Author: நலன் விரும்பி
வெளிநாட்டு வருமானம் வீழ்ச்சி
வெளிநாட்டு வருமானம் வீழ்ச்சி
ஜூலை 2022 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருமானம் 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2022 ஜனவரி முதல் ஜூலை வரை, வெளிநாட்டுப் பணியாளர்கள் பெற்ற வெளிநாட்டு வருமானம் 1889.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (3777.6 அமெரிக்க டொலர்கள்) ஒப்பிடுகையில் இது
50% குறைவு என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்
வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜுலை மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் 99 ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி இது தொடர்பாக தெரிவிக்கையில் ,
கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து சுற்றி வளைப்புகளை பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டதாக தெரிவித்தார்.
அம்பாறை,தெஹியத்தக்கண்டி,அக்கரைப்பற்று, பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை ஆகிய நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட 38 சுற்றிவளைப்புகளில், நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 25 வழக்குகளில் 17 வர்த்தகர்களுக்கு 99 ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால்
அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
முட்டை ,கோழி இறைச்சிக்கான விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
முட்டை ,கோழி இறைச்சிக்கான விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ள வர்த்தக , நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் தற்போது முட்டை மற்றும் கோழி இறைச்சி அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை ஒன்றின் தற்போதைய விலை 50 ரூபாவுக்கும் மேற்பட்ட வகையில்விற்பனை செய்யப்படுவதுடன் ,ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி
1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவற்றுக்கான விலை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் எனவும். கோழி இறைச்சிக்கான
நிர்ணய விலை தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்
கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்
கொழும்பிலிருந்து பதுளைக்கு, இன்று முதல் சொகுசு ரயில், சேவையில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து பதுளைக்கு, வார இறுதியில் சொகுசு ரயிலை சேவையில் ஈடுபடுத்தும் ,போக்குவரத்து அமைச்சின் திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கு ‘எல்ல ஒடெஸி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ரயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 3.55 மணிக்கு பதுளையைச் சென்றடையும்.
கொழும்பிலிருந்து பதுளைக்கு ‘எல்ல ஒடெஸி சொகுசு ரயில்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பதுளையிலிருந்து காலை 09.50 மணிக்குப் புறப்படும் ரயில், இரவு 07.20 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
கம்பஹா, வெயாங்கொட, பொல்கஹவெல, ரம்புக்கனை, பேராதனை, கண்டி, நாவலப்பிட்டி, நானுஓயா, ஹப்புத்தளை, தியத்தலாவ, பண்டாரவளை,
எல்ல மற்றும் பதுளை ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சொகுசு ரயில் நிறுத்தப்படும்.
அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நிரந்தர உறுதிப் பத்திரங்கள்
அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நிரந்தர உறுதிப் பத்திரங்கள்
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நிரந்தர உறுதிப் பத்திரங்கள் கிடைக்கப் பெறாத குடும்பங்களுக்கு, நிரந்தர உறுதிப்
பத்திரங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்திலும் அரச அடுக்குமாடி
குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த வீட்டு உறுதிப் பத்திரம் வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதால், அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற மீளாய்வு கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உறுதிப் பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட ஆனால் இதுவரை உறுதிப் பத்திரங்கள வழங்கப்படாத பயனாளிகளின் குடும்பங்களுக்கு வீட்டு உறுதிப்
பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொடுக்குமாறும், தற்போது தயாரித்துவரும் பத்திரங்களை, வழங்கும் பணிகளை துரிதப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்; சட்டப் பிரிவுக்கு உறுதிப் பத்திரங்கள் தொடர்பாக 2,033 கோப்புகள் கிடைத்துள்ளன. இவற்றில் 1,996
கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,035 உறுதிப் பத்திரங்களுக்கான பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது தவிர தற்போது பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிப் பத்திரங்களின் எண்ணிக்கை 822 எனவும், 961 உறுதிப் பத்திரங்களின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாகவும் தேசிய வீடமைப்பு
அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
சிறுவனை கோரமாக தாக்கிய டீச்சர் பாடசாலையில் நடக்கும் கொடுமை
சிறுவனை கோரமாக தாக்கிய டீச்சர் பாடசாலையில் நடக்கும் கொடுமை
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஆசிரியை ஒருவர் நேற்று (11) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அந்
த பாடசாலையில் அதிபர் தலைமறைவாகியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலையில் கல்விகற்றுவரும் 10 வயது சிறுவன் சம்பவதினமான 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைக்கு
சென்றுள்ள நிலையில் பாடசாலைக்கு அருகிலுள்ள கடை ஒன்றிற்கு பாடசாலை இடைவேளை நேரத்தில் சென்று அங்கு சாப்பிடுவதற்கான பொருட்களை வாங்கி வந்துள்ளான்.
