குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில 10 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 20 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

இந்த குண்டு தாக்குதலில் சிக்கி பல வாகனங்கள் , தீ பிடித்து எரிந்தும் ,பல கட்டங்கள் இடிந்தும் வீழ்ந்துள்ளன .

சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலினால் ,அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .

ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது .

பிரிட்டன் டோவர் எல்லை சோதனை மையத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் டோவர் எல்லை சோதனை மையத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

பிரிட்டன் டோவர் எல்லை சோதனை மையத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

பிரிட்டன் டோவர் எல்லையோர சோதனைப்குதி மையத்தின் மீது ,பெற்றோல் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

காரில் வருகை தந்த நபர் ஒருவர் ,திடீரென மூன்று பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளார் .

இவ்வாறு தப்பித்து சென்றவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

மேற்படி குண்டு தாக்குதலின் பின்புலம் தொடர்பில் ,காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இது தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

மேற்படி குண்டு தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு

பிரிட்டனுக்குள் ஒரே நாளில் 1000 அகதிகள் நுழைவு

பிரிட்டன் பிரான்ஸ் டோவர் எல்லை ஊடாக 1000 அகதிகள் பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர்

ஒரே நாளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் நுழைந்தது ,ஆளும் புதிய பிரதமருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

அகதிகள் விடயத்தில் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்ற முனைந்துள்ள அரசின் கொள்கை திட்டத்திற்கு, ஆப்பு வைக்கும் முகமாக இந்த குடியேற்ற வாசிகள் வரவு அமைந்துள்ளது .

இந்தியா பசுபிக் பகுதியில் பாரிய முகாம் அமைத்து ,பிரிட்டனுக்குள் நுழைந்த அகதிகள் கடத்த பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் .

மேலும் உகாண்டாவுக்கும் அகதிகளை பிரிட்டன் நாடு கடத்தி வருகிறது .

அவ்வாறான நிலையிலும் அகதிகள் வருகை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள்

போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு

போராளிகள் அதிரடி தாக்குதல் இரு நகரங்கள் மீட்பு

கிழக்கு கொங்கோ பகுதியில் எம் 23 எனறழைக்க படும் போராளிகள் அமைப்பினர் திடீர் தாக்குதலை நடத்தினர் .

இந்த தாக்குதலின் பொழுது ,இராணுவ வசமிருந்த இரு நகரங்கள் போராளிகள் வசம் வீழ்ந்துள்ளது .

தொடர்ந்து அரசு மற்றும் போராளி படைகளிற்கு இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .

கொங்கோவில் தொடரும் உள்நாட்டு போரினால் இரண்டு லட்சத்திற்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் .

இந்த இரு அரச நகரங்கள் மீட்க பட்ட நிலையில் ,தற்போது மக்கள் அகதிகளாக இடம் பெயர்நத வண்ணம் உள்ளனர் .

இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்

இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்

பிரிட்டன் ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் தான் கட்டியுள்ள டையினை , எடுதுவிட மறந்து வைத்து ,செவ்வி வழங்கும் காட்சிகளை, முக்கிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன .

இந்தியா ஆளும் பிரதமர் இந்தியர் சுனெக்கை, கிண்டலடிக்கும் நகர்வில் பிரிட்டன் முக்கிய ஊடகங்கள் செயல் ஆற்றி வருவதை இவை காண்பிக்கிறது .

இதன் மறுபுறம் எது என்பதை மக்களே நீங்களே கண்டு தெரிந்து கொள்ளுங்கள் .

ஆசிய நாட்டவர் என்பதனையும் ,அதனை எவ்வாறு இவர்கள் கிண்டல் அடிக்கின்றனர் என்பதை கவனிக்க .

இப்படியும் டை கட்டலாம் பிரிட்டன் பிரதமர் சுனெக் காட்டி கொடுத்தார்

சொல்ல போனால் ரிஷி சுனெக் ஆட்சியை, இரண்டு மாதத்தில் கவிழ்த்து விடும் நகர்வுகளில் ,இந்த உளவுத்துறை அரசியல் பின்புல ஊடகங்கள் செயலாற்றி வருவதை இந்த சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன .

என்றும் இல்லாதவாறு ரிஷி சுனெக் மீது இந்த ஊடகங்கள் தொடுத்து வரும் அதிரடி பார்ப்புரைகள் ,விரைவில் சுனெக் ஆட்சியில் இருந்து விரட்ட படுவார் என்கின்ற விடயத்தை கோடிட்டு காண்பிக்கிறது .

