சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா

சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா

சிரியா கசாக்கா பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ தளத்திற்குள் ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தை அமெரிக்கா திடிரென குவித்து வருகிறது .

ஈர்க்கில் உள்ள இராணுவம் மற்றும் ஆயுதங்களை ,ஈராக்கின் எல்லை வழியாக சட்டவிரோதமாக நகர்த்தி சிரியாவுக்குள் நுளைந்துள்ளன .

மேலும் இராணுவ சரக்கு விமானங்கள் ஊடாகவும் ஆயுதங்களை நகர்த்தி வருகின்றன

கடந்த தினம் மட்டும் தரைவழியாக 33 கார்கள் ,மற்றும் டிராக் மூலம் ஆயுதங்கள் சிரியாவுக்குள் எடுத்து செல்ல பட்டுள்ளது .

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது தொடராக தாக்குதல் இடம்பெற்று வரும் நிலையில்,இவ்விதம் அமெரிக்கா இராணுவம், ஈராக்கில் இருந்து வெளியேயேற்ற பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் படு காயமடைந்துள்ளனர் .

பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,மக்கள் பகுதிக்குள் நுழைந்த்து இஸ்ரேல் இராணுவம், நடத்திய தாக்குதலில் 15 பலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளனர் .

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்

இஸ்ரேல் இராணுவம் தொடராக நடத்தி வரும் ,தாக்குதல்களில் சிக்கி ,அப்பாவி மக்கள் காயமடைந்தும் ,கொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் .

இஸ்ரேலும் இராணுவம் நடத்தி வரும் ,இனவாத வெறியாட்டத்திற்கும் ,தொடரும் இந்த படுகொலைக்கும் இதுவரை தீர்வு கிட்டவில்லை .

தொடரும் இஸ்ரேல் அரச பயங்கரவாதத்திற்கு தண்டனை வழங்குவது யார் என்கின்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது .

இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு

இலங்கையில் பாணின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு

இலங்கையில் ஒரு இறத்தல் பாணின் விலை 500 ரூபா வரை செல்லும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இலங்கையில் பேக்கரிகளின் மூல பொருளாக விளங்கி வரும் கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது .

அதனால் மாவின் விலை அதிகரித்து செல்வதாலும் , இந்த விலைமீளவும் அதி உச்சத்தை எட்டி பிடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

500 ரூபாவுக்கு பாணின் விலை அதிகரித்துள்ளதால் ,அன்றாடம் கூலிகள் மற்றும் கீழ் தட்டு மக்கள் பெரும் இடர்களை சந்திக்க நேரிடும் என தெரிவிக்க படுகிறது .

மேற்கு லண்டனில் பெண் படுகொலை மூவர் கைது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

மேற்கு லண்டனில் பெண் படுகொலை மூவர் கைது

மேற்கு லண்டனில் பெண் படுகொலை மூவர் கைது

மேற்கு லண்டன் பகுதியில் 35 வயது பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .

இந்த படுகொலையுடன் தொடர்புடைய 25 வயது ஆண் மற்றும் 37 மற்றும் 43 வயதுடைய இரு பெண்களும் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தபட்ட பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

கடந்த 25 தாம் திகதி இடம்பெற்ற இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

பிரிட்டன் லண்டன் பகுதியில் கத்தி குத்து கொலைகள், மற்றும் இவ்விதமான வன்முறை,சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

இறக்குமதி பொருட்களில் தளர்வூகளை ஏற்படுத்த அரசு திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இறக்குமதி பொருட்களில் தளர்வூகளை ஏற்படுத்த அரசு திட்டம்

இறக்குமதி பொருட்களில் தளர்வூகளை ஏற்படுத்த அரசு திட்டம்

இலங்கைக்கு இறக்குமதி செய்திடும் பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் ,மற்றும் தடைகளை விலக்கும் துரித நடவடிக்கை தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகிறது .

இலங்கையில் ஏற்பட்டுள்ள இன்றைய நெருக்கடி ,அதனால் எழுந்துள்ள உணவு தட்டுப்பாடுகளை நிவர்தி செய்திடும் முகமாக இந்த தளர்வு நடவடிக்கை முக்கியமாக மீள் பரிசீலனைக்கு உள்ளாக்க பட்டு வருகிறது .

தளர்வுகளின் மூலம் இறக்குமதியை வேகமாக அதிகரிக்கலாம் என அரசு நம்புவதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாணவியை பிரம்பால் தாக்கிய அதிபர்
Posted in இலங்கை செய்திகள்

மாணவியை பிரம்பால் தாக்கிய அதிபர் மாணவர்களிடம் பணம் கறக்கும் பாடசாலை

மாணவியை பிரம்பால் தாக்கிய அதிபர் மாணவர்களிடம் பணம் கறக்கும் பாடசாலை

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக ​சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என, ​கொட்டகலை பிரதேச வைத்திய அதிகாரி சாவித்ரி சர்மா தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரன் 300 ரூபாய் செலுத்தவில்லை என தெரிவித்து, குறித்த அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து “சேர் எனது சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம் என்றும் தனது தந்தை அருகில் வேலை செய்வதால் அவரிமிருந்து பணத்தை வாங்கி தருவதாக” குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே அதிபர் குறித்த மாணவியை பிரம்பால் அமானுஷ்யமாக தாக்கியதாகவும் இதனையடுத்து பாடசாலைக்கு அருகில் வேலை

மாணவியை பிரம்பால் தாக்கிய அதிபர் மாணவர்களிடம் பணம் கறக்கும் பாடசாலை

செய்துக்கொண்டிருந்த மாணவியின் தந்தை, மகளின் அலறல் கேட்டு, பாடசாலைக்கு ஓடி மாணவியைக் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான மாணவியுடன் தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்த அத்தந்தை பொருளாதார பிரச்சினையில் தான் இருப்பதுடன், தனது

மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், தனது மகள் தாக்கப்பட்டமை தொடர்பில் திம்புளபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடையும் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவியபோது, ஒழுக்கம் விடயமாகவே குறித்த மாணவியை
சிறு தடியொன்றில் தாக்கியதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்

கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்

கொழும்பில் உள்ள முக்கிய இரு எரிபொருள் நிலையங்களுக்கு சீல் வைக்க பட்டுள்ளது .

மட்டுப்படுத்த பட்ட நிலையில் எரிபொருள் விற்றபனை மற்றும் மோசடி தொடர்பில் இந்த சீல் வாய்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது .

எரிபொருளை பெற்று கொண்ட இவர்கள் , அதனை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நிலையில் இந்த சீல் வைக்க பட்டுள்ளது .

கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்

இவ்வாறன அதிரடி நடவடிக்கை ,ஏனைய எரிபொருள் நிலையங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக பார்க்க படுகிறது .

மக்கள் எரிபொருள் இன்றி அவதியுறும் நிலையில் ,எரிபொருள் நிலையங்களில் பணி புரியும் ஊழியர்கள் தலமை நிர்வகிகள் மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளமை, காணொளிகளாக சமூக வலைதளத்தில் பரவி வந்த நிலையில் ,இந்த சீல் வைப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்

  • தேசிய சபை கூட்டத்தின் பின் மனோ கணேசன்

தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரலாறு முழுக்க தவற விட்ட வாய்ப்புகள்தான் அதிகம். ஆகவே எந்த ஒரு வாய்ப்பையும் தவற விட இனி நாம் தயார் இல்லை.

எமது மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூற எமக்கு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்துவோம். அந்த அடிப்படையிலேயே நாம் இங்கே வந்துள்ளோம்.

ஆனால், இதுவும் கதைக்கள கதாகாலேட்சபம் என்றால் நாம் விலகி விடுவோம். ஆனால், முன் கூட்டியே முடிவு எடுத்து, இது சரி வராது, என எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் நிராகரிக்கும் தேவை எமக்கு கிடையாது.

அதேபோல் இன்று நடந்தது, தேசிய சபை கூட்டம். இது தேசிய அரசாங்கமல்ல. தேசிய அரசில் நாம் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று நிகழ்ந்த முதலாவது தேசிய சபை கூட்டத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில், தலைவர் மனோ கணேசன்,

பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். கூட்ட நிறைவின் பின் கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது,

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்

எங்கள் மக்களின் பிரச்சினைகளை, துன்பங்களை, துயரங்களை, கண்ணீரை, சொல்ல வேண்டிய இடங்களில் எல்லாம் சொல்லியே தீருவோம் என்ற, குரல் கொடுத்தே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் நமது கட்சி இருக்கிறது.

அந்த அடிப்படையிலேயே நானும், திகாம்பரமும் இதில் இன்று கலந்துக்கொண்டோம். ஏனெனில் எங்கள் மக்களில் குறிப்பிட்ட பிரிவினர் விளிம்பு நிலையில் வாழ்கிறார்கள்.

இவர்களை பற்றி கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும், கிடைக்கும் எல்லா மேடைகளிலும் பேசா விட்டால், நாம் எதற்காக பாராளுமன்றம் வந்தோம்? ஆகவே அதை செய்வோம்.

ஆனால், விழிப்புடன் இருப்போம். சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்போம். வெறும் கதைக்களம்தான் என்றால் நாம் விலகி விடுவோம்.

மேலும் இன்று நாட்டின் நிதி உரிமை தொடர்பான பாராளுமன்றத்துக்கு இருக்கும் உரிமையை நாம் கோரினோம்.

குறிப்பாக பாராளுமன்றத்தின் நிதி கணக்காய்வு தொடர்பான கண்காணிப்பு குழுக்களின் தலைமை பதவிகளை எதிரணிக்கு தரும்படி நாம் கோரினோம்.

அப்படி இருந்தாலே அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னமேயே, கோதாபய ஆட்சி செய்த போது, இந்த நிதிக்குழுக்களின் தலைமை பதவிகள் எதிரணிக்கு வேண்டும் என நாம் கோரினோம்.

ஆனால், அரசாங்கம் அதை எமக்கு தரவில்லை. தமது ஆட்களை போட்டே அதை நிரப்பினார்கள்.

அரசாங்க அமைச்சர்கள், எம்பீக்கள் பாராளுமன்றத்துக்கு வந்து நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் உண்மைக்கு புறம்பாக பொய் சொன்னார்கள். அவர்களுடன் சேர்ந்து சில அரசு அதிகாரிகளும் பொய் சொன்னார்கள்.

குறிப்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் பொய் பேசினார். எமக்கு வேண்டிய அளவு பணம் இருக்கிறது.

டொலர் இருக்கிறது. ரூபா இருக்கிறது. ஸ்டேர்லிங் பவுண்ட் இருக்கிறது என எல்லோரும் கூட்டாக பொய் சொன்னார்கள்.

கடைசியில், நாடு தலைகுப்புற கவிழ்ந்த போதுதான் உண்மை வெளிப்பட்டது. கஜானா காலி என்ற உண்மை வெளியானது.

இதனால்தான் இத்தனை துன்பமும் என்பது நாம் எடுத்து கூறினோம்.

ஆகவே இந்த நிதி கணக்காய்வு தொடர்பான கண்காணிப்பு குழுக்களின் தலைமை பதவிகளை எதிரணிக்கு தருவார்களா என பார்ப்போம்.

பொருளாதாரத்தை கண்காணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்த தேசிய சபை சாத்தியமாகும்.

அதேவேளை, பொருளாதார மீட்சிக்கு அப்பால் எமது மக்களின் தேசிய,
சமூக, அரசியல் பிரச்சினைகளாகும் முன்வைக்க நாம் உத்தேசித்துள்ளோம்.

பாராளுமன்ற வாரங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும், பிற்பகல் இந்த சபை கூடும்.

கோட்டாவை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி
Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி

கோட்டாவை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி

இலங்கை கொழும்பு வந்தடைந்த சுப்பிரமணிய சுவாமி கோத்தபாயாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .

இவருடன் பல மூத்த சட்டத்தரணிகள் ,மற்றும் தொழில் அதிபர்களும் வருகை தந்திருந்தனர் .

சுவாமி இலங்கை வந்து கோட்டாவை சந்தித்துள்ள விடயம் ,இலங்கையில் புதிய திட்டமிடல்களை கையாளவே என நம்ப படுகிறது .

பல விடயங்களை கோட்டாவுக்கு போட்டு கொடுத்துள்ள சுவாமி ,இதன் ஊடாக .இலங்கையில் ரணில் ஆட்சிக்கு ஆப்பு வைக்கவும் ,தமிழர்களை நசுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக நம்ப படுகிறது .

கோட்டாபாயாவின் செல்ல பிள்ளையாகவும் ,
தமிழ் இன விரோதியாகவும் சுப்பிரமணிய சுவாமி செயல் பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி

இலங்கைக்கு ஐரோபிய யூனியன் ஒன்றரை மில்லியன் நிதியுதவி

இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் ஒன்றரை மில்லியன் யூரோக்களை விடுவித்து தமது மனிதாபிமானத்தை காண்பித்துள்ளது.

இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் உணவு இன்றி வாடுவதாக கிடைக்க பெற்ற புள்ளி விபரங்களுக்கு அடிப்படையில் ,இந்த நிதி உதவிகள் வழங்கபட்டுள்ளது .

உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு .இந்த நிதி உதவியினை வழங்கும் படி ஐரோப்பிய யூனியன் வேண்டுதல் விடுத்துள்ளது .

இவ்வாறு நிதிகள் வழங்க பட்டாலும் ,இலங்கையின் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீளவும்
கட்டியெழுப்பும் நடவடிக்கை முன்னெடுக்க படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது .

போதைக்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுமி
Posted in இலங்கை செய்திகள்

மாணவி கற்பழித்து கொலை கொலையாளி கைது

மாணவி கற்பழித்து கொலை கொலையாளி கைது

இலங்கை ஏலியகொட பகுதியில் பாடசாலையை விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்ய பட்டுளளார் .

குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் நடத்த பட்ட விசாரணையில் ,அதே பகுதியைச சேர்ந்த 39 வயது நபரினால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

குறித்த கற்பழிப்பு கொலையாளி கண்டு பிடிக்க பட்ட நிலையில், தற்போது விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது .

பல வருடங்களாக இடப்பெற்று வந்த விசாரணையில் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுளள்து .

நடத்த பட்ட DNA சோதனையில் இந்த தடவையில் விடயம் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ..

கைதான நபர் மீதான குற்றம் நிரூபிக்க பட்டால், ஆயூள் தணடனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது.

இலங்கையில் சிறுவர்களின் வயது 18 ஆக உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சிறுவர்களின் வயது 18 ஆக உயர்வு

இலங்கையில் சிறுவர்களின் வயது 18 ஆக உயர்வு

இலங்கையில் சிறுவர்களின் வயது எல்லை 16 ல் இருந்து 18 ஆக உயர்த்த பட்டுள்ளது .

சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றங்களை தடுக்கவே இந்த வயது எல்லை இவ்விதம் நீடிக்க பட்டுள்ளது என்கிறது அரசு .

பதினெட்டு வயது கடந்தால் மட்டுமே அவர்கள் பெரியவர் என்கின்ற நிலைக்குள் உள்ளடக்க படுவார்கள் ,

இந்த சட்டம் சிறுவர்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது .

சிறார் திருமணம் ,மற்றும் பல்வேறு பட்ட விடயங்களை தடுக்கும் முகமாக இந்த வயது எல்லை உயர்ரத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

இருதய பாதிப்புக்களினால் 34 சதவீதமானவர்கள் இறக்கின்றனர். ஏ.முபாறக் தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இருதய பாதிப்புக்களினால் 34 சதவீதமானவர்கள் இறக்கின்றனர். ஏ.முபாறக் தெரிவிப்பு

இருதய பாதிப்புக்களினால் 34 சதவீதமானவர்கள் இறக்கின்றனர். ஏ.முபாறக் தெரிவிப்பு

உலகம் முழுவதிலும் 17.3 மில்லியன் மக்கள் பக்கவாதம் மற்றும் இருதய நோயினால் இறப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றது.

இதிலிருந்து நாம் பாதுகாப்பு பெறுவதாக இருந்தால் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் ஆண்டுக்கொருமுறை இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்பதை

அறிவுறுத்துவதற்காகவே உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருவதாக குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் தெரிவித்தார்.

