Author: நலன் விரும்பி
பிரிட்டனில் திங்கட் கிழமை லக்கடவுன் நீக்கம் – பாடசலைகள் ஆரம்பம்
பிரிட்டனில் திங்கட் கிழமை லக்கடவுன் நீக்கம் – பாடசலைகள் ஆரம்பம்
பிரிட்டனில் நீடித்து வந்த லக்கடவுன் ,அதாவது அடித்து பூட்டும் நிலவரம் எதிர்வரும் திங்கட் கிழமை
11 ஆம் திகதி மக்கள் நாட மாடுவதற்கு விதிக்க பட்ட தடைகள் நீக்க படவுள்ளன
இலங்கையிலும் எதிர்வரும் 11ம் திகதி தளர்த்த ,படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது ,அதுபோலவே பிரிட்டன் அதிபரும் தெரிவிக்கிறார் ,
கட்டுப் பாட்டுடன் கூடிய தளர்வாக இவை ,நகர்த்த படவுள்ளது,அனைவரும் முககவசம் ,கையுறை அணிய வேண்டும் என்ற விதி விதிக்க படவுள்ளதாக நம்ப படுகிறது
அத்துடன் பாடசாலைகளும் இரண்டு வாரங்களுக்கு உள்ளாக திறக்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு கவனம்
செலுத்தி வருகிறது
பாடசாலைகள் திறந்தால் மட்டுமே வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டிட முடியும் ,அதனால் அரசு இந்த அவசரத்தை காண்பிக்கிறது
தவிர பாடசாலைகள் திறக்க பட்டால் மாணவர்களை பெற்றவர்கள் அனுப்பிட வேண்டும் என்கின்ற
விதிகள் விதிக்க பாடலாம் எனவும் ,அது தவறின் ,தண்ட பணம் அறவிட படும் நிலைக்கு செல்ல கூடும் என கருத்து நிலவுகிறது
வெளிவந்துள்ள கருத்து பகிர்வு மூலம் இவை வரும் வாரம் முதல் செயல்பாட்டுக்கு அனைத்தும் கட்டம் கட்டமாக திறக்க படுகிறது
ஏழாம் திகதியிடன் மூன்று வார லக்கடவுன் முடிவுறுகிறது , அதனை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட பிரிட்டன் அதிபர் தயாராகி வருகிறார்
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 649 பேர் பலியாகியுள்ளனர் ,
இதுவரை இங்கு இடம்பெற்ற உயிர்பலி 30,076. ஆக அதிகாரித்துள்ளது
அது தவிர இந்த நோயிலின் தாக்குதலில் சிக்கி நாடு தழுவிய ரீதியில் 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இவ்வாறு மக்கள் பலி அதிகரித்து செல்லும் நிலையில் அடித்து பூட்டும் நிலவரம் தளர்த்த படுவது பெரும் கொதிப்பபை ஏற்படுத்தியுள்ளது

வீடுகளிலிந்து சமய வழிகாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள்
வீடுகளிலிந்து சமய வழிகாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள்
இலங்கை இராணுவத்திற்கு உட்பட்ட புனானை, கந்தக்காடு மற்றும் டொல்பின் ஹோட்டல் ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில்
தனிமைப்படுத்தப்பட்ட 127 பேர் இன்றையதினம் (06) வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று (07) முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதால் கடந்த வருடங்களைப் போன்று வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட
வாய்ப்பில்லை என தெரிவித்த இராணுவத் தளபதி வீடுகளிலிந்து சமய வழிகாடுகளில் ஈடுபடுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தில் ஊடகங்களுக்கு விளக்கமளித்த அவர்
தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கமைய டொல்பின் ஹோட்டலிலிருந்து 77 பேர், புனானையிலிருந்து 23 பேர்,
கந்தக்காட்டிலிருந்து 27 பேர் என PCR பரிசோதனைகளின் பின்னர் 127 பேர் வீடு திரும்பியுள்ளனர். முப்படையினரால்
மேற்கொள்ளப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 5,188 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு
செய்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்த, இராணுவத் தளபதி தற்போது 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,819 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று (06) முற்பகல் வரை கடற்படையைச் சேர்ந்த 342 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
தெரிவித்த அவர், கடற்படையினர் அனைவரும் தங்களது முகாமிற்கு திரும்பியுள்ளதால், ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர்
கடற்படை முகாமிற்கு வெளியிலிருந்து எந்தவொரு கடற்படையினரும் அடையாளம் காணப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலி விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். தடுப்பூசி எலிக்கு
செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மனித குலத்தையே உருக்குலைத்துள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிப்பில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

இதில் ஒரு சில நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் சோதனை அடிப்படையில் நல்ல பலனைக் கொடுப்பதாக
நிரூபிக்கப்பட்டுள்ளது. சில ஆய்வுகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
ஆனால் கொரோனாவுக்கு இதுவரை எந்த நாடும் மருந்து கண்டுபிடித்ததாக உறுதி செய்யப்படவில்லை. கொரோனா தடுப்பு
மருந்து தொடர்பாக உலக சுகாதார அமைப்பும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை.
இந்நிலையில், உலகின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கியிருப்பதாக இத்தாலி கூறியிருப்பதாக பல்வேறு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாகிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி, ரோம் நகரில் உள்ள ஸ்பல்லான்ஷானி
மருத்துவமனையில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. முதலில் இந்த தடுப்பூசி எலிக்கு செலுத்தப்பட்டு சோதனை
செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊசி போட்டதும் அந்த எலியில் ஆன்டிபாடிகள் உருவாகி உள்ளன. மனித உடலிலும் வைரசின் செயல்பாட்டை தடுத்துள்ளது.
மேலும், தடுப்பூசியை பரிசோதித்தபோது, இது மனித அணுக்களில் உள்ள வைரஸை அழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தடுப்பூசியால் கொரோனா வைரஸ் அழிந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்று டாகிஸ் நிறுவன தலைமை நிர்வாக
அதிகாரி லூய்கி, இத்தாலி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இத்தாலியில் இதுவரை தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆய்வுகளில் இது மிகவும் முன்னேறிய கட்டம் என்று கூறிய அவர், கோடை காலத்தில்
மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தும் முழுமையான ஆராய்ச்சி தொடங்கும் என்றார். தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறையை
விரைவுபடுத்துவதற்கு, சர்வதேச அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொரோ நோயாளர்களின் எண்ணிக்கை 795 ஆக அதிகரிப்பு
கொரோ நோயாளர்களின் எண்ணிக்கை 795 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோ நோயாளர்களின் எண்ணிக்கை இன்று மாலை 795 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இனறு பிறபகல் இன்றைய தினத்தில் (2020.05.06) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்கு உள்ளான மூன்று (03
) நோயாளர்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

இந்த உறுதி செய்யப்பட்ட நோயாளர்கள் 3 பேரும் கடற்படை அங்கத்தவர்கள்.
இதற்கமைவாக இலங்கையில் உறுதி செய்யப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 774 ஆகும்.
இதுவரையில் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 215.
நேற்றைய தினம் (202.05.05) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1491 என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
COVID 19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-05-06 21:31:20
795
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
571
சிகிச்சை பெறும் நோயாளிகள்
24
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
215
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
9
இறப்பு எண்ணிக்கை

இந்தோனேசியாவில் நில நடுக்கம் -ஆடிய வீடுகள் – ஓடிய மக்கள்
இந்தோனேசியாவில் நில நடுக்கம் -ஆடிய வீடுகள் – ஓடிய மக்கள்
இன்று இந்தோனேசியா உள்ளூர் நேரம் ,9,30 மணியளவில் பாரிய நில
நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது ,.
இந்த நிலநடுக்கம் ,7,2 புள்ளியாக பதிவாகியுள்ளது
இதன் போது வீடுகள் குலுங்கின,எனினும் இதுவரை இந்த நில நடுக்கத்தால்
ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ,மக்கள் பீதியில் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்
தற்போது இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளுக்குள் உறைந்த
வேளையில் இந்த நடுக்கம் ஏற்பட்டுள்ளது

கொரனோ ஒழிந்தது – தேர்தல் திருவிழா ஆரம்பம்
கொரனோ ஒழிந்தது – தேர்தல் திருவிழா ஆரம்பம்
இலங்கையில் பாராளுமன்ற தேர்தலை நடத்திடும் நோக்குடன் தற்போது
இலங்கையில் எதிர்வரும் வாரம் ஊரடங்கு தடையினை விலக்கிட அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது
இவ்வேளை மக்களுக்கு தாம் அளப்பெரிய உதவிகளை செய்துள்ளோம் என்ற நிலையில் சிங்கள மக்கள் வாக்குகள்
பெருமளவில் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தலை நடத்திட அவசரம் காட்டுகிறார்
ஆளும் அரசர் கோட்டபாய ,
தேர்தலை தள்ளி போட்டால் அதனை தமக்கு சாதகமாக எதிர்க்கட்சிகள்
பயன்படுத்தி வெற்றியை தமதாக்கி விடுமென்பதால் அவசரம் காட்டுகிறது சிவப்பு சால்வை பாட்டிகள்
எவர் இறந்தால் என்ன .தமது ஆட்சி நிலைத்தால் போதும் என்ற நிலையில் குடும்ப ஆட்சி கோமகன்கள் உள்ளனர்
என்பதே இந்த வெளிப்பாட்டு தோற்றமாக மலர்கிறது

மரத்துடன் மோதி சிதறிய வான் – நடந்தது என்ன ..? – படங்கள் உள்ளே
மரத்துடன் மோதி சிதறிய வான் – நடந்தது என்ன ..? – படங்கள் உள்ளே
இலங்கை யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை ஆடம்பர சொகுசு வான் ஒன்று சாரதியின்
கட்டு பாட்டை இழந்து மரத்துடன் மோதி சிதறியதில் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார்
எனினும் இந்த விபத்தில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன .
வானின் முன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்ற சேதமும் ,அதே வேளையில்
வானின் பின்புறத்தில் உள்ள மரக்கிளைகளில் உடைவுகளும் ,அதில் ஏற்பட்ட சேதங்களும் இதில் சந்தேகத்தை கிளப்பியுள்ளன
குறித்த புகைப்படங்களை உற்று நோக்கின் நாம் கூற வரும் விடயங்ககள் உங்களுக்கு புரிய வரும் .
திட்டமிட்டு ஏற்படுத்த பட்ட விபத்து சோடனை காட்சியா …? அல்லது உண்மையான விபத்தா ..? தீர்மானிப்பது நீங்களே .
கடந்த ஒருவாரத்தில் எட்டு படுகொலைகள் தமிழர் வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளமை இங்கே கவனிக்க தக்கது


மரத்துடன் மோதி சிதறிய 

ஊரடங்கு எதிர்வரும் 11ம் திகதி வரை நீடிப்பு –
ஊரடங்கு எதிர்வரும் 11ம் திகதி வரை நீடிப்பு –
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக
இன்று தொடக்கம் ஊரடங்கு இரவு எட்டு மணிமுதல் ,காலை ஐந்து மணிவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமூல் படுத்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது
எதிர் வரும் அந்த நாட்களுக்கு பின்னர் நிலைமையை கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்ய படும் என எதிர் பார்க்க படுகிறது
தேர்தலை மையமாக வைத்து இந்த தடையினை அரசு நீடித்துள்ளது எனினும் சில தினங்களை பின்னர் தடை நீக்க படும் என்பது குறிப்பிட தக்கது

15 இலங்கை கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு
15 இலங்கை கடற்படையினர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தற்பொழுது
15 கடற்படையினர் பாதிக்க பட்டுள்ளதாக முப்படைகளின் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .
இதற்கு முன்னர் 280 கடற்படையினர் இந்த நோயினால் பீடிக்க பட்டு தனிமை
படுத்த பட்டு இருந்தமையும் ஒரு அதிகாரி பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

சிறப்பு விமானத்தில் லண்டனில் இருந்து 194 பேர் இலங்கை வந்தடைந்தனர்
சிறப்பு விமானத்தில் லண்டனில் இருந்து 194 பேர் இலங்கை வந்தடைந்தனர்
லண்டனில் சிக்கி தவித்த இலங்கையர்கள் அவர் தம் நாட்டின் சிறப்பு
விமானத்தின் ஊடக லண்டன் கீத்திரோ விமான நிலையத்தில் இருந்து
இலங்கை பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்
இவ்வாறு இலங்கை வந்தவர்கள் எதிர்வரும் 21 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .
கடந்த முறை இவ்வாறு வந்தடைந்தவர்களில் சிலர் கொரனோ நோயுக்கு
பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிட தக்கது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு 771 பேர் பாதிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு 771 பேர் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு சிக்கி இதுவரை 771 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் சுமார் 300 பாதுகாப்பு படையினரும் உள்ளடங்குகிறது
தொடர்ந்து இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக ஊரடங்கு அமூல் படுத்த பட்டுள்ளது

அமெரிக்க தூதுவர் – பிரதமர் மகிந்தவுக்கு இடையில் சந்திப்பு
அமெரிக்க தூதுவர் – பிரதமர் மகிந்தவுக்கு இடையில் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷவுக்கிடையில் சற்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (05) காலை கொழும்பு, விஜேராம மாவத்தையில்
அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொவிட் -19 உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு குறிப்பாக பொருளாதார தாக்கங்கள் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு
தொடர்பில் பிரதமருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்கள்
வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்கள்
வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்களை வழங்குவதற்கான
முறைமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு விடுத்துள்ள ஊடக வெளியீடு
வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்களை வழங்குவதற்கான முறைமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன
முறையான அங்கீகார நடைமுறைகளைப் பின்பற்றி வெளிநாட்டிலுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களுக்கு தற்காலிகமான பயண ஆவணங்களை வழங்குவதற்கான
முறைமைகள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வெளிநாட்டு உறவுகள் அமைச்சு, திறன்
அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுக்கு இடையிலான ஆலோசனைகளைத்
தொடர்ந்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான கால
அளவு தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டவுடன், அவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கான வசதிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால்
சம்பந்தப்பட்ட வரிசை முகவர்களுடன் இன்று (04 மே 2020) கூட்டப்பட்ட சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.
நாடு திரும்புவதற்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் ‘இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்’ இணைய முகப்பின்
மூலமாக வெளிப்படுத்தப்பட்ட ஆர்வம் மற்றும் தற்போது குவைத் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள பொது
மன்னிப்பு ஆகியன குறித்து இதன் போது மதிப்பாய்வு செய்யப்பட்டன. குறிப்பாக மாலைதீவில் புலம்பெயர்ந்த
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் மற்றும் அதை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்தும்
கலந்துரையாடப்பட்டது. மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமும் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
நாட்டிற்கு மீள அழைத்து வரப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்தின் போதும் தற்போதைய தனிமைப்படுத்தல் செயன்முறை
நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிசெய்யும் அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அரசாங்கங்களுடன் நடந்த
பேச்சுவார்த்தைகள் மற்றும் அந்த அரசாங்கங்களுக்கு பதிலளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து
வருகை தந்திருந்தவர்களுக்கு அமைச்சர் குணவர்தன விளக்கமளித்தார்.
வெளிவிவகார செயலாளர் ரவினாத ஆரியசிங்க, திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) சுஜீவ
திசேரா, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சரத் ரூபசிறி, இலங்கை வெளிநாட்டு
வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.

பிரிட்டனில் முதலாளியை குத்தி கொன்ற எருமை – மூவர் காயம்
பிரிட்டனில் முதலாளியை குத்தி கொன்ற எருமை – மூவர் காயம்
பிரிட்டன் தெற்கு வேல்ஸ் பகுதியில் பால் பண்ணை வைத்து நடத்தி வந்த 57 வயது
நபர் ஒருவரை , அவர் வளர்த்து வந்த எருமை ஒன்று கொம்பால் கோரமாக குத்தி படுகொலை .செய்துள்ளது
இவரை கொலை செய்த பின்னர் அவரது மனைவி ,மற்றும் மகன் மீது கோரமாக
தாக்குதல் நடத்தியுள்ளது .இதில் பலத்த காயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வரவழைக்க பட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,சீஸ் செய்வதற்கு
எருமையில் பாலை கறக்க முற்பட்ட பொழுதே இந்த திடீர் தாக்குதலை எருமை மாடு மேற்கொண்டுள்ளது
விரைந்து வைத்த காவல் துறையினர் எருமையை சுட்டு கொன்றனர் ,பால் மாடு வயதாகும்
வேளையில் பின்னர் அதனை இறைச்சிக்கு விற்பனை செய்து வருவது
வழமையான ஒன்றாகும் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் ஒரே நாளில் 693 பேர் பலி – மீண்டும் அதிகரித்த மரணம்
பிரிட்டனில் ஒரே நாளில் 693 பேர் பலி – மீண்டும் அதிகரித்த மரணம்
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 693 பேர் பலியாகியுள்ளனர் .
ஐரோப்பாவில் பிரிட்டனில் இவ்விதம் அதிகமான தொகையில் மக்கள் பலியாகியுள்ளனர்
கடந்த மூன்று தினங்களில் வீழ்ச்சி நிலையில் இருந்த மரணங்கள் தற்பொழுது மீளவும் அதிகரிக்க பட்டுள்ளது
இதுவரை 29 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும்194,990 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்க பட உள்ளதாக கல்வி அமைச்சர்
சிக்கினால் வெளியிட்டு இருந்த நிலையில் ,இந்த மக்கள் தொகை பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

லண்டனில் McDonald’s உணவகம் மீள் திறப்பு =- விபரம் உள்ளே
லண்டனில் McDonald’s உணவகம் மீள் திறப்பு =- விபரம் உள்ளே
பிரிட்டனில் அடித்து பூட்ட பட்ட 1200 McDonald’s உணவகங்கள் மீள இப்பொழுது திறக்க படுகிறது
குறித்த பகுதியில் உள்ள சில உணவகங்கள் மட்டும் டிலிவிரி , மட்டும் மேற்கொள்ளும் நிலையில் இந்த உணவகங்கள் திறக்க படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது
விபரம் கீழே


epdp ஒட்டுக்குழுஅடாவடி – வீடு சென்று தமிழ் தம்பதிகள் மீது தாக்கல்
epdp ஒட்டுக்குழுஅடாவடி – வீடு சென்று தமிழ் தம்பதிகள் மீது தாக்கல்
யாழ்ப்பாணத்தில் தற்பொழுது ஒட்டி குழுக்கள் ,அடாவடி ,அதிகாரித்துள்ளது
மணல் கொள்ளை,ஆட்கள் கடத்தல் ,ஆவா ரவுடிகள் குழு என ஒன்றை உருவாக்கி
மக்களை மிரள வைத்து வரும் அரசியல் பின்புலம் கொண்ட இந்த குழுக்களின் செயல் பாடுகள் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது
தமது சுய தொழில் வாய்பிற்க்காக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்த
நபரது வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த ஈபிடிபி குழுவை சேந்த மாபியாக்கள் ,அந்த கணவன் மனைவி மீது தாக்குதலை நடத்தியுள்ளனர் ,
மேலும் ஆவா குழுவை கொண்டு அவர்களை கொலை செய்வேன் எனவும் மிரட்டி சென்றுள்ளனர்
,டக்கிளஸ் அடியாளாக வேலை பார்க்கும் இந்த குழுக்கள் செயல் பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- பாகிஸ்தான் காவல் நிலைய வளாகத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

- H-1B குடியேறாதோர் விசாக்களுக்கு 100000 கட்டணம் டொனால்ட் டிரம்ப்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

ஊரடங்கு சட்ட விரோதம் – வெடித்தது சட்ட சண்டை – அதிரும் நீதி மன்றம்
ஊரடங்கு சட்ட விரோதம் – வெடித்தது சட்ட சண்டை – அதிரும் நீதி மன்றம்
இலங்கையில் பிறப்பிக்க பட்டுள்ள நடப்பு நிகழ் கால ஊரடங்கு சட்டமானது
சட்ட விரோதமானது என நீதிமன்றில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் ,
இதே கருத்தினை யாழ்ப்பாணம் குடத்தனையில் மூன்று அப்பாவி பெண்கள் மீது
வன்முறை தாக்குதலை மேற்கொண்ட போலிஸார் செயல் பாடுகள் தொடர்பில் நீதிமன்றில் வாதிட்ட சுபாஷ் அவர்களும் தெரிவித்துள்ளார்
காவல்துறையினர் அதிகார துஸ் பிரயோகத்தினை மேற்கொண்டு வருவதாக இந்த தமிழ் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்
ஆளும் அரசுக்கு இந்த சட்ட விடயங்கள் பெரும் தலையிடியாக மாறியுள்ளது ,
அரசு சட்டத்தரணியாக விளங்கும் சுமந்திரன் இவ்விதம் வாதடியுள்ளது வியப்பை ஏற்படுதியுள்ளது

மதுபான விற்பனை நிலையங்கள் அடித்து பூடட உத்தரவு
மதுபான விற்பனை நிலையங்கள் அடித்து பூடட உத்தரவு
நாளை முதல் மூன்று தினங்களுக்கு அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.
பொதுநிர்வாக உள் நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

2020 வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபான சாலைகள் , இறைச்சி விற்பனை நிலையங்கள், இறைச்சிக்காக விலங்குகளை
உயிரிழக்கச் செய்யும் நிலையங்கள், சூதாட்ட நிலையங்கள் (ரேஸ் புக்கி), கஷினோ நிலையங்கள் , கிளப்புக்கள் ஆகிவற்றை மூடுதல்
2564 ஸ்ரீ பௌத்த வருடமான 2020 ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி மற்றும் 08ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் வெசாக் தினமாக
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்முறை வெசாக் வைபவத்தை முன்னிட்டு 2020ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி தொடக்கம் மே
மாதம் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
- இதே போன்று நீரோகிகம பரமலஹாய் சதுட்ட பரம தனயய் என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கம் வெசாக்கை பிரகடனப்படுத்தியுள்ளது.
- இதனால் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆகிய 3 தினங்களில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து இறைச்சி
- விற்பனை நிலையங்களை மூடுவதற்கும், சிறப்பங்காடி நிலையங்களில் (சுப்பர் மார்க்கெட்) மதுபான விற்பனையை
- நிறுத்துவதற்கும் , விலங்குகளை உயிரிழக்கச் செய்யும் நிலையங்கள் , சூதாட்ட நிலையங்கள் (ரேஸ் புக்கி) கஷினோ
- நிலையங்கள் மற்றும் கிளப்புக்களை மூடுவதற்கும் இறைச்சி விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் சிறப்பங்காடி
- நிலையங்களில் (சுப்பர் மார்க்கெட்) இறைச்சி விற்பனையை நிறத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தயவுடன் அறிவிக்கின்றோம்.
எஸ் ஹெட்டிஆராச்சி
செயலாளர்
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு
பிரதிகள்
- ஜனாதிபதியின் செயலாளர்
- பிரதமரின் செயலாளர்
- செயலாளர் வெகுஜன ஊடக அமைச்சு
- செயலாளர் புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு
- பொலிஸ் மா அதிபர் , இலங்கை பொலிஸ்
- கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம்
- பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம்
- அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
- மேலதிக செயலாளர், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரிவு

கொரோனா தொற்று எண்ணிக்கை 751ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்று எண்ணிக்கை 751ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 751ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் புதிதாக 33 பேர் இனங்காணப்பட்டனர்.
நேற்று புதிதாக அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 33 நோயாளிகளில் 31 பேர் கடற்படையைச்
சேர்ந்தவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
மற்ற இரண்டு நோயாளிகளும் கடற்படை வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொற்றுக்குள்ளான இரண்டு நோயாளிகளும் 13 வயது பிள்ளை மற்றும் 70 வயது பெண் என்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைவாக இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 751ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 751 பேரில் 549 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தனர்.
இந்தநிலையில் நேற்றைய தினம் நாட்டில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி இதுவரையில் 194 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
- லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை

- இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் ஒருவர் உயிரிழந்தார். அதற்கமைய இலங்கையில் கொரோனா
தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயிர்வடைந்துள்ளது.
இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 137 பேர்
கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்தள்ளது.








