Posted in இலங்கை செய்திகள்

கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன

கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன

இலங்கை கண்டி பகுதியில் ,தனியாக வசித்து வந்த , கோடீஸ்வர பெண் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுளளார்,

குறித்த பெண் ,தான் குடியிருக்கும் வீட்டின் அருகே, கடைகள் பலதை வாடகைக்கு விட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

சொத்து தகராறு காரணமாக ,இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ,எதிர்பார்க்க படுகிறது,

இந்த, கோடீஸ்வர பெண்ணின் ,கணவர் இறந்த நிலையில் ,தனிமையில் வசித்து வந்துள்ளார்.

கோடீஸ்வர பெண் வெட்டி படு கொலை நடந்ததது என்ன

இவரது இரு பிள்ளைகளும், அவுஸ்ரேலியாவில் வசித்து வருகின்றனர் .

கத்தியால் வெட்டிய நபர் ,அங்கிருந்து வெளியேறி சென்ற காட்சியை ,நேரில் பார்த்த சாட்ச்சி தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த கொலையை புரிந்த நபர். தன்னை கத்தியை காண்பித்து மிரடியதாக அந்த சாட்சி தெரிவித்துள்ளார்.

இரத்த வெள்ளத்தில் துடித்த பெண்ணை ,விரைந்து மருத்துவமனைக்கு எடுத்து செல்லவில்லை என்ற அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது .

கோடீஸ்வர பெண் ஏன் கொலை செய்ய பட்டார் .என்பது தொடர்பில் போலீஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

    Posted in இலங்கை செய்திகள்

    யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்

    யானை தாக்குதலில் சிக்கி 34 பேர் மரணம்

    இந்த வருடத்தின். முதலாவது நான்கு மாத்தில் மட்டும் .யானைகளின் தாக்குதலில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் 47 காட்டு யானைகளும் .கொலை செய்ய பட்டுள்ளன .

    எண்ணிக்கையில் ,இவை அதிகமாக உள்ளதாக, வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    காட்டு யானைகளின் .அத்துமீறும் தாக்குதல்களில். சிக்கி உயிரிழக்கும் மக்கள் எண்ணிக்கை .நாள் தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த. காட்டு யானைகளின் இருந்து. தம்மை பாதுகாத்து கொள்ளுமாறு. மக்கள் அரசை வேண்டியுள்ள பொழுதும்,வன ஜீவாரசிகள் காப்பகத்தினால் ,மக்கள் காப்பாற்ற தவறி வரும் நிலையில், மனித உயிரிழப்பு அதிகமாகி வருவதாகதெரிவிக்க படுகிறது .

      Posted in இலங்கை செய்திகள்

      ஐந்து நாள் பாடசாலை இடம்பெறும் கல்வி அமைச்சு

      ஐந்து நாள் பாடசாலை இடம்பெறும் கல்வி அமைச்சு

      இலங்கையில் ,இந்த வாரம் ஐந்து நாட்களும் பாடசாலை இடம்பெறும், என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .

      வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும், பாடசாலை இடம்பெற்று வந்த நிலையில் ,தற்பொழுது ஐந்து நாட்கள் ,இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. .

      இந்த அறிவிப்பு ,படிக்கும் பாடசாலை மாணவர்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

      எனினும் இவ்வாறு ,எதிர்வரும் வராமும் ,பாடசாலை தொடருமா, என்பதே கேள்வியாக உள்ளது .

        இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி
        Posted in இலங்கை செய்திகள்

        இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி

        இந்தியா இலங்கைக்கு வாழங்கிய பால்மா காலவாதி

        இலங்கைக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த ,உணவு பொருட்களில் ,பால்மா பைகள் காலாவதியான நிலையில் உள்ளதாக, கணடறிய பட்டுள்ளது.

        குறித்த பால்மா பைகளில் ,அதன் முடியும் திகதி காணப்படவில்லை ,இதனால் அந்த பால்மா பாக்கட் காலாவதியானதாக இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

        எனினும் இது தொடர்பான சோதனைகள் இடம்பெற்றுள்ளது .

        அவ்வாறு காலாவதி என ஏதும் கண்டறியப்படவில்லை என்றும், இதில் திகதி பதிவிடப்படாது உள்ளமையால், பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக ,உணவு பாதுகாப்பு ஆணையர் தெரிவித்தார் .

        மேற்படி சம்பவம் ,தமிழக அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

          கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியீடு செய்துவைக்கும் விழா
          Posted in இலங்கை செய்திகள்

          கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியீடு செய்துவைக்கும் விழா

          கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியீடு செய்துவைக்கும் விழா

          கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள எழுத்தாளர்களின் படைப்புக்கள் மற்றும் அவர்களின் திறமைகளை வெளியுலகிற்கு கொண்டு வருகின்ற

          செயற்பாடுகளை மாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களம் கடந்த பல வருடங்களாக பாரிய பங்காற்றிவருகின்றதென கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் தெரிவித்தார்.

          கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அச்சுருவாக்கப்பட்ட 4 வகை நூல்களை வெளியீட்டு வைக்கும் விழாவும்,

          நூல்களை நூலாசிரியர்களிடம் கையளித்து வைக்கும் நிகழ்வும் (14) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

          அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மூவின மக்களும் வாழுகின்ற மாகாணமாக இருக்கின்றது. அவர்களுக்குள் இருக்கின்ற படைப்புக்கள் மற்றும் கலை, கலாசார

          கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியீடு செய்துவைக்கும் விழா

          விடயங்களை வெளியுலகிற்கு கொண்டு செல்வதுடன் நின்றுவிடாமல் அவர்களையும், இளம் எழுத்தாளர்களையும் இன்னுமின்னும் ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மாகாண திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

          மாகாணத்திலுள்ள படைப்பாளிகளினால் சமர்ப்பிக்கப்படுகின்ற படைப்புக்கள் யாவும் அதற்கான குழுவினர்களினால் பரிசீலிக்கப்பட்டு, அதில் திறமையான படைப்புக்கள் இனங்கண்டு இவ்வாறு வெளியீடு செய்து

          படைப்பாளிகளுக்கும் நூல்களை வழங்கி வருகின்றோம். இதன் மூலம் அவர்கள் இன்னும் பல படைப்புக்களை வெளிக்கொண்டு வருகின்ற

          ஊக்கத்தையும், இளம் எழுத்தாளர்களின் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது என்றார்.

          இதன்போது, அம்மாவுக்கு பிடித்த கனி என்ற சிறுவர் பாடல்கள் எழுதிய நூலாசிரியர் கலாபூசனம் பி.கனகரத்தினம், கொட்டியாரப்பற்று வன்னிபங்கள் என்ற வரலாறு எழுதிய நூலாசிரியர் வைத்திய கலாநிதி த.ஜீவராஜ், நவீன

          சீதை என்ற சிறுவர் கதைகள் எழுதிய நூலாசிரியர் கவிச்சுடர் (திருமதி) க.சிவரமணி, கடலோரப்பாதை என்ற சிறுவர் கதைகள் எழுதிய நூலாசிரியர் ஏ.எம்.முகைதீன் ஆகியோர்களினால் எழுதப்பட்ட நூல்கள் கிழக்கு மாகாண

          பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அச்சுருவாக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு தலா 200 நூல்களையும் மாகாணப் பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் வழங்கி வைத்தார்.

          கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு மிக
          அண்மையில் நியமனம் பெற்ற மாகாணப் பணிப்பாளருக்கு

          இவ்விழாவின்போது
          பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

          பைஷல் இஸ்மாயில் –

            தீயில் எரிந்த சந்தை - பலர் காயம்
            Posted in உலக செய்திகள்

            தீயில் எரிந்த சந்தை – பலர் காயம்

            தீயில் எரிந்த சந்தை – பலர் காயம்

            ஆர்மேனியா Surmalu சந்தை பகுதியில், திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலு பலர் காயமடைந்துள்ளனர்.

            அதிக மக்கள் கூடிய சந்தை பகுதியில் ,இடம் பெற்ற இந்த தீ விபத்தினால், அந்த சந்தை பகுதியில் அமைந்திருந்த கட்டடங்கள் எரிந்து அழிந்துள்ளன.

            மேலும், சந்தைக்கு வருகை தந்த மக்களது ,வாகனங்கள் தீயில் சிக்கி எரிந்துள்ளன .

            தற்போது சந்தை எரிந்த நிலையில் , சுடு காடாக காட்சியளிக்கிறது .

            வியாபாரிகள் தமது உடமைகளை இழந்து கண்ணீரில் தவித்து வருகின்றனர் .
            காயமடைந்தவர்கள் யாவரும் ,அருகில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

            சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ,தீயினை அணைத்த பொழுதும் ,அங்கு பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது.

            இந்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

              Posted in இலங்கை செய்திகள்

              ஐ.நாவை துர்பிரயோகம் செய்யும் சிறிலங்காவின் தொடரும் வேடிக்கை

              ஐ.நாவை துர்பிரயோகம் செய்யும் சிறிலங்காவின் தொடரும் வேடிக்கை இலக்க தந்திர விளையாட்டு ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

              தனது தடைப்பட்டியில் இருந்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை நீக்கம் செய்வதும், நீடிப்பதும் என்பதான அதன் நடத்தையானது எண்ணிக்கை

              இலக்கங்களுடன் சர்வதேசத்தினை ஏமாற்றும் ஒர் வேடிக்கை தந்திர விளையாட்டையே வெளிப்படுத்தி வருவதோடு, ஐ.நா.வின் 2012ம் ஆண்டு

              ஒழுங்குமுறை இலக்கம் 1ஐஎன நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

              ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், இலங்கைக்குள் 577 நபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 18 அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு

              அமைச்சின் வர்த்தகமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 316 பேருக்கான தடை நீக்கப்பட்டுள்ளதுடன், 6 புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

              ஐ.நாவை துர்பிரயோகம் செய்யும் சிறிலங்காவின் தொடரும் வேடிக்கை

              இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு, கடந்த ஜூன் 13, 2022ம் அன்று,

              சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடர் உரையில், ‘ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண்.1 இன் கீழ் 2012ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட தனிநபர்கள், அமைப்புக்கள்

              தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்படுவதோடு, தற்போது 318 தனிநபர்கள் மற்றும் 4 அமைப்புக்கள் தடைப்பட்டியலில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

              தற்போது, அடுத்த சில வாரங்களின் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடர் தொடங்க இருக்கின்ற நிலையில் மற்றுமொரு பட்டியல்

              வெளிவந்துள்ளது. இது சர்தேசத்தினை ஏமாற்றும் வேடிக்கை இலக்க தந்திர விளையாட்டையே வெளிக்காட்டுகின்றது.

