Author: நலன் விரும்பி
ரசியா இராணுவத்தின் ஆட்டிலறி நிலைகள் எரியும் காணொளி
ரசியா இராணுவத்தின் ஆட்டிலறி நிலைகள் எரியும் காணொளி
ரசிய இராணுவத்தின் ஆட்டிலறி படைகள் முகாம் மீது உக்கிரேன் படைகள் நடத்திய தாக்குதலில் அந்த முகாம் வெடித்து சிதறும் காட்சிகள் வெளியிட பட்டுள்ளது
இங்கு முப்பதுக்கு மேற்பட்ட ஆட்டிலொறிகள் நிறுத்தி வைக்க பட்டிருந்ததாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது
ரசியா இராணுவத்தை டாங்கிகளுடன் அழித்த உக்கிரேன் – திகில் வீடியோ
ரசியா இராணுவத்தை டாங்கிகளுடன் அழித்த உக்கிரேன் – திகில் வீடியோ
உக்கிரேன் இராணுவத்தின் 25th Separate Sicheslavska Airborne பிரிகேட் படைகள் ரசியா இராணுவத்தினர் பதுங்கி இருந்த பதுங்கு குழிகள் மற்றும் அதன் அருகில் நிறுத்தி
வைக்க பட்டிருந்த டாங்கிகள் மீது ஏவுகணை தாக்குதலை நாடத்தினை ,இதில் அந்த
டாங்கிகள் அழிந்தன , அதில் பயணித்த இராணுவத்தினரும் பலியாகியுள்ளனர்
மேற்படி காணொளி தற்போது வைரலாகி வருகிறது
ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்
ரசியாவின் முக்கிய சண்டை விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் படைகள்
உக்கிரன் மீது பறந்து தாக்குதலில் ஈடுபட்டு கொண்டிருந்த ரசியாவின் அதி முக்கிய சண்டை விமானமான
Su-34 ஒன்றை உக்கிரேன் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
குறித்த விமனாத்தின் காட்சி படங்களை வெளியிட்டு ரசியாவை போட்டு தாக்கியுள்ளனர்
இந்த விமானமானது Kupiansk, Kharkiv பகுதி மேலாக பறந்து தாக்குதல் நடத்தி கொண்டிருந்த வேளை
சுட்டு வீழ்த்த பட்டிருக்கிறது
படப்பிடிப்பை தொடங்கும் ரஜினி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
படப்பிடிப்பை தொடங்கும் ரஜினி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
படப்பிடிப்பை தொடங்கும் ரஜினி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
ரஜினி
அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். ஆனாலும் பட வேலைகளை இன்னும் தொடங்கவில்லை. இது ரஜினிக்கு 169-வது படம். இந்த படத்தில்
ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயும், வில்லியாக ரம்யா கிருஷ்ணனும், மகள் கதாபாத்திரத்தில் பிரியங்கா அருள் மோகனும் நடிப்பதாக தகவல் பரவியது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
ரஜினி
இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவற்கு முன்பு ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சில வாரங்கள் தங்கி இருந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள முடிவு செய்து
இருப்பதாகவும், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியானது. ஆகஸ்டு மாதம்
படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் முன்னதாக ஜூலை மாதமே படப்பிடிப்பை தொடங்க ஏற்பாடுகள் நடப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது
. இந்த படத்தை அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவருகிறார்கள்.
கதறி அழுத யாஷிகா
கதறி அழுத யாஷிகா
நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
கதறி அழுத யாஷிகா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
யாஷிகா ஆனந்த்,
2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில்
வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
யாஷிகா ஆனந்த்
அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர்
பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்தும் உள்ளார்.
அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது கதறி அழும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவரின்
நண்பர்களும் அழுவதால் ரசிகர்கள் யாஷிகாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரிட்டன் பாரளுமன்றம் முன்பாக முள்ளிவாய்க்கால் நிகழ்வு – photo
முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிவரை
கவனயீர்ப்புப் போராட்டமும் அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்காலின் 13 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து நிகழ்வை முன்னெடுத்தனர். தமிழர்
ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்கமைப்பில் பிற்பகல் 2:30 மணியளவில் ஒல்ட் பிலேஷ் யாட் ல் இருந்து நீதிக்கானபேரணி ஆரம்பமாகி இல 10 டவுணிங் சாலைக்கு முன்பாக வந்தடைந்தது.
பிற்பகல் 3 மணியளவில் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. பொதுசுடரினை மூத்தசெயற்பாட்டாளர் திரு. சிவலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
பிரித்தானியத் தேசிய கொடியினை தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த செல்வி. பவித்திரா உதயகுமாரும்
தமிழீழத் தேசிய கொடியினை 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிவரை பயணித்த தேசியச்செயற்பாட்டாளர் திரு.தர்சன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.
அகவணக்கத்தினை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்து வைக்கப்பட்டுருந்த நினைப்படத்திற்கான மலர்வணக்கம், சுடர்வணக்கம் பொதுமக்களால் செலுத்தப்பட்டது.
தமிழர் இளையோர் அமைப்பு சார்பில் பவித்திரா உதயகுமார் உரை ஆற்றினார்.
முள்ளிவாய்க்கால் நெருப்பு நினைவுகள் என்னும் தலைப்பில் நடனம் மற்றும் கவி அரங்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகளும் இடம்பெற்றது.
இறுதியாக தேசியக்கொடிகள் கையேந்தப்பட்டு தமிழீழம் எனும் இலக்கை அடையும்வரை தொடர்ந்து பயணிப்போம் என்ற உறுதியோடு நிகழ்வு நிறைவு பெற்றது .
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கப்பட்டது.



முள்ளி வாய்களில் திரண்ட மக்கள்
முள்ளி வாய்களில் திரண்ட மக்கள்
முள்ளிவாய்க்கால் பகுதியில் இதே நாளில் சிங்கள இராணுவத்தினரால் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டனர்.
அந்த வலி தாங்கிய முள்ளி வாய்கல் நாளினை தமிழர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இலங்கை சிங்கள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அரசின் அரச பயங்கரவாதம் மேற்கொண்ட இன அழிப்புக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.
தமிழீழ விடுதலை புலிகள் பங்கரவாதிகள் என கூறியபடி அவர்களை வேரோடு அழித்த உலகம் இதுவரை ,சிங்கள அரசு மேற்கொண்ட இன அழிப்பிற்கு நீதி வழங்கி தண்டிக்காது உறங்கு நிலையில் உள்ளது .
பாதிக்க பட்ட தமிழர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.
இலங்கை வடக்கு பகுதியில் கொன்று குவிக்க பட்ட அப்பவி மக்களின் படுகொலைக்கு என்று தீர்வு கிடைக்கும் ..?
இந்த கேள்வியோடும் கொதிப்போடும் முள்ளி வாய்காலில் மக்கள் ஒன்று கூடி கரைந்து உருகி கண்ணீர் வடித்து சென்றனர் .
போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிரிட்டன் அறிவிப்பு video
போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – பிரிட்டன் அறிவிப்பு
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு பல லட்சம் மக்களை கொலை புரிந்த சிங்கள ஆளும்
கோட்டா ,மகிந்த அரசுகளை அவர் தாம் புரிந்த இனப் படு கொலைக்கு சர்வதேச
நீதிமன்றில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Sir Keir Starmer QC,Labour Party Leader முள்ளிவாய்க்கள் படு கொலை நாளை நினைவு கூறும் பொழுது
தெரிவித்துள்ளார்
13 ஆண்டுகளை கடந்தும் இலங்கை ய அரசு புரிந்த மனித குலத்திற்கு எதிரான படுகொலைக்கு தீர்வு கிட்டவில்லை
இவரது இந்த பேச்சு சிங்கள அரசுகளை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது
ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை
ராஜீவ் கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை
இந்தியா பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்க பட்ட பேரறிவாளன் நீதிமன்றினால் விடுதலை செய்ய பட்டுளளார் .
முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைத்து வைக்க பட்ட பேரறிவாளன் இந்தியா உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் விடுதலை செய்ய பட்டுள்ளார்.
இவரது விடுதலை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ராஜீவ் காந்தி ஆதரவு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
பேரறிவாளன் விடுதலை மகிழ்வையும் சர்ச்சையும் கிளப்பி செல்கிறது .
தமிழர்களின் வாழ்வில் சோகமான வரலாற்றை கொண்டது மே18 தமிழின அழிப்பு! video
தமிழர்களின் வாழ்வில் சோகமான வரலாற்றை கொண்டது மே18 தமிழின அழிப்பு! video
ஆளும் ஜனாதிபதி மகிந்த கோட்டா அரசுகளினால் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் நச்சு குண்டுகள் வீசி தமிழர்கள் அழிக்க பட்டனர் .
அவ்விதம் நடத்த பட்ட தமிழ் இன அழிப்பின் வலிதாங்கிய நாள் இன்றாகும்.
இவ்வேளை வட்டக்கச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளும்னற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் இடம்பெறும் நிகழ்வுகள் இவை.
மக்களின் எழுச்சியும் அவர் தம் உள்ளக்கிடக்கையில் உறங்கி கிடைக்கும் உணர்வுகளின் பிரதி பலிப்பை இஙேகே காணலாம் .
ஒருவர் வெட்டி கொலை – தொடரும் வன்முறைகள்
ஒருவர் வெட்டி கொலை – தொடரும் வன்முறைகள்
இலங்கை பலப்பிட்டிய பகுதியில் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி
ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
இந்த கொலையை புரிந்தவர் தற்போது தலை மறைவாகியுள்ளார்
இவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
இலங்கைக்கு உலக வங்கி 160 மில்லியன் கடனுதவி
இலங்கைக்கு உலக வங்கி 160 மில்லியன் கடனுதவி
இலங்கையின் தற்கால நெருக்கடி நிலையினை தொடர்ந்து இலங்கைக்கு உலக வங்கி 160 மில்லியன் அமெரிக்கா டொலர் கடனுதவி வழங்கியுள்ளது,
இந்த நிதி உதவி தற்கால நெருக்கடி நிலைக்கு தீர்வு வழங்கும் முகமாக வழங்கி வைக்க பட்டுள்ளது .
தற்கால நிலையை கருத்தில் கொண்டு கடனை உலக வாங்கி மற்றும் நாடுகளிடம் இலங்கை வாங்கி குவித்து வருகிறது .
எதிர்காலத்தில் இந்த கடனை மீள செலுத்த
முடியா நிலையில் இலங்கை சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும் பேராபத்து காத்து கிடக்கிறது .
இலங்கை உலக வங்கியிடம் பெற்றுக்கொண்ட பணம் எதுவரைக்கும் போதுமானது என்ற கேள்வியும் அதனை மீள இலங்கை உலக வங்கிக்கு எவ்வாறு செலுத்த போகிறது என்ற அச்ச நிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .
லண்டன் லூசியம் பகுதியில் கத்தி குத்து – சோதனைகள் ஆரம்பம்
லண்டன் லூசியம் பகுதியில் கத்தி குத்து – சோதனைகள் ஆரம்பம்
லண்டன் லூசியம் பகுதியில் பதினாறு வயது வாலிபன் மீது மேற்கொள்ள பட்ட கத்தி
குத்து தாக்குதலை அடுத்து அதே பகுதி எம்பியினால் வழங்க பட்ட உத்தரவை அடுத்து போலீசார் தீவிர சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்
குறிப்பிட பட்ட சில பகுதிகளில் செல்லும் வாகனங்கள் ,மக்கள் சோதனைக்கு உள்ளான
நிலையில் காணப்பட்டால் அவர்கள் சோதனை செய்ய பட்டு ,தேவை ஏற்படின் தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கும் உட்படுத்த படுகின்றனர்
தொடர்ந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகமாகி வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பிரித்தானியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல்
பிரித்தானியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல்
பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சமவேளை,
புலம்பெயர் நாடுகளில் இவ்வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்வரிசையில், பிரித்தானியாவில் குருதிக்கொடை, முள்ளிவாய்க்கால் கஞ்சி, பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
‘உயிர்கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் Tooting Doner Centre,Croydon Doner Centre ஆகிய இடங்களல் 30 ற்கும் மேற்பட்டோர் இரத்த தானம் வழங்கியிருந்தனர்.
Aston Hall Hotel Aston, Sheffield பகுதியிலும் குருதிக்கொடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
2009ம் ஆண்டு தமிழர்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனஅழிப்பு போர்க்காலம். கடும்யுத்த களம், உணவுத்தடை,
மருந்துக்களுக்கு தடை, போர் தவிர்ப்பு வலயம் என்ற பெயரில் மக்களை கொத்துக் கொத்தாக தனது கொடிய ஆயுதங்களால் இனப்படுக்கொலை செய்து கொண்டிருந்தது
. இந்த நெருக்கடியான பெருந்துயரான காலத்தில் மக்களின் வயிற்றுப் பசியினை நம்பிக்கையோடு கஞ்சி தீர்த்திருந்தது.
போராளிகள் தமக்கென ஒதுக்கப்பட்டிருந்த அரசியினை மக்களின் பசிபோக்க கஞ்சியாக சமைத்து வழங்கியிருந்தனர்.
இதுவே ‘முள்ளிவாய்கால் கஞ்சியாக’ மக்களின் அப்பெருந்துயரை நினைவேந்திக் கொள்ளப்படுகின்றது.
இதேவேளை பிரித்தானிவின் பல பாகங்களில் தமிழர் வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி
எமது மக்கள் பட்ட துயரங்களை வேற்றின மக்களுக்கும், உலகநாடுகளுக்கும் உணர்த்த காட்சிப்படங்கள் மூலமாகவும், துண்டுப்பிரசுரம் மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள்.
மே18 தமிழீழ தேசிய துக்க நாள் என்பது நாம் துயரத்தில் துவண்டு போகும்
நாளல்ல மாறாக எமது மக்கள் அடைந்த துயரத்தையும் உயிர்ப்பாய் உள்வாங்கி
ஒருதேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுகந்திரமும்
இறைமையும் கொண்ட தமிழீழ அரசினை அமைப்பதே ஒரே வழி என உறுதிகொள்ளும் நாளாகும்.
எதிரி இராணுவத்தால் மேற்கொள்ள பட்ட தமிழர் மீதான இன அழிப்பில் பங்கெடுத்த உலக நாடுகள் இளநக்கிக்கு ஆதரவாக செயலாற்றிய வண்ணம் உள்ளன .
இதுவரை மாண்டு போன உயிர்களின் ஆத்துமா சாந்தியடைய எவ்வித தண்டனையும் எதிரி அரசுக்கு ஐநாவால் வழங்கப்படவில்லை .





கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்
கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்
விமானத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தனது காலால் விமானத்தின் கேபின் கதவை அசால்ட்டாக மூடியது பார்ப்பவரை மிரள வைத்துள்ளது.
ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்
பெட்டியை எடுக்கும் பயணி
வெளிநாட்டு விமானத்தில் கைக்குழந்தையுடன் பயணித்த ஒரு பெண் தனது காலால் விமானத்தில் உள்ள கேபின் கதவை அசால்ட்டாக மூடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விமானம் ஒன்றில் பயணம் முடிந்து அனைத்துப் பயணிகளும் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஓர் இளம்பெண்
ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார். மறு கையில் இருக்கைக்கு மேலிருக்கும் கேபினில் இருந்து மற்றொருவர் உதவியை நாடாமல் தனது பெட்டியை எடுத்துள்ளார்.
அதன்பின், அந்த பெண் கேபின் கதவை மூட தனது காலை நேர் மேலே தூக்கி கேபினை அசால்ட்டாக மூடுகிறார். பார்ப்பதற்கு அவர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக
இருக்கிறார். இந்தக் காட்சியைக் கண்ட சக பயணிகள் மிரட்சி அடைந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
யார் உதவியையும் எதிர்பாராமல் தானாகவே கேபின்
கதவை அசால்ட்டாக மூடிய அந்தப் பெண்ணின் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்
கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்
கீதா, தொரசானி, ஒலவின நில்தானா போன்ற தொலைக் காட்சித் தொடர்களில் நடிகை சேத்தனா ராஜ் நடித்துள்ளார்.
கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்- மருத்துவமனை மீது போலீசார் வழக்குப் பதிவு
சேத்தனா ராஜ், வரதராஜ்
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் வரதராஜ் என்பவரது மகள் சேத்தனா ராஜ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் உடல் கொழுப்பை குறைக்கும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.
பெங்களூரு ராஜாஜி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நடிகை சேத்தனா ராஜிற்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் தமது மகள் உயிரிழந்ததாக நடிகையின் பெற்றோர் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். அறுவை சிகிச்சை வேண்டாம் என்று என் மகளிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் தமக்கு தெரியாமல் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார் என அவரது தந்தை வரதராஜ் குறிப்பிட்டுள்ளார்.
அறுவை சிகிச்சையின் போது தமது மகளுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் என் மனைவியிடம் தெரிவித்தனர். நாங்கள் அவளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினோம், அங்கு அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என வரதராஜ் தெரிவித்துள்ளார்.
போதுமான உபகரணங்களின்றி அறுவை சிகிச்சை செய்ததால், என் மகள் உயிரிழந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
22 வயதான நடிகை சேத்தனாராஜ் கீதா, தொரசானி, ஒலவின நில்தானா உள்ளிட்ட கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் ஹவயாமி என்ற கன்னட சினிமாவிலும் நடித்துள்ளார்.
நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு
நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு
ரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு
நடிகர் சூரியா
நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு
உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து குறிப்பிட்ட அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக இயக்குநர் ஞானவேல் மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்படம் ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் உள்ளதாக கூறி நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகார் மனு மீது வேளச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னதாக பிரிவினையை ஏற்படுத்தி, ஜாதி, மத கலவரங்களை துாண்டும் வகையில், ஜெய்பீம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் இதனால், நடிகர் சூர்யா,
இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ருத்ர வன்னியர் சேனா தலைவர் சந்தோஷ், சைதாப்பேட்டை 18வது நீதிமன்றத்தில்,மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன் அடிப்படையில் சூர்யா, ஞானவேல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அதன் விபரத்தை,
வரும் 20ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை – கமல்ஹாசன்
இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை – கமல்ஹாசன்
இந்தி ஒழிக என சொல்வது என் வேலையில்லை ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை என்று விக்ரம் பட விழாவில் கமல்ஹாசன் தெரிவித்தார்.
‘இந்தி ஒழிக’ என சொல்வது என் வேலையில்லை – கமல்ஹாசன் பேச்சு
கமல்ஹாசன்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை
கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை மற்றும்
டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், இயக்குனர் பா.ரஞ்சித், பார்த்திபன், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசன்
இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை, அதற்கு இடையூறாக யார் வந்தாலும் எதிர்த்து நிற்பேன் இதற்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. தாய் மொழியை விட்டுவிடாதீங்க. இந்தி
ஒழிக என சொல்வது என் வேலையில்லை, ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை. இந்தியாவின் அழகு அதன் பன்முகத்தன்மை.
