Posted in இலங்கை செய்திகள்

வாங்கிய 200 மில்லியன் டொலர் கடனை செலுத்த முடியா திணறும் இலங்கை

வாங்கிய 200 மில்லியன் டொலர் கடனை செலுத்த முடியா திணறும் இலங்கை

இலங்கைக்கு பங்களாதேஸ் இருநூறு மில்லியன் டொலர் கடனை வழங்கியது


இவ்வாறு பெற்று கொண்ட கடனை மீள செலுத்திட ஒருவருடம் கால அவகாசம் வழங்க பட்டுள்ளது.

இதுபோல இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    முல்லைதீவில் -பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியவர்-விழுந்து மரணம்

    முல்லைதீவில் -பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியவர்-விழுந்து மரணம்

    முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணுக்கேணி கிழக்கு பகுதியில் வீட்டு காணியில் இருந்த பலாமரத்தில் பலாப்பழம் பறிக்க மரத்தில்

    ஏறிய முதியவர் தவறி விழுந்து மரணமான சம்பவம் கணுக்கேணி கிழக்கு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று மாலை மரத்தில் பழுத்திருந்த பலாப்பழத்தினை வெட்டுவதற்காக ஏறிய

    கணுக்கேணி கிழக்கு முள்ளியவளை பகுதியில் வசித்து வந்த 72 வயதுடைய தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முள்ளியவளை
    பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      அரசாங்கம் பலமிழந்து போய்விட்டது- கண்டுபிடித்தார் கஜேந்திரன்

      அரசாங்கம் பலமிழந்து போய்விட்டது- கண்டுபிடித்தார் கஜேந்திரன்

      அவசரகால சட்டம் போன்ற நடவடிக்கைகள் தற்போதைய பொருளாதாரத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையையே ஏற்படுத்தும் என தமிழ்

      தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

      அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.

      மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது தடவையாக அமுல்படுத்தி உள்ளார்கள். மக்கள்

      முழுமையாக அரசாங்கத்தை எதிர்க்கும் நிலைக்கு வந்திருக்கின்ற வேளையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து விடாமல் அனைத்து

      மாவட்டங்களிலும் பரவவிடாமல் நெருக்கடியை ஏற்படுத்தவும் தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.

      தேர்தலொன்று நடைபெற்றால் கிட்டத்தட்ட 30 ஆசனங்களை மட்டுமே பெறக்கூடிய நிலையிலேயே மிக மோசமாக அரசாங்கம் பலமிழந்து போய்விட்டனர்.

      கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக நிதி அமைச்சு சார்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில்

      சர்வதேச நாணய நிதியம் உதவி செய்வதாக இருந்தால் அதற்கு அரசு ஸ்திரத்தன்மையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

      அரசை ஆளும் அரசாங்கம் ஸ்திரத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மிக மோசமான
      லைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை ஏற்படுத்தும்.

        Posted in Uncategorized

        கிளர்ச்சி படைகள் அதிரடி தாக்குதல் – 11 இராணுவம் பலி

        கிளர்ச்சி படைகள் அதிரடி தாக்குதல் – 11 இராணுவம் பலி

        எகிப்து நாட்டின் Sinai பகுதியில் கிளர்ச்சி படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் அரச

        இராணுவத்தினர் பதினொரு பேர் பலியாகியுள்ளனர்

        மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் ,

        கடந்த ஒரு ஆண்டுகளில் இடம்பெற்ற மிக பெரும் தாக்குதலாக இது பார்க்க படுகிறது

        ,இதுவரை எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை

        இராணுவ உளவுத்துறையினர் தமது கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர்

          Posted in Uncategorized

          கிராமத்துள் நுழைந்து 48 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

          கிராமத்துள் நுழைந்து 48 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

          வடமேற்கு மத்திய நையீரியாவில் உள்ள மூன்று கிராமங்களும் ஆயுதங்களுடன் நுழைந்த ,ஆயுத கொள்ளை ரவுடிகள் அந்த மக்கள் மீது திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினர்.

          இதில் 48 மக்கள் பலியாகியும் பலர் படுகாயமடைந்தனர்.

          அங்குள்ள மாடுகள் ,மற்றும் ஆடுகளை இவர்கள் திருடி செல்வது வழமையாக உள்ளது .

          ,சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த இராணுவ,மற்றும் பொலிசாருக்கு இடையில் கடும்.

          மோதல் இடம்பெற்றது ,இதில் போலீசார் வண்டிகளை தீ வைத்து எரித்ததுடன் இருவரை சுட்டு கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

          தற்போது இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.

            Posted in Uncategorized

            காட்டு தீயில் எரிந்த கிராமம் – 8 பேர் உடல் கருகி மரணம்

            காட்டு தீயில் எரிந்த கிராமம் – 8 பேர் உடல் கருகி மரணம்

            Siberian , Krasnoyarsk பகுதியில் திடீரென பற்றி பிடித்த காட்டு தீயினால் அந்த


            கிராமத்தின் ஒருபகுதி எரிந்து அழிந்துள்ளது ,இந்த தீயில் சிக்கி இதுவரை எட்டு பேர்

            உடல்கருகி பலியாகியுள்ளனர் ,விலங்குகள்,மற்றும் வீடுகள் என்பன தீயில் அழிந்துள்ளன

            புயலின் வேகம் காரணமாக இந்த தீ அடர்த்தி கொண்டு பரவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்

              லூசியம் பகுதியில் 17 கத்தி குத்து தாக்குதல் -6 பேர் மரணம் – பொலிஸ் கண்காணிப்பு தீவிரம்

              லண்டன் லூசியம் பகுதியில் கடந்த சித்திரை மாதத்தில் மட்டும் பதினேழு கத்தி குத்து.

              வன்முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ,இதில்,இதுவரை பாதிக்க பட்ட ஆறுபேர் மரணமாகியுள்ளனர்.

              இந்த சம்பவங்கள் Croydon, Lewisham, Bromley, Southwark, Lambeth, Beckenham, Orpington, and Streatham. பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

              இந்த திடீர் அதிகரித்த வன்முறைகளை கட்டுப்படுத்த போலீசாருக்கு அதிகாரங்கள் .

              அதிகம் வழங்க பட்டுள்ளதுடன் ,தீவிர ரோந்து கண்காணிப்பு மற்றும் ,இரகசிய கமரா கண்காணிப்புக்கள் பல பகுதிகள் உட்படுத்த பட்டுள்ளது.

              சந்தேகத்திற்கு இடமானவர்கள் சோதனைக்கு உள்ளாக்க படுவதுடன் ,அவர்கள்

              கண்காணிப்பு பாகுதிக்குள் உள்ளாக்க பட்டு வருகின்றனர்.

              ஆசிய நாட்டவர்கள் அதிகம் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளது பதிவாகியுள்ளது

              ,இதனை தடுக்க இந்த விசேட படையினர் சிவில் உடையில்
              சுற்றிய வண்ணம் உள்ளனர்.

                Posted in சினிமா

                சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்

                சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்

                மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாய்பல்லவி எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

                சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
                சாய்பல்லவி


                மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய

                அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில்

                ஒருவரானார். பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச்

                சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

                தற்போது சாய்பல்லவி படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு வருகிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஷியாம் சிங்காராய் படம்

                ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தும் எந்த படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.

                அவரது கடைசி படமாக ராணா டகுபதியுடன் விராட பர்வம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

                சமீபத்தில் தயாரிப்பாளர்கள் ஜூலை 1-ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும் இதன் பிறகு வேரு எந்த படங்களிலும் சாய் பல்லவி

                நடிக்க சம்மதிக்காதது ரசிகர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாய்

                பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதோ என்பதுதான் அந்த சந்தேகம்.
                இது பற்றி இணையத்தில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

                  Posted in சினிமா

                  அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா

                  அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா

                  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அடுத்ததாக அம்மா அவதாரம் எடுத்துள்ளார்.

                  அம்மா அவதாரம் எடுத்த நயன்தாரா..
                  நயன்தாரா


                  நயன்தாரா நடித்து முடித்திருக்கும் படம் ‘ஓ-2’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட

                  இருக்கிறார்கள். சமீபத்தில் கொரோனாவால் ஆக்சிஜன் என்பது எவ்வளவு அவசியம்

                  என்பதை அனைவரும் தெரிந்து கொண்டோம். அதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் விக்னேஷ்.

                  விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சினைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்சிஜன்

                  சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “ஓ-2”. தமிழ்நாடு,

                  கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.”
                  இந்த படத்தில் அம்மா பார்வதியாக நயன்தாரா நடிக்கிறாராம்.

                    Posted in உலக செய்திகள்

                    மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி- வெற்றி பெற்ற தம்பதி

                    கணவன் மார்கள் தங்கள் மனைவியை தோளின் பின்புறம் சுமந்தப்படி ஓடினார்கள். சேறு, மணல்மேடு, குட்டை, ஆகியவற்றை கடந்து ஓடினர்.

                    ஹங்கேரியில் மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி- வெற்றி பெற்ற தம்பதிக்கு எடைக்கு எடை ‘பீர்’
                    மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி

                    ஹங்கேரி நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மனைவியை கணவன் மார்கள் தோளில் சுமந்து செல்லும் ஓட்டப்பந்தயம் நடத்தப்படுகிறது.

                    மொத்த பந்தய தூரம் 260 மீட்டராக நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேறு, குட்டை, மண்ல்மேடு, டயர்கள் ஆகியவற்றை கொண்டு தடைகள் அமைக்கப்பட்டன.

                    இந்த தடைகளை மனைவியை தோளில் சுமந்தபடி கணவர்கள் தாண்டிச் செல்ல வேண்டும்.

                    இப்போட்டியில் ஏராளமான தம்பதிகள் கலந்து கொண்டனர். கணவன் மார்கள் தங்கள் மனைவியை தோளின் பின்புறம் சுமந்தப்படி ஓடினார்கள். சேறு, மணல்மேடு, குட்டை,

                    ஆகியவற்றை கடந்து ஓடினர். இதில் ஒரு சிலர் கீழே விழுந்தனர். போட்டியில் பங்கேற்றவர்களை கை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.

                    இப்போட்டியில் முதலிடம் பிடித்த தம்பதிக்கு பரிசு பொருட்களும், எடைக்கு எடை பீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.

                    Posted in Uncategorized

                    கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு

                    கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு

                    சென்னை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 1000 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

                    சென்னை இரட்டை கொலை: கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு
                    தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன் கைப்பற்றப்பட்ட நகைகளை பார்வையிட்டார்

                    சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55).

                    தொழில் அதிபரான ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலையில் சென்னை திரும்பினர்.

                    இந்த நிலையில் இருவரும் கொடூரமாக தங்களது கார் டிரைவரால் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் பகுதியை மட்டுமின்றி சென்னை மாநகரையே அதிர வைத்துள்ளது.

                    இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

                    தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனுராதாவும், அமெரிக்காவில் உள்ள தங்களது மகள் சுனந்தாவை பார்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

                    க ொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த், அனுராதா

                    கர்ப்பிணியாக இருந்த மகளுக்கு குழந்தை பிறந்ததும் சில மாதங்கள் அமெரிக்காவிேலயே தங்கி இருந்த கணவன்-மனைவி இருவரும் அமெரிக்காவில்

                    இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். இருவரையும் அவர்களது டிரைவர் கிருஷ்ணா மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.

                    அங்கு வைத்து தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் திடீரென தாக்கிய டிரைவர் கிருஷ்ணா இருவரையும் வீட்டில்

                    வைத்தே துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். ஏற்கனவே வீட்டில் இருந்த நகைகளை மூட்டை கட்டி வைத்திருந்த டிரைவர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியும், தொழில்

                    அதிபரையும் அவரது மனைவியையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர்.

                    தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள சூலேரிகாட்டில் பிரமாண்ட பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு உடலை

                    கொண்டு சென்று புதைப்பதற்கு முடிவு செய்தனர். இதன்படி ஸ்ரீகாந்தின் காரிலேயே 2 பேரின் உடல்களையும் மூட்டை கட்டி தூக்கி போட்டனர். பின்னர் மயிலாப்பூரில் இருந்து

                    மின்னல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு நெமிலிச்சேரி பண்ணை வீட்டுக்கு சென்றனர்.

                    அங்கு ஸ்ரீகாந்த், அனுராதா இருவரின் உடல்களையும் பெரிய குழி தோண்டி புதைத்தனர்.

                    பின்னர் கொள்ளை அடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற கிருஷ்ணா அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

                    கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்திய பிறகே இருவரும் கொன்று புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இருவரும் நேற்று மாலை 6.30 மணி அளவில்தான் பிடிபட்டனர். இதன் பின்னர் உடனடியாக உடல்களை தோண்டி எடுக்க முடியவில்லை.

                    இதைத் தொடர்ந்து இன்று காலையில் இருவரின் உடல்களும் புதைக்கப்பட்ட பண்ணை தோட்டத்துக்கு போலீசார் கொலையாளிகளை இன்று பிற்பகலில் அழைத்துச் செல்கின்றனர். உடல்கள் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.

                    தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் மிகவும் வசதி படைத்தவர் ஆவார். ஸ்ரீகாந்தும் அவரது மனைவி அனுராதாவும் தங்களது மகள் சுனந்தாவை அமெரிக்க மாப்பிள்ளைக்கு

                    திருமணம் செய்து கொடுத்திருந்தனர். மகளுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தில் 3 மாதங்கள் அமெரிக்காவில் பொழுது போக்கி விட்டு இருவரும் சென்னை திரும்பி இருந்தனர்.

                    இந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடங்கும் முன்னரே இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மகள் சுனந்தாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

                    அவரும், ஸ்ரீகாந்த் அனுராதாவின் உறவினர்களும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

                    இந்த கொலை வழக்கில் துப்பு துலங்கியது எப்படி? என்பது பற்றி தென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

                    மயிலாப்பூரைச் சேர்ந்த தம்பதியை கொலையாளிகள் இருவரும் திட்டம் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து நேற்று அதிகாலையில்

                    ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் வீடு திரும்பியதும், முதல் மாடியில் வைத்து மனைவி அனுராதாவை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர். கீழ் தளத்தில் வைத்து ஸ்ரீகாந்தை கொன்றுள்ளனர்.

                    பின்னர் இருவரது உடலையும் போர்வையில் சுற்றி காரில் எடுத்துச் சென்று மாமல்லபுரம் அருகே உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்.

                    இந்த கொலை சம்பவத்தில் டிரைவர் கிருஷ்ணா, அவரது நண்பரான டார்ஜிலிங்கை சேர்ந்த ரவிராய் இருவரும் ஈடுபட்டுள்ளனர். நகை பணத்துக்கு ஆசைப்பட்டு இருவரும்

                    இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளிடமிருந்து 1000 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

                    இதன் எடை 9 கிலோவாகும். 60ல் இருந்து 70 கிலோ வரையில் வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

                    நேற்று மதியம் 1 மணி அளவில் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது எங்களுக்கு தெரிய வந்தது. உடனயாக தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

                    போலீஸ் பிடியில் சிக்காமல் எப்படியாவது நேபாளத்துக்கு தப்பிச் சென்று விட முடிவு செய்து காரில் வேகமாக சென்றனர். 6 அல்லது 7 மணி நேரம கழித்திருந்தால் நேபாளம் சென்றிருப்பார்கள்.

                    ஆனால் அதற்குள் ஆந்திரா போலீசாரின் துணையுடன் கொலையாளிகள் இருவரையும் பிடித்து விட்டோம்.

                      Posted in சினிமா

                      கவர்ச்சி உடையில் சமந்தா

                      கவர்ச்சி உடையில் சமந்தா

                      சமந்தா எல்லைமீறும் கவர்ச்சியில், அட்டை படத்திற்கு போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

                      புதிய கவர்ச்சி உடையில் சமந்தா… வைரலாகும் புகைப்படம்
                      சமந்தா


                      விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தன் விடா முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். திருமணத்துக்கு பிறகும் அரைகுறை உடையில் நடித்து பரபரப்பு

                      ஏற்படுத்திய நிலையில், மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு கணவர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து விட்டார். சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டத்துக்கும் கண்டனங்கள் எழுந்தன.

                      பாடல் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

                      முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் சமந்தா தற்போது கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். சமந்தா சமூகத்தளங்களிலும் தன்

                      கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

                      தற்போது கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் சமந்தா பாலிவுட் பக்கம் பிசியாக உள்ளார். அதுமட்மின்றி, ஹாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார். இதனை

                      தொடர்ந்து சமந்தா சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள யசோதா திரைப்படமும் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இணையத்தில், அவ்வப்போது வலம் வரும் ரசிகர்களை

                      குஷியாக்க இவர் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

                      தற்போது, சமந்தா எல்லைமீறும் கவர்ச்சியில், அட்டை படத்திற்கு போஸ் கொடுத்து அதன்
                      புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

                        Posted in Uncategorized

                        மஹிந்தாவுக்கு மலர் வளையம்வைத்த மக்கள்

                        மஹிந்தாவுக்கு மலர் வளையம்வைத்த மக்கள்

                        அங்குனுகொலபெலஸ்ஸவில் உள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின்

                        வீட்டின் முன்பு போராட்டக்காரர்கள் சிலர் மலர் வளையம் வைத்துள்ளனர்.

                        கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு முன்னாள் அமைச்சருக்கு எதிராக இதன்போது

                        அவரது வீடு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மலர் வளையம் வைத்தும்

                        போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

                        தற்போதைய அரசாங்கத்துக்கு மஹிந்த அமரவீர ஆதரவளிக்கக்கூடாது எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

                          Posted in Uncategorized

                          யாழில் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

                          யாழில் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

                          யாழ்ப்பாணத்தில் பத்து ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்ற மூன்று போலீஸ் அதிகாரிகள்

                          நெடுந்தீவிலுக்கு இட மாற்றம் செய்ய பட்டுள்ளனர்.

                          இவர்கள் வாங்கிய ஊழல் தெரியவந்துள்ள,
                          நிலையிலும் ,அவர்கள் பதவி பிடுங்க பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையம் அறிவித்துள்ளது .

                            Posted in Uncategorized

                            கோட்டா மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு – கூட்டமைப்பு ஆதராவாம்

                            கோட்டா மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு – கூட்டமைப்பு ஆதராவாம்

                            இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா பாயா மீது கொண்டுவரப் படவுள்ள
                            அவ நம்பிக்கியில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கும் என
                            ,கோட்டாவின் செல்ல பிள்ளை சாணக்கியன் தெரிவித்த்துள்ளார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              வெடிக்கும் கோட்டாவுக்கு எதிரான போராட்டம்

                              வெடிக்கும் கோட்டாவுக்கு எதிரான போராட்டம்

                              நாளை (09) முதல் ஒரு வார ‍காலம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

                              அவசரகாலச் சட்டங்களை விதித்து போராட்டங்களை நசுக்கும் அரசாங்கத்தின்

                              முயற்சிக்கு எதிராகவே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

                              அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை மின்சார சபை


                              கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

                                Posted in Uncategorized

                                கிளிநொச்சியில் ஆலயத்தில் சடலம் மீட்பு

                                கிளிநொச்சியில் ஆலயத்தில் சடலம் மீட்பு

                                கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர் ஐயப்பன் கோவில் மண்டபத்தில்

                                ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

                                குறித்த நபர் கிளிநொச்சியை சேர்ந்த 43 வயதுடைய லாலசிங்கம் சங்கர் என்ற 2

                                பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                                குறித்த மரணம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு கோணங்களில்

                                விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                                  Posted in Uncategorized

                                  வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி

                                  வடகொரியா மீள் ஏவுகணை சோதனை -ரொக்கட் கிங் அதிரடி

                                  வடகொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது ஏவுகணையை கிழக்கு கடல்பகுதியில் ஏவி சோதனை புரிந்துள்ளது


                                  மேற்படி தகவலை முக்கிய உளவுத்துறை ஊடகம் அறிவித்துள்ளது

                                  இந்த சோதனை நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,


                                  அமெரிக்காவின் வாலினை நறுக்கும் வகையில் வடகொரியா


                                  புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                                    Posted in Uncategorized

                                    உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு

                                    உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு

                                    உக்கிரேன் மீது ரசியா இராணுவ தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

                                    ,இவ்வாறான நிலையில் மேலும் உக்கிரேனுக்கு உதவும் முகமாக 150 மில்லியன் டொலர்

                                    ஆயுத உதவிகளை வழங்கப்படுவதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

                                    உக்கிரேன் போரை பயன் படுத்தி மேற்குலக நாடுகள் பெருமளவு


                                    ஆயுதங்களை விற்று பணத்தை சம்பாதித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                    Posted in Uncategorized உலக செய்திகள்

                                    வெடித்து சிதறிய கொட்டல் – 22 பேர் மரணம்

                                    வெடித்து சிதறிய கொட்டல் – 22 பேர் மரணம்

                                    கியூபா நாட்டின் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள கொட்டல் ஒன்றில் ஏற்பட்ட வெடி

                                    விபத்தில் சிக்கி அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்தது

                                    இவ்வேளை அதற்குள் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்


                                    எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது