வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

Spread the love

வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

இலங்கையில் ஆளும் இனவாத அரசன் மகிந்தா ராஜபக்ச குடும்ப ஆட்சி அழிவின் விளிம்பில் சிக்கி தவிக்கிறது


சுருங்க சொல்லபோனால் முற்று புள்ளி வைக்க பட்டுள்ளது

அந்த கட்சிகள் இலங்கையை மீளவும் பங்கு போட்டு ஆள முடியாத நிலை

தோற்றம் பெற்றுள்ளது வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளை பிரித்து இனவாதம்

ஏறி ஊளை இட்டவர்கள் இன்று ஊழியில் ஆடும் நிலையில் சிக்கியுள்ளனர்

சிங்கள மக்களே தமக்கு போதும் எனவும் ,முசுலீம் ,தமிழர்களை ,ஓரங்கட்டி

அதர்மத்தில் ஆடியது ,தொலை தூர அரசியல் பார்வை இல்லாது தம்பட்டம் அடித்தது

அதுவே இன்று வீழ்ந்து அழியும் நிலைக்கு வித்திட்டுள்ளது ,தற்போது புதிய

அரசு ஒன்று உதயமாக உள்ளது ,இந்த ஆட்சியின் அமர்விலும் ,தமிழர் தரப்பு பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும் ,

இங்கே தமிழர் வாக்குகள் பெரும் இடம் பிடிக்கும் ,இம்முறை தமிழர்கள் மகிந்தாவால் பிரிக்க பட்ட வடக்கு கிழக்கை இணைத்து ஒன்றிணைந்த இலங்கைக்குள் தீர்வு காண முனையலாம்,

அதற்கு அணைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டிய

தேவை உள்ளது,தமிழ் காட்சிகள் தமக்குள்ள உள்ள உள் கட்சி மோதல்களை தவிர்த்து ஒன்று பட்டு செயலாற்ற வேண்டும்

அவ்வாறு தவறின் இழந்த உரிமைகள் மீள எம்மால் மீள் எப்பொழுதும் பெற்று

கொள்ள முடியாத நிலை ஏற்படுவதுடன் ,சிங்கள மக்கள் கொதிப்பை போன்று தமிழர் எம்பிக்கள் வீடுகள் முற்றுகை இட படும் நிலையும் ஏற்படலாம்

வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

எனேவ இந்த கால நிகழ்வுகளை ஒரு பாடமாக எடுத்து, தமிழ் கட்சிகள் வடக்கு கிழக்கை இணைக்க முயலவேண்டும்

இணைந்து ஒன்றுபட்ட தமது ஆதரவையும் ,சிங்கள அரசுடன் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்

மகிந்த குடும்பத்திற்கு எதிரான எதிரி அலை தனி சிங்கள மக்கள் , வாக்கு வங்கியாக சிலவேளை மாற்ற பெறலாம் ,

ஆனலும் வருகின்ற ஆட்சியாலும் உடனடியாக விரிவான முறையில் வீழ்ந்து போன பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்றால் அது சாத்தியமல்ல

மீளவும் மகிந்த குடும்பத்தாரை போல அவர்கள் ஆட்சியும் மிக மோசமாக கவிழ்க்க படலாம் ,ஆகையால் ஆள வரும் ஆட்சியின்

துறை சார் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் முக்கிய துறைகளை ஆட்சி செலுத்தும் பொழுதே நாடு மீள நிலைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திடும் அச்சம் இல்லாத நாடாக

இலங்கை மாற்றம் பெறும் பொழுதே வீழ்ந்த பொருளாதாரம் மீள எழுந்திடும் நிலை ஏற்படும்

வடக்கு கிழக்கு இணைக்க அரிய சந்தர்ப்பம் – தயாராகுமா தமிழர் கட்சிகள் …?

இதில் வெளிநாட்டு தமிழர்கள் பங்களிப்பு காத்திரமாக அமையும் ,எனவே

கூட்டமைப்பிற்குள் உள்ள பிளவுகளை உடனே சரி செய்து ,அனைத்து தமிழ்

கட்சிகளை ஒன்றிணைத்து செல்ல வேண்டிய கால தேவை எழுந்துள்ளது

அவசரமும் ,அவசியமான இந்த செயல் நோக்கி தமிழர் கட்சிகள் செல்லட்டும்,வரலாற்றை புதியதாக எழுதும் காலத்தை உருவாக்குங்கள்

தமிழினம் அதை எதிர் பார்க்கிறது ..விட்டு கொடுப்பதால் எவரும் கெட்டு போவதில்லை !

எதிரி வீழ்ந்து கிடைக்கும் பொழுது அதில் ஏறி நாம் சவாரி செய்து எமது எதிர்

காலத்தை எதிரிகளிடம் இருந்தே எடுத்து செல்ல வேண்டும்

மனம் மாற்றம் இங்கே மன்றில் ஏற்படும் ,ஒன்று பட்டால் தமிழருக்கு வாழ்வு உண்டு

,சிந்திக்குமா நம்ம கட்டெறும்பு தமிழர் கட்சிகள் ..?

  • வன்னி -மைந்தன்

Leave a Reply