சிறுவனை கோரமாக தாக்கிய டீச்சர் பாடசாலையில் நடக்கும் கொடுமை
இந்த நிலையில் குறித்த சிறுவனை அதிபர் கண்டு வரவழைத்து இந்த சாப்பாடு பொருட்களை வாங்க எங்கிருந்து பணம் எனகேட்டு கேட்டு 3 பிரம்புகளை ஒன்றினைந்து குறித்த சிறுவன் மீது தாக்கியள்ளார்.
வீடு சென்ற சிறுவனின் உடலில் தழும்புகள் இருப்பதைக் கண்டு பெற்றோர் அவனிடம் விசாரித்தனர். தன்னை அதிபர் அடித்துள்ளதாக தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து காயமடைந்த குறித்த சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (11)
முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சிறுவனை அடிக்க உடந்தையாக இருந்துள்ள ஆசிரியையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட ஆசிரியையை இன்று (12) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலைய
குற்றப் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
கோத்தபாய எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
கோத்தபாய எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
இனப்படுகொலையாளியும், சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியுமாகிய கோத்தபாய இராஜபக்சே எந்த நாட்டுக்கு சென்றாலும், உலகளாவிய
நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக் கோரும் நீதிக்கான போராட்டம் தொடரும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரவோடு இரவாக நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவூடாக சிங்கப்பூரில் சென்று, அங்கிருந்து தற்போது தாய்லாந்துக்கு செல்வதாக
தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நா.தமிழீழ அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கோத்தபாய எங்கு சென்றாலும் நீதிக்கான போராட்டம் தொடரும் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி முன்னெடுக்கப்பட்டிருந்த கையெழுத்துப் போராட்டம், தாய்லாந்து சட்டமா அதிபரை நோக்கியதாக மாற்றம்
செய்யப்படுவதோடு, முன்னராக பெறப்பட்ட கையொப்பங்கள் நீதிக்கான நோக்கத்தின் அடிப்படையில் இதனோடு இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த http://tgte-us.org/ இணையப்பக்கத்துக்கு சென்று (தொடுப்பு : https://tgte-us.org/?page_id=4340 ) இலகுவாக ஒப்பமிட முடியும் என
தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நீதிக்கான போராட்டத்தில் அனைவரையும் பங்கெடுக்குமாறு கோரியுள்ளது.
இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின்
கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு Additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் கையெழுத்துப் போராட்டத்தின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Thailand Urged to Arrest Visiting Former Sri Lankan President Gothabaya for Tamil Genocide: TGTE
எரிபொருளுடன் இலங்கை வரும் கப்பல் குஷியில் மக்கள்
எரிபொருளுடன் இலங்கை வரும் கப்பல் குஷியில் மக்கள்
இலங்கையில் இன்னும் சில தினங்களில் 35 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோளை ஏற்றிய படி கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த எரிபொருள் கப்பல் வருகையுடன் மக்கள் நிரையில் நின்று எரிபொருள் பெற்றிட வேண்டிய தேவை இல்லை என்கிறார் அமைச்சர்.
மக்களி குஷி படுத்த எரிபொருள் துறை அமைச்சர் இவ்வாறான பல விடயங்களை தொடராக கூறி வருகிறார் .
குறித்த எரிபொருள் கப்பலுக்காண பணம் மத்திய வங்கியினால் செலுத்த பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது
துப்பாக்கி வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது
இலங்கையில் பொலிஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைதுப்பாக்கியுடன் கைது செய்ய பட்டுள்ளார்.
இந்த பொலிஸ் அதிகாரியிடம் இருந்து சிறியரக துப்பாககி மற்றும் தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளன .
கைதானவர் பொலிஸ் அதிகாரி விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்.
துப்பாக்கி வைத்திருந்த குற்ற சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது செய்ய பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன் படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இந்தியா மீனவர்கள் 9 பேர் இலங்கை கடல் படையால் கைது
இந்தியா மீனவர்கள் 9 பேர் இலங்கை கடல் படையால் கைது
இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடியில் ஈடு பட்டனர் என்ற குற்ற சாட்டில் இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
கைதான இந்திய மீனவர்கள் அனைவரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பரப்படுத்த பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்திய
மீனவர்கள் கைது தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வருவதற்கு தடை
சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வருவதற்கு தடை
சீனாவின் ஆய்வு கப்பல் ஒன்று இந்கு கடல் பரப்பிற்குள் வருவதற்கு ன் அனுமதி கோரியது .இந்த அனுமதியை இலங்கை மேலிடம் இதுவரை வழங்கவில்லை என கடல்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணிகளில் ஈடுபட சீன அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சீனாவின் இந்த ஆய்வு கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு இந்தியா தடை விதிக்கும்படி கோரியது .
இந்த நிலையில் குறித்த சீனா கப்பல் இலங்கை உள்ளே நுழைவதற்கு தொடர்ந்து அனுமதி வழங்காது இலங்கை உள்ளது .
இதனால இலங்கை சீனாவுக்கு இடையில் முறுகல் அதிகமாகியுள்ளது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு
இலங்கை மட்டக்களப்பு அக்கறை பற்று பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி அடித்து செல்ல பட்ட நபர் ஒருவர் சில தினங்களின் பின்னர் சடலமாக மீட்க பட்டுளளார்.
இவருடன் மூவர் நீரில்அடித்து செல்ல பட்ட நிலையில் சடலங்களை கண்டு பிடிக்கும் பணிகள் தீவிர படுத்த பட்டன.
அவ்வாறான தேடுதலின் பொழுதே திருமணமான ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்.
தொடர்ந்து காணாமல் போன ஏனையவர்களை கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
ஆறு பேர் தலை வெட்டி கொலை கிளர்ச்சி படை வெறியாட்டம்
ஆறு பேர் தலை வெட்டி கொலை கிளர்ச்சி படை வெறியாட்டம்
சோமாலியாவில் தமது மக்கள் விடுதலைக்கு போராடி வரும் தீவிரவாத கிளர்ச்சி படைகள் ஆறு சோமாலிய அரச இராணுவ உளவாளிகளை தலை வெட்டி படுகொலை செய்துள்ளனர் .
மக்கள் பார்க்க இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது .
தமது விடுதலை அமைப்பை காட்டி கொடுப்பவர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை வழங்க படும் என Al-Shabaab அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பு புரிந்த கோர செயலுக்கு பல நாடுகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
சோமாலியா அரச இராணுவத்தினருக்கு சும்மா செபனமாக இந்த Al-Shabaab அமைப்பு விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
இராணுவம் மீது பதுங்கி தாக்குதல் 42 பேர் பலி
இராணுவம் மீது பதுங்கி தாக்குதல் 42 பேர் பலி
மாலியில் அரச இராணுவம் மீது கிளர்ச்சி படைகள் நடத்திய தாக்குதலில் 42 அரச இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.
பலியான இராணுவத்தினர் சடலங்கள் பொறுக்கி எடுத்து சென்றுள்ள இராணுவம் கிளர்ச்சி படைகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மாலியில் அரச இராணுவத்தை இலக்கு வைத்து பதுங்கி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
உள்ளூர் கிளர்ச்சி படைகளுக்கும் அரச இராணுவத்திற்கும் இடையில் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
பாதிக்க பட்ட மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண மறுப்பதன் விளைவே
இந்த தொடர் வன்முறை தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது. .
தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் இரண்டாவது பாதுகாப்பு நிறைந்த நகரமாக வர்ணிக்க படும் பகுதியில் வைத்து தலிபான்களின் முக்கிய தளபதி Rahimullah Haqqani அவர்கள் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுளளார் .
இவரது மதவாத பள்ளிக்குள் உடலில் வெடிகுண்டு நிரப்பிய படி சென்ற நபர் நடத்திய மனித வெடிக்கு தாக்குதலின் போதே இந்த தளபதி பலியாகியுளளார்.
இவருடன் மேலும் பத்து பேர் இந்த தாக்குதலில் பாடுகொலை செய்ய பட்டுள்ளனர்.
தலிபான் முக்கிய தளபதி மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை
இவர் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை .
தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பின்னர் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல் உத்தியை பயன் படுத்தி அவர்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்து நடத்த பட்டு வருகிறது .
இவ்வாறன தாக்குதல் தாலிபான்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காருக்குள் அதிக வெப்பத்தில் சிக்கி பலியான சிசு
காருக்குள் அதிக வெப்பத்தில் சிக்கி பலியான சிசு
அமெரிக்கா Washington, D.C. பகுதியில் கார் ஒன்றுக்குள் பூட்டி வைக்க பட்ட மூன்று மாத சிசு ஒன்று அதிக வெப்பத்தில் சிக்கி பலியாகியுள்ளது.
குறித்த காருக்குள் சிசுவை மறந்து விட்டு சென்ற நிலையில் அந்த சிசு அங்கு நிலவிய நூறு டிகிரி வெப்பத்தில் சிக்கி மூச்சு திணறி பலியாகியுள்ளது .
காருக்குள் இருந்து சிசு சடலமாக மீட்க பட்டது .
காருக்குள் வெப்பத்தில் சிக்கி சிசு இறந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அமெரிக்காவில் இவ்வாறு தொடராக பல சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
தாய்லாந்தில் கோட்டபாய நாடு நாடாக ஓடும் பரிதாபம்
தாய்லாந்தில் கோட்டபாய நாடு நாடாக ஓடும் பரிதாபம்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது மனைவியுடன் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
தாய்லாந்துக்கு தப்பி சென்றுள்ள கோட்டபாய ராஜபக்ச அங்கு மூன்று மாதம் மட்டுமே தங்க வைக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது.
சிங்கப்பூரில் கோட்டபாய ராஜபக்ச வாசிப்பதற்கான விசா வழங்குதல் நிறுத்த பட்ட நிலையிலேயே அங்கிருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார் .
கோட்டபாயவுக்கு விசா வழங்குதலை நிறுத்துமாறு முக்கிய வல்லரசு நாடு ஒன்று அழுத்தம் கொடுத்து வரும் நிலையியல் இந்த பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையில் அந்த வல்லரசு ஈடுபட்டுள்ளது.
சீனாவுடன் ஒட்டி உறவாடிய நிலையில் கோட்டபாயவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்ட இதே கோட்டபாய ராஜபக்ச இன்று நாடு நாடாங்க ஓடும் அவளை நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர் சாபம் கோட்டபாய ராஜபக்சாவை துரத்துகிறது என்பதை இதில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
இலங்கையில் முட்டை அப்பத்தின் விலை அதிகரிப்பு
இலங்கையில் முட்டை அப்பத்தின் விலை அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது முட்டை அப்பம் ஒன்றின் விலை 150 ஆக உயர்வடைந்துள்ளது .
அதே போல முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது .
நாள் தோறும் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் மக்கள் பெரிதும் கொதிப்பில் உறைந்துள்ளனர்.
முட்டை அப்பம் இவ்வாறு விலை அதிகரிக்க பட்டதால் அப்ப பிரியர்கள் சோகத்தில் உறைந்துள்ளனர் .
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தனது பதவியினை தக்க வைத்து கொள்வதில் குறியாக செயல் பட்டு வருகிறார் என மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது.
அரசியல்வாதிகள் தமது வியாபாரங்களை பெருக்கிய வண்ணம் உள்ளனரே தவிர ஏழைமக்கள் வாழ்வியல் நிலை தொடர்பாக அவர்கள் கவனம் செலுத்திட தவறிவிட்டனர் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள் .
பாடசாலை மாணவர்களை கற்பழித்த நபர் சிக்கினார்
பாடசாலை மாணவர்களை கற்பழித்த நபர் சிக்கினார்
காலி பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கற்பழித்து வந்த 44 வயது நபர் ஒருவர் சிக்கினார்.
குற்ற புலனாய்வு துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த நபர் கைது செய்ய பட்டுள்ளார் .
வாட்சாப் மூலம் உரையாடல்களை ஆரம்பித்து அதன் பின்னர் தனது லீலைகளில் சிக்கும் மாணவிகளை குறிவைத்து தனது பாலியல் வெறியை தீர்த்து வந்துள்ளார் .
கைதான நபர் நீதிமன்ற பி விசாரணைகளின் பின்னர் சிறையில் அடைக்க பட்டுள்ளார்.
ஐந்து வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
ஐந்து வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
செத்மி அன்சிகா என்ற 5 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் வீட்டுக்கு கூலி வேலை செய்வதற்காக நபர் ஒருவர் வந்து செல்வதாகவும் நேற்று (10) பகல் இரண்டு மணியளவில் வீட்டுக்கு வந்துள்ள
குறித்த நபர், சிறுமிக்கு யோகட் வாங்கிக்கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
எனினும், மாலை 6 மணியாகியும் சிறுமி வீட்டுக்கு வரவில்லை என தெரிவித்து, சிறுமியின் தாய் வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




















