பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு
Posted in இலங்கை செய்திகள்

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு

பலத்த தோல்வி மகிந்த மகனுக்கு ஏற்பட்டுள்ளது ,ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த மகன் நாமல் ராஜபக்சாவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது .

இலங்கையில் ஐம்பது வருடம் ஆட்சி கட்டிலில் அமர முடியுமா என்கின்ற விடயம் தற்போது மீளவும் ஒருமுறை தோல்வியில் முடிவடைந்துள்ளது .

இலங்கையை விட்டு இவர்கள் தப்பி ஓடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

இவர்கள் நடத்திய கொள்ளை என்பன விரைவில் வெளியாகும் நிலை ஏற்படப்போகிறது .

அது தவிர இவர்களது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதையும் இந்த விடயம் எடுத்து காண்பிக்கிறது .

புலிகளை அழித்து விட்டோம் என ஆணவத்தில் ஆடிய மகிந்தவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த தோல்வியானது , பெரும் நெருக்கடியையும் அவமானத்தயும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

அனுரா இலங்கை ஜனாதிபதியாக தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

அனுரா இலங்கை ஜனாதிபதியாக தெரிவு

அனுரா இலங்கை ஜனாதிபதியாக தெரிவு, செய்ய படவுள்ளார் ,.வெளியான வாக்கு எண்ணிக்கை தகவலின் அடிப்படையில் முதலாம் இடத்தை அனுரா திச நாயாக்கா விளங்கி வருகின்றார் .

அதன் அடிப்படையில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுரா திசாநாயக்க பொறுப்பேற்க உள்ளார் .

இலங்கையில் நில நடுக்க வாக்கு பதிவுகள் காணப்பட்டுள்ளன ,

தனி பெரும்பான்மை சிங்கள வாக்குகள் ஊடக அனுரா திசை நாயக்க வெற்றி பெற்றுள்ள சம்பவம் ,வரலாறாக மீளவும் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

வெளிநாடுகளுக்கு பறந்தவர்களின் விபரம்
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளுக்கு பறந்தவர்களின் விபரம்

வெளிநாடுகளுக்கு பறந்தவர்களின் விபரம்

வெளிநாடுகளுக்கு பறந்தவர்களின் விபரம் ,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் சனிக்கிழமை (21)  ஆம் திகதி 06.00 மணியளவில்   விமானப்படை குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 கடந்த அரகலய போராட்டத்தின் போது கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பொது மக்களை விமான நிலையத்தினூடாக வெளியேற வரும் அரசியல் பிரமுகர்களிடம் விசாரணை நடத்துவதை தடுக்கும் வகையில் சிறிலங்கா விமானப்படையினர் திரண்டிருந்ததை அந்த சூழ்நிலையில் நினைவுகூர முடிகிறது.

 அத்துடன் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

 அதன்படி 09/21 அன்று மாலை 02.25 மணியளவில் முன்னாள் அமைச்சர்  சுசந்த புஞ்சிநிலமே இந்தியன் ஏர்லைன்ஸின் ஏஐ-272 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டார்.

 மேலும், 09/21 இரவு 11.15 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்  பாலித்த ரங்கே பண்டார கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் FD-141 இல் தாய்லாந்தின் பாங்கொக்கிற்கு புறப்பட்டார்.

 மேலும், இத்தே கந்தவைச் சேர்ந்த சத்தாதிஸ்ஸ தேரர் 09/22 ஆம் திகதி நள்ளிரவு 12.50 மணியளவில் Cathay Pacific Airlines விமானமான CX-610 இல் ஹொங்கொங்கிற்குப் புறப்பட்டார்.

 மேலும், ஜனாதிபதி வேட்பாளர்  நாமல் ராஜபக்ஷவின் மனைவியான திருமதி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை  திலகசிறி வீரசிங்க ஆகியோர் 09/22 அன்று காலை 03.30 மணியளவில் Emirates விமானமான EK-649 இல் டுபாய் நோக்கிப் புறப்பட்டனர்.

 கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவைகள் இல்லாததால் டுபாய் வழியாக அமெரிக்கா சென்றிருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அனுரா தபால் வாக்கில் முதலிடம்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா தபால் வாக்கில் முதலிடம்

அனுரா தபால் வாக்கில் முதலிடம்

அனுரா தபால் வாக்கில் முதலிடம் ,சற்று முதல் வெளியான தபால் மூல வாக்கெடுப்பில் நாடளாவிய ரீதியில் அனுரா திசாநாயக்க முதலிடம் வகிக்கின்றார் .

அதே போன்று இரண்டாம் நிலையில் சஜித் பிரேமதாசா ,நிலையில் ,ரணில் விக்கிரமசிங்க ,நான்காம் நிலையில் நாமல் ராஜபக்ச ஆகியோர் காணப்படுகின்றனர் .

இதன் மூலம் அனுரா திசாநாயக்க இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி ஏற்கும் நிலை காணப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

வரும் மணித்தியாலங்களில் இலங்கையில் தலை கீழ் மாற்றம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்
Posted in இலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்

நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்

நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்இன்று (21) இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹல் தல்துவ தெரிவித்தார்.

பொது பாதுகாப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி இலக்கம் 2402/23 இன்று (21.09.2024) இரவு 10.00 மணி தொடக்கம் 22.09.2018 காலை 6.00 மணி வரை நாடாளாவிய ரீதியில் மற்றும் உள்ளூர் கடற்பரப்பிற்கு உட்பட்டு ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மிகவும் அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் தமது வீடுகளிலேயே நேரத்தைச் செலவிடுமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் அடையாள அட்டைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்தப்படலாம்.

வெளிநாட்டிற்குச் செல்வதற்காக விமான நிலையம் செல்லும் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அனைவரும் தங்கள் விமான டிக்கெட் அல்லது ஆதார ஆவணங்களை ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரமாகப் பயன்படுத்தலாம்.

இதற்கு மேலதிகமாக, அத்தியாவசிய சேவைகளை நடத்தும் நிறுவனங்களின் தொடர்புடைய ஊழியர்களுக்கு, அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டை அல்லது பொருத்தமான ஆவணம் பயன்படுத்த முடியும். மேலும் அந்த ஆவணம் மற்றும் தொடர்புடைய நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்களை பொலிஸாரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனை மீறும் எந்தவொரு செயலையும் செய்ய வேண்டாம் என அனைத்து பொதுமக்களிடமும் இலங்கை பொலிஸ் வலியுறுத்துகிறது.

ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களிப்பு ,நாடளாவிய ரீதியில் இன்று காலை (21) 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்தது.

இதில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்களித்தனர்.இன்று நள்ளிரவு முதல் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்க படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

அதனை அடுத்து படகுக்காப்பு நாடெங்கும் பலப்படுத்த பட்டுள்ளது .

பதட்டம் அவசர இலக்கங்கள் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பதட்டம் அவசர இலக்