மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
Posted in இலங்கை செய்திகள்

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

மோடியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(21) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன தாயும் மகளும் சடலங்களாக மீட்பு

காணாமல் போன தாயும் மகளும் சடலங்களாக மீட்பு

அங்குருவாதொட்ட, உருதுதாவ பிரதேசத்தில் காணாமல் போன இளம் தாய் மற்றும் 11 மாதங்களேயான குழந்தையின் சடலங்கள் அங்குருவாதொட்ட இரத்மல்கொட காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24 வயதான வாசனா குமாரி மற்றும் அவரது 11 மாத மகள் தஷ்மி திலன்யா ஆகியேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன தாயும் மகளும் சடலங்களாக மீட்பு

அவரது கணவர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடளித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் WHO இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு

சஜித் WHO இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி Dr. Alaka Singh மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (20) இடம்பெற்றது.

இந்நாட்டில் தற்போது எழுந்துள்ள மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, தரம் குறைந்த பதிவு செய்யப்படாத மற்றும் அதிக விலைக்கு நாட்டிற்கு கொண்டு வந்த மருந்துகளால் அப்பாவி நோயாளிகள் உயிரிழந்துள்ளமை,

அரச மருத்துவமனைகளில் CT scan, MRI Scan போன்ற இயந்திரங்களின் தட்டுப்பாடு மற்றும் பராமரிப்பின்றி குறித்த இயந்திரங்களைப்

சஜித் WHO இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு

பயன்படுத்துதல், வைத்தியர்கள், சுகாதார அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை
Posted in இலங்கை செய்திகள்

முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்

முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்

பொது மக்களின் முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்க மறுத்தால் உடன் அறித்தருமாறு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.பி.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் சிரேஸ்ட அத்தியட்சகருக்கும் இடையில் வவுனியாவின் தற்போதைய நிலமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இருப்பினும் வவுனியா மாவட்டத்தில் சில பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களின் பல முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்க மறுப்பதாக சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்

அத்துடன் திருட்டு சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும் போதும் ஒரு சில பொலிஸார் அதன் உண்மையான பெறுமதிகளை மறைத்து தவறான அதாவது குறைந்த பெறுமதிகளை முறைப்பாட்டில் பதிவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற சம்பவங்கள் வவுனியாவில் இடம்பெற்றால் பொதுமக்கள் உடனடியாக எனக்கு அறியத்தரவும். எனது தொலைபேசி இலக்கமான 0718591340 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் எந்த நேரத்திலும் முறைப்பாடு செய்ய முடியும்.

வேலைப்பளு காரணமாக தொலைபேசியில் பதில் அளிக்காத சந்தர்ப்பத்தில் குறித்த தொலைபேசிக்கு தன்னால் மீள தொடர்பு ஏற்படுத்தப்பட்டு முறைப்பாடு பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது சாணக்கியன்
Posted in இலங்கை செய்திகள்

எமக்கு பிச்சை வேண்டாம் உரிமை தான் வேண்டும்

எமக்கு பிச்சை வேண்டாம் உரிமை தான் வேண்டும்

தான் ரணில் ராஜபக்ஷ அல்ல, நான் ரணில் விக்கிரமசிங்க என்று அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தான் வழங்க போவதை நீங்கள் ஏற்று

கொள்ள போகிறர்களா இல்லையா என்று ஜனாதிபதி கேட்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

தமிழருக்கு இவ் நாட்டில் உரிமை உண்டு, எமக்கு நான் இதுதான் தருவேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எமக்கு பிச்சை போட்டு எம்மை ஏமாற்ற

வேண்டாம் எனவும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எமக்கு பிச்சை வேண்டாம் உரிமை தான் வேண்டும்

ஜனாதிபதியும் விரைவில் வீடு செல்ல வேண்டி வரும், எமக்கான உரிமைகளை சரியான முறையில் தராவிடின் நாட்டுக்கான கடன் அதிகரிக்குமே தவிர முதலீடுகள் கிடையாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு

மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று இன்று (20) அதிகாலை அப்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் சென்ற போது, குறித்த சந்தேகநபர் ​​டி-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு

இதன்போது, விஷேட அதிரடிப் படை அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ள நிலையில், காயமடைந்த சந்தேக நபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதுடையவர் எனவும், அவர் குற்றவியல் கும்பலைச் சேர்ந்த முக்கிய துப்பாக்கிதாரி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம்

328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம்

இன்று இரவு முதல் அமுலக்கு வரும் வகையில் 328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் இருந்து யாழ் சென்ற புகையிரதம் மாட்டுடன் மோதி விபத்து

கொழும்பில் இருந்து யாழ் சென்ற புகையிரதம் மாட்டுடன் மோதி விபத்து

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (19.07) மாலை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மாட்டுடன் மோதுண்டது. இதன் போது மாடு பலியான நிலையில் புகையிரதத்தின் இயந்திரப்பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரதம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

கொழும்பில் இருந்து யாழ் சென்ற புகையிரதம் மாட்டுடன் மோதி விபத்து

இதனை மீள் இயங்க வைப்பதற்கு பலவகையிலும் புகையிரத ஊழியர்கள் முயற்சித்த போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் புகையிரதம் தாண்டிக்குளத்திலேயே தரித்து நின்றது. பல மணி நேரமாகியும் புகையிரதம் பயணத்தினை தொடராத நிலையில் பயணிகள் ஏ9 வீதியில் சென்ற பேருந்தில் தமது பயணத்தினை தொடர்ந்தனர்.

மாலை 5.40 மணியளவில் விபத்து ஏற்பட்ட நிலையில் இரவு 9.30 மணியளவில் பிறிதொரு புகையிரத இயந்திரம் வருகை தந்து குறித்த புகையிரத்தினை இழுந்து சென்றிருந்தது.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 33 வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

வவுனியாவில் 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 33 வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சமுக பொலிஸ் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் நபர், குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றி வருகின்றார்.

வவுனியாவில் 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த 33 வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

குறித்த நபர் வவுனியா நகரையண்டிய பாடசாலையில் கல்வி கற்கும் குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவனை வவுனியா, குடியிருப்பு பகுதியில் வைத்து துஸ்பிரயோகம் செய்ததாக பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, ஈச்சங்குளம் பகுதிளையச் சேர்ந்த 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு

மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று நேற்று (19) அப்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் சென்ற போது, குறித்த சந்தேகநபர் ​​டி-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு

இதன்போது, விஷேட அதிரடிப் படை அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ள நிலையில், காயமடைந்த சந்தேக நபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதுடையவர் எனவும், அவர் குற்றவியல் கும்பலைச் சேர்ந்த முக்கிய துப்பாக்கிதாரி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டனுக்குள் பிள்ளையான் கருணா குழு
Posted in இலங்கை செய்திகள்

வட மாகாண மக்களை நாம் வெறுப்பதில்லை

வட மாகாண மக்களை நாம் வெறுப்பதில்லை

அடைய முடியாத இலக்குகளுக்காக எம்மை மோத விட்டு அழிய விட்டது மட்டுமில்லாமல், தங்களது செயல்களை இன்னும் நியாயப்படுத்தும் இந்த

சித்தாந்தக் காரர்களையே நாம் வெறுக்கிறோமே தவிர, நல்லூர் கந்தனையோ வடமாகண மக்களையோ நாம் என்றும் வெறுப்பதில்லை என்று இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை வரையறுத்தவர்கள் இவர்களது மூதாதையர்கள் போல் பேசுகின்றனர்.

வட மாகாண மக்களை நாம் வெறுப்பதில்லை

தங்களது இருப்புக்காகவும், கட்சிக்காகவும், மட்டுமே பேசினார்களே தவிர எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி உண்மையாக நேசிக்கும் மக்கள் நலன் சார்ந்த அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கருத்தில் கொள்ளாது திட்டமிடப்படாத செயற்பாடுகளே இவர்களின் நடவடிக்கையாகும்.

கிழக்கு மாகாண மக்களின் சவால்களை எதிர்கொள்ள படித்த சமூகத்தின் செயற்பாடு எவ்வளவு முக்கியம் என நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள எங்களது மக்களது வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் சிந்தனைகளை பாரம்பரிய பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட இந்த மண்ணிலே உற்பத்தி துறையை கட்டி எழுப்ப வேண்டியதே முக முக்கியமான வேலையாகும்.

உற்பத்தி செய்யக்கூடிய ஏற்றுமதி பயிர்களையே நாம் பயிரிட வேண்டிய தேவை உள்ளது பெரிய அளவு பொருளாதாரத்தை சிந்தித்து சிறிய அளவு பொருளாதாரத்தை நாம் இழந்து வருவது உண்மையாகும்.

வட மாகாண மக்களை நாம் வெறுப்பதில்லை

அடைய முடியாத இலக்குகளுக்காக எம்மை மோத விட்டு அழிய விட்டது மட்டுமில்லாமல், தங்களது செயல்களை இன்னும் நியாயப்படுத்தும் இந்த பிழையான வழிப்படுத்தலை தான் நாம் பிழை என சொல்கிறோமே தவிர

இறுமாப்புடன் கூடிய சித்தாந்த பிழை என சொல்வார்கள் இந்த சித்தாந்தக்காரர்களையே நாம் வெறுக்கிறோமே தவிர நல்லூர் கந்தனையோ வடமாகண மக்களையோ நாம் என்றும் வெறுப்பதில்லை என்றார்.

வீடு புகுந்து யுவதியை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸார் தவறு செய்தால்

பொலிஸார் தவறு செய்தால்

வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் C.P விக்கிரமசிங்கே அவர்கட்கும் ஊடகவியலாளர்களுக்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது

இதன்போது கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட சிரேஷ்ட போலிஸ் அத்தியட்கர் வவுனியா மாவட்டத்தில் பல பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களின் பல முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுக்கின்றனர்

எனவும் அதேவேளை திருட்டு சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும்போதும் ஒரு சில பொலிஸார் அதன் உண்மையான பெறுமதிகளை மறைத்து தவறான பெறுமதிகளை முறைப்பாட்டில்

பொலிஸார் தவறு செய்தால்

பதிவதாகவும் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன இவ்வாறு செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாம் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் இது போன்ற சம்பவங்கள் வவுனியாவில் இடம்பெற்றால்

பொதுமக்கள் உடனடியாக தமக்கு அறியப்படுத்துமாறும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் தெரிவித்துள்ளார்

பொதுமக்கள் தன்னை எந்த நேரத்திலும் அழைக்க முடியும் என்றும் 071-8591340 குறித்த தொலைபேசி ஊடாக தகவல்களை நேரடியாக தமக்கு அறிவிக்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்

தங்க நகைகளை திருடிய இந்திய பிரஜை உட்பட 9 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கள்ள காதலியை மிரட்டி நகையை பறித்த காதலன்

கள்ள காதலியை மிரட்டி நகையை பறித்த காதலன்

பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த 23 வயது இளைஞன், குறித்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அவரின் கணவனுக்கு அனுப்புவதாக மிரட்டி, பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை வலுக்கட்டாயமாக பறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கள்ள காதலியை மிரட்டி நகையை பறித்த காதலன்

குறித்த பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று தாம் இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது அந்தப் பெண்ணுடன் குறித்த இளைஞர் நிர்வாணமாகப் படம் பிடித்துள்ளார்.

அதனையடுத்து அந்த நிர்வாணப் புகைப்படங்களை பெண்ணின் கணவரிடம் காட்டுவதாகக் கூறி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1,785,000 பெறுமதியான தங்க நகைகளை வலுக்கட்டாயமாகப் பெற்றுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

நீர்கொழும்பைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
Posted in இலங்கை செய்திகள்

மதுரை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

மதுரை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

மதுரை – யாழ்ப்பாணம் இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமான சேவைகள் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

மதுரை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை

குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை – கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கான நேரடி விமான சேவையை ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கேகாலையில் அடுத்த மரணம்

கேகாலையில் அடுத்த மரணம்

கேகாலை வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்தினை பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன் பின்னர் அவருக்கு 13 நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட நிலையில், 14வது நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்ததால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேகாலையில் அடுத்த மரணம்

தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளதாக ஆண்டிபயாடிக் மருந்து இவ்வாறு கொடுக்கப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், அன்றைய தினம் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்ட 19 வது நோயாளி அவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக காணப்பட்ட காரணத்தால் இவ்வாறு ஒவ்வாமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் கேகாலை ஆதார வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேகாலையில் அடுத்த மரணம்

உயிரிழந்தவர் 57 வயதான கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் “அததெரண” விடம் குறிப்பிட்டுள்ளார்.

75 கால இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

குருந்தூர் மலையில் பெண்களின் மார்பகங்களில் பொலிசார் தள்ளியதாக கஜேந்திரன் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு

குருந்தூர் மலையில் பெண்களின் மார்பகங்களில் பொலிசார் தள்ளியதாக கஜேந்திரன் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு

குருந்தூர் மலையில் பெண்களின் மார்பகங்களில் பொலிசார் தள்ளியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குமுழமுனை பிரதேசம் என்பது தமிழர்களுடைய வரலாற்றுடன் தொடர்புடைய இடம். அங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. உடைந்த நிலையில் இருந்தாலும் தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக அங்கு வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்கள். யுத்தத்திற்கு பிற்பாடு கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன் அவ்விடத்தில் இருந்த ஆதி சிவன் ஐயனார் இனவாத வெறியர்களினால் அகற்றப்பட்டுள்ளது. உடைத்து எறியப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த இடத்தில் தமிழ் மக்கள் வழிபாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்துள்ள நிலமையில் கடந்த 14 ஆம் திகதியும் அந்த இடத்தில் பொங்கல் செய்து வழிபாடுகளை மேற்கொள்வதற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அந்த இடத்திற்கு சென்றிருந்தார்கள். நாங்களும் வழிபாடுகள் செய்ய சென்றிருந்தோம்.

குருந்தூர் மலையில் பெண்களின் மார்பகங்களில் பொலிசார் தள்ளியதாக கஜேந்திரன் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு

அப்போது அங்கு தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளும் சிங்கள இளைஞர்களும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நேரத்தில் பொலிசார் பௌத்த பிக்குளுக்கு ஆதரவாகவும், சிங்கள பௌத்த பேரினவாத கும்பலுக்கு சார்பாகவும் செயற்பட்டிருந்தார்களே தவிர, தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்ள இடையூறு செய்தமைக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் நாங்கள் ஆலய பீடத்தில் ஏறி வணக்க நிகழ்வுகளை செய்ய முற்பட்ட போது பொலிசார் தடை விதித்தார்கள். அந்த பீடத்திற்கு முன்பாக பொங்கல் செய்வதற்கு அடுப்பினை பற்ற வைத்த போது பொலிசார் தடை விதித்து காலால் உதைந்து அந்த தீபம் அணைக்கப்பட்டது.

அந்த பீடத்திற்கு முன்பாக அமர்ந்து பஜனைகளை செய்ய முற்பட்ட போது பௌத்த பிக்குகள் ஆலய பீடத்தில் ஏறி பிரித்து ஓதும் செயற்பாடுகளை செய்தார்கள். அப்போது எமது மக்களும் அந்த பீடத்தில் ஏறி வணக்க நிகழ்வுகளை செய்ய முற்பட்ட போது பொலிசார் தமிழர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது சலசலப்பு நிலமை தோன்றியது.

அதற்கு பிற்பாடு பௌத்த பிக்குகள் அந்த இடத்தில் இருந்து பொலிசாரால் வெளியேற்றப்பட்டனர். அதனைத் தெர்டந்து பொலிசாரினால் பலாட்காரம் பயன்படுத்தப்பட்டு வழிபாடுகளுக்கு வந்த தமிழ் மக்களும் வெளியேற்றப்பட்டனர். அந்த இடத்தில் பொலிசார் அங்கு நின்ற பெண்கள் சிலரின் மார்பகங்கள் மற்றும் நெஞ்சிவ் தள்ளி கேவலப்படுத்தினார்கள். அதேபோன்று முதியவர்கள், சிறுவர்கள் என்ற வேறுபாடு இல்லாது அனைவரையும் இழுத்து விழுத்தி அவர்களை அச்சுறுத்தி அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

