வீடுகளை திருத்த ரணில் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு, சீரற்ற காலநிலை காரணமாக சேதப்படுத்த வீடுகளை விடவும் புணர் நிர்மாணம் செய்வதற்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு இலங்கை ஆளும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களது வீடுகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருந்தன.

வெள்ளம் உள் சென்று அழிவுக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்டிருந்தனர் .

அதனை அடுத்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய இழப்புகள் வழங்குவோம் அல்லது அந்த வீடுகளை மீளவும் திருத்திக் கொடுக்கும் நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடுமையான உத்தரவுகளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையை அடுத்து தற்போது குறித்த வீடுகள் தொடர்பாக பாதிப்படைந்த வீடுகளை கண்டறிந்து அதற்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது .

தேர்தல் வருகின்ற நிலையில் மக்களை குஷி படுத்தி வாக்குகளை பெறுவதற்காக, ரணில் தற்போது அனைத்து விதமான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருவது ,தனது கட்சியை இந்த தேர்தலாக வெற்றி வாகை சூடி கட்டி எழுப்ப வேண்டும்.

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது

பொலிஸ் வண்டி வீட்டுக்குள் நுழைந்தது ,வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து நேற்று (04.06) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது.

வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப்

வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு

என்பவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள கொட்டகையில் படித்துக் கொண்டிருந்த சுமார் 40 வரையான மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.

விபத்தின் போது புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் சிவில் உடையில் வாகனத்தில் இருந்ததாக விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் பொதுமக்கள் குவிந்ததும் பொலிசார் அங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்குள் தப்பிச் சென்றுள்ளனர்.

நெடுங்கேணி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ஜீப் வண்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை

விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பொலிசார் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி

காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி திருகோணமலை – சல்லி பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன குறித்த மீனவர்களின் வீடுகளுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று (31) விஜயம் செய்தார்.

கடந்த 20.5.2024 சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர் .

குறித்த மீனவர்கள் வட்டாரம்_ 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் வயது (45 ),முருகையா சுஜந்தன் வயது( 22) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இது வரையில் கிடைக்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் காணாமல் போன மீனவர்களுடன் சந்தித்து கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு ,ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவலகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும், வீட்டின் படுக்கையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனிமையில் வசித்த பெண் கொலை

விசாரணையில் குறித்த பெண் வீட்டில் தனியாக இருப்பதும், கணவர் வேலை நிமித்தமாக வௌியே சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக தனிமையில் வசித்து வரும் பெண்கள் பலர் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

தொடரும் இவ்வாறான மர்ம கொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .

14000 வீடுகளுக்கு இலவச சூரிய ஔி மின்சாரம்
Posted in இலங்கை செய்திகள்

நடுத்தர வருமானமுள்ள மக்களுக்கு 3500 வீடுகள்

நடுத்தர வருமானமுள்ள மக்களுக்கு 3500 வீடுகள்

இந்த வருடம் 2024இல் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இவற்றில் கிட்டத்தட்ட 6,500 வீடுகள் கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களை மீள்குடியேற்றுவதற்காக கட்டப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக 11 வீட்டுத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 06 வீடமைப்புத் திட்டங்கள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக 552 மில்லியன் சீன யுவான் (இலங்கை மதிப்பில் 22 பில்லியன் ரூபாய்) உதவியாகப் பெறப்படும்.

கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1996 ஆகும். இதன் நிர்மாணப் பணிகள் வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எஞ்சிய 4,500 வீடுகள் அப்பிள் வத்த கொழம்பகே மாவத்தை, பெர்கியூசன் வீதி, ஸ்டேடியம் கம, ஒபேசேகரபுர மற்றும் மாதம்பிட்டிய ஆகிய இடங்களில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை 15,728 மில்லியன் ரூபாவாகும். இந்த திட்டம் கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

நடுத்தர வருமானமுள்ள மக்களுக்கு 3500 வீடுகள்

2010 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 50,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நகர மறுமலர்ச்சித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக இந்த உதவித் திட்டம் 2019 இல் ஆரம்பிக்கப்பட்டது.

இது ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) நிதியுதவியின் கீழ் செயல்படுகிறது. கொழும்பு நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 23 ஆகும். வீடுகளின் எண்ணிக்கை 14,611 ஆகும். 11,269 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன.

இதனால் கொழும்பு நகரின் 116 ஏக்கர் மீள் அபிவிருத்திக்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைத்துள்ளது.

அதற்கான புதிய முதலீட்டு திட்டங்கள் கண்டறியப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன தெரிவித்தார். மேலும் 3,500 வீடுகள் நடுத்தர வருமான வீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும்.

நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்காக கட்டப்படும் இந்த வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 11 ஆகும்.

இந்த 11 வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அவற்றில் சில தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அந்த நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்த ஆண்டில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வீடு திரும்பிய மின்சாரம் சம்சாரம் மகிழ்ச்சி

வீடு திரும்பிய மின்சாரம் சம்சாரம் மகிழ்ச்சி

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்து வீடு வந்ததால் சம்சாரம் மகிழ்ச்சி .

நேற்று (09) மாலை 05.10 மணியளவில் கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.

தடைப்பட்ட மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை முறையாக மீட்டெடுத்ததுடன், நேற்றிரவு 11 மணியளவில் இலங்கை மின்சார சபை நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டனர்.

வீடு திரும்பிய மின்சாரம் சம்சாரம் மகிழ்ச்சி

இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முறையான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக நேற்று மாலை நீர் விநியோகமும் தடைப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சில மணித்தியாலங்களில் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதிலும், புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின் தடை காரணமாக விக்டோரியா, பொல்கொல்ல, ரன்தெனிகல மற்றும் ரன்டேம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று பிற்பகல் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு பல சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக இதுபோன்ற மின்தடை ஏற்பட்டடிருந்தது.

வீடு திரும்பிய மின்சாரம் சம்சாரம் மகிழ்ச்சி

மேலும் 2020 ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி கெரவலப்பிட்டியவில் மின் விநியோக அமைப்பில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 06 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.

மேலும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03ஆம் திகதி கொத்மலை மற்றும் பியகம மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால்

மின்சார விநியோகம் தடைப்பட்டதுடன், அவ்வாறான மின் தடைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தனர்.

எவ்வாறாயினும் நேற்று சுமார் 6 மணித்தியாலங்கள் திடீரென மின்சாரம் தடைப்பட்டதுடன், மின்வெட்டு தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்று அத தெரணவிடம் தெரிவித்தார்.

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்

மகிந்தா நாய் குட்டி திருட்டு – விசாரணை ஆரம்பம்

மகிந்தவின் மெதமுலன வீட்டில் வசித்து வந்த மகிந்தாவின் செல்ல நாய்க்குட்டியை திருடி சென்ற


சஜித் அணியினரின் பிரதேச சபை உறுப்பினர் மீது விசாரணைகள் நடத்த பட்டு வருகின்றன

இவரே அந்த நாய்க்குட்டியை பராமரித்து வருவதாக தெரிவிக்க படுகிறது

    Posted in Uncategorized

    வீட்டுக்குள் நுழைந்த முதலை – தப்பிய குடும்பம்

    வீட்டுக்குள் நுழைந்த முதலை – தப்பிய குடும்பம்

    அமெரிக்கா புளோரிடா பகுதியில் வீடு ஒன்றுக்குள் பெரிய முதலை ஒன்று நுழைந்துள்ளது

    இந்த முதலை நுழைவை அடுத்து அங்கு நின்ற மக்கள் பதறி ஓடினர் ,பின்னர் அந்த

    முதலை விரட்ட பட்டு அருகில் உள்ள நீர் நிலைக்குள் விரட்டியடிக்க பட்டது

    முதலையின் தாக்குதல் இலக்கில் இருந்து குறித்த வீட்டார் தப்பித்தது கடவுள் செயல்


    என சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துரைத்து வருகின்றனர்

      Posted in சினிமா

      பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா

      பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா

      தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் வீடு வாங்கி இருக்கிறார்.

      பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா
      நயன்தாரா


      நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில்

      தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.

      இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில் தங்கி

      படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில், இருவரும் சென்னை போயஸ் கார்டனில் 4

      பெட்ரூம் கொண்ட வீட்டில் குடியேற இருக்கிறார்கள். இதற்காகப் பல கோடி ரூபாய் கொடுத்து இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள்.

      விக்னேஷ் சிவன் – நயன்தாரா

      ஏற்கனவே போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ்,

      இயக்குனர் பாலா உள்ளிட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர். இப்போது நயன்தாரா தனது காதலருடன்

      அங்கு வசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குக் குடியேறிய பிறகு தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட இருக்கிறார்கள்

        Posted in Uncategorized

        வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு

        வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு

        வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

        ஆக்ரோஷமாக பாயும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு
        வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு
        கோட்டயம்:

        கேரளாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் ஆறுகளில் திறந்துவிடப்பட்டுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

        இந்நிலையில், கேரளாவின் கோட்டயம் மாவட்டம் முண்டகாயம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

        வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலரைக் காணவில்லை. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

          Posted in இலங்கை செய்திகள்

          முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் இராணுவத்தினரால் வீடு கையளிப்பு

          முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் இராணுவத்தினரால் கையளிப்பு

          முல்லைத்தீவு – முள்ளியவளை, புதறிகுடா கிராமத்தில் நான்கு பிள்ளைகளை கொண்ட குடும்பமொன்றுக்கு புதிதாக வீடொன்று அமைக்கப்பட்டு, நேற்று (10) இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

          சமூக செயற்பாட்டாளர் றாயன் அவர்களின் நிதி உதவியில், இராணுவத்தினருடைய கட்டுமான பங்களிப்புடன், இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

          இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட இரணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுரியபண்டார மற்றும் சமூக செயற்பாட்டாளர் றாஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

          இந்த நிகழ்வின் போது வருகை தந்த கிராமத்தவர்களுக்கு பயன்தரு மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

            Posted in இலங்கை செய்திகள்

            கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்

            கிளிநொச்சியில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த இராணுவம்

            பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர

            சில்வாவின் வழிகாட்டுதல்களுக்கமைய இலங்கை இராணுவம் கிளிநொச்சியில் தேவையுடைய மக்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

            நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அதேவேளையில் சமுதாயத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆறு வீடுகள் கட்டப்பட்டு வரும் அதேவேளை

            இந்த திட்டத்தை 66 பிரிவு பின் பொதுக்கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க இந்த திட்டத்தை மேற்பார்வையிடுவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

            இந்த திட்டத்தில் 20வது இலேசாயுத படையணி, 24வது விஜயபாஹு காலாட்படை படைப்பிரிவு, 11வது கஜாபா ரெஜிமென்ட், 20 வது விஜயபாஹு காலாட்படை படைப்பிரிவு, 5 ஆயுத தளவாட

            படைப்பிரிவு மற்றும் 2வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நன்கொடையாளர்களின் நிதியுதவியுடன் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன

              Posted in இலங்கை செய்திகள்

              மூவாயிரம் வீடுகளை அமைக்கும் கோட்டா அரசு

              மூவாயிரம் வீடுகளை அமைக்கும் கோட்டா அரசு

              கொட்டாவை – மாகும்புர பிரதேசத்தில் 314 வீடுகளைக் கொண்ட மாடிவீட்டுத் தொகுதி நடுத்தர வர்க்கத்தினருக்காக ஐயாயிரம் மாடிவீட்டுத் தொகுதிகளை அமைக்கும் அரசாங்கத்தின்

              வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

              இதன் முதல் கட்டமாக மூவாயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

              இதற்காக 40 பில்லியன் ரூபா செலவிடப்படும். மாக்கும்புர பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தின் அதிவேக

              நுழைவுப் பகுதிக்கும் ஹைலெவல் பாதைக்கும் அருகில் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

              கொழும்பு ஒன்று முதல் 15 வரையான கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 68 ஆயிரத்து 894 குடிசைகள் அமைந்துள்ளன.

              இவற்றில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களை புதிய வீடுகளில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2022ஆம்

              ஆண்டு ஜனவரி ஏழாம் திகதிக்குள் மூவாயிரம் வீடுகளை அமைக்க அமைச்சு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

              வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

              அடைமழையும், கடும் காற்றும் ஏற்படுத்திய விளைவுகளால் நேற்றிரவு

              பொலன்னறுவை வெலிக்கந்த பிரதேசத்தில் 21 வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளன.

              இதன் காரணமாக, 100 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக

              மாவட்ட இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவர்களுக்கு

              மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக்கு அமைய, நிவாரணங்களை

              வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட இடர்காப்பு நிலையத்தின்

              உதவிப் பணிப்பாளர் உப்புல் நாணயக்கார தெரிவித்தார்.

              வெலிக்கந்தையில் 21 வீடுகளை
              வெலிக்கந்தையில் 21 வீடுகளை
                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

                  இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

                  இலங்கையில் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை

                  பெற்று வந்தவர்களில் 104 பேர் அந்த நோயில் இருந்து முற்றாக விடுபட்டு

                  அவர் தம் குடும்ப உறவுகளுடன் மீள இணைந்துள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது

                  உலகில் தலை சிறந்த சேவையை தமது மருத்துவம் செய்து வருவதாக

                  இவர்கள் புகழாரம் சூடியுள்ளனர் .இவை தேர்தலை இலக்கு வைத்து இவ்விதமான

                  பரப்புரைகள் மெல்ல கசிய விட படுகிறது என்பதே யதார்த்த நிலையாக உள்ளது

                  இலங்கையில் கொரனோ
                  இலங்கையில் கொரனோ
                  Posted in கனடா செய்திகள் குற்ற செய்திகள்

                  கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்

                  கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்

                  கனடாவில் வியாழக்கிழமை
                  Vaughan பகுதியில் வீடொன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது .

                  குறித்த தீவிபத்து தொடர்பில் அயலவர்கள் அவசர சேவை பிரிவுக்கும்

                  அறிவித்த , நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

                  அவ்வேளை அங்கே தீயில் கருகி நிலையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் மீட்க பட்டார் ,மேலும் பெண் ஒருவர் பலமான

                  எரிகாயங்கள்,அடி காயங்களுடன் மீட்க பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டார்

                  இவர்கள் மீது தாக்குதலை நடத்தி,வீட்டோடு எரித்து விட்டு நபர் தப்பி ஓடி விட்டார் ,தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                  வீட்டோடு இவர்களை எரித்த செயல் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                  மேலும் கனடா செய்திகள் தினம் படிக்க இதில் அழுத்துங்கள்

                  கனடாவில் தம்பதியை
                  கனடாவில் தம்பதியை
                  Posted in சினிமா

                  நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்

                  நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்

                  பிரபல இந்தி நடிகை வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள்.

                  இந்தி நடிகையின் குடியிருப்புக்கு சீல் வைத்த அதிகாரிகள்
                  அங்கிதா லோகந்தே


                  பிரபல இந்தி நடிகை வசிகங்கனா ரனாவத் நடித்த ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை வரலாற்று படமான மணிகர்னிகாவில்,

                  ஜால்காரிபாய் எனும் போராளி வேடத்தில் நடித்தவர் நடிகை அங்கிதா லோகந்தே. டைகர் ஷெரப்பின் பாகி 3 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

                  மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அங்கிதா வசித்து வருகிறார். அந்த குடியிருப்பில் உள்ள ஒருவருக்கு கொரோனா

                  நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டிற்கு சென்று திரும்பியதால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

                  இதையடுத்து அவருக்கு தனிமை வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வரும் அதிகாரிகள், அங்கிதா வசித்து வரும் அடுக்குமாடி

                  குடியிருப்பை தனிமைப்படுத்தி சீல் வைத்துள்ளனர். மேலும், அந்த அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வரும் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

                  நடிகையின் குடியிருப்புக்கு
                  நடிகையின் குடியிருப்புக்கு
                  Posted in இலங்கை செய்திகள்

                  14 ஆயிரம் வீடுகள் கட்டும் மகிந்த

                  இலங்கையில் ஆளும் மகிந்த அரசாட்சியில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 14 ஆயிரம் வீடுகள் கட்டும் படி மகிந்த

                  வேண்டுகோள் விடுத்துளளார் .

                  அமைச்சரவையில் வைக்க பட்ட தீர்மானத்திற்கு அமைய ஒரு வீடு சுமார் ஆறு லடசம் ரூபா செலவில் இந்த வீடுகள் கட்ட படுகின்றன

                  சுனாமி வீட்டுத்திட்டத்தில் மோசடி செய்த மகிந்தா இதுவரை அந்த பாத்திக்க பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி தரவில்லை .

                  இவ்வாறான நிலையில் மீளவும் வீட்டு திட்ட ,அபிவிருத்தியில் கையாடல் இடம்பெற கூடும் என்றே அடித்து கூற படுகிறது

                  வீட்டு திட்டங்களை என சர்வதேச நாடுகள் ஒதுக்கிய நிதியை மகிந்த ஆட்சியில் காணாமல் போனது ,

                  மீள சகோதரன் கோட்டா ஆட்சியில் இவையும் காணாமல் போகும் நிலை உருவாகும் என மக்கள் அச்சம் கொள்கின்றனர்