4 ஆண்டுகளுக்கு பிறகு என் படத்தின் விழா, அதற்கு நான் காரணமல்ல நீங்கள் தான். யாருமே இங்கு முழு நேர அரசியல்வாதிகள் அல்ல. முதன்முதலில் நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற பொழுது டி.ஆர். என்னை தேடி வந்து கதறி கதறி அழுதார், நீங்கள்
எப்படி இப்படி பண்ணலாம்னு கேட்டு அழுது என் சட்டை நனைந்துபோனது, என் முடிவுக்கு நான் உட்பட பலரும் வருத்தப்பட்டார்கள். அரசியல் களத்தில் புதிய
நாகரீகத்தை வளர்க்க அரசியல் வந்துள்ளேன். இப்ப வரவில்லை என்றால் எப்போது? என் தமிழ் உச்சரிப்புக்கு காரணம் மூவர் சிவாஜி, கலைஞர், கண்ணதாசன். தாத்தாவுடன்
தொடங்கிய பயணம் தற்போது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறார்களா என்று கேட்டனர். தமிழக முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்டு நண்பர். அது எப்படி என்று கேட்கலாம். ஏன் ரஜினிகாந்தும் நானும்
போட்டியாளர்களாக இருந்துகொண்டு நண்பர்களாக இல்லையா? அதுபோலதான்” என்று அவர் கூறினார்.
வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு
வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு
வடகொரியாவில் ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.
வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: ராணுவத்துக்கு கிம் ஜாங் பிறப்பித்த உத்தரவு
கிம் ஜாங் அன்
உலகம் முழுவதும் கொரோனா பரவியபோதிலும், வடகொரியாவில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா நுழையாமல் இருந்தது. அங்கு எல்லைகள்
மூடப்பட்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது ஒரு காரணமாக கருதப்படுகிறது. இருந்தாலும், அங்கு கொரொனா இல்லை என்பது உலகநாடுகளால் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், கடந்த 12-ந்தேதி, தங்கள் நாட்டில் கொரோனா நுழைந்து விட்டதாக வடகொரியா வெளிப்படையாக அறிவித்தது. ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’தொற்று
உறுதிசெய்யப்பட்டது. அப்போதிருந்து காய்ச்சல் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.
நேற்று மேலும் 8 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலி எண்ணிக்கை 50ஆக உயர்ந்தது. ஒரேநாளில், 3 லட்சத்து 92 ஆயிரத்து 920 பேருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டது. இதுவரை 12 லட்சம் பேர் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் உயிரிழப்புகளில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்ற விவரத்தை வடகொரியா இதுவரை அறிவிக்கவில்லை.
இந்நிலையில், தனதுகட்சியின் அரசியல் விவகாரகுழு கூட்டத்தில் அதிபர் கிம் ஜாங் கலந்துகொண்டார். அப்போது, அவர் அதிகாரிகளை கடுமையாக சாடினார்.
அவர்பேசியதாவது:-
அரசு கையிருப்பில் உள்ள மருந்துகளை மருந்தகங்களுக்கு உடனடியாக அனுப்புமாறும், மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்படவேண்டும் என்றும் அரசியல் விவகாரகுழு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஆனால் அந்த உத்தரவை சுகாதார அதிகாரிகள் பின்பற்றவில்லை. அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டனர். கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் திறம்பட ஈடுபடவில்லை. ஆகவே, எனது ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்
பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்
எலிசபெத் போர்னி,முந்தைய அரசில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.
பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்- அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிவிப்பு
எலிசபெத் போர்னி, இமானுவேல் மேக்ரான்
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களை கொண்டு வர அவர் முடிவு செய்தார். இதன் அடிப்படையில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து முந்தைய அரசில் தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்து வந்த எலிசபெத் போர்னி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை
அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வெளியிட்டுள்ளார்.
61 வயதான போர்ன், பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இது 2-வது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் பேசிய எலிசபெத் போர்னி, இந்த நியமனத்தை அனைத்து சிறுமிகளுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்றும், உங்கள் கனவுகளுக்குப் பின் செல்லுங்கள் என்றும் தெரிவித்தார்.
புதிய பிரதமர், பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவார் என்று அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்தார்.
அதிபரும், புதிய பிரதமரும் பிரான்ஸ் புதிய அரசில் பங்கேற்கும் அமைச்சரவை குறித்து
இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.







