டங்களுக்கு மாத்திரமே இந்நாட்டின் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பாகுபாடு இன்றி மக்கள் ஒன்று கூடுவதே இதற்குக் காரணமாகும்.

இந்த நாட்டைப் பெரும் பொருளாதாரப் படுகுழியில் இருந்து மீட்டெடுத்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த நாட்டில் 40% மக்கள் இந்த தேர்தலில் மௌனமாகவே இருக்கின்றனர்.

மலையகம், வடக்கு கிழக்கு அல்லது தெற்கு என அனைத்து மாகாணத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியினரே மௌனமாக உள்ளனர். அவர்கள் மௌனமாக இருந்தாலும் செப்டம்பர் 21 ஆம் திகதி தங்கள் கடமையையும் பொறுப்பையும் சரியாக நிறைவேற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

பெருந்தோட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. ஆனாலும் அவர்கள் இந்த நாட்டை நேசிக்கும் மக்கள். அவர்கள் எப்போதும் ஆயுதம் ஏந்தியதில்லை. மேலும் அவர்கள் இனவாதிகளும் அல்ல. இதன்படி ஜனாதிபதி தேர்தலில் 99%

பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெறுவார். அது தொடர்பாக பெருந்தோட்டத்தில் வேறு முடிவு இல்லை. மேலும் இனவாதமற்ற தலைவர் ஒருவரே எமக்குத் தேவை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இனவாதம் இல்லை.

உலகின் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியால் என்ன நடக்கிறது என்பதை நாம் கடந்த காலத்தில் அனுபவித்திருக்கிறோம்.

வரிசையில் நின்றாலும் மருந்து கிடைக்காத காலமும் இருந்தது. தோட்டத்தில் இருந்து வைத்தியசாலைக்கு செல்ல முச்சக்கர வண்டி இன்றி கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்தனர்.

அவை நாம் அனுபவித்த விடயங்கள். அவ்வாறு நடக்கவில்லை என்று யாரும் கூற முடியாது. நாம் ஏன் மீண்டும் அந்த நிலைக்குச் செலல வேண்டும்?அரசியல் கட்சிகள், நிறம் முக்கியமில்லை.

பொருளாதார ரீதியில் நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வடக்கு, தெற்கு, மலையகம் என்று நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். அனுபவம் இல்லாத, உலகம் ஏற்காத தலைவரை தெரிவு செய்வதா? அல்லது முதிர்ந்த, புத்திசாலி, தொலைநோக்குப் பார்வை

கொண்டவர் என உலகமே அங்கீகரித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்வதா என்ற கேள்விக்கான பதில் உங்களிடமே உள்ளது.

ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் இருந்தே சர்வதேச சமூகத்துடன் உறவுகளைக் கட்டியெழுப்பிய தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அத்தகைய ஒரு

தலைவர் ஒருவர் உள்ளாரா என்பதை பார்க்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச ஆதரவு இல்லாமல் நம் நாடு மீள முடியாது.

குறுகிய காலத்தில் இந்த நாட்டை மீட்டெடுத்தோம் என்ற காரணத்துக்காக மாத்திரமன்றி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை முன்னேற்றும் திட்டத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் அமுல்படுத்த வேண்டுமானால் இந்த

ஜனாதிபதித் தேர்தலில் அவர் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும். கேஸ் சிலிண்டரை வெற்றிபெற உங்கள் வாக்கு அவசியம். இல்லை என்றால், மறுநாளில் இருந்து கேஸ் சிலிண்டர்களைத் தேடி வீதிக்கு செல்ல வேண்டி இருக்கும்.

தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியின் தலைவர் சுகத் ஹேவா பத்திரன,

‘’இந்த நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கும் கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு தலைவர் இல்லை. அதை இந்நாட்டு மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.

எந்த குப்பைகளை ஏற்றுக்கொண்டேனும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு இன்று சஜித் பிரேமதாச தள்ளப்பட்டுள்ளார்.

மறுபுறம் மக்கள் மத்தியில் அச்சத்தை பரப்பி இந்த நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற பாசிச அரசியல் இயக்கம் முயற்சிக்கிறது.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதன் மூலமே சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்பதுடன் வர்த்தக சமூகத்தின் நோக்கங்களை அடைய முடியும் என்பதைக் கூற வேண்டும்.

கடந்த வாரம் முழுவதும், நமது பங்குச் சந்தை வேகமாக சரிந்தது. ஆனால் இன்று பங்குச்சந்தை மீண்டு வருகிறது.

ஏனெனில், அரச ஊழியர்களின் தபால்மூல வாக்குகளில் பெரும்பான்மையான கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் என்பதை அனைத்து அறிக்கைகளும்

கணக்கெடுப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளன என்பதாலேயே இந்த முன்னேற்றம் எற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் மீண்டும் நம்பிக்கை உருவாகியுள்ளது.

இந்த நாடு இரத்தக் குளமாகி, பயங்கரமானதாக மாறிவிடுமோ என்ற சந்தேகத்தினால் எதிர்காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த சுற்றுலாப் பயணிகள் தமது பயணங்களை இரத்துச் செய்யத்

தூண்டப்பட்டுள்ளனர் என்பதை சுற்றுலாத் துறையுடன் தொடர்புடையவர் என்ற வகையில் நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

நம் நாட்டின் இரண்டு முக்கிய வருமான ஆதாரங்கள் சுற்றுலாத்துறை மற்றும் அந்நியச் செலாவணி ஆகும். இன்று அதற்கும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து சுமார் மூன்று இலட்சம் இலங்கையர்கள் ஜே.வி.பிக்கு வாக்களிக்க வருவார்கள் என்ற பொய்யான அலை

உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போலி அலை காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை இரத்து செய்துள்ளனர்.

இந்த போலி அலை காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர்.’’ என்று தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம்

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம்

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம் ,முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் இணைந்து ​நேற்று (10) மதியம் மன்னாரில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் குறித்த முடிவை ஆதரித்து தொடர்ச்சியாக பிரசார பணிகளை மேற்கொள்வதற்காக விரைவான செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான முன்னாயத்த கூட்டம் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் முக்கியஸ்தர் பல்வேறு விடயங்களை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக சிலர் எமது கட்சியில் இருந்து சில சலுகைகளுக்காக அண்மைய நாட்களாக கட்சி தாவல்களில் ஈடுபடுவதாகவும் தோற்பார் என்று தெரிந்து ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாகவும் இது கட்சியையோ அல்லது கட்சியின் வாக்குகளையோ எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்தனர்.

இலங்கை முழுவதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பதாகவும் தலைமையின் முடிவின் அடிப்படையில் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் எனவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

அதே நேரம் முன்பை விட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்க போவதாகவும், தலைமையின் கரங்களை பலப்படுத்துவதற்கான தீர்மானமும் குறித்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகிலன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் நேற்று (10) பிற்பகல் 3 மணிக்கு யாழ். கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜிலானி பிரேமதாச, உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தென்மராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன

ஜனாதிபதியின் கேள்விக்கு அனுர ஏன் பதில் கூறவில்லை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் கேள்விக்கு அனுர ஏன் பதில் கூறவில்லை

ஜனாதிபதியின் கேள்விக்கு அனுர ஏன் பதில் கூறவில்லை

ஜனாதிபதியின் கேள்விக்கு அனுர ஏன் பதில் கூறவில்லை ,திசைகாட்டியின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா அல்லது இறக்குமதிப் பொருளாதாரமா என்று கேட்டதற்குப் பதிலளிக்காத அநுர திஸாநாயக்க தன்னை விவாதத்திற்கு அழைக்கிறார்.

தன்னுடன் விவாதத்திற்கு வர முன்னர் அநுர, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோர் தனியாக விவாதம் நடத்தி நாட்டுக்குத் தமது சரியான பொருளாதாரக் கொள்கையைச் கூற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தான் முன்னர் குறிப்பிட்டதுபோல், அநுரவும், தானும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பங்கேற்கும் காணொளி

உரையாடலுக்கு நேரத்தை ஒதுக்க முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி, யாருக்கும் பேச இடமளிக்காமல் பேசக்கூடிய சஜித்தையும் இதற்கு அழைக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினார்.

குருநாகல் அஸ்லியா கோல்டன் கிரசென்டா ஹோட்டலில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற குருநாகல் மாவட்ட அறிஞர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடான கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், 8,900 பில்லியன் ரூபாய் செலவும், 4,900 பில்லியன் ரூபாய் வருமானமும், 4,000 பில்லியன் ரூபாய் பற்றாக்குறையும் கொண்ட நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் கொள்கைப் பிரகடனத்தை அனுரகுமார

திஸாநாயக்க ஏன் தனது விஞ்ஞாபனத்தில் வெளியிட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, மேடைகளில் பொய்யாகக் கூச்சல் எழுப்பாமல் தமது சரியான பொருளாதாரக் கொள்கையை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“குருநாகல் மாவட்டத்துடன் எனக்கு நீண்டகாலப் பிணைப்பு இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு கம்பஹாவில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தியை குருநாகல் வரை கொண்டு வருகின்றோம். அந்தப் விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கு என்ன நடந்தது என இங்கு கேள்வி எழுப்பப்பட்டது. சஜித்துக்கும் அநுரவுக்கும் என்ன நடந்தது என்று நான் கேட்டிருக்க வேண்டும். உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு, உரம் இன்றி மக்கள் தவிக்கும்போது சஜித்துக்கும் அநுரவுக்கும் மக்களுக்காக வருத்தமும்

வேதனையும் ஏற்படவில்லையா? மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லையா? அவர்கள் அப்படிச் செய்திருந்தால் இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். அவர்கள் தமது பொறுப்புக்களை சரியாக

நிறைவேற்றாத காரணத்தினால்தான், ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நாட்டின் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது.

எனக்குப் பல அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. அந்த ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தேன்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும்போது சபாநாயகரை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்து தேர்தலுக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிகார இடைவெளியை

உருவாக்கியிருந்தால் இன்று வங்கதேசம் இருக்கும் நிலையில் நாமும் இருக்க வேண்டியிருக்கும்.

நாட்டின் பொறுப்பை ஏற்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு வந்தோம்.

அடுத்த ஆண்டு, மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கான முயற்சிகளை எடுப்போம். நாடு முழுவதும் முதலீட்டு வலயங்களை உருவாக்குவதோடு,

விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்திருக்கிறோம். இளையோருக்கான தொழில் வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களின்படி நாம் செயல்பட்டால், கடன் பெறுவதற்கான தேவைகள் குறைவாகவே இருக்கும்.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின்படி எதிர்காலத்தில் இந்நாட்டின் செலவு 6,800 பில்லியன் ரூபாயாகவும், வருமானம் 5,100 பில்லியன் ரூபாயாகவும் காணப்படுவதோடு, இடைவெளி 1700 பில்லியன் ரூபாயாகக்

காணப்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாகும். எனவே, இந்த இடைவெளியை நிரப்பும் இயலுமையும் எமக்கு உள்ளது.

ஆனால் ஜேவிபி தருவதாக கூறும் நிவாரணங்களை வழங்கினால் செலவு 8,900 கோடி ரூபாயாகவும், வருமானம் 4,900 பில்லியன் ரூபாயாகவும் காணப்படும். அத்தோடு வரிக் குறைப்பு தொடர்பிலும் பேசுகின்றனர்.

அதன்படி வரவு செலவுத் திட்ட இடைவெளி 4000 பில்லியன் ரூபாயாக அமையும். பின்னர் பட்ஜெட் இடைவெளி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.9 சதவீதமாக காணப்படும்.

இவ்வாறான பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறி சந்தையில் பணம் வாங்கினால், வட்டி 25% ஆக இருக்கும். இப்படியான மாற்றத்தையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்?

அதனால் டொலரின் பெறுமதி 500 ரூபாயாக உயர்வடையும். சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகளை மீறிவிட்டால் அவர்களின் ஆதரவு இரத்தாகும். அதனால் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி நகரும்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அண்மையில் அனுரகுமார திஸாநாயக்கவும் களனி பிரதேசத்தில் ஏற்றுமதி பொருளாதாரத்தையும் நடைமுறைப்படுத்துவதாக கூறியிருந்தார்.

ஆனால் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதாகவும் அவரின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இன்றி எவ்வாறு ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்குச் செல்ல முடியும்? சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களினாலேயே பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப சுதந்திரம் கிடைக்கும்.

நாம் பொருளாதாரப் பரிமாற்ற சட்டத்தைக் கொண்டுவந்தபோது, சுனில் ஹந்துன்நெத்தியும், ஹர்ஷன சூரியப்பெருமவும் ஏற்றுமதி பொருளாதாரம் இந்த நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிரானது என வழக்குத் தொடுத்தனர்.

ஆனமடுவவில் நடைபெற்ற கூட்டத்தில் அநுர என்னை விவாதத்திற்கு அழைத்திருப்பதாக அறிந்தேன்.

அவர்கள் ஏற்றுமதி பொருளாதாரத்தை முன்னெடுக்கப் போகிறார்களா அல்லது இறக்குமதியிலேயே தங்கியிருப்பார்களா என்பதை முதலில் சொல்ல வேண்டும்.

எனவே, முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருக்கு இடையில் விவாதம்

நடத்தி அவர்களின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதிப் பொருளாதாரமா, இறக்குமதிப் பொருளாதாரமா என்பதை முதலில் நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.

நான் முன்பே அழைப்பு விடுத்ததுபோல் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருடன் நானும், அநுரகுமார திசாநாயக்கவும் பங்கேற்கும் பகிரங்க சந்திப்பொன்றை நடத்துவோம். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

தேவைப்பட்டால் சஜித் பிரேமதாசவையும் அழைக்கலாம். சஜித் பேச ஆரம்பித்தால் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளருக்கு பேச நேரம் எஞ்சாது. இருப்பினும் சஜித்தையும் அழைப்போம்.

எனவே, அவரின் பொருளாதாரக் கொள்கை ஏற்றுமதி பொருளாதாரமா இறக்குமதி பொருளாதாரமா என்பதை அநுரகுமார திசாநாயக்க எமக்கு முதலில் கூற வேண்டும். பொருளாதாரத்தை நாசமாக்கி நாட்டை வங்குரோத்து அடையச் செய்யக்கூடிய வரவு செலவு திட்ட யோசனைகளை

முன்மொழிந்திருப்பது ஏன் என்று அவர்களிடம் கேட்கிறேன். அதனால் மேடைகளில் கோசமிடுவதை நிறுத்திவிட்டு சரியான பொருளாதார திட்டத்தைத் முன்மொழியுமாறு அறிவுறுத்துகிறேன்.”


ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி வழங்கிய பதில்களும் கீழே தரப்படுகின்றன.

கேள்வி:
இது நாம் சிறுபராயத்தில் பார்த்த இலங்கை அல்ல. அக்காலத்தில் எழுத்தறிவு விகிதம் ஐம்பது சதவீதம் வரைதான் இருந்தது. இன்று 30 வயது வரையிலான கல்வியறிவு 100% என்றும் முழுமையான எழுத்தறிவு 92% என்றும் வானொலி தகவல் ஒன்றில் அறிந்தேன்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட வங்குரோத்து நிலைக்கு அபிவிருத்தி நடவடிக்கையற்ற நிதி முகாமைத்துவம், நிதிக் கட்டுப்பாடு மற்றும் நிதி ஒழுக்கமின்மை ஆகிய நெருக்கடிகளே காரணமாக அமைந்தன. ஆனால் அனைவர் மீதும் ஏன் குற்றம் சாட்டப்படுகிறது?

பதில்:
நாட்டின் ஏனைய முன்னேற்றங்களை மறந்து விடுவோம். தம்புத்தேகமவில் ஒரு சிறிய பாடசாலை இருந்தது. மத்திய வித்தியாலயமாக மாற்ற கட்டங்கள் வழங்கப்பட்டன.

அந்தப் பாடசாலையில் அநுர திஸாநாயக்க என்ற மாணவர் ஒருவர் இருந்தார். பாடசாலைக் கல்வியின் பின்னர் களனிப் பல்கலைக்கழகத்தில் பிரவேசித்தார். அதுவும் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் கட்டப்பட்ட பல்கலைக்கழகம்.

அங்கிருந்து வெளியேறி நாட்டின் தலைநகரான ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் கட்டப்பட்ட பாராளுமன்றத்துக்கு வந்தார். 76 வருடங்களாக இந்த நாட்டில் எதுவும் நடக்கவில்லை என்று அவர் பாராளுமன்றத்தில் கூறுகிறார்.

மேலும், தெற்காசியாவிலேயே நமது நாடு சிறந்த மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

அப்படியானால், 76 ஆண்டுகளில் ஏதோ நடந்துள்ளது. 1947 இல், இந்த நாட்டில் சுமார் 2000 பாடசாலைகள் இருந்தன.

இப்போது நாடு முழுவதும் பாடசாலைகள் உள்ளன. இன்று நாடு முழுவதும் மின்சாரம் உள்ளது. அப்போது வீடுகளில் மின்சாரம் இருக்கவில்லை. குருநாகலுக்கு சிறிய ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கட்டது.

அன்று ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டுமே இருந்தது. இன்று 17 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இன்று எத்தனை கைத்தொழில் வலயங்கள் உள்ளன? அப்படியானால், எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியுமா? ஆனால் மாற்றம் தேவை என்று கூறி தமக்குத் தேவையானவர்களை அதிகாரத்திற்குக் கொண்டுவர முயல்கிறார்கள்.

இது தான் இவர்கள் எதிர்பார்க்கும் மாற்றமாகும். இருக்கும் அனைவரையும் அனுப்பிவிட்டு இவர்கள் யாரை நியமிக்கப் போகிறார்கள்? பனியனில் ஓட்டைகள் உள்ளவரையா? இவர்கள் மிகப் பெரிய பொய்யை பரப்புகிறார்கள்

. கடன் வாங்கிய பணத்தை வருமானம் ஈட்ட முடியாத விடயங்களுக்கு செலவழித்ததால் தான் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதில் குறிப்பிட்ட தொகையை வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியிருந்தால் பிரச்சினை எழுந்திருக்காது.


கடைசியில் கடனை அடைக்கும் ஆற்றல் எங்களிடம் இல்லை. சமூக மேம்பாட்டுக்காக நாங்கள் கடன் பெற்றாலும், மீதமுள்ள கடன்கள் நிர்வாகத்திற்கும், உள்கட்டமைப்புக்கும் பயன்படுத்தப்பட்டன.

அதில் எங்களுக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. அதுதான் பிரச்சினையாக மாறியது.

கேள்வி:
நீங்கள் பிரதமராக இருந்தபோது அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான பலருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதும் மாகாண மட்டத்தில் அது நடைமுறைப்படுத்தப்படாத சந்தர்ப்பங்களும் உள்ளது.

இம்முறை ஜனாதிபதியான பின்னர் அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

பதில்:
அரசியல் பழிவாங்கல் தொடர்பான பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். நான் பிரதமராக இருந்த காலத்தில் சிலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

மேலும், கடந்த காலத்தில் வீடுகள் எரிக்கப்பட்டவர்களின் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும்.

ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் உள்ளன.

அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்துத் தரப்பு அரசியல் தீர்வையும் வழங்க எதிர்பார்க்கிறோம்.

கேள்வி:
கிராமங்களில் உள்ள சமூகத் தலைவர்களை அரச நிர்வாகத்தில் இணைத்துக் கொள்ளும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா?

பதில்:
ஜனசபையை நிறுவும் பணியை மேற்கொள்ளும் பொறுப்பு கரு ஜெயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கான செயலகமும் சட்டமும் தயாராகி வருகின்றன. எதிர்காலத்தில் அவை சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

திசைகாட்டி காந்தம் மூலம்தான் திசையைக் கண்டறிகிறது. காந்தம் தவறாக இருந்தால், அது தவறான திசையை சுட்டிக்காட்டும். அதுதான் நடந்திருக்கிறது.

கேள்வி:
ஜனாதிபதி அவர்களே, தற்போதைய கல்வி முறையில் ஏதோ சிக்கல் காணப்படுகிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை வெல்வதற்கான உங்கள் கவனத்தையும் நான் அறிய விரும்புகிறேன்?

பதில்:
கல்வி முறையில் பல சிக்கல்கள் உள்ளன. பாடசாலை சபை போன்றவற்றை நிறுவி நிர்வாகத் தரப்பின் ஊடாகத் தீர்வு காண கல்வி அமைச்சர் செயல்பட்டு வருகிறார். பாடவிதானங்களில் கவனம் செலுத்தி, 2040 ஆம் ஆண்டுக்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.

இதற்கு சுமார் 5-10 ஆண்டுகள் ஆகும். 2050 உங்கள் எதிர்காலம் என Gen Z சந்ததியினருக்கு சொல்கிறேன். அதற்கான வழியைத் தயார் செய்வதிலேயே எனது கவனம் உள்ளது.

நான் 2050 என்று சொன்னபோது ஏன் 2050 என்று ஐ.ம.ச.யினர் வினவுகின்றனர். திசைகாட்டியும் அதே கேள்வியைக் கேட்கிறது. இது அவர்களுக்குப் புரியவில்லை. எதிர்காலத்தில் எவ்வாறான உலகம் வரப்போகிறது என்று நாம் மட்டும்தான் சிந்திக்கிறோம்.

மேலும், குருநாகல் மாவட்டத்திற்கு நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறேன். அத்துடன், தென்னைச் செய்கை அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குருநாகல் ஒரு அதிர்ஷ்டமான மாவட்டம். அந்த செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

கேள்வி:
ஜனாதிபதி அவர்களே, ஜே.வி.பி இந்த நாட்டைப் பெரிதும் சேதப்படுத்திய கட்சி. ஆனால் திசைகாட்டி என்ற இந்த கட்சியின் திடீர் அலைக்கு என்ன காரணம்?

பதில்:
பாரம்பரிய எதிர்க்கட்சி சரியாக செயற்படாததால்தான் திசைகாட்டி முன்னிலைக்கு வந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் எதிர்க்கட்சியில் உள்ள மற்றொரு கட்சியை முன்னேற அனுமதிக்கக் கூடாது.

டட்லி சேனநாயக்க முதல் ஒவ்வொரு தலைவரும் அதைத்தான் செய்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் வேறு கட்சி தலைதூக்க இடமளித்தால் எதிர்க்கட்சியின் பணிகளைத் தொடர முடியாது.

அவர்களுக்கு வாக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியவில்லை. சிலர் அரசாங்கத்திற்கு எதிராக வாக்குகளைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் திசைகாட்டியை நோக்கிச் செல்கிறார்கள்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் மணிக்கணக்கில் உரை நிகழ்த்தி நேரத்தை வீணடித்து வருகிறார். அனுரவும் சஜித்தும் இரண்டாம் இடத்துக்காகப் போராடி வருகின்றனர்.

தபால் மூல வாக்களிப்பில் சஜித் பிரேமதாச 3 ஆவது இடத்திற்கு வீழ்ந்திருந்தார். சஜித்தால் தனது எதிர்க்கட்சித் தலைமையை பாதுகாக்க முடியாதிருக்கும்போது நாட்டை எப்படிப் பாதுகாக்க போகிறார்?

கேள்வி:
நமது நாட்டில் அணுசக்தி பயன்பாட்டுக்கான சாத்தியங்கள் உள்ளன. அதற்கான ஆயத்தங்கள் உள்ளனவா?

பதில்:
ஆம். இயற்கை வலுசக்தியை பயன்படுத்தும்போது அணுசக்தியும் தேவைப்படலாம். இது பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அணு உலை அமைந்துள்ளது. அவ்வாறான நிலைக்கு நாமும் செல்ல வேண்டியிருக்கும். 21ஆம் திகதி சிலிண்டருக்கு வாக்களித்தால் அந்த நிலைக்கு நகரலாம்.

கேள்வி:
குருநாகல், தம்பதெனிய, யாப்பஹுவ, படுவஸ்நுவர பிரதேசங்களை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய உத்தேசித்துள்ளீர்களா? மேலும், உலகிலேயே சிறந்த கிரபைட்டைக் கொண்ட குருநாகலில், அது சார்ந்த தொழில்துறையை மேம்படுத்தத் தீர்மானித்துள்ளீர்களா?

பதில்:
இலங்கையில் மிகப் பெரிய கிராபைட் சுரங்கம் கஹடகஹா பகுதியிலுள்ள சுரங்கமாகும். தற்போது கிராபைட் கையிருப்பு தொடர்பிலான பிரச்சினை எழுந்துள்ளது. நவீன அறிவியல் ஆய்வு அறிக்கை பெறப்பட உள்ளது.

ராகேதர பகுதியிலும் கிராபைட் சுரங்கம் ஒன்று உள்ளது. கஹடகஹா சுரங்க கிராபைட் உலகின் சிறந்த கிராபைட் வகைகளில் ஒன்றாகும். மேலும், நாடு முழுவதும் உள்ள கனிம வளங்களைக் கண்டறியும் திட்டத்தைத்

ஆரம்பிக்கவுள்ளோம். மேலும் குருநாகல், தம்பதெனிய, யாப்பஹுவ, படுவஸ்நுவர ஆகிய பிரதேசங்களை சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்வது குறித்தும் கவனம் செலுத்துகிறோம். கட்டுநாயக்க விமான

நிலையத்திற்கு அருகாமையில் உள்ளதால், இந்தப் பகுதியில் புதிய ஹோட்டல்களை அமைக்கும் திட்டமும் உள்ளது. குறிப்பாக யாப்பஹுவ உலகப் புகழ் பெற்றதையடுத்து அதன் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கேள்வி:
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 65% விவசாயத்தில் தாக்கம் செலுத்தும். மேலும் நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கான சாத்தியங்களும் உள்ளன. அது குறித்து கவனம் செலுத்தியிருக்கிறீர்களா?

பதில்:
நவீன விவசாயத்திற்கு மாறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும், வன்னி ஹத்பத்து பிரதேசத்தில் சூரிய சக்திக்கான திறன் காணப்படுகிறது. ஆனால் குருநாகல் மாவட்டத்தை டிஜிட்டல்

பொருளாதாரத்துடன் அபிவிருத்தி செய்வதே எமது நோக்கமாகவுள்ளது. குருநாகல் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் பின்னர் பாரிய டிஜிட்டல் பொருளாதார வலயமொன்று உருவாக்கப்படும்.

அதேவேளை கண்டியில் மற்றுமொரு டிஜிட்டல் பொருளாதார வலயம் உருவாக்கப்படும். இந்த இரண்டு வலயங்களும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகள்

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். மேலும், வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


மேலும் சீனாவுக்கு துரியான் ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் மாவத்தகமவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கு பொருத்தமான பகுதிகளை அடையாளம் காண வேண்டும்.

குருநாகல், குளியாபிட்டிய, ஹலவத்தை ஆகிய 3 நகரங்களையும் ஒன்றிணைத்து கல்வித்துறை மேம்படுத்த வேண்டும்.

கேள்வி:
இந்நாட்டின் நிலையான சம்பளம் பெறாத கஷ்டங்களை எதிர்கொள்ளும் மக்களுக்காக ஏதாவது வேலைத்திட்டம் உங்களிடம் உள்ளதா?

பதில்:
இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மாதச் சம்பளம் பெறுவதில்லை. விவசாயம், மீன்பிடித்தல், சுயதொழில் போன்ற சிறுதொழில்களை செய்பவர்களே உள்ளனர்.

இந்த முறைசாரா தொழில் துறைக்கென தனித் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தனியான நிதி மற்றும் ஓய்வூதியத் திட்டம் உள்ளது. அனைவரும் அதற்குள் இணைந்துகொள்ள விரும்பாவிட்டாலும் ஓரளவானவர்கள் இணைவர். மேலும், இலங்கையிலும் தனியார் முதலீட்டு ஓய்வூதிய நிதி திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும்.

அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெரும்பாலான மக்கள் இத்தகைய ஓய்வூதிய நிதியில் வாழ்கின்றனர். இப்போது இந்தியாவிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான அசங்க நவரத்ன, மஞ்சுலா திசாநாயக்க, குருநாகல் கல்வியல் மற்றும் வர்த்தகர்கள் கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளர் எம்.பீ.திசாநாயக்க,கலாநிதி சமிந்த மலலசேகர,

பொல்கஹாவெல, ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் தம்மி ரத்நாயக்க, குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர் நுவன் லியனகே உள்ளிட்டோரும் பிரதேச அரசியல் தலைவர்களும், தொழில் வல்லுனர்கள் உட்பட பெருமளவானர்களும் கலந்துகொண்டிருந்தன

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்
Posted in இலங்கை செய்திகள்

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்.ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி தபால் மூல வாக்களிப்பு இன்றும் (11) நாளையும் (12) இடம்பெறவுள்ளதாக என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம் என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் அடையாளப்படுத்தாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை அளிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான்

பசியோடு பார்த்தீபன் இருக்கிறான் அர்ச்சுனா உருக்கம்

அர்ச்சுனா உருக்கம் பசியோடு பார்த்தீபன் இருக்கிறான் என தனது முகநூல் பதிவில் தியாக தீபம் திலீபன் நினைவில் உருகி பேசியுள்ளார் .

தியாக தீபம் திலீபன் நினைவை பகிர்ந்து அவரது நிழல்படத்தை பதிவிட்டு ,அதிலே பார்த்தீபன் இன்னும் பசியோடு தான் இருக்கிறான் என குறிப்பிட்டுள்ளார் .

ஆழ நெஞ்சத்தில் அகிம்சாவாதியின் அன்பு அர்ச்சுனா மனதில் பட்டு தெறிப்பதை இந்த விடயம் எடுத்து காண்பித்துள்ளது .

இந்தியா இராணுவத்தின் பாசிச வெறிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ,வீர தளபதி திலீபன்நீரும் இன்றி உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை அவர் ஆகுதியாக்கி கொண்டார் .

வரலாறு வரலாற்று நாயகர்களை வாழ்த்திய படியே பயணிக்கிறது .வலிகளோடு தமிழர் நெஞ்சங்களுக்கு நடக்கிறது .

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு ,ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 74 ஆவது பிரிவின் கீழ் அது குற்றமாகும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை விளம்பரப்படுத்தும் அடையாளங்கள், புகைப்படங்களுடன் கூடிய ஸ்டிக்கர்கள், கொடிகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு அனைத்து பொலிஸ் அதிகார பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அவசர சோதனைகளை மேற்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,041 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 2,947 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக 25 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளமையினால், எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை தேவைக்கேற்றவாறு மூடுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு

இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு ,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (09) தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

குறித்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான அறிக்கை தொடர்பில் பிரித்தானியாவும் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையிலான குழுவும் இலங்கை யின் மனித உரிமைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெற்றிபெறுவோம் நாங்கள் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

வெற்றிபெறுவோம் நாங்கள் அனுரா

வெற்றிபெறுவோம் நாங்கள் அனுரா

வெற்றிபெறுவோம் நாங்கள் அனுரா,இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம் என ஜனாதிபதி வேட்பாளர் அனுரா திசாநாயக்க தெரிவித்துள்ளார் .

கடந்து வந்த தடை உடைத்து மக்கள் வாழ நல்ல நாட்டை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார் .

இனவாதியாக விளங்கி வரும் ஜேவிபி கட்சியின் தலைவராக விளங்கி வரும் அனுரா திசாநாயக்க பேரை மாற்றி பயணித்தாலும் இவர்களது கொள்கை சிங்க பேரினவாத இனவாதமாக காணப்படுகிறது.

அவ்வாறான கால பகுதியில் மக்கள் நலன் தொடர்பாக அனுரா திசாநாயக்க பேசி வருவது வேடிக்கையாக உள்ளது என மக்கள் மன்றம் பேசி கொள்கிறது .

காப்பாற்றுவோம் மக்களை நாமல்
Posted in இலங்கை செய்திகள்

காப்பாற்றுவோம் மக்களை நாமல்

மக்களை காப்பாற்றுவோம் நாமல் கூவல்

காப்பாற்றுவோம் மக்களை நாமல் ,மட்டக்களப்பு மூத்தோர் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் ராஜபக்ச மக்களை காப்பாற்றுவோம் என தெரிவித்துள்ளார் .

நாம் மக்களுக்காக வாழ்கின்றோம் அதலால் மக்களை நங்கள் காப்பாற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .

இலங்கை திரு நாடு இன்று இவ்விதமான பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைய காரணமாக அமைந்தது மகிந்தக்குடும்பத்தின் கொள்ளை காரணம் என்பதை மறந்து தேர்தலில் தாங்கள் வென்றுவிடுவோம் என்கின்ற நினைப்பில் இவ்வாறு வீர பேச்சை ஐயாநாமல் ராஜபக்ஸா பேசியுள்ள்ளார் .

சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு

சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு

சிசுவின் சடலம் ஓட்டோவில் இருந்து மீட்பு ,அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் தோட்டத்தில் கிளினிக்கல்ஸ் பிரிவில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து சிசுவொன்று சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

வீட்டின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கர வண்டியில் சென்று பார்த்த போது கறுப்பு பொலித்தீன் உரையில் போடப்பட்டு துணி ஒன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேற்படி சிசுவின் சடலத்தை அவ்விடத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றவர் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவல்களும் கண்டறியவில்லை.

சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக 28 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, நுவரெலியா மாவட்ட நீதவான் பார்வையிட்டு பின்னர் சிசுவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்ததோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி
Posted in இலங்கை செய்திகள்

துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி

துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி

துரத்திய மக்கள் தப்பி ஓடிய புலிகள் ரகுபதி ,சுவிசில் புலிகளின் அனைத்துலக கட்டமைப்பின் பொறுப்பாளராக விலகிய ரகுபதி ஆகியோரை மக்கள் ஓட ஓட துரத்திய மக்கள் .

மக்கள் பணத்தை கொள்ளையடித்து ஏப்பம் இட்டு வரும் புலிகளின் கட்டமைப்புக்களுக்கு எதிராக இப்பொழுது மக்கள் உலகளாவிய ரீதியில் கொந்தளித்த வண்ணம் உள்ளனர் .

மாவீரர்நாள் ,மற்றும் மக்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்து மக்களது பனத்தை கொள்ளையடித்து ,மோசடி விளையாட்டுக்களில் ஈடுபட்டு வந்த ரகுபதி ,அப்துல்லா உள்ளிட்டோரை மக்கள் துரதியடித்தனர் .

மக்கள் பணத்தில் ஆடம்பர கார்கள் ,ஜீப் என்பனவற்றை வாங்கிய ரகுபதி உள்ளிட்ட குழு தற்போது ஆடம்பர சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .

அதனால் ஆத்திரமுற்ற மக்கள் தற்போது ஒன்று திரண்டு இந்த ஏமாற்று புலிகள் குழுக்களுக்கு எதிராக வீதி இறங்கியுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

மக்களே தொடர்ந்து இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பதாக மக்கள் கருத்தாக வெளியாகிய வண்ணம் உள்ளது .

15 வருடகாலமாக மக்களை ஏமாற்றி ,மக்கள் பந்தில் சுக போக வாழ்க்கை வாழ்ந்து வந்த இந்த புலிகள் குழுக்கள் இப்பொழுது அதே அதரவு வழங்கிய மக்களினால் விரட்டியடிக்க பட வேண்டிய நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளது .

இதுவே புரட்சியுயின் ஒரு படியாக உள்ளது .லண்டனில் மாடு மேய்ச்ச தரையாக விளங்கும் 137 ஏக்கர் காணியை வாங்கிய தலைமைச்செயலகம் எனும் குழு வரலாற்று மையம் எனும் பெயரில் மாவீரர் நாளினை நடத்தி வருகிறது .

இந்த 137 ஏக்கர் காணி 12 மில்லியன் ,பவுண்டுகள் அதாவது 240 கோடி இலங்கை ரூபாய்களுக்கு இந்த காணி வாங்க பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .

ஆனால் அது தொடர்பாக இவர்கள் எதனையும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை .அவ்வாறான காலா பகுதியிலேயே தற்போது சுவிஸில் மாபியாவாக விளங்கும் ரகுபதி விரட்டியடிக்க பட்டுள்ளார் .

அதே போன்று லண்டன் வரலாற்று மையம் சங்கீதன் கூலி குழுவும் மக்களினால் சுற்றிவளைக்க படுவார்கள் என மக்கள் மன்றம் கருத்துரைத்த வருகின்றமை குறிப்பிட தக்கது .

மக்கள் எழுச்சியுற்று கேள்வி கேட்காத வரைக்கும் இந்த கூலி குழுக்கள் மக்களை ஏமாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே நிதர்சனமாகும் .

இதில் அழுத்த காணொளி பார்க்கவும்

அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது
Posted in இலங்கை செய்திகள்

அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது

அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது

அநுரவின் ஆட்சி தலிபான் ஆட்சியை ஒத்தது ,இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்துக்கு வந்த எந்த நாடும் முன்னேற்றமடைந்தும் இல்லை.

அந்த நாட்டு மக்கள் அழகான வாழ்க்கை வாழ்ந்ததும் இல்லை, கியுபா, வெனிசுலா போன்ற நாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும் என ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்ட அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தின் நோக்கமாக இருப்பது, வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதாகும்.

ஆனால் இடதுசாரி தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும் நாட்டில் எங்காவது வளமான நாடு அழகான வாழ்க்கை இருக்குமானால் அந்த நாட்டை இவர்கள் காட்ட வேண்டும்.

கியுபாவின் இடதுசாரி கொள்கையுடைய ஆட்சியாளரான பிடல் கஸ்ட்ரோ சிறந்த ஜனநாயக தலைவர். ஆனால் அவருக்கு அவது நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் போனது.

கியுபாவை வளமான நாடாக்கவோ அந்நாட்டு மக்களுக்கு அழகான வாழ்கையையை ஏற்படுத்திக்கொடுக்கவோ முடியவில்லை. கியுபா உலக நாடுகளில் இருந்து தனிப்பட்டு, ஒதுக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்கவும் இடதுசாரி கொள்கையுடைய தலைவர். இரண்டு தடவைகள் ஆயுத முனையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்தவர்.

அவரே தற்போது ஜனநாயக முறையில் அரசியல் கட்சி ஊடாக அதிகாரத்துக்கு வர முயற்சிக்கிறார்.

அவர்களின் எதிர்காலம் அனைவருக்கும் தெரியும். நாட்டில் வன்முறையை தோற்றுவித்து பல அழிவுகளை மேற்கொண்டவர்கள்.

அதனால் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

அதேபோன்று வெனிசுலா நாட்டின் தலைவரும் இடதுசாரி கொள்கையுடையவர். அவரின் ஆட்சியின் கீழ் இருந்து 70இலட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

உலக எரிபொருள் உற்பத்தியில் 4ஆவது இடத்தில் வெனிசுலா இருக்கிறது. என்றாலும் அவர்களுக்கு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்ய முடியாமல் போயிருக்கிறது.

அந்த நாட்டு தலைவருக்கும் வெனிசுலாவை வளமான நாடாக்கவோ அந்நாட்டு மக்களுக்கு அழகான வாழ்கையையை ஏற்படுத்திக்கொடுக்கவோ முடியாமல் போயிருக்கிறது.

ஆசியாவில் வட கொரியாவில் இடதுசாரி கொள்கையுடைய ஆட்சியாளரே இருந்து வருகிறார் அங்கு தனி ஆட்சியே இடம்பெறுகிறது. ஜனநாயகம் இல்லை. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் ஒன்றும் தெரியாது.

அந்த நாடும் உலகில் ஏனைய நாடுகளில் இருந்து ஒதுக்கப்பட்டு, சர்வதேச நாடுகளுடன் எந்த தொடர்பும் இல்லாத நாடாகவே இருந்து வருகிறது.

அதேபோன்று சீனாவில் இடதுசாரி கொள்கையுடைய கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரமே இருக்கிறது.

வேறு கட்சிகள் அங்கு இல்லை. அந்த நாடு வளமான நாடு. ஆனால் அந்த நாட்டில் ஜனநாயகம், சுதந்திரம் இல்லை.ஊடக, கலாசார சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்ட நாடாகும்.

அதனால் இடதுசாரி கொள்கையுடைய தலைவர்கள் அதிகாரத்தில் இருக்கும் எந்த நாட்டிலும் அனுரகுமார ஏற்படுத்தப்போகும், வளமும் இல்லை.

அந்த மக்களுக்கு அழகான வாழ்க்கையும் இல்லை. அதேநேரம் அடிப்படைவாத கொள்கையுடைய தலிபான் ஆட்சியை போன்ற ஆட்சிக்கே அனுரகுமார முயற்சிக்கிறார்.

அந்த நிலைக்கு எமது நாட்டை கொண்டு செல்ல மக்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது ,மட்டக்களப்பில், ஜனாதிபதி ரணில் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ரி 56 ரக துப்பாக்கி ரவை உடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் கோரகளிமடு பிரதேசத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இதன் போது கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரை சோதனையிடும் போது அவரின் உடமையிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை ஒன்றை கண்டுபிடித்து மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர் வாகரை வம்மிவெட்டுவான் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய கடற்தொழில் ஈடுபட்டு வருபவர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வாக்களிக்க தற்காலிக அடையாள அட்டை
Posted in இலங்கை செய்திகள்

வாக்களிக்க தற்காலிக அடையாள அட்டை

வாக்களிக்க தற்காலிக அடையாள அட்டை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள், தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு கூறியுள்ளது.

தங்கள் பகுதியில் உள்ள கிராம அலுவலர் அல்லது தோ

மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும்
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும்

மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும்

மட்டக்களப்பு அபிவிருத்தி செய்யப்படும் ,வாகரை தொடக்கம் காத்தான்குடி வரையிலான பாரிய சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு உலகின் பிரதான சுற்றுலாப் பிரதேசமாக மாறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் இன்று (08) முற்பகல் இடம்பெற்ற ‘இயலும் ஶ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். முற்போக்குத் தமிழர் கழகம் இதனை ஒழுங்கு செய்திருந்தது.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சஜித்துக்கும் அனுரவுக்கும் சரியான கொள்கை இல்லை.

அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை மாத்திரமே செய்கிறார்கள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாடு எதிர்நோக்கும் சவால்களுக்கு அவர்களிடம் தீர்வுகள் இல்லை எனவும், பிரச்சினைகள் ஏற்படும் போது ஓடிவிடுவதாகவும் தெரிவித்தார்.

எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாட்டுக்காக மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டரை வெற்றியீட்டி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத் திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொண்டார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

”2022 இல் நான் இந்த பகுதிக்கு வந்த போது நீண்ட வரிசை இருந்தது. பல பகுதிகளுக்கும் சென்றேன்.

நீங்கள் அனைவரும் வரிசையில் இருந்தீர்கள். இந்த வரிசையுகத்தை நிறைவு செய்ய முடிவு செய்தேன். 2023 இல் நான் வரும் போது வரிசைகள் இருக்கவில்லை.

விவசாயிகள் என்னிடம் உரம் கேட்டார்கள். அதனை நான் பெற்றுக்கொடுத்தேன். நீங்கள் சிறந்த விளைச்சலைப் பெற்றுத் தந்தீர்கள்.

இவ்வாறு தான் நாட்டை முன்னேற்றினோம். நீங்கள் அனைவரும் கஷ்டப்பட்டீர்கள். மீண்டும் அந்த நிலைக்குச் செல்ல வேண்டுமா?

நெருக்கடியை போக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றோம். நிபந்தனைகளுடன் உதவி கிடைத்தது. உதவி பெற வேறு வழியிருக்கவில்லை.

இந்தியாவிடமிருந்து 3.5 பில்லியன் கிடைத்தது. அது தவிர வேறு வழி எதுவும் இருக்கவில்லை. கடினமான முடிவுகளை எடுக்க நேரிட்டது. வரியை அதிகரிக்க நேரிட்டது. விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

எவ்வாறு முன்னோக்கிச் செல்ல இருக்கிறோம் என்பது இந்த தேர்தலிலே முடிவாகும். பிரச்சினைகள் வந்த போது மற்ற தலைவர்கள் ஓடுகையில் நான் மட்டுமே முன்வந்தேன்.

இவர்களை நம்ப முடியுமா? பாராளுமன்றத்தைக் கலைகுமாறு கோரினார்கள். தேர்தலை நடத்தச் சொன்னார்கள்.

இவ்வாறு பல நொண்டிச்சாக்குகளைக் கூறினார்கள். இவர்கள் கூறியதைப் போன்று 2022 இல் தேர்தலை நடத்தியிருந்தால் என்ன நடந்திருக்கும். பிரச்சினை தீருமா? அல்லது சிக்கல் ஏற்படுமா? பங்களாதேஷத்தைப் போன்று நாடு மாறியிருக்கும்.

சஜித் வந்து மேடைகளில் பேசுகிறார், பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கிறார். எந்த தீர்வும் அவரிடமில்லை. இவ்வாறனவர்களுக்கு எவ்வாறு தீர்வு வழங்க முடியும். அடுத்த 5 வருடங்களுக்கான ‘இயலும் ஶ்ரீலங்கா’ திட்டம் எம்மிடமுள்ளது. 5 அம்சங்களில் அதில் பிரதானமானவை.

வாழ்க்கைச் சுமையை இலகுபடுத்த வேண்டும். வரியைக் குறைப்பதாக சஜித்தும் அநுரவும் சொல்கிறார்கள்.

வரியை குறைத்தால் வருமானம் குறையும். கடன் பெறுவதாக அவர்கள் சொல்கிறார்கள். 2019 இல் கோட்டாபய வரியைக் குறைத்தார். 2022 இல் நாடு வீழ்ச்சியடைந்தது. அந்த நிலைமை மீண்டும் ஏற்பட வேண்டுமா?

பெண்களுக்குத் தான் அதிக பிரச்சினை ஏற்பட்டது? பெண்களின் உரிமைகள் செயற்படுத்தப்படுவதில்லை. பெண்களை வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

பெண்கள் வீடுகளில் எதிர்கொள்ளும் வன்முறைகளை தடுக்க சட்ட ஆலோசனை மற்றும் மருத்துவ சேவை நிலையங்களை அமைக்க இருக்கிறோம்.

குடித்து விட்டு வீட்டுக்கு வந்து குழப்பம் செய்யும் ஆண்கள் இனி கவனமாக இருக்க வேண்டிவரும். பெண்களின் மரியாதையைப் பாதுகாக்க வேண்டும்.

இந்தப் பிரதேசத்தில் விவசாய நவீன மயமாக்கலை மேற்கொண்டு நவீன விவசாயத்தில் ஈடுபவோருக்கு கடனுதவி வழங்க இருக்கிறோம்.

மீன்பிடித்துறையிலும் நவீன தொழில்நுட்பத்தை வழங்க இருக்கிறோம். கைத்தொழில் வலயங்கள் மற்றும் முதலீட்டு வலயங்களை ஆரம்பிக்க இருக்கிறோம்.

திருகோணமலையில் ஒன்றை ஆரம்பிப்போம். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இங்கு கொண்டு வர இருக்கிறோம். டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை மட்டக்களிப்பில் ஆரம்பிக்க இருக்கிறோம்.

இந்தப் பிரதேசத்தை சுற்றுலா வலயமாக முன்னேற்றுவோம். 1977 இல் நான் இங்கு வந்த போது தேவநாயகம் அமைச்சராக இருந்தார்.

நல்லையாவைப் பற்றியும் அறிந்திருந்தேன். எனது தந்தை ஹோட்டலொன்றை ஆரம்பித்தார். அதற்கு அருகில் தான் பிள்ளையானின் கிராமம் இருந்தது.

கல்குடாவில் அனைத்து இடங்களுக்கும் சென்று வந்துள்ளேன். வாகரை முதல் காத்தான்குடி வரை பாரிய சுற்றுலா வலயமொன்றை இங்கு உருவாக்குவேன்.

ஹிங்குரக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம். இப்பகுதிக்கு வர அது இலகுவாக இருக்கும்.

சுற்றுலாத்துறையுடன் தொடர்புள்ள பயிற்சிகளை வழங்குவோம். சம்பிரதாய நடனங்கள், கப்பிரிங்ஜா, சம்பிரதாய முஸ்லிம் நடனங்கள், நவீன நடனங்கள், வாத்தியக் குழுக்கள், சுவையான உணவுகள் என பல விடயங்கள் எமக்குத் தேவைப்படும். அவ்வாறு தான் சுற்றுலாத்துறை முன்னேறும்.

இப்பகுதியில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள இருக்கிறோம். மட்டக்களப்பு பிரதேசத்தை உலகில் தலைசிறந்த சுற்றுலாப் பயண வலயமாக மாற்ற எம்மால் “இயலும்”. சஜித்தினால் அல்லது அநுரவினால் அதனை செய்ய முடியும்.

கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இன்றேல் கேசும் இல்லை சுற்றுலாத்துறையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்
Posted in இலங்கை செய்திகள்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் ,ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு

லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, நுவரெலியா – தலவாக்கலையில் நேற்று (08) மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது நாட்டில் இதுவரை எட்டு ஜனாதிபதிகள் உருவாகியுள்ளனர். அவர்களுக்கிடையில் மாறுபட்ட கொள்கையே இருந்துள்ளது. தான் சிங்கள, பௌத்த வாக்குகளால்தான் ஆட்சிக்கு வந்ததாக ஒருவர் கூறினார்.

தமிழர்களையும் அரவணைத்துக்கொண்டே பயணிக்க வேண்டும் என மற்றுமொருவர் கூறினார். இப்படி மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டன.

ஆனால் அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாசதான். இதனை நாட்டு மக்களும் நிச்சயம் உணரவேண்டும்.

சஜித்துடன் நாம் ஐந்தாண்டுகள் இணைந்து பயணிக்கின்றோம். அவர் இனவாதமற்ற தலைவர் என்பதை எமக்கு அறியமுடிகின்றது.

ஒரு சிலர் வடக்குக்கு சென்றால் ஒரு விடயத்தையும், தெற்கில் மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் அனைத்து பகுதிகளிலும் செய்யக்கூடிய விடயங்களை சொல்லும் தலைவராக சஜித் காணப்படுகின்றார்.

அனைத்து இன மக்களையும் சமமாக பார்க்கக்கூடிய தலைவராகவும் அவர் உள்ளார். அதனால் அடிப்படையிலேயே நாம் சஜித்தை ஆதரித்தோம்.

சஜித்தை நாம் வெறுமனே ஆமாம் சாமி போட்டு ஆதரிக்கவில்லை. 47 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். லயன்களை வெறுமனே கிராமங்களாக மாற்றுவதில் தீர்வு கிட்டப்போவதில்லை.

சஜித் ஆட்சியில் மலையகத்தில் நாம் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். மக்களை அச்சுறுத்தி வாக்கு பெறும் முயற்சியில் அநுரகுமார திஸாநாயக்க ஈடுபட்டுவருகின்றார்.

சஜித்தைவிடவும் அநுர முன்னிலையில் இருக்கின்றார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார்.

அநுரவை வெற்றிபெற வைப்பதே ஜனாதிபதியின் நோக்கம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ரணசிங்க பிரேமதாசதான் எமது மக்களுக்கு பிரஜாவுரிமை வழங்கினார்