Author: நலன் விரும்பி
டொன்பஸ் பகுதியில் உக்கிர மோதல் 8 ரசியா டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் அறிவிப்பு
டொன்பஸ் பகுதியில் உக்கிர மோதல் 8 ரசியா டாங்கிகள் அழிப்பு – உக்கிரேன் அறிவிப்பு
உக்கிரன் நாட்டின் டொன்பாஸ் பகுதியில் ரசியா இராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர்
இவ்வேளை அவர்களுக்கு எதிரான சமரில் ரசியா இராணுவத்தின் எட்டு டாங்கிகள்
மூன்று artillery systems, 10 கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
தாம் ரசியா படைகளை அழித்து வருவதாக உக்கிரேன்
பரப்புரை செய்கிறது ,ஆனால் கள நிலவரம் தலைகீழாக உள்ளமை குறிப்பிட தக்கது
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு
உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் தொடர்
தாக்குதலில் நாள் தோறும் 300 மில்லியன் அமெரிக்கா டொலர்களை செலவு செய்து வருவதாக ரசியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து வரும் தாக்குதல்களில் உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு செய்கிறது என்கின்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உக்கிரேன் மீதான தொடர் போறும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதர் செலுவகை ரசியா எவ்வாறு ஈடு செய்கிறது என்கின்ற கேள்வி எழுகிறதல்லவா .
ஆம் அப்படி என்றால் உக்கிரேன் இராணுவம் கூறுவது போன்று உக்கிரேனில் ரசியா தமது வளங்களை கொள்ளையடிக்கிறது என்பது உண்மை தான் போலுள்ளது .
பலத்த பொருளாதாரா தடைகளுக்கு மத்தியில் ரசியா ஜனாதிபதி எவ்வாறு இந்த செலவு செய்ய முடியும் என்ற கேள்வி நியமானது தானே .
தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் சடலம் மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை துரைரட்ணசிங்கம் (65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் நீண்ட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் மீட்க பட்ட சடலம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் நிறுத்தம்
அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் நிறுத்தம்
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்போர், அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை
பெற்றுக்கொள்ளாத வகையில் தீர்மானங்களை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று எரிபொருள் நெருக்கடி நிலைமை தொடர்பில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை அமைச்சர்கள் நியமனம் தொடர்பிலும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
அவர்கள் அமைச்சர்களுக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அதேபோன்று அமைச்சர்களுக்கான சலுகைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
யாழில் புயல் – ஒருவர் மரணம் – 10 பேர் காயம்
யாழ். மாவட்டத்தில் புதன்கிழமை வீசிய காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார்.
யாழில் வீசிய கடும் காற்றினால் கோப்பாய், நல்லூர், காரைநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளன.
கோப்பாய் J 286 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர், நல்லூர் J 97 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், காரைநகர் J 41 கிராம சேவையாளர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்
என 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
யாழில் கொள்ளையர்கள் அட்டகாசம் – கத்திமுனையில் மிரட்டல்
யாழில் கொள்ளையர்கள் அட்டகாசம் – கத்திமுனையில் மிரட்டல் ,கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும்,
அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி காணப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோப்பாய் வீதியில் அதிகாலை 4 மணியளவில் முகத்தினை மறைத்தவாறு தொப்பி அணிந்துகொண்டு கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நிற்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாலையில் திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி கொண்டு வருவோர், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள், பத்திரிக்கை விநியோகிக்கும்
ஊழியர்கள் , தோட்டங்களுக்கு செல்வோரை இலக்கு வைத்து இந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபையில் சாரதி, உள்ளிட்ட 6 ஊழியர்கள் மற்றும் யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றினை விநியோகத்திற்காக எடுத்து சென்ற
ஊழியர் என 7 பேரிடம் இருந்தும் 70 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவர்களின் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கத்தி முனையில் வழிப்பறி கொள்ளையடித்துள்ளனர்.
சம்பங்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை கைது
செய்தால் தான் தம்மால் அதிகாலை வேளைகளில் பயமின்றி வேலைகளுக்கு செல்ல முடியும் என
பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்
புதிய அமைச்சரவை கோட்டா உருவாக்கினார்
புதிய அமைச்சரவை கோட்டா உருவாக்கினார்
புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (20) காலை, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.
சுசில் பிரேமஜயந்த – கல்வி
விஜேதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
டிரான் அலஸ் – பொது பாதுகாப்பு
ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி
மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
ரமேஷ் பத்திரண– பெருந்தோட்டம்
நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து
நளின் பெர்னாண்டோ – வர்த்தகம்
பிறப்பு இறப்பு திருமண சான்றிதழ் வழங்கல் நிறுத்தம்
பிறப்பு இறப்பு திருமண சான்றிதழ் வழங்கல் நிறுத்தம்
பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதிகள் வழங்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உறுதிபடுத்தப்பட்ட பிரதிகளை வழங்கும் LNG தரவுக் கட்டமைப்பு செயலிழந்திருப்பதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதி விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அந்த தரவுக் கட்டமைப்பை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த சேவை திருத்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று திணைக்களம்
விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம்
ரசியா எறிகணை தாக்குதலில் எரிந்த கட்டடம் ,உக்கிரன் Sievierodonetsk, Luhansk பகுதிகள் மீது ரசியா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில்இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .
ரசியா எறிகணை தாக்குதலில் சிக்கி பன்னிரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் நாற்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.
இந்த எறிகணை தாக்குதலில் தொடர் அடுக்கு மாடி கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன .
தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
ரசியா இராணுவம் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நாடத்திய வண்ணம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் அகதிகளாக இடம்பெயர்நத வண்ணம் உள்ளனர் .
1.3 பில்லியனுக்கு உக்கிரேனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்களை விற்றபனை செய்த பிரிட்டன்
1.3 பில்லியனுக்கு உக்கிரேனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்களை விற்றபனை செய்த பிரிட்டன்
ரசியா உக்கிரேன் மீது போரை தொடுத்து வரும் நிலையில் உக்கிரேனுக்கு அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடராக ஆயுதங்களை விற்ற வண்ணம்
உள்ளன ,அவ்விதம் அவசர உதவியாக சுமார் 1,3 பில்லியனுக்கு ஏவுகணைகள்,உளவு விமானங்கள் மற்றும் ஆட்டிலறி என்பன வழங்க பட்டுள்ளது
இந்த ஆயுதங்கள் தற்போது உக்கிரேன் கீவ் நகருக்கு சென்றடைந்துள்ளன ,உக்கிரேன் களத்தில் பிரிட்டன் அமெரிக்கா
தமது ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
பிரபல இயக்குனருடன் இணைந்த யோகிபாபு
பிரபல இயக்குனருடன் இணைந்த யோகிபாபு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் யோகிபாபு அடுத்ததாக இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
பிரபல இயக்குனருடன் இணைந்த யோகிபாபு
யோகி பாபு
2008-இல் வெளியான ஜெயம்கொண்டான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இப்படத்திற்கு பிறகு கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன், பிஸ்கோத் உள்ளிட்ட பல படங்களை இயக்கி
முன்னணி இயக்குனராக வலம் வந்தார். தற்போது, மலையாளத்தில் வெற்றிபெற்ற கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷை கதாநாயகியாக
வைத்து இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா, யோகி பாபு, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘காசேதான் கடவுளடா’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.
ஆர்.கண்ணன் – யோகி பாபு
இந்நிலையில் ஆர்.கண்ணன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு
‘பெரியாண்டவர்’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகவுள்ள இப்படத்தில் சிவன் வேடத்தில் யோகிபாபு நடிக்கவுள்ளார். இப்படம் வசனத்திற்கு
முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதால் கபிலன் வைரமுத்து இதில் பாடல்கள் எழுதி வசனகர்த்தாவாக ஆர்.கண்ணனுடன் இணைகிறார்.
இதற்காக சென்னையில் செட் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிக்கி கல்ராணியை திருமணம் செய்தார் ஆதி
நிக்கி கல்ராணியை திருமணம் செய்தார் ஆதி
தமிழ் சினிமாவின் முன்னணி திரைபிரபலமான ஆதி-நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
நிக்கி கல்ராணியை திருமணம் செய்தார் ஆதி
ஆதி – நிக்கி கல்ராணி
தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,
நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.
இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது. இதனை அவர்கள் மறுக்கவில்லை.
ஆதி – நிக்கி கல்ராணி
ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. மிருகம் படத்தில் ஆதி
அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி பிறகு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக நிக்கி கல்ராணி கூறியிருந்தார்.
அதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், ஆதி நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஆர்யா – சாயிஷா, மெட்ரோ சிரீஷ் என ஏராளமான திரைபிரபலங்கள்
கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
பிரிட்டனில் எரிந்த வீடு மீட்க பட்ட – கஞ்சா செடிகள்
பிரிட்டனில் எரிந்த வீடு மீட்க பட்ட – கஞ்சா செடிகள்
பிரிட்டன் Pelham Road, Gravesend பகுதியில் வீடொன்று இருந்துள்ளது ,சம்பவத்தை அறிந்து 12 தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் இயந்திரங்களுடன் வருகை தந்தனர்
அப்போது வீட்டின் உள்ளே சென்ற பொழுது எரிந்த நிலையில் கஞ்சா செடிகள் காணப்பட்டுள்ளன
தொடர்ந்து நடத்திய சோதனையில் ஐம்பதாயிரம் பவுண்டுகள் பெருமாதியான கஞ்சா செடிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
மூன்று எம்பிக்களிடம் விசாரணை – தயாராகும் சிறை
மூன்று எம்பிக்களிடம் விசாரணை – தயாராகும் சிறை
இலங்கையில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்கள் மீது மகிந்த ஆதரவாளர்கள் போத்தல் ,பணம் கொடுத்து வன்முறை தாக்குதலை நடத்தினர்
இந்த தாக்குதலுக்கு பின்புலத்தில் இருந்து செயல் பட்டனர் என்ற குற்ற சாட்டில் மூன்று
எம்பிக்கள் கைது செய்ய பட்டு குற்றப் புலனாய்வு துறையினரால் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
ரோஹித அபேகுணவர்தன, சி.பி ரத்நாயக்க மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகிய மூவரது குற்றம் நிரூபிக்க பட்டால்
கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டு பாட்டை அடுத்து வீட்டில் இருந்து வேலை பார்க்கும்
அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி விடயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது
கத்தியால் குத்தி பெண் படுகொலை
கத்தியால் குத்தி பெண் படுகொலை
இலங்கை ஆனைமடு பொலிஸ் பிரிவில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி பெண் படுகொலை செய்ய பட்டுள்ளார்.
உடலின் பல பகுதிகளில் ஏற்படுத்த பட்ட வெட்டு காயங்களினால் ஏற்பட்ட இரத்த போக்கின் காரணமாக இவர் பரிதாபமாக இறந்துள்ளார்.
கத்தியால் குத்தி பெண்ணை படுகொலை புரிந்த கொலையாளி தப்பி சென்றுள்ளனர்.
இவ்வாறு தப்பி ஓடிய கொலையாளிகளை கைது செய்யும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் அதிகரித்து செல்லும் கத்தி வெட்டு படுகொலைகள் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது .
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் இராணுவத்தால் கைது
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் இராணுவத்தால் கைது
இலங்கையில் இருந்து கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட இருபத்தி ஒரு
பேர் இராணுவத்தினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ,தர்மபுரம் கடல் பகுதியில் வைத்து இவ்விதம் கைது
செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு
மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் மாவின் விலை
கிலோவுக்கு நாப்பது ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது
இந்த விலை அதிகரிப்பால் மக்கள் பெரிதும் கொந்தளிப்பில் உள்ளனர் ,நாள் தோறும் பொருட்களின் விலை
அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
இராணுவ வெளியேற்றத்துக்கான மக்கள் போராட்டம் !
முக்கிய விடயங்களை முன்வைத்த பிரதமர் வி.உருத்திரகுமாரனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரை !
முக்கிய விடயங்களை முன்வைத்த பிரதமர் வி.உருத்திரகுமாரனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரை !
இராணுவ வெளியேற்றத்துக்கான மக்கள் போராட்டம் !
முக்கிய விடயங்களை முன்வைத்த பிரதமர் வி.உருத்திரகுமாரனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரை !
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரை, நான்கு முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளதோடு சமகாலத்தின் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டி ஈழத்தமிழர்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான போராட்டத்தின் செயல்வழிப்பாதையினை முன்வைத்துள்ளது.
இலங்கைத்தீவின் தற்போதைய பொருளாதார நெருக்கடி உலகின் கவனத்தைக் பெற்றுள்ள நிலையில், இப்பொருளாதார நெருக்கடிக்கு போரினதும் இராணுவச் செலவினதும் பங்கை அனைத்துலகின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்
என்பதோடு, தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவ வெளியேற்றத்தை வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் தாயக அரசியல் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தென்னிலங்கை போராட்டகாரர்கள் நோக்கி தனது செய்தியினை வழங்கிய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ் மக்களின் அமைதிவழிப்
போராட்டத்தினை, தமிழின அழிப்புப் போராக மாற்றியது சிறிலங்கா அரசே தான் என்பதனை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால், சிறிலங்காவில் ஜனநாயகம் என்பது இனநாயகமாக மாறிப்போன கோளாறை நிவர்த்தி செய்வது உணர்ந்து கொள்வது அவசியம் எனக் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த இனவாத அரசாக இறுக்கமடைந்துள்ளது தவறு என்பதனை நீங்கள் ஏற்றுக் கொண்டால் ஜனநாயக அடிப்படையில் ஒரு இனம் தனது
அரசியல் தலைவிதியை தானே நிர்ணயிக்கும் உரிமையின் அடிப்படையில் புதியதொரு அரச கட்டமைப்பை உருவாக்குவதற்கான போராட்டமாக உங்கள் போராட்டத்தை வடிவமைத்துக் கொள்வீர்கள் என இடித்துரைத்துள்ளார்.
இராஜபக்சக்களைத் துரத்தும் உங்கள் போராட்டம் தமிழ் மக்களினது தேசிய ,னப் பிரச்சனையினை ஏற்றுக் கொண்டு அதற்கு நீதியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதனையோ, முள்ளிவாய்க்கால் இனவழிப்புக் குறித்து தமிழ் மக்களிடம்
மன்னிப்பு கோருவது அல்லது வருத்தம் தெரிவிப்பது போன்ற அம்சங்கள் எவற்றையும் தென்னிலங்கை போராட்டம் உள்ளடக்கவில்லை என்பதனையும் நாம் கவலையுடன் அவதானிக்கிறோம் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக நாடுகள் பலவும் உக்ரேய்னில் நடப்பது இனவழிப்பு எனத் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன நிலையில், தமிழின அழிப்பை உலக நாடுகளை அங்கீகரிக்க வைக்க முயல வேண்டும் எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன்,
இனவழிப்பு என்பது சட்டம் சார்ந்ததொரு விடயம் மட்டுமல்ல. இது அரசியல், தார்மீகப் பரிமாணம் கொண்டதொரு விடயம் என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் வி.உருத்திரகுமாரனது தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியின் முழுவடிவம் :
இன்று தமிழீழத் தேசியத் துக்க நாள்.
இன்றைய நாள் இலங்கைத்தீவில் அரசாக நிறுவனமயப் பட்டிருக்கும் சிங்கள ,னவாதப்பூதம் தமிழீழ மக்கள்மீது நடாத்திய தமிழின அழிப்பின் கொடுமைகளை நாம் உலகெங்கும் உரத்துச் சொல்லும் நாள்.
இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு தமிழீழத் தாயகத்தின் வன்னிநிலப்பரப்பெங்கும் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையினாரால் பெரும் தமிழினவழிப்பு திட்டமிட்டு நடாத்தப்பட்டது. இத் தமிழினவழிப்பு 2009 ஆம் ஆண்டு மே
மாதம் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உச்சம் கண்டது. மே 18 ஆம் நாள் தமிழ் மக்களின் இரத்தவாடை காற்றுமண்டலமெங்கும் பரவி நிரம்பியிருக்க சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழீழத் தாயகத்தை முழுமையாக ஆக்கிரமித்தது.
இந்த இனவழிப்பு தமிழீழ மக்களுக்குத் தந்த துயர் எழுத்தில் வர்ணிக்க முடியாதது. வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. இத் துயரின் நினைவுகளைத் தலைமுறை
தலைமுறையாகப் பேணிக் கொள்ளும் வகையில் தமிழீழத் தேசியத் துக்க நாள் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.
21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழிப்பாக அமைந்த தமிழினவழிப்பில் ஏறத்தாழ 150,000 மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பெரும் எண்ணிக்கையானோர் அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இத் தமிழின அழிப்புக்கு இரையாக்கப்பட்டுள்ளனர்.
இத் தமிழின அழிப்பு, நடைபெற்ற யுத்தத்தின் விளைவான வெறும் பாதிப்புக்களாகவோ அல்லது யுத்தத்தில் ஈடுபட்ட சிறிலங்காப்படையினரின் யுத்தவிதி மீறலாகவோ
அமைந்தவை அல்ல. இவை எந்தவகையிலும் யுத்தக்குற்றங்கள் எனும் பட்டியலினுள் சுருக்கி விட முடியாதவை.
இலங்கைத்தீவில் தமிழ்த் தேசிய இனத்தைக் கருவறுத்து, தமிழ் மக்களை உதிரிகளாக வலுவிழக்கச் செய்து, சிங்கள பௌத்த மேலாண்மையினை ஈழத் தமிழர் தாயகத்தின் மீது நிறுவி, எமது தமிழீழத் தாயகத்தை முழுமையாகவும் முடிவாகவும் ஆக்கிரமித்து
விடுவதற்கு சிங்கள பௌத்த இனவாத சிறிலங்கா அரசு நடாத்திய திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது. இதனை நாம் மீண்டும் மீணடும் அனைத்துலக சமூகத்துக்கு இன்றைய நாளில் இடித்துச் சொல்கிறோம்.
உலகுக்கு ஜனநாயகத்தையும் மனித நாகரிகத்தையும் போதிக்கும் மேற்குலக ஜனநாயக நாடுகளும் இத் தமிழின அழிப்பில் பங்கெடுத்து தமது கைகளில் இரத்தக்கறைகளைப் படியச் செய்துள்ளன என்பதனையும் நாம் சுட்டிக் காட்டுகிறோம்.
ஈழத் தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளாக்கப்படுவது இந்திய ஆக்கிரமிப்புக் குறித்து சிங்கள பௌத்த இனவாதம் கொண்டிருக்கம் அச்சம் காரணமாகத்தான் என
அறிஞர்கள் சுட்டிக் காட்டியிருக்கும் நிலையிலும் சிங்கள இனவாத அரசின் தமிழின அழிப்புக்கு இந்திய ஒன்றிய அரசும் உறுதுணையாக இருந்தது என்பது நமது மக்களைப் பெரும் வேதனைக்கு உள்ளாக்கியிருந்தது.
நாம் இந்தியாவையும் மேற்குலக ஜனநாயக நாடுகளையும் நட்பு சக்திகளாகக் கொண்டு தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தை மேற் கொண்டு
வருகிறோம். தாம் செய்த வரலாற்றுத் தவறுக்கு பிராயச்சித்தம் தேடுமாறு நாம் இந் நாடுகளை இன்றைய நாளில் கோருகிறோம்.
எமது மக்களுக்கு எதிராக சிங்களத்தின் இனவழிப்பில் ஏதோவொரு வகையில் பங்கெடுத்தவர்கள் என்ற வகையில் எமது மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஆவன செய்ய
வேண்டிய தார்மீகக் கடப்பாடு இந் நாடுகளுக்கு உள்ளது. இக் கடப்பாட்டை காலதாமதமின்றி ஆற்றும்படி இன்றைய தமிழீழத் தேசியத் துக்க நாளில் நாம் இந் நாடுகளைக் கோருகிறோம்.
முள்ளிவாய்க்கால் தமிழீழ இன அழிப்புக்கு நீதி கிடைக்கும் வரை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் நீதிக்கான தமது போராட்டத்தை நடாத்திக் கொண்டுதான் இருப்பார்கள்
. இப் போராட்டம் நீதி கிடைக்கும்வரை தொடரும். முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.
இன்றைய தமிழீழத் தேசியத் துக்க நாளில் சிங்களத்தின் தமிழினவழிப்பில் கொல்லப்பட்ட அனைத்து உறவுகளையும் நமது நெஞ்சிருத்தி, தலைதாழ்த்தி எமது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்பான மக்களே,
இலங்கைத்தீவிலும் உலகப்பரப்பிலும் ,ரண்டு முக்கியமான நிகழ்வுகளை தற்போதய காலம் பதிவு செய்து வருகிறது.
இலங்கைத்தீவு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ,ந் நெருக்கடிக்கு இராஜபக்சக்களின் ஊழலும்
நிர்வாகச்சீர்கேடும்தான் பிரதான காரணங்கள் என்பதால் இவர்களைத் துரத்தும் போராட்டம் தென்னிலங்கையில் நடைபெற்று வருகிறது.
நாம் இதிகாசக் கதைகளில் படிப்பது போன்று அண்ணனைப் பலிகொடுத்து தனது அதிகாரத்தைத் தக்க வைக்க தம்பி போராட்டத்தை நடத்துகிறாரோ அல்லது
அண்ணனும் தம்பியும் இணைந்து தமது குடும்ப அதிகாரத்தை பாதுகாப்பதற்கான ஆட்டத்தை நடாத்துகிறார்களோ என்று பலர் மத்தியிலும் எழும்பும் கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
எது எவ்வாறாக இருந்தாலும் இன்று தென்னிலங்கையில் போராட்டக்களத்தில் நிற்கும் தோழர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் சில விடயங்களை ,ன்றைய நாளில் நாம் தெரிவிக்க விரும்புகிறோம்.
சிறிலங்கா அரசு தமிழீழ மக்கள்மீது நடாத்திய இனவழிப்புப்போரும், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பும் இன்று முழுத்தீவும் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்ட அடிப்படைக் காரணங்கள் என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
யுத்தத்துக்காகப் பெருந்தொகைப் பணம் இராணுவச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நாட்டின் பெரும் களம் நாசகார இராணுவ உபகரணங்களுக்காக அந்நிய
நாடுகளுக்குத் தாரை வார்க்ப்பட்டிருக்கிறது. ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் யுத்த வெற்றி கொண்டு மறைக்கப்பட்டிருக்கிறது. ,ன்றும் பெருந்தொகைப் பணம் இராணுவச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது.
இப் பெரும் போர் இயந்திரப்பொறிமுறையைச் கட்டி வளர்த்துத் தீனி போடுவதற்கென பல ஆண்டுகளாக சிறிலங்கா அரசு விரயம் செய்த பொருளாதார வளமே இன்றைய
பொருளாதார நெருக்கடி தோன்றுவதற்கான அடித்தளத்தை இட்டது. இதனை உங்களது போராட்டக்களத்தில் நீங்கள் எச் சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தாமை எமக்கு ஏமாற்றத்தை; தருகிறது.
தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்;புப் போரை நிறுத்து என அன்று நீங்கள் குரல் எழுப்பியிருந்தால், வீதிக்கு இறங்கிப் போராடியிருந்தால், அப் போர் ,வ்வளவு காலம் நீடித்திருக்க மாட்டாது. போர்க்காலத்தில் போர் அரக்கன் தின்று தீர்த்த பெரும்
பொருளாதார வளத்தைப் பாதுகாத்திருக்கலாம். முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பை மேற்கொண்ட பெரும்பழியில் ,ருந்தும் சிங்கள தேசம் தப்பித்திருக்கலாம்.
இன்றைய பொருளாதார நெருக்கடி தோன்றுவதற்கான அடிப்படைக் காரணங்களை முன்கூட்டியே களைந்திருக்கலாம்.
இன்றைய நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்றையும், இராஜபக்சக்களின் ஊழல், நிர்வாகச்சீர்கேட்டையும் மட்டும் காரணமாக்காது ஆழ்ந்து சிந்தித்தால் நாம் கூறுவதில் உள்ள உண்மை உங்களுக்குப் புரியும்.
கொரோனா பெருந்தொற்று உலகெங்கும்தான் தாக்கம் விளைவித்தது. உலகில் பல நாடுகளில் ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் நிறைந்துதான் ,ருக்கின்றன. எனினும்
அங்கெல்லாம் இலங்கைத்தீவில் ஏற்பட்டது போன்ற பெரும் நெருக்கடி ஏற்பட்டு விடவில்லை என்பதனையும் இணைத்துச் சிந்தித்து போர் ஏற்படுத்திய தாக்கத்தை மதிப்பீடு செய்வது பயன் தரும்.
தமிழ் மக்கள் தமக்குரிய உரிமைகளை அகிம்சை வழியில் கோரிப் போராடி வந்ததொரு சூழலில் அதனை தமிழினவழிப்புப்போராக மாற்றியது சிறிலங்கா அரசே தான் என்பதனை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால், சிறிலங்காவில் ஜனநாயகம்
என்பது இனநாயகமாக மாறிப்போன கோளாறை நிவர்த்தி செய்வது அவசியம் என்பதனை உணர்ந்து கொண்டால், சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த ,னவாத அரசாக இறுக்கமடைந்துள்ளது தவறு என்பதனை நீங்கள் ஏற்றுக் கொண்டால் ஜனநாயக
அடிப்படையில் ஒரு இனம் தனது அரசியல் தலைவிதியை தானே நிர்ணயிக்கும் உரிமையின் அடிப்படையில் புதியதொரு அரச கட்டமைப்பை உருவாக்குவதற்கான போராட்டமாக உங்கள் போராட்டத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால், எமது அவதானிப்பில் இராஜபக்சக்களைத் துரத்தும் உங்கள் போராட்டம் தமிழ் மக்களினது தேசிய ,னப் பிரச்சனையினை ஏற்றுக் கொண்டு அதற்கு நீதியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதனையோ, முள்ளிவாய்க்கால் இனவழிப்புக் குறித்து
தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருவது அல்லது வருத்தம் தெரிவிப்பது போன்ற அம்சங்கள் எவற்றையும் உள்ளடக்கவில்லை என்பதனையும் நாம் கவலையுடன் அவதானிக்கிறோம்.
ஈழத் தமிழ் மக்களின் தேசத் தகைமையினையும், தமிழர் தாயகப்பிரதேசத்தையும் அங்கீகரித்து சுயநிர்ணய பரிகார நீதியின் அடிப்படையில் அரசியல் தீர்வு
காண்பதற்கான பற்றுறுதியினை வளர்த்துக் கொள்வதும், தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தில்; இணைந்து கொள்வதும் நமது தோழமை உணர்வினை வளர்க்கத் துணை செய்யும்.
இன்றைய தமிழீழ தேசிய துக்க நாளில் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பில் கொல்லப்பட்ட மக்களின் நினைவுகளுடன் இக் கருத்துக்களை சிங்கள தேசத்துடன் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
உக்ரேய்ன் மீது ரஸ்யா நடாத்தி வரும் போர் இன்று பலரது கவனத்தையும் உலகின் பல பாகங்களிலும் ஈர்த்துள்ளது. இப் போர் உலக அரசியல் ஒழுங்கில் மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் கணிக்கப்படுகிறது.
போருக்கான காரணங்களையும் இது குறித்த வாதப்பிரதிவாதங்களையும் கடந்து நோக்கினால் இப் போர் மனித குலத்துக்கும் இயற்கைக்கும் ஏற்படுத்தும் அனர்த்தம் மிகப் பெரியது. போரினால் மக்கள் கொல்லப்பட்டும் ஏதிலிகளாக நாட்டை விட்டு
தப்பியோடும் நிலையும் தோன்றியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனிய மக்களுடன் நாம் தோழமையுணர்வை வெளிப்படுத்திக் கொள்கிறோம்.
இப் போரின் ஓரம்சமாக இனவழிப்பு என்பது அனைத்துலக அரங்கில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. உலக அரசுகளின் நீதித் தராசு தமது நலன்களின் அடிப்படையில் நீதியை அளக்கும் என்ற புரிதலுடன் உக்ரேய்ன்- ரஸ்யா போர்ச்சூழலில்
இனவழிப்புத் தொடர்பாகக் குவிக்கப்படும் கவனம் தமிழினஅழிப்புக்கு எதிராக நீதி கோரும் தமிழ் மக்களின் போராட்டத்தக்கு வலுச் சேர்க்கக்கூடிய வாய்ப்புக்கள் குறித்து நாம் ஆராய வேண்டும்.
உலகில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரேய்னில் நடப்பது ,னவழிப்பு எனத் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. இனவழிப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு
அங்கீகாரம் தேடும் முயற்சியே இத்தகைய தீர்மானங்களாகும். ,னவழிப்பு என்பது சட்டம் சார்ந்ததொரு விடயம் மட்டுமல்ல. இது அரசியல், தார்மீகப் பரிமாணம் கொண்டதொரு விடயமும் தான்.
நாமும் தமிழின அழிப்பை உலக நாடுகளை அங்கீகரிக்க வைக்க முயல வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அமைப்புகளும் அரசியற்தலைவர்களும் தமிழின அழிபு;புக்கு நீதி கோரிச் செயற்பட வேண்டும். தமிழின அழிப்புத் தொடர்பாக
தீர்;மானங்களை சாத்தியமான இடங்களிலெல்லாம் நிறைவேற்றி அவற்றை உலக நாடுகளுக்கு அனுப்பி அந்நாடுகளுடன் உறவாடலை வளர்க்க முயல வேண்டும்.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடைபெற்று 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. எனினும் இவ்வினவழிப்பு ஏற்படுத்திய தாக்கத்தில் ,ருந்து எம்மால் இன்னமும் விடுபட முடியாமல் இருக்கிறது.
இவ்வினவழிப்புக்கு எதிராக எமக்கு இன்னும் நீதி கிடைத்து விடவில்ல என்பதும் எமது மனதை வாட்டுகிறது. இதற்காக நாம் சோர்வடைந்து விட முடியாது.
எம்மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கு நீதி கோரி நாம் நிகழ்த்தும் போராட்டம் அனைத்துலகில் இன்னும் கூடிய கவனத்தைப் பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளைத் ஈழத்
தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ,ன்னும் வலுவாக மேற்கோள்ள வேண்டும். இதற்குத் தமிழ் நாட்டு மக்களும் உலகத் தமிழ் மக்களும் உறுதுணையாகச் செயற்பட வேண்டும்.
தற்போதய சூழலில் இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடி உலகின் கவனத்தைக் பெற்றுள்ளது. இப் பொருளாதார நெருக்கடிக்கு போரினதும் ,ராணுவச் செலவினதும் பங்கை நாம் நாம் அனைத்துலகின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.
போரில் சிறிலங்கா ஆயுதப்படையினர் மேற்கோண்ட இனவழிப்பைச் சுட்டிக் காட்டியும்;; போரின் பின் நாம் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களாக வாழ்வதற்கு தமிழர் தாயகத்தில் குவிக்கப்பட்டுள்;ள இராணுவத்தினர் காரணமாக அமைவதனை
வெளிப்படுத்தியும், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண நாட்டின் இராணுவச் செலவீனம் குறைக்கப்பட வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டியும்
இராணுவத்தினரின் எண்ணிக்கையினைக் குறைக்குமாறும், தமிழர் தாயகத்தில் உள்ள சிங்கள இராணுவத்தை தத்தம் ஊருக்குத் திரும்புமாறும் தமிழ் மக்கள் தாயகப்
பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்தல் காலத்தின் தேவையாக உள்ளது. இதற்கு ஆதரவான போராட்டங்களை புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் தமிழ் மக்கள் வாழும் ஏனைய உலக நாடுகளிலும் நாம் மேற்கொள்ளலாம்.
இத்தகைய போராட்டம் தமிழ் மக்கள் மீது சிங்களம் மேற்கொண்ட ,னவழிப்பு மீது அனைத்துலகக் கவனத்தைக் கொண்டு வர இன்றைய காலகட்டத்தில் துணைபுரியும். இவ் விடயம் குறித்து தாயகத்தில் உள்ள அரசியல், சமூகத் தலைவர்கள் கவனம் கொள்ளல் நன்று.
முள்ளிவாய்க்கால் ஈகைகளின் மூச்சுக்காற்று எம்முடன் கலந்து நின்று எமது நீதிக்கான
போராட்டத்தை வலுவாக முன்னெடுக்குமாறு நம்மை உந்துகிறது.
முள்ளிவாய்க்கால் இனவழிப்பில்; தம்முயிர் ஈந்தவர்கள் நினைவுடன் தமிழினவழிப்புக்கு
எதிராக நீதிகோரும் நமது போராட்டத்தை தொடர்ந்து ஓயாது முன்னெடுப்போம் என
,
ன்றைய நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே-18ல் பேரறிவாளனின் விடுதலை உலகத்தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மே-18ல் பேரறிவாளனின் விடுதலை உலகத்தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
உலகத் தமிழர்கள் உணர்வுபூர்வமாக தமிழினப்படுகொலையினை நினைவேந்திக் கொண்டிருந்த மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், பேரறிவாளன் அவர்களை இந்தி
ய உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது என்ற செய்தி உலகத்தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் செய்தியறிக்கையினை வெளியிட்டுள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு,
பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலையில் தமிழகத்தின் உணர்வுடன் ஈழத்தமிழர்கள் நாமும் அணிதிரண்டிருந்தோம். விடுதலைக்காக ஓயாது போராடிய அற்புதம்மாவுக்கு
கிடைத்த இந்த நீதியின் வெற்றி என்பது, நீதிக்கான ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு நம்பிக்கையினை கொடுத்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் ஆட்சிப்பொறுப்பேற்ற காலத்தில் இருந்தே, பேரறிவாளின் விடுதலையில் கொண்டிருந்த
கரிசனையும், நீதிமன்றில் தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்டிருந்த வாதங்களும் பேரறிவாளனின் இவ்விடுதலையில் முக்கிய பங்கினை வகித்துள்ளன.
பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலைக்காக தொடர்ந்து
அயராது போராடிய அனைவரையும் இவ்வேளையில் நெஞ்சார்ந்து பாராட்டுவதோடு,
மிகுதி ஆறு பேரினது விடுதலைக்கு பேரறிவாளது விடுதலை,
நீதியின் கதவுகளை திறக்க வழிசெய்யும் என நம்புகின்றோம் என தெரிவித்துள்ளது.












