Tag: சீல் வைப்பு
யாழில் ஒரே நாளில் மூன்று கடைகளுக்கு சீல் வைப்பு
யாழில் ஒரே நாளில் மூன்று கடைகளுக்கு சீல் வைப்பு
யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரு உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொது சுகாதார பரிசோதகரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
யாழ். நகர் பகுதியில் உள்ள உணவகங்களில், யாழ்.மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரு உணவகங்களுக்கு எதிராக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
யாழில் ஒரே நாளில் மூன்று கடைகளுக்கு சீல் வைப்பு
வழக்கு விசாரணைகளை அடுத்து உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்ச ரூபாய் ஆள் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று , இரண்டு உணவகங்களுக்கு சீல் வைக்குமாறு பணித்ததுடன் , வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
அதேவேளை யாழ். ஆனைப்பந்தி பகுதியில் அமைந்திருந்த கொத்து கடையும் யாழ்.நீதிமன்ற உத்தரவில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் யாழ்.நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் இயங்கி வந்த மூன்று உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்
கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்
கொழும்பில் உள்ள முக்கிய இரு எரிபொருள் நிலையங்களுக்கு சீல் வைக்க பட்டுள்ளது .
மட்டுப்படுத்த பட்ட நிலையில் எரிபொருள் விற்றபனை மற்றும் மோசடி தொடர்பில் இந்த சீல் வாய்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது .
எரிபொருளை பெற்று கொண்ட இவர்கள் , அதனை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நிலையில் இந்த சீல் வைக்க பட்டுள்ளது .
கொழும்பில் இரு எரிபொருளில் நிலையங்களுக்கு சீல்
இவ்வாறன அதிரடி நடவடிக்கை ,ஏனைய எரிபொருள் நிலையங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக பார்க்க படுகிறது .
மக்கள் எரிபொருள் இன்றி அவதியுறும் நிலையில் ,எரிபொருள் நிலையங்களில் பணி புரியும் ஊழியர்கள் தலமை நிர்வகிகள் மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளமை, காணொளிகளாக சமூக வலைதளத்தில் பரவி வந்த நிலையில் ,இந்த சீல் வைப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

உணவகத்திற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது
உணவகத்திற்குள் பாய்ந்த பொலிஸ் – சீல் வைப்பு – உரிமையாளர் கைது
ரொரண்டோ பகுதியில் உள்ள பாபுக்கி உணவகம் ஒன்றுக்குள் பரவி வரும் கொரனோ வைரஸ் விதிமுறைகளை பின்பற்ற தவறி
மக்களை கூட்டமாக நிற்க வைத்து உணவு வழங்கிய கடை உரிமையாளர் கைது செய்யப் பட்டார்
மேலும் அங்கு பணி புரிந்த பணியாளர்களும் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
ஆறு பேருக்கு மேல் கடைக்குள் நுழைய கூடாது
மேலும் இரண்டு மீட்டர் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்
,அவ்விதம் அல்லாது ,மக்கள் ஒன்று கூடியதை கண்ணுற்ற போலீசார் அந்த கடைக்குள் பாய்ந்தனர் ,
உரிமையாளர் கைது செய்ய பட்டதுடன் கடையின் பூட்டையும் மாற்றி சென்றனர் ,
தமிழர்களே யாக்கிரதை ,இன்று அவருக்கு நாளை உங்களுக்கு
அரசு கூறும் விதிகளை பின்பற்றுங்கள் ,தண்டம் செலுத்துவதுடன்,உங்கள் லைசன்ஸ் பறி கொடுக்கும்நிலையும் ஏற்பட கூடும்










