Tag: எரிப்பு
குழு மோதல் படகுகள் எரிப்பு
குழு மோதல் படகுகள் எரிப்பு
குழு மோதல் படகுகள் எரிப்பு ,யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இரு குலுக்கல் கடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு வைத்து ஒரு படகு பொட்டாக எரித்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சில படகுகளும் இருந்து நாசமானதாகவும் இதனை அடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதனை அணைத்தனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் இளவாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றனர் .
நீண்ட நாள் இடம் பெற்று வந்த காரணமாகவே இந்த படகுகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஒரு வன்முறைச் செயலாக பார்க்கப்படுகின்றது.
கடன் அடிப்படையில் மானிய அடிப்படையில் படகுகளை வேண்டி கடலில் சென்று மீன்படியில் ஈடுபட்டு வருகின்ற மீண்டவர்கள் அங்கு தமது படகுகளை கட்டி வைத்து வருவது வழமை .
ஆனால் அவ்வாறான படங்களுக்கு இப்போது பாதுகாப்பு இல்லை என்று நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் மீன்பிடிக்கச் செல்லும் பொழுது சில படகுகள் அங்கு காணாமல் போவதாகவும் கள்ளர்கள் அந்த படகுகளை திருடி செல்வதாகவும் தற்பொழுது மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒருவித அதிபர்களை ஏற்படுத்தியுள்ளது.
இருளில் மூழ்கிய இஸ்ரேல் ஈரான் சைபர் தாக்குதல் பலஸ்தீன மக்கள் வீடுகள் எரிப்பு
இருளில் மூழ்கிய இஸ்ரேல் ஈரான் சைபர் தாக்குதல் பலஸ்தீன மக்கள் வீடுகள் எரிப்பு
இருளில் மூழ்கிய இஸ்ரேல் , ஈரான் சைபர் குழு அதிரடி தாக்குதல் பதட்டத்தில் மக்கள் .
பலஸ்தீன மக்கள் வீடுகள் எரிப்பு,ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்பதால் உலக , நாடுகள் பதட்டத்தில் உறைவு .
திருப்பி தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் அமெரிக்கா தெரிவிப்பு
பஸ் வண்டி தீவைத்து எரிப்பு
பஸ் வண்டி தீவைத்து எரிப்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டி இனம்
தெரியாத நபர்களினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ ம் எஸ் ஏ. ரஹீம் தெரிவித்தார்
காத்தான்குடி ஆரையம்பதியில் கல்முனை மட்டக்களப்பு வீதியில் ஆரையம்பதி பிரதான வீதியில் குறித்த பஸ் வண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு -பொத்துவில் வீதியில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ் வண்டி புதன்கிழமை (08) மாலை 7 மணியளவில் நிறுத்தி வைத்துவிட்டு, உரிமையாளர் தனது சொந்த இடமான கொக்கட்டிச்சோலைக்குச் சென்று விட்டார்.
வியாழக்கிழமை (09) அதிகாலை 3:30 மணியளவில் குறித்த பஸ் வண்டி தீப்பற்றி எரிவதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸாருக்கு வழங்கிய
பஸ் வண்டி தீவைத்து எரிப்பு
தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸார் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டபோது பஸ் வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகி உள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு படையினர் குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் பஸ் வண்டி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பஸ் வண்டி ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு
யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு
வீட்டில் இருந்தோர் தூக்கத்தில் இருந்த அதிகாலை வேளை, வீட்டு வளாகத்தினுள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் ஜன்னல்கள்
மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, வீட்டின் முன் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது.
இதனால் மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து ஏற் படுத்திய வண்டியை எரித்த மக்கள்
விபத்து ஏற் படுத்திய வண்டியை எரித்த மக்கள்
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்துடன் தொடர்புடைய
டிபெண்டர் ஜீப் வண்டியை ஓட்டிச் சென்றவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில், 14 வயதான சிறுவனும் அடங்குகின்றார். இந்த விபத்து சம்பவத்தை
அடுத்து, டிபெண்டர் ஜீப் வண்டி இனந்தெரியாத நபர்களினால் தீ வைத்து
கொளுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வீதியை எரித்த போராட்ட காரர்கள்
வீதியை எரித்த போராட்ட காரர்கள்
பொகவந்தலாவை நகரில் டயர்களை எரித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட
நிலையில், புதிதாக காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட குறித்த வீதி
சேதமடைந்துள்ளது என நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
பாரிய நிதி செலவில் ஒரு வருடத்துக்கு முன்னர், பொகவந்தலாவை வீதி
புனரமைக்கப்பட்டதாகவும், நேற்றைய தினம் அங்கு டயர்கள் எரிக்கப்பட்டமையால் வெப்பத்தால் சேதமடைந்து போட்டப்பட்ட
காபட் கழன்றுள்ளதாகவும் நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
பிரான்சில் கார்கள் வங்கிகளை எரித்த கலக காரர்கள்
பிரான்சில் கார்கள் வங்கிகளை எரித்த கலக காரர்கள்
நேற்று சனிக்கிழமை பிரான்சில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கலக
காரர்கள் இணைந்து பெரும் போராட்டத்தை நடத்தினர்
இதன் பொழுது கார்கள் மற்றும் வங்கிகளை தீ வைத்து எரித்தனர்
இதனால பொலிசாருக்கும் கலக காரர்களுக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது
பலர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

அமெரிக்காவில் முஸ்லீம் பள்ளிவாசல் எரிப்பு – பொலிசார் குவிப்பு
அமெரிக்காவில் முஸ்லீம் பள்ளிவாசல் எரிப்பு – பொலிசார் குவிப்பு
அமெரிக்காவில் கொரனோ வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்
Cape Girardeau, Missouri பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களின் வணக்கத் தளமான பள்ளிவாசலை ,நபர் ஒருவர் தீ வைத்து எரித்துள்ளார்
இந்த தீ வைப்பு சம்பவத்தில் பலமாக மசூதி பாதிக்க பட்டுள்ளது ,
குறித்த
தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்பு பட்ட நபர் கைது செய்ய பட்டுள்ளார்
தற்போது ரமளான் நோன்பு காலத்தில் இந்த செயல் இடம் பெற்றுள்ளது
இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வீடற்று வீதியில் வசித்தவரை தீ வைத்து எரிக்கும் கொடியவன் – அதிர்ச்சி video
வீடற்று வீதியில் வசித்தவரை தீ வைத்து எரிக்கும் கொடியவன் – அதிர்ச்சி video
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் வீடற்று வீதியில் வசித்து வந்த
வயதான நபர் ஒருவரை அவ்வழியே வருகை தந்த ஆபிரிக்க
நாட்டை சேர்ந்த காப்பிலி ஒருவர் எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன
எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் அந்த வீடற்றவர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் ,
தற்போது 47 வயது கொலை காரனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
இப்படியும் கொடியவர்கள் இந்த மனித சமூகத்தில் வசிக்கத்தான் செய்கின்றனர்

கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்
கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்
கனடாவில் வியாழக்கிழமை
Vaughan பகுதியில் வீடொன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது .
குறித்த தீவிபத்து தொடர்பில் அயலவர்கள் அவசர சேவை பிரிவுக்கும்
அறிவித்த , நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .
அவ்வேளை அங்கே தீயில் கருகி நிலையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் மீட்க பட்டார் ,மேலும் பெண் ஒருவர் பலமான
எரிகாயங்கள்,அடி காயங்களுடன் மீட்க பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டார்
இவர்கள் மீது தாக்குதலை நடத்தி,வீட்டோடு எரித்து விட்டு நபர் தப்பி ஓடி விட்டார் ,தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
வீட்டோடு இவர்களை எரித்த செயல் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் கனடா செய்திகள் தினம் படிக்க இதில் அழுத்துங்கள்
















