Tag: மீனவர்
இலங்கை மீனவர்களை தாக்கவில்லை இந்தியா மறுப்பு
இலங்கை மீனவர்களை தாக்கவில்லை இந்தியா மறுப்பு
இலங்கை மீனவர்களை தாக்கவில்லை இந்தியா மறுப்பு ,இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதலை இந்தியா மறுக்கிறது
ஜனவரி 29 அன்று கடலில் இலங்கை மீனவர்களை இந்திய வீரர்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.
ஊடகக் கேள்விகளுக்கு பதிலளித்த ஆணையம், சம்பவத்தை சரிபார்த்ததாகவும், இந்திய கடற்படை அல்லது இந்திய கடலோர காவல்படை
உறுப்பினர்களால் எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் கூறியது.
“மீனவர்களின் வாழ்வாதாரக் கவலைகளுக்கு மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், எந்த சூழ்நிலையிலும்
பலத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த விஷயங்களில் இலங்கை அரசாங்கத்துடன் நாங்கள் தொடர்ந்து
தொடர்பில் இருக்கிறோம்,” என்று உயர் ஸ்தானிகராலய செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடிதம்
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடிதம்
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி கடிதம் ,இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் .
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி

நிகழாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள், (09.10.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப்
படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக
உரிய நடவடிக்கை எடுக்கவும்
மேற்கொள்ளவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி முதல்-அமைச்சர்
மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 09.10.2025 அன்று அதிகாலை, ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் 47 மீனவர்கள் (30 தமிழ்நாடு மீனவர்கள் மற்றும் 17 காரைக்கால் மீனவர்கள்) இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை மத்திய
வெளியுறவுத்துறை மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள முதல்-அமைச்சர், சிறைபிடிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டின் கடலோர
கிராமங்களைச் சேர்ந்த 30 மீனவர்களும், நான்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளும் அடங்கும் என்று கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கைது சம்பவம் மீனவ சமூகத்தினரிடையே பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், கடலோர மாவட்ட மக்களிடையே அச்சம் மற்றும்
நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் 2025-ம் ஆண்டில், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான
மீனவர்கள் கைது செய்யப்பட்ட முதல் நிகழ்வு இதுதான் என தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, நமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக்
கேள்விக்குறியாக்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்களது பாரம்பரிய தொழிலைத் தொடர்வதில் உள்ள மன உறுதியையும், நம்பிக்கையையும்
வெகுவாக பாதிப்பதாகவும் உள்ளது என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 242 மீன்பிடிப்
படகுகளும், 74 மீனவர்களும் இலங்கைக் காவலில் உள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய
அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இதுபோன்ற கைது
சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ளவும், கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு
வரவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம்
ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம்
ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள்
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (11) காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்களையும் ஒன்பது படகுகளையும்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மீனவர்களின் இந்த தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை படகுகளுடன் உடனடியாக விடுதலை
செய்யுமாறு வலியுறுத்தியும் இன்று (11) காலை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மீன்பிடி விசைப் படகுகள்
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 20,000 மேற்பட்ட
மீனவர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தவறும்
பட்சத்தில் வரும் 13 ஆம் திகதி ஆர்ப்பாட்டமும், 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்
தமிழக மீனவருக்கு விளக்கமறியல்
தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் ,தமிழக மீனவர்களுக்கு ஒகஸ்ட் 06 வரை விளக்கமறியல்
இலங்கை கடற்படையினரால் கைது
கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 தமிழக ராமேஸ்வரம் மீனவர்களை
எதிர்வரும் ஒகஸ்ட் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் நேற்று (25) உத்தரவிட்டார்.
இந்திய இழுவைப் படகுடன் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இம்மீனவர்கள், இந்திய இழுவைப் படகுடன் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டு, ஜூலை 13 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அன்று முதல் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், நேற்றைய விசாரணையில் மேலும் ஒகஸ்ட் 06 வரை விளக்கமறியலில் வைக்க
உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை 25 படகுகளுடன் 185 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம்
இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம்
இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம் ,அவசர காலத்தின் போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தமிழக மீனவர் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளதாக இந்திய வௌிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அவசர நிலை காலத்தின்போது பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது குறித்து நாம் கேட்டிருக்கிறோம். அதற்கு அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் சில குறிப்பிட்ட கடற்பகுதிகளில் மீன் பிடிக்கும் நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது.
அவசர நிலை காலத்தின்போது உண்மையான பாராளுமன்றம் செயல்பாட்டில் இருந்திருந்தால் இது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கும். அப்போது இந்த முடிவு ஏற்கப்பட்டிருக்காது.
அதன் விளைவுகளை தமிழ்நாட்டில் நாம் இன்னும் காண்கிறோம்.
உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பிம்பம் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் மூலம் உடைந்தது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் பொலிஸார் சோதனை நடத்தியதை நானே நேரில் பார்த்தேன்.
அவசரநிலை பிரகடனத்தால் அரசியலமைப்பும், ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் முடிவை ஆதரிப்பதற்கு எவ்வளவு கடினமாக
இருந்தது? என்பதை வெளியுறவுத்துறையில் உள்ள எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து கேட்டறிந்தேன்.
நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம் என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது. சிலர் தங்கள் பாக்கெட்டுகளில் அரசியல் சாசன புத்தகத்தை
வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் இதயத்தின் உணர்வோ வேறுமாதிரி இருக்கிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற எத்தகைய நிலையையும் தவிர்ப்பதற்கு மக்கள் அதிகாரம் பெற வேண்டும். அதிகாரம் பெற்ற மக்கள் இதை ஒருபோதும் நடக்க விடமாட்டார்கள் என இந்திய வௌிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு
காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு
காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு ,களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள்
பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (28) காலை மீன்பிடிக்கச் சென்றிருந்த போது அவர்கள் இந்த விபத்திற்கு முகம் கொடுத்திருந்தனர்.
இறந்தவர்கள் அளுத்கம பகுதியைச் சேர்ந்த நதுன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நதுன் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பிரதேசவாசிகள் படகுகள் மூலம் அவர்களைத் தேடியிருந்தனர் .
மீனவ படகுகள் கடலில் விபத்தில்
தற்போது மீனவ படகுகள் கடலில் விபத்தில் சிக்கி மீனவர்கள் காணாமல் போவதும் ,மரணமாகி வருகின்ற சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
இவ்விதமான விடயங்கள் மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது . என்பது குறிப்பிடத்தக்கது.
மீனவர்களை தேடச் சென்ற விமானம்
மீனவர்களை தேடச் சென்ற விமானம்
மீனவர்களை தேடச் சென்ற விமானம் ,தங்காலை பரவி வெல்ல துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று இன்று (29) காலை விபத்துக்குள்ளான நெடுநாள் மீன்பிடி படகில் இருந்து காணாமற்போன இரு மீனவர்களைத்
விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் விமானம்
தேடுவதற்காக விமானப்படையின் KA-350 பீச்கிராஃப்ட் விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சுமார் ஒரு மணி நேரமாக அந்த விமானம் மூலம் காணாமற்போன இரு மீனவர்களைத் தேடும் பணி
முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமானப் படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மீன்பிடி படகு விபத்து
குறித்த நெடுநாள் மீன்பிடி படகு விபத்துக்குள்ளாகும்போது, அதில் ஆறு மீனவர்கள் இருந்துள்ள நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
இவர்கள் உயிரோடு உள்ளார்களா இல்லையா என்பது கூட தெரியவில்லை .மீனவர்களின் குடும்பத்தினர் ஏக்கத்தோடு தவித்த வண்ணம் உள்ளனர்
மீண்டு வருவார்களா இல்லை சடலமாக மீட்க போடுவார்களா என்பதே தற்போதுள்ள கேள்வியாக உள்ளது என்பது இங்கே குறிப்பிட தக்கது .
இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறு கோரி மாபெரும் போராட்டம்
இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறு கோரி மாபெரும் போராட்டம்
இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறு கோரி மாபெரும் போராட்டம் ,எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழில், வியாழக்கிழமை (27) காலை மீனவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணம் தீவக மீனவ அமைப்புகள் இணைந்து
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த போராட்டமானது தொடர்ந்து அருகாமையில் அமைந்துள்ள யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் உதவி ஆணையாளரிடம் மகஜர்
ஒன்றை கையளித்து தொடர்ச்சியாக யாழ். ஆஸ்பத்திரி வீதியூடாக இராசாவின் தோட்ட வீதியினை அடைந்து தொடர்ந்து யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகராலயத்தை அடைந்தது.
இதன் பொழுது, “நிறுத்து நிறுத்து இழுவை மடி தொழிலை நிறுத்து”, “தாண்டாதே தாண்டாதே எல்லை தாண்டாத”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” , “அள்ளாதே அள்ளாதே எமது வளத்தை அள்ளாதே” , “வாழ விடு
வாழ விடு எங்களை வாழ விடு” , “எல்லை தாண்டி வந்து என் இனத்தை பட்டினி ஆக்காதே” ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இந்திய யர்ஸ்தானிகாரலயத்தில் மகஜரை வழங்க யாழ். பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி போராட்டகாரர்களுக்கு
அனுமதி வழங்கினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களில் சிலர் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளை சந்தித்து மகஜரை கையளித்தனர்.
இதேவேளை போராட்டக்காரர்கள் வருகை தந்த பாதைக்கு போக்குவரத்து பொலிஸார் கடுமையான பாதுகாப்பு வழங்கியதோடு பொதுமக்களை குறித்த பாதையில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் பொலிஸார் கண்ணீர்
புகை குண்டுகள் சகிதம் இந்திய யர்ஸ்தானிகாரலயத்துக்கு முன்பாக கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
32 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்
32 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்
32 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் ,இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவானால் ஞாயிற்றுக்கிழமை (23) உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில்
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட குறித்த 32 இந்திய மீனவர்களும் கடற்படையின் விசாரணைகளின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்ட நிலையில்
மேலதிக விசாரணைகளின் பின்னர் 32 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 மீனவர்களையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் மீட்க இந்திய மத்திய அரசு உடனடி நடவடிக்கையை
மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு
மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு
மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு ,கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் நேற்று (15) மதியம் 12:00 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை நெருங்கும்.
இதன் விளைவாக, கடல் பகுதிகளில் பலமான காற்று வீசுவதுடன், கனமழை பெய்யும் மற்றும் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுகின்றது.
இதன்காரணமாக சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் அலைகள் நிலத்தை வந்தடையும் வாய்ப்பும் உள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் ,இன்றைய நிலையில் தமிழக மீனவர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படியும்,
மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும்படியும், இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்த வேண்டும்” என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க, பொறுப்பேற்ற பிறகு, முதல் வெளிநாட்டுத் தலைவராக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 4ம் திகதி இலங்கை செல்கிறார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் அவர் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனும், அதிகாரமும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.
இலங்கைப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், அங்கு நிகழ்த்தப்பட்ட கொடிய போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13-ம் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தினாலும் கூட எந்தப் பயனும் ஏற்படவில்லை.
இத்தகைய சூழலில் இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த
ஐநா மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
13-ம் அரசியல் சட்டத் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அதிகாரப் பரவல் என்பது மிக மிக குறைவானது தான் என்றாலும் கூட, அதுவும் கூட 35 ஆண்டுகளாக சாத்தியமாகவில்லை.
கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையை ஆட்சி செய்த கட்சிகள் அல்லாத புதிய கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகியுள்ள நிலையில், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், வடகிழக்கு மாநிலங்களில்
தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும், பிரிக்கப்பட்ட வடக்கும் மற்றும் கிழக்கு மாநிலங்களை
இணைந்து தேர்தல் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் நிறைவேற்றும்படி இலங்கை ஜனாதிபதியை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நிலையில் தமிழக மீனவர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படியும், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும்படியும் இலங்கை
அதிபரை வலியுறுத்த வேண்டுமென்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி
மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி
மீனவர்களுக்கு அநுர வழங்கியுள்ள உறுதி ,தமது அரசாங்கத்தின் கீழ் மீனவர்களுக்கு டீசல் மானியம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு
தேவையான உபகரணங்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்
மீனவர்களை தாக்கி மீன்களை பறித்த கும்பல்
மீனவர்களை தாக்கி மீன்களை பறித்த கும்பல்
மீனவர்களை தாக்கி மீன்களை பறித்த கும்பல் ,மீனவர்களை தாக்கி மீன்களைப் படுத்த கும்பல் ஒன்றின் செயல் தற்பொழுது நடுக்கடலில் இடம்பெற்றுள்ளதாக தமிழக மீனவர்கள் பரபரப்புடன் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆறு பேர் கொண்ட படகில் வருகை தந்தவர்கள் பைப்புகள் மற்றும் வாள்கள் கத்திகளுடன் படகில் ஏறி அவர்களை கத்தி முனையில் மிரட்டி அங்கிருந்த மீன்கள் எழுநூறு கிலோவை பறித்துச் சென்றுள்ளதாகவும் ,
அவர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீனவர்கள் நால்வரை மிகக் கடுமையாக தாக்கி அவர்கள் எடுத்துச் சென்ற பிடித்து வைத்திருந்த மீன்களை எடுத்துச் சென்றவுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீனவர்களை இவ்வாறான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்ததை அடுத்து தற்பொழுது இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர் கடையில் பதட்டம் தொடர்கின்றது.
புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்களை இலக்கு வைத்து கடலில் இலங்கை மீனவர்கள் இவர்கள் கடற்கரை தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்ற அமையும் தாக்குதலில் பலியாக இருந்த அமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தேர்தலில் இடம் பெற உள்ள நிலையில் இந்த விடயங்கள் இடம் பெற்று வருகின்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

இந்திய மீனவர்கள் கைது
இந்திய மீனவர்கள் கைது
இந்திய மீனவர்கள் கைது ,யாழ்ப்பாணம் நெடுந்தது கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்தியா தமிழக மீனவர்களை சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது .
தமது கடல் எல்லையைத் தாண்டி சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, இரண்டு படகுகள் வந்த ஒன்பது பேரை தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட பொழுது படகிலிருந்த மீனவர்கள் வலைகள் உள்ளிட்ட பொருட்கள் ,இலங்கை கடற்படை என்பன அபகரித்து செல்லப்பட்டுள்ளதாக அதில் வந்த மீனவர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை போலீஸ் உள்ளது
மீனவர்களும் கடற்படை போலீஸ் உள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் பாரபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த மண்ணில் முழுதாக அழிக்கப்பட்ட பின்னர் ,
தற்பொழுது தமிழக மீனவர்கள் தொடராக இலங்கை கடற்படையால் கைது செய்ய வருகின்றதும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்ற சம்பவம் உள்ளது.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த இரண்டு மீன்பிடி படகில் இலங்கை கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் இலங்கை கடற்படையால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை இப்படி தெரிவிக்கின்றது.
தமிழக மீனவர்கள் தொடராக இளமை தடுப்பு முகவரி செய்யப்பட்டு வருவது தமிழக அரசுக்கும் இந்திய நடு நிலைக்கும் இடையில் உறுப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

உறங்கிய மீனவர் குத்தி கொலை
உறங்கிய மீனவர் குத்தி கொலை
உறங்கிய மீனவர் குத்தி கொலை , இலங்கை மீனவர்கள் ஆள்கடலுக்கு சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி கொலை .
இதுவரை பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த பல நாள் மீன்பிடிப்பவர்கள் கடலுக்குச் சென்ற மீனவர் குழுவில் இடம் பெற்ற வாய் தகறாரு காரணமாக ஒருவர் திடீரென குத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வயிற்றில் குத்தி படுகொலை
உறங்கிக் கொண்டிருந்த ஒருவரது காலை தவறுதலாக சக நண்பர் மிதித்துள்ளார் ,இதனால் கோபம் அடைந்த அவர் அங்கிருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவரது கத்திக்குத்தின் வேகமான கூத்து காரணமாக சம்பவ இடத்திலேயே அந்த நபர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதை அடுத்து ஏனையவர்களும் குற்ற போவதாக .மிரட்டியுள்ளார் .
கொலை செய்த மீனவரை கயிற்றினால் கட்டி படகில் வைத்து கரைக்கு எடுத்து வந்தனர் .
அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .
சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தூங்கிக் கொண்டிருந்த மீனவர்
180 கடல் மேல் தூரத்தில் வைத்து தூங்கிக் கொண்டிருந்த மீனவர் மீது இந்த கத்திக்கூத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
கடலுக்கு செல்பவர்களும் மிகவும் உடல் சோர்வில் காணப்படுகிறது, தூங்கிக் கொண்டிருந்த சக மீனவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த இந்த சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது .
ஆழ்கடலுக்கு சென்று உடல் சோர்வு மற்றும் உளச்சோர்வு காணப்படுகின்ற பொழுது விவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரைக்கு அழைத்துவரப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ,கொலை குற்றசாட்டுக்கு உள்ளன நபர் தொடர்ந்து சிறையில் அடைப்பதற்கான வாய்ப்புகள் ,அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல்
மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல்
மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல், இலங்கை கடற்படை யால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
இலங்கைக்கு அவசரமாக அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே மேற்படி விடியத்தை குறிப்பிட்டுள்ளார் .
இலங்கை கடற்படையினால் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமறி மீன்படியில் ஈடுபட்டு வருகின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியா மீனவர்கள் தொடராக இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட வருகின்றனர் .
இவ்வாறான நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அத்தனை தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும் படி தமிழகத்தின் முதலமைச்சர் இப்படி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் வேண்டுதலை ஏற்று கொண்டு மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்யுமா என்கின்ற கேள்வி தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .
தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடலோர காவல் படை தொடர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .
இது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த வேண்டுதலை தமிழக முதலமைச்சர்விடுத்துள்ளார்.
காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி
காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி
காணாமல் போன மீனவர்களின் வீடு தேடிச் சென்றார் ஸ்ரீதரன் எம்.பி திருகோணமலை – சல்லி பகுதியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன குறித்த மீனவர்களின் வீடுகளுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று (31) விஜயம் செய்தார்.
கடந்த 20.5.2024 சல்லி பிரதேசத்தில் இருந்து காலை 10.மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் மாயமாகியுள்ளனர் .
குறித்த மீனவர்கள் வட்டாரம்_ 2 சல்லி பிரதேசத்தை சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் வயது (45 ),முருகையா சுஜந்தன் வயது( 22) என்பவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இது வரையில் கிடைக்கவில்லை.
குறித்த விடயம் தொடர்பில் காணாமல் போன மீனவர்களுடன் சந்தித்து கலந்துரையாடியதுடன் இது தொடர்பாக தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
Featured
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை
கச்சத்தீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா நேற்று (14) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்து வடக்கு தமிழ் மக்கள் இடையே வேதனை அளிக்கின்றது.
இந்தியாவுடன் எங்களின் உறவுகளை தொடர வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும், பூகோள அரசியல் ரீதியாக இந்திய அரசுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகின்றது என தெரிவித்தார்.
Featured
மியன்மாரில் இலங்கை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை
மியன்மாரில் இலங்கை மீனவர்களுக்கு சிறைத்தண்டனை
மியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவருக்கு மியன்மார் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மீன்பிடி படகுகளை செலுத்தியவர்களுக்கே 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 இலங்கை மீனவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பொது மன்னிப்பின் கீழ் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தூதுவர் கூறினார். மீனவர்கள் நலமுடன் இருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மார் கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2 மீன்பிடி படகுகளுடன் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது
இலங்கை மீனவர்கள் 13 பேர் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்,மாலைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கலே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் .
மேலும் அவர்கள் பயணித்த 02 மீன்பிடி படகுகளையும் மாலைத்தீவு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஒரு கப்பலில் 7 இலங்கை மீனவர்களும், மற்றொரு கப்பலில் 6 இலங்கை மீனவர்களும் இருந்தனர் ,அனைவரும் மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த இரண்டு மீன்பிடி படகுகளும் கடந்த 25ஆம் திகதி பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு படகுகளும் தற்போது ஹா அலிஃப் ஃபில்லதூ துறைமுகத்தில் நங்கூரமிட்டு, நூராதீன் என்ற மாலைத்தீவு கடலோர பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவு கடற்பரப்பில் இந்திய மற்றும் இலங்கை மீன்பிடி கப்பல்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பது வழமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.














































