Tag: நகைகள்
நகைகள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடிய பெண்
நகைகள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடிய பெண்
நகைகள் களவாடப்பட்டுள்ளதாக நாடகமாடிய பெண் ,நகைகள் களவாடப்பட்டுள்ளதாகப் கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி .
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம்
நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்- மஸ்லம் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில் சுமார் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான
நகைகள் கடந்த செப்டம்பர் 27 ஆந் திகதி அன்று களவாடப்பட்டு உள்ளதாகவும் தனது கணவர் வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு திடீரென
திரும்பவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் 32 வயதுடைய குடும்ப பெண் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தார்.
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிஷாந்த வெதகே
வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் ஏ.எல்.எம். அஸீம் தலைமையில் பொலிஸ் குழுக்கள் புலன் விசாரணைகள் துரித கதியில் மேற்கொண்டிருந்தன.
இதற்கமைய அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸ் பிரிவு இலங்கை பொலிஸ் மோப்ப நாய் பிரிவு என்பன இச்சோதனையில் பங்கேற்றிருந்தன.
இருந்த போதிலும் குறித்த வீட்டில் களவாடப்பட்டதற்கான சான்றுகளோ அல்லது மேற் கூறப்பட்ட 45 இலட்சம் ரூபாய் நகைகள் திருடப்பட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை.
இருப்பினும் விசாரணையின் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்த குடும்ப பெண்ணில் சந்தேகமடைந்த பொலிஸார் அப்பெண்ணை கடந்த அக்டோபர் மாதம் 3 ஆந் திகதி துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
இதன் போது பல்வேறு உண்மைகள் வெளிவரத் தொடங்கியது.
இதனடிப்படையில் கணவன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்ற நிலையில் தனியாக இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்த குறித்த பெண் தனது
கையிருப்பில் இருந்த பணம் மற்றும் நகைகளை பல்வேறு தேவைகளுக்காக செலவு செய்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு சென்ற கணவன் திடீரென நாடு திரும்பும் நிலையில் இருப்பதாக அப்பெண்ணிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சற்று கலவரமடைந்த அப்பெண் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டுள்ளதாகப் நாடகமாடி கல்முனை பகுதியில் உள்ள
பிரபல நகையகத்திற்கு சென்று நகைகளை விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டதுடன் இச் செயற்பாட்டினை தனது கணவர் வெளிநாட்டில் இருந்து
திடீரென இலங்கை வரவுள்ளதாக என்னிடம் தெரிவித்ததால் இவ்வாறு நகைகள் திருடப்பட்டதாக நாடகம் ஆடியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அப்பெண் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர் செய்தனர்.இதன்போது குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில்
வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் உத்தரவிட்டார்.பின்னர் சந்தேக நபரான குறித்த பெண் சார்பில் இடைமனுக்
கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இதன்போது அப்பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் கடும் தொனியில் சந்தேக நபரை எச்சரித்த
நிலையில் பிணையில் செல்ல நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
200 பில்லியன் ரூபாய் நகைகள் அடகு வைப்பு
200 பில்லியன் ரூபாய் நகைகள் அடகு வைப்பு
இலங்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 200 பில்லியன் ரூபாய் நகைகள் அடகு வைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கை ஆட்சியாளர்களின் லஞ்சம் .கொள்ளை காரணமாக அப்பாவி மக்கள் பாதிக்க பட்டு வாழ்வாதாரத்திற்கு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .
தமது குடும்பங்கள் வாழ்வு செழிப்பை மட்டும் மைய படுத்தி நகர்ந்த ராஜபக்ச குடும்பத்தின் லஞ்ச ஊழல் காரணமாகவே ,அழகிய இலங்கை இன்று இந்த அழிவின் விளிம்பு நிலைக்கு சென்றுள்ளது என்கிறது அந்த ஆய்வு அறிக்கை .
கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு
கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு
சென்னை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 1000 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
சென்னை இரட்டை கொலை: கொள்ளையடிக்கப்பட்ட 1000 பவுன் நகைகள் மீட்பு
தென்சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணன் கைப்பற்றப்பட்ட நகைகளை பார்வையிட்டார்
சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55).
தொழில் அதிபரான ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று காலையில் சென்னை திரும்பினர்.
