மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம்

மக்கள் அரசியல்வாதிகள் சொத்து விபரங்களை பார்வையிடலாம் என லஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .

இவர்கள் தற்போது மக்கள் பார்வையிட இணையம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது .

அதன் அடிப்படையில் இந்த விடயம் முன் நகர்த்த பட்டு வருகிறது .

வெள்ளை வேட்டிகள் சொத்துக்களை பார்வையிட இந்த இணையதளம் செல்லுங்கள் .மக்களே .

இணையம் பார்வையிட இதில் அழுத்துங்கள்

https://ads.ciaboc.lk

விபத்தில் சிதறியது மருத்துவர் கார்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிதறியது மருத்துவர் கார்

விபத்தில் சிதறியது மருத்துவர் கார்

விபத்தில் சிதறியது மருத்துவர் கார் ,விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை ஏற்றிச் சென்ற அதிசொகுசு காரொன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளானது.

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான அதிசொகுசு காரே இவ்வாறு விபத்துக்கு உள்ளானது.

பத்தேகம அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 80 ஆவது கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 16-21 வயதுடைய இரண்டு மகன்களும் மனைவியும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் போது 21 வயது மகன் காரை ஓட்டி வந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கார் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு தனியார் பேருந்தின் வலது பக்க உடற்பகுதியில் பாதுகாப்பு வேலிக்கு நடுவில் விபத்துக்கு உள்ளாகி மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற அதேநேரம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அம்பியூலன்ஸ் வண்டிகள் வருவதற்கு முன்னர், காரில் சிக்கி காயமடைந்தவர்களை வீதியில் பயணித்த வாகனங்களின் சாரதிகள் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

வடக்கு கிழக்கு இணைக்கப்படாது நாமல்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கு இணைக்கப்படாது நாமல்

வடக்கு கிழக்கு இணைக்கப்படாது நாமல்

வடக்கு கிழக்கு இணைக்கப்படாது நாமல் ,சவால்களுக்கு தாம் ஒருபோதும் பயப்படுவதில்லை என்றும் சவால்களை தாம் விரும்புவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தாம் கொள்கைகளின் அடிப்படையில் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், செயற்திட்டத்துடன் முன்னோக்கிச் செல்லத் தயார் எனவும் தெரிவித்தார்.

“நாங்கள் சவால்களுக்கு பயப்படுவதில்லை. நான் சவால்களை விரும்புகிறேன். அதைத்தான் நான் என் தந்தையிடம் கற்றுக்கொண்டேன். நான் யாரையும் வெறுக்கவில்லை. அதனால், எங்கள் மீது சேறு பூசுவது பயனற்றது,” என்று அவர் கூறினார்.

2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துவேன் என்று கூறிய ராஜபக்ச, விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதாகவும் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்காது எனவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாப்போம், எம்மால் என்ன செய்ய முடியுமோ அதை மாத்திரம் கூறுவோம், பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வடமாகாண மக்களை ஏமாற்ற மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அந்தபடம் காட்டிய அதிபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

அந்தபடம் காட்டிய அதிபர் கைது

அந்தபடம் காட்டிய அதிபர் கைது

அந்தபடம் காட்டிய அதிபர் கைது ,தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு, தன்னுடைய கையடக்க தொலைபேசியின் ஊடாக ஆபாச படங்களை காண்பித்த பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலையைச் சேர்ந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை புதன்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில் 3 சிறுமிகள் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கல்வி கற்று வருகின்றனர்.

இந்த நிலையில்; குறித்த மாணவர்கள் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அந்த மாணவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்

இதன் போது குறித்த அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டி வந்துள்ள நிலையில் ஒரு மாணவி மாலை நேர வகுப்புக்கு போக முடியாது என பெற்றோரிடம்

தெரிவித்த நிலையில் அதற்கான காரணத்தை கேட்ட போது சிறுமி அதிபரின் இந்த ஈனச் செயல் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ தினம் பெற்றோர் 119 ம் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து பாதிக்கப்பட்ட 3 மாணவிகளான

சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை பொலிஸார் கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.

