Tag: சவால்
வன்னிமைந்தன் சவால் பேச தயாரா
வன்னிமைந்தன் சவால் பேச தயாரா
வன்னிமைந்தன் சவால் பேச தயாரா வெளிநாட்டு கட்டமைப்புகளுக்கு வண்ணிமைந்தன் பகிரங்க சவால் விட்டு அவரது திட்டோத்திரத்தில் பேசியிருக்கின்றார் .
கடந்த 16 வருடங்களாக அமைப்புகள் எனக் கூறிக்கொண்டு மக்களுடைய உணர்வுகளை மிதித்து , தாயக தேசிய விடுதலைக்கு எதிராக செயல்படுவதாக அவர் குற்றம் சுமத்துகிறார் .
16 ஆண்டுகளாக சிங்கள தேசிய வாதம் ,தமிழருக்கு எதிராக தனது கருத்து க்களையும் ,அடக்குமுறைகளையும் நடத்தி வருகிறது.
எங்கள் இனம் எழுந்து வாழ வேண்டுமாக இருந்தால் ,எங்களுடைய இனமான விடுதலை அந்த மண்ணில் நிமிர வேண்டிய எழுச்சி பெறவேண்டிய காலம் இருக்கிறது.
ஆனால் தன்மானத் தமிழர்களாக வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் இனமான மக்கள் இன்று தலை தெறிக்க ஓடுகின்ற நிலையும் ,அதிலிருந்து மீண்டு எழ முடியாத சூழலும் உருவாகிக் கொண்டிருக்கிறது.
தாங்கென்னா வலிகளையும் துயரங்களையும் சுமந்து வாழுகிற என் தமிழ் உறவுகள் ,இனி எப்படி எழுச்சி கொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.
ஆகவே தான் சொல்கிறோம் நாங்கள் நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் ,எங்கள் இனம் எழுந்து வாழ வேண்டுமாக இருந்தால் நாங்கள் நாங்களாக மாற வேண்டும்.
ஆதலால் தான் வன்னிமைந்தன் வெளிநாட்டு விடுதலைப் புலிகள் சர்வதேச அமைப்புகளை ஒன்று சேரும்படி அழைப்பு விடுத்துள்ளார் .
இல்லாவிட்டால் நேரடியாக வந்து பேசுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அழைப்பை ஏற்று இவர்கள் வந்து பேச வேண்டும் என்பது அவரது கோரிக்கையாகிறது.
இல்லாவிட்டால் வரும் ஆண்டுக்குள் நீங்கள் காணாமல் போவீர்கள் என அவர் எச்சரிக்கிறார் .
காணொளியில் முழு விவரம் கேட்கத் தவறாதீர்கள்
ஜனாதிபதிக்கு சவால் விடுத்த திகா
ஜனாதிபதிக்கு சவால் விடுத்த திகா
ஜனாதிபதிக்கு சவால் விடுத்த திகா ,இன்றைய ஜனாதிபதி இன்னொரு அநுரகுமார திசா நாயக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது மலையக மக்களின் பிரச்சினைகளை பற்றி அதிகமாக
பேசியுள்ளார்.
அவர் இப்போது ஜனாதிபதியாக ஆட்சியில் இருக்கின்ற காரணத்தினால் முன்னர் பேசிய விடயங்களை இப்போது
நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்
மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த தோட்டக் கமிட்டி தலைவர்கள் அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்ர்களுக்கான தமிழ்
முற்போக்கு கூட்டணியின் கூட்டம் நேற்று (13) அட்டன் கோல்டன் மஹால் மண்டபத்தில் மலைய மக்கள் முன்னணி தலைவர் வி. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான மயில்வாகனம் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற உள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தியின் அலை வீசினாலும் நுவரெலியா மாவட்ட மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக ஐக்கிய
மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்துக்கு பெருமளவு வாக்குகளை அளித்து இருந்தார்கள். அதற்காக நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக அதன் டெலிபோன் சின்னத்தில் கூட்டணியை சேர்ந்த நானும் இராதாகிருஷ்ணன், உதய குமார் ஆகியோரும் போட்டியிடுகின்றோம். நாம் வெறுமனே வந்து
மக்களிடம் வாக்கு கேட்கவில்லை கடந்த காலங்களில் நாம் செய்த சேவையை மக்களிடம் முன் வைத்து தேர்தலில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்கின்றோம்.
சிலர் தேர்தல் காலம் வரும் போது மாத்திரம் மக்களிடம் வந்து வாக்கு கேட்பார்கள். அவர்கள் ஐந்து வருடங்களாக எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை.
அவர்களை மக்கள் நிராகரித்து விட்டதால் இதுவரை காலமும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. எனவே மீண்டும் மக்களிடம்வந்து பொய்யான
வாக்குறுதிகளை தந்து வாக்கு வேட்டையாடவும் எமக்கு இருக்கின்ற அரசியல் பலத்தை குறைக்கவும் நாடகமாடுகின்றார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் அரசியலில் வென்றாலும் தோற்றாலும் மக்களுடனேயே இருப்போம் என்பதை கடந்த காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு நாம் செய்து காட்டியுள்ளோம்.
இந்த முறை நாம் செய்த சேவைகளை முன் வைத்து மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.
இன்றைய ஜனாதிபதி மலையக மக்கள் மீது நம்பிக்கை அக்கறையும் அனுதாபமும் கொண்டவர் என்பதை மக்கள் அறிவார்கள். அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது பாராளுமன்றத்தில் மிகவும் அக்கறையுடன் எடுத்துக் கூறி மலையக மக்களை கவர்ந்திருந்தார்.
இப்போது அவர் ஜனாதிபதி பதவியில் இருப்பதால் எமது மக்களுக்கு தேவையானதை செய்யக்கூடிய அருமையான சந்தர்ப்பம் அவருக்கு கிட்டியுள்ளது எமது மக்களுக்கு 2000 ரூபாய் சம்பளம் தேவை, அவர்கள்
குடியிருப்பதற்கு வசதியான நவீன குடியிருப்பு தேவை என்பதை வலியுறுத்தி வந்த அவர் அவற்றை நடைமுறைப்படுத்தி காட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுகின்றோம். நாம் வெறுமனே மக்களை கவர்வதற்காக வாய் வார்த்தை கூறி ஏமாற்றியவர்கள் அல்ல என்பதை எமது மக்கள் அறிவார்கள்.
நான் நல்லாட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது தனி வீட்டுத்திட்டம், இந்திய வீட்டுத் திட்டம், மலையக அதிகார சபை, பிரதேச சபைகள்,
செயலகங்கள் அதிகரிப்பு போன்ற உரிமை சார்ந்த பல விடயங்களை செய்து கொடுத்துள்ளோம்.
இப்பொழுது நாம் எதிர்க்கட்சியில் இருந்தாலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். எமது மக்களின் உரிமைகள் தேவைகளைப் பற்றி பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்றார்.
எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்
எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்
எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால் விட்டுள்ளார் ,இலங்கையில் முடிந்தால் என்னை தூக்கி பார் என பகிரங்க சவால் .
பிரான்ஸ் டிக்டாக் ராசன் மக்களுக்கு உதவி செய்வதாக தெரிவித்து ,மக்கள் வழங்கும் பணத்தை பெற்று அதன் ஊடக உதவிகளை செய்து வருகிறார் .
புளியங்குளம் காவல்நிலையத்தில் தாக்குதல்
வவுனியாவை சேர்ந்த பொது மகன் சிலரை ,புளியங்குளம் காவல் நிலையத்தில் வைத்து ,போலீசாருக்கு லஞ்சம் வழங்கி தாக்குதல் நாடத்தியதாக பாதிக்க பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
அதனை அடுத்து தற்போது இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் மீது ,பாதிக்க பட்டவர்கள் புகார் வழங்கியதுடன் ,மனித உரிமை அமைப்பிலும் முறையீடு செய்ய பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்களுக்கு உதவி செய்வது என்ற போர்வையில் இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் சில சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக ,பாதிக்க பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
மக்கள் ராசன் மோதல்
இதுவரை 117 குழாய் கிணறுகளை பாதிக்க பட்ட மக்களுக்கு இவர் நிறுவி கொடுத்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .அது வரவேற்க தக்க ,பாராட்ட பட வேண்டிய செயல் .
மனித நீதி நேர்மையை மதிக்கும அன்பர்கள் எவரும் இதனை வரவேற்பார்கள் ,
ஆனால் பிரான்ஸ் டிக்டாக் ராசன் சமீபகால செயல்பாடுகள் அருவருக்க தக்க நிலையில் மாற்றம் பெற்று செல்கிறது .
அவையாவன .பொலிஸ் நிலையத்தில் வைத்து ,மக்களை தாக்கியமை ,பிரான்ஸை வசிப்பிடமாக கொண்ட ராசன் ,பிரான்ஸ் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான செயல் பாடுகளை செய்து வருகின்றார் .
இலங்கையில் ,இலங்கை காவல்துறை போன்றவர்களை தனக்கு சார்பாக பயன் படுத்தி ,சமூக விரோத செயலில் ஈடுபடுவது அதிகரித்து காணப்படுகிறது .
பச்சை மிளகாய் என்ற டிக் டாக் வாலிபன் மீதான வன்முறை தாக்குதல் .வவுனியாய் சேர்ந்த இருவர் மீதன தாக்குதல் .
அதனை அடுத்து, இதோ இந்த படத்தில் உள்ளவருடன் எட்டாம் திதி வெளியிட்ட காணொளியில் ,இலங்கையில் ஒருவரும் என் தலைமுடியை கூட புடுங்க முடியாதுஎன இந்த நபர் தெரிவிக்கின்றார் .
பிரான்ஸ் டிக்டாக் ராசன் விடும் எச்சரிக்கை
இது ஒட்டுமொத்த தமிழருக்கு இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் விடும் எச்சரிக்கையாக காணப்படுகிறது .
இவரை நம்பி வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பியவர்கள் விபரங்களை ,பிரான்ஸ் பொலிஸார் பெற்று, பிரான்ஸ் டிக் டாக் ராசானை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்க பாடலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இவருக்கு பின்புலத்தில யார் உள்ளது என்பதை ,பிரான்ஸ் ,இலங்கை தூதரகம் பதில் அளிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் முன்வைக்க சிலர் தயாராகி வருவதாக தெரிவிக்க படுகிறது .
பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் விடுத்துள்ள ,சமூக விரோத மிரட்டல் பேச்சுக்கள் எடுத்து செல்ல தயாராகி வருகிறது .
மேலும் லண்டன் சாரு என்கின்ற பெண் பல கோடிகளில் இலங்கையில் ,நிலங்கள் ,சொத்துக்கள் என்பன வாங்கி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
அதனை அடுத்து பிரான்ஸ் டிக்டாக் ராசன் வெளியிட்ட இந்த காணொளிகளை ஆதாரங்களாக வைத்து ,பிரான்ஸ் டிக் டாக் ராசான் மற்றும் லண்டனை சேர்ந்த சாறு என்ற தமிழ் பெண் மீது நாடவடிக்கை மேற்கொள்ள சில தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் சமுகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது .
ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மிரட்டல் விடும் ராசன்
பொதுமக்களுக்கு சேவை என்கின்ற அடிப்படையில் இவ்வாறான சமூக விரோத சக்திகளுடன் ஒன்றிணைந்து ,ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மிரட்டல் விடுகின்ற செயல்கள் ,
பிரான்ஸ் டிக்டாக் ராசன் மீது நன்மதிப்பை வைத்திருந்த மக்கள் ,இவ்வாறான கீழ் நிலை செயல்பாடுகளினால் அவரை வெறுக்கும் நிலை காணப்படுகிறது .
பிரான்ஸ் அரசு ராசனை இது தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக முன் வைக்க படுகிறது .
இலங்கையில் கடத்தல் ,காணாமல் போதல் ,படுகொலை என்பன தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கையில் உயிருக்கு ஆபத்து என தெரிவித்து பிரான்சில் அகதி தஞ்சம் கோரிய இதே பிரான்ஸ் டிக்டாக் ராசன், எவ்வாறு ,இலங்கையில் எனது முடிய கூட புடுங்க முடியாது என கூறுவார் என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
பிரான்ஸ் குடிவரவு குடியகல்வு அமைச்சு
எனவே பிரான்ஸ் குடிவரவு குடியகல்வு அமைச்சு ,இவரது இந்த காணொளிகளில் வெளியிட்ட பேச்சுக்களை ஆராய வேண்டும் என்பதே பாதிக்க பட்ட மக்கள் கருத்தாக உள்ளது .
இலங்கையில் மக்களுக்கு உதவி செய்கின்ற எந்த யுடுப்பர்களோ ,அல்லது தனியார் நிறுவனங்களோ பணியாளர்களோ ,இவ்விதம் மக்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுவது இல்லை .
ஆகையால் இப்பொழுது பாதிக்க பட்ட மக்கள் தரப்பினர் முன் வைத்த குற்ற சாட்டுக்கள் ஏற்புடையவை என்கின்ற நிலையை காண்பித்துள்ளளது .
மக்களுக்கு உதவி செய்திடும் சமூக நல ஆர்வளர்கள் எனக்கூறும் பிரான்ஸ் டிக்டாக் ராசன்,மக்கள் வீடுகளுக்கு சென்று கறி சட்டிக்குள் விரலை விட்டு நக்கி பார்க்கும் அருவருப்பான செயலை செய்துள்ளது ,அவர் வெளியிட்ட காணொளியில் காண படுகிறது .
பிரான்சில் வசித்ததாக கூறும் இவர் ,பிரான்ஸ் நாட்டில் எந்த ஒரு குடிமகனின் செய்திடாத இழிவான செயலை செய்துள்ளார் ,அது காணொளியை பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது .
அத்துடன் தான் மதுகுடிக்கும் காட்சிகளை காணொளியாக வெளியிடுவது என்பன காணபடுகின்றன .
இலங்கை சட்டத்தை கையிலெடுத்து மக்களை தாக்குவது ,அதன் நீட்சியாகி எட்டாம் திகதி வெளியிட்ட வீடியோவில் , பிரான்ஸ் டிக் டாக் ராசானுடன் ஒருவர் வந்து நின்று தலை முயடியை கூட இலங்கையில் புடுங்க முடியாது என சூளுரை விடுவது ,
இதன் ஊடாக தான் ஒரு மாபியாவாக தன்னை அடையாளம் காட்டியுள்ளார் .அதுவே சட்டங்களை மதிக்கும் மக்களுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக உள்ளது .
சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ராசன்
இது சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் அடாவடியின் செயலாக மக்கள் சமூகம் கருதுகிறது .
மக்களை தொடராக அச்சுறுத்தும் நடவடிக்கையில் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ஈடுபட்டுளள்து அம்பலாகியுள்ளதால் ,பிரான்ஸ் போலீசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
மக்களுக்கு உதவி செய்திடும் பிரான்ஸ் டிக் டாக் ராசான் ,செய்திடும் சிந்திக்கும் தன்மை அற்ற இவ்வாறன கீழ் நிலை செயல்பாடும் இவரை ஏற்று வரவேற்றவர்கள் இவரை வெறுக்கும் நிலைக்கு தள்ளி செல்கிறது .
இலங்கை போலீசார் கைது செய்திட மறுத்தால் ,பிரான்ஸ் பொலிசார் இவரது இந்த காணொளிகளை பார்வையிட்டு மேற் கூற பட்ட விடயங்களில் ராசனை விசாரிக்க வேண்டும் என்பது பாதிக்க பட்ட மக்கள் விருப்பமாக உளள்து .
Featured






























