Tag: முபாறக் தெரிவிப்பு
நூலகங்களை திறந்து வைப்பதில் பிரயோசனமும் இல்லை-தவிசாளர் முபாறக் தெரிவிப்பு
நூலகங்களை திறந்து வைப்பதில் பிரயோசனமும் இல்லை-தவிசாளர் முபாறக் தெரிவிப்பு
கடந்த காலங்களில் நான் அனுப்பிய செய்திகளுக்கு “பைஷல் இஸ்மாயில்” என்ற பெயரை பாவித்து வந்தேன். தற்போது இந்தப் பெயரை மாற்றி “அபு அலா
” என்று இனிவரும் காலங்களில் பாவிக்கவுள்ளேன். எனவே, நான் அனுப்புகின்ற செய்திகளுக்கு இந்தப் பெயரை பதிவிடுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.
நூலகங்களை பெயரளவில் திறந்து வைப்பதில் எவ்விதப் பிரயோசனமும் இல்லை; தவிசாளர் முபாறக் தெரிவிப்பு!
அபு அலா –
நூலகங்களை திறந்து வைப்பதில் பிரயோசனமும் இல்லை-தவிசாளர் முபாறக் தெரிவிப்பு
தேசிய வாசிப்பு வாரத்தையொட்டி குச்சவெளி வடலிக்குளம் பிரதேசத்தில் புதிய நூலகத்தை குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் பிரதம
அதிதியாக கலந்துகொண்டு திறத்து வைத்து பொதுமக்களிடம் கையளித்து வைத்தார்.
குச்சவெளி பிரதேச சபை செயலாளர் மா.மாலினி அசோக்குமார் தலைமையில் (31) இடம்பெற்ற இந்த திறப்பு விழாவில், உதவித் தவிசாளர்,
உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அங்கு தவிசாளர் ஏ.முபாறக் உரையாற்றுகையில்,
நூலகங்களை பெயரளவில் திறந்து வைப்பதில் எவ்விதப் பிரயோசனமும் இல்லை. அதனை முழுமையாக நாம் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
எம்மிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அது ஒரு மனிதனை பரிபூரணமாக்குகிறது.
மின்னணு ஊடகத்தின் ஆதிக்கம் இன்று அதிகரித்துள்ளதால் அச்சு ஊடகத்தின் பயன்பாட்டைக் குறைவடையச் செய்துள்ளது.
அதனால் எம்மிடையே புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றது.
வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதற்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக உள்ளனர். ஏனென்றால், வீட்டில் புத்தகங்களை படிக்கும் பழக்கம்
அவர்களிடத்தில் இல்லாததால், பிள்ளைகளும் அப்படியே மாறிவிடுகின்றனா். இதிலிருந்து நாம் மீண்டுகொள்வதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை எம்மிடத்தில் ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.
இந்நிகழ்வின்போது, நூலக வளாகத்தில் பயன்தரும் மரக்கன்றுகளும் தவிசாளர்
உள்ளிட்ட அதிதிகளினால் நட்டிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

இருதய பாதிப்புக்களினால் 34 சதவீதமானவர்கள் இறக்கின்றனர். ஏ.முபாறக் தெரிவிப்பு
இருதய பாதிப்புக்களினால் 34 சதவீதமானவர்கள் இறக்கின்றனர். ஏ.முபாறக் தெரிவிப்பு
உலகம் முழுவதிலும் 17.3 மில்லியன் மக்கள் பக்கவாதம் மற்றும் இருதய நோயினால் இறப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றது.
இதிலிருந்து நாம் பாதுகாப்பு பெறுவதாக இருந்தால் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் ஆண்டுக்கொருமுறை இதயம் சார்ந்த பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்பதை
அறிவுறுத்துவதற்காகவே உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருவதாக குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாறக் தெரிவித்தார்.
உலக இதய இத்தினத்தை சிறப்பிக்கும் வகையில் இன்று (29) குச்சவெளி பிரதேச சபையில் இடம்பெற்ற இலவச இரத்ததான குழுவினரை சபை
உத்தியோகத்தர்களுக்குள் நியமிக்கும் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இருதய பாதிப்புக்களினால் 34 சதவீதமானவர்கள் இறக்கின்றனர். ஏ.முபாறக் தெரிவிப்பு
எமது நாட்டில் இடம்பெறும் உயிரிழப்புககளில் 34 சதவீதமானவை இருதய பாதிப்புக்களினால் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றாநோய்ப் பிரிவு, இருதய விசேட வைத்திய நிபுணர்களின் நிறுவன அமைப்புடன் இணைந்து வருடந்தோரும் உலக இருதய தினத்தை கொண்டாடி வருகிற அதேவேளை, இதய நோயிலிருந்து நாட்டு
மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு திட்ட வரைபுகளை எமது அரசு சுகாதாரத்துறையுடன் இணைந்து அதற்கான முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றது.
வளர்ச்சியடைந்துள்ள தொழில் நுட்பத்திற்கு மத்தியில் எமது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில் இருத நோய் மற்றும்
தொற்றாநோய் போன்ற பல்வேறுபட்ட விழிப்புணர்வுகளை சுகாதார அமைச்சு மற்றும் அது தொடர்புபட்ட நிறுவனங்களும் மேற்கொண்டுவருவதுடன் அதற்காக பல மில்லியன் ரூபாய்களை செலவும் செய்து வருகின்றது என்றும் தவிசாளர் முபாறக் சுட்டிக்காட்டினார்
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 இலட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன.
இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறாகும்.
இதயத்தில் ஏற்படும் நோய்கள் குறித்தும், அதில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க,
ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற விழிப்புணர்வை
பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று உலகம் முழுவதும் நடைபெறுகின்றது என்றார்.
பைஷல் இஸ்மாயில் –
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி









