Posted in இலங்கை செய்திகள்

சிகை அலங்கார நிலையங்கள் ,சலூன்கள் ஆகியவற்றை திறப்பதற்கு நடவடிகை

சிகை அலங்கார நிலையங்கள் ,சலூன்கள் ஆகியவற்றை திறப்பதற்கு நடவடிகை

COVID 19 தொற்றின் காரணமாக அரசாங்கத்தினால் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சிகை அலங்கார

நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அமைவாகவும் சிகை அலங்கார துறைக்கான சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்படவுள்ளன.

    இந்த சட்ட கட்டமைப்பு உள்ளடக்கிய வழிகாட்டிக்காக நடைமுறை பிரச்சினைகளை அறிந்து கொண்டு புதிய விடயங்களை

    உள்ளடக்கும் நோக்கத்தைக் கொண்டு சுகாதார அமைச்சு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் திருமதி பவித்ரா தேவி

    வன்னியாராச்சி தலமையிலும் சிகையலங்கார துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் நேற்றைய தினம் (4) மாலை சுகாதார அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதன்போது சுகாதார அமைச்சரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. சிகை அலங்காரத் துறைக்கான சட்டங்களை

    வகுப்பது வேறு எந்த நிறுவனமும் அல்ல என்றும் இதனை சுகாதர அமைச்சினால் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

    இதே போன்று நாளாந்த சேவைகளை வழங்கும் பொழுதுசகாதார அமைச்சினால் வழங்கப்படும் அறுவுறுத்தல்கள் வழங்கப்பட்ட

    சிகை அலங்காரம் உள்ளிட்ட சேவை இடங்கலாக அத்தியாவசிய சேவையை மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை

    மேற்கொள்ளுமாறும் அதற்காக உரிய இடவசதி ஏற்பாடு செய்ய வேண்டும். சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு

    முறையை சரியான முறையில் கடைபிடித்து சேவையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

    இதே போன்று சிகை அலங்கார சேவை முறையாக முன்னெடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை

    உள்ளடக்கிய வழிகாட்டியொன்றை சமர்ப்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார

    வைத்திய அதிகாரிகள் ஊடாக இந்த நடவடிக்கை கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனறும் அறிவி;ககப்பட்ட்து

    இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் சிகை அலங்காரத்துறையின் முக்கியஸ்தரகளுடன் இன்று

    பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களது கோரிக்கை சிகை அலங்கார நிலையங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம்

    ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதாகும். இவர்களது கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு இந்த நிலையங்களை

    திறப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறை பாரிய அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் உலகில்

    பல நாடுகளில் பரவியுள்ள இந்த தொற்று நோயை இலங்கையில் கட்டுப்பதக்கூடிய நிலமை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

    இத்துறையைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய போதிலும் இந்த சந்தர்ப்பத்தில் நாடு குறித்து

    சிந்தித்து மிகப் பொறுப்புடன் சேவைi மேற்கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொண்டுள்ளளோம். விசேடமாக சமூக இடைவெளியை

    முன்னெடுத்து சுகாதார நடைமுறைகளை கடைபிடித்து உங்கள் நிறவனங்களுக்கு வரும் நபர்களுக்கு சேவையை வழங்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சிகை அலங்காரத் துறையைச் சேர்ந்த முன்னோடிகளினால் COVID 19 காரணமாக

    சிகை அலங்கார நிலையங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்த போதிலும் பெரும்பாலான நிலையங்களின்

    நடவடிக்கைகள் தனிப்பட்ட ரீதியில் மேற்கொள்வதற்கு செயல்படுவதாக தெரிவித்தனர் இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் என்று சுட்டிக்காட்டினர்.

    தற்பொழுது A,B,C ஆகிய சிகையலங்காரத் துறை தரத்திற்கு அமைவாக இதுதுறையில் சுமார் 2 இலட்சம் பேர்

    வாழ்வாதாரத்திற்காக தங்கியுள்ளனர்.. இதனால் சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் சுகாதார பாதுகாப்பு

    நடைமுறைகளை கடைபிடித்து தமது சேவையை முன்னெடுப்பதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.

    கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்ததைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை தொடர்பில் தமது நன்றியை சுகாதார அமைச்சுக்குத் தெரிவிப்பதாகவும் இவர்கள் குறிப்பிட்டனர்.

    இந்த நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, பிரதிப் பணிப்பாளர் நாயகம் எல்.ரி.கம்லத், சுற்றாடல் மற்றும் தொழில் சுகாதார அலகின்

    பணிப்பாளலர் வைத்தியர் திலக் சிறிவர்தன, சிகை மற்றும் சிகை அலங்கார தொடர்பான இலங்கை நிறுவனங்களின் தலைவர்

    திருமதி கருணாரத்ன அதன் அங்கத்தவர்களான திருமதி ரமணி பெர்னாண்டோ , முன்னணி சிகை அலங்கார கலைஞர்களான ரம்சி

    ரஹ்மான், ரோஹான் பீரிஸ், சஞ்சீவ குமார பெரும உள்ளிட்டர் பலர் கலந்து கொண்டனர்.

    சலூன்கள்
    சலூன்கள்
        Posted in இலங்கை செய்திகள்

        ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் -இதனை நீங்கள் செய்யலாம்

        ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் -இதனை நீங்கள் செய்யலாம்

        ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு?

        ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு?

        மேலதிக விளக்கம்

          01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது?

          கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
          ஏனைய மாவட்டங்களில் இன்று (04) முதல் மே 06, புதன் வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை நடைமுறையில்

          இருக்கும். இம்மாவட்டங்களில் மே 06 புதன், இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 11 திங்கள் அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.

          02.ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் வழமை நிலைக்கு கொண்டுவருதல் எப்போது ஆரம்பமாகும்?

          கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில்

          இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருதல் மே 11 திங்கள் முதல் ஆரம்பமாகும்.


          இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று (04) முதல் ஆரம்பிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும், இவ்வாரத்தில் 04 வார விடுமுறை நாட்கள் உள்ளதால் மே 11க்கு மாற்றப்பட்டுள்ளது.

            03.இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவரும் ஆரம்ப பணிகள் எவ்வாறு இடம்பெறும்?

            கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரச, தனியார் துறை நிறுவனங்கள் மே 11 திங்கள் முதல் திறந்திருக்க வேண்டும்.

            இதற்காக தற்போது முதல் திட்டமிடுமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


            நிறுவனங்களை திறந்து பணிகளை மேற்கொள்ளும் போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக

            பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.


            தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00மணிக்கு திறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


            அரச, தனியார் துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

            போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள், புகையிரதங்கள் பயணிகள் போக்குவரத்துக்காக அரச, தனியார் துறையில் தொழிலுக்காக செல்வோருக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

            04.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு எத்தகைய விடயங்களுக்காக அனுமதி வழங்கப்படும்?

            கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்

            வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
            வீடுகளில் இருந்து வெளிச்செல்வது உணவு மற்றும் மருந்துப்

            பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமேயாகும்.

            1. தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களுக்கு ஏற்ப வீடுகளை விட்டும் வெளிச்செல்வதற்கு வழங்கப்படும் அனுமதி எப்பிரதேசங்களுக்கு ஏற்புடையது? எப்போது முதல்?

            · ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டும்.

            · மே 11 திங்கள் முதல்

            · ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வேலையில் அது ஏற்புடையதாகாது

            ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படினும் மேற்படி அறிவுறைகளை பின்பற்றி மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

            ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும், பொருளாதார மற்றும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வரும் பணிகள்

            இடம்பெறுவதுடன், வைரஸ் பரவலை தடுப்பதற்காக மக்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதே இந்த ஏற்பாடுகளின் முக்கிய நோக்கமாகும்.

            மேற்படி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஏலவே வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

            ஜனாதிபதி ஊடகப் பிரிவு

            ஊரடங்கு சட்டம் அமுலில்
            ஊரடங்கு சட்டம் அமுலில்
                Posted in இலங்கை செய்திகள்

                கிளிநொச்சி மாவட்ட சிறுபோக முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்

                கிளிநொச்சி மாவட்ட சிறுபோக முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்

                சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தித்திட்டத்தின் கீழ் 2020 ஆண்டின் சிறுபோகம் முன்னேற்றம் தொடர்பிலான

                கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் நடைபெற்றது.

                மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி R.கேதீஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துடையாடலில் மாவட்ட

                  விவசாயப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவை திணைக்களம்

                  விவசாயத்திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

                  சௌபாக்கியா தேசிய உணவுத்திட்டத்தினை நடை முறைப்படுத்துவதில்

                    உள்ள இடர்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் குறித்த காலப்பகுதிக்குள்

                    அடைவுமட்டத்தினை எட்டுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டன.

                    கிளிநொச்சி மாவட்ட
                    கிளிநொச்சி மாவட்ட
                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        பிரிட்டனில் சட்டத்தரணியான – மனைவியை சுட்டு கொன்ற கணவன்

                        பிரிட்டனில் சட்டத்தரணியான – மனைவியை சுட்டு கொன்ற கணவன்

                        பிரிட்டன் Barham பகுதியில் மதியம் கிட்ட தட்ட ஐந்து மணியளவில் நாப்பது வயது

                        நிரம்பிய சட்ட தரணியாக விளங்கும் இரு பிள்ளைகளின் தாயாரை அவரது கணவர் சுட்டு கொன்றுள்ளார் .

                        இரத்த வெள்ளத்தில் துடி துடித்து கொண்டிருந்த இவர் மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் முன் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்

                        இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் கைது செய்ய பட்டுள்ளார் .


                          இவருக்கு இரண்டு ,இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன ,குடும்ப தகராறு

                          காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது

                          மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                          பிரிட்டனில் சட்டத்தரணியான
                          பிரிட்டனில் சட்டத்தரணியான
                          Posted in உலக செய்திகள்

                          அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் கொரனோவால் பலி

                          அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் கொரனோவால் பலி

                          அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேர் வரை கொரனோ வைரஸ்

                          தாக்குதலினால் பலியாகி வருவதாக புதிய புள்ளி விபர கணக்கு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                          இதுவரை கிட்டத்தட்ட எழுபதாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்,The coronavirus could kill 3,000 Americans per day

                              அந்த கணக்கின் பிரகாரம் சராசரி நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேர்வரை பலியாகி

                              வருகின்றனர் எனவும் , இவை இம்மாதம் முடிவிற்குள் ஒரு லட்சம் முதல் இரண்டு

                              லட்சம் மக்கள் வரை பலியாகும் நிலையை எட்டி பிடிக்கலாம் என அச்சம் தெரிவிக்க பட்டுள்ளது

                              உலகில் அதிக உயிரிழப்பும் ,நோயின் தொற்றுக்கு உள்ளானவர்களையும் தன்னகத்தே வைத்து அமெரிக்கா சாதனை படைத்துள்ளது ,

                                  இதுவே தான் சீனா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக சீற்றம் கொள்ள காரணமாக

                                  அமைந்துள்ளது ,அமெரிக்காவின் தொடர் கோப பேச்சு சீனா மீது

                                  போர் தொடுக்கும் நிலையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் மறுபுறம் நிலவத்தான் செய்கிறது

                                  அமெரிக்காவில் நாள்
                                  அமெரிக்காவில் நாள்
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      மட்டக்களப்பில் கொரோனா தொற்று – அர்பணிப்புடன் செயற்பட்ட தலைவர்களுக்கு அரசாங்க அதிபர் பாராட்டு

                                      மட்டக்களப்பில் கொரோனா தொற்று – அர்பணிப்புடன் செயற்பட்ட தலைவர்களுக்கு அரசாங்க அதிபர் பாராட்டு

                                      மட்டக்களப்பில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட

                                      கொரோனா தடுப்பு செயலனியினால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

                                      இதனடிப்படையில் உள்ளுராட்சி சபைகள் தொற்று நீக்கல் விசிறல் முதல் மக்கள் ஒன்று கூடும் சந்தை போன்ற இடங்களை

                                        முகாமைத்துவம் செய்வது வரையிலான அனைத்து விடயங்களிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இம்மாவட்டத்தில் கொரோனா

                                        தொற்று பரவாமலிருக்க இவர்களின் பங்களிப்பு மேலானது என பாராட்டப்படவேண்டியது அவசியம் என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

                                        அரசாங்க அதிபர் பதவியேற்று முதன்முறையாக உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களை சந்திக்கும் கூட்டம் இன்று (4) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது

                                        அரசாங்க அதிபர் இதனை தெரிவித்தார். ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தமையினால் உள்ளுர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் குறிப்பாக மரக்கறி உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல் பல

                                        சிரமங்களை எதிர்கொண்டனர். இதற்காக மாவட்ட செயலகத்தினால் மரக்கறி உற்பத்திகளைக் இரண்டு தடவைகள்

                                        கொள்வணவு செய்து அனைத்து பிரதேச செயலகங்கள் வாயிலாக விற்பனை செய்ய நவடிக்கை எடுக்கப்பட்டது. இத்திட்டம் வெற்றியளித்துள்ளது.

                                          இதேபோன்று எமது மாவட்டத்தில் காணப்படுகின்ற மரக்கறி, மீன், பால் போன்ற உள்ளுர் உற்பத்திகளை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும், மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கும் நியாய

                                          விலையில் விற்பனை செய்ய மொத்த வியாபாரிகளையும், சில்லறை வியாபாரிகளையும் ஒருங்கிணைப்புச் செய்து மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முன்வரவேண்டும்

                                          என அரசாங்க அதிபர் உள்ளுராட்சி சபைத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார். மேலும் பலவிடயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

                                          இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப் பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி

                                          முகுந்தன், மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளர் ரீ. பிரகாஸ், மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி. சரவனபவான், நகர சபைத்

                                          தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர்களும் கலந்துகொண்டனர்.

                                          மட்டக்களப்பில் கொரோனா
                                          மட்டக்களப்பில் கொரோனா
                                              Posted in உலக செய்திகள்

                                              கொரனோ வைரஸ் தாக்குதலில் 250,000 பேர் பலி – 35 லட்சம் பேர் பாதிப்பு

                                              கொரனோ வைரஸ் தாக்குதலில் 250,000 பேர் பலி – 35 லட்சம் பேர் பாதிப்பு

                                              உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி

                                              இதுவரை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர் .

                                              மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை முப்பத்தி ஐந்து லட்சம் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                              இந்த நோயின் தாக்குதலில் அதிக அளவில் பாதிக்க பட்டுள்ளது அமெரிக்காவாகும்

                                              ,இங்கு இதுவரை எழுபதாயிரம் பேர் பலியாகியும் 12 லட்சம் பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்

                                              இதனை அடுத்து பிரான்ஸ் ,இத்தாலி ,பிரிட்டன் ,ஸ்பெயின் நாடுகள் இடம்பிடித்துள்ளன ,

                                              தற்போது இந்த தொகையினை எட்டி பிடித்து விடும் நிலையில் ரசியா முன்னேறி வருகிறது

                                                ,அங்கு நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேர் பாதிக்க பட்ட வண்ணம் உள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது

                                                கொரனோ வைரஸ்
                                                கொரனோ வைரஸ்
                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      மூடப்பட்டிருந்து சில பகுதிகள் மீள திறப்பு

                                                      மூடப்பட்டிருந்து சில பகுதிகள் மீள திறப்பு

                                                      கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்து நாவலப்பிட்டி நகரம் இன்று திறக்கப்பட்டது.

                                                      கடைகள் மற்றும் பொது இடங்கள் முழுமையாக கிருமி ஒழிப்புக்கு பின்னர் இன்று நகரம் திறக்கப்பட்டது

                                                      நகரத்திற்குள் நுழையும் மக்களுக்கு நகரம் முழுவதும் ஒலிபெருக்கிகள் மூலம் பொது மக்களுக்கு போலிசார் கொரோனா குறித்து தெளிவுபடுத்தினர்.

                                                        கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு கடற்படை வீரர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாவலபிட்டிய நகரம் சமீபத்தில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது

                                                        இதேவேளை கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட கண்டி

                                                        மாவட்டத்தின் அக்குரணை பகுதியும் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியும் நேற்று மீள திறக்கப்பட்டன.

                                                        குறித்த பகுதிகளில் இறுதி நோயாளி அடையாளம் காணப்பட்ட நாள் முதல் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை

                                                        மேற்கொள்ளப்பட்டிருந்ததாக ,இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

                                                        அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் குறித்த பகுதிகளை மீண்டும் திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். .


                                                        இதேவேளை கொரோனா தொற்று காரணமாகவும் ஒருவர் உயிரிழந்திருந்தமையாலும் மூடப்பட்டிருந்த மருதானை ,மாமுல் அருஸ் மாவத்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

                                                        .மாமுல் அரூஸ் மாவத்தை தொடர்மாடிக் குடியிருப்பைச் சேர்ந்த 302 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு புனானை கண்காணிப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

                                                        அதனைத் தொடர்ந்து கடந்த 17 ஆம் திகதி அவர்களின் தனிமைப்படுத்தல் காலப்பகுதியை நிறைவு செய்த பின்னர்

                                                        வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.ன்று முதல் 14 நாட்களுக்கு அவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டனர்.

                                                        சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டு 14 நாட்கள் நிறைவுற்ற நிலையில், குறித்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது

                                                        நாவலப்பிட்டி
                                                        நாவலப்பிட்டி
                                                            Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                            கிழக்கு லண்டன் பள்ளி வாசல்களில் குவிக்க படும் மனித சடலங்கள்

                                                            கிழக்கு லண்டன் பள்ளி வாசல்களில் குவிக்க படும் மனித சடலங்கள்

                                                            பிரிட்டன் கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்று தாற்காலிக கொரனோ
                                                            சுடலையாக மாற்றம் பெற்றுள்ளது

                                                            கொரனோ நோயினால் இறந்தவர்கள் சடலங்கள் இந்த பள்ளி வாசலுக்குள் வைக்க

                                                            பட்டு ,உடல்கள் இறுதி நல்லடக்கம் செய்வதற்கு அந்த பள்ளி வாசல் ஒதுக்கியுள்ளது

                                                            அதிகம் ஐந்து வேளை தொழும் பள்ளிவாசல் இவ்வாறு ஒதுக்க பட்டுள்ளது ,எதிர் காலத்தில் அதன் பாதிப்பு பலமாக இருக்கும் என நம்ப படுகிறது

                                                            கிழக்கு லண்டன் அலை
                                                            கிழக்கு லண்டன் அலை
                                                                Posted in உலக செய்திகள்

                                                                வெடி குண்டுளால் அதிரும் களமுனை – பலர் பலி

                                                                வெடி குண்டுளால் அதிரும் களமுனை – பலர் பலி

                                                                சிரியாவில் அரச இராணுவத்துக்கும் துருக்கி மற்றும் அதன் ஆதரவு படைகள்

                                                                நிலைகள் மீது சிரியா அரச இராணுவம் அகோர எறிகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது

                                                                இதில் துருக்கிய படைகள் நால்வர் பலியாகியும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது

                                                                இதே வேளை ரசியாவின் எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்ற அமெரிக்கா

                                                                  படைகள் துரத்தி அடிக்க பட்டுள்ளன ,.குறித்த பகுதியில் ரசியா படைகள் நிலை கொண்டுள்ளன

                                                                  எவ்வேளையும் இங்கு எதுவும் இடம்பெறலாம் என்ற நிலையே உள்ளது

                                                                  வெடி குண்டுளால் அதிரும் களமுனை - பலர் பலிபடைகள் துரத்தி அடிக்க பட்டுள்ளன ,.குறித்த பகுதியில் ரசியா படைகள் நிலை கொண்டுள்ளன
                                                                  வெடி குண்டுளால் அதிரும் களமுனை – பலர் பலிபடைகள் துரத்தி அடிக்க பட்டுள்ளன ,.குறித்த பகுதியில் ரசியா படைகள் நிலை கொண்டுள்ளன
                                                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                                      பிரிட்டன் வார்த்தை அமைச்சர் திடீரென பதவி விலகல்

                                                                      பிரிட்டன் வார்த்தை அமைச்சர் திடீரென பதவி விலகல்

                                                                      பிரிட்டன் வார்த்தக அமைச்சர் தனக்கு கிடைக்க பெற்ற கடிதம் ஒன்று

                                                                      மிரட்டலாக அமைந்திருந்த காரணத்தினால் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளார் .

                                                                      குடும்பத்தினர் பெற்ற கடன் தொகையை செலுதத நிலையில் இவர்கள் காணப்பட்டதால் இந்த விடயம் இடம் பெற்றுள்ளதாக பேச படுகிறது

                                                                        அதனாலேயே இவர் இந்த பதவியை திறந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

                                                                        இவர்கள் மீது வைக்க பட குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு எடுக்க படவுள்ளதகவும் ,

                                                                        அவ்வாறு நீதி விசாரணைகளுக்கு செல்ல பட்டால் அது ஆளும் அரசுக்கு நெருக்கடியை தருவிக்கும் என எதிர்பார்க்க படுகிறது

                                                                            Posted in உலக செய்திகள்

                                                                            இராணுவ தளம் மீது அதிரடி தாக்குதல் -150 பேர் பலி

                                                                            இராணுவ தளம் மீது அதிரடி தாக்குதல் -150 பேர் பலி

                                                                            ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ தளம் ஒன்றின் மீது தாலிபான்கள்

                                                                            திடீர் தாக்குதலை நடத்தினர் .இதில் குறித்த இராணுவத்தை சேர்ந்த 150 பேர்

                                                                            பலியாகியும் படுகாயமடைந்துள்ளனர் என தாலிபான்கள் அறிவித்துள்ளன

                                                                            ஆனால் அரசு இராணுவமோ, சுமார் 14 பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்


                                                                            உண்மையான சேத விபரங்களை அரச இராணுவம் வெளியிடவில்லை

                                                                            இராணுவ தளம் மீது அதிரடி
                                                                            இராணுவ தளம் மீது அதிரடி
                                                                                Posted in உலக செய்திகள்

                                                                                அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் இறப்பர் – டிரம்ப் அறிவிப்பு

                                                                                அமெரிக்காவில் ஒரு லட்சம் மக்கள் இறப்பர் – டிரம்ப் அறிவிப்பு

                                                                                அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

                                                                                சிக்கி சுமார் ஒரு லட்சம் மக்கள் பலியாவார்கள் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்

                                                                                மேலும் இந்த நோயில் சிக்கி இருபது லட்சம் பேர் பாதிக்க படுவார்கள் என்பது அவரது கணிப்பாக உள்ளது

                                                                                  இவ்வாறு இவர் கூறுகின்றார் எனின் உள்ளே இதே தொகையினர் இறந்து

                                                                                  விட்டனர் என்பதும் வரும் நாட்களின் இதன் உயிரிழப்பை

                                                                                  அதிகரித்து கூறுவார்கள் என்பதனை கணித்து கொள்ள முடியும்

                                                                                  அமெரிக்காவில் ஒரு லட்சம்
                                                                                  அமெரிக்காவில் ஒரு லட்சம்
                                                                                      Posted in உலக செய்திகள்

                                                                                      தற்கொலை செய்து கொள்ள 3 முறை எண்ணினேன்-ரோகித் சர்மா

                                                                                      தற்கொலை செய்து கொள்ள 3 முறை எண்ணினேன்-ரோகித் சர்மா

                                                                                      கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மே 17 ஆம் திகதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

                                                                                      கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

                                                                                      ஊடரங்கால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் தனிமையில் உள்ளனர். பொழுதுபோக்கிற்காகவும், ரசிகர்களுக்காவும் பலர்

                                                                                      இன்ஸ்டாகிராம் லைவ் அரட்டை மூலம் சக வீரர்களுடன் உரையாடுகின்றனர்.

                                                                                      இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரோகித் சர்மாவுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

                                                                                      கடந்த 2015 உலகக் கிண்ணத்தில் நான் காயமடைந்தபோது முழுமையாக குணமடைய எனக்கு 18 மாதங்கள் ஆகின. அது என்

                                                                                      வாழ்க்கையில் மிகவும் வேதனையான மற்றும் நெருக்கடியான காலம் என்று சொல்லலாம். நான் மீண்டும் விளையாடத்

                                                                                      தொடங்கிய போது சில தனிப்பட்ட சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது தற்கொலை செய்துகொள்ளலாம் என மூன்று முறை யோசித்தேன் என தெரிவித்தார்.

                                                                                      மார்ச் 2018 இல் ஷமியின் மனைவி, அவர் மீது குடும்ப வன்முறை, பிற பெண்களுடன் தொடர்பு, மேட்ச் பிக்சிங் போன்ற

                                                                                      அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டது. இதனால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது.

                                                                                      மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டால் விசாரணை முடியும்வரை பிசிசிஐ, ஷமியின்

                                                                                      ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. பின்னர் அனைத்தையும் சமாளித்து மீண்டும் மைதானத்திற்கு திரும்பினார்.

                                                                                      அந்தச் சமயத்தில் 24 மணி நேரமும் என்னுடன் குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் அப்போது என்னுடன் இல்லாமல்

                                                                                      போயிருந்தால் நான் மோசமான முடிவை எடுத்திருப்பேன். இக்கட்டான சூழ்நிலையில் என்னுடன் முழுவதும் இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி கூறுகிறேன் எனவும் உருக்கமாக கூறினார்.

                                                                                      தற்கொலை செய்து
                                                                                      தற்கொலை செய்து
                                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                                          293 இலங்கை கடற்படைக்கு கொரனோ

                                                                                          293 இலங்கை கடற்படைக்கு கொரனோ

                                                                                          இலங்கையில் பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 293 கடற்படையினர்

                                                                                          பாதிக்க பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

                                                                                          பாதிக்க பட்ட அனைவரும் சிறப்பு இடைத்தங்கல் தனிமை பாடுதல் முகாமில்

                                                                                          வைத்துச சிகிச்சை வழங்க பட்டு வருகிறது,இதுவரை இந்த நோயின்

                                                                                            தாக்குதலில் சிக்கி ஏழுபேர் பலியாகியுள்ளனர் .706 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                                                            தொடர்ந்து ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் மஹூல் படுத்த பட்டுள்ளது

                                                                                            293 இலங்கை கடற்படைக்கு
                                                                                            293 இலங்கை கடற்படைக்கு
                                                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                                                            இராணுவத்தை கொல்ல பழுதடைந்த மீன்களை எடுத்து சென்றவர் மடக்கி பிடிப்பு

                                                                                            இராணுவத்தை கொல்ல பழுதடைந்த மீன்களை எடுத்து சென்றவர் மடக்கி பிடிப்பு

                                                                                            இலங்கை அக்ரும்பிட்டிய ஐராணுவ முகாமில் உள்ளவர்களுக்கு சேமித்து

                                                                                            வழங்க பாடுவதற்கு டிரக் ஒன்றில் எடுத்துஸ் எல்லா பட்ட மீன்கள் பாரிமுதஹ்லஸ் எய்ய பட்டுள்ளன எ.

                                                                                            பாவனைக்கு உதவாத இவ்வகையான மீன்களை எடுத்துஸ் என்ற பொழுது

                                                                                              காவல்துறையினரால் அந்த வண்டி சோதனைக்கு உட்படுத்த பட்ட பொழுது இந்த விடயம் அம்பலமாகியுள்ளது

                                                                                              இந்த மீன்களை உட்கொண்டிருந்தால் அவர்கள் இருந்திருக்கும் நிலை

                                                                                              ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்க படுகிறது.சுமார் 200 கிலோ மீன்கள் இவ்வாறு மீட்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                                                                                              இராணுவத்தை கொல்ல
                                                                                              இராணுவத்தை கொல்ல
                                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                                              லண்டனில் இருந்த து 208 பேரை காவி சென்ற இலங்கை விமானம்

                                                                                              லண்டனில் இருந்த து 208 பேரை காவி சென்ற இலங்கை விமானம்

                                                                                              பிரிட்டனில் தவித்து கொண்டிருந்த 208 இலங்கையரை காவிய படி இலங்கை எயார்லைங்கா விமானம் ஒன்று இலங்கை சென்றுள்ளது .

                                                                                              இதில் பயணித்த அனைவரும் 21 நாட்கள் தனிமை படுத்தலின் பின்னர்

                                                                                              அவர் தம் குடும்ப உறவுகளுடன் இணைத்து கொள்வார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                                                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                                                  மிருசுவில் பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் வெட்டி கொலை

                                                                                                  மிருசுவில் பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் வெட்டி கொலை

                                                                                                  மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்

                                                                                                  ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

                                                                                                  இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

                                                                                                  சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார்.

                                                                                                    படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு

                                                                                                    மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

                                                                                                    உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்த்தால்

                                                                                                    ஒருவர் உயிரிழப்புக் காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

                                                                                                    மிருசுவில் பகுதியில் வாள்
                                                                                                    மிருசுவில் பகுதியில் வாள்
                                                                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                                                                        சாராய கடையை உடைத்து திருடிய குடி மகன்கள்

                                                                                                        சாராய கடையை உடைத்து திருடிய குடி மகன்கள்

                                                                                                        திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரிலுள்ள

                                                                                                        மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

                                                                                                        கொட்டகலை நகரிலுள்ள பொலிஸ் சோதணைசாவடிக்கு 100 மீட்டர் தொலைவிலுள்ள

                                                                                                        மதுபானம் விற்பனை நிலையமே நேற்றிரவு இனம் தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

                                                                                                          மதுபான விற்பனை நிலையம் உடைக்கபட்டுள்ளமை தொடர்பில் உரிமையாளரின்

                                                                                                          முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

                                                                                                          சாராய கடையை உடைத்து
                                                                                                          சாராய கடையை உடைத்து

                                                                                                              Posted in உலக செய்திகள்

                                                                                                              இந்தியாவில் கொரோனா நோயாளிகள் – குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

                                                                                                              இந்தியாவில் கொரோனா நோயாளிகள் – குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

                                                                                                              இந்தியாவில் சில நாட்களாக, புதிய கொரோனா நோயாளிகள்

                                                                                                              எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

                                                                                                              இதுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். மேலும் மேலும் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கொரோனா நோயாளிகள் இரட்டிப்பு ஆகும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நோய் தொற்று இல்லாத மாவட்டங்கள் 319 என அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                              து தொடர்பாக இந்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவிக்கையில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை

                                                                                                              நடத்தப்பட்டுள்ளது. தற்போது, நாள் ஒன்றுக்கு 74 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா ஆஸ்பத்திரிகளில்

                                                                                                              இரண்டரை லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. நாடு முழுவதும் 20 லட்சம் பாதுகாப்பு கவசங்களை அனுப்பி உள்ளோம். நூற்றுக்கும்

                                                                                                              மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

                                                                                                              கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் அணுகுமுறையை உலக சுகாதார நிறுவனம் மட்டுமின்றி உலக நாடுகள் பாராட்டுகின்றன.

                                                                                                              ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுவதுடன், வைத்தியர்களை கௌரமாக நடத்த வேண்டும். நாம் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இந்த போரில் நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு இந்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.