தொழில் கட்சி தாமே அடுத்து வரும் தேர்தலில் வென்று விட வேண்டும் என்கின்ற நிலையில் ,தனது அரசியல் சித்து விளையாடடை ஆரம்பித்துள்ளது .

பொது தேர்தலை நோக்கி அவர்கள் பயணிப்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

சோமாலியாவில் வெடித்த இரட்டை குண்டு பலர் மரணம்
Posted in உலக செய்திகள்

சோமாலியாவில் வெடித்த இரட்டை குண்டு பலர் மரணம்

சோமாலியாவில் வெடித்த இரட்டை குண்டு பலர் மரணம்

சோமாலியா தலைநகர் பகுதியில் இரட்டை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .

எனினும் இதுவரை முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .

சோமாலியாவில் தொடர்ந்து வரும் குண்டு தாக்குதளினால் நாள் தோறும் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

தொடரும் உள்நாட்டு போர் காரணமாக அப்பாவி மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளது தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 146 பேர் மரணம் 146 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 146 பேர் மரணம் 150பேர் காயம்

தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 146 பேர் மரணம் 146 பேர் காயம்

தென்கொரியாவில் ஹாலோவீன் நிகழ்வில் அதிக மக்கள் கலந்த கொண்டதால் ,மக்கள் நெரிசலில் சிக்கி இதுவரை 146 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 150 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த மக்களை மீட்கும் பணியில் 150ற்கு மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் பாவிக்க பட்டுள்ளன .

தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 150 பேர் மரணம் 146 பேர் காயம்

மேற்படி சம்பவம் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இந்த மக்கள் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட தாம் தயாராக உள்ளதாக ,பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் தனது டுவிட்டர் பதில் தெரிவித்துள்ளார் .

இறந்த மக்கள் போர்வைகளினால் சுற்ற பட்ட நிலையில் வைக்க பட்டுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டிரஸ் கைபேசி ரசியவினால் கைக்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டிரஸ் கைபேசி ரசியாவினால் கைக்

பிரிட்டன் முன்னாள் பிரதமர் டிரஸ் கைபேசி ரசியாவினால் கைக்

பிரிட்டனில் 45 நாட்கள் பிரதமராக அங்கம் வகித்த டிரஸ் அம்மணியின் கைபேசி ,ரசியா கைக்கர்களினால் , கைக்கிங் செய்யப் பட்டுள்ளது .

அவரது கைசிபேசியில் இருந்த முக்கிய அந்தரங்க விடயங்கள், ரசியவினால் திருட பட்டுள்ளது .

இதில் தனி நபர்களுக்கு பகிர்ந்து கொண்ட ,முக்கிய பாதுகாப்பு விடயங்கள் உள்ளிட்டவை ,ரசியா கைக்கர்களினால் அபகரித்து செல்ல பட்டுள்ளது .

இந்த சம்பவம் பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இவரது ஆட்சியின் பொழுது ரசியா ஜனாதிபதி புட்டீனை ,கடுமையாக விமர்சனம் செய்து இருந்தமை குறிப்பிட தக்கது .

ரிஷி சுனெக் காமெடியன் எதிர் கட்சி தாக்கு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ரிஷி சுனெக் காமெடியன் எதிர் கட்சி தாக்கு

ரிஷி சுனெக் காமெடியன் எதிர் கட்சி தாக்கு

பிரிட்டனை ஆளும் பிரதமர் ரிஷி சுனிக் மிக சிறந்த காமெடியன் என தொழில் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார் .

ஆளும் கன்செவ் பார்டியில் மூன்று மாதங்களில் ,மூன்று பிரதமர்கள் தெரிவாகியுள்ள அதிசயம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது .

தற்போது நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது .

ரிஷி சுனெக் காமெடியன் எதிர் கட்சி தாக்கு

இந்த நெருக்கடியி இருந்து நாட்டை மீட்க முடியாது .ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் ,நாட்டை கட்டியெழுப்புவேன் என ஆருடம் கூறி வருகிறார் .

இதனால் சுனெக் ஆட்சி கவிழ்க்க படும் நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .

உள்துறை அமைச்சர் பதவி விலகி ,பின்னர் ரிஷி சுனெக் ஆட்சியில் மீளவும் அதே பதவியில் நியமிக்க பட்டுள்ள செயல், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .

இதனால் இந்தியரான ரிஷி சுனெக் , சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

பறந்த விமானத்துக்குள் மனித சடலம் அதிர்ச்சியில் உறைந்த விமான நிலையம்
Posted in உலக செய்திகள்

பறந்த விமானத்துக்குள் மனித சடலம் அதிர்ச்சியில் உறைந்த விமான நிலையம்

பறந்த விமானத்துக்குள் மனித சடலம் அதிர்ச்சியில் உறைந்த விமான நிலையம்

ஜேர்மன் Frankfurt விமான நிலையத்தில் இருந்து ஈரானுக்கு பறந்து சென்ற லூத்தான்சா விமானதிற்குள் இருந்து, மனித சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இந்த சடலம் விமானத்தின் கார்கோ பகுதியில் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

எவ்வாறு இந்த மனித சடலம் , இதற்குள் எடுத்துவரப் பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஆனால் ஜேர்மன் காவல்துறையினர் இது குறித்து கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டனர் .

ஜெர்மன் உளவுத்துறை வேண்டும் என்றே ஈரானுக்கும் ,இவ்விதம் திட்டமிட்டு அனுப்பியதா என்ற கேள்வி எழுந்துள்ளது .

போதை பொருள் கடத்தல் படகை மூழ்கடித்த பிரிட்டன் கடற்படை
Posted in உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல் படகை மூழ்கடித்த பிரிட்டன் கடற்படை

போதை பொருள் கடத்தல் படகை மூழ்கடித்த பிரிட்டன் கடற்படை

போதை பொருளுடன் கரபியன் கடல் பகுதியில் ,நீரூந்து விசை படகு மூலம் 400 கிலோ போதைவஸ்து கடத்தி வரப்பட்டது .

அவ்வேளை அந்த படகினை அவதானித்த ,பிரிட்டன் கடல் படையினர் .இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி ,கடலில் மூழ்கடித்தனர் .

இந்த படகு மூழ்கடிப்பால் , அதில் கடத்தி வரப்பட்ட 24 மில்லியன் ரூபா ,போதைவஸ்து மூழ்கடிக்க பட்டுள்ளது, என்கிறது பிரிட்டன் ராயல் காவல்படை. .

ஐரோப்பா வழியாக பிரிட்டனுக்கும் பெரும் தொகையில் ,இவ்விதமான கடத்தல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்
Posted in உலக செய்திகள்

குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்

குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்

வடகிழக்கு சிரியா பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருதீஸ் போராளிகள் மீது ,துருக்கிய இராணுவம் புதிய தேடி அழிப்பு தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது .

குருதீஸ் அமைப்பின் தலைவரை சிறையில் அடைத்து வைத்திருக்கும் துருக்கி ,தொடர்ந்து அந்த அமைப்பினரை முற்றாக தேடி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது .

குருதீஸ் புலி போராளிகளை அழிக்கும் துருக்கி இராணுவம்

அமெரிக்காவின் ஆதரவுடன் கனரக ஆயுதங்களை பயன் படுத்தி ,தாக்குதல்களை நடத்தி வந்த ,குருதீஸ் போராளிகளை கைவிட்டு அமெரிக்கா தப்பி ஓடியது .

இவ்வாறான நிலையில் ,தற்போது புலிகளை போல அழிவின் நிலையில் உள்ளது குறித்த குருதீஸ் விடுதலை அமைப்பு .

அமெரிக்கா தனது தேவைக்கு இவ்வாறான குழுக்களை பயன் படுத்திவிட்டு பின்னர் ,அது தப்பித்து கொள்ளும் .

இது அவர்களின் எழுதி வைத்து நடக்கும் சதிகளின் ஒன்றாக நாம் காண முடிகிறது .

பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் கடும் வெள்ளம் 31 பேர் மரணம் 8 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளம் ,மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளனர் .

இந்த வெள்ளத்தில் சிக்கி பாலங்கள் மற்றும் ,வீடுகள் என்பன பலமாக சேதமடைந்துள்ளன .

பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

காணாமல் போனவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்ச படுகிறது .

இந்த வெள்ள பெருக்கில் ஏற்பட்ட ,முழுமையான சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை .

மேலும் மூன்று லட்சத்திற்கு அதிகமான மக்கள் ,பாதிக்க பட்டுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .

வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்

வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்

வடகொரியா கடந்த இரவு திடீரென ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .

இந்த ஏவுகணைகள் தென்கொரியா கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .தமது சோதனை வெற்றிகரமாக இலக்கை நோக்கி சென்று தாக்கியுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது .

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை அடுத்து ,தென் கொரியாவின் 150 விமானங்கள் மற்றும் ,அமெரிக்காவின் 100 விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

இந்த ஏவுகணை சோதனையை அடுத்து ஜப்பான் அவசரமாக கூடி, தமது பாதுகாப்பு மேம்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது .

வடகொரியாவுடன் போருக்கு தென் கொரியா ஜப்பான் ,அமெரிக்கா இணைந்து செல்லுமாக இருந்தால், அதுவே மிக பெரும் பேரழிவை வழங்கும் என எதிர் பார்க்க படுகிறது .

வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்

அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளின் மிரட்டல்களில் இருந்து தமது நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் ,இவ்விதமான ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் அவசியம் என்கிறது வடகொரியா .

எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இந்த ஏவுகணைகள் ,அடி நாதமாக விளங்குகின்றன என ,வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது .

தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தினால், பெரும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா கடந்த வாராம் மிரட்டல் விடுத்த நிலையில் ,வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .

இதுவே அமெரிக்கா ஜப்பான் ,தென் கொரியாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

முடிந்தால் மோதி பார் என்கிறது வடகொரியா .

உலக நாடுகளை மிரட்டி ஆண்டு வரும் அமெரிக்கா ,வடகொரியாவுடன் மோதிடா சென்றால், அதுவே பெரும் பேரழிவை சந்திக்கும் நிலைக்கு அமெரிக்காவை இட்டு செல்லும், என்பதே வரலாறாக எழுத பட போகிறது .

வாலை சுருட்டி ஓட வடகொரியா என்ன ஈரக்கா ..? லிபியாவா ..? கிங் ஜங் உன் ,ரொக்கட் கிங் என டிரம்ப் கூறியது சரிதான் போங்க .

உலகிலேயே மிக நீளமான ஆணுறுப்பால் வேலை இழந்த வாலிபர்
Posted in உலக செய்திகள்

உலகிலேயே மிக நீளமான ஆணுறுப்பால் வேலை இழந்த வாலிபர்

உலகிலேயே மிக நீளமான ஆணுறுப்பால் வேலை இழந்த வாலிபர்

உலகிலேயே மிக நீளமான ஆணுறுப்பால் , 35 வயது பிரிட்டன் வாலிபர் ஒருவர் வேலை இழந்துள்ள துயரம் இடம்பெற்றுள்ளது .

சாதாரண ஆண்களை விட, இவரது ஆணுறுப்பின் வளர்ச்சி 24 CM வரை வளர்ந்துள்ளது .

அதவது மூன்று ஆண்களின் ஆணுறுப்பின் நீளத்தை கொண்டதாக இவரது அமைய பெற்றுள்ளது .

பல மில்லியன் பேரில் ஒருவருக்கு இவ்வாறு ஏற்படும் என ,மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் .

ஆனால் பல பெண்களோ நாம வேலை தருகிறோம் ,வாருங்கள் என ,இவரது செவ்வியின் பின் சமூக வலைத்தளங்களில் கதற விட்டு வருகின்றனர் .

பெண்களில் பலர் செல்வந்தராகவும் ,சிறந்த வேலை வாய்ப்பிலும் உள்ளனர் .

வீட்டோடு மாப்பிளை மாதிரி ,மகன் அனுபவிக்க வேண்டிய சூழலை ,இவரது செவ்வி ஒன்று ஏற்படுத்தி கொடுத்துள்ளது .

அது தவிர சில ஊடகங்கள், இவரை வைத்தே நிகழ்ச்சி தயாரிக்கவும் ,இவரை அணுகியுள்ளனவாம் .பாருங்க மாப்பிள்ளைக்கு வாய்த்த அதிஸ்ட்டத்தை .

இந்த பெரிய நீளத்தை வைத்து கிட்டு ,பாவி பயல் இம்புட்டு காலமும் வேலை தேடி அலைந்திருக்காய் என கொதித்து போயி, கருதுக்களையும் அக்கறையுடன் வெளியிட்டு வருகின்றனர் .

பாதகமான பல விடயங்கள் ,ஒருவருக்கு தலை சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்து விடுகிறது .

அது இந்த வாலிபருக்கு பொருந்தும் போல் உள்ளது .

அமெரிக்காவில் தொடராக வாகனங்கள் மோதல் 3 இந்தியர் மரணம் பலர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் தொடராக வாகனங்கள் மோதல் 3 இந்தியர் மரணம் பலர் காயம்

அமெரிக்காவில் தொடராக வாகனங்கள் மோதல் 3 இந்தியர் மரணம் பலர் காயம்

அமெரிக்கா புளோரிடா நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் ,சம்பவ இடத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகியும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .

பல வாகனங்கள் முற்றாக சேதமடைந்தும் ,எரிந்த நிலையில் காணப்படுகின்றன .

இந்த பெரும் வீதி விபத்தினால் ,அந்த வழி சாலை போக்குவரத்து பல மணிநேரம் தடை பட்டது .காயமடைந்து நான்கிற்கு மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்டவர்கள் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

இந்த விபத்து தொடர்பிலான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

குறித்த தொடர் வாகன விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் ,உடனடியாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை .

விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு - பீதியடைந்த விமானிகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்

விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்

பசுபிக் பகுதியில் வானில் திடீரென பறக்கும் தட்டுகள் பறந்துள்ளது .

வேற்று கிரகவாசிகள் விமான போக்குவரத்து நிறைத்த பகுதிகளை சுற்றி இந்த பறக்கும் தட்டுகள் பறந்துள்ளன .

இதனை விமானிகள் அவதானித்து காணொளியும் பிடித்துள்ளனர் .மேலும் விமானிகள் பீதியும் அடைந்துள்ளனர் .

மர்ம பொருள் ஒன்று வானில் பறப்பதாக, விமானிகள் தெரிவித்துள்ள சம்பவத்தால் ,மேற்படி விடயம் பர பரப்பாக பேச பட்டு வருகிறது .

குறித்த வேற்றுகிரக வாசிகள் பறக்கும் தட்டுக்கள், பறந்த பகுதிகளில் ,நாசா ஆராய்ச்சியாளர்கள் 16 பேர் கொண்ட குழு ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

விமானங்களை துரத்திய பறக்கும் தட்டு – பீதியடைந்த விமானிகள்

நான்கிற்கு மேற்பட்ட பறக்கும் தட்டுகள், பறந்துள்ள செயலே, இந்த விடயம் பெரிதாக காரணமாக அமைந்துள்ளது .

அமெரிக்கா வேற்று கிரக வாசிகளை சிறை பிடித்து, அவர்களுடன் பேசி வருகின்றதான தகவலும் ,வெளியாகி வந்துள்ளது இங்கே கவனிக்க தக்கது .

இந்த வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு தொடர்பிலான விடயங்கள், வெளியில் கசிய விடப்படுமா .

அல்லது அவையும் மூடி மறைக்க படுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .

சுடலைக்குள் கவிழ்ந்த கார் ஆவிகளின் அட்டகாசம்
Posted in உலக செய்திகள்

சுடலைக்குள் கவிழ்ந்த கார் ஆவிகளின் அட்டகாசம்

சுடலைக்குள் கவிழ்ந்த கார் ஆவிகளின் அட்டகாசம்

இத்தாலியில் வேகமாக வந்த கார் ஒன்று சுடலைக்குள் கவிழ்ந்துள்ளது .சாரதியின் கட்டு பாட்டை இழந்து தலைகீக கவிழ்ந்த காருக்குள், சாரதி பலத்த காயங்களுடன் துடித்துள்ளார் . .

பல மணி நேரமாக தலைக்கீழாக கவிழ்ந்த ,காரின் சாரதியின் ஆசனத்தில் சிக்கியபடி தவித்த வண்ணம் இருந்துள்ளார் .

தவிர பிணங்கள் புதைக்க பட்ட பகுதியில் கார் கவிழ்ந்துள்ளது .

ஒரு பக்கம் பீதி ,மறு பக்கம் காரில் இருந்து வெளியே வரமுடியா அச்சத்தில் சிக்கி தவித்துள்ளார் .

சுடலைக்குள் கவிழ்ந்த கார் ஆவிகளின் அட்டகாசம்

எனினும் பலமணி நேரம் கழித்து, அவ்வழியே வந்த நபர்கள், காவல்துறைக்கு தெரிவித்ததை அடுத்து, காரில் இருந்து சாரதி மீட்க பட்டார் .

இத்தாலியில் சுடலைக்குள் , கார் கவிழ்ந்த சம்பவம், உலக மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஆவிகளின் சதி வேலையாக இருக்கலாம் என ,பல மக்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர் .எமக்கும் அவ்வாறே என்னை தோன்றுகிறது .குறித்த காட்சியை உற்று பாருங்கள் .உங்கள் கண்ணுக்கு ஆவி விளையாட்டு தெரிகிறதா ..?

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேல் A-1 Skyraider drone உளவு விமானம் ஒன்று பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

தமது விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள பொழுதும் ,இந்த உளவு விமானம் பலஸ்தீன போராளி குழுக்களினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது எனப் படுகிறது .

இஸ்ரேல் மீது பால்ஸ்தீன போராளிகள் நடத்திய ரொக்கட் தாக்குதல்களின் பின்னர் ,பலஸ்தீனம் காசா மற்றும் மேற்குகரை பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரே விமானங்கள் தாக்குதல் நடத்தின .

அதன் பின்னர் இப்பொழுது முதன் முதலாக ,இஸ்ரேல் உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டு கொண்டுளன .ஆனால் போராளி குழுக்கள் அதற்கு உரிமை கோரவில்லை .

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்

தமது விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என்பதை தெரிந்து வைத்துள்ளது இஸ்ரேல் இராணுவம் .

விரைவில் தமது விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்த படலாம் என எதிர் பார்க்கிறது .

ஈரான் வழங்கிய ஏவுகணைகள் மூலம் ,இந்த சூட்டு தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

உக்கிரேன் களத்தில் ,ஈரானின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளன .

அவ்வாறான கால பகுதியில் ,பாலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேல் உளவு விமானங்கள் தொடராக வீழ்ந்த வண்ணம் உள்ளது .

போராளி குழுக்கள் தாக்குதலுக்கான ,முன் ஒத்திகை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர் ,என்பதை இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .

அப்படியானால் விரைவில் மிக பெரும் தாக்குதலுக்கு , இஸ்ரேல் உள்ளாக போகிறது என்பது தெளிவாகிறது .

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு

உக்கிரேன் Kharkiv  பகுதி தற்போது உக்கிரேன் இராணுவத்தால் மீள மீட்க பட்டுள்ளது .

இவ்வாறு மீட்க பட்ட Kharkiv பகுதியில் மிக பெரும் மனித புதைகுழி கண்டு பிடிக்க பட்டுள்ளது .இந்த மனித புதைகுழியில் இருந்து 1000 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .

Kharkiv பகுதியில் மீட்க பட்ட மனித சடலங்களில் சிறுவர்கள் ,முதியவர்கள் உடல்களும் அடங்கும் என உக்கிரேன் தெரிவித்துள்ளது .

தமது நாட்டை ஆக்கிரமித்து ,போரைத் தொடுத்து ,இன அழிப்பை ரசியா ஜனாதிபதி புட்டீன் மேற்கொண்டு வருவதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது .

எமது நாட்டீன் மீது நடத்த படும் இன அழிப்பு தொடர்பில் ,உரிய விசாரணை நடத்தி ,ரசியாவை தண்டிக்க வேண்டுமென்கிறார் உக்கிரேன் ஜனாதிபதி .

உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு

இலங்கை செஞ்சோலை பிள்ளைகள் மீது ,இதே உக்கிரேன் விமானங்கள் குண்டு வீசி ,அப்பாவி மாணவர்களை கொன்று குவித்தனர் .

அதன் வலியும் வேதனையும் இப்பொழுது ,உக்கிரேன் அனுபவித்து வருகிறது என்கிறது ,பாதிக்க பட்ட தமிழர் தேசம் .

தொடரும் உக்கிரேன் ரசியா போரானது ,முடிவில்லாது தொடர்வதால் ,உக்கிரேன் உள் கட்டமைப்பு ,பலமாக பாதிக்க பட்டுள்ளது .

ரசியா இராணுவம் உக்கிரேன் பகுதிகளில் இருந்து விலகிய நிலையில் ,விரைவில் அணுகுண்டு அல்லது இரசாயன நச்சு குண்டு தாக்குதல்களை, உக்கிரேன் மீது நடத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பழிவாங்கும் தாக்குதல்களை ரசியா உக்கிரேன் மீது தொடுக்கும் என எதிர்பார்க்க படுவதால் ,ஐரோப்பா எங்கும் பதட்டத்தில் உறைந்துள்ளது .