Author: நலன் விரும்பி
பளையில் வெடித்த குண்டு – சிறுமி காயம்
பளையில் வெடித்த குண்டு – சிறுமி காயம்
பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் இணைந்து துப்புரவு செய்தபோதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிறுமிக்கு 16 வயது எனவும், நாளை சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவி எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்த சிறுமி யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் நாட்டு உணவு கப்பல் – இலங்கை வந்தது
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தை இன்று (22) வந்தடைந்தது.
அவை, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
9,000 மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 25 மெற்றிக் தொன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் நிவாரண தொகையில் அடங்குகின்றன.
கடந்த 18 ஆம் திகதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் குறித்த நிவாரணக் கப்பல் பச்சைக் கொடி அசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.
40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால் மா மற்றும் மருந்துகள் உட்பட 5.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தமிழக அரசாங்கம் ஒப்புக்கொண்ட நிலையில், அதன் முதல் தொகுதி, நாட்டை வந்தடைந்தது.
இந்தப் பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு விநியோகிக்கப்படும் என கொழும்பில் உள்ள
இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்
இலங்கையில் தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்
மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட
சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதற்கமைய சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்களில்
இருந்து பெண்ணொருவர், எம்.பியின் அலுவலகத்தை தாக்கி தீ வைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணைக் கைது செய்வதற்கு பொது மக்களின்
உதவியை நாடியுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்,
கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்
- பிரதமரிடம் ரணிலிடம், மனோ கணேசன் கோரிக்கை
குறைவருமான கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்
- பிரதமரிடம் ரணிலிடம், மனோ கணேசன் கோரிக்கை
உணவு இல்லை. காஸ் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான்.
மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுன்றியும் தவிக்கிறார்கள்.
குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள், எமது ஆட்சிகாலத்தில் சுமார் 13,000 தொடர்மாடி இல்லங்களில்
குடியமர்த்தப்பட்டார்கள். இந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கும், கொழுப்பு நகரின் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கும், பங்கீட்டு அட்டைகள் வழங்கி, அவர்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்.
இதற்காக, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பாரிய சமையலறை மற்றும் கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான பயன்படுத்தபடாத சமையலறைகள்
ஆகியவை பயன்படுத்தலாம். இராணுவ சமையல் பணியாளர்களை பணியில் அமர்த்தி இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை முன்னெடுங்கள் என பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு எம்பி மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ள மனோ எம்பி, ஊடகங்களிடம் மேலும் கூறியுள்ளதாவது,
நாடு முழுக்க வாழ்வாதார பிரச்சினைகள், மக்களின் கழுத்துகளை நெரிக்கின்றன. இவற்றில் மிகவும் துன்பங்களை நகரங்களில் வாழும் குடும்பங்கள் சந்திக்கிறார்கள். கிராமிய பகுதிகளில் இருக்கும் இயற்கை வளங்கள், மரம், செடி, கொடி, தண்ணீர்
என்பன நகரங்களில் இல்லை. ஒரு கிண்ணம் நீரும் பணம் கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. அதிலும் கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள் படும்பாடு சொல்லும்தரமன்று.
இந்த கொழும்பு மாநகர பின்தங்கிய மக்களை, விசேட தேவை உள்ள பிரிவினராக அறிவித்து, பங்கீட்டு குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு முதற்கட்டமாக சமைத்த உணவு வழங்குங்கள். இதன்மூலம் இங்கு வாழும் பள்ளி பிள்ளைகள்,
குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களின் பசியை ஓரளவாவது போக்கலாம். மீண்டும் நாட்டில் இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை நடைமுறை செய்யுங்கள்.
கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையில், எதிரணியில் இருந்தபடி கட்சி பேதமின்றி,
இது தொடர்பில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்.
இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் 1500 அப்பாவிகள் போலீசாரால் கைது
இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் 1500 அப்பாவிகள் போலீசாரால் கைது
இலங்கையில் ஆளுமா அரசுக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து
கொண்ட மக்களில் ஆயிரத்து ஐநூறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்விதம் கைது செய்ய பட்டவர்களில் 677 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்க பட்டுள்ளனர்
மக்களை அச்சுறுத்தும் முகமாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளது என சமூக நல ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்
இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த – விளையாட போகிறோம் சீனா அறிவிப்பு
இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த – விளையாட போகிறோம் சீனா அறிவிப்பு
இலங்கையில் நிகழ் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்த
நாட்டை மீள தூக்கி நிறுத்திட தாம் அதறகான விளையாட்டை ஆரம்பிக்க போவதாக சீனா அறிவித்துள்ளது
சீனா கடன்வழங்கிய நிலையில் இந்த நிலைக்கு இலங்கை சென்றமை குறிப்பிட தக்கது
நாடெங்கும் போலீசார் சுற்றிவளைப்பு தேடுதல்
நாடெங்கும் போலீசார் சுற்றிவளைப்பு தேடுதல்
இலங்கையில் நாடளாவிய ரீதியில் போலீசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தி வருகின்றனர்
குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இந்த
நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்
அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அதனை தடுக்கும்
முகமாக இந்த் சுற்றிவளைப்பு நடத்த படுகிறதாம்
எரிபொருள் விற்பனை நிலைய முதலாளி வீட்டுக்கு தீ வைத்த மக்கள்
எரிபொருள் விற்பனை நிலைய முதலாளி வீட்டுக்கு தீ வைத்த மக்கள்
இலங்கை கொக்கிராவ பகுதியில் எரி பொருள் நிலையம் வைத்து நடத்தி வந்த
உரிமையாளர் ஒருவரது வீட்டிற்கு சென்ற குழுவொன்று அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்
எரி பொருள் கிடைக்காத நிலையியல் சீற்றம் கொண்ட மக்களில் சிலர் இந்த தீ
வைத்தலை புரிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
லண்டனில் எரிந்த பிட்ஸா கடை – புகுந்து திருடும் கூட்டம்
லண்டனில் எரிந்த பிட்ஸா கடை – புகுந்து திருடும் கூட்டம்
லண்டன் கென்ட் பகுதியில் உள்ள Kebab and Pizza in Herne Bay கடை திடீரென தீ பற்றி எரிந்து நாசமானது
அவ்வேளை அந்த கடைக்குள் ஏரியா நிலையில் குடிபானங்கள் இருந்துள்ளன
அதனை அந்த கடைக்குள் நுழைந்த்து திருடர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது
26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தயார் இந்த கடையினை நிர்வகதித்து ,அவரது கணவர் மற்றும் குடும்பம் இணைந்து நடாத்தி வந்தனர்
இவ்வேளை அது விபத்தில் சிக்கி எறிந்துள்ளது துயரை ஏற்படுத்தியபோதிலும் மீள அதனை சரி செய்து
இழந்த வியாபாரத்தை பெருக்கிட முயற்சிகள் மேற்கொள்ள பட்டு வருகிறது

40 வயதை கடந்த பெண்களுக்கு வரும் மூட்டு வலி
40 வயதை கடந்த பெண்களுக்கு வரும் மூட்டு வலி
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு தேய்மானம் ஆவதால் மூட்டு வலி உண்டாகலாம்.
இன்றைக்கு 40 வயதைத் தாண்டியவர்கள் பலரையும் பாடாகப்படுத்தும் பிரச்சனை, முழங்கால் மூட்டுவலி. சிலருக்கு இது பெரிய பாதிப்பை உண்டாக்கி, மூட்டு மாற்று அறுவைசிகிச்சை வரை கொண்டுபோய் விடுவதும் உண்டு. மூட்டுகளுக்கு
வலுசேர்க்கும் உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என இவற்றை ஆரோக்கியமாக வைத்திருந்தால், இந்த வலியைத் தவிர்த்துவிடலாம். மூட்டுகள் உறுதிக்கு உதவும் 10 உணவுகள் இங்கே…
மனித எலும்புகளின் கட்டமைப்பில் எலும்புதான் உடலுக்கு வடிவமும் பலமும் அளிக்கிறது. பிறக்கும்போது 300 எலும்புகளாக இருக்கும் இவை, வயது கூடக் கூட 206-ஆகக் குறைகின்றன.
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு தேய்மானம் ஆவதால் மூட்டு வலி உண்டாகலாம்.
உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு மூட்டுகளில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக மூட்டு வலி ஏற்படலாம்.
அதிகம் நேரம் உட்கார்ந்து வேலை செய்வது அல்லது அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது.
உடலுழைப்பு இல்லாதது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது .
உணவில் அதிகமாக புளிப்பு சுவையை சேர்ப்பது.
மூட்டு வலி நீங்க வீட்டு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன…
ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அவை மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும். ஒரு
தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் குடிக்கலாம்.
இஞ்சி சாறு
இஞ்சியில் ஜின்ஜெரோல் எனப்படும் ஒரு கலவை நிரம்பியுள்ளது, இது இயற்கையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் இஞ்சி தேநீர் தயாரித்து தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.
இஞ்சி தேனீர்: ஒரு சிறிய இஞ்சி துண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.
எப்சம் உப்பு
எப்சம் உப்பில் மெக்னீசியம் சல்பேட் உள்ளது, இவை ஒரு வலி நிவாரணி ஆகும். இது வீக்கத்தைக் குறைத்து வலியைக் குறைக்கிறது. ஒரு பக்கெட் குளியல் நீரில் ஒரு ஸ்பூன் எப்சம் உப்பை வைத்து அதில் கால்களை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.