இந்த நிலையில் இருவரும் கொடூரமாக தங்களது கார் டிரைவரால் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் மயிலாப்பூர் பகுதியை மட்டுமின்றி சென்னை மாநகரையே அதிர வைத்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
தொழில் அதிபர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவி அனுராதாவும், அமெரிக்காவில் உள்ள தங்களது மகள் சுனந்தாவை பார்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
க ொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்த், அனுராதா
கர்ப்பிணியாக இருந்த மகளுக்கு குழந்தை பிறந்ததும் சில மாதங்கள் அமெரிக்காவிேலயே தங்கி இருந்த கணவன்-மனைவி இருவரும் அமெரிக்காவில்
இருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தனர். இருவரையும் அவர்களது டிரைவர் கிருஷ்ணா மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து தனது நண்பர் ரவி என்பவருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தையும், அனுராதாவையும் திடீரென தாக்கிய டிரைவர் கிருஷ்ணா இருவரையும் வீட்டில்
வைத்தே துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். ஏற்கனவே வீட்டில் இருந்த நகைகளை மூட்டை கட்டி வைத்திருந்த டிரைவர் கிருஷ்ணாவும், அவரது நண்பர் ரவியும், தொழில்
அதிபரையும் அவரது மனைவியையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர்.
தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரி பகுதியில் உள்ள சூலேரிகாட்டில் பிரமாண்ட பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு உடலை
கொண்டு சென்று புதைப்பதற்கு முடிவு செய்தனர். இதன்படி ஸ்ரீகாந்தின் காரிலேயே 2 பேரின் உடல்களையும் மூட்டை கட்டி தூக்கி போட்டனர். பின்னர் மயிலாப்பூரில் இருந்து
மின்னல் வேகத்தில் காரை எடுத்துக் கொண்டு நெமிலிச்சேரி பண்ணை வீட்டுக்கு சென்றனர்.
அங்கு ஸ்ரீகாந்த், அனுராதா இருவரின் உடல்களையும் பெரிய குழி தோண்டி புதைத்தனர்.
பின்னர் கொள்ளை அடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற கிருஷ்ணா அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கொலையாளிகளை கைது செய்து விசாரணை நடத்திய பிறகே இருவரும் கொன்று புதைக்கப்பட்டது தெரிய வந்தது. இருவரும் நேற்று மாலை 6.30 மணி அளவில்தான் பிடிபட்டனர். இதன் பின்னர் உடனடியாக உடல்களை தோண்டி எடுக்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று காலையில் இருவரின் உடல்களும் புதைக்கப்பட்ட பண்ணை தோட்டத்துக்கு போலீசார் கொலையாளிகளை இன்று பிற்பகலில் அழைத்துச் செல்கின்றனர். உடல்கள் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.
தொழில் அதிபர் ஸ்ரீகாந்த் மிகவும் வசதி படைத்தவர் ஆவார். ஸ்ரீகாந்தும் அவரது மனைவி அனுராதாவும் தங்களது மகள் சுனந்தாவை அமெரிக்க மாப்பிள்ளைக்கு
திருமணம் செய்து கொடுத்திருந்தனர். மகளுக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தில் 3 மாதங்கள் அமெரிக்காவில் பொழுது போக்கி விட்டு இருவரும் சென்னை திரும்பி இருந்தனர்.
இந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடங்கும் முன்னரே இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மகள் சுனந்தாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அவரும், ஸ்ரீகாந்த் அனுராதாவின் உறவினர்களும் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கொலை வழக்கில் துப்பு துலங்கியது எப்படி? என்பது பற்றி தென்சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மயிலாப்பூரைச் சேர்ந்த தம்பதியை கொலையாளிகள் இருவரும் திட்டம் போட்டு கொலை செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து நேற்று அதிகாலையில்
ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் வீடு திரும்பியதும், முதல் மாடியில் வைத்து மனைவி அனுராதாவை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர். கீழ் தளத்தில் வைத்து ஸ்ரீகாந்தை கொன்றுள்ளனர்.
பின்னர் இருவரது உடலையும் போர்வையில் சுற்றி காரில் எடுத்துச் சென்று மாமல்லபுரம் அருகே உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்.
இந்த கொலை சம்பவத்தில் டிரைவர் கிருஷ்ணா, அவரது நண்பரான டார்ஜிலிங்கை சேர்ந்த ரவிராய் இருவரும் ஈடுபட்டுள்ளனர். நகை பணத்துக்கு ஆசைப்பட்டு இருவரும்
இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளிடமிருந்து 1000 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் எடை 9 கிலோவாகும். 60ல் இருந்து 70 கிலோ வரையில் வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று மதியம் 1 மணி அளவில் இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பது எங்களுக்கு தெரிய வந்தது. உடனயாக தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
போலீஸ் பிடியில் சிக்காமல் எப்படியாவது நேபாளத்துக்கு தப்பிச் சென்று விட முடிவு செய்து காரில் வேகமாக சென்றனர். 6 அல்லது 7 மணி நேரம கழித்திருந்தால் நேபாளம் சென்றிருப்பார்கள்.
ஆனால் அதற்குள் ஆந்திரா போலீசாரின் துணையுடன் கொலையாளிகள் இருவரையும் பிடித்து விட்டோம்.









