9 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

9 இந்திய மீனவர்கள் கைது

9 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ
Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ

லண்டனில் கலக்கிய தமிழ் பெண்கள் வீடியோ

லண்டன் குரோலி பகுதியில் இடம்பெற்ற காராட்டி நிகழ்வு ,
18 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பங்காற்றி சிறப்புற இடம்பெற்று முடிவுற்றது .

லண்டனில் இளங்கோ மார்க் எனும் தமிழரினால் நடத்தி முடிக்க பட்ட மாபெரும் சாதனை நிகழ்வின் இரண்டாம் பாதிப்பு .

காணொளியை முழுவதுமாக பாருங்கள் மக்களே .

ethirinews குழுமத்தோடு தொடர்பு கொள்ள 0044 7536707793

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு

ஒரு லட்சகம் ஏக்கர் சில இராணுவத்தால் ஆக்கிரமிப்பு

இலங்கை வடக்கு முல்லைத்தீவு பகுதியை அண்மித்த தமிழர் பாரம்பரிய பிரதேசங்களாக விளங்கிய ஒரு லட்சம் ஏக்கர், அபகரிக்க பட்டுள்ளதாக திருவாளர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்

முல்லைதீவு மாவட்டங்களுக்கு நெல் உற்பத்தியை தருவித்து ,அதன் மிகுதியை ஏற்று தமிழர்கள் ,சிங்கள இனவாத அக்கிரமிப்பினால் செயல் இழந்து ,வாழ்வாதாரம் முடக்க பட்டு ,பெரும் துன்பியல் நிலையில்
சிக்கி தவித்து வருவதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார் .

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
    Your browser does not support iframes. Your browser does not support iframes. கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி கல்பிட்டியாவின் பாலக்குடவா பகுதியில் 26 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் (03) நடந்த இந்தத் தாக்குதலில் காயமடைந்த அப்பெண், கல்பிட்டியா மருத்துவமனையில் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் அனுமதிக்கப்பட்டிருந்த…
  • சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
    Your browser does not support iframes. Your browser does not support iframes. சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் 36 வயது நபர், குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி துணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகளுக்குக் கிடைத்த புகாரின்…
  • அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
    Your browser does not support iframes. Your browser does not support iframes. அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ராபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர், கடல்சார் வர்த்தகம், முதலீடு கடல்சார் வர்த்தகம், முதலீடு மற்றும் அமெரிக்க வணிகங்களையும் நுகர்வோரையும் இந்தோ-பசிபிக் பிராந்திய சந்தைகளுடன் இணைக்கும் கப்பல்…
  • பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
    Your browser does not support iframes. Your browser does not support iframes. பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வானிலை ஆய்வு மையம் ‘ஆம்பர்’ எச்சரிக்கையை விடுத்துள்ளது….
  • கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
    Your browser does not support iframes. Your browser does not support iframes. கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு இலங்கைப் பிரதமர், கல்வி, உயர் கல்வி இலங்கைப் பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற தகுதியில், பூட்டானின் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் யீசாங் டி தாபாவுடன், கல்வித் துறையில் ஒத்துழைப்பை…
  • முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது
    Your browser does not support iframes. Your browser does not support iframes. முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஆணையத்தால் கைது செய்யப்பட்டார் ஒரு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு விசாரணை தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) முன்னாள் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். , பெர்னாண்டோ இன்று இலஞ்ச ஆணையத்திற்கு வாக்குமூலம் அளிக்க…
  • மோட்டார் சைக்கிள் திருட்டு
    Your browser does not support iframes. Your browser does not support iframes. மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் திருட்டு, பாதாள உலகத் தொடர்புகள் காரணமாக “பொம்புவலா சுத்தா” கைது பாதாள உலக நடவடிக்கை பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கியதாகக் கூறப்படும் “பொம்புவலா சுத்தா” என அறியப்படும் 30 வயது சந்தேக நபர், களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தெற்கு பொலிஸ்…
  • டெங்கு அபாயம் தொடர்கிறது
    Your browser does not support iframes. Your browser does not support iframes. டெங்கு அபாயம் தொடர்கிறது டெங்கு அபாயம் தொடர்கிறது குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியிருந்தாலும் டெங்கு அபாயம் தொடர்கிறது என அதிகாரி தெரிவித்துள்ளார். டெங்கு பாதிப்புகள் ஒப்பீட்டளவில் தற்போது டெங்கு பாதிப்புகள் ஒப்பீட்டளவில் குறைந்த அளவில் பதிவாகி வந்தாலும், நோயின் அபாயம் முழுமையாகக் குறையவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்…
  • ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
    Your browser does not support iframes. Your browser does not support iframes. ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை அன்று நடைபெறும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மரணமடைந்த ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு இந்த சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ நேற்று (02) பம்பலப்பிட்டியாவில்…
  • இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
    Your browser does not support iframes. Your browser does not support iframes. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்முன்னாள் பிரதிப் பொதுச்செயலாளர் அளித்த புகார் தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) முன் பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள். பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிப் பொதுச்செயலாளர் பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன அளித்த புகார்…
பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி
Posted in இலங்கை செய்திகள்

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த மௌலீஸ் எனும் 09 மாத குழந்தை இன்றைய தினம் (24) தாய் பால் அருந்திய நிலையில் பால் புரைக்கேறி உள்ளது.

அதனை அடுத்து பெற்றோர் குழந்தையை நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , குழந்தை உயிரிழந்து விட்டது என வைத்தியர் அறிக்கையிட்டார்.

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி

குழந்தையின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் வைத்தியசாலையில் கோரிய போது , யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையை பெற்றே சடலத்தை கையளிக்கலாம் என நெடுந்தீவு வைத்தியசாலையில் கூறியுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியை நெடுந்தீவு வைத்தியர் தொடர்பு கொண்டு கேட்ட போது , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்துள்ளார்.

அதனை அடுத்து குழந்தையின் தாயிடம் , குழந்தையின் சடலத்தை ஒப்படைத்து , யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

தாய் , தனது குழந்தையின் சடலத்துடன் , நெடுந்தீவில் இருந்து படகில் குறிகாட்டுவான் பகுதிக்கு வந்து , அங்கிருந்து வேலணை வைத்தியசாலை நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து ,அதில் குழந்தையின் சடலத்துடன் தாய் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.

பால் புரைக்கேறி 9 மாத குழந்தை பலி

யாழ்.போதனா வைத்தியசாலையில், நோயாளர் காவு வண்டியில் எவ்வாறு சடலத்தை ஏற்ற முடியும் என கேள்வி எழுப்பி தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க விடாமல் பல மணிநேரம் குழந்தையின் சடலத்துடன் காக்க வைத்துள்ளனர்.

பின்னர் நீண்ட இழுபறியின் பின்னர் தாயை நோயாளர் காவு வண்டியில் இருந்து இறங்க அனுமதித்து , குழந்தையின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் ஒப்படைக்க அனுமதித்துள்ளனர்.

மனிதாபமானமின்றி , குழந்தையின் சடலத்துடன் தாயை நீண்ட நேரம் நோயாளர் காவு வண்டியினுள் காக்க வைத்தமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்

நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் உள்ள களப்பில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

குறித்த பெண் 40-45 வயதுடையவர் எனவும், சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும், வெள்ளை மற்றும் கறுப்பு நிற கோடுகள் கொண்ட டி சேட் மற்றும் கருப்பு பாவாடை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்ற வளாகத்தில் பெண்ணின் சடலம்

மரண விசாரணையின் பின்னர் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

சுற்றிவளைப்புக்கு சென்ற அஹங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயம் அடைந்ததுடன், கல்வீச்சு காரணமாக ஜீப் வண்டியின் பின்பக்க கண்ணாடியும் சேதமடைந்துள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைப்பதற்காக வெதகேவத்தை, தித்தகல்ல, பகுதிக்கு சென்றிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

375 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட நபரை ஜீப் வண்டியில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர முற்பட்ட போது, சந்தேகநபரை மீட்பதற்காக பொலிஸ் அதிகாரிகளை சுற்றிவளைத்து 8 பேர் கொண்ட குழுவொன்று பொல்லுகள் மற்றும் கற்கலினால் தாக்குதல் நடத்தியுள்ளது.

சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

பொலிஸ் விசாரணையில் பொலிஸ் உப பரிசோதகரை பொல்லினால் தாக்கிய நபர், சம்பவத்தின் பின்னர் கடற்றொழிலுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பதில் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் கொனகஹஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பில் குறித்த சந்தேகநபருக்கு மேலதிகமாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இளம் வர்த்தகர் ஒருவர் இன்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே இதில் உயிரிழந்துள்ளார்.

உடல் நலக்குறைவுக்காக மருந்து உட்கொண்டதாக கூறப்படும் இந்த நபர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக குருந்துவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்தார்.

கொழும்பில் வர்த்தகர் சடலமாக மீட்பு

கட்டிடத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிறுமியை கடத்த முயன்றவர் கைது

சிறுமியை கடத்த முயன்றவர் கைது

காலி முகத்திடலிற்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 7 வயதான சிறுமியை கடத்த முயன்ற 33 வயதான நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் உடா புஸ்ஸல்லாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு

கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு

நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இருவரின் சடலம் திங்கட்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளது.

டயகம பிரதேசத்தை சேர்ந்த வடிவேல் அரவிந்த்த குமார் (23) என்பவருடைய சடலம் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் இடம்பெற்ற ஏத்துக்கால கடற்பகுதியில் சிறிது தூரத்தில் இருந்தும், கொஸ்லாந்தை பிரதேசத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந் (21) என்பவருடைய சடலம் முற்பகல் 9. 40 மணியளவில் ஏத்துக்கால கடற்பகுதியில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.

கடலில் காணாமல்போன மூவரில் இருவர் சடலமாக மீட்பு

மேலும் சுண்ணாகம் பிரதேசத்தை சேர்ந்த ஜெயலக்ஷ்மனின் (23) சடலத்தை தேடும் நடவடிக்கை தொடர்ந்து வருகின்றது

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் பணிபுரியும் குறித்த இளைஞர்கள் தமது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை(23) நீர்கொழும்பு பிரவ்ன்ஸ் பீச் ஹோட்டல் அமைந்துள்ள கடற் பகுதியில் குளிக்க சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி மரணமாகியுள்ளனர்.

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை

புலிகளின் தலைவர் பிரபாகரனால் வடக்கு கிழக்கிலே முதலாவதாக சுட்டுக் கொல்லப்பட்ட அரசியல் படுகொலை யாழ். முன்னாள் மேஜர் அல்பிரட் துரையப்பா இறுதியான அரசியல் படுகொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரவிஸ்டம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தல் 22 ஆம் திகதி ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஈரா. துரைரெட்ணம் தலைமையில் தியாகிகளை நினைவுகூருவோம் நினைவேந்தலில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.

உண்மையில் இந்த தியாகிகளை நினைவு கூறுவரும் போது எனது மனதை உறுத்தும் ஒரு செய்தி நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம்.

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை

இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம் தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிமிம்சை போராட்டத்தில் ஆரம்பித்து ஆயுத போராட்டத்திற்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது.

ஆயுத போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போரட்டத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் படித்துக் கொண்டவர்கள் இணைந்தனர் அதில் ஒருவர் தான் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா. அவருடன் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நாட்டிலே 1983 இல் இடம்பெற்ற மிக மேசமான இன அழிப்புக்கு பின்னர் விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது, பல போராட்ட இயக்கங்கள் விடுதலை வேண்டிய ஆயுதம் ஏந்தி போராடினாலும் முன்னனியில் 5 இயக்கங்கள் போராடின.

அதில் 3 இயக்கங்கள் தேசிய முன்னணியாக ஒற்றுமையாக செயற்பட 1984 அடி எடுத்து வைத்த பின்னர் 1985 விடுதலை புலிகளும் முன்னணியில் இனைந்தனர்.

1983 இல் இருந்து 87 வரை உலகதமிழர் இடையே பேசும் பொருளாக இருக்கும் 13 ஆவது திருத்த சட்டம் அதன் ஊடாக வந்த மாகாண முறைமை சட்டம் ஏற்படுத்தப்பட்டு இந்த 83 இற்கும் 87 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதில் ஒரோ

ஒரு போராட்ட தலைவர் தமிழ் ஈழு விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரட்ணம் 1986 மே 6 ஆம் திகதி கொல்லப்பட்டதுடன் 1987 ஆம் யூலை 29 ஆம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாணசபை முறைமை வந்தது.

முதலாவது அரசியல் படுகொலை செய்த புலிகளின் தலைவரே இறுதி அரசியல் படுகொலை

அந்த மாகாண சபையை நடாத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது அதனை ஏற்றுக் கொண்டனர்.

அந்த இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது அதில் 7 பேரை புலிகள் நியமித்தனர் ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் அதன் தலைமைத்துவம் யாருடன் செல்லவேண்டும் என்பதால் அது நிறைவேறாது சென்றது 1988 இறுதியல் மாகானசபை தேர்தல் அதில் கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் மாகாணசபை முறையை ஏற்குமாறு கேட்ட போது அதனை அவர் மறுத்தார். அவ்வாறே அதனை ரெலோவும் எற்கவில்லை இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா எதிர்கால சிந்தனையுடன் இதனை ஏற்று கொண்டதையடுத்து இணைந்த வடகிழக்கு மாகாணசபை உருவாகியது.

விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் நா. உறுப்பினராக இருந்த சாம்தம்பிமுத்து அவரது மனைவி உட்பட தமிழ் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்

லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop vis
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop visa

லண்டனில் வேலை செய்ய விசா ஓடி வாங்க |uk work permit visa in tamil|london jop visa

லண்டனில் வேலை விசா பெற்று மாதம் ஒன்றுக்கு எட்டு லட்சம் ரூபாய்களை சம்பாதிக்க இலக்குவன் வழி .

பல தமிழர் கடைகள் இப்பொழுது லங்கையில் இருந்து வேலைக்கு ஆட்களை அழைக்கின்றனர் .

அவ்வாறு அழைக்கும் அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது தொடர்பான ,விபரங்கள் காணொளியில் உள்ளது பாருங்கள் .

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பார ஊர்தியுடன் புகையிரதம் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்தார்.

ஏ9 வீதியில் இருந்து திருநாவற்குளம் பகுதிக்கு சென்ற பார ஊர்தியே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டது.

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து

இதன்போது பார ஊர்தி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பகுதியில் உள்ள புகையிரத கடவையில் பல தடவைகள் விபத்து ஏற்பட்ட போதிலும் காவலாளிகள் நியமிக்கப்படும் தொடர்பிலும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

இலங்கையில் சீன எரிபொருள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சீன எரிபொருள்

இலங்கையில் சீன எரிபொருள்

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் முதல் இரண்டு எரிபொருள் ஏற்றுமதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக பெற்றோலிய இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக வெளிப்படுத்தினார்.

அதன்படி, இரண்டு ஏற்றுமதிகளும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஆகஸ்ட் முதல் விலை சூத்திரத்தின் கீழ் அனைத்து எரிபொருள் நிறுவனங்களுக்கும் அதிகபட்ச சில்லறை விலை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது

கம்பளை வெவதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், குறிப்பிட்ட பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த சிறுமிகளின் தாய், வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளாதாகவும் தனது தந்தையின் பாலியல் வன்புணர்வை தாங்கிக்கொள்ள முடியாமையால், தங்களுக்கு நேர்ந்ததை அவ் இரு

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் தந்தை கைது

சிறுமிகளும் வகுப்பாசிரியையிடம் தெரிவித்துள்ளதுடன் வகுப்பாசிரியை வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிறுமிகளை மீட்டு தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமிகள் இருவரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், சந்தேக நபரான தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்

பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்

பிறந்தநாள் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதில் யுவதி ஒருவர் பலியானதுடன் ஒன்பது பேர் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் சர்கியூலர் வீதியுள்ள வீடொன்றில் ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கத்திகள் மற்றும் குண்டாந்தடிகளுடன் புகுந்தவர்கள், அங்கிருந்தவர்களை வீட்டுக்குள் சிறைப்பிடித்து பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அத்துடன் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.

பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்

இதனால், யுவதி பலியானதுடன், காயமடைந்த 9 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, முகங்களை மூடிக்கொண்டு வீட்டுக்குள் உள்நுழைந்தவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து அந்த வீடு பற்றியெறிந்துள்ளது. இதனால், வீட்டுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாத்திமா சம்மா சப்தீர் (வயது 21 என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

லண்டனில் நடந்த காராட்டி திருவிழா video
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் நடந்த காராட்டி திருவிழா video

லண்டனில் நடந்த காராட்டி திருவிழா ,பதினெட்டு நாடுகளை ஒன்றிணைத்து தமிழர் புரிந்த மகத்தான சாதனை .

இந்த நிலவில் பீறிட்டான் இரன்டுவ தல்பாதிகள் ஐந்து பேர் ,மற்றும் முன்னாள் லண்டன் கரோ கவுன்சிலர் லண்டன் பாபா அவர்களும் பாரியாருடன் கலந்து சிறப்பித்தனர் ,

அதன் காட்சி பதிவுகள் இங்கே .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

Posted in இலங்கை செய்திகள்

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

வவுனியா, மன்னார் வீதயில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் நள்ளிரவு (20.07) இரவு இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக இளைஞன் ஒருவர் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, குறித்த மோட்டர் சைக்கிள் 4ம் கட்டைப் பகுதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவத்தில வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த வவுனியா மின்சார சபையில் கடமையாற்றும் 32 வயதுடைய சஜந்தன் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னளனர்.

Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்

தமிழர் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (21.07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்

இதில், அப்பகுதியைச் அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

தலவத்துகொடையில் நேற்று (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர், தலவத்துகொட வெலி பாறை பகுதியில் அமைந்துள்ள, பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமானது என நம்பப்படும் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 41 வயதுடைய நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்ய தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.