Tag: நீக்கம்
மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம்
மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம்
மன்னார் யுவதி மரணம் வைத்தியர் பணியிடை நீக்கம் ,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரியராஜ் சிந்துஜா என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம் ஒன்று மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாக கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
எவ்வாறாயினும் அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்கு உரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை எனவும் வைத்தியர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய முன்னதாக, இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுமாக நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
எனினும் இதுவரையில் குறித்த கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையைச் சென்றடையவில்லையென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் இன்றைய தினமும் மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்கம்
பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்கம்
பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்க பட்டுள்ளன .
இலங்கையில் ஏற்படுத்த பட்ட வட்டி வீதம் மற்றும் ,எரிபொருள் தட்டுப்பாடு ,வாகன வரிகள் அதிகரிக்க பட்டுள்ளது .
இதன் காரணமாக ,பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட 400 வாகன சேவைகள் நிறுத்த பட்டுள்ளன .
மக்கள் மீது பொருளாதார சுமைகள் ,மற்றும் வரி விதிப்புக்கள் என்பன அதிகரிக்க பட்ட நிலையில் ,மக்களின் இந்த சேவை வளங்கள் நிறுத்த பட்டுள்ளன .
பாடசாலை வாகனங்கள் 400 சேவையில் இருந்து நீக்கம்
தொடர்ந்து ஆண்டு தோறும் வரி விதிப்புக்கள், இலங்கையில் உயர்ரத்த பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது .
இவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, கடன் உதவி வழங்க பட்டுள்ளது .
இலங்கை அரசு வரிக்குறைப்பை நீக்கினால் ,இலங்கைக்கு வழங்க படும் கடன் தொகை நிறுத்த படும் .
அதனால் இலங்கை அரசு வரிகளையும் .பொருள்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளது .இதனால் பொது போக்குவரத்து தேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன .
விடுதலை புலிகள் மீதான தடை அமெரிக்கா நீக்கும் நகர்வுகள் ஆரம்பம்
புலிகள் மீதான தடை நீக்க தயாரா கும் அமெரிக்கா -உள்ளே நடத்த படும் இராய தந்திர பேச்சுக்கள் -அடக்கப்படுமா இலங்கை அரச பயங்கரவாதம் ..?
உலக பயங்கரவாத அமைப்பாக தமிழீழ விடுதலை புலிகள் உள்ளனர் என கோரி இந்தியாவின் அழுத்தத்துடன் அமெரிக்கா தடை
உத்தரவை வெளியிட்டது ,புலிகள் அந்த தாய் மண்ணில் அழிக்க பட்டு பன்னிரெண்டு ஆண்டுகள் கழியும் நிலையில் ,ஐரோப்பிய நீதிமன்றங்கள் புலிகள் இல்லாத போது தடை ஏன் என கேள்வி
எழுப்பி ,அந்த தடையினை நீக்கிய நிலையிலும் ,குறிப்பிட்ட முக்கிய வல்லரசுகள்; உள்ளிட்டவை இதுவரை விதிக்க பட்ட தடையினை நீக்கவில்லை
இதன் கால சூழல் ,தற்பொழுது எமன் நாட்டில் இயங்கி வரும் கவுதி படைகள் மீது விதிக்க பட்ட பயங்காரவாத தடையினை அமெரிக்கா
நீக்கியுள்ள நிலையை போன்று புலிகள் மீதான தடையும் நீக்குவதற்குரிய பரிந்துரைகள் முக்கிய சில நாடுகள் ஊடக கோரப்பட்டுள்ளதாம்
அவ்வாறு அமெரிக்கா தடையினை நீக்கினாலே புலிகள் அமைப்பு பலமாக வெளி நாடுகளில் ஒரு நிழல் அரசை அமைத்து இயங்கும்
நிலையை இது உருவாக்கிவிடும் ,அதனை செய்திடவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நெருங்கி வருகின்றன
இலங்கை அரசின் சீனாவுடனான நெருங்கிய உறவும் ,அதனால் எழப்போகும் பேரா பத்தையும் கருத்தில் கொண்டு இந்த நகர்வுகள்
நிழல் ஆட்ட படுகின்றன ,இது இலங்கையை அடிபணிய வைக்குமா இல்லை மேலும் நெருங்க வைக்குமா …?
கோட்டா,மகிந்த சகோதரர்கள் ஆட்சியில் இந்த விடயங்கள் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என பர பரப்பாக எதிர் பார்க்க படுகிறது












