Tag: தமிழ்
அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு
அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு
அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு ,பரம்பரையாக மேய்ச்சல் தரைகாணியாக பயன்படுத்திவந்த காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன்
தமது கால்நடைகளையும் மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
கெவிளியாமடுவில் உள்ள மேய்ச்சல் தரைகளை கொண்டுள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைக்காணிகளில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கை மற்றும் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும்
வகையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் களவிஜயம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் சுதாகர்,உதவி பிரதேச செயலாளர்,பிரதேச காணி உத்தியோகத்தர்,திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள்,கிராமசேவையாளர்கள்,பண்ணையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கெவிளியாமடுவில் மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர் அங்கு
பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.
இங்கு சட்டவிரோத பயிர்ச்செய்கையாளர்களின் அத்துமீறிய செயல்பாடுகள் காரணமாக கால்நடை மேய்ச்சல் தரை அழிக்கப்படுவதாகவும், அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பகுதிக்குள் கால்நடைகள் சென்றால்
பண்ணையாளர்களை தாக்குவதாகவும் சிலரை பிடித்து பணம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு வன பாதுகாப்புத் திணைக்களத்தினர் மற்றும் மங்கலகம பொலிசார் தங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்கு தாக்கல்களை
செய்வதாகவும், லஞ்சமாக பணம் மற்றும் மதுசாரம் கேட்பதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
கால்நடை பண்ணையாளர்களின் கால்நடைகளை சுருக்கு வைத்து பிடிப்பதாகவும் சில சமயங்களில் கால்நடைகளை கொல்வதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் சுமார் 300 க்கு மேற்பட்ட பண்ணையாளர்கள் சுமார் 150000க்கும் மேற்பட்ட தங்களது கால்நடைகளை கொண்டு செல்வதாகவும் தாங்கள் பரம்பரை பரம்பரையாக இப்பகுதியிலே கால்நடைகளை மேய்ச்சலுக்கு
கொண்டு வருவதாகவும் கடந்த சில வருடங்களாக இவ்வாறானவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.
பண்ணையாளர்கள் சிறிய கத்தியினை கையில் வைத்திருந்தாலும் கூட வன பாதுகாப்பு திணைக்களத்தினர் அவர்களை பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதுடன் தங்களுக்கான தற்காலிக கொட்டில்களை கூட
அமைப்பதற்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் ஆனால் பெரும்பான்மை சமூகத்தினருக்கு இயந்திரங்களைக் கொண்டு காடுகளை அழிப்பதற்கும் கட்டிடங்களை அமைப்பதற்கும் எதுவித தடைகளும் விதிப்பதில்லை எனவும் இதன் போது பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
குறித்த கலந்துரையாடலின் போது அப்பகுதியில் அத்துமீறி பயிற்சிகள் ஈடுபடும் நபர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியபோது
தங்களிடம் உரிய ஆவணங்கள் இருப்பதாகவும் அவற்றை வைத்துக் கொண்டு தாங்கள் இப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இதன் போது பிரதேச செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இருவரும் இணைந்து அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் ஆவணங்களை பரிசீலனை செய்வதற்காக அவற்றை எதிர்வரும் வாரம் கிராம சேவகர்களின் ஊடாக வழங்கி அவற்றை உறுதி செய்ய வேண்டுமென
பயிர்ச்செய்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டதுடன், பண்ணையாளர்கள் மீது அத்துமீறிய செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.
“உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக மேய்ச்சல்தரைக்காணியில்
முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளை இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு
முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன் என இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியே இந்த கெவிலியாமடு இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை பெயர் தெரியாதவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து அடைத்து
விவசாயம் செய்து கட்டிடங்களை அமைத்து பாரிய அளவில் பண்ணைகளாக மாற்றி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இவை அனைத்தும் வன பரிபாலன சபைக்கு சொந்தமான காணிகள்.
இன்று வட கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளுக்குள் தமிழ் பண்ணையாளர்கள் மற்றும் தமிழ் விவசாயிகள் சிறிய
கத்தியை எடுத்துக்கொண்டு சென்றாலும் கூட உடனடியாக அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்து பாரிய நெற்குவாரங்களை கொடுக்க வன பாதுகாப்பு
திணைக்களம் இந்த பிரதேசத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை தனியார் ஒருவர் யானை வேலி கூட அமைத்து வைத்திருக்கின்றார். இவை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமான காணிகள்.
பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பட்டிப்பளை எல்லையிலே இந்த காணி அவகரிப்பு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதனை தொடர்ச்சியாக பேசிக் கொண்டு வந்து விடையங்கள்.
அந்த நேரத்தில் நாங்கள் வந்து பார்வையிட்டத்தின் பின்பு ஒரு சில விடயங்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலும் கூட அந்த நேரத்தில் இருந்து பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்கள் இந்த விடயத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முழுமையாக மறுத்தார்கள்.
ஏனென்றால் பெரும்பான்மை சமூகத்தினுடைய குடியேற்ற திட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. இன்று புதிய அரசாங்கம் வந்திருக்கின்றது அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு
கூட்டத்திலும் கூட இந்த மேய்ச்சல் தரைக்குள் இவ்வாறான அடாவடித்தனமாக பயிர்கள் செய்வார்களா இருந்தால் கால்நடை வைத்திருக்கின்ற பண்ணையாளர்கள் அடுத்த கட்டமாக எங்கே போவது.
அநுரகுமார திசாநாயக்க அவர்களுடைய அரசாங்கத்தின் கீழே இந்த விடயங்கள் தொடருமாக இருந்தால் இன்று வடக்கு கிழக்கிலும் சரி இனி
இடங்களிலும் சரி அனைத்து மக்களையும் சரிசமமாக பார்த்து செயல்படுவார் என நினைத்து வாக்களித்தாலும்கூட அவருடைய ஆட்சிக்காலத்திலும் இந்த விடயங்கள் தொடர்கின்றது.
சிலர் கூறலாம் அவர் ஆட்சிக்கு வந்து இப்போது தான் இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்கள் என்று ஆனால் இந்த விடயங்கள் குறித்து மாவட்ட
அபிவிருத்தி குழு கூட்டத்தில் பேசப்பட்டு. இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சொல்லியும் கூட இந்த விடயம் இன்று வரை அவ்வாறாகவே கண்முன்னாக இருக்கின்றது.
அந்த வகையில் இது உடனடியாக சட்டவிரோதமாக குடியேறி இருக்கின்றவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் இது மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தால் போடப்பட்ட யானை வேலிக்கு உள்
காணியினை சுத்தப்படுத்தி விவசாயம் செய்கின்றார்கள். யானை வேலி போடுவதன் நோக்கமே இதற்கு மறுபக்கம் வன பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தம் என்பதனால்.
இந்த யானை வேலைக்கு உட்பகுதியில் வந்து அவர்கள் விவசாயம் செய்திருப்பதனால் தாங்களாகவே யானை வேலிகளை அமைத்திருக்கின்றார்கள்.
எமக்கு இங்கே இருக்கின்ற பண்ணையாளர்கள் கூறுகின்றார்கள் இந்த காட்டுப் பகுதிக்குள் ஒரு எஸ்கவேட்டர் இயந்திரத்தினையும் ஒளித்து வைத்திருப்பதாக. அதனை வைத்து தான் காட்டை ஒதுக்குகிறார்கள்.
சாதாரணமாக தமிழர்கள் ஒருவர் ஒரு சிறிய கத்தியை காட்டுப்பகுதிக்குள் கொண்டு போக முடியாத நிலையிலே இன்று எஸ்கவேட்டர் இயந்திரத்தின் மூலம் காடுகளை அழித்து பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை
இல்லாமல் செய்து காணிகளை அபகரிப்பு செய்யும் வரைக்கும் இவர்கள் என்ன பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று எமக்கு பாரிய சந்தேகம் இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்பி வன பாதுகாப்பு திணைக்களம் தூங்குகின்றதா என்ற கேள்வியையும் நாங்கள் எழுப்ப வேண்டும்.
பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வன பாதுகாப்பு திணைக்களத்தின் நீதி ஒரு மாதிரியாக செயற்படுகின்றது.
இங்கே இருப்பவர்கள் மாபியாக்கள். இங்கு இருப்பவர் ஒருவர் கூறுகின்றார் இந்த பகுதியில் தனக்கு பல ஏக்கர் காணிகள் இருப்பதாகவும் இப்பகுதியில் மாமரம் மற்றும் கொய்யா மரம் போன்றவை பயிரிட்டு இருப்பதாகவும் வயல் செய்வதாகவும் கூறுகின்றார் ஒரு தனி நபர்.
இவர் அம்பாறையில் இருந்து வந்து இங்கு செய்கின்றார்.
இங்கு சிங்களவர்கள் வந்து 10 அல்லது 15 பேர்ச் எடுத்து செய்யவில்லை. இந்த பிரதேசத்தில் காணிமாபியா ஒன்று இயங்கிக் கொண்டு வருகின்றது.
அந்த வகையில் மூன்று மாடி கட்டிடம் கூட அமைத்திருக்கின்றார்கள். இந்த கட்டிடம் அமைக்கும் வரைக்கும் வன பாதுகாப்பு திணைக்களம் எதனை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த வகையில் உடனடியாக சட்டவிரோதமான செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளுகின்ற அரசாங்கம் என நம்பிக்கை வருவதாக இருந்தால்
இதனை ஒரு முதலாவது சவாலாக எதிர்வரும் வாரத்தில் பாராளுமன்றத்தில் என்.பி.பி அரசுக்கு முன்பாக நான் இந்த சவாலை முன்வைக்க தயாராக இருக்கின்றேன்” என்றார்.
லண்டன் தமிழ் கடையில் கொள்ளை
லண்டன் தமிழ் கடையில் கொள்ளை
லண்டன் தமிழ் கடையில் கொள்ளை , லண்டன் புறநகர் பகுதியான பகுதியில் கடை ஒன்றில் கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் லொட்டோ சிகரெட் மதுபானங்கள் என்பனவற்றை திருடி சென்றுள்ளனர் .
கடைக்குள் நுழைந்த இரண்டு வெள்ளை இனத்தைச் சேர்ந்த திருடர்கள் சுட்டியலை காட்டி அங்கு கடமையில் இருந்த ஊழியர்களை விரட்டி சுட்டியில் முனையில் மிரட்டி
அங்கு இருந்த பணம் என்பனவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அவர்கள் தப்பி விடுகின்ற காட்சி அங்கே பொருத்தப்பட்டுள்ளது.

சாமீபகாலங்களாக லண்டனில் இவ்வாறு கடைகளில் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அரிதாகவே இல்லை அதிகமாகவே இருந்தது அதை தவற விட்டு விட்டீர்கள்.
அந்த காணொளியை பார்க்கின்ற பொழுது தெரிகிறது எனவே உங்கள் கடைகளில் வந்தால் எப்படி அவர்களை கையாள வேண்டும் இவரோட சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கான தற்காப்பு நடவடிக்கை ,
எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் அல்லது போட்டோக்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .
லண்டனில் கடை வித்திருப்பதும் போதும் ,இவ்வாறான சியோக்களில் சிக்கி தவிக்கிற பாடும் போதும் என்பது போல் உள்ளது இந்த காட்சியகளை பார்க்கும் பொழுது .
காணொளி -நன்றி -ஈழம் ராஞ்சன்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி
துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி
துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி , பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ராமநாதன் தொடர்பாக மக்கள் முன்வைத்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன .
தேர்தலில் வந்து தமிழ் மக்களுக்கு பாரிய வெற்றியைத் தான் வழங்கு வதாக தெரிவித்து வந்த நிலையில் ,வன்னி மைந்தன் டிக் டாக்கில் கலந்து கொண்ட மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து அவரை கதற விட்டனர் .
இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு எதுவித சேவைகளையும் செய்யாது மக்களிடத்தில் பணத்தை மட்டும் குறியாக பெற்றுக்கொண்டு ஆடம்பர
வாழ்வில் சுகபோகமாக அருச்சுனா ராமநாதன் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆதரவு வழங்கிய மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர் .
வழக்கு வழக்கு வழக்கிற்கு எழுதப்பட்ட லட்சம் பணத்தில் யார் வாங்கி குவிக்கின்றார்.
பணம் வழங்கியவர்களுக்கு பதில் வழங்க மறுத்து அவர்களது கணக்குகளை முடக்கி வருவதாகவும் மக்கள் தமது என்ற கருத்துக்களை இவ்வாறு தெரிவித்துள்ளனர் .
அந்த விடயம் தொடர்பான இந்த காணொளியில் முழுமையாக உள்ளது பாருங்கள் மக்களே .
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள்
தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள்
தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள் ,அனைவரையும் ஓட ஓட துரத்த வேண்டுமென தற்பொழுது தமிழ் மக்கள் தமது கருத்துக்களை ஆழமாக தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களது வீடுகளை ஏறி வந்து தட்டுகின்ற இவர்கள் தேர்தல் முடிந்தவுடன் டாட்டா காட்டிவிட்டு சென்று விடுகின்றனர்
அரசியல் லஞ்ச ஊழலில் பருத்து கொழுத்துக்கிடக்கும் இந்த வெள்ளை வேட்டிகள் யாவரையும் வேட்டிகளை உருவி ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் என ,கோபத்தோடு அகில உலக தமிழ் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழருடைய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதை விடுத்து, தனிநபர் குடும்ப வருமான சொத்துக்களை அதிகரித்து ,அதனூடாக தங்கள் குடும்பங்களை வளர்த்து வருவதான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றது.
விடுதலைக்காக எழுந்த ஒரு இனம் தனது விடுதலையை தொலைத்து அடிமைக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் சிக்கி வாழ்கின்ற இந்தக் காலப்பகுதியில்,
இவர்கள் தமது மக்களுடைய இனமான விடுதலை மறந்து தனிநபர் வருமானத்தில் கவனம் செலுத்தி வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அர்ஜுனா இராமநாதன் என்ற ஒரு மருத்துவன் தன்னந்தனி ஆளாக நின்று மக்களுக்காக போராடுகின்ற பொழுது,
அவனை ஆதரிக்க மறந்து அவனை அழுத்தி அவனுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் இந்த வெள்ளை வேட்டிகளை ஓட ஓட விரட்ட வேண்டுமென மக்கள் கொதிக்கின்றனர்.
எங்களது அர்ச்சனாவுக்கு ஆதரவு தர மறுத்ததாக காரணமாகவே இந்த வெள்ளை வேட்டிகள் தற்பொழுது மக்கள் மன்றில் விமர்சனத்திற்கு உள்ளாக நிலையிலும் வெறுத்து ஒதுக்கப்படுகின்றவர்களாலும் காணப்படுகின்றனர்.
ஆதலால் இந்த தேர்தலில் அவர்களை ஒதுக்கி விரட்டி அடிக்குமாறு மக்கள் அன்பு கட்டளை வேண்டி இருக்கின்றனர்.
இதனால் அரசியல்வாதிகள் அச்சத்தில் பதறிக் கொண்டிருக்கின்றனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்
அறம் சிறக்க நெஞ்சில் மறம் பிறக்க
மானத் திறம் இருக்க
இரும்புத் தோள்கள் கொண்டு
தமிழர் துயர் துடைக்க
ஈழ மண் விடுதலையடைய
வியர்வை சிந்தி தங்கள்
அயர்வை மறந்து இளமைக் காலக்
கனவைத் துறந்து
கரிகாலன் படையில் இணைந்து
வெஞ்சமர் புரிந்து எதிரியை
வீழ்த்தி
தனித் தமிழீழம் பெற
வழிகாட்டியே
சந்தனப் பேழைகளில்
உறங்கும் மாவீரர்களே
மரணத்தை வென்று மீண்டும் பிறப்பீர்கள்
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்
சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது
என உணர்ந்து
வீறு கொண்டெழுந்து
ஆண்டுகொண்டிருக்கும்
சிங்களத்தின் பிடியினுள்
மாண்டு கொண்டிருந்த
எம் இனத்தினை
மீண்டு எழ உரிமை உணர்வினை தூண்டினீர்!
உம்முடல் தன்னும் அதனுள் ஓடும் செங்குருதியும் உணர்வும் நரம்பும்
எம் தமிழீழத்திற்கும் எம் தமிழ் மக்களுக்குமே என்று
ஆகுதியாகினீர்
மரணத்தை வென்று மகுடத்தை அமைத்த மாவீரரே
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்!
தமிழர் நிலம் காத்தீர்
தமிழ் மக்கள் உயிர் காத்தீர்
உம் உயிர் தான் மொழி,இனம்,நிலம் என வாழ்ந்தீர்
எம் இன அடிமை நிலை உடைத்தெறிந்தீர்
என்றும் எங்கள்
மனங்களில் உறவாக
உயிராக உணர்வாக இருப்பீர்
ஈழ மண்ணை நேசித்து
அதனால் மரணத்தை யாசித்த மாவீரரே
தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்!
பலித்திடும் உங்கள் கனவு
மலர்ந்திடும் எம் தமிழீழம்!!!!
-நிலாதமிழ்.
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- மரண மௌனம்

- என்னை மறந்துவிடு

- ஏனோ இந்த பிரிவு

- கண்ணாமூச்சியா காதல்

- என்னவனே 2

- அச்சம் ஏனோ

- எப்படி நான் பேசிடுவேன்

- காதல் பிரிவு

- நீ நான்

- என்னவனே 1

- என்னை விடு

- என் செல்ல நாய்க்குட்டியே

- பித்து எனக்குப் பிடித்து

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- தோழனே…

- என்னவனே

- நட பிணமாய் இன்றும்

- முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
பிரபல வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார் என்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரபல வெளிநட்டு தமிழ் வியாபாரியின் கருத்துக்கள் பல்வேறு பட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன .
தமிழீழ விடுதலை புலிகள் ஆயுத ,அரசியல் ரீதியாக வீழ்த்த பட்ட பின்னர் ,தற்போது அந்த வெற்றிடம் தொடர்ந்தும் நீள்கிறது .
தமிழீழ விடுதலை புலிகளிகள் அமைப்பானது ,ஒழுக்கம் கட்டுகோப்பான தனித்துவமானஅமைப்பாகும் . அவர்களது சிந்தனை வடிவத்திற்குள் ,இன்றுள்ள தமிழ் அரசியல் கட்சிகளினால் பயணிக்க முடியவில்லை .
வலையில் சிக்கிய முதலைகள்
இலங்கை வீசிய வலையில் பெரும் முதலைகள் சிக்கி விட்டன .,இவற்றுக்கு பிரதான தமிழ்கட்சிகளும் ஆகும் .
தமிழ் தேசிய அரசியல் பாதையை மறந்து ,தமது தனி குடும்ப நலன் வளர்ச்சியில் கட்சிகள் மிளிர்கின்றன.
தமிழ் தேசியம் என பேசும் இதே காட்சிகள் ,தேர்தல் வரும் பொழுது மட்டும் வீதி இறங்கும் நிலையும் ,அவ்வப்போது வெடி கொளுத்துவதுமாக உள்ளனர் என்கின்ற குற்ற சாட்டை கந்தையா பாசுக்கரன் தெரிவித்துள்ளார் .
மக்களின் அரசியல் அபிலாசைகளை மறந்து பயணிப்பதாகவும் ,இவர்களின் ஒன்று படுத்தும் ஒருமை கிழிந்ததினால் , இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ,தொழில் அதிபரும் ,சிறந்த வியாபாரியாக விளங்கி வரும் கந்தையா பாசுக்கரன் தெரிவித்துள்ளார் .
மிக முக்கிய தொழில் அதிபராக காணப்படுவதுடன், இலங்கையில் பாதிக்க பட மக்களுக்கும் உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளார் .
பதில் இன்றி தடுமாறும் காட்சிகள்
பிரபல வியாபரியின் இந்த அதிரடி நேர்கோட்டு சில கேள்விகளுக்கு பதில் இன்றி பல கட்சிகள் தடுமாறுகின்றன .
மேலும் இவர் தமிழ் கட்சி ஒன்றில் இணைந்து ,அரசியலில் போட்டியிட போவதாக தனது ஆசையை மறைமுகமாக வெளிக்காட்டியுள்ளார் .
புதிய இளம் அரசியல் வாதிகள் நுழைய வேண்டும் எனவும் ,அப்பொழுது தான் ,இலங்கை தமிழ் அரசியல் முதிர் நிலை பெறுவதுடன் ,புதிய பாதை நோக்கி பரிணமிக்க முடியும் என்கிறார் .
இவரது கருத்து என்னவோ நேரடி பார்வைக்கு சரியானதாக பார்வைக்கு காணப்டுகிறது .
ஆனால் களத்தில் ,நிலத்தில் மிக பெரும் முதலீட்டை செய்துள்ள இந்த தொழில் அதிபரின் சொத்துக்களுக்கு ,இலங்கை அரசு கெடுதல் விளைவிக்காது பார்த்து கொள்ள வேண்டும் .
அப்படி என்றால் இவரால் எப்படி தமிழ் தேசிய பரப்பில் ,நேரடியாக புலிகள் பாணியில் ,தேசிய அசரசியல் சமன் நிலை பெறும் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
ஆக மொத்தம் குளம் கலக்க படுகிறது ,குட்டையில் மீன் பிடிக்க பட போகிறது .சிக்கப்பபோவது மீன் குஞ்சுகளா ,….? அல்லது ..எதுவென்ற கேள்வியோட களம் நகர்கிறது .
ஊது பத்திக்கும் ..ஊந்துகணைக்கும் …வாசம் இரண்டாம் ..என…நாம் பேசிய சில அரசியல் தலைகள் இப்படி ஆட்டுகின்றன .- வன்னி மைந்தன் –
Featured
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ள செயல் இலங்கை அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவை தருவிக்க ,சாராய கடை நடத்துவதற்கான அனுமதி பாத்திரத்தை கோரியுளளார் .
அவரது கொறிக்கியை ஏற்றுக்கொண்ட ஆளும் அரசு ,அவருக்கு இரண்டு அனுமதி பத்திரங்கள் வழங்கி உள்ளதாம் .
அதனை இரண்டு கோடிக்கு அந்த தமிழ் அரசியல்வாதி ,சாராய கடை வார்த்தர்களிற்கு விற்பனை செய்துள்ளார் .
விலை போகும் தமிழ் அரசியல்வாதிகள்
மேற்படி சாராயக் கடை நடத்துவதற்கான அனுமதி பத்திரம் இரண்டு கோடிக்கு பெற்று கொண்டவர்கள் ,புத்த பிக்குவிடம் சிக்கிய நிலையில் ,அது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் காதுக்கு எட்டியுள்ளது .
அவர் அதனை உடைத்து வெளியிட்ட நிலையில் ,ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
காற்றில் பறந்த தமிழ் உரிமைகள்
தமிழர் உரிமைக்கு குரல் கொடுப்பதாக பேசி கொள்ளும் ,தமிழ் அரசியல்வாதிகள் ,தமது குடும்ப பொருளாதாரத்தில் , நலனில் அக்கறை செலுத்தி ,மக்களை ஏமாற்றி பிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை மேற்படி விடயம் காண்பிக்கிறது .
கட்டி கொடுப்பதும் ,கூட்டி கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ள சில தமிழ் எம்பிக்கள் செய்திடும் இவ்விதமான ,இழி செயல்கள் ஊடாக அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிநிலை ஏற்படுவதாக சுட்டி காட்ட படுகிறது .
எவர் எப்படி போனால் நமக்கு என்ன பணம் வந்தால் சரி மாப்புள்ள ,நீங்க சாராய கடையை திறவுங்கள் .
குடி மகன்கள் குடித்து விட்டு ,உங்களுத்தான் குடி மகன்கள் குத்துக்கரணம் அடித்து ஒட்டு போடுவார்கள் சாமியோ .
Featured
தமிழ் சினிமாவில் தடம் பதித்த இலங்கை பாடகர்
தமிழ் சினிமாவில் தடம் பதித்த இலங்கை பாடகர்
தெரணவில் உருவான பிரபல நட்சத்திரம், சமீபத்தில், நாட்டின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றுள்ளார்.
தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 8 இல் பங்கேற்று மிகவும் பிரபலமான பாடகர் ரவி ரோய்ஸ்டரின் பாடல் இந்தியாவில் ஒரு திரைப்படத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
“பஸ்ஸ” என்ற சிங்கள பாடலைக் கேட்கும் போது, புதிய தலைமுறை பிரபல பாடகர்களான ரவி ரோய்ஸ்டர் மற்றும் திமிதிரியே நினைவுக்கு வருவார்கள்.
இந்தப் பாடலை யூடியூப்பில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
அதன்படி இலங்கையில் அதீத வரவேற்பை பெற்ற பாடல் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.
அதாவது பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் சமீபத்திய “ரோமியோ” திரைப்படத்தின் பாடல்களில் ஒன்றாக இந்தப் பாடலைத் தேர்வு செய்ததன் மூலம்.
உலகப் புகழ்பெற்ற மியூசிக் பிரேண்டான திங்க் மியூசிக், இந்தியாவுடன் இணைந்து ரவி ரோய்ஸ்டரின் இந்தப் பாடலை தமிழில் ‘வெத்தல’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
பிரபல நடிகர் விஜய் ஆண்டனி பாடல் வரிகளை எழுதிய நிலையில், தமிழில் பாடும் வாய்ப்பை ரவி ரோய்ஸ்டரே பெற்றுள்ளமை சிறப்பு அம்சமாகும்.
யூடியூப்பில் வெளியான 2 நாட்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது “வெத்தல” பாடல்.
தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 8 இல் பங்கேற்றதன் மூலம் ரவி ரோய்ஸ்டர் புகழ் பெற்றார்.
அதில் 5 இறுதிப் போட்டியாளர்களுக்குள் ரவி ரோய்ஸ்டருக்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு, “ஹமாரா பனவரா” பாடல் உட்பட பல பாடல்களுடன் ரவியால் பொதுமக்களை சென்றடைய முடிந்தது, கச்சேரி மேடையில் தவிர்க்க முடியாத பாடகராக மாறினார்.
அத்துடன் டி.வி. தெரணவில் ஒளிபரப்பான சின்னத்திரை நாடகங்களின் பாடல்களுக்கும் ரவி தனது குரலில் பங்களித்தார்.
இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்
இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்
இலங்கை நீதித்துறை வரலாற்றில் இள வயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார்.
வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இவர் எதிர்வரும் முதலாம் திகதி நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 33வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்
இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண்
மதுஞ்சளா அமிர்தலிங்கம் நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வவுனியாவில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து 31 வயது மாதுரி நிரோசன் தெரிவாகியுள்ள நிலையில் வவுனியாவில் இருந்து 33 வயது மதுஞ்சளா அமிர்தலிங்கம் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ள நிலையில்,
இளவயதில் தெரிவாகிய இருவருக்கும் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.
தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது
தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது
எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக மூடிவிட்டு ஆயுதங்களினால் எதையும் அடைந்துவிட முடியும் என்ற அதீத நம்பிக்கையின் விளைவுகளே அந்தப் படிப்பினைகள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
எமது முன்னோர்கள் காத்துவந்த மரத்தின் விதைகளை நான் மறவாது காத்திருக்கிறேன். இந்த விதைகளையே எனது தாயக்கத்தில் மீண்டும் விதைப்பேன். எழுபது ஆண்டுகள் ஆக்கிரமிப்பிற்கும் அவலங்களுக்கும் மத்தியில் பாலஸ்தீன மண்ணில் இருந்து எழும் நம்பிக்கையின் குரல் இது.
தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது
இஸ்ரேல் படையினருக்கும் கமாஸ் இயக்கத்திற்கும் இடையிலான மோதல் குறித்தும் மக்களின் அவலங்கள் குறித்தும் எனது கருத்துக்களை வழங்கியமைக்கு முதலில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
1914 ஆம் ஆண்டு வரையில் ஓட்டோமோன் பேரரசின் கீழிருந்த இப் பகுதி, முதலாம் உலகப் போரில் பேரரசு வீழ்ச்சி காண, பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டு, 1948 ஆம் ஆண்டு வரை அதன் ஆட்சி நீடித்தது.
பிரித்தானியர் தமது ஆட்சிப் பகுதியை விட்டு வெளியேறிய சமயத்தில், இப்பகுதியை இரண்டாகப் பிரித்து, பாலஸ்தீன அராபியர்களுக்கென ஒரு நாடும், யூதர்களுக்கு ஒரு நாடும் தோற்றுவிப்பதற்கும், ஜெரூஸலம் நகரத்தை சர்வதேச நகரமாக மாற்றவும் ஐக்கிய நாடுகள் சபை தனது ஆதரவினைத் தெரிவித்திருந்தது.
இதனை யூதத் தலைவரகள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், அரபிய தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அன்றிலிருந்து இந்த யுத்தம் இன்று வரையில் விட்டு, விட்டு தொடர்ந்து கொண்டெயிருக்கிறது.
தற்போது நடந்து கொண்டிருக்கின்ற இந்த மோதலானது இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கான பொது மக்களை காவு கொண்டிருக்கின்றது. பலரை அங்கவீனமாக்கியுள்ளது. பல வள அழிவுகளைத் தந்து கொண்டிருக்கிறது. நீடித்த காலமாக பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால் இதுவரையில் சுமூகமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இருதரப்பினரும் சமாதானத்திற்கு வரவேண்டுமானால் சில விடயங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.
ஒன்று, பிற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பாலஸ்தீனிய அகதிகளின் நிலை பற்றியது. இவர்களுக்கான வழி என்ன? என்பது தொடர்பில் இருதரப்பினரும் இதுவரை எந்தவிதமான தீர்வுகளுக்கும் வரவில்லை. எனவே, இவ்விடயம் தொடர்பில் தீர்வு எட்டப்பட வேண்டியுள்ளது.
இரண்டாவது, மேற்கு கரையில் இஸ்ரேலினால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கள் தொடர்பான விடயம். சர்வதேச விதிகளின்படி இந்தக் குடியிருப்புக்கள் சட்டவிரோதமானவை என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை நிலைப்பாட்டினை கொண்டுள்ளது.
இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. எனவே, இந்தக் குடியிருப்புக்கள் அகற்றப்பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் தீர்வு எட்டப்பட வேண்டும்.
மூன்றாவது, ஜெருசலேம் நகரை இரண்டு தரப்பினரும் பகிர்ந்து கொள்வதா இல்லையா என்பது குறித்து இரண்டு தரப்பினரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது
நான்காவது, இஸ்ரேலைப் போன்று பாலஸ்தீனமும் தனியான சுதந்திர நாடாக கருதப்படுமா என்பது தொடர்பிலும் தீர்வு காண்ப்பட வேண்டும். மேற்படி விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் நிரந்தர தீர்வு எட்டப்பட்டு விட்டால், அங்கு நிரந்தர சமாதானத்தினை எட்டுவதற்கான சாத்தியப்பர்டுகள் அதிகம் என்றே கருதப்படுகின்றது.
நானும் எமது மக்களுக்கான நீதியான உரிமைப் போராட்டத்தினை வழிநடத்தியவன். அந்தப் போராட்டத்தில் நான் தமிழ் மக்களை மாத்த்pரம் நேசித்தவன் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் மலையக மற்றும் இஸ்லாமிய மக்களை மாத்திரமன்றி சிங்கள மக்களையும் ஆழமாக நேசித்தவன். அதுபோல உலக அரங்கில் எங்கெல்லாம் விடியலுக்கான போராட்டங்கள் நடந்தனவோ, அங்கெல்லாம் உள்ள மக்களையும் நேசித்தவன்.
பாலஸ்தீனம் 1978 இல் எமக்கு ஆயுதப் பயிற்சி தந்தது. 1984 ஆம் ஆண்டிலும் தோழர்களை அங்கு பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது பாலஸ்தீன மக்களுடன் நான் பழகியிருக்கின்றேன். அவர்களின் ஆழமான உணர்வுகளையும் விரும்பங்களையும் உணர்ந்திருக்கின்றேன்.
எமது பயிற்சியின் போது அவர்களின் போராட்டங்களிலும் நான் களத்தில் நின்று பங்குபற்றியுள்ளேன். ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கின்றேன்.
அங்கிருந்த பல்வேறு விடுதலை இயக்கங்களுடனும் பன்னாட்டு விடுதலை இயக்கங்களுடனும் பழகி இருக்கின்றேன். அவர்களது வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் அப்போது ஆராய்ந்து பார்த்திருக்கின்றேன்.
பாலஸ்தீன் போராட்ட முறைகளில் மாற்றம் ஒன்று தேவை என்பதை உணர்ந்து, அவர்களுடனும் பேசி இருக்கின்றேன்.
அதேபோன்று எமது விடுதலைப் போராட்ட முறைகளிலும் மாற்றம் தேவையென விரும்பியும் இருக்கின்றேன். பாலஸ்தீன போராட்ட அனுபங்களில் இருந்து நாம் பாடங்களை கற்க வேண்டும் என நான் அப்போதே கருதி இருக்கின்றேன்.
ஆனால் இன்று, எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக மூடிவிட்டு ஆயுதங்களினால் எதையும் அடைந்துவிட முடியும் என்ற அதீத நம்பிக்கையின் விளைவுகளே அந்தப் படிப்பினைகள்.
போராட்டம் என்பது நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்துவது, பேச வேண்டிய இடத்தில் பேசுவது, அடைய வேண்டிய இலக்கை சாத்தியமான வழிகளில் அடைவதுமேயாகும். சமாதானத்திற்கான பேச்சு என்ற போர்வையில் அழிவை நோக்கிய வன்முறை ரீதியாக தம்மை பலப்படுத்தும் கபட நோக்கத்தினையே நாம் கண்டிருக்கின்றோம்.
ஒரு கையில் ஒலிவ் மரக் கிளை, மறுகையில் ஆயுதம் இரண்டும் இருக்கின்றது. எதுவேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்கட்டும் என்று யசீர் அரபாத் விடுத்த பகிரங்க அறிவிப்பை நான் அன்று ஏற்றுக் கொண்டிருக்கின்றேன்.
சந்திரிக்கா அம்மையார் தழிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான ஒரு அற்புதமான தீர்வை முன்வைத்திருந்தார்.
அப்போது அங்கிருந்து ஒரு கவிஞனின் குரல், தந்ததை வாங்கி தலை குனிந்து கொள்வதற்கு எங்களின் தலைவன் அரபாத் அல்ல என்று உசுப்பேத்துகின்ற கவிதை வரிகளை வெளிப்படுத்தியிருந்தார்.
அதன்பின்னரான விளைவுகள் என்னவென்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். இன்று மாறிவந்திருக்கின்ற உலகத்தின் போக்கை உணர்ந்து பாலஸ்தீன மக்களின் பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட வேண்டும்.
அங்கு அமைதி நிலவ வேண்டும். மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற நிலைமை பாலஸ்தீனத்தில் மாத்திரமல்ல உலகெங்கும் நிலவ வேண்டும்.
அழிவு யுத்த காலத்தில் எமது மக்கள் உணவின்றி, நீரின்றி, மின்சாரமின்றி, போக்குவரத்தின்றி, கல்வியின்றி பல அவலங்களை சுமந்து நின்ற வேளையில், அதன் வலிகளை நேரில் கண்டு அதற்கு கரம் நீட்டி, மக்களின் துயர் துடைத்தவர்கள் நாங்கள்.
இன்று காசாவிலும் இதுவே நடத்திருக்கின்றது. அங்கு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மனிதாபிமான உதவிகளை விரைந்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.
தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது
இலங்கை – இந்திய ஒப்பந்தத்துடன் எமது போராட்ட வழிமுறைகளை மாற்றிக் கொண்டவர்கள். எமது மக்களின் பயணத்தை எங்கிருந்து தொடங்குவது என்ற தீர்மானத்தினை எடுத்திருந்தோம். 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அங்கிருந்து தொடங்குவது என்று வலியுத்தியிருந்தோம்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி இலக்கை முன்வைத்து, தேசிய நீரோட்டத்தில் கலந்து கொள்வது, பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாகவும், தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது என்ற மூன்று அம்ச நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு, எமது அரசியல் பயணத்தை நெறிப்படுத்திக் கொண்டோம்.
அழிவு யுத்த காலத்தில் நாம் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டதையும் எமது அரசியல் நிலைப்பாட்டையும் எள்ளிநகையாடிய இதர தமிழ் இயக்க கட்சிகள், இன்று நீண்ட காலம் கடந்து எமது நிலைப்பாட்டிற்கே வந்திருக்கின்றன. இதனை நான் வரவேற்கிறேன்.
ஆனால், இதில் இந்த தமிழ்க் கட்சிகளது எண்ணங்களும், சிந்தனைகளும் உண்மைத் தன்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று, அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வாருங்கள். மாறாக, நாளாந்தம் வாராந்தம் மாதாந்தம் என்று புதுப்புதுப் பிரச்சினைகளை உருவாக்கி அவற்றை கொதிநிலை பிரச்சினை ஆக்காதீர்கள். எந்தப் பிரச்சினைக்கும் கூச்சல் இடுவது தேர்தல் அரசியலேயன்றி தீர்விற்கான வழியல்ல. அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்போது, ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை எமக்குண்டு பிரச்சினைகளை தீராத பிரச்சினைகளாக்கி அதனையே தொடர்வதை விட்டு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இதர தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும் என்பதே எனது நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.
இன்றைய நிலையில் எமது ஜனாதிபதி மேன்மைதங்கிய ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களது கருத்துக்களும், செயற்பாடுகளும் எமது மக்களது பிரச்சினைகள் தொடர்பில் வெகு சாதகமாகவே முன்னிறுத்தப்பட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகளும் கிட்டத்தட்ட அந்த நிலைப்பாட்டினை ஏற்றுவருகின்றன. இந்த வாய்ப்பினை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது அபிலாசையாகும்” எனவும் தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
நீங்கள் உத்தமரா கிழிக்கும் தமிழ் பேசும் பிக்கு வீடியோ
தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்
தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்
ஒடுக்கப்படும் தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்கள். நாம் அன்றிலிருந்து “கோடா-கோ-ஹோம்”தான்..!
போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன்
“தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள்.
எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள். இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக எமக்கு தகுதி இல்லாமல் இல்லை. அவை நிச்சயமாக எமக்கு இருக்கின்றன.
ஆனால், நாம் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுள்ள எமது மக்களை விடுவிக்கவே இன்று துடிக்கிறோம்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி- அனைத்து கட்சி போராளிகள் குழு சந்திப்பு, இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் இல்லத்தில் நிகழ்ந்தது. தமிழ் முற்போக்கு
கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், காலிமுகதிடல், “அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) தூதுக்குழுவினக்கும் இடையில் எனது இல்லத்தில் நிகழ்ந்தது. இந்த சந்திப்பில்
திகாம்பரம் எம்பியும் கலந்துக்கொண்டார். அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) சார்பில், விபீதக பொத்துவகே, நிராஷான் விதானகே, மனிஷ் கலப்பத்தி, கெலும் அமரதுங்க ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் நடைபெற்ற பேச்சுகளின் போது, தொடர்ந்து தமுகூ-அகபோ இடையில் பரஸ்பர தொடர்புகளை பேணி செயற்படுவது என்று முடிவானது. மலையக மக்கள், இலங்கை தேசிய தளத்தில் உள்வாங்கப்படுவது தொடர்பான, தமுகூ யின் மலையக அபிலாஷை ஆவணமும் அனைத்து கட்சி போராளிகளுக்கு வழங்கப்பட்டது.
இவர்களிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான் எடுத்து கூறியது, “தம்பி, நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆக வேண்டும் என துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை
ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள்”
“தமிழர்களாகிய எங்களுக்கு இந்த உணவு இல்லை, மின்சாரம் இல்லை,.. என்பவை பழகிப்போன பிரச்சினைகள். போர் காலத்தில் பல்லாண்டுகளாக தமிழ் மக்கள் இப்படி
வாழ்ந்தார்கள். மலை நாட்டில் போர் இல்லாமலேயே நம் மக்கள் தோட்ட சிறைகளுக்குள் இப்படிதான் வாழ்கிறார்கள்.”
தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்
“கலவர காலங்களில் எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆகவே இவை எமக்கு சகஜம். ஆகவே புதிய இலங்கையை உருவாக்குவோம். இவை அனைத்திற்கும் தீர்வு தேடுவோம். மாற்றத்தை கொண்டு வர சொல்லிவிட்டு, நீங்கள்
ஓரமாய் ஒதுங்கி நிற்காதீர்கள். அந்த தேடலில் நீங்களும் நேரடியாக பங்களியுங்கள். அந்த தீர்வு உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கு அப்பால் இருக்க வேண்டும்.”
“மலையக தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோட்டங்களில் பின்தங்கி வாழ்கின்றனர். அவர்களை தேசிய தளத்தில் உள்வாங்க அரசு இயந்திரத்தில் பெரும் தயக்கம் காணப்படுகிறது. அதை நாம் முறியடிப்போம். நீங்களும் உதவ வேண்டும்.”
இவற்றுக்கு, அனைத்து கட்சி போராளிகள் (அகபோ)
சார்பில் பதிலளித்த பேச்சாளர் கெலும் அமரதுங்க கூறியதாவது,
“நாம் உங்களை தேடி வந்து சந்தித்தமைக்கு காரணம் உண்டு. ஏனைய தமிழ்,
முஸ்லிம் கட்சிகளையும், ஜனநாயக கட்சிகளையும் நாம் சந்திக்கிறோம்.
இன்று விலகி போக இருந்த கோதாபய ராஜபக்ச,
ரணில் விகிரமசிங்கவின் உள்நுழைவால் கொஞ்சம் மூச்சு வாங்குகிறார்.
நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நீங்கள் கூறுவது போன்று,
உணவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு அப்பால் ஆனது. அதில் நாம் இந்நாட்டின் அனைத்து இன,
மத மக்களுடன் பயணிக்க விரும்புகிறோம். நாம் பலரை சந்தித்தோம்.
மாற்றத்துக்காக எம்மை நேரடியாக பங்களிக்கும்படி இதுவரை யாரும் கூறவில்லை.
நீங்கள்தான் திறந்த மனதுடன் அதை கூறுகிறீர்கள். உங்களுடன் தொடர்புகளை பேண விரும்புகிறோம்.
மலையக தமிழ் மக்களையும் நாம் சரிசமமாக கவனத்தில் எடுப்போம்.”
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின்
மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது தி சேஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி, தற்போது தனது நண்பர்களுடன்
கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள ரைசா வித்யாசமான உடையில் கோவில் வலம் வரும் புகைப்படங்களை
சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
ரஜினிகாந்த்-அஜித்தை சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “மங்காத்தா” திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மங்காத்தா 2-ஆம் பாகம்
எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
இதைத்தொடர்ந்து, அண்மையில் அஜித்குமார் குடும்பமும், மங்காத்தா தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் குடும்பமும் சந்தித்துக் கொண்ட பொழுது
எடுத்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலானது. இந்த சந்திப்பானது மங்காத்தாவின் 2-ஆம் பாகம் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் ரஜினி, அஜித் சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் குறித்து அவர்களின்
கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த சந்திப்பானது உண்மையல்ல என்றும் ரஜினியை அஜித் சந்தித்தால் எப்படி
இருக்கும் என்று ரசிகர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக மக்கள் போராட்டம்
தமிழ் அரசியல்வாதிகளையும் ‘கர்மா விடாது’ என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான போராட்டம், நேற்றையதினத்தோடு 1919 நாளை எட்டியுளளது.
இதனையொட்டி, நேற்று (23) இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்கள், வடக்கு- கிழக்கில் இராணுவத்தை அகற்றுமாறுஇ சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்ததால் , இலங்கை பொருளாதாரத்தின் 15 சதவீத செலவீனம் இதுவாகும்.
இது தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையாகும். இதனைத்தெடர்நது மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் இந்த கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
‘ஐ நா கூட்டத்தொடருக்கு முன்பு இலங்கைக்கு உதவிகள் வழங்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் வலுவான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள்,
சிவில்அமைப்புக்கள் முன்வைக்கவேண்டும். இல்லாவிடில், கர்மா அனைவரையும் பாதிக்கும்.
‘சிங்கள அரசியல் வாதிகள் பதவிக்கு வந்ததும் இனவாதிகளாக பேசுவார்கள். இதுதான்
74 வருட தமிழர்களின் வரலாறு. நல்லிணக்கம் மற்றும் தெற்கு அரசியல் பற்றிபேசும் தமிழ் அரசியல்வாதிகள் இனப் படுகொலைக்கான
நீதியை பெறமுடியாது’ என்றனர்.
இவளுடன் வாழ விடு ..!
இவளுடன் வாழ விடு ..!
காத்திருந்தேன் நேற்று வரை
காணவில்லை நீ மயிலே
கண் விழித்து நானெழுந்தேன்
கண்ணெதிரே நீ குயிலே
முந்தினத்து கற்பனைகள்
முத்த மழை பொலிந்து விட
வெட்கத்தில நீ தவித்தாய்
வேர்வையில உடல் குளித்தாய்
பக்கத்தில நீ இருக்க
பகலிரவு தெரியவில்லை