உலக இதய இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று (29) குச்சவெளி பிரதேச சபையில் இடம்பெற்ற இலவச இரத்ததான குழுவினரை சபை

உத்தியோகத்தர்களுக்குள் நியமிக்கும் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இருதய பாதிப்புக்களினால் 34 சதவீதமானவர்கள் இறக்கின்றனர். ஏ.முபாறக் தெரிவிப்பு

எமது நாட்டில் இடம்பெறும் உயிரிழப்புககளில் 34 சதவீதமானவை இருதய பாதிப்புக்களினால் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றாநோய்ப் பிரிவு, இருதய விசேட வைத்திய நிபுணர்களின் நிறுவன அமைப்புடன் இணைந்து வருடந்தோரும் உலக இருதய தினத்தை கொண்டாடி வருகிற அதேவேளை, இதய நோயிலிருந்து நாட்டு

மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு திட்ட வரைபுகளை எமது அரசு சுகாதாரத்துறையுடன் இணைந்து அதற்கான முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றது.

வளர்ச்சியடைந்துள்ள தொழில் நுட்பத்திற்கு மத்தியில் எமது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில் இருத நோய் மற்றும்

தொற்றாநோய் போன்ற பல்வேறுபட்ட விழிப்புணர்வுகளை சுகாதார அமைச்சு மற்றும் அது தொடர்புபட்ட நிறுவனங்களும் மேற்கொண்டுவருவதுடன் அதற்காக பல மில்லியன் ரூபாய்களை செலவும் செய்து வருகின்றது என்றும் தவிசாளர் முபாறக் சுட்டிக்காட்டினார்

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 இலட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன.

இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறாகும்.

இதயத்தில் ஏற்படும் நோய்கள் குறித்தும், அதில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க,


ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற விழிப்புணர்வை


பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று உலகம் முழுவதும் நடைபெறுகின்றது என்றார்.

பைஷல் இஸ்மாயில் –

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் பயணம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் பயணம்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் பயணம்

ஆசிய வெற்றிக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை மகளிர் அணி நேற்று (28) காலை பங்களாதேஷ் பயணமானது.

பங்களாதேஷில் நடைபெறும் இந்த போட்டியில் சமரி அதபத்து தலைமை தாங்குகிறார். அணியின் தலைவர் சமரி அதபத்து அங்கே செல்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமது அணி போட்டிகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.

ஆசிய வெற்றிக்கிண்ண மகளிர் போட்டி தொடர் அக்டோபர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை நடைபெறும்.

வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது
Posted in உளவு செய்திகள்

வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

வடகொரியா இரண்டு குறும் தூர ஏவுகணை சோதனையை நடத்தியது .இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .

வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி தொடராக ஏவுகணைகளை தயாரித்து சோதனை புரிந்த வண்ணம் உள்ளது .

ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தென்கொரியா மற்றும் ,ஜப்பான் இணைந்து தெரிவித்துள்ளன .

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை பிராந்திய வல்லாதிக்க பகுதியில் பெரும் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனை ஜப்பான் கடலில் வீழ்ந்து வெடித்தது

தொடரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள், அமெரிக்கா ,மற்றும் எதிரி நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன .

வடகொரியாவிடம் சுனாமியை ஏற்படுத்தும் வல்ல ஏவுகணைகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இதுவே எதிரி நாடுகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன .

அணு ஆயுத நாடக தம்மை சுய பிரகடனம் செய்திட்ட பின்னர் ,
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகள் தீவிரம் பெற்று வருவதை, இந்த சோதனைகள் காண்பிக்கின்றன .

தொடரும் கடும் பொருளாதார தடைகளிற்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருவதே அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு வியப்பையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன .

ஈரான் இராணுவ நடவடிக்கை 73 ஏவுகணைகள் உளவு விமானங்கள் மீட்பு தொடரும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈரான் இராணுவ நடவடிக்கை 73 ஏவுகணைகள் உளவு விமானங்கள் மீட்பு தொடரும் தாக்குதல்

ஈரான் இராணுவ நடவடிக்கை 73 ஏவுகணைகள் உளவு விமானங்கள் மீட்பு தொடரும் தாக்குதல்

ஈரான் நாட்டின் எல்லையோரமான ஈராக் வடக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள தீவிரவாத குழுவிடம் இருந்து ஏவுகணைகள் ,மற்றும் உளவு விமானங்கள் என்பன மீட்க பட்டுள்ளதாக ஈரான் புரட்சி படை அறிவித்துள்ளது .

தொடர்ந்து ஈராக் பகுதியில் நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகள் நிலைகள் மீது, ஈரான் இராணுவம் தேடி அழிக்கும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .

ஈரான் இராணுவத்தின், திடீர் இராணுவ நடவடிக்கையால் , தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் ,அவர் தம் கனரக ஆயுதங்கள் என்பன அழிக்க பட்டுள்ளது என்கிறது ஈரான் இராணுவம் .

ஈரான் இராணுவ நடவடிக்கை 73 ஏவுகணைகள் உளவு விமானங்கள் மீட்பு தொடரும் தாக்குதல்

தொடர்ந்து இடம்பெற்று வரும் அகோர தாக்குதலினால் ,ஈராக்கிய குருதீஸ் பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளன .

அமெரிக்காவின் ஆதரவுடன் போர் புரிந்து வந்த குருதீஸ் போராளிகளை பிரிட்டன் ,அமெரிக்கா என்பன கைவிட்ட நிலையில் , தமிழீழ விடுதலை புலிகளை போல அழிவின் விழிம்பில் குருதீஸ் அமைப்பு உள்ளது .

துருக்கி மற்றும் ஈரான் என்பன இணைந்து சமவேளை இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வருவதால், குருதீஸ் போராளிகள் அமைப்பு திணறிய வண்ணம் உள்ளது .

தொடர்ந்து தாக்குதல்கள் வேகம் பெற்றால் ,புலிகளை போன்று குருதீஸ் போராளிகள் அமைப்பும் காணமல் போகும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கரி மேக்கன் அரச குடும்பத்தில் இருந்து கீழிறக்கம்
Posted in உளவு செய்திகள்

கரி மேக்கன் அரச குடும்பத்தில் இருந்து கீழிறக்கம்

கரி மேக்கன் அரச குடும்பத்தில் இருந்து கீழிறக்கம்

பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசாக விளங்கி வரு கரி அவரது மனைவி மேக்கன் ஆகியோர் ,அரச குடும்பத்தின் அதிகார பூர்வ இணையத்தில் இருந்து கீழிறக்க பட்டுள்ளனர் .

இவர்கள எலிசபெத் அவர்கள் இருக்கும் பொழுது ,அரச இணையத்தில் அதே தரவரிசையில் காணப்பட்டனர் .

ஆனால் தற்போது இவர்கள் அந்த இணையத்தில் இருந்து கீழிறக்க பட்டுள்ளது ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கரி மேக்கன் அரச குடும்பத்தில் இருந்து கீழிறக்கம்

பிரிட்டன் மூன்றாவது மன்னராக தற்போது திகழ்கின்ற சால்ஸ் அவர்களின் வருகையின் பின்னர் ,அரச குடும்பத்தில் பல பிணக்குகள் தீர்க்க பட்டு ,நாடு முன்னேற்ற நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க பட்டது .

ஆனால் தற்போது அவை தலைகீழாக மற்றம் பெற்று தற்போது ,மன்னர் சாள்ஸ் அவர்கள் மனைவி மற்றும் ,அரச குடும்ப பெண் ஒருவர் உயர் நிலையில் வைக்க பட்டுள்ளதான செய்திகளும் கசிந்துள்ளது .

இவ்வாறான சம்பவங்கள் ஊடக அரச குடும்பத்தில் தொடர்ந்து முறுகல் காணப்படுவதை இவை காண்பிகின்றன .

இட்டலி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்
Posted in சமையல் cook

இட்லி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்

இட்லி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்

இட்லி தோசைக்கு ருசியான சட்னி நம்ம வீட்டில இன்றே செய்து பாருங்க , டேஸ்ட் நாக்குல நிக்கும்
.மிகவும் தரமான சுவயான ,இலகுவான சட்னி .

பத்து இட்லி தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .

அவ்வாறான இந்த பொட்டுக் கடலை சட்னி செய்வது எப்படி என்பதை வாங்க பார்க்கலாம் .

பொட்டு கடலை சட்னி செய்வது எப்படி ..?
கடலை சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

கீழே பார்க்கலாம் வாங்க .

பொட்டு கடலை சட்னி செய்முறை ஒன்று

அடுப்பில கடாய வைத்து மூன்று கரண்டி எண்ணெய் விட்டிருங்க .
எண்ணெய் நன்றாக சூடானதும் ,சின்ன வெங்காயம் பத்து ,இரண்டு பல்லு பூண்டு ,காரத்திற்கு ஏற்ப வறு மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .

இட்லி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்

இது கூட சிறிய துண்டு ,புளி சேர்த்து வதக்கி வாங்க .மூன்று கரண்டி அளவு பொடியாக வெட்டியா தேங்காய் சேர்த்து வதக்கி வாங்க .

இரண்டு நிமிடத்திற்கு பின்னர் ,பொட்டு கடலை சேர்த்து வறுத்து வாங்க .இரண்டு நிமிடம் கழித்து ,இறக்கிய பின்னர் கொஞ்ச நேரம் ஆறவைத்து பின்னர் ,மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து,கூடவே தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வாங்க .

இப்போ சட்னி ரெடியாகிடுச்சு .இந்தசட்னிக்கு தாளித்து போட்டா ரெம்பவே சுவையாக இருக்கும் .

அதனால மீளவும் அடுப்பில கடாய வைத்து, எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து ,வறுமிளகாய் ,பெருங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .

ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் ,அதனை சட்னியில் போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
இப்போ சட்னி ரெடியாடிச்சு .

இப்போ இட்டலி தோசை கூட சேர்த்து சாப்பிட்டு பாருங்க செம ,சுவையாக இருக்கும் ,மிகவும் இலகுவான முறையில் சிறந்த சட்னி தயாராகிடிச்சு .

பத்து இட்லி நாம சாப்பிடலாங்க .அப்புறம் என்ன குஷி தாங்க .தலைவரே சட்னி எப்படி இருக்கு சொல்லவே இல்லை .

கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி
Posted in உலக செய்திகள்

கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி

கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவி

கணவனை கோடாரியால் வெட்டி கொன்ற மனைவியின்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மனைவியின் கறுப்பு நிறத்தை மைய படுத்தி கணவன் தொடராக கேலி செய்து வந்துள்ளார் .

ஆத்திரமுற்ற முப்பது வயதுடைய மனைவி, நாற்பது வயதுடைய கணவனை கோடாரியால் சரமாரியாக ,வெட்டி கொலை செய்துள்ளார் .

கணவனை கொலை செய்த மனைவியை ,காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

நிறத்தை பார்ப்பவர்கள் ,அந்த நிறத்தில் உள்ளவர்களை திருமணம் செய்தல் கூடாது .

அதன் பின்னர் அதனை கேலி செய்தால் ,இவாறான மன உளைச்சலுக்கு சென்று அவர் கொலை செய்திடம் நிலைக்குச எழுவதை தடுக்க முடியாது தான் .

விளையாட்டு ஒன்று இங்கே வினையானது .

இலங்கையில் மீளவும் மின்சார வெட்டு தொலைக்காட்சி வானொலி செய்திகளுக்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மீளவும் மின்சார வெட்டு தொலைக்காட்சி வானொலி செய்திகளுக்கு ஆப்பு

இலங்கையில் மீளவும் மின்சார வெட்டு தொலைக்காட்சி வானொலி செய்திகளுக்கு ஆப்பு

இலங்கையில் நாளை முதல் காலை ஆறுமுப்பது மணி முதல் எட்டு முப்பது மணிவரை மின்சாரம் துண்டிக்க படுகிறது .

காலை வேளையில் மிக முக்கிய வானொலி ,மற்றும் தொலை காட்சி செய்திகள் இடம்பெறும் நேரமாக உள்ளது .

இதனை மைய படுத்தி மின்சார துண்டிப்பு இடம்பெறுகிறது .

தவிர வேலைக்கு செல்லும் பணியாளர்களும் ,இவ்வேளை துரிதமாக சென்றிட ,வீட்டில் மின்சாரத்தை அதிகம் பாவனைக்கு உட்படுத்தி வருகின்றனர் .

மிக முக்கியமான கால பகுதியில் துண்டிக்க படும் இந்த மின்சார நிறுத்தம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .