கடல் நீரில் மூழ்கிய களுத்துறை
Posted in இலங்கை செய்திகள்

கடல் நீரில் மூழ்கிய களுத்துறை

கடல் நீரில் மூழ்கிய களுத்துறை

கடல் நீரில் மூழ்கிய களுத்துறை ,வடக்கு களுத்துறை பிரதேசத்தில் புதன்கிழமை (16) காலை கடல் பெருக்கெடுத்துள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை கெலிடோ கடற்கரை அருகில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள 200 வீடுகள், சுற்றுலா

விடுதிகள், களுத்துறை வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலக வளாகம் மற்றும் பல கறுக்கு வீதிகள் கடல் நீரில் மூழ்கி காணப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு

மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு

மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு ,கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக் கடலில் நேற்று (15) மதியம் 12:00 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை நெருங்கும்.

இதன் விளைவாக, கடல் பகுதிகளில் பலமான காற்று வீசுவதுடன், கனமழை பெய்யும் மற்றும் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதன்காரணமாக சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் அலைகள் நிலத்தை வந்தடையும் வாய்ப்பும் உள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்
Posted in இலங்கை செய்திகள்

இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்

இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்

இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்,வெள்ளை கொடியுடன் சரணடைந்த விடுதலை புலிகள் உறுப்பினர்களை கட்டி கொடுத்த ஒன்பது வெள்ளை வேட்டிகள் தொடர்பான விடயங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

விடுதலை புலிகள் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட காரணமாக விளங்கிய ,செல்வராசா கயேந்திரன் ,கயேந்திர குமார் ,செல்வம் அடைக்கலநாதன்

,கிசோர் ,சந்திரநேரு ,சுரேஸ்பிரேமசந்திரன் ,சம்பந்தன் ஆகியோர் ஈடுபட்டுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மக்களுக்காக போராடியவர்களை காட்டி கொடுத்த கயவர்கள் இறுதி நேரத்தில் உரையாடிய விடயங்கள் தற்போது வெளியாகியுள்ளன .

இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்
இறுதி யுத்த காட்டி கொடுப்பு சிக்கிய 9 வேட்டிகள்

அந்த விடயங்கள் ,ஆதாரங்களை கீழே ஆங்கிலத்தில் காண மக்களே .அது தவிர கீழே உள்ள விக்கிலீக்ஸ் இணைப்பையும் அழுத்தி பார்வையிடுக .

விக்கிலீக்ஸ் வீடியோ

ஜனாதிபதிக்கு சவால் விடுத்த திகா
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு சவால் விடுத்த திகா

ஜனாதிபதிக்கு சவால் விடுத்த திகா

ஜனாதிபதிக்கு சவால் விடுத்த திகா ,இன்றைய ஜனாதிபதி இன்னொரு அநுரகுமார திசா நாயக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது மலையக மக்களின் பிரச்சினைகளை பற்றி அதிகமாக

பேசியுள்ளார்.

அவர் இப்போது ஜனாதிபதியாக ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால் முன்னர் பேசிய விடயங்களை இப்போது

நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்

மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த தோட்டக் கமிட்டி தலைவர்கள் அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்ர்களுக்கான தமிழ்

முற்போக்கு கூட்டணியின் கூட்டம் நேற்று (13) அட்டன் கோல்டன் மஹால் மண்டபத்தில் மலைய மக்கள் முன்னணி தலைவர் வி. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான மயில்வாகனம் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற உள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தியின் அலை வீசினாலும் நுவரெலியா மாவட்ட மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக ஐக்கிய

மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்துக்கு பெருமளவு வாக்குகளை அளித்து இருந்தார்கள். அதற்காக நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக அதன் டெலிபோன் சின்னத்தில் கூட்டணியை சேர்ந்த நானும் இராதாகிருஷ்ணன், உதய குமார் ஆகியோரும் போட்டியிடுகின்றோம். நாம் வெறுமனே வந்து

மக்களிடம் வாக்கு கேட்கவில்லை கடந்த காலங்களில் நாம் செய்த சேவையை மக்களிடம் முன் வைத்து தேர்தலில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்கின்றோம்.

சிலர் தேர்தல் காலம் வரும் போது மாத்திரம் மக்களிடம் வந்து வாக்கு கேட்பார்கள். அவர்கள் ஐந்து வருடங்களாக எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை.

அவர்களை மக்கள் நிராகரித்து விட்டதால் இதுவரை காலமும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. எனவே மீண்டும் மக்களிடம்வந்து பொய்யான

வாக்குறுதிகளை தந்து வாக்கு வேட்டையாடவும் எமக்கு இருக்கின்ற அரசியல் பலத்தை குறைக்கவும் நாடகமாடுகின்றார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் அரசியலில் வென்றாலும் தோற்றாலும் மக்களுடனேயே இருப்போம் என்பதை கடந்த காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு நாம் செய்து காட்டியுள்ளோம்.

இந்த முறை நாம் செய்த சேவைகளை முன் வைத்து மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

இன்றைய ஜனாதிபதி மலையக மக்கள் மீது நம்பிக்கை அக்கறையும் அனுதாபமும் கொண்டவர் என்பதை மக்கள் அறிவார்கள். அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது பாராளுமன்றத்தில் மிகவும் அக்கறையுடன் எடுத்துக் கூறி மலையக மக்களை கவர்ந்திருந்தார்.

இப்போது அவர் ஜனாதிபதி பதவியில் இருப்பதால் எமது மக்களுக்கு தேவையானதை செய்யக்கூடிய அருமையான சந்தர்ப்பம் அவருக்கு கிட்டியுள்ளது எமது மக்களுக்கு 2000 ரூபாய் சம்பளம் தேவை, அவர்கள்

குடியிருப்பதற்கு வசதியான நவீன குடியிருப்பு தேவை என்பதை வலியுறுத்தி வந்த அவர் அவற்றை நடைமுறைப்படுத்தி காட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுகின்றோம். நாம் வெறுமனே மக்களை கவர்வதற்காக வாய் வார்த்தை கூறி ஏமாற்றியவர்கள் அல்ல என்பதை எமது மக்கள் அறிவார்கள்.

நான் நல்லாட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது தனி வீட்டுத்திட்டம், இந்திய வீட்டுத் திட்டம், மலையக அதிகார சபை, பிரதேச சபைகள்,

செயலகங்கள் அதிகரிப்பு போன்ற உரிமை சார்ந்த பல விடயங்களை செய்து கொடுத்துள்ளோம்.

இப்பொழுது நாம் எதிர்க்கட்சியில் இருந்தாலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். எமது மக்களின் உரிமைகள் தேவைகளைப் பற்றி பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்றார்.

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் நாளையும் வௌியீடு
Posted in இலங்கை செய்திகள்

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் நாளையும் வௌியீடு

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் நாளையும் வௌியீடு

வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் நாளையும் வௌியீடு ,பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் இன்றும் (15) நாளையும் (16) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களையும் தேர்தல் ஆணைக்குழு பெற்றுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விருப்பு எண்களை ஆய்வு செய்த பின், குறித்த ஆவணங்கள் மீண்டும் மாவட்ட செயலாளர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்றும் (15) நாளையும் விருப்பு எண்களை வௌியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் வேட்பாளர் ஒருவர் செலவிட வேண்டிய பணத்தின் அளவு குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை ,இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதாகவும், அதற்கமைவாக அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு சரியான மற்றும் நிலையான

வேலைத்திட்டம் அவசியம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில்

இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குப் பணியை முதன்மைப்படுத்துமாறும்,

அதன் பின்னர், சேதமடைந்த சொத்துக்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏற்கனவே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரூபாவுக்கு

மேலதிகமாக மேலும் மேலும் பணம் தேவைப்படுமாயின் அதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தார்.

இவ்வருடத்தில் இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சேதமடைந்த சொத்துக்கள் புனரமைக்கப்படாத மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து

அதற்கான இழப்பீடுகளை வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு ,பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் தரையிலும் , ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் தகாத தொடர்பில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பெண்ணை கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

47 வயதுடைய ஆணும் 42 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் இயந்திரத்தில் தீப்பரவல்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் இயந்திரத்தில் தீப்பரவல்

ரயில் இயந்திரத்தில் தீப்பரவல்

ரயில் இயந்திரத்தில் தீப்பரவல் .களுத்துறையில் இருந்து மருதானைக்கு இயக்கப்படவிருந்த ரயிலின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

80பேர் காயம் இஸ்ரேல் தாக்குதலில்
80பேர் காயம் இஸ்ரேல் தாக்குதலில்80பேர் காயம் இஸ்ரேல் தாக்குதலில்

இதன் காரணமாக கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது..

இன்று (15) காலை 7 மணியளவில் களுத்துறையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த ரயில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தீப்பிடித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயிலின் பின் இயந்திரத்தில் தீ பரவியதையடுத்து களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும், ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த ரயிலில் இருந்த பயணிகள் மற்றுமொரு ரயில் மூலம் மருதானைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கரையோர மார்க்கத்தில் சிறிது ரயில் தாமதம் ஏற்படும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு

அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு

அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு ,இன்று யாழ்ப்பாணத்தில் கொட்டல் ஒன்றில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வு தொடர்பாக வெளியிட பட்டுள்ளது .

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட நிகழ்வு தொடர்பில் வெளியிட பட்ட முக்கிய சந்திப்பு மற்றும் கேள்வி பதில்கள் ,கீழே உள்ள காணொளியில் முழுமையாக பார்க்க .

வீடியோ

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் காயம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் காயம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் காயம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.


லெபனானின் தேசிய செய்தி நிறுவனம், லெபனானில் சிடோனுக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில்

பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கிறது, இது நாட்டின் தெற்கில் உள்ள பல நகரங்கள் மீது குண்டுவீச்சைத் தொடர்ந்தது.

மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்

மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்

மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள் ,ஏற்கெனவே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்றவற்றில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. திசைகாட்டியிலும் நெருக்கடிகள் உள்ளன. வரும் ஏப்ரல் மாதத்திற்குள், இந்த நெருக்கடி முடிவுக்கு வரும். இந்த அரசாங்கத்தால் சலிப்படைந்த மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்” என்றார்.

நேற்று (13) இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கூரிய ஆயுதங்களுடன் நால்வர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதங்களுடன் நால்வர் கைது

கூரிய ஆயுதங்களுடன் நால்வர் கைது

கூரிய ஆயுதங்களுடன் நால்வர் கைது ரத்மலானை பெலக்கடை சந்தி பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் நபரொருவரை கொல்லச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த சந்தேக நபர்களுடன், வெவ்வேறு அளவுகளில் ஏழு வாள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நபர் ஒருவரை வெட்டிக் கொல்லத் தயாராக காரில் சிலர் வருவதாக கிடைத்த

இரகசியத் தகவலையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட இலஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கில் பாதிக்கப்பட்டவர் சில மாதங்களுக்கு முன்பு இணையதள

அப்ளிகேஷன் மூலம் ஒருவருடன் நட்பாக பழகி அந்த நபரை மலையகத்துக்கு அழைத்து வந்த நபரை கொலை செய்ய இருப்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்மலானை சொய்சா புர மற்றும் பைவத்த பகுதியை சேர்ந்தவர்கள்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார் திகாம்பரம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார் திகாம்பரம்

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார் திகாம்பரம்

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயார் திகாம்பரம் ,ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மலையக மக்களுக்கு பத்து பேர்ச் கானியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் தாம் ஆதரவினை வழங்க தயாராக

உள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிதலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டப்பகுயில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில்: நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தற்போதைய நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வருமை நிலையில் இருந்து வந்த ஒருநபர் மலையக மக்களுக்கு வீட்டுரிமை மலையக

இளைஞர் யுவதிகள் அதிகமாக கொழும்பு பகுதியில் உள்ள வீடுகளுகளிலும் உணவகங்களிலும் தொழிலுக்கு அமர்த்தப்பட்டதாக எதிர்கட்சியில் இருந்த காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் அதிகமாக குரல் கொடுத்தார்.

பொது தேர்தல் என்பது மலையக மக்களுக்கு முக்கியமான ஒரு தேர்தலாகும் ஏன் எனில் மலையக பிரதிநிதிகளை இல்லாமல் செய்வதற்கான சூழ்ச்சி இடம்பெற்று வருகிறது மலையகத்தில் புதிய மாற்றம் வேண்டும் என

சுயட்ச்சையாக சிலர்போட்டியிடுகின்றனர் சிலர் கூறுகின்றனர் மலையக மக்களுக்கு எவ்வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கவில்லை என கூறுகின்றனர்

மலையத்தின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் குறைவடைந்தால் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிமைகளுக்கும் குரல் எழுப்ப முடியாது

மலையக மக்களின் சம்பள பிரச்சினை முதல் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கு போராட கூடிய ஒரு கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணி மாத்திரமே உள்ளது

மலையகத்தின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் மாத்திரமே, ஆகவே எதிர்வரும் பொது தேர்தலில் எமது மூவரின் வெற்றி உருதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசாரணை ,குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை மத்திய குற்றப் புலனாய்வுப் பகுப்பாய்வுப் பணியகத்தின் பணிப்பாளராக

நியமித்தமை தொடர்பில் ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவனம் (IRES) கேள்வி எழுப்பியுள்ளது.

அபேசேகரவின் நியமனம் குறித்து அரசாங்கம் ஒக்டோபர் 10ஆம் திகதி அறிவித்தமை குறித்து IRES இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, கேள்வி எழுப்பினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்திக்காக (NPP) தீவிரமாக பிரச்சாரம்

செய்த ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் குழுவில் அபேசேகர இணைந்திருந்ததாக கஜநாயக்க சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே அபேசேகரநியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அபேசேகர சேவையில் இருக்கும் போது திறமையான அதிகாரியாக கருதப்பட்டாலும், பொதுத் தேர்தல் முடிந்து புதிய பாராளுமன்றத்தின் முதல்

அமர்வின் பின்னரே அவரது நியமனம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிக்கையொன்றை வெளியிட்டு கஜநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

அழுகை சரத் பொன்சேகா
Posted in இலங்கை செய்திகள்

அழுகை சரத் பொன்சேகா

அழுகை சரத் பொன்சேகா

அழுகை சரத் பொன்சேகா ,தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோர் பொதுத் தேர்தலில் தமது கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாது

என தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே இம்முறை பொதுத்தேர்தலில் தான் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட பொதுத் தேர்தலில் திசைகாட்டி மற்றும் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன்

காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் 
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் 

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் 

அர்ச்சுனா புதிய தேர்தல் பாடல் அதிரடியாக வெளியிட பட்டுள்ளது .மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை ஆதரிக்கும் அன்புகொண்ட உறவுகள் இணைந்து வேகமாக உருவாக்கிய வெளியிட பட்ட முதலாவது தேர்தல் பாடல் .

இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கிய வண்ணம் உள்ளது .

வேட்டை காரன் வாறான் என்கின்ற இந்த பாடலுக்கு இசையமைப்பு – இளங்கோ செல்லப்பா – பாடியவர் பாவேந்தன் – இளங்கோவன் – பாடல் வரிகள் -வன்னி மைந்தன் –

இந்த பாடல் வெளியாக நிதி உதவி அளித்தவர் சோதரி டயானி ,ஆகியோர் கூட்டு முயற்சியில் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் பரப்புரை பாடல் வெளியாகியுள்ளது .

இந்த பாடலை 48 மணித்தியாலத்தில் உருவாக்கி வழங்கிய அண்ணன் இளங்கோ செல்லப்பாவிற்கு ,நிதி உதவி வழங்கிய சோதரி டயானிக்கும் விஷேட நன்றிகளையும் பாராட்டையும் நாம் தெரிவித்து கொள்கிறோம் .

வெல்லட்டும் அர்ச்சுனா சுயேட்சை குழு ,உங்களோடு நாங்கள் ,ஆறு பேரை வெல்லவைப்போம் ,அரியணையில் ஏற்றுவோம் .

எம் தமிழா எழுந்து வா ,ஏற்றடா அரியணை .

காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம்
Posted in இலங்கை செய்திகள்

காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம்

காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம்

காட்டி கொடுத்த வெள்ளைவேட்டிகளை கருவறுப்போம் ,புலிகள் தளபதிகள் போராளிகள் ,தலைவர் பிரபாகரன் குடும்பம் உள்ளிட்டவர்களை காட்டி கொடுத்து ஏப்பம் விடும் இந்த துரோக கும்பலை கருவறுப்போம் மக்களே .

இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்
இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்

2009 ஆம் ஆண்டு இறுதி போர் இடம்பெற்ற கால பகுதியில் ,தமிழீழ விடுதலை புலிகள் முதுநிலை தளபதிகள் ,வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்தது முதல் ,பாலசந்திரன்

படுகொலை வரைக்கு தேச துரோக செயலை புரிந்த ஆறு வெள்ளை வேட்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக நாம் பேசவுள்ளோம் .

கிடைக்க பெற்றுள்ள ஆதாரங்கள் அல்லது வெளியாகியுள்ள அதிகார தரவுகளின் அடைப்படையில் ,இன்றைய சைக்கிள் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கயேந்திரன்

,கயேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ,செல்வம் அடைக்கலநாதன் ,பா ,அரியேந்திரன் ,கிசோர் ,சந்திரநேரு உள்ளிட்டவர்கள் ,இந்த விடயத்தில் சம்பந்த பட்டனர் .

அவ்வாறான கால பகுதியில் பசில் ,கோட்டாபய ,மகிந்த ராஜபக்ச வுடன் நேரடி தொடர்புகளை ஏற்படுத்திய இவர்கள் ,பின்னப்பட்ட சதிவலைக்குள் எமது போராளி தளபதிகள் மற்றும் ,தலைவர் குடும்பத்தை சிக்க வைத்தனர் .

தாம் வளர்த்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்லை நம்பி வருகை தந்த புலித்தேவன் ,நடேசன் ,சுதா ,தங்கன் ,மற்றும் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் ,ரேகா ,உள்ளிட்டவர்கள் படுகொலை செய்ய பட்டனர் .

தமிழ் மக்கள் வரலாற்றில் மிக பெரும் துரோகத்தை விளைவித்த இந்த கும்பல் தொடர்ந்தும் ,அதே தேசவிரோத மகிந்தா குழுவுடன் இணைந்து ,கபட நாடகம் போட்டு தமிழர்களை ஏமாற்றி வந்தனர் .

ஆகவே இந்த கொள்ளை கூட்டத்தையும் ,எட்டப்பர்களையும் தமிழர்கள் இந்த அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்க வேண்டும் .

தமிழ் மக்களை நேசிப்பதாக கூறி கொண்டு தமது சுய நலத்திற்காக பெட்டிக்கு ஆசை பட்டு ,கோடிகளை சுருட்டி வாழ்ந்து வரும் இவர்கள் மக்களினால் விரட்டியடிக்க படவேண்டும் .

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நான்கு லட்சம்ரூபா சம்பளம் மாதம் தோறும் கிடைக்கிறது ,அதனை பெற்று சுகபோகமாக வாழ்ந்து வரும் இவர்கள் துரத் தியடிக்க படவேண்டும் .

ஆகவே மக்களே தேர்தலில் வரும் இவர்களை முன்னே நிக்க விட்டு, இந்த துரோகத்திற்கு பதில் கேளுங்கள் ,உறங்கி கிடந்த உண்மைகளை 15 வருடங்கள் பின் உயிர்பெற்று வருகிறது.

இந்த தேசவிரோத கும்பலை தமிழ் மக்களை ஆள விடக்கூடாது என்பதில் அந்த மக்கள் கவனம் செலுத்த வேண்டும் ,தவறினால் மீளவும் எமது தமிழ் மக்கள் குழி தோண்டி புதைக்க படும் அவலம் எழும் .

ஆகவே மக்களே வெள்ளை வேட்டிகளையும் தேச துரோக காட்டி கொடுப்பவர்களை விரட்டுவோம் ,அவர்களை ஓட்ட கருவறுப்போம் .

சபதம் எடு தமிழா .இந்த பாராளுமன்ற தேர்தலில் ,இவர்களை தோற்கடித்து சாதனை நாட்டு .

இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்
Posted in இலங்கை செய்திகள்

இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்


இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம்

இறுதிப் போர் காட்டி கொடுப்பு |முக்கிய வெளியான ஆதாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இறுதி போர் வெள்ளை கொடி சரணடைதல் சம்பவத்தில் பங்கேற்ற செல்வராசா கயேந்திரன் ,செல்வம் அடைக்கலநாதன் ,பா , அரியேந்திரன் ,கயேந்திரன் பொன்னம்பலம் ஆகியோர் காட்டி கொடுப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கொடியுடன் சரணடைந்த புலித்தேவன் ,நடேசன் , சுதா ,உள்ளிட்ட போராளி தலைவர்கள் உள்ளிட்ட போராளிகள் நயவஞ்சக படுகொலை ,

இவர்களுடன் அப்பாவி சிறுவன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பிலும் இவர்களுக்கு பங்கு உண்டு .இந்த ஆறு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் .

முடிந்தால் சவால் நேரடி வன்னி மைந்தன் டிக் டாக் விவாதத்திற்கு இவர்கள் வரட்டும் .

காணொளியை பாருங்கள் முழுமையான விபரம் அதில் உள்ளது .

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு ,யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் 22 064 பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தால் 22 064 பேர் பாதிப்பு

வெள்ளத்தால் 22 064 பேர் பாதிப்பு

வெள்ளத்தால் 22 064 பேர் பாதிப்பு ,பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் 22,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தனகலு ஓயா தூனமலே பகுதியில் வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளது.

களனி கங்கை கொழும்பு நாகலகம்வீதி, ஹங்வெல்ல மற்றும் க்ளன்கோஸ் பகுதிகளில் சிறிய அளவிலான வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளதுடன் கிங்

கங்கை பத்தேகம பகுதியில் சிறிய அளவிலான வௌ்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளை அண்மித்து தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் களனி கங்கையின் பல இடங்களில் முப்படையினரின் உதவியுடன் மணல் மூடைகளை பயன்படுத்தி தற்காலிக

வெள்ளத்தடுப்பு அணைகளை அமைக்கும் ஏற்பாடுகள் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.