Tag: பலாப்பழம்
Posted in இலங்கை செய்திகள்
முல்லைதீவில் -பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியவர்-விழுந்து மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 09/05/2022 Leave a Comment on முல்லைதீவில் -பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியவர்-விழுந்து மரணம்
முல்லைதீவில் -பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியவர்-விழுந்து மரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணுக்கேணி கிழக்கு பகுதியில் வீட்டு காணியில் இருந்த பலாமரத்தில் பலாப்பழம் பறிக்க மரத்தில்
ஏறிய முதியவர் தவறி விழுந்து மரணமான சம்பவம் கணுக்கேணி கிழக்கு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை மரத்தில் பழுத்திருந்த பலாப்பழத்தினை வெட்டுவதற்காக ஏறிய
கணுக்கேணி கிழக்கு முள்ளியவளை பகுதியில் வசித்து வந்த 72 வயதுடைய தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முள்ளியவளை
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






