Tag: பாடகர்
வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார்
வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார்
வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார் ,வாழ்ந்து கொண்டிருக்க கூடிய என் அன்பு நிறைந்த தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நான் உங்கள் பாவேந்தர் இளங்கோவன் பேசுகிறேன் .
என்னுடைய பிறந்தநாள் என்று வாழ்த்து தெரிவித்து உங்கள் அத்தனை பேருக்கும் என் அன்பும் நன்றியும் அதுமட்டுமில்லாமல் இந்த குறுஞ்செய்தியில் நான் ஒருவருக்கு நன்றி சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன் .
கந்தகக் காடு எனும் ஒப்பற்ற பாடலை எழுதிய வன்னி மைந்தன்
கந்தகக் காடு எனும் ஒப்பற்ற பாடலை எழுதி அதை என் நாவின் மூலம் இவ்வுலகரியச் செய்து என் அன்பு நிறைந்த அண்ணன் திரு வண்ணி மைந்தன் அவர்களுக்கு தான் இந்த இடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .
ஏன் அப்படின்னா நான் கந்தக காட்சிகளைப் பாடுவதற்கு முன்னாடி எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிற ஏராளமான பாடல்கள் மட்டும்தான் என்னை உலகிற்கு ஒரு இசைக் கலைஞராக ஒரு பாடகளாவது அறிமுகப்படுத்தியது.
அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை அதற்கு என் அண்ணன் பண்ணி மைந்தன் அவர்களுக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
அந்தப் பாடலுக்குப் பிறகு அவர் எடுத்துக் கொண்ட ஒரு அளப்பெரிய முயற்சி உண்மையிலேயே போற்றுதற்குரியது அந்த பாடல் வழியாக ஒரு இரண்டு மாதங்கள் இருப்போம் அந்தப் பாடலுக்கு பின்னாடி அண்ணன் வண்டி மைந்தன் அவர்கள் உருவாக்கிய ஏராளமான பாடல் ஆசிரியர்கள் இருக்காங்க .
ஏராளமான பாடல் தயாரிப்பாளர்|பாடலாசிரியர்களை உருவாககிய வன்னி மைந்தன்
ஏராளமான பாடல் தயாரிப்பாளர்களுக்காக அவர்கள் எல்லாம் உருவாவதற்கு முக்கிய காரணம் என்னவென்று அவர்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை .
பொதுவாக அத்தனை பேரும் ஒருங்கிணைச்சு செயல்படுவது அப்படிங்கறது அவ்வளவு எளிதான ஒரு விடயம் இல்லை .
அதுலயும் பாடல் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது அப்படிங்கறது அவ்ளோ சுலபல்ல .
பாடல் ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்தி அத்தனை பாடல் தயாரிப்பாளர்களையும் அறிமுகப்படுத்தி அவர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து அவர்களை ஊக்குவித்து அவர் அவருடைய எதிரி இணையம் மூலம் அவர் செய்து கொண்டிருக்கக்
கூடிய மகத்தான பணிக்கு என்னுடைய ஆதரவும் என் அப்பா இளங்கோ செல்லப்பா தாத்தா தேனிசை செல்லப்பா அவர்களுடைய ஆதரவும் என்றைக்கும் அந்த வன்னி மைந்தன் அவர்களுக்கு நிச்சயம் இருக்கும் .
அண்ணன் வன்னி மைந்தன் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து பாடல் ஆசிரியர்கள் மற்றும் பாடல் தயாரிப்பாளர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துக்கள் .
ஆதரவும் அன்பும் மற்றும் உலகத் தமிழர்களாகிய நீங்கள் சமீப காலங்களில் வெளிவந்து என்னுடைய பாடல்களுக்கு எல்லாம் ஏராளமான அன்பையும் ஆதரவையும் அள்ளிக் கொடுத்து உங்கள் அத்தனை பேரையும் என் மனதில் வைத்து நன்றியோடு நின்று கொண்டிருக்கிறேன்.
என்பதை எந்த விதமான சந்தேகமும் இல்லை இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து பாடல்கள் வெளியாக உள்ளன என் அன்பு நிறைந்த உறவுகளாகிய நீங்கள் அப்பாடல்களை எல்லாம் கேட்டு அதை பகிர்ந்து உங்களின் பேராதரவை தந்தீர்கள் .
என் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பேரன்பு மிக்க அத்தனை உறவுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றி விரைவில் சந்திக்கிறேன் அடுத்த பாடல் ஓடு நன்றி வணக்கம்
இவ்வாறு பாடகர் தேனிசை செல்லப்பாவின் பேரன் பாவேந்தன் இளங்கோ செல்லப்பா அவர்கள் தெரிவித்துள்ளார் .
காணொளியை பார்க்க இதில் அழுத்துங்கள்
பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்
பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்
பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார் ,இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார் என்பதை அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இறக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும்.
இலங்கையின் பைலா இசைத் துறையில் மிகவும் முக்கியமான ஒருவராக சமன் டி சில்வா திகழ்ந்தவர்.
1975இல் தனது இசை வாழ்க்கையை ஆரம்பித்த இவர், கடந்த 4 தசாப்தங்களுக்கும் மேலாக தனது ரசிகர்களுக்காக சிறந்த பாடல்களை பாடி வந்துள்ளார்.
இலங்கை இசையை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு சென்று, உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்துவதில் தனது வாழ்க்கையை கழித்துள்ளார்.
அவர் கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாடகர் இலங்கைக்கு விஜயம்
பிரபல பாடகர் இலங்கைக்கு விஜயம்
பிரபல பாடகர் இலங்கைக்கு விஜயம் ,உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக், இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.
உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளில் இசை தரவரிசையிலும் அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களிலும் முதலிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சுகாதார துறையில் முதலீட்டுத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோமிக உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோரால் வறவேற்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தடம் பதித்த இலங்கை பாடகர்
தமிழ் சினிமாவில் தடம் பதித்த இலங்கை பாடகர்
தெரணவில் உருவான பிரபல நட்சத்திரம், சமீபத்தில், நாட்டின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றுள்ளார்.
தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 8 இல் பங்கேற்று மிகவும் பிரபலமான பாடகர் ரவி ரோய்ஸ்டரின் பாடல் இந்தியாவில் ஒரு திரைப்படத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
“பஸ்ஸ” என்ற சிங்கள பாடலைக் கேட்கும் போது, புதிய தலைமுறை பிரபல பாடகர்களான ரவி ரோய்ஸ்டர் மற்றும் திமிதிரியே நினைவுக்கு வருவார்கள்.
இந்தப் பாடலை யூடியூப்பில் 90 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
அதன்படி இலங்கையில் அதீத வரவேற்பை பெற்ற பாடல் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.
அதாவது பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் சமீபத்திய “ரோமியோ” திரைப்படத்தின் பாடல்களில் ஒன்றாக இந்தப் பாடலைத் தேர்வு செய்ததன் மூலம்.
உலகப் புகழ்பெற்ற மியூசிக் பிரேண்டான திங்க் மியூசிக், இந்தியாவுடன் இணைந்து ரவி ரோய்ஸ்டரின் இந்தப் பாடலை தமிழில் ‘வெத்தல’ என்ற பெயரில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
பிரபல நடிகர் விஜய் ஆண்டனி பாடல் வரிகளை எழுதிய நிலையில், தமிழில் பாடும் வாய்ப்பை ரவி ரோய்ஸ்டரே பெற்றுள்ளமை சிறப்பு அம்சமாகும்.
யூடியூப்பில் வெளியான 2 நாட்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது “வெத்தல” பாடல்.
தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 8 இல் பங்கேற்றதன் மூலம் ரவி ரோய்ஸ்டர் புகழ் பெற்றார்.
அதில் 5 இறுதிப் போட்டியாளர்களுக்குள் ரவி ரோய்ஸ்டருக்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு, “ஹமாரா பனவரா” பாடல் உட்பட பல பாடல்களுடன் ரவியால் பொதுமக்களை சென்றடைய முடிந்தது, கச்சேரி மேடையில் தவிர்க்க முடியாத பாடகராக மாறினார்.
அத்துடன் டி.வி. தெரணவில் ஒளிபரப்பான சின்னத்திரை நாடகங்களின் பாடல்களுக்கும் ரவி தனது குரலில் பங்களித்தார்.
கோட்டா எதிர்ப்பு பேரணியில் பாட்டு பாடியவர் மரணம்
கோட்டா எதிர்ப்பு பேரணியில் பாட்டு பாடியவர் மரணம்
கோட்டாவின் ஆட்சிக்கு எதிராக கலந்து கொண்டு பேரணியில் பாட்டு பாடி வந்த
ஷிராஸ் யூனுஸ் என்ற பாடகர் திடீர் மாரடைப்பால பலியாகியுள்ளார்
இந்த சம்பவம் அங்கு கூடிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
1500 பேருக்கு உணவு வழங்கிய பின்னணி பாடகர் வேல்முருகன்
1500 பேருக்கு உணவு வழங்கிய பின்னணி பாடகர் வேல்முருகன்
பின்னணி பாடகர் வேல்முருகன், அன்னையர் தினத்தை முன்னிட்டு1500 பேருக்கு உணவு வழங்கி இருக்கிறார்.
1500 பேருக்கு உணவு வழங்கிய பின்னணி பாடகர் வேல்முருகன்
பின்னணி
பாடகர் வேல் முருகன் உணவு வழங்கிய காட்சி
தமிழில்
பின்னணி பாடகராக வலம் வருபவர் வேல்முருகன். பாடகராக ரசிகர்களை
கவர்ந்த இவர் அன்னையர் தினத்தை முன்னிட்டு அயனாவரத்தில் இருக்கும் மக்கள் 1,500 பேருக்கு உணவு வழங்கி இருக்கிறார்.
இவருடன் டெப்டி செகரெட்டரி பிரகாஷ் IAS, ஐகோர்ட் செகரட்டரி மோகன்,
அடிஷனல் செகரிடி நாகப்பன் ஆகியோர் இணைந்து 1500 பேருக்கு உணவு கொடுத்திருக்கிறார்கள்.
வேல் முருகன் உணவு வழங்கிய காட்சி
அம்மா என்று சொல்லி பாருங்க… அந்த வார்த்தை கூட தெய்வமாகுங்க…
கடவுளிடம் கேட்டு பாருங்க… தாயின் கருவறையே கோயில்தானங்க…
என்ற பாடலையும் உருவாகி வெளியிட்டிருக்கிறார்.

79வது அகவை காணும் தேனிசை செல்லப்பா
79வது அகவை காணும் தேனிசை செல்லப்பா
தமிழீழ விடுதலை புலிகளது போராட்டத்திற்கு தனது தேனிசை குரலினால்
உரமேற்றி வீரம் செழிக்க வைத்த
தேனிசை செல்லப்பா அவர்கள்
21/04/2020 நாளை 79வது பிறந்த நாள் கொண்டாடுகிறார் , தடைகள் மத்தியில் பல நெருக்கடியான சூழலில் ,அயராது உழைத்த பெருமகன் ,
விடுதலைக்காய் தன்னையே அர்ப்பணித்து ,பிள்ளைகளிற்கு தமிழ் பெயர் சூட்டி வாழும் தமிழ் மைந்தன் .அவரை நாமும் இந்த இனிய நாளில் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
வாழ்த்துக்கள் ஐயா ,மேலும் நூறாண்டு வாழி வாழி என எதிரி இணையமும் நெஞ்சார வாழ்த்துகிறது

எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன் -பாடல் video
எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன் -பாடல் video
இன்னிசை பாடிவரும் பாடலை மாற்றிப் பாடும் இந்திரன் video
பாடகர் அவ்வப் போது எடுத்துக் கொள்வார் இவ்வாறான அவதாரங்கள்.
எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன்