              2014 ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம், 424 தனிநபர்கள் மற்றும் 16 அமைப்புக்களை ‘பயங்கரவாத பட்டியலிட்டு’ தடைவித்தது. 2015ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் மீண்டும் எண்ணிக்கை இலக்க வேடிக்கை

              விளையாட்டாக 8 அமைப்புக்களையும், 259 தனிபர்களையும் புனிதர்களாக்கி தனது தடைப் பட்டியலில் இருந்து நீக்கியது. திரும்பவும் 2021ல் புதிய அரசாங்கம் மீண்டும் தனது எண்ணிக்கை இலக்க வேடிக்கை விiளாட்டை

              காட்டியது. 380 தனிநபர்களையும் மற்றும் 7 அமைப்புக்களையும் பயங்கரவாத தடைப்பட்டியலில் இட்டுக்கொண்டதென எமது முன்னைய அறிக்கையொனறில் குறிப்பிட்டிருந்தோம்.

              தற்போது வெளிவந்துள்ள புதியபட்டியலானது, சிறிலங்காவின் வேடிக்கை இலக்க தந்திர விளையாட்டை மீளவும் தொடர்வதனை வெளிக்காட்டுகின்றது.

              குறிப்பாக சிறிலங்காவின் இந்த நடத்தையானது 2012ம் ஆண்டு-ஐ.நா. ஒழுங்குமுறை இலக்கம் 1ஐ, சிறிலங்கா துர்பிரயோகசம் செய்வதனை

              நிரூபிக்கின்றது. ஐ.நாவின் நம்பகத்தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

              ஐ.நாவை துர்பிரயோகம் செய்யும் சிறிலங்காவின் தொடரும் வேடிக்கை

              இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது தொடரும் தடையானது, ‘தமிழீழம்’
              என்ற கொள்கை, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்


              என்ற நிலைப்பாட்டிலும் உறுதியுடனும் செயற்படுகின்றோம் என்பதனை சான்றுபகிர்வதாவே


              சிறிலங்காவின் இந்த அச்சம் வெளிப்படுத்துகின்றது. இலங்கைக்கு வெளியே ‘தமிழீழத்துக்காக’


              நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போன்றவர்கள் இன்னும் போராடும் செயற்பாட்டில் உள்ளனர் என்ற


              சிறிலங்கா இராணுவத்தளபதியின் சமீபத்திய கருத்தும் இதனையே வெளிப்படுத்துகின்றது என அரசியல்
              விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

                மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க
                Posted in இலங்கை செய்திகள்

                மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க

                மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும் ரணில் விக்கிரமசிங்க

                இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மிரட்டும், உள்ளக அரசியல் சித்து விளையாட்டுக்கள் ஆரம்பித்துள்ளன .

                இலங்கை வரலாற்றில், எம்பி பதவியை இழந்து தவித்த ரணில் விக்கிரமசிங்க ,தனது கட்சியின் ஆதரவு அற்று, இலங்கையின் ஜனாதிபதியான வரலாற்று நிகழ்வு எழுத பட்டுள்ளது.

                மக்களினால் எதிரி போன்று ,ராஜபக்ச குடும்பம் பார்க்க பட்டு ,அந்த ராஜபக்ச குடும்பங்களுக்கு எதிராக ,மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் ,தம்மை பாதுகாக்க, ரணில் விக்கிரமசிங்காவை மகிந்தா ராஜபக்ச ஜனாதிபதியாக்கினார் .

                ஆனால் ஜனாதிபதியானது ரணில் விக்கிரமசிங்க ,ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் செயல்களில் ஈடுபட்டுளளார் .,

                புதிய அமைச்சரவையில், மகிந்த ராஜபாக்ச குடும்பத்தினரால், பரிந்துரைக்க பட்டவர்கள் பலர், அமைச்சர்களாக நியமிக்க படாது , ரணில் தனது விசுவாசிகளை அமைச்சர்களாக்கி அழகு பார்த்துளளார் .

                இதனால் எழுந்த உள்ளக விரிசல் ,மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் போராக மாற்றம் பெற்று வருகிறது .,

                இன்றைய இலங்கை அரசியல் நிலவரத்தின் பிரகாரம் ,விரும்பியோ விரும்பாமலோ ,ரணில் விக்கிரசிங்காவை ஆதரிக்க வேண்டிய, நெருக்கடியில் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ளது .

                போர் குற்றம் ஒருபுறம் ,மற்றும் லஞ்ச ஊழல் மோசடி மறுபுறம், என இரட்டை தலை பாம்புகளாய் , இவர்கள் இரு தரப்பையும் உற்று பார்த்து ஓட வேண்டிய விரக்தி நிலைக்குள் தள்ள பட்டுள்ளனர்.