கற்பூரம் எண்ணெய்
கற்பூரம் பொடி கலந்த எண்ணெய் மூட்டு வலியை குறைக்கிறது. மூட்டுகளில் ஏற்படும் சிரமத்தை நீக்குகிறது, கற்பூர எண்ணெயைத் தயாரிக்க ஒரு கப் சூடான (இதமான
சூட்டில்) தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கற்பூரப் பொடியைச் சேர்க்கவும். வலி உள்ள இடத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை மசாஜ் செய்யவும்.
மஞ்சள்
மஞ்சள்: ஒரு சக்திவாய்ந்த ஆண்டிசெப்டிக் கலவை என்று அறியப்படும் மஞ்சள் குர்குமின் கொண்டிருப்பதால் வலியைக் குறைக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் மஞ்சள்
தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவவும்.
ஐஸ் கட்டி
ஐஸ் கட்டிகளைப் ஒரு துணியில் சுற்றி முழங்காலில் வலி உள்ள இடத்தில் ஒரு பத்து நிமிடங்கள் ஒத்திடம் கொடுக்கலாம், இவ்வாறு செய்வது வலியைக் குறைப்பது
மட்டுமல்லாமல், முழங்கால்களில் வீக்கத்தையும் குறைக்கிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்த முறைகளை பயன்படுத்துவதாக இருந்தாலும் உங்கள் குடும்ப மறுத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
படுக்கையறை காட்சி கேள்வி- கடுப்பான மாளவிகா மோகனன்
படுக்கையறை காட்சி கேள்வி- கடுப்பான மாளவிகா மோகனன்
தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா
மோகனன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய பொழுது பலவிதமான கேள்வி எழுப்பப்பட்டது.
படுக்கையறை காட்சி பற்றி கேள்வி.. கடுப்பான மாளவிகா மோகனன்
தனுஷ் – மாளவிகா மோகனன்
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.
மாளவிகா மோகனன்
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர்
தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
ரசிகரின் கேள்வி
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில், மாளவிகா மோகனன் சமூக
வலைத்தளத்தின் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் பலர் பலவிதமான கேள்விகளை எழுப்பினர். அதில் ரசிகர் ஒருவர் மாறன் படத்தில்
தனுஷ் உடனான படுக்கையறை காட்சியை எத்தனை முறை படமாக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, கடுப்பான மாளவிகா உங்கள் மண்டைக்குள் மோசமான
எண்ணம் உடைய இடம் இருக்கிறது என காட்டமாக பதிலளித்துள்ளார்.
இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி
நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நிக்கி கல்ராணிக்கு ஒரே நாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்.
ஒரே நாளில் நிக்கி கல்ராணிக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி
நிக்கி கல்ராணி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. இவருக்கும் நடிகர் ஆதிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
அதே தினத்தில் நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி திருமணத்தன்று ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். சஞ்சனா இரண்டு வருடங்களுக்கு முன்பு
ஆசிஷ் பாஷா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.
நிக்கி கல்ராணி
சஞ்சனா தமிழில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2020ம் வருடம் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்து பின்னர்
பெயில் பெற்று வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை
மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை
இலங்கையில் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் நாடெங்கும் . உணவு பற்றாக்குறை
ஏற்பட்டு ,உணவு பஞ்சம் ஏற்படும் எனவும் ,இதனால் பல ஆயிரம் மக்கள் பட்டியணியால் தவிக்கும் நிலை ஏற்பட போகிறது என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மத்திய வங்கியின் கயானாவை காலி செய்த, பசில் தலைமையிலான குழுவினரின்
செயல் பாட்டினால் இவ்விம்மன நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது
தற்கால நெருக்கடி நிலை தொடர்ந்து பயணித்தால் ,இலங்கை சோமாலிய போன்ற நாடாக மாற்றம் பெறும்
என எதிர் பார்க்க படுகிறது
115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்
115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பிரான்ஸ் நாடு
இலங்கைக்கு பதின் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளது
தமது நாட்டின் தற்கால நிலை கருதி பல நாடுகளிடம்
இலங்கை பிச்சை கேட்டு வருகின்ற நிலையில் இந்த உதவிகள் வழங்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
தமிழக செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடு
தமிழக செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தின் முக்கிய
செல்வந்தர்கள் இலங்கையில் பல கோடி ரூபாவுக்கு முதலீடு செய்துள்ளனர்
இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் முன்னோக்கி செல்லும் நிலை ஏற்படும் என எதிர்க்க படுகிறது
முதன் முதலாக வெளிப்படையான அறிவிப்புடன் தமிழக செல்வந்தர்கள் இலங்கையில்
முதலீடு செய்துள்ளமை குறிப்பிட தக்கது
இந்தியாவில் முதன்முறையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !!
இந்தியாவில் முதன்முறையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !!
இந்தியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுகளை தீவிரப்படுத்தும் வகையில், தனது அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வினை தமிழ்நாட்டின் சென்னைப் பெருநகரில் நா.தமிழீழ அரசாங்கம் நடாத்துகின்றது.
Hotel Benzz Park(Hall Volvo) N62, Thirumalai Pillai Road, T.Nagar, Chennai – 600 017 at 5 PM
கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின்னராக நடைபெறுகின்ற நேரடி பொதுநிகழ்வாக இது அமைவதோடு, மூன்றாவது தவணைக்காலத்தின் ஏழாவது அமர்வாக மே21ம் நாள் சனிக்கிழமை இடம்பெறுகின்றது.
அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் என பேராளர்கள் பலரும் பங்கெடுக்கும் இந்நிகழ்வில் ‘ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு’
‘சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்’ ஆகிய தொனிப்பொருட்களில் கருத்தமர்வுகள் இடம்பெறுகின்றன.
மூத்த ஊடகர் திரு.அய்யநாதன், தோழர் தியாகு, தோழர் பாமரன், பேராசிரியர் ஹாஜா கனி, மூத்த ஊடகர் தோழர் தெ.சி.சு.மணி, முனைவர் பேராசிரியர் நாகநாதன்,
முனைவர் பேராசிரியர் மணிவண்ணன், தோழர் ச.அ.சௌரிராசன் ஆகியோர் இக்கருத்தமர்வுகளில் பங்கெடுக்கின்றனர்.
கனடா, பிரித்தானியா, ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் இருந்து அந்நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களது வாழ்த்துரைகளும் இடம்பெற இருக்கின்றன.
மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்கள் வாழ்த்துரை வழங்க, மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளார் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தலைமையுரையினை வழங்குகின்றார்.
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு இடம்பெறுகின்ற இந்த நேரடி நிகழ்வினை நா.தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியாகவும் காணலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,நலிந்துபோயுள்ள
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இலங்கையில் வரி வீதம் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு இலங்கை சென்றுள்ளது
இதனால் இலங்கை மத்திய வங்கி காஸ்,மற்றும் எரிபொருள்கள் விலையை அதிகரிக்கும் படி அரசிடம் பரிந்துரை செய்துள்ளது
இதனால் மக்கள் மேலும் கொதிப்பில் உறைந்துள்ளனர்
இலங்கை குடி மக்கள் தலைகள் ஒவ்வொன்றுக்கும் பல ஆயிரம் ரூபா நாள் தோறும்
வரியாக செலுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளியுள்ளது என்ற குற்ற சாட்டு வலுத்து வருகிறது
இவை மேலும் ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
கோட்டாவை வெளியில் அனுப்பவேண்டும்- ஹரின்
கோட்டாவை வெளியில் அனுப்பவேண்டும்- ஹரின்
புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள்
சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் கொழும்பில் இன்று (20) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
அந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் ஹரின்,
நாட்டின் நெருக்கடியை தீர்க்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளேன். ஆனால், இது ஒரு தற்கொலை முயற்சியாகும். சூறாவளி ஒன்றில் சிக்கிய படகில் நான்
சென்றுகொண்டிருக்கின்றேன். கப்டன் படகை செலுத்துவதில் தடுமாறுகிறார். அப்படியானால் துணிந்துவந்து கப்டனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றார்.
அதுமட்டுமன்றி, கோட்டாவை வெளியில் அனுப்ப வேண்டும்.
அதை ஜனநாயக அணுகுமுறைக்குள் செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் சிதறிய கவச வண்டிகள்
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் சிதறிய கவச வண்டிகள்
அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடரணி ஒன்று ஈராக்கின் Babylon.பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பொழுது தாக்குதலுக்கு உள்ளாக்க பட்டுள்ளது
இதில் இரண்டு கவச வண்டிகள் சேதமடைந்துள்ளன ,இந்த வாகன தொடரணி
எண்ணெய் திருடி செல்லும் டாங்கிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் அணியினர் என தெரிவிக்க படுகிறது
அவ்விதமான இந்த அணியினர் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
தென் கொரியாவில் பாரிய வெடிப்பு ஒருவர் பலி 9 பேர் காயம்
தென் கொரியாவில் பாரிய வெடிப்பு ஒருவர் பலி 9 பேர் காயம்
தென் கொரியாவில் ஒயில் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம் பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் ,
மேலும் ஒன்பது பேர் படு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இந்த வெடிப்பு சம்பவத்திற்குரிய காரணம் தெரியவரவில்லை
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.