நாங்கள் நிலத்தில் இருந்து பஜனை செய்து கொண்டிருந்த போது நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறிய பிற்பாடும் எனது சேட்டில் பிடித்து இரண்டு மூன்று முறை இழுத்து அந்த இடத்தில் இருந்து அகற்ற முயற்சி செய்தார்கள். முழங்காலால் எனது முதுகில் தள்ளி கீழே விழுத்தினார்கள். கைகளை பிடித்து இழுத்து நிலத்தில் போட்டு மோசமாக அவமானப்படுத்தினார்கள். அதேபேன்று முன்னால் மாகாண சபை உறுப்பினர் ரவிகரன், சமூக செயற்பாட்டாள் பீற்றர் இளஞ்செழியன், வேலன்சுவாமிகள் மற்றும் எங்களுடன் வந்திருந்த செயற்பாட்டாளர்கள் தவபாலன் உட்பட பலர் மோசமாக தாக்கப்பட்டர்கள். இது எங்களது வழிபாட்டு உரிமையை மறுக்கின்ற செயல். அடிப்படை உரிமையை மோசமாக மீறுகின்ற செயல். நாங்கள் மிக மோசமாக துன்புறுத்தல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். நீதிமன்றில் இந்த நிகழ்வை தடை செய்ய கோரி பொலிசாரால் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தடையுத்தரவு வழங்கப்படாது, நீதிபதி அவர்கள் தெளிவாக வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கியிருந்தாh. அதன் பிற்பாடு கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் தான் நேரடியாக இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்கள். வன்முறையை துண்டியதற்காக பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பொலிஸாரின் புதிய தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் புதிய தீர்மானம்

பொலிஸாரின் புதிய தீர்மானம்

உயிரிழப்பு விபத்துக்களில் விபத்திற்குள்ளாகும் வாகனங்களின் சாரதிகளை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி பரிசோதிப்பது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இவ்வாறு விளக்கமளித்தார்.

“தற்போது, ​​சாரதிகள் மது மட்டுமின்றி, விஷ போதைப்பொருட்களை உட்கொண்டு வாகனங்களை ஓட்டுகின்றனர். வரும் காலங்களில், இது குறித்து அடையாளம் கணுவதற்காக தேவையான உபகரணங்களை கொண்டுவந்து,

மது, போதைப்பொருள் சோதனைகள் தொடங்கப்படும். குறிப்பாக இவ்வாறானவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவரிடம் கொண்டு செல்லப்பட்டு, உரிய பரிசோதனைகள் செய்யப்படும். எதிர்காலத்தில்,

பொலிஸாரின் புதிய தீர்மானம்

குறிப்பாக வீதி விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட சாரதி, விஷ போதைப்பொருட்களை உட்கொண்டாரா என, மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்படுவார். இது குறித்து தற்போது கலந்துரையாடப்படுகிறது என்றார்.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரையில் 137 பேரூந்து விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 10 ஆம் திகதி வரை 1,135 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், 1,202 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தவிர, விபத்துக்களால் 2,088 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியதுடன், 4,450 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா மேலும் தெரிவித்தார்.

யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

அச்சுவேலி, பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று நேற்று (18) இரவு 9.20 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசி சேதமாகப்பட்டுள்ளது.

முகத்தை துணியால் மறைத்தவாறு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.

வீட்டில் இருந்த 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

உணவகங்கள் சுற்றி வளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

உணவகங்கள் சுற்றி வளைப்பு

உணவகங்கள் சுற்றி வளைப்பு

வாழைச்சேனை, ஓட்டமாவடி ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்குட்பட்ட உணவகங்களில் திங்கட்கிழமை (17) திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் சுமார் 48 உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டன.

அதில், சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்ட 19 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், 6 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் மீண்டும் சேவையில்
Posted in இலங்கை செய்திகள்

இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்

இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்

ஏழை மாணவர்களுக்கு எதுவித கட்டணமும் இன்றி பஸ் பருவகால சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

‘சிசு செரிய’ பாடசாலை பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கு வருடாந்தம் இரண்டு பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.

இலவச பஸ் பருவகால சீட்டுகள் வழங்கப்படும்

எனினும் நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக அதனை முழுமையாக வழங்குவதற்கு திறைசேரியில் பணம் கிடையாது.

அதனால் சிசு செரிய பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்வதில் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் துறையினருக்கும் பிரச்சினையாக உள்ளது.

அதனால் அமைச்சரவை அனுமதியுடன் அது தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக ஏழை மாணவர்களுக்கு எந்த கட்டணமும் அறவிடாமல் இலவசமாக பருவ கால சீட்டை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு கொஞ்சம் பணத்தையாவது செலுத்த முடியுமானவர்களிடம் மூன்றில் ஒரு பகுதி கட்டணத்தை அறவிட்டு மேலும் இரண்டு பகுதியை நிவாரணமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்