வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்

வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்
Spread the love

வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்

இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஆடசி காலத்தில் ,வெளிநாடுகளில் இருந்து இயங்கும், தமிழர் அமைப்புகள் மீது தடை விதிக்க பட்டிருந்தன .

அவ்வாறு தடை விதிக்க பட்ட ,தமிழர் அமைப்புக்கள், மற்றும் அவர்தம் உறுப்பினர்கள் .,இலங்கைக்குள் நுழைவதற்கான, அனுமதியை இலங்கை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது .

மேற்படி வெளிநாட்டு தமிழர் அமைப்புக்கள் , இலங்கையின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் ,தமிழீழ கொள்கையுடன் ,செயல் படுகின்றனர் என தெரிவித்தே ,இந்த தடை விதிக்க பட்டிருந்தது .

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள ,அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை ,கருத்தில் கொண்டு இந்த அமைப்புக்கள் மீதான , தடையினை ரணில் விக்கிரமசிங்க அரசு தளர்த்தியுள்ளது .

மேலும், ஐநூறுக்கு மேற்பட்ட தமிழர்கள் மீதும் ,இலங்கைக்குள் நுழையும் தடையினை இலங்கை அரசு விதித்திருந்தது .

வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்

அவ்வாறு தடை விதிக்க பட்டவர்களில், பலர் இண்டர்போல் பிடியாணை ,பிறப்பிக்க பட்ட நபர்களாகவும் இருந்தனர்.

இலங்கையின் வீழ்ந்து போன, பொருளாதாரத்தை நிமிர்த்தும் முகமாகவும் ,தமிழர்களை குஷி படுத்தும் முகமாகவும் , இந்த தடை அவசரமாக நீக்க பட்டுள்ளது.

இலங்கையில் ஆளும் ரணில் விக்கிரமசிங்க,ஒன்று பட்ட தேசத்தை கட்டி எழுப்புவோம் என தெரிவித்திருந்தார்.

அவ்விதமான ரணில் விக்கிரமசிங்காவின் கூற்றுக்கு அமைய, இந்த தடைகள் பச்சை கொடி காட்டும் முகமாக, நீக்க பட்டுள்ளது என கணிக்க பெறுகிறது .

இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தில் ,வெளிநாட்டு தமிழர்களின் ஆதிக்க தாக்கம் அதிகம் இருந்தது என்பதை ,இன்றைய நிகழ்கால இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு இவர்கள் காரணமாக அமைந்தனர் என்பது தெளிவானது .

வெளிநாட்டு தமிழர்களின் பணத்தில் இலங்கையை ஒட்டி சென்ற இலங்கை அரசுக்கு ,தமிழர்கள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையிலும் ,சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவும் இந்த தடை தளர்வுகள் இடம்பெற்றுள்ளன .

இலங்கை ஆளும் ரணில் விக்கிரமசிங்காவின், இந்த அவசர தடை நீக்கம் ,வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மற்றும் ,விடுதலை விரும்பிகளை ஆற்று படுத்துமா என்பதே கேள்வியாக உள்ளது .

    Leave a Reply