சொர்க்க மதாய் நீ விளங்க
சோகமதை காணவில்லை
இறக்கும் வரை உன்னுடனே
இதயமே இருக்க வேண்டும்
இத்தனை நாள் வேண்டுதலை
இறைவா நீ தர வேண்டும் ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-05-2022
இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!
இராவணன் வருகிறான் ஓடிவிடு ..!
வீழ்ந்தவர்கள் நாமென்று
விலாசம் தந்தவர்கள்
வீழ்கின்ற காலமிது
வீசுது காற்று நன்று
உலகோடி தினம் அன்று
ஊதி திரிந்தவர்கள்
ஊர் திரண்டு விரட்டும் காலம்
ஊடகத்தில் தினம் இன்று
நடித்து வெடித்து
நகைச்சுவை குழைத்து
கழித்து திரிந்தார்
காலடியில் கல்லடி
படித்து முடித்தார்
பக்குவம் தொலைத்தார்
மன்றில் ஏறி
மறைகழண்று வீழ்ந்தார்
அடித்து பிடித்து
ஆட்சி அமைத்தார்
அந்தோ பார் – இன்று
ஆட்சி கவிழ்கிறது
வென்றவர் தாமென்று
வெறியோடு அலைந்தால்
காற்சட்டை கிழியும்
கல்லறை அழைக்கும்
விதைக்கும் முன் விதையின்
விளைச்சல் தெரிந்தால்
வாழ்வு செழிக்கும்
வழியெங்கும் மணம் வீசும்
இன்று பார்த்தாயா
இராவணன் வருகிறான்
துட்டகை முணுக்களே
தூரே ஓடிவிடும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-04-2022
வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?
வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?
இலங்கையில் ஆளும் இனவாத அரசன் மகிந்தா ராஜபக்ச குடும்ப ஆட்சி அழிவின் விளிம்பில் சிக்கி தவிக்கிறது
சுருங்க சொல்லபோனால் முற்று புள்ளி வைக்க பட்டுள்ளது
அந்த கட்சிகள் இலங்கையை மீளவும் பங்கு போட்டு ஆள முடியாத நிலை
தோற்றம் பெற்றுள்ளது வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளை பிரித்து இனவாதம்
ஏறி ஊளை இட்டவர்கள் இன்று ஊழியில் ஆடும் நிலையில் சிக்கியுள்ளனர்
சிங்கள மக்களே தமக்கு போதும் எனவும் ,முசுலீம் ,தமிழர்களை ,ஓரங்கட்டி
அதர்மத்தில் ஆடியது ,தொலை தூர அரசியல் பார்வை இல்லாது தம்பட்டம் அடித்தது
அதுவே இன்று வீழ்ந்து அழியும் நிலைக்கு வித்திட்டுள்ளது ,தற்போது புதிய
அரசு ஒன்று உதயமாக உள்ளது ,இந்த ஆட்சியின் அமர்விலும் ,தமிழர் தரப்பு பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும் ,
இங்கே தமிழர் வாக்குகள் பெரும் இடம் பிடிக்கும் ,இம்முறை தமிழர்கள் மகிந்தாவால் பிரிக்க பட்ட வடக்கு கிழக்கை இணைத்து ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண முனையலாம்,
அதற்கு அணைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டிய
தேவை உள்ளது,தமிழ் காட்சிகள் தமக்குள்ள உள்ள உள் கட்சி மோதல்களை தவிர்த்து ஒன்று பட்டு செயலாற்ற வேண்டும்
அவ்வாறு தவறின் இழந்த உரிமைகள் மீள எம்மால் மீள் எப்பொழுதும் பெற்று
கொள்ள முடியாத நிலை ஏற்படுவதுடன் ,சிங்கள மக்கள் கொதிப்பை போன்று தமிழர் எம்பிக்கள் வீடுகள் முற்றுகை இட படும் நிலையும் ஏற்படலாம்
வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?
எனேவ இந்த கால நிகழ்வுகளை ஒரு பாடமாக எடுத்து, தமிழ் கட்சிகள் வடக்கு கிழக்கை இணைக்க முயலவேண்டும்
இணைந்து ஒன்றுபட்ட தமது ஆதரவையும் ,சிங்கள அரசுடன் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்
மகிந்த குடும்பத்திற்கு எதிரான எதிரி அலை தனி சிங்கள மக்கள் , வாக்கு வங்கியாக சிலவேளை மாற்ற பெறலாம் ,
ஆனலும் வருகின்ற ஆட்சியாலும் உடனடியாக விரிவான முறையில் வீழ்ந்து போன பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்றால் அது சாத்தியமல்ல
மீளவும் மகிந்த குடும்பத்தாரை போல அவர்கள் ஆட்சியும் மிக மோசமாக கவிழ்க்க படலாம் ,ஆகையால் ஆள வரும் ஆட்சியின்
துறை சார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் முக்கிய துறைகளை ஆட்சி செலுத்தும் பொழுதே நாடு மீள நிலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திடும் அச்சம் இல்லாத நாடாக
இலங்கை மாற்றம் பெறும் பொழுதே வீழ்ந்த பொருளாதாரம் மீள எழுந்திடும் நிலை ஏற்படும்
வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?
இதில் வெளிநாட்டு தமிழர்கள் பங்களிப்பு காத்திரமாக அமையும் ,எனவே
கூட்டமைப்பிற்குள் உள்ள பிளவுகளை உடனே சரி செய்து ,அனைத்து தமிழ்
கட்சிகளை ஒன்றிணைத்து செல்ல வேண்டிய கால தேவை எழுந்துள்ளது
அவசரமும் ,அவசியமான இந்த செயல் நோக்கி தமிழர் கட்சிகள் செல்லட்டும்,வரலாற்றை புதியதாக எழுதும் காலத்தை உருவாக்குங்கள்
தமிழினம் அதை எதிர் பார்க்கிறது ..விட்டு கொடுப்பதால் எவரும் கெட்டு போவதில்லை !
எதிரி வீழ்ந்து கிடைக்கும் பொழுது அதில் ஏறி நாம் சவாரி செய்து எமது எதிர்
காலத்தை எதிரிகளிடம் இருந்தே எடுத்து செல்ல வேண்டும்
மனம் மாற்றம் இங்கே மன்றில் ஏற்படும் ,ஒன்று பட்டால் தமிழருக்கு வாழ்வு உண்டு
,சிந்திக்குமா நம்ம கட்டெறும்பு தமிழர் கட்சிகள் ..?
- வன்னி -மைந்தன்
கத்திகள் எழுகிறது …!
கத்திகள் எழுகிறது …!
வன்னி மைந்தன் கவிதைகள்
திண்ணையில உட்க்கார்ந்து
தீங்குரைக்கும் நெஞ்சுகளே
குஞ்சுகளை காணாது
குருவிகள் அலைகிறதாம்
பஞ்சு வெடிக்கின்ற
பங்குனி வெய்யிலில்
கஞ்சிக்கு வழியில்லா
கால்கள் நடக்கிறதாம்
இதயம் இருக்கென்று
இன்றமர்ந்து பேசும்
கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்
கேடில்லை தான்
கேட்பாரும் இல்லைத்தான்
நாட்டை தின்றுவிட்டு
நம் வயிற்றில் அடித்தீரே
கோடிகளில் கொஞ்சத்தை
கொட்டி கொடுங்கள்
பாவ சுமையில்
பாதி கழுவட்டும்
ஆளை கொன்று
அரியணை பிடித்தீர்
அம் மக்கள் விழித்தார்
ஆட்சி துறப்பீர்
கஞ்சா காடழிக்க
கத்திகள் எழுகிறது
நாடு சுத்தமிட
நல்புரட்சி வெடிக்கிறது …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 31-03-2022
பெண் உலாவும் இரவு வரும் ..!
பெண் உலாவும் இரவு வரும் ..!
ஆமி பொலிஸ் வீதியில
அன்றாடம் நிற்கையில
வாள் வெட்டு நடக்குதாம்
வம்புகள் வெடிக்குதாம்
தலை பா கட்டிகளும்
தலை தெறிக்க ஓடுதாம்
வெள்ளை வெட்டிகளோ
வெறியோடு சிரிக்குதாம்
குண்டி விழும் காற்சட்டை
குமரிகள் முன் விழ
பொக்கை வாய் பாட்டிகளும்
பொல்லெறிந்து சிரிக்குதாம்
தன் பதவி தான் காக்க
தமிழருக்குள் சில்லறைகள்
நேர்ந்து விட்டதுகள்
நெடுகிலும் ஆக்கினைகள்
குடல் பிடுங்கி வெளி எறிந்து
குரல் ஒடுங்கி சாகடிக்க
ஆள் இல்லா நிலையின்றோ
அதனாலோ ஆடுகிறார்
விடிகின்ற ஆதவனின்
விடியலின் ஒளியிலே
காவாலி கரை சேரும்
கால் தடம் மாறும்
இரவு வெளிச்சத்தில்
இளம் மாது உலாவும்
காலம் அது மலரும்
கரிகாலன் வருவான் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-03-2022



