                இதனை தனக்கு சாதகமாக்கிய ரணில் விக்கிரசிங்க ,தனது அரசியல் நரி தந்திர விளையாட்டை ஆரம்பித்துள்ளார் .

                அவ்வாறு நோக்கின், விரைவில் மகிந்தா ராஜபக்ச குடும்பம் ,ரணில் விக்கிரமசிங்காவுக்கு இடையிலான உள்ளக மோதல்கள் ,கைதுகள் வரை செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

                ராஜபக்ச குடும்பத்தை மிரட்ட இந்த நகர்வை, ரணில் எதிர்காலத்தில் ஆரம்பிப்பார் என்பதே இன்றைய உள்ளக கசிவுகளாக உள்ளன .

                இலங்கையில் பத்தொன்பது மாதங்களில் தேர்தல் நடத்திட வேண்டிய நிலை உள்ளது ,இவாறான நிலையில் தந்து கட்சியை வளர்த்திட, ரணில் விக்கிரமசிங்க ஆடுகளத்தை ஆரம்பித்துள்ளார் .

                இந்த கட்சி போரே, தற்போது மகிந்தா ராஜபக்ச குடும்பத்திற்கு இடையில் ,பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

                மக்கள் ஆதரவு அற்ற இவர்களினால் தேர்தலில் வென்றிட முடியாத நிலை உள்ளது .

                  கோட்டபாய மக்களின் எதிரி நாட்டுக்குள் நுழைய தடை
                  Posted in இலங்கை செய்திகள்

                  கோட்டபாய மக்களின் எதிரி நாட்டுக்குள் நுழைய தடை

                  கோட்டபாய மக்களின் எதிரி நாட்டுக்குள் நுழைய தடை

                  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, மக்களின் எதிரி என ,முக்கிய அரசியல் கட்சிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ளன .

                  இலங்கையின் ஜனாதிபதியாக விளங்கிய கோட்டபாய ராஜபக்ச , மக்களை பிழையான முறையில் வழி நடத்தியதன் விளைவே, மக்கள் அவரை எதிரி போன்று பார்க்க முனைந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

                  மக்களின் வாழ்வாதாரம் , மற்றும் பொருளாதார பிரச்சனைகளை ,கையாள தவறியதும் , சர்வாதிகார அடக்குமுறையை கோட்டபாய ராஜபக்ச பிரயோகித்ததுமே ,மக்களின் கோபத்திற்கு கோட்டபாய மாற்றம் பெற காரணமாக அமைந்தது.

                  கோட்டபாய மக்களின் எதிரி நாட்டுக்குள் நுழைய தடை

                  அழகிய இலங்கை நாட்டின் வளங்களை, சீனா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு விற்று ,அதன் மூலம் கோடி லஞ்சம் பெற்றதன் வெளிப்பாடும் , ,அதனால் எழுந்த மக்கள் எழுச்சியும்,கோட்டபாய ராஜபக்ச இலங்கையை விட்டு ஓட்டம் பிடிக்க காரணமாக அமைந்தது .

                  இலங்கையை விட்டு தப்பி ஓடிய கோட்டபாய ராஜபாக்சா , மீளவும் இலங்கைக்குள் நுழையமுடியாத, நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

                  தொடர்ந்து கோட்டபாய ராஜபக்சாவை , மக்கள் எதிரி போன்றே பார்த்து வருவதன் வெளிப்பாடும் ,மக்கள் கோபம் தணியாத நிலையில் உள்ளதும் ,கோட்டபாய இலங்கைக்குள் நுழையமுடியாத நெருக்கடியாக உள்ளது .

                  அகதி போன்று நாடு நாடு நாடக ஓடும் கோட்டபாயா ,இலங்கை மீள நுழைந்தால் ,எதிரி கோட்டாவை துரத்தி தாக்குவோம் என்கிறது மக்கள் மன்றம் .

                  மக்களின் கோபம் தணியும் வரை ,கோட்டபாய இலங்கைக்குள் நுழையமுடியாத நெருக்கடி நிலை, தொடர்ந்து நீடிக்கும் என்கிறது கொழும்பின் உயர் மட்டங்கள் .

                  போர் குற்றத்தில் கோட்டபாய ராஜபக்சவை கைது செய்திட புலம் பெயர் தமிழர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதும் ,கோட்டபாயவிற்கு பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளது .

                  இதனால் தனது பாதுகாப்பை இலங்கைக்குள் பலப்படுத்தி வாழ்ந்திட கோட்டபாய ராஜபக்ச எண்ணுகின்ற பொழுதும் ,அவரது எண்ணத்திற்கு ஏற்றவாறு இலங்கை அரசியல் மற்றும் மக்கள் களம் காணப்படவில்லை என்பதே யதார்த்த நிலையாக உள்ளது .

                  இலங்கைக்குள் நுழைந்தால் எதிரி கோட்டாவை ஓட ஓட விரட்டுவோம் என்கிறது போராட்ட காரர்கள் .

                  இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு ஏற்பட்ட இந்த பேரவலம் இலங்கையில் ஆளும் எதிர்கால ஜனாதிபதிக்கும் ஏற்படும் என்கின்றனர் மக்கள் .

                    இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு

                    இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு

                    இலங்கை அரசுக்கு, தமிழர்கள் பெரும் ஆப்பு வைக்கும் சம்பவம் ஒன்று, திட்டமிட்டு அரங்கேற்ற பட்டுள்ளது .

                    இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு ,முக்கிய காரணமாக புலம் பெயர் தமிழர்கள் மாறியுள்ள செயல் ,இலங்கை அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

                    இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடியை ,தாம் முற்றாக போக்கி ,இலங்கையை மீள இயங்கு நிலைக்கு இட்டுசெல்ல ,தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள் என புலம் பெயர் தமிழர் கோரிக்கை விடுத்தனர் .

                    ஆனால் இதுவரை இன்றைய அரசியல்வாதிகள் எவரும் இதனை கருத்தில் கொள்ளவில்லை ,கடந்த நாற்பது ஆண்டுகளாக இலங்கையில் ஆடிய அதே அரசியல் சதுரங்கத்த்தை இந்த கால கட்டத்திலும் ஆடிட முனைந்தன .

                    அதனால் கொதித்து போன வெளி நாட்டு தமிழர்கள் காலம் பார்த்து இலங்கை அரசின் காலை வாரிவிட்டுள்ளனர் .

                    உணவுக்கு வழியின்றி தமிழர்கள் அழிந்த பொழுது, தொலைக்காட்சியை பார்த்து ,கைதட்டி சிரித்த சிங்கள இனவாதம் ,இன்று எரிபொருள் உணவு இன்றி தள்ளாடுகிறது

                    இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு

                    இலங்கையை கட்டி எழுப்பிய முக்கிய பங்கு ,வெளிட்டுஇ தமிழர்கள் வசமே இருந்தது என்பதை, இன்றே சிங்கள தேசம் உணர்ந்து நிற்கிறது .

                    முல்லி வாய்க்களில் ,தமிழர்களை கோரமாக படுகொலை செய்திட்ட இலங்கை அரசுக்கு, நேரம் பார்த்து ,வெளிநாட்டு தமிழர்கள், பழிவாங்கியுள்ள செயல் ,உலக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .

                    தொடர்ந்து இலங்கையின்ஆதிக்க சக்திகளாக ,சிறுபான்மை தமிழர்கள் மாறியுள்ளதை , இந்த பண அனுபுதல் இதனை மீள எடுத்துரைத்துள்ளது.

                    தமிழர்களை கொச்சையாகா பேசி வந்த சிங்கள பவுத்த தேசம், தமிழர்களின் ஒத்துழைப்பு இன்றி ,இலங்கையை மீள் கட்டியெழுப்ப முடியாதென்ற நிலைக்கு ,வரும் காலம் ஒன்று உருவாகியுள்ளது.

                    இன்றாவது இலங்கை அரசியவாதிகள் ,தமது தவறுகளை உணர்ந்து, ஒன்று பட்ட இலங்கைக்குள் ,அணைத்து மக்களும் நின்மதியாக வாழும் ,அரசியல் தீர்வை விரைந்து , செயல் படுத்தினால் ,இலங்கை மீளவும் இயல்புடன் ஒரு அழகிய தேசமாக மாற்றம் பெறும் என்பது தமிழர் வாதமாக உள்ளது .

                    ஆனால் பவுத்தமத சிங்கள இனவெறிக்குள் , முடங்கியுள்ள சிங்கள அரசியல் தலைமைகள் ,இதனை உணர்ந்து கொள்ளுமா என்பதே, தமிழர்கள் ஏக்கமாக உள்ளது.

                      புலிகளின் தளபதி கேணல் சால்ஸ் தந்தை மரணம்
                      Posted in இலங்கை செய்திகள்

                      புலிகளின் தளபதி கேணல் சால்ஸ் தந்தை மரணம்

                      புலிகளின் தளபதி கேணல் சால்ஸ் தந்தை மரணம்

                      தமிழீழ விடுதலை புலிகளின் போரியல் நாயகனாகவும் ,தமிழீழ தேசிய தலைவரின் காவலனாக விளங்கிய, கேணல் சல்ஸ அவர்களின் தந்தையார் மரணமாகியுள்ளார் .

                      அவுஸ்ரேலியாவில் வசித்து வந்த கேணல் சால்ஸ் அவர்களின் தந்தை, சண்முக நாதன் ஐயா அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில், தனது 91 ஆவது அகவையில் காலமானார்.

                      கேணல் சால்ஸ் அவர்களது , தந்தையின் பிரிவு தமிழர்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .

                      தமிழீழ விடுதலை போருக்கு, கேணல் சால்ஸ் என்ற சிறந்த மாவீரனை தந்து ,தமிழர் தேசத்தை காப்பாற்றிட உழைத்த, பெரும் தளபதியின் தந்தை மரணம் ,தமிழீழ தேசத்தினை நேசிப்பார்கள் மத்தியில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

                      அன்னாரின் துயரில் ,எதிரி இணையமும் பங்கெடுத்து கொள்கிறது .வீழ்ந்து போனது நீ மட்டும் அல்ல எமது விடுதலையும் தான் .

                      செய்தி மூலம் ஈழம் ரஞ்சன் – நன்றி

                        சிறுமியை கடத்தி விற்க முனைந்த நபர் கைது
                        Posted in இலங்கை செய்திகள்

                        சிறுமியை கடத்தி விற்க முனைந்த நபர் கைது

                        சிறுமியை கடத்தி விற்க முனைந்த நபர் கைது

                        இலங்கையில் அப்பாவி சிறுமியை கடத்தி விற்க முனைந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார் .

                        இலங்கை வெல்லவாய- பள்ளிவாசலுக்கு அருகில் காணாமல் போன, ஐந்து வயதுடைய சிறுமி ஒருத்தி, காவல்துறையால் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .

                        குறித்த சிறுமியை கடத்திய நபர் ,அதே சிறுமியின் வீட்டில் வேலைபார்த்து வந்த நபர் என, அடையாளம் காணப்பட்டுள்ள்ளார் .

                        திட்டமிட்டு சிறுமியை கடத்தி பேரூந்தில் பயணித்த இவர் ,பண்டாரவளை பேரூந்து சந்தை பகுதியில், இரவு தங்கி பொழுதை கழித்துளளார்.

                        அதன் பின்னர் சிறுமியைத் தன் வீட்டுக்கு அழைத்து செல்ல முற்பட்ட வேளையில் ,காவல் துறையால் மடக்கி பிடிக்க பட்டார் .

                        பணத்திற்காக சிறுவர்களை கடத்தும் , இவ்வாறான கும்பல்களிடம் இருந்து மக்கள் உசாராக இருக்க வேண்டும் என ,காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

                        அப்பாவி சிறுவர்களை கடத்தி ,கொலை செய்து ,வீதியில் வீசி வரும் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் உள்ளது .

                        இவ்வாறு கடத்த படும் சிறுமிகள் ,கற்பழிக்க பட்டு ,கொலை செய்யப்பட்டு வருகின்ற செயல்களும் அரங்கேறி இருந்தது .

                        அவ்வாறான தொடர்ச்சியாக ,இந்த அப்பாவி ஐந்து வயது சிறுமியும் , கடத்தி விற்க முனைந்த செயல் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                        அறியாத நபர்களை வீட்டுக்கு அழைக்கும் குடும்பங்கள், இவ்வாறானவர்கள் மீது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பது இந்த செயல்கள் மூலம் மீளவும் நிரூபணமாகியுள்ளது.

                        பாதிக்க பட்ட குடும்பத்தினர் காவல்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து இலங்கை காவல்துறையினர் , ஆதாரங்களுடன் குறித்த நபரை விசேடமாக தேடி வந்த நிலையில், இந்த சிறுமி பத்திரமாக மீட்க பட்டுளளார் .

                        இலங்கை காவல்துறையின் இந்த அளப்பரிய சேவை ,மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது .

                        காணமல் போன சிறுமியை தேடி கண்டு பிடிக்கும் பணியில், ஈடுபட்ட விசேட குற்ற தடுப்பு பிரிவினரின் ,வீரச் செயலாக இவை பார்க்க படுகிறது .

                        மக்கள் மத்தியில் லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் என அடையாளப்படுத்த பட்டிருந்த ,இலங்கை காவல்துறை ,காணாமல் போன ஐந்து வயது சிறுமியின் மீட்பு மூலம் ,பரிசுத்தமானவர்கள் உள்ளனர் என்பதையும் நிரூபித்துள்ளது .

                        காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து, உயிருடன் மீட்ட காவல்துறையினருக்கு ,சமுக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .

                        காணாமல் போன சிறுமி மீட்க பட்ட நிலையில் ,சிறுமியின் கிராமத்தவர்கள் ,சிறுமியை நேரில் சென்று பார்வை இட்டு செல்கின்றனர் .

                          வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்
                          Posted in இலங்கை செய்திகள்

                          வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்

                          வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்

                          இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஆடசி காலத்தில் ,வெளிநாடுகளில் இருந்து இயங்கும், தமிழர் அமைப்புகள் மீது தடை விதிக்க பட்டிருந்தன .

                          அவ்வாறு தடை விதிக்க பட்ட ,தமிழர் அமைப்புக்கள், மற்றும் அவர்தம் உறுப்பினர்கள் .,இலங்கைக்குள் நுழைவதற்கான, அனுமதியை இலங்கை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது .

                          மேற்படி வெளிநாட்டு தமிழர் அமைப்புக்கள் , இலங்கையின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் ,தமிழீழ கொள்கையுடன் ,செயல் படுகின்றனர் என தெரிவித்தே ,இந்த தடை விதிக்க பட்டிருந்தது .

                          தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள ,அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை ,கருத்தில் கொண்டு இந்த அமைப்புக்கள் மீதான , தடையினை ரணில் விக்கிரமசிங்க அரசு தளர்த்தியுள்ளது .

                          மேலும், ஐநூறுக்கு மேற்பட்ட தமிழர்கள் மீதும் ,இலங்கைக்குள் நுழையும் தடையினை இலங்கை அரசு விதித்திருந்தது .

                          வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்

                          அவ்வாறு தடை விதிக்க பட்டவர்களில், பலர் இண்டர்போல் பிடியாணை ,பிறப்பிக்க பட்ட நபர்களாகவும் இருந்தனர்.

                          இலங்கையின் வீழ்ந்து போன, பொருளாதாரத்தை நிமிர்த்தும் முகமாகவும் ,தமிழர்களை குஷி படுத்தும் முகமாகவும் , இந்த தடை அவசரமாக நீக்க பட்டுள்ளது.

                          இலங்கையில் ஆளும் ரணில் விக்கிரமசிங்க,ஒன்று பட்ட தேசத்தை கட்டி எழுப்புவோம் என தெரிவித்திருந்தார்.

                          அவ்விதமான ரணில் விக்கிரமசிங்காவின் கூற்றுக்கு அமைய, இந்த தடைகள் பச்சை கொடி காட்டும் முகமாக, நீக்க பட்டுள்ளது என கணிக்க பெறுகிறது .

                          இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தில் ,வெளிநாட்டு தமிழர்களின் ஆதிக்க தாக்கம் அதிகம் இருந்தது என்பதை ,இன்றைய நிகழ்கால இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு இவர்கள் காரணமாக அமைந்தனர் என்பது தெளிவானது .

                          வெளிநாட்டு தமிழர்களின் பணத்தில் இலங்கையை ஒட்டி சென்ற இலங்கை அரசுக்கு ,தமிழர்கள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் ,சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவும் இந்த தடை தளர்வுகள் இடம்பெற்றுள்ளன .

                          இலங்கை ஆளும் ரணில் விக்கிரமசிங்காவின், இந்த அவசர தடை நீக்கம் ,வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மற்றும் ,விடுதலை விரும்பிகளை ஆற்று படுத்துமா என்பதே கேள்வியாக உள்ளது .

                            ஆட்டோ தொழில்சாலைக்கு திடீரென பயணித்த போக்குவரத்து அமைச்சர்
                            Posted in இலங்கை செய்திகள்

                            ஆட்டோ தொழில்சாலைக்கு திடீரென பயணித்த போக்குவரத்து அமைச்சர்

                            ஆட்டோ தொழில்சாலைக்கு திடீரென பயணித்த போக்குவரத்து அமைச்சர்

                            இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆட்டோ தயாரிக்கும் தொழில் சாலைக்கு திடீரென பயணித்தார் .

                            ஆட்டோக்கள் சார்பில் புதிய அரசியல் சட்ட திருத்தம் மேற்கொள்ள பட்ட நிலையில் ,பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ,ஆட்டோ பொருத்தும் தொழில் சாலைக்கு திடீரென பயணித்துள்ளார் .

                            ஆட்டோ தொழில்சாலைக்கு பயணித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, ஆட்டோவில் ல் ஏறி சவாரியும் செய்துள்ளார் .

                            மக்களினால் அமைச்சர்கள் வீடுகள் சுற்றிவளைக்க பட்ட நிலையில் ,மக்களின் மனங்களை கவர்ந்திட , போக்குவரத்துக்கு அமைச்சர் இவ்வாறான உத்தியை கையாள்வதாக நோக்க படுகிறது .

                            எதிர்காலத்தில் இடம்பெற உள்ள தேர்தலில் ,அதிக வெற்றி வாய்ப்பை தேடிக்கொள்ளும் முகமாக, இந்த அரசியல் சித்து விளையாடல்களை
                            அமைச்சர்கள், தற்போதே ஆரம்பித்துள்ளதை ,இவ்வாறான சம்பவங்கள் மூலமாக காண முடிகிறது .

                              இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்
                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்

                              இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்

                              இலங்கையில் இருந்து அதிகளாக நான்கு தமிழர்கள் இந்தியாவுக்கு தப்பி ஓடியுள்ளனர் .

                              இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக , இலங்கையில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ,உயிர் பாதுகாப்பு தேடி நான்கு தமிழர்கள், தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் .

                              இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்த , நான்கு தமிழர்களும் ,திருகோணமலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது .

                              இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்

                              இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து ,நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்கள், கடல் வழியாக ராமேஸ்வரம் சென்றடைந்து ,அதன் ஊடாக மண்டபம் அகதி முகாமுக்கு சென்றடைகின்றனர் .

                              இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடியை அடுத்து , ஆளும் தமிழக முதலமைச்சர் இஸ்டலின் ,உணவு பொதிகளை, கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் .

                              அதன் பின்னர், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் ,தீர்க்கமான முடிவினையும் அறிவித்திருந்தார் .

                              அவ்வாறானதொரு நிலையில், இலங்கை தமிழர்கள் ,அகதிகளாக தமிழகம் சென்ற வண்ணம் உள்ளமை ,அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

                                துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்
                                Posted in இலங்கை செய்திகள்

                                துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்

                                துப்பாக்கி வெடித்து வாலிபர் மரணம்

                                இலங்கை கொஹிலஹிந்தெனிய பகுதியில் துப்பாக்கி வெடித்து அதன் உரிமையாளர் மரணமாகியுள்ளார் .

                                விலங்குகளை வேட்டையாடும் முகமாக பயன் படுத்தி வந்த உள் நாட்டு துப்பாக்கி வெடித்ததால் அந்த வாலிபர் பலியாகியுள்ளார் .

                                பலியானவர் இருபத்தி இரண்டு வயதுடைய வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

                                துப்பாக்கி வெடித்து பலியான வாலிபர் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

                                இலங்கையில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் பயன்படுத்த தடை விதிக்க பட்டுள்ள
                                பொழுதும் ,இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

                                  ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை
                                  Posted in உலக செய்திகள்

                                  ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை

                                  ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை

                                  ரஷ்ய இராணுவத்தினரால் ,ஆக்கிரமிக்க ட்டுள்ள உக்கிரன் பகுதியில் ,அப்பாவி மக்களை கைது புரிந்த ரஷ்ய இராணுவம், 1000 மக்களை சித்தரவதை புரிந்து கொன்றுள்ளனர்.

                                  இதுவரை ரஷ்ய இராணுவத்தினரால் ,ஆறாயிரத்துக்கு மேற்பட்ட, அப்பாவி மக்கள் ,படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                                  ரஷ்ய இராணுவம் ,தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலைகளை அடுத்து ,உக்கிரேன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.

                                  இதுவரை உக்கிரேனில், உக்கிரன் இராணுவதல், இருபத்தி ஆறாயிரம் ரஷ்ய இராணுவம் ,படு கொலை செய்யப்பட்டுள்ளதாக, உக்கிரன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது.

                                    வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்
                                    Posted in உலக செய்திகள்

                                    வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்

                                    வடக்கு லண்டனில் பாரிய தீ பதறி ஓடிய மக்கள்

                                    வடக்கு லண்டன் Enfield பகுதியில், பாரிய தீ பரவல் ஏற்பட்டு, அந்த பகுதியில் உள்ள காடு சார்ந்த பகுதிகள், தீயில் எரிந்து அழிந்துள்ளன .

                                    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

                                    எழுபது தீயணைப்பு வீரர்கள், இந்த தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் .

                                    தீ பரவல் காரணமாக ,இதன் அருகில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு தப்பி ஓடினர்.

                                    இதனால் எழுந்த தீ புகை மூட்டம் ,பல கிலோ மீட்டர் தூரம் வரை ,தென்பட்டதாக தெரிவிக்க படுகிறது .

                                    அதிக வெப்பம் காரணமாக, இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக நம்ப படுகிறது .

                                    இவ்வாறான அதிக வெப்பம் காரணமாக ,மூன்று வாரங்களுக்கு முன்னரும் ,இவ்வாறான தீ பரவல் சம்பவங்கள் ,இடம்பெற்றமை குறிப்பிட தக்கது .

                                      சீனா போர் விமானங்கள் தாய்லாந்தில் குவிப்பு
                                      Posted in உலக செய்திகள்

                                      சீனா போர் விமானங்கள் தாய்லாந்தில் குவிப்பு

                                      சீனா போர் விமானங்கள் தாய்லாந்தில் குவிப்பு

                                      சீனா தாய்லாந்து இணைந்து, போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் .இந்த பயிற்சிகளுக்கு மேலதிகமாக சீனா தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளது ,பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

                                      தாய்வான் சீனாவுக்கு இடையில் ,போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், தற்பொழுது, சீனா தாய்லாந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது, மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

                                      தாய்லாந்து சீனாவின் போர் பயிற்சிகள் , மேற்குலக நாடுகள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

                                      ரஸ்யாவை போன்று சீனாவும், நாடுகள் மீது வலிந்து தாக்குதலை நடத்த கூடும், என எதிர் பார்க்க படுகிறது.

                                      அதற்கான முன்னோட்டமாக, இந்த இராணுவ ஒத்திகைகள் காணப்படுகிறது .

                                      வல்லாதிக்க நாடுகளுக்கு இடையிலான எதிரி போக்கு எதிர் நாடுகளை கலங்க வைத்து வருகிறது .

                                        கொட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் கோட்டபாயாவுக்கு எச்சரிக்கை
                                        Posted in இலங்கை செய்திகள்

                                        கொட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் கோட்டபாயாவுக்கு எச்சரிக்கை

                                        கொட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் கோட்டபாயாவுக்கு எச்சரிக்கை

                                        முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

                                        தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

                                        கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிங்கப்பூரில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ மேலும் மூன்று பேருடன் சிங்கப்பூர் விமானம் மூலம் தாய்லாந்து வந்தடைந்தார்.

                                        குறித்த விமானம் தாய்லாந்தின் ஃபூகெட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி

                                        கொட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் கோட்டபாயாவுக்கு எச்சரிக்கை

                                        அங்கு சென்றமை பற்றிய தகவல் வெளியானதையடுத்து விமானம் பெங்கொக்கில் உள்ள இராணுவ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

                                        கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை எனவும், அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஹோட்டலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                                        முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருந்து
                                        பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.