Tag: சிவப்பு
கடல் கொந்தளிப்பு சிவப்பு எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பு சிவப்பு எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பு சிவப்பு எச்சரிக்கை ,கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது.
காலி முதல் ஹம்பாந்தோட்டை
சிலாபம் முதல் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள
கடற்பரப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்,
மேலும் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில்
கடல் அலைகள் 2.5 – 3.0 மீட்டர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் அலைகள் கரைக்கு வருவதற்கான வாய்ப்பு
இதன் காரணமாக புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடல் அலைகள் கரைக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ,பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருந்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சிலாபத்திலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள பகுதிகளுக்கு
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருந்தால் வானிலை ஆய்வுத் துறையால் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலாபத்திலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் கொந்தளிப்பானதாகவோ அல்லது மிகவும்
கொந்தளிப்பானதாகவோ இருக்கும் என்றும், மணிக்கு 50-60 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் அலைகள் சுமார் 2.5 – 3.0 மீ வரை அதிகரிக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் அடுத்த 24 மணி நேரத்தில் காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காலி முதல் புத்தளம் வரை கொழும்பு கடல் பகுதிகளுக்கு மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படை மற்றும்
மீன்பிடி சமூகங்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ,பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (13) காலை 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (14) காலை 09.00 மணி வரை செல்லுபடியாகும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
காலியிலிருந்து மாத்தறை
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் சில
நேரங்களில் மணிக்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும்.
காலியிலிருந்து கொழும்பு வழியாக புத்தளம் வரையிலான கடற்கரைக்கு அப்பலான பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50-55 கி.மீ
வரை அதிகரிக்கக்கூடும், என்பதுடன் அந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் ஓரளவு கொந்தளிப்பாகவோ அல்லது கொந்தளிப்பாகவோ இருக்கக்கூடும்.
புத்தளம் முதல் கொழும்பு
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பாலான கடற்பகுதிகளில் கடல்
அலைகளின் உயரம் சுமார் 2.5 – 3.0 மீட்டர் வரை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான பகுதிகளில் கடல் அலைகள் நிலத்தை
அடையும் வாய்ப்பும் இருப்பதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு
மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு
மீனவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு ,கடும் மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக் கடலில் நேற்று (15) மதியம் 12:00 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை நெருங்கும்.
இதன் விளைவாக, கடல் பகுதிகளில் பலமான காற்று வீசுவதுடன், கனமழை பெய்யும் மற்றும் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுகின்றது.
இதன்காரணமாக சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் அலைகள் நிலத்தை வந்தடையும் வாய்ப்பும் உள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
எச்சரிக்கை ,இலங்கை மக்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .எதிர் வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக் கடல் மற்றும் வங்களா விரிகுடா கடற் பரப்புகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் ,மற்றும் கடல் சார்ந்த சமூகத்தினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி, வானிலை அவதானிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல கிலோமீட்டர் வேகத்தில் புயல்கள் வீசுவதாலும் ,அவ்வேளை கடல் கொந்தளிப்பு காணப்படும் எனவும் ,
அதனால் கடலில் ஆழக்கடலில் மீன் படியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற மீன்பிடி படகுகள் ,ஆபத்தில் அல்லது புயல் சிகிச்சை விட கூடும் எனவும் ,அதனால் அவர்கள் உடனடியாக கடைக்கு திரும்பும் வேண்டுதலை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் பகுதியில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் கடும் எச்சரிக்கை
அதேபோல கடல் பகுதியில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன். கடலுக்குள் மீன்பிடிக்க செல்லப்படாமல் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
அதேபோல கடலோர பகுதியில் அமையப்பெற்றுள்ள வீடுகளுக்கும் மக்களுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த புயல் காற்று வீசப்படும் என்கின்ற நிலையில் தற்போது அவ்வழியாக பயணிக்கின்ற மக்கள் அல்லது இந்த வழியாக இருக்கின்ற வீடுகள் வீட்டு கூரைகள் மரங்களையும் நாம் புரிந்து கொள்ளக்கூடிய அபாயம் இருப்பதாலும்
மரங்களுக்கு கீழே கார்களை வண்டிகளை நிறுத்த வேண்டாம் என்கிற விடயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் எதிர்பார்க்கும் 24 மணித்தியாலத்தில் கடல் கூந்தலைப்பு காணப்படுவதால் கடலுக்கு மீனவர்கள் மற்றும் மக்களைச் செல்ல வேண்டாம் எனவும் ,
கடற்கரைக்கு உல்லாச பயணிகளை செல்ல வேண்டாம் எனவும் இதன் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

7 லட்சம் பேருக்கு சிவப்பு அறிவித்தல்
7 லட்சம் பேருக்கு சிவப்பு அறிவித்தல்
மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 லட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது, நாட்டின் மொத்த சனத் தொகையில், 70 லட்சத்துக்கும் அதிகமானோர் மின்சார நுகர்வோர்களாக உள்ளனர்.
அவர்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
7 லட்சம் பேருக்கு சிவப்பு அறிவித்தல்
மொத்த மின்சார பாவனையாளர்களில் 65 லட்சத்துக்கும் அதிகமானோர் திட்டமிட்டபடி மின் கட்டணத்தைச் செலுத்தி வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணமாக, நிலுவையில் உள்ள கட்டணங்களை செலுத்துவதற்கு 45 நாட்கள் கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
- குற்றவாளிக்கு மரண தண்டனை
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு
- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு
- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
- நாய்களை எரிக்க சுடலை
இரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?
இரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?
இரத்தம் ஏன் சிவப்பாக உள்ளது தெரியுமா? இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு இரத்தத்திலுள்ள பொருள்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதனின் உடலில் சுமார் 3 முதல் 4 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. திறப்பில்லாத தமனி, சிரை தந்துகிகளின் வழியாக
இரத்தம் உடல் முழுவதும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது. உலகிலுள்ள எல்லாப் பகுதிகளிலும் வாழும் ஆண்கள், பெண்களின் உடலில் ஓடுவது சிவப்பு நிற ரத்தமே.
இரத்தத்தின் நிறத்திற்கும் தோலின் நிறத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இரத்தம் ஏன் சிவப்பாக உள்ளது தெரியுமா? இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு இரத்தத்திலுள்ள
பொருள்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரத்தத்தில் பிளாஸ்மா, இரத்த வெள்ளைஅணுக்கள், இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில்
பாதியளவுக்கு மேல் பிளாஸ்மா நிரம்பி உள்ளது. இது மஞ்சள் நிறமுள்ள தடித்த திரவமாகும். இதில் புரதம், ஆன்டிபாடி, பைபிரி
னோஜின், மாவுப் பொருள், கொழுப்பு, உப்புகள் முதலானவை உள்ளன.
உடல் வளர புரதமும், விஷக்கிருமிகளை கொல்லவும், அவற்றின் விஷ நீரின் வீரியத்தைக் குறைக்க ஆன்டிபாடியும் வெட்டுக் காயத்திலிருந்து வரும் இரத்தத்தை நிறுத்த பைபிரினோஜினும்
உதவுகின்றன. இரத்த வெள்ளைஅணுக்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவும், பருமனில் பெரியதாகவும் உள்ளன. இவை சுமார் 0.001 மி.மீ. பருமன் உள்ளன. 700 இரத்த சிவப்பணுவிற்கு ஒரு
வெள்ளையணு வீதம் உள்ளன. இவை உடலில் நுழைந்து நோய் உண்டாக்கும் கிருமிகளை அழித்து உடலை நோய்த் தாக்குதலில் இருந்து காப்பாற்றி பாதுகாக்கின்றன.
இரத்த சிவப்பணு ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இவை தட்டுப் போன்று வட்டமாக இருபுறமும் குழியாக உட்கரு இன்றி உள்ளன. இவை சுமார் 0.008 மி.மீ. பருமனுள்ளவை.
பிராண வாயுவை நுரையீரல்களிலிருந்து உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனுள் சிவப்பு நிற ஹீமோகுளோபின் துகள்கள் நிறைந்துள்ளன. இவை சிவப்பாக இருப்பதுடன்
இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. இத்துகள்கள் இரும்பையும் புரதத்தையும் கொண்டுள்ளன.
பெண்ணின் ஒரு கியூபிக் மி.மீ. ரத்தத்தில் சுமார் 4.5 மில்லியன் இரத்தச் சிவப்பணுக்கள் உள்ளன. இரத்த சிவப்பணுக்கள்
குறைந்தால் அனீமியா நோய் தோன்ற வாய்ப்புள்ளது. சிவப்பணு சுமார் 4 மாதங்கள் ஆயுள் கொண்டவை. இவை எலும்பு மஜ்ஜையில் தோன்றி மண்ணீரலில் அழிகின்றன.
இரத்தத்தட்டுகள் மிகச்சிறியவை 0.002 மி.மீ. பருமனுள்ளவை. ஒரு கியூபிக் மி.மீ. இரத்தத்தில் சுமார் ஒன்றரை லட்சம் முதல் 4 லட்சம்
இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இரத்தம் உறைதலுக்கு இத்தட்டுக்கள் முக்கியமானவை. இரத்த தானத்தால் உடல் புத்துணர்வு பெறுகிறது
. மேலும் மாரடைப்பு உள்பட பல பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.





