6 மாதங்களில் 9 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்
Posted in இலங்கை செய்திகள்

6 மாதங்களில் 9 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்

6 மாதங்களில் 9 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்

6 மாதங்களில் 9 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம் ,இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது (9) பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளுக்கான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘இரண்டு வருட முன்னேற்றமும் எதிர்காலமும்’ என்ற தலைப்பில் நேற்று புதன்கிழமை (21) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு குறிப்பிட்டார்.

“இலங்கை முதலீட்டுச் சபை பதினைந்து முதலீட்டு வலயங்களுக்கான வசதிகளை வழங்குவதுடன் அந்த முதலீட்டு வலயங்களில் தற்போது 1575 நிறுவனங்கள் செயற்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இதில் 500,000 இற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். தற்போதைய அரசாங்கத்தின் புதிய முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஏழு புதிய முதலீட்டு வலயங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாங்குளம், பரந்தன், காங்கேசன்துறை, திருகோணமலை, இரணைவில, ஹம்பாந்தோட்டை, பிங்கிரிய ஆகிய பிரதேசங்களைச் சுற்றி இந்தப் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கடந்த ஆறு மாதங்களில் முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி ஏற்கனவே 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. அதன்போது, முப்பத்தைந்து முதலீட்டுத் திட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்தை கனேடிய – இலங்கை முதலீட்டு வலயமாக மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, பொருளாதாரப் பரிமாற்றச் சட்டத்தில் திருத்தம் செய்ய மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான 27 திட்டங்கள் தற்போதும் செயற்படுத்தப்பட்டுள்ளன. ‘One Village One Product’ என்னும் திட்டத்தையும் நாடளாவிய ரீதியில் 14,000 கிராம சேவகர் பிரிவுகளில் செயற்படுத்த எதிர்பாக்கிறோம்.

அதேபோல் ‘ஈ-கொமர்ஸ்’ ஒன்லைன் தளத்தை அமைத்து அதற்குள் ஏற்றுமதியை ஊக்குவிக்க எதிர்பார்க்கிறோம். இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதி வருமானத்தை 9 பில்லியன்களாக அதிகரிக்க எதிர்பார்க்கிறோம்.

மேலும் துறைமுக நகரத்தில் 118 காணித் பிரிவுகளில் 46 பிரிவுகள் சீன முகவர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 காணிப் பிரிவுகள் மீண்டும் இலங்கைக்கு கிடைத்துள்ளன. துறைமுக நகர வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தற்போது 21 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இன்னும் பல முதலீடுகளைக் கொண்டு வர எதிர்பார்க்கிறோம்.

அதேபோல் பெல்வத்த சீனி நிறுவனத்தை அபிவிருத்தி செய்யவும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறான அனைத்து முதலீடுகள் வாயிலாகவும் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் அமைச்சின் செயலாளர் எம்.நயூப்தீன், முதலீட்டுச் சபையின் தலைவர் எம்.கே.டீ. லோரன்ஸ், ஏற்றுமதி ஊக்குவிப்புச் சபையின் தலைவர் கிங்ஸ்லி பேர்னாட், கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ரெவான் விக்ரமசூரிய உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை

அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை

அர்ச்சுனா வருகிறார் வவுனியா வைத்தியசாலை ,மக்கள் நாயகன் அர்ச்சுனா வவுனியா வைத்தியசாலியா நோக்கி வருகிறார் |மக்கள் முற்றுகை போராட்டம்| தவறான சிகிச்சை வழங்கிய பீதியில் மருத்துவர்கள் பீதியில் ,வடக்கு மாகாணத்தில் மருத்துவ மாபியாக்கள் ஊசல் ,வெடிக்கும் மக்கள் எழுச்சி

வீடியோ

எரிந்த இஸ்ரேல் இராணுவ தளபதி வீடு
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த இஸ்ரேல் இராணுவ தளபதி வீடு

எரிந்த இஸ்ரேல் இராணுவ தளபதி வீடு

எரிந்த இஸ்ரேல் இராணுவ தளபதி வீடு,சொல்லி அடித்த ஹிஸ்புல்லா ,மிக முக்கியமான செய்திகள் காணொளி உள்ளே

video

மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம்

மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம்

மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம் ,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரியராஜ் சிந்துஜா என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதம் ஒன்று மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்கு உரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை எனவும் வைத்தியர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னதாக, இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுமாக நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

எனினும் இதுவரையில் குறித்த கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையைச் சென்றடையவில்லையென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் இன்றைய தினமும் மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா
Posted in இலங்கை செய்திகள்

தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா

தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா

தனியாக கூட்டம் நடாத்தினார் பொன்சேகா ,ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமூக ஊடகங்களில் மக்கள் கூட்டம் இல்லாத தேர்தல் பிரசாரம் தொடர்பான காணொளி ஒன்று பரவியதற்கு தனது பிரச்சார முயற்சிகள் உண்மையானவை என பதிலளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில், தனது பொது பேரணிக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், மது அல்லது சாப்பாடு கொடுத்து மக்களை பேருந்துகளில் அழைத்து வரவில்லை என்றும் கூறினார்.

மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு முந்தைய நாள் இரவு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகளை பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

எனது பொதுக்கூட்டத்தில் ஒரு நபராக இருந்தாலும், ஐந்து, பத்து, ஐம்பது பேர் அல்லது நூறு பேர் கலந்து கொண்டாலும், எனது விசுவாசமான கட்சி ஆதரவாளர்கள் என்பதால் 1000 பேரை விட, அவர்கள் எனக்கு முக்கியமானவர்கள்,” என்று கூறினார்.

2010ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்ததன் பின்னர், அபிவிருத்திக்காக பாடுபட முயற்சித்ததாகவும், பல தடைகளை எதிர்நோக்க நேரிட்டதாகவும் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இந்த நாட்டு மக்கள் அதற்குத் தயாராக இல்லை என்றால், அதுவே தமது விருப்பமாகும் எனவும் தெரிவித்தார்.

எஸ்.ஜே.பி தலைவர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், பல முக்கிய அரசியல் கட்சிகளில் கைகோர்க்குமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தனது மனசாட்சிக்கு விரோதமாக அத்தகைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் அழைப்பை நிராகரித்ததாகவும் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிவரும் தனது தேர்தல் பேரணியின் காணொளி பொதுமக்களின் அரசியல் அறிவாற்றலை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது
Posted in இலங்கை செய்திகள்

கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது

கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது

கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது ,இந்தியாவின் நாகபட்டினத்திலிருந்து யாழ். காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் செவ்வாய்க்கிழமை (20​) மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் அன்று காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்நிலையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

குடும்பஸ்தர் வெட்டிக்கொலை ,மட்டக்களப்பு , காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் நேற்றிரவு 10 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய மரியதாஸ் என்பவரே வெட்டுக்காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .

குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் நாவற்குடாவிலுள்ள சாரதா வீதியால் வந்து கொண்டிருந்த போது இனந்தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம்பிக்கள் இருவர் அடிதடி
Posted in இலங்கை செய்திகள்

எம்பிக்கள் இருவர் அடிதடி

எம்பிக்கள் இருவர் அடிதடி

எம்பிக்கள் இருவர் அடிதடி ,இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோருக்கு இடையிலேயே ,தொலைக்காட்சி விவாதம் ஒன்றின் பொழுது அடிதடி ஏற்பட்டுள்ளது .

இந்த குத்து சண்டை தற்போது பெரும் பரபரப்பாக மற்றம் பெற்று வருகிறது.

திகாம்பரம் பாலியல் லஞ்சம் மற்றும் லஞ்ச ஊழலில் அதிகம் ஈடுபட்டு வருவதாக மக்கள் மத்தியில் குற்றம் சுமத்த பட்டுள்ளது .

அவ்வாறான கால பகுதியிலேயே இடம்பெற்ற நேரடி விவாத்தின் பொழுது இந்த குத்து சண்டை இடம்பெற்றுள்ளது .

காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

முதலாவது நாமலின் கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

முதலாவது நாமலின் கூட்டம்

முதலாவது நாமலின் கூட்டம்

முதலாவது நாமலின் கூட்டம் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் அனுராதபுரத்தில் இன்று (21)நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்யும் நோக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் கடபனஹா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முதலாவது பிரச்சார கூட்டத்தை அநுராதபுரத்திற்கு கொண்டு சென்றமை ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பேருந்துகளுக்கு தீ வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பேருந்துகளுக்கு தீ வைப்பு

பேருந்துகளுக்கு தீ வைப்பு

பேருந்துகளுக்கு தீ வைப்பு ,வென்னப்புவ பகுதியில் 4 பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட 4 நவீன பேருந்துகளே இன்று (20) அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீ விபத்தில் பேருந்து ஒன்று முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளது.

அருகில் இருந்த சிசிடிவி கெமராவை சோதனையிட்ட போது, ​​சிலர் வந்து பேருந்துகளுக்கு தீ வைத்து விட்டு தப்பிச் சென்றது பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் 3 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை

அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை

அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை ,அர்ஜுன இராமநாதன் தற்பொழுது மிகப்பெரும் மக்கள் சக்தியுடன் காணப்படுவதால் அவரை பொறியியல் சிக்க வைக்கும் நடவடிக்கையில் எதிரிகள் திட்டமிட்டு செயலாற்றுகின்றனர்.

அவிதம் அவரது வாயினால் அவரை அவதூறு படுத்தி தனிமைப்படுத்தி இந்த தேர்தலில் வெற்றியை தாமதாக்கி கொள்ளும் நடவடிக்கையில் பல கட்சிகள் திறம்பட செயலாற்றி வருகின்றன.

அதனால் அர்ச்சுனா இராமநாதன் மீது வலிந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

அவ்வாறு வலிந்து தாக்குதல் நடத்தி வருகின்ற அதே குழுவுக்கு திறந்தவெளியில் பதில் அளித்து வருகின்றார் அர்ச்சுனா ராமநாதன்.

இது அவருக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது நெருக்கடியாகவும் அவரை தமது திட்டமிட்ட பொறியில் சிக்க வைக்கும் தந்திரோபாய நடவடிக்கையாக கருதப்படுகின்றது.

ஆதலால் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு அர்ஜுனர் ராமநாதன் தனது வாயினால் ஊடகங்களுக்கோ அல்லது தனி நபர்களுக்கு போட்டிகளை அழிப்பதை தவிர்த்து வரவேண்டும்.

அத்துடன் தனது முகநூல் பக்கத்தை மட்டும் பயன்படுத்தி அதனூடாக அவர் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும் .

அதன் பிறகு அர்ச்சுனா என்கின்ற இந்த புயலும் ஓய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.

அவ்வாறான காலப்பகுதியில் மிகத் திட்டமிடப்பட்டு அர்ஜுனா செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது என்பதை அர்ஜுனா மறந்து விடக்கூடாது என மக்கள் மன்றம் இப்படி கருத்துரைத்து வருகின்றது.

கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம்

கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம்

கொக்கு தொடுவாய் புதைகுழி மக்கள் போராட்டம் ,முல்லைத்தீவு கொக்கு தொடுவாய் மனித புதகுழி முன்பாக இன்று மக்கள் போராட்டம் ஒன்றே நடத்துவதற்கு தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறுப்புகளின் சங்கத் தலைவி மரியா சுரேஷ் ஈஸ்வரி இந்த தகவலை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் கொக்கு தொடுவாய் பகுதியில் மீட்கப்பட்ட அத்தனை சடலங்களும் மக்களதும் விடுதலைப் புலிகளுடைய சடலங்கள் என மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

உயிரோடு சிறைபிடிக்கப்பட்டவர்கள் கொன்று படுகொலை செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரும் மனித படுகொலையை நடத்தி மக்களை அழித்த மனித ஓட்டையை நடத்திய இனப்படுகொலையாளர்கள் இன்றும் இந்த உலகில் நிம்மதியாக உலாவிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்ப்பு ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

சிங்கள மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர் ஆனால் அப்பாவை மக்கள் கண்ணீரோடும் கவலையோடும் உலவி வருவது ஏன் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது சர்வதேசம் இந்த படுகொலைக்கு இன்னும் தீர்ப்பு எழுதாதையர் என்ற கேள்வியை மக்கள் மன்றம் எழுப்பி நிற்கின்றது.

நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்
Posted in இலங்கை செய்திகள்

நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்

நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல்

நேரடி விவாதத்தில் பங்கேற்க ரெடி நாமல் ,மக்கள் முன்பாக தொலைக்காட்சி வாயிலாக நேரடியாக உரையாடலை மேற்கொள்வதற்கும் திறந்த வெளி விவாதத்துக்கு வருவதற்கு தாங்கள் தயார் என மஹிந்தாவின் மகன் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை என்று பாடும் மோசமான நிலையில் செல்வதற்கு காரணமாக இருந்தது ராஜபக்ச குடும்பம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

நாட்டை கொள்ளை அடித்து ஏப்பம் விட்டு மக்களை பட்டினி போட்டு மக்களை கொல்கின்ற அதே ராஜபக்ச குடும்பம் மூலமும் அதே மக்களை ஆண்டு கொள்ளவும் துடிக்கிறது.

அவ்வாறான காலப்பகுதியிலேயே தற்பொழுது திறந்த வெளி விவாதத்துக்கு தான் வருவதற்கு தயாராக உள்ளதாக மஹிந்தாவின் மகனான நாமல் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

ஊழல்களையும் கொள்கைகளையும் அடித்து ஊதி பெருத்து இருக்கும் இவர்கள் தாங்கள் நல்லவர்களாக இன்னும் நமது சமுதாயத்தில் காண்பிக்க முனைவதும் இதனூடாக காண்பிக்கப்படுகின்றன .

சம்பவங்கள் ஒவ்வொன்றையும் மறந்து விட்டு கடந்து செல்வதால் தான் மக்களுக்கு மறதி அதிகமாக இருப்பதால் தான்,

இவ்வாறான அரசியல்வாதிகள் எங்களது மண்ணில் நிலைத்து நிற்க காரணமாக உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தலைவர் அர்ஜுனா வீரம் சுமந்து புதிய பாடல்
Posted in இலங்கை செய்திகள்

தலைவர் அர்ஜுனா வீரம் சுமந்து புதிய பாடல்

தலைவர் அர்ஜுனா வீரம் சுமந்து புதிய பாடல்

தலைவர் அர்ஜுனா வீரம் சுமந்து புதிய பாடல் ,விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அர்ச்சனாவின் வீரம் சுமந்து புதிய பாடல் ஒன்று தற்போது வெளியிட பட்டுள்ளது.

இந்தப் பாடல் ஆனது பாசறை பாடல் செல்லப்பா அவர்கள் பாடிட அவரது புதல்வன் இளங்கோ செல்லப்பா இசையமைபில் ,வன்னி மைந்தன் வரிகளில் இந்த பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது

இந்த பாடல் உருவாக்கத்தில் இணைந்து செயல்பட்ட முக்கியமான உறவுக்கும். இந்த வேளையில் எதிரி இணையம் ஆகிய ஆகிய நாங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மூன்று வாரங்களாக இரவு பகலாக எம்முடன் கடினப்பட்டு அந்த பாடலை எடுத்து வருவதற்காக பின்புலத்தில் இருந்து உதவிய அந்த உறவுக்கும் இந்த வேளையில் நாங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அந்த உறவு மட்டும் இல்லாது இருந்திருந்தால் இந்த பாடல் இப்பொழுது வெளிவருவதற்கு காரணமே இருந்திருக்காது என்பதை இந்த வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனினும் இந்த பாடல் உருவாக்கத்தின் பொழுது ஏற்பட்ட பல்வேறுபட்ட பல சம்பவங்களையும் கசப்புகளையும் நமக்கு ஏற்படுத்தி இருக்கின்றது .

அவை எதிர்காலத்தில் நாங்கள் பல விடயங்களை மேற்கொள்வதற்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் இது உண்மையாக வழிவகுக்கும் .

விடுதலையும் அதன் தேச கனவுகளையும் சுமந்து செயல்படுகின்ற நபர்களுக்கு கிடைக்கப்பெற்ற இந்த புதிய அனுபவம் புதிய ஒரு பாடமாகவும் படிப்பினையாகவும் காணப்படுவதுடன்,

எதிர்காலத்தில் அதிகமான தவறுகளையும் அவ்வாறு சுமக்காத இருப்பதற்கான ஒரு பலத்தையும் இது ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

எனவே இந்த பாடலை பாடிய அனைவருக்கும் இசையமைப்பாளருக்கும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு இந்த பாடலை உருவாக்கத்திலிருந்து செயல்பட்ட உங்களுக்கும் இந்த வேளையில் நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த பாடலை மக்களை எடுத்து நீங்கள் பகிர்ந்து உங்களது பரப்புரையை மேற்கொள்ளுமாறும் தேசிய உணர்வோடு பயணிப்போம் என்பதை கேட்டுக் கொள்கிறோம் நன்றி வணக்கம்.

வீடியோ

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள்

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள்

தேர்தல் வன்முறை 631 முறைப்பாடுகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆடை குழுவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 631 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூலை 36 நாள் முதல் 18 வரையிலான காலப் பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆடை குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் இடம்பெறுகின்ற காலங்களில் தேர்தல் வன்முறைகள் இடம் பெறுகின்ற சம்பவங்கள் யாவும் போலீசார் அனுமதியுடன் பதிவு செய்யப்படுகின்றன .

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விடயங்களிலேயே இவை உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து அவை தற்போது வெளியிடப்பட்டுள்ளது எ,

ன்ற தேர்தலில் பலத்த வன்முறைகள் கலவரங்கள் ஈடுபட எதிர்பார்க்கப்படுகின்ற வேளையிலேயே இந்த பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பலர் சுற்றப்படுகொலை செய்யப்படும் துப்பாக்கி சூடு தாக்குதலும் இடம் பெற்றிருந்தன .

அவ்வாறான ஒரு தேர்தலை இடம் பெறலாம் எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டமும் பீதியும் காணப்படுகின்றது.

எப்படியாவது இந்த தேர்தலில் வந்து விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கின்ற காட்சிகள் வன்முறைகளை தூண்டி படுகொலைகளை நடத்தவும் தயாராகிக் கொண்டிருப்பதை அண்மைய கால சில சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன்

மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன்

மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன் ,புத்தளம் – வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (17) உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வாய்க்கால் – சிந்தார்த்திரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த குறித்த பெண் கடந்த ஒன்பது வருடங்களாக தொழில் நிமித்தம் வெளிநாட்டில்

வசித்து வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இலங்கை திரும்பிய குறித்த பெண் தனது வீட்டிற்கு வருகை தந்து மூன்று நாட்கள் மாத்திரம் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் தாங்கிய நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீட்டை

விட்டு வெளியேறி கொச்சிக்கடை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியுள்ளார் என விசாரணையின் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, 11 ஆம் திகதி தனது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடந்த 7 ஆம் திகதி குறித்த பெண் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

வீட்டிற்கு வருகை தந்த நாள் முதல் கணவனுக்கும் – மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கடந்த 13 ஆம் திகதி மாலை நபர் ஒருவருடன்

தொடர்புகொண்ட குறித்த பெண் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு தொலைபேசியில் கூறியுள்ளார் என்றும் கணவன் பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

தனது மனைவி கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் நீண்ட காலமாக கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், தன்னுடனான உறவைத் துண்டித்து வாழ்ந்து வந்ததாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.

மனைவி வெளிநாட்டில் வசித்த வந்த போது தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமறித்து வந்ததாகவும், வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பியதும், கள்ளத் தொடர்பில் இருந்த நபருடன் வாழ விருப்பம் என்றால்

நான்கு பிள்ளைகளையும் பராமறித்துக் கொண்டு அந்த நபருடனேயே இருக்குமாறும் மனைவியிடம் கூறியதாகவும், பிள்ளைகளை தனது பராமறிப்பில் வைத்துக் கொள்ள மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கணவன் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல தயாரான போது, பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இங்கேயே தங்கியிருக்குமாறு கணவன் தனது மனைவியிடம் கேட்டுக்கொண்டேன்.

தனது பேச்சை நிராகரித்த மனைவி தன்னுடன் வாக்குவாதப்பட்டதாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில்,

ஆத்திரமடைந்த தான் சமயலறையில் இருந்த பெற்றோலை எடுத்து மனைவியின் உடல்மீது ஊற்றி தீவைத்ததாகவும் கணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடும் தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறி அயலவர்களின் உதவியை நாடிய நிலையில், அங்கிருந்தவர்கள் அந்தப்

பெண்ணை உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பெயரில் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமறிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தனக்கு பிணை வழங்குமாறும் சந்தேக நபர் சார்பில்

கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரீசிலனை செய்த நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது.

எனினும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் மூன்று நாட்களின் பின்னர் நேற்று (17)

காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய நபர் சந்தேகத்தின் பெயரில் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் குற்ற விசாரணை பிரிவு

பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.