மனைவியை கொலை செய்த கணவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவர் கைது

மனைவியை கொலை செய்த கணவர் கைது

மனைவியை கொலை செய்த கணவர் கைது தனிப்பட்ட தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

நேற்று (14) மாலை வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோரகஹவத்த, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

பெண் ஒருவர் தனது கணவரால் தாக்கப்படுவதாக 119 தகவல் நிலையத்தின் மூலம் வாத்துவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தததை அவதானித்ததுடன், மற்றுமொரு பெண் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் காயமடைந்தவர் உயிரிழந்தவரின் சகோதரி என்பது தெரியவந்துள்ளது.

கொலையை செய்த 34 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, காணி தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பதுரலிய, ஹீன்பல்வில பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்வெல்தொட்ட, மொரபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ,அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல், கடந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் கஷ்டப்பட்ட போது அதனைக்

கண்டுகொள்ளாமல் ஓடியதற்காக சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கேகாலையில் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற ரணிலால் இயலும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதிக்கு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து, மக்கள் வாழக்கூடிய நாட்டை தானே உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், மக்களின் எதிர்காலத்தை ஒன்று வழங்குமாறு கோரும் அரசியல்வாதிகளுக்கு வழங்கும் சந்தர்ப்பம் இதுவல்ல என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அன்று மக்கள் கஷ்டப்பட்ட போது இவர்களில் யாரும் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி மக்கள் படும் துன்பத்தையும், மாணவர்களை பாடசாலை அனுப்ப முடியாமல் தவித்ததையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

அவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் வந்து நீலிக் கண்ணீர் வடித்தாலும் அன்று ஒளிந்து கொண்டனர். நாடு கஷ்டத்தில் இருக்கும் போது மக்களை கைவிட்ட சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் அளித்து வாழ்வதற்கான நம்பிக்கையை நான் ஏற்படுத்தினேன். இன்று நாட்டின் பொருளாதாரம் ஸ்தீரமடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் சுமையை படிப்படியாக குறைத்து வருகிறோம்.

அதற்காக கடந்த தடவை நிவாரணம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினோம். உர நிவாரணம் வழங்கப்பட்டது.

ஓய்வூதியம் மற்றும் முதியோர் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டது. ஒரு பக்கம் பொருட்களின் விலையைக் குறைக்கும் அதேவேளை, மறுபுறம் பணத்தைக் கொடுத்து மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் பணியை செய்து வருகிறோம்.

அடுத்த ஆண்டுக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை குறையும். நான் மேடையில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் நபரல்ல. பொறுப்பை நிறைவேற்றிய பின்னர் அதனை மக்களுக்கு அறிவிக்கிறேன்.

எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் தொடர்பில் யாருக்காவது கொடுப்பதா அல்லது நிரந்தர எதிர்காலத்திற்கு செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று திசைகாட்டி கோருகிறது. அவர்களின் பட்ஜெட் ஊடாக அனைத்து IMF நிபந்தனைகளும் மீறப்படுகிறது.

நிபந்தனைகளை உடைத்து, IMF ஆதரவை இழந்த பிறகு, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரிவடையும். அதேபோல், பொருளாதாரப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்று நான் கேட்ட கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.

அவர்களிடம் திட்டம் எதுவும் இல்லாததால் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை. திட்டுவதை மட்டுமே செய்கின்றனர். ஆனால் மக்களின் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும்.

எனவே மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தாமல் உண்மையைப் பேசுமாறு சஜித்திடமும்அநுரவிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

முன்னோக்கி செல்லும் பாதையை நாம் காட்டியுள்ளோம். அந்த பாதையில் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டை வெற்றிபெற செய்ய அனைவரும் செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா
Posted in இலங்கை செய்திகள்

நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா

நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா

நாட்டை சீரழிக்கின்ற ரணில் அநுர கூட்டணிக்கு வாக்களிப்பதா ,இன்று மக்கள் தெளிவான முறையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள்.

நாட்டை அழிவின் பக்கம் இட்டுச்செல்லும் ரணில் அநுர கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதா? இல்லாவிட்டால் 220 இலட்சம் மக்களையும் ஆட்சி பீடமேற்றும் பொது மக்களின் யுகத்திற்கு மக்கள் வரத்தை வழங்குவதா? என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச தெரிவித்தார்.

இந்நாடு மீண்டும் அபிவிருத்தியை நோக்கிய யுகத்திற்கு செல்வதற்கும் தொழிற்சாலைகள் உருவாகி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மக்களின் வறுமை நீங்கி மூலை முடுக்கு, கிராமங்கள், நகரங்கள், விருத்தியடைந்து நாடு அபிவிருத்தி அடைகின்ற வேலைத்திட்டத்திற்கு ரணில் அநுர கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.

ரணில்-அநுர கும்பல் இரவு பகல் பாராது ஐக்கிய மக்கள் சக்தியை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

இந்த சூழ்ச்சிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருக்கிறோம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 52 ஆவது மக்கள் வெற்றிப்பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (14) திகதி இரத்தினபுரியில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

கட்டுக்கட்டாக பைல்களை தூக்கிச் சென்ற ஒரு குழுவினர் திருடர்களை பிடிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி உயர்நீதிமன்றத்தை நாடி நாட்டை வங்குரோத்தடையச் செய்த

ராஜபக்ஷக்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து தீர்வைப் பெற்று, அவர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் என

வெளிக்கொணர்ந்தது. செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் இந்தத் தீர்வின் ஊடாக நட்ட ஈட்டை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுகின்ற வேலையாட்கள், முதல் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில்துறை ஏற்றுமதியாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வர்த்தக

இடைத்தரகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அனைத்து தரப்பினர்களுக்காகவும் இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் தேசிய கொள்கை திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

அத்தோடு 50 கிலோ உரம் ஒரு மூடையை 5000 ரூபாவுக்கு வழங்கி, விவசாயிகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இரத்தினபுரி உள்ளிட்ட இலங்கையில் இரத்தினக் கல் காணப்படுகின்ற இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்ததது.

அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி அதனை நிறுத்தினோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்காக செய்ய முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மிகப் பெருமளவில் செய்து, தொழில் வாய்ப்பில்லாத

இளைஞர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி சமூகத்தில் அபிமானத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீடில்லாதவர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பதோடு இல்லத்தரசிகளை மையமாகக் கொண்ட வறுமை ஒழிப்பு வேலை திட்டத்தை செயற்படுத்தி, 24

மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கி வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்

3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து
Posted in இலங்கை செய்திகள்

3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து

3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து

3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து,பிரிட்டனில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்பதும் தயாபரன் எனப்படும் இயற்பெயர் கொண்ட சங்கீதன் குழுவிடம் 3000 கோடி சொத்துக்கள் உள்ளதாக அம்பலமாகியுள்ளது .

இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் அணியொன்று பிரிட்டனில் தோன்றியது .

புதிதாக ஆரம்பிக்க பட்ட இந்த அமைப்பினரால் ,தாமே விடுதலை புலிகளின் மூத்த தளபதிகள் என தெரிவித்து சங்கீதன் எனப்படும் குழு இயங்கி வந்தது .

இந்த அமைப்பில் இயங்கி வரும் சங்கீதன் ,இன்பன் ,புலவர் ,என புனை பெயர் கொண்டவர்கள் எனப்படுபவர்கள் முக்கிய தூண்களாக காணப்படுகின்றனர் .

இவர்களே இறுதி முள்ளி வாய்க்கால் யுத்த களத்தில் இருந்து தப்பித்து வந்ததாக தெரிவித்து ,மக்களை நம்ப வைத்து அதன் ஊடக விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் கட்டமைப்பே நிறுவினர் .

மக்களிடத்தில் புலிகள் அமைப்பு என கோரி கொள்ளும் இவர்கள் ,இங்கிலாந்து சட்டத்தின் அடிப்படையில் தமிழர்களின் பொது அமைப்பு என்றே நிறுவங்களின் பெயர்களை நிறுவி அதன் ஊடக செயல் பட்டு வருகின்றனர் .

அதன் அடிப்படையில் தயாபரன் என்பதும் சங்கீதன் குடும்ப பெயரில் ,அவர்களது உறவினர்கள் பெயரில் ஒன்பதுக்கு மேற்பட்ட ஆடம்பர பங்களா வீடுகள் காணப்படுகின்றன .

இதன் சொத்து மதிப்பு இலங்கை ரூபாயில் ,மூவாயிரம் கோடி ரூபாய்களாக காணப்படும் என கணக்கிட படுகிறது .

இந்த விபரங்கள் பொது வெளியில் காணக்கிடப்பதாக தெரிவிக்க படுகிறது .

.அப்படி என்றால் பிரிட்டன் வருமானத்துறையினர் ,ஒருவரது பெயரில் எவ்வாறு எட்டு நிறுவனம் இயக்க படுகிறது ..??

எப்படி இவர்களுக்கு இந்த பணம் கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தினால் மிக பெரும் விடயங்கள் அம்பலமாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை செயலகம் என்கின்ற இந்த அணியினரால் மக்களிடத்தில் மில்லியன் கணக்காக பணம் சேகரிக்க பட்டுள்ளது மக்கள் தெருவிக்கும் கருத்துக்கள் ஊடக காணமுடிகிறது .

ஆதலால் வீரச்சாவு அடைந்த போராளி ஒருவரது பெயரில் நடமாடி வரும் ,சங்கீதன் குடும்பத்தின் பெயரில் வாங்கி குவிக்க பட்டுள்ள ஆயிரக்கணக்காண சொத்துக்கள் மக்கள் சொத்துக்கள் என மக்கள் பேசி கொள்கின்றனர் .

ஆதலால் பிரிட்டன் உளவுத்துறை மற்றும் வருமானவரித்துறை என்பன இணைந்து விசாரணை நடத்த வேண்டும் .

அப்பொழுது தான் மிக பெரும் மாபியா கும்பல் வலையமைப்பு அம்பல படுத்த படும் என நம்ப படுகிறது .

போரால் பாதிக்க பட்ட மக்களிற்கு உதவிட மறுத்து தமது சுயநல ஆடம்பர வாழ்வில் ஈடுபட்ட இந்த கும்பலை மக்கள் ஓட ஓட விரட்டும் நாள் உங்கள் வாசல் வந்துள்ளது .

குறிப்பிட தக்கது .

தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது

தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது

தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது,பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் பெயரில் இயங்கி வரும் தயாபரன் எனப்படும் சங்கீதன் குழு வசமாக சிக்கியுள்ளது .

இலங்கை புலனாய்வு குழுவினரால் நன்கு மூளைச சலவை செய்யப்பட்டு ,இலங்கை அரச இராணுவத்தின் செயல் திட்டங்களுக்கு நன்கு கட்டமைக்க பட்ட நிலையில் பயிற்றுவிக்க பட்டு பிரிட்டனுக்கு இவர்கள் அனுப்பி வைக்க பட்டனர் .

தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது
தலைமை செயலகம் சங்கீதன் புலிகள் குழு சிக்கியது

அவ்விதம் 34 பேர் சிவப்பு நடவடிக்கை எனும் பெயரில் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்க பட்டதக தெரிவிக்க படுகிறது .

இறுதி யுத்தம் இடம்பெற்ற 2009 ஆண்டு கால பகுதியில் இலங்கை இராணுவத்தினரிடம் சரண் அடைந்த விடுதலை புலிகள் உறுப்பினர்கள் ,14000 பெயரில் சங்கீதன் உள்ளிட்ட இந்த குழுக்கள் உள்ளடக்கம் பெருகின்றனர் .

இவ்வாறு இவர்கள் இலங்கை இராணுவத்தின் உளவாளிகளாக மாற்றம் பெற்று ,தமிழீழ விடுதலை புலிகள் என்கின்ற பெயரில் சங்கீதன் எனப்படும் தயாபரன் எனும் நபர் தலைமையில் ,பிரிட்டன் வருகை தந்த குழுவே ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் அணியை உருவாக்கியுள்ளது .

இந்த குழுவினர் விடுதலை புலிகளினால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறுவ பட்டு இயங்கி வந்த அனைத்துலகும் எனப்படும் ,டி சி,சி எனும் அமைப்பே முற்றாக உடைக்கும் நோக்கில் இயங்க வைக்க பட்டனர் .

இந்த அமைப்பினர் இலங்கை அரச புலனாய்வு பிறிவினரால் நன்கு கட்டமைக்க பட்ட நிலையில் இயங்கி ,பெரும் உடைவை ஏற்படுத்தி ,அனைத்துலகும் என்கின்ற தாய் கட்டமைப்பை உடைத்து சிதைத்தது .

அதன் பின்னர் பிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்களாக விளங்கி வீரமரணம் அடைந்த மாவீரர் நிகழ்வுகளை மூன்று பிரிவுகளாக நடத்தினர் .

அவ்விதம் அன்று முதல் இன்றுவரை இந்த மாவீரர் நிகழ்வுகள் மூன்றாக மூன்று அமைப்புகள் நடத்தி வருகின்றனர் .

லண்டன் புறநகர் பகுதியான ஆக்ஸ்போர்ட் மற்றும் பிறிதொரு கவுன்சிலில் உள்ளடக்க பட்ட மாடு மேய்க்க பயன்படுத்த படும்

மேய்ச்சல் நிலம் 137 ஏக்கர் காணி வாங்க பட்டு அதில் மாவீரர் மயானம் அமைக்க பட போவதாக தெரிவித்து இந்த விடுதலை புலிகளின் தலைமைச்செயலாம் எனும் அணி மக்களிடம் பணம் சேகரித்து வந்தததாக தெரிவிக்க படுகிறது .

ஆனால் கடந்த பத்து வருடங்களாக அவர்கள் பல லட்சக்கணக்கான பணசேகரிப்பை நடத்தி வந்துள்ளனர் .

விவசாய பண்ணை காணியில் பச்சை நில பகுதியில் கட்டடங்கள் நிரமணிக்க அனுமதி வாழங்கப்படாத போதும் ,அதே பகுதி கவுன்சில் அனுமதி

வழங்கியதாக பொய் கூறி ,இந்த தமிழீழ விடுதலை புலிகளின் தலைமைச்செயலகம் எனும் வரலாற்று மையமாக இயங்கி வரும் சங்கீதன் எனப்படும் ,

தயாபரன் என பெயர் கொண்ட குழு தலைமையில் இயங்கி வந்துள்ளது .

அந்த முக்கிய விடையத்தை மோப்பம் பிடித்த, விடயம் அறிந்த தமிழர்கள் சேகரித்த தகவலின் அடிப்படையில் ,

இவர்கள் மிக பெரும் சர்வதேச மாபியா வலையமைப்பை கொண்டவர்கள் என கண்டறிய படுகிறது .

அதன் அடிப்படையில் இந்த சங்கீதன் எனப்படும் தயாபரன் தலைமையில் 34 தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர்களாக

விளங்குய இவர்கள் ,இலங்கை நுவரெலியா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ,

பின்னர் பிரிட்டன் வருகை தந்துள்ள விடயம் காட்சி ஆதாரரங்களுடனும் சில செய்தி குறிப்பிகளுடன் வெளியாகியுள்ளது .

இதோ அந்த படம் ,இவர்கள் இலங்கை இராணுவத்தினரால் அனுப்பி வைக்க பட்டவர்கள் என்றார் விடயம் இதன் மூலம் அம்பல பட்டுள்ளது .

வெள்ளை வேட்டி வெள்ளை சேர்ட் அணிந்தவாறு காணப்படும் இவர்கள் தான் பிரிட்டன் இணைந்த ஐரோப்பிய நாடுகளில் அகல கால் ஊன்றி இலங்கை

அரச இராணுவ புலனாய்வு காட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுவது அம்பல பட்டுள்ளது எனப்படுகிறது .

தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் பெயரில் இயங்கி மக்களிடம் பணம் சேகரித்து அந்த பணத்தில்

ஆடம்பர வாழ்வு வாழ்ந்து வரும் இந்த சங்கீதன் தலைமை செயலகம் எனும் குழுவை மக்களே கவனித்து கொள்க ,

நீங்களே கேள்விகளை எழுப்புங்கள் ,இவர்கள் தொடர்ப்பன விடயங்கள் தொடராக நாம் வெளியிடுவோம் .

புதையல் நிறையவே உள்ளன இணைந்திருங்கள் ,இதனை மக்களிடத்தில் வேகமாக பரப்புங்கள் ….தொடரும் ….

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன். லண்டன் ஹரோ பகுதியில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை கடைக்குள் வைத்து தமிழர் பூட்டிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் நடந்த நவம்பர் ஆகஸ்ட் மாதம் இரவு ஒன்பது மணியளவில் குறித்த பலசரக்கு கடைக்கு பயணித்த 14 வயதுடைய சிறுமியை ,அந்த கடையில் பணி புரிந்த தமிழர் கடைக்குள் வைத்து பூட்டியுள்ளாராம் .

இரவு வேளையில் குறித்த மளிகை கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை பத்து நிமிடங்கள் கடைக்குள் பூட்டியதாக கருதப்படும் பூவேனேதிரன் எனப்படும் 59 வயதுடைய தமிழர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்க பட்டு வந்துள்ளார் .

குறித்த சிறுமியை கடைக்குள் பத்து நிமிடங்கள் தான் அடைத்து வைத்தது தவறு என்ற நிலையிலேயே தற்போது அதே பகுதி நீதிமன்றினால் சிறை தண்டனைக்கு உள்ளாக்க பட்டுள்ளாராம் .

குறித்த பகுதியில் அதிக மக்கள் வருகை தரும் பலசரக்கு கடையாக இது காணப்படுகிறது .குறித்த சிறுமியை ஏன் கடைக்குள் பூட்டி வைத்தாரு என்கின்ற விடயம் தெளிவாக தெரியவரவில்லை .

தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியாக லண்டன் ,ஹரோ பகுதி காணப்படுகிறது .

அவ்வாறான அந்த பகுதியில் பலசரக்கு கடைக்குள் 14வயது சிறுமியை 10 நிமிடம் பூட்டி வைத்ததான குற்ற செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேற்படி விடயத்தை அதே பகுதி உள்ளூர் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு
Posted in இலங்கை செய்திகள்

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு ,நாட்டில் தற்பொழுது வன்முறையும் மிலேச்சத்தனமும் பயங்கரவாதமும் தலை தூக்கிக் கொண்டிருக்கின்றது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது.

பல சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த மிலேட்சத்தனமான தாக்குதல் இடம் பெற்றிருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமும், தாம் விரும்பிய முறையில் அரசியல் செய்யவும் சுதந்திரம் இருக்கின்றது. இங்கு உருவெடுக்கின்ற கொடிய பாசிச வாதத்திற்கும், வன்முறைக்கும், மிலேட்சத்தனத்திற்கும் மக்கள் ஆதரவு

அளிக்கின்றார்களா என்று கேள்வி எழுப்புகின்றோம். பொது மக்களின் யுகத்திற்காக எந்த சந்தேகமும் இன்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு உந்து சக்தியைப் பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 49 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 13 ஆம் திகதி தெபரவெவ நகரில் மிக

வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டை தீ மூட்டிய குழுவும், வங்குரோத்தடையைச் செய்த குழுவுக்கு பாதுகாப்பு வழங்குகின்றவர்களும் ஒன்றாக இணைந்துள்ளார்கள்.

ரணிலும் அநுரவும் அரசியல் திருமணம் செய்து கொண்டு இன்று தேனிலவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேனிலவுக் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி விவசாய கடனை இரத்து செய்வதால் அநுரவும் ரணிலும் அதற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள்.

குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கும், வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும், எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுவதற்கும், இவர்கள்

எதிராக இருக்கின்றனமையாலே தற்பொழுது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிராக ரணிலும் அநுரவும் தற்பொழுது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் தொடர்ந்து அசௌகரியத்துடன் இருப்பதை அவர்கள் விரும்புகின்றார்கள்.

வேளாண்மை விவசாயிகளையும், பால் பண்ணையாளர்களையும் பாதுகாப்பதற்கு இவர்கள் எதிராக இருக்கின்றார்கள் என
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே இந்த ரணில் அநுர ஆகியோரின் தந்திரக் கூட்டைத் தோல்வி அடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற, ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுமக்களுடைய

யுகத்திற்கு பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இன, மத, குல, பேதங்களை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெற அனைவரையும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார்.

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

4 ஆயிரத்தை அண்மிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் ,2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம். ஏ. எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொலிஸாருக்கு 350 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

அரியநேத்திரனை ஆதரித்து மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அரியநேத்திரனை ஆதரித்து மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டம்

அரியநேத்திரனை ஆதரித்து மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டம்

அரியநேத்திரனை ஆதரித்து மன்னாரில் மாபெரும் பொதுக்கூட்டம் ,ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்றைய தினம் (13) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் இடம் பெற்றது.

இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு மன்னார் மக்கள் அமோக வரவேற்பு வழங்கினர்.

குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், ஆ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, முன்னாள் யாழ் மேயர்

மணிவண்ணன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் முன்னாள் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதன்போது ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து, தமிழ் மக்கள் சங்கு சின்னத்திற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து உரை நிகழ்த்தினர்.

இதன் போது சுமார் ஆயிரம் பேர் வரை குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி ,யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

தேர்தலின் பின்னரே முடிவு IMF
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலின் பின்னரே முடிவு IMF

தேர்தலின் பின்னரே முடிவு IMF

தேர்தலின் பின்னரே முடிவு IMF ,எதிர்வரும் தேர்தலின் பின்னரே இலங்கை தொடர்பான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது மீளாய்வு இடம்பெறும் என சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜூலி கோஸாக் (Julie Kozack) இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அல்லது மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், நாங்கள் வேலைத்திட்டக் கலந்துரையாடல்களை முன்னெடுப்போம்.

அதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மிக மோசமான நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு வேலைத்திட்டங்களின் நோக்கங்களை அடைவது ஒரு முக்கிய படியாகும்.

இலங்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் நாடு இன்னும் நெருக்கடியிலிருந்து மீளவில்லை எனவும் ஜூலி கோஸாக் தெரிவித்துள்ளார்.

கடினமாக வென்ற வெற்றிகளைப் பாதுகாப்பது இலங்கைக்கு முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார்

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார்

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார் ,உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா கோவிட் தொற்று பரவல், நாட்டின் வங்குரோத்து நிலைமை என்னவற்றினால் 220 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். நாடு விழுந்திருக்கின்ற இந்த பாதாளத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும்.

தற்போது அரசாங்கம் மக்களுடைய வாழ்க்கையை சுருக்கி, பொருளாதாரத்தை சுருக்கி, தொழிலாளர் வர்க்கத்தின் மேல் சுமையை அதிகரித்து மீட்சி பெற முடியும் என்று கூறினாலும், அது பிழையான கருத்து. பொருளாதார விருத்தியின் ஊடாகவே மீட்சி பெற முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

IMF க்கு 2033 ஆம் ஆண்டிலிருந்து கடனை மீளச் செலுத்த வேண்டும். ஆனால் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை மீள செலுத்த தீர்மானித்து இருக்கிறது.

பொருளாதாரம் சுருக்கப்படுகின்ற போது மக்களின் வாழ்க்கை தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு ஏற்றுமதி விருத்தி காண்பதில்லை.

அந்த சந்தர்ப்பத்தில் டொலர் வருமானம் கிடைப்பதில்லை. கடனை மீள செலுத்துகின்ற காலத்தை குறைத்திருக்கின்ற ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாட்டை பாரிய சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பு நுகேகொடையில் நடைபெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களும் தொழிற்சாலைகளும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன.

ஆடை தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஏற்றுமதியை ஊக்குவிக்கின்ற வேலைத்திட்டங்கள் இல்லாத நிலையில், 2028 ஆம் ஆண்டு முதல் கடனை மீள செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக 220 இலட்சம் மக்களையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு, உற்பத்தியும் ஏற்றுமதியையும் அதிகரித்து, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, அனைவரையும் ஒன்றிணைத்த பொருளாதார அபிவிருத்தி ஒன்றையும் சுபீட்சத்தையும் உருவாக்கி வறுமையை ஒழிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டின் வறுமை நிலை 30 இலட்சத்திலிருந்து 70 இலட்சம் வரை அதிகரித்திருக்கின்றது என்பது ஜனாதிபதிக்கு தெரியாது.

வறுமையை போக்குகின்ற வேலைத்திட்டங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் நகர, கிராமிய, தோட்டப்புறங்களில் வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் காணப்படுகின்றன.

அது ஜனசவியவுக்கு சமனான நிலையில் 24 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா 20,000 ரூபா வீதம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் சொத்துக்கள் பராட்டே சட்டத்தின் மூலம் ஏலத்தில் விடப்படுவதை நிறுத்தியது ஐக்கிய மக்கள் சக்தியே.

பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியதோடு இந்த நிறுவனங்கள் மீண்டும் துளிர் விடுவதற்கு மூலதனத்தை பெற்றுக் கொடுக்கவும் வேண்டும்.

ஆனால் அவை இன்னும் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக டிசம்பர் 15 ஆம் திகதி முதல் வரையறுக்கப்பட்ட காலத்திற்கு பராட்டே சட்டமூலத்தை இடை நிறுத்துவோம்.

அதன் போது வர்த்தகங்களுக்கான மூலதனத்தையும் பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்தோடு பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய தொழில் முனைவர்கள் ஒரு மில்லியனை உருவாக்குவோம்.

அதற்கு மூலதனத்தையும் பெற்றுக் கொடுப்போம். திறமையும் ஆளுமையுமுள்ள பணியாளர் படையணியொன்றும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.

பகுப்பாய்வுகளையும், தரவுகளையும் மையப்படுத்திய அரசாட்சிக்கு செல்ல வேண்டும். மக்களை மையப்படுத்திய ஆட்சிக்குச் செல்ல வேண்டும். அனைத்து கொடுக்கல் வாங்கலும் முறையாக இடம்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

வாக்குப்பெட்டிகளை மாற்ற முடியுமா
Posted in இலங்கை செய்திகள்

வாக்குப்பெட்டிகளை மாற்ற முடியுமா

வாக்குப்பெட்டிகளை மாற்ற முடியுமா

வாக்குப்பெட்டிகளை மாற்ற முடியுமா ,வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, வாக்குப்பதிவு நிலையத்திலிருந்து வாக்கு எண்ணும் நிலையத்திற்கு அருகிலுள்ள கடைசி பொலிஸ் அரண் வரை வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால், சம்பந்தப்பட்ட வாக்குளிப்பு நிலையத்தின் பெயர், பின்வரும் வாகனத்தின் எண் மற்றும் வாகனத்தில் உள்ள

பிரதிநிதிகளின் பெயர்கள் உள்ளிட்ட விரிவான தகவலை அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரால் வாக்களிப்பு தினத்திலிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வழங்க வேண்டும்.

அதற்காக வழங்கப்படும் வாகன உரிமத்தை சம்பந்தப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் உள்ள சிரரேஷ்ட வாக்குளிப்பு நிலைய அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பெட்டி எந்த மாற்றமும் இன்றி வாக்கு எண்ணும் மையத்தில்

ஒப்படைக்கப்படுமா? என சில அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் சந்தேகம் தெரிவித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,500ஐ தாண்டியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் நேற்று மாலை 4:30 மணி வரையில் பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 3,610 ஆகும்.

இதுவரை 3,047 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி

மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி

மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி ,தமது அரசாங்கத்தின் கீழ் மீனவர்களுக்கு டீசல் மானியம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு

தேவையான உபகரணங்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்

வனவிலங்கு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம்
Posted in இலங்கை செய்திகள்

வனவிலங்கு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம்

வனவிலங்கு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம்

வனவிலங்கு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் ,யால தேசிய பூங்காவில் இருந்து 92 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உட்பட நூற்றுக்கணக்கான உள்ளூர் பூச்சிகளை கடத்த முயன்ற இத்தாலிய தந்தை மற்றும் அவரது மகனுக்கு 6 கோடி ரூபா (இல்ஙகை பெறுமதி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொகை 200,000 அமெரிக்க டொலர்களுக்குச் சமமாகும்.

பூச்சிகளை சட்டவிரோதமாக சேகரித்தல், வைத்திருத்தல் மற்றும் கடத்தியதற்காக கடந்த செப்டம்பர் மாதம் அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமானது வனவிலங்கு குற்றத்திற்காக இலங்கையில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதமாகும்.

திஸ்ஸமஹாராம நீதவான் தரிந்து சமீர டி சில்வா கடந்த 3ஆம் திகதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராக 810 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், பின்னர் அது 304 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இத்தாலியர்கள் சார்பாக ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகி, சந்தேக நபர்களை அனுதாபத்துடன் பார்த்து குறைந்தபட்ச அபராதம் விதிக்குமாறு நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பிரதிவாதிகளுக்கு உண்மைகளை விளக்கிய நீதவான், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதிவாதிகள் வெளிநாட்டு பிரஜைகள் என்பதால், இந்த வழக்கை விரைவாக தீர்க்க நீதிமன்றம் மிக விரைவாக செயல்பட்டு, அது தொடர்பான நிபுணர் அறிக்கைகளை உடனடியாக பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார்.

வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட விலங்குகளுக்கு எதிரான குற்றம் என்பதால், தாக்கல் செய்யப்பட்ட 304 குற்றச்சாட்டுகளிலும் இருவரும் குற்றவாளிகள் என்று நீதவான் கூறினார்.

அதன்படி, ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் உரிய அபராதத் தொகை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதுடன், அதன் மொத்தத் தொகை 6 கோடியே 1 இலட்சத்து 80,000 ரூபா என நீதவான் அறிவித்துள்ளார்.

இந்த அபராதத் தொகையை இம்மாதம் 29ஆம் திகதி செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அபராதத் தொகையை செலுத்தும் வரை இரு வெளிநாட்டவர்களையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளது.

கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு
Posted in இலங்கை செய்திகள்

கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு

கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு

கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு ,லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயர் ஒன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த தோட்டத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்தே கடந்த 10 ஆம் திகதி சிசுவின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய ஆட்டோ சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது மாவனல்லை பகுதியில் இருந்து தமது தோட்டத்துக்கு வந்திருந்த பெண் ஒருவரின் பையே அது என அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய 24 வயதான பெண் கைது செய்யப்பட்ட, விசாரிக்கப்பட்டார். தனக்கும், குறித்த ஆட்டோ சாரதிக்கும் இடையில் இருந்த தகாத உறவு காரணமாகவே குழந்தை பிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவனல்லை பகுதியில் தான் வேலை செய்யும் வீட்டில் வைத்து கடந்த 5 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளதாகவும், தனது சகோதரியின் உதவியுடன் குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சடலத்தை புதைப்பதற்காகவே ஆட்டோவில் அதனை அக்கரபத்தனை பகுதிக்கு எடுத்து வந்ததாகவும் பொலிஸாரிடம் அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதிகாலைவேளையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் சடலத்தை தாய் கண்டு அக்கம், பக்கத்தினருக்கு தகவல் வழங்கியதால் அதனை செய்யமுடியாமல்போனதாக ஆட்டோ சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் பொலிஸ் பாதுகாப்புடன் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இப்பெண்ணையும், ஆட்டோ சாரதியையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், குறித்த பெண்ணின் சகோதரியையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்

அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம்

அர்ச்சுனா கண்ணீர் உருக்க கடிதம் ,இப்போது தான் மனம் இரண்டாய் பிளந்து கிடக்கிறது..


11 வழக்குகளையும் தாண்டி 118 வது நாளாக தெளிவாக ஓடிக் கொண்டிருக்கிறேன்..
ஒவ்வொரு துரோகங்களையும் முதுகிலிருந்து கத்திகளாக கழட்டும் போது நெஞ்சம் வலிக்கிறது..


செலஸ்தீன் அண்ணாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துரோகத்திற்கான வரலாறு..
செலஸ்டின் அண்ணாவுக்கு நான் என்ன செய்தேன்?
மீண்டும் தம்பி ராசா?தம்பி லோக்கல் அரவிந்த்?அஜித்?கிஷோர்?
மது பிளாக்?இவர்களில் யாராவது சொல்லட்டும் நான் இவர்களுக்கு தீங்கிழைத்து இருக்கிறேன் என்று?


எல்லா தடைகளையும் தனியாக ஒருவன் தாங்கிக் கொண்டு 117 ஆவது நாளாக இன்றுவரை உங்கள் மத்தியில் நிற்கும் போது ஒன்றாக படித்த மருத்துவ சமூகமே நீதித்துறையுடன் சேர்ந்து முதுகில் குத்தும் போது?


பக்கத்தில் நிற்க வேண்டியவர்கள் முதுகில் குத்தி விட்டு தள்ளி நிற்கிறார்கள்?
அரசாங்கம் வஞ்சிக்கிறது என்று நினைத்தேன் சாவகச்சேரியில் இருந்து வெளியேறும் போது!


ஒன்றாக படித்த மெடிக்கல் அட்மினிஸ்ட்ரேஷன் எனக்கு எதிராக நிற்கிறது என்னை ஃபெயில் ஆக்கி கைதட்டி சிரித்துக்கொள்கிறது..
அப்போது கூட வலிக்கவில்லை..


ஆனால் ஒன்றாக நிற்கிறேன் ஒன்றாக சாப்பிடுவோம் ஒன்றாக தோளோடு போவோம் என்று சொன்னவர்கள் இப்போது தனித்தனி வீடியோக்கள் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்?


இதனையும் தாண்டி ஒருவன் நிற்கிறான் என்றால் ..
அதற்குப் பின்னாலும் எனக்காக சில பேர் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..


அது எனக்காக வந்த எனக்காக நீதிமன்றத்தில் என் சார்பில் நின்ற தங்கை கௌசல்யாவில் தொடங்கி மயூரன் வினோ பாரதி சஞ்சு விக்கி அண்ணா வன்னி மைந்தன் தளபதி சபே சோதி அக்கா நேசன் அண்ணா உதயா அண்ணன் எனது சொந்த சகோதரர்கள் மற்றும் தமிழ் என்ற உணர்வில் நிற்கும் தமிழனாய் பிறந்த ஒவ்வொரு மானிடனும் எனக்காக நிற்கிறான்..


அந்த ஒரு அரவணைப்பே போதும்..
ஜெயில் என்ன மரண தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்..
வைத்தியர்கள் அநீதி செய்கின்றார்கள் என நான் சொல்லவில்லை..
தாங்களாகவே ஓடிப்போய் வழக்குகளை போட்டு கொண்டார்கள்..


நீதிமன்றமும் சட்டவாளர்களும் வைத்தியர்களும் ஒன்றாக கிரிக்கெட் விளையாடி ஒன்றாக உணவருந்தி விட்டு ஒரே ஒருவனை குரல்வளையை போட்டு நசுக்கும் போது அது நீதிமன்ற அவமதிப்பு என்று சொன்னால் கூட எத்தனை வருடங்கள் எழுத முடியுமோ அத்தனை வருடங்கள் எழுதிக் கொள்ளுங்கள்..


தூக்கு தண்டனை எழுத முடியுமோ அதை கூட எழுதிக் கொள்ளுங்கள்..
எழுதிய பேனைகளை உடைக்கும் போது நீங்கள் உடைப்பது பேனையல்ல..
தமிழனின் குரல்வளைகளை என்பதை நினைவில் கொள்ளுங்கள்..


துரோகிகள் ஆகவே வாழ்ந்து பழகிப்போன தமிழினம் ஒருபோதும் நீதிக்கு தோள் கொடுக்காது..


அதற்காக அது அநீதி என தெரிகின்றபோது நீதிமன்றம் மட்டும் அல்ல தூக்கு மேடையிலும் சொல்லிக் கொள்வேன் அது அநீதி என்று!
சாகத் துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை என்பதை மறுமுறை ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்..


மருத்துவ துறையாக இருக்கட்டும் நீதித்துறையாக இருக்கட்டும்..
அநீதி என்பதை அநீதி என்று சொல்லுவதற்கு எதற்காக நான் பயப்பட வேண்டும்?
ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய அவர்களும் ஒன்றாக உணவு உண்டவர்களும் வழக்கு போட்டவர்களும் அவர்கள் தான் வழக்கை விசாரிப்பவரும் அவர்கள்தான்..
ஆனால் தன்னந்தனியாக நிக்கிறேன்..


கனம் நீதிபதியிடம் ஒரே ஒரு கேள்வி..
அன்று வெள்ளிக்கிழமை..


எல்லா வைத்தியர்களும் வைத்தியசாலையை விட்டு வெளிநடப்பு செய்த போது டிப்பரில் அடிபட்டு ஒரு தந்தையும் மகளும் கைகால் சிதைந்து ஏழு மணி அளவில் கிளிநொச்சி அம்புலன்ஸில் சாவகச்சேரிக்கு கொண்டு வந்த போது…


தாங்கள் நியாயமான வழக்குகள் என சொல்லிக் கொள்கின்ற அதே வழக்குதாரிகள் தான் யாழ்ப்பாணம் சுகாதார பிராந்திய பணிமனையில் ஒலிவாங்கிகளுக்கு முன்னாள் நின்று அவர்களுடைய உரிமைகள் பற்றி கதைத்துக் கொண்டிருந்தார்கள்..
அவர்கள் பக்கம் பக்கமாக எழுதி வாசித்துக் கொண்டிருந்தார்கள்..


ஐயா..
நீங்கள் அதைப் பார்க்கவில்லையா..
உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறது..
உங்களுக்கும் ஒரு அழகான மனைவி இருக்கிறார்..
அவர்கள் அன்று கால் சிதைந்து வந்திருந்தால்..


நீங்கள் என்னை நீதிமன்றத்திற்கு கேட்டு இருப்பீர்களா?? எல்லா வைத்தியர்களும் போனபோது நீர் ட்ரீட் பண்ண வேண்டியது உமது கடமை என்று..
கணம் நீதிபதி அவர்களே நான் ஒரு வைத்திய நிர்வாகி..


அன்று நான் எனக்கென்ன என்று நின்று இருக்கலாம்..
அப்போது அவர்கள் குருதிப்போக்காலே செத்து இருப்பார்கள்..
எனக்கு வழக்கு வந்திருக்காது..


அந்த 25 வைத்தியர்கள் தான் வழக்கில் அடைபட்டு இருப்பார்கள்.
அன்று நானும் எஞ்சி இருந்த மருத்துவ தாதியார்களும்தான் அந்த உயிரை காப்பாற்றினோம்..


அந்த உயிர் அன்று போயிருந்தால் எல்லாருக்கும் ஒரு செத்த வீடு.
அந்தக் குடும்பத்தை சற்று நினைத்துப் பாருங்கள்..


அங்கே ஒரு 18 வயது பெண் பிள்ளையை இழந்திருப்பார்கள்..
ஒரு தந்தையை ஒரு மனைவி இழந்து இருப்பார்…
இப்போது சொல்லுங்கள் அந்த உயிர்களை மட்டுமல்ல அந்த 25 வைத்தியர்களையும் காப்பாற்றியது யார்?


தொழிற்சங்க போராட்டம் என்று கொலை செய்யும் துணிந்தவர்களை நியாயமான வழக்குகள் என்று நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள்?
ஆம் என்னை அச்சுறுத்தினீர்கள்? அதில் என்ன சந்தேகம் இருக்கிறது..
வழக்கினை விசாரிக்காமலே வைத்தியசாலையை விட்டு வெளியே போகுமாறு நீங்களே சொல்கிறீர்கள்..


முதலில் ஒரு வழக்கினை விசாரிக்க வேண்டும்..
வைத்தியசாலை அத்தியாசகர் யார் என்பதை சுகாதார அமைச்சு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்..


அதன் பின்பு தானே ஐயா நீங்கள் முடிவெடுக்க முடியும் நான் வைத்தியசாலை வைத்திய அர்ச்சகர் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளேன் என்று?
லண்டனில் இருந்து படித்து விட்டு வந்து யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் சேர்ந்து ஒரு துடுப்பாட்ட மாட்டை கூட பிடிக்கத் தெரியாதவர்கள் இன்று லோயர்களாக நிற்கிறார்கள்.


உங்கள் கணம் நீதிமன்றத்தின் முன் அவர்கள் என்னை அவமானப்படுத்தும் போது திருப்பி ஒரு வசனம் கதைப்பதற்கு கூட தாங்கள் என்னை அனுமதிக்கவில்லை..


குற்றத்தை விசாரிக்காமலே குற்றம் ஆனவன் என நீங்கள் நினைத்து விட்டீர்கள் ஏனெனில் அவர்கள் உங்களுடைய கிரிக்கெட் ஆட்டத்தின் நண்பர்கள் அல்லவா…
நல்ல காலம் நான் வைத்தியர்களுக்காக விளையாடவில்லை..


நானும் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் சோப் போல் ஹார்ட் போல் இரண்டும் விளையாடினேன்..


நீதிபதி என்று பார்க்காமல் கூட பவுன்சர் அடித்திருப்பேன்…
முடியாவிட்டால் ஒரு புல் டோஸ்ட் ஆவது போட்டு இருப்பேன்…
எங்களுக்கு முதுகின் பின் கதைக்க தெரியாது..


ஆனால் இலகு தமிழில் நன்றாக கதைக்க தெரியும் தங்கள் மேல் நீதிமன்றம் என்னை கதைக்க கூட அனுமதிப்பதில்லை…


ஒரு குற்றவாளியை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலே சட்டம் தெரிந்தவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் ஒரு கரையில் கத்தும் போது நான் கை உயர்த்தினால் உமக்கு கை உயர்த்த கூட அனுமதி இல்லை அடைப்பேன் என்று சொல்லும் உங்கள் நீதி…
வாழ்க நீதிமன்றம்..


கனம் நீதிபதி அவர்களே..
உங்கள் மகன் உந்துருளியில் விழுந்து காதலும் மூக்காலும் இரத்தம் ஒழுக அன்று வெள்ளிக்கிழமை வந்திருந்த குழந்தையாக இருந்தால்..


அப்போது நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்..
25 வைத்தியர்களுக்கும் எதிராக தாங்கள் அப்போதே ஒழுக்காளற்று நடவடிக்கை எடுத்திருக்க மாட்டீர்களா?
எனக்குத்தானே வருகின்றபோது எல்லாரும் நினைத்துக் கொள்வார்கள் அது இரத்தம் என்று..


அடுத்தவனுக்கு வரும்போது அது தக்காளி தொக்கு தானே ஐயா..
இதே நீதிமன்ற நீதிபதி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன் நெஞ்சு வலி என்று ஒரு மாலை நேரம் 5 மணி அளவில் வந்திருந்த போது ETU வில் பார்க்க வேண்டிய வைத்தியர்கள் இருக்கவில்லை..
அன்றைய நாள்..


நான் ஈ டி உவிலும் வேலை இல்லை..
நான் ஒரு குழந்தை மருத்துவனாக முதலாம் ஓட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன்..
அன்று வந்த நீதிபதி எந்த வைத்தியரும் பார்க்காமல் 30 நிமிடங்களுக்கு மேல் நெஞ்சு வலியுடன் துடித்துக் கொண்டிருந்தார்..


அப்போது நான் பெர்மனெண்டாகவே குவாட்டர்ஸில் இருந்ததால் என்னிடம் உடனடியாக ஓடி வந்து சொன்னார்கள் ஒருவர் நெஞ்சுவலிகள் இருக்கிறார் வந்து பார்க்க இயலுமா என்று..


ஐயா சட்டம் கதைப்பதாக இருந்தால்..
நான் அன்று சொல்லி இருக்கலாம்..
நான் முதலாம் வோட்டில் வேலை..
ஆதலால் பார்க்க முடியாது என்று..


எனக்கு அன்று சென்று அவருடைய ஷர்ட் கழட்டுமாறு கூறியபோது தாதிகள் ஒரு மாதிரி நெளிந்தார்கள்..


நான் அவரை சொன்னேன் தயவுசெய்து சேட்டை கழட்டுங்கள் அப்போதுதான் இசிஜி போட முடியும் என்று..


அவர் ஷூட்டை கழட்டிய போது நான் ஸ்க்ரீன்களை போட்டு மறைத்து கொண்டேன்..
மற்றக்கட்டிலில் பெண்மணிகள் இருந்தார்கள்..


அன்று நான் அவருக்கு மருத்துவம் செய்யாது விட்டிருந்தால்..
அன்று நான் யாரோ ஒருவர் தானே என எனது வேலையை பார்த்துக் கொண்டிருந்திருந்தால்..


அந்த நீதிபதி இழக்கப்பட்டிருப்பார்..
சட்டமும் நீதியும் வெளியே கதைக்கலாம்..
நான் அங்கு வேலை இல்லை என சொல்லிவிட்டு நடந்து போய்விட்டிருக்கலாம்..
ஆனால் ஒரு நீதிபதியின் வீட்டில் சாவு விழுந்திருக்கும்..
ஒரு நீதிமன்றமே கலங்கி போயிருக்கும்..
இது பொய் என்றால்..


தயவுசெய்து 2019 ஆம் ஆண்டு வரை நீதிபதியாக இருந்த நீதிபதியிடமே போய்க் கேளுங்கள்..
அவர்தான் என்னுடைய விவாகரத்து வழக்கையும் தன்னுடைய தனிப்பட்ட அறையில் கூப்பிட்டு விசாரித்தார்..


அவர்களும் நீதிபதிகள் தான்..
அவர்களும் கடவுள்கள்தான்..


இதை நான் எழுதுகிறேன் என்பதற்காக 26 ஆம் தேதி நான் வராமல் விடப்போவதில்லை..
எப்படியும் உங்களோடு தோல் நின்று படமெடுத்த சட்டத்தரணிகள் இவற்றையும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொண்டு வருவார்கள்.


அப்போது நீங்கள் சொல்லுவீர்கள்..
நீங்கள் மனத்தியாலகணக்காக எழுதுவதை நான் வாசிக்க வேண்டுமா என்று.
ஆம்..


தீர்ப்பு வழங்குவதாக இருந்தால் ஒரு விடயத்தை தீர விசாரிக்க வேண்டும் என்பது நீதி என்பது பொதுமக்களுக்கு தெரியும்..


ஒருவன் வழக்கினை இடும் போது அவனைப் பார்த்து பொய் வழக்கு இடுவே ஆனால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என தாங்கள் கூறும் போது எனது நெஞ்சம் சில்லிட்டு போனது..


ஒரு வழக்கை விசாரிக்காமலே பொய் வழக்கு என தீர்மானிக்கும் தங்களுடைய மேலான திறமையை நான் எங்கே சென்று வஞ்சுவது..


வைத்திய சாலையில் உள்ள நோயாளர்களை உள்ள தாதியர்களை உள்ள ஊழியர்களை ஒரு தரப்பு விருத்தி கடிதம் கொண்டு வந்து தங்களிடம் தரும் போது அதையும் வேண்டிப் பார்க்கிறீர்கள்..


மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நான் அதற்குரிய கடிதத்தை கொண்டுவந்து நீட்டும் போது அதை எதிர் தரப்பு சட்டத்தரணிகள் சொல்லுகிறார்கள் அவற்றை கதைக்கின்ற அடிப்படை உரிமை கூட குற்றம் சாட்டப்பட்டவருக்கு இல்லை என்று.


அப்படி என்றால் ஐயா..
நாங்கள் வைத்தியம் பார்க்கும்போது..
நோயாளிகளிடம் சொல்ல வேண்டும் நீங்கள் கதைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்று..


எனது மருத்துவம் சொல்லிக் கொள்கிறது..
மீண்டும் சொல்கிறேன் எனது மருத்துவம்..
நோயாளிகளை மாத்திரமே சிகிச்சை அளிக்க வேண்டுமே ஒழிய நோயாளிகளின் ரிப்போர்ட்களை அல்ல என்று..


ஏனோ தெரியவில்லை..
இன்று வரை மனம் சொல்கிறது..
நீதி கிடைக்கும் என்று..


இல்லை அந்த நீதி மறுக்கப்பட்டால் அதற்கு உயரிய உயரிய நீதிமன்றங்களை நாடவேண்டிய பொறுப்பு என்னிடம் இருக்கிறது..


எனக்கு வந்த லோயரே என்னைப் பற்றி முகப்புத்தகத்தில் எழுதும் போது..
அவரை நான் விலக்கி இருக்கிறேன்..


எனது மருத்துவ தர்மத்தில் ஒரு நோயாளி தனது உடம்பை கொண்டு வந்து எனது கைகளில் எடுக்கும்போது அவனை முட்டு முழுதாக ஏற்றுக் கொள்கிறேன்..
நீதி மருத்துவத்திற்கு மேலானது..


ஆனால் நீதியே குரல்வலையை நசுக்க கூடாது அல்லவா..
எனக்கு நீதிமன்றத்தில் கதைக்கின்ற உரிமை இல்லாதபோது..
எனது நியாயத்தை சொல்ல முடியாத போது..


நான் எங்கே சென்று சொல்லுவேன்..
பொதுமக்கள் இதைக் கேட்கட்டும் வாசிக்கட்டும்..
எனக்குத் தண்டனை தூக்கும்படியாக இருந்தால் கூட ராமநாதன் அர்ச்சுனா சிரித்துக்கொண்டே செல்வான்..


முடிந்தால் எழுதிவிட்டு உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்கள்..
உங்களுக்கு என்ன ஐயா..


யாழ் போதனா வைத்தியசாலை சென்றால் வைத்தியசாலை நிர்வாகி சத்தியமூர்த்தியே வந்து உங்களை உள்ளே அழைத்துச் செல்வர்.
ஆனால்..


இதை வாசிக்கின்ற ஒரு தமிழன் வாயிலில் லைனில் தான் நிற்க வேண்டும்..
அவன் ஒப்பிடியில் இருந்து மருந்து எடுத்து வரும்போது வீட்டில் உலை வைத்திருக்க மாட்டார்கள்..


இதை வாசிக்கின்ற ஒவ்வொருவனும் நிலத்திலே தான் படுக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் செல்லும்போது பஞ்சு மெத்தை தருவார்கள்..
முதலாவது கட்டிலில் விடுவார்கள்..


நீங்கள் இருமு முன்னரே உங்களுக்கு ஆவி பிடிப்பார்கள்..
வயிறு நோகின்றது என மெல்லமாக சொன்னாலே 12 மருத்துவர்கள் உங்களை சுற்றி நிற்பார்கள்.


ஆனால் பாமர தமிழனுக்கு..
அது கொலையே நடந்தால் கூட..
ஒவ்வொரு சிந்துஜாவாக மட்டுமே மாறிக்கொள்ளலாம்..
சிந்துஜாவின் கணவன் கூட இப்போது சிந்துஜாவுடன் சேர்ந்திருக்கிறான்..
அதற்கான நீதி எங்கே?


அந்தக் குழந்தைக்கான அம்மா அப்பா எங்கே?
அதை என்ன நடந்தது என்று பார்க்க சென்ற என்னை வைத்தியரிடம் கேட்டுவிட்டு உள்ளே சென்ற என்னை உங்கள் மீது ஐந்து நாள் சிறைச்சாலைகள் அடைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டது..


ஆனால்..
எனது வைத்திய சாலையில்.


நான் நிர்வகிக்கின்ற வைத்திய சாலையில் உங்களுடைய நண்பன் கிரிக்கெட் கேப்டன் மன்னிக்கவும் வைத்தியர்களுடைய கிரிக்கெட் கேப்டன் உள்ளே வந்து அடித்து விழுத்தி என்னுடைய மொபைல் போனை பார்த்து என்னுடைய காசைப் பறித்து எனக்கு எதிராகவே வழக்கு போட்டு தங்களிடம் வந்த போது..


தாங்கள் ஜெயிலுக்கு அனுப்பவில்லை…
ஏன் சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு கூட வரவில்லை..
ஏனெனில் உங்கள் நண்பன் ஆயிற்றே..


அவரை நீங்கள் அரெஸ்ட் பண்ணுமாறு ஒருநாளும் சொல்லப்போவதில்லை..
இதே உங்களுடைய நீதிமன்றத்தில் இன்னொருவர் வந்து உங்களை அடித்து விழித்தியிருந்தால்..


உங்கள் தொலைபேசியைப் பறித்து அதை போலீஸ் நிலையத்தில் நிலத்தில் கிடந்ததாக கொடுத்திருந்தால் தங்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும்?
அப்போது கூட நீங்கள் நீதிமன்றத்தில் வைத்து என்னை கேட்கிறீர்கள் ஒருவரை படம் எடுக்க செல்லும்போது போனை பார்த்து அடிப்பதில் இன்னொரு பிழை இருக்கின்றது என்று?


நான் தமிழன் என்று சொல்லவே வெட்கி தலைகுனிகிறேன்..
2021 ஆம் ஆண்டு சாவகச்சேரி வைத்திய சாலையை விட்டு நான் வெளியேறும் போது எல்லாரிடமே சொன்னேன் நான் இறந்தால் கூட எனது உடலை ஆணை இரவு தாண்டி இங்கால் கொண்டு வர வேண்டாம் என்று…


ஆனால் இந்த முறை மருத்துவ நிர்வாகியாக மாறிய போது ஒவ்வொரு நண்பனும் அடித்து கேட்டான். மச்சான் சாவத்திரி ஹாஸ்பிடல் மாற்ற முடியாதா?
நீயும் வராவிட்டால் யார் மச்சான் இதை மாற்றுவது என்று?
சொன்னவனை தேடிக் கொண்டிருக்கிறேன்..
கௌரிசன்..


இப்போது சித்தருடன் சேர்ந்து நிற்கிறான்..
வாழ்க்கை..
ஒரு வட்டம்..
இன்னும் 20 வருடம் தான் வாழ்வேன்..
ஆனால்..


அவை சிறைச்சாலையில் என்றால் கூட உண்மையை சொல்லிவிட்டு உள்ளே போனவன் என்ற பெயருடனே வாழுவேனே தவிர கை கால்களில் விழுந்து கெஞ்சி அழுது மானமற்ற தமிழனாக வாழ மாட்டேன்
நான் மேதகு எனப்படுகின்ற ஒரு தெய்வத்தை பார்த்து வளர்ந்தவன்..
நாங்களும் அங்கே வளர்ந்ததாக சொல்லிக் கொள்கிறார்கள்..


நல்ல காலம் மேதாகு உயிருடன் இல்லை.. என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
அவரின் நீதிமன்றத்தில் இவ்வாறு நடந்ததில்லை..


எனது தந்தை அவரின் நீதி கட்டமைப்பில் ஒரு பெரிய பங்கு வகித்தவர்..
ஒரு இளம் ஆசிரியையை முள்ளியவளையில் பாலியல் வன்முறை கொலை செய்ததற்காக நான் நினைக்கிறேன் விசுவா நடுவில் வைத்து மின்கம்பத்தில் இணைக்கப்பட்டு அந்தப் பெரிய போராளி சுடப்பட்டர்..


அப்போது கூட நீங்கள் அங்கே தான் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..
எழுதலாம் எழுதிக் கொண்டே போகலாம்..
என்ன..


நீங்கள் மறுபடியும் சொல்வீர்கள் இவற்றையெல்லாம் வாசித்துக் கொண்டிருப்பதால் எனக்கு வேலை என்று..
வைத்தியர்கள் போட்ட வழக்குக்கு மேலாக வழக்கை போடும்படி உபதேசிக்கும் தாங்கள்..


வைத்தியசாலையில் வந்து அடிக்கும்போது கூட உங்களுடைய கிரிக்கெட் மேட்சின் நண்பனை இன்றுவரை அரெஸ்ட் பண்ணவில்லை..
அது ராஜகாரிய வதகிரிமை இல்லையா ஐயா..
அன்னார் நீதிமன்றத்தில் நீதி ஒன்று..
சாவகச்சேரி நீதிமன்றத்தில் நீதி ஒன்று..
வாழ்க தமிழினம்..


சமூகத்தின் முன்னோடிகளாக வாழ வேண்டியவர்களே சமூகத்தின் குரல்வளையை நெறுத்திக் கொண்டிருக்கிறார்கள்..
எனக்கு இப்போது நம்பிக்கை இருக்கிறது…


நான் என்றாவது ஒருநாள் சிறையில் இருந்து வெளியால் வந்தால்..
அப்போது என்னுடன் தமிழினமே நிற்கும்..
இப்போது கூட நிற்கிறது..


புரியவில்லை என்றால் அயல் வீட்டில் உள்ள குழந்தை இடம் கேட்டுக் கொள்ளுங்கள்..
சில வேளைகளில் உங்களுடைய மனைவியும் உங்களுடைய குழந்தைகளும் என்னுடைய லைவை பார்த்துக் கொண்டிருப்பார்கள்..
அவர்களிடம் கேளுங்கள்..யார் குற்றம் இழைத்தவன்..யார் நிரபராதி..
நீதிக்கான தேடலில் என்னை இழந்தாலும்.


எனது தமிழினத்தை அழிக்க விடமாட்டேன்..
உங்கள் முன்னாலே உங்களுடைய சட்டவாளர்கள் சொல்லிக் கொள்கிறார்கள் வடிவேல் போல் இருக்கிறார் என்று..


ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என நிரூபிக்க முடியாத ஒருவரை ஒரு சட்டவாளர் வந்து அவ்வாறு கதைக்கும் போது உங்களுடைய கனமான நீதிமன்றம் சிரித்துக் கொண்டது…


இவையெல்லாம் வெளியே தெரிய வாய்ப்பில்லை..
நான் இதுவரை இவ்வாறான ஒரு நீதிமன்றத்தை பார்க்கவில்லை..
யாழ் நீதிமன்றத்திற்கு கூட சென்றேன்..


நீதிபதி மிகவும் கண்ணியமாக நடந்து கொண்டார்.
ரெட்ட தெளிவாக சம்பந்தப்பட்ட சட்டவாளரிடம் சொன்னார் நீங்கள் கதைக்க வேண்டாம் என்று..


நீதி சாகவில்லை..
மேல் நீதிமன்ற நீதி அரசர் என்று சொல்லிக் கொண்டு வந்த ஒருவரே தமிழினத்தை அழித்து இதுவரை அரசியல் செய்து கொண்டிருக்கும்போது.
தங்களுக்கு மிகவும் நீண்ட பாதை இருக்கிறது..


தாங்களும் ஒரு அரசியல்வாதியாக வந்தால் எமது இனம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.


அரசியல் மேடையில் நானும் நிற்பேன்..
மன விரக்த்தியுடன் எழுதவில்லை..
மனமுடைந்து எழுதுகிறேன்.


எனது கொழும்பில் உள்ள சட்டவாளர் சொல்லி இருக்கிறார், தங்களுக்கும் முறைப்பாட்டாளருக்கும் சமூக தொடர்பு இருப்பதால் தாங்கள் ஏதோ ஒரு செக்ஷனின் படி நீதிபதியாக இருக்க முடியாது என்று..


அந்த செக்ஸன் எல்லாம் எனக்கு தெரியாது ஐயா..
அவரே வந்து சொல்லுவார்..
அல்லது மேலும் மேலும் நீதிமன்றங்களை நாங்கள் நாடுவோம்..
மறுபடியும் சொல்கிறேன்..


சாகத் துணிந்தவனுக்கு தூக்குமடையும் பஞ்சு மெத்தையே.
நீங்கள் தூக்குமடையையே எழுதி சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்..


ஆனால் உங்களுடைய குடும்பத்திடம் ஒருமுறை ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள்..
உங்களுடைய அழகான மனைவியும் அழகான குழந்தைகளும் நன்றாக வாழ்வார்கள்.
ஆனால் ஏனைய வீதியிலும் பூநகரி வீதியிலும் வாழைப்பழம் வீக்கம் எனது தமிழினம் எப்போது நிமிர்ந்து வாழ்வது?


தாங்கள் என்னை உயிருடன் விடும் பட்சத்தில்..
என்னும் ஒரு 20 வருடங்கள் தமிழனுக்காகவே வாழ்ந்து போவேன்…
முடிந்தால் நான் கூட்டமானவன் என எபரையாவது நிரூபிக்க சொல்லுங்கள்..
தமிழனுக்கு ஆக சாக துணிந்தவன்.

மாறாக வீழ்த்தவே முடியும். எனவே பொருளாதார வீழ்ச்சியை விரும்பாதவர்கள் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது, திருக்கோவிலுக்கு அபிவிருத்தியும் கிட்டாது.” என்றார்.

இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் தந்து முகநூலில் பதிவிட்டுள்ளார் ,இந்த பதிவில் வன்னி மைந்தன் ஆகிய என்னையும் சுட்டி காட்டியுள்ளார் ,அதற்கு மிக்க நன்றி அர்ச்சுனா ,என்றும் உங்களோடு நிற்போம் கவலை விடுங்கள் .

ரணில் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படும்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படும்

ரணில் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படும்

ரணில் பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படும் ,இன்னும் 20 வருடங்களில் சிறந்த நாட்டில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை இந்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை உருவாக்க எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, சஜித்துக்கும் அநுரவுக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப எந்த திட்டமும் இல்லை எனவும் அவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சீர்குலைந்தால் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் எவராலும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று (11) இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து அனைவரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த 05 வருடங்களில் இந்த வேலைத் திட்டத்தை வலுவாக அமுல்படுத்தி நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் தமது பிள்ளைகளின் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“2004 ஆம் ஆண்டு சுனாமிக்கு பின்னர் நான் இங்கு வந்தேன். கோவில் பகுதிக்கு சென்றிருக்கிறேன். நாட்டை பொருளாதாரத்தை கட்டியெழுப்பும்போது திருக்கோவில் பகுதியையும் பலப்படுத்துவோம்.

நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்த வேளையிலேயே நாட்டை ஏற்றேன். 2022 அத்தியாவசிய பொருட்கள் ஒன்றும் எமக்கு கிடைக்கவில்லை. மின்சாரமும் இருக்கவில்லை. கஷ்டங்களுடன் வாழ்ந்தோம். பெண்கள் அதனை மறந்திருக்க வாய்ப்பில்லை. அன்று இப்போதிருக்கும் முன்னேற்றம் கிட்டும் என்று நினைக்கவில்லை.

அனுரவும் சஜித்தும் அன்று இருக்கவில்லை. ஆனால் நான் ஏற்றதால் நாட்டில் தட்டுப்பாடுகள் நீங்கி நல்ல நிலைமை காணப்படுகிறது. அதனால் மக்கள் சுமூகமாக வாழ முடிந்துள்ளது. அன்று பொருட்களின் விலை அதிகரித்தித்து காணப்பட்டது. ரூபாவின் பெறுமதி பெருமளவில் அதிகரித்திருந்தது.

இன்றும் மக்கள் வாழ்க்கை சுமைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். இருப்பினும் எனது முயற்சிகள் ரூபாவின் பெறுமதியை அதிகரிக்கச் செய்தமையால் ஓரளவு சுமூகமான நிலைமை வந்திருக்கிறது. பொருட்களின் விலையும் குறைந்திருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே மக்கள் மீது சில சுமைகளை சுமத்த வேண்டியிருந்தது. சர்வதேச நாணய நிதியம் எமது கடன் சுமை அதிகரித்தால் நாட்டின் நெருக்கடி மேலும் உக்கிரமடையுமென அறிவுறுத்தியது.

நான் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீத கடனை மட்டும் பெறுவதற்கு மாத்திரம் அனுமதி கிடைத்தது.

இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே முன்னேற்றங்களை ஏற்படுத்தினோம். அதற்காகவே மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம்.

அடுத்த ஐந்து வருடங்களில் சுமையை மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம். பொருட்களை கொள்வனவு செய்யவும் வாய்ப்பளிப்போம்.

இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்திருக்கிறோம். விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளை இங்கும் முன்னெடுக்கலாம்.

திருக்கோவில் பகுதியிலும் விவசாய அபிவிருத்திக்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இங்குள்ள கடல் வளத்தினாலும் பயனடைய முடியும்.

மீன்பிடித் தொழில், சுற்றுலாத்துறை, கனிய வள வர்த்தகத்தைப் பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். விவசாயத்தை நவீனமயப்படுத்தி உலக உணவு உற்பத்தியில் பங்கெடுப்போம்.

திருகோணமலையில் பாரிய முதலீட்டு வலயத்தை உருவாக்குவோம். நாட்டின் அபிவிருத்தியை விரிவுபடுத்துவோம்.

மாகாண சபையை செயற்படுத்தி இப்பகுதி மக்களின் அபிவிருத்திக்கும் இளையோருக்கு நம்பிக்கை தரும் நாட்டையும் கட்டியெழுப்ப வேண்டும். இன்றைய சிறுவர்களுக்கு 25 வயதாகும்போது அவர்கள் முன்னேற்றமடைந்த நாட்டில் வாழ வேண்டும் என்பதே எமது இலக்காகும்.

சஜித்தினாலும், அநுரவினாலும் அதனை செய்ய முடியாது. வாய் பேச்சினால் எவர் வேண்டுமானாலும் சாதிக்கலாம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவர்களால் முடியாது.

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு.
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு.

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு.

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு. ,தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை, தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வட மாகாண ரீதியாக பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

என்னை தோற்கடிக்க பாரிய சதித்திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

என்னை தோற்கடிக்க பாரிய சதித்திட்டம்

என்னை தோற்கடிக்க பாரிய சதித்திட்டம்

என்னை தோற்கடிக்க பாரிய சதித்திட்டம் ,நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் குழுக்களுக்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிருலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தனது வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் சதிகளை மேற்கொண்டாலும் பலனில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “இன்று சஜித் பிரேமதாசவின் வெற்றியை எல்லா முடிச்சுகளையும் போட்டு தடுப்பதுதான் அந்த அரசியல்வாதிகளின் ஒரே இலக்கு.

சாத்தியமான அனைத்து சதிகளும் செய்யப்படுகின்றன.

ஆனால் அவர்கள் இருவரும் ராஜபக்சக்களின் முன்னாள் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இருவரும் ராஜபக்சேவுடன் அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.

நினைவில் கொள்ளுங்கள், நாட்டை வங்குரோத்து செய்த குழுவோடு என்றும் சஜித் பிரேமதாசவும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணையாது.

எனவே, 21 ஆம் திகதி, உங்கள் மதிப்புமிக்க பங்களிப்பைப் பயன்படுத்தி, நாட்டு மக்களுக்கு ஒரு முற்போக்கான திருப்புமுனைக்கு முன்முயற்சி எடுப்போம்” என்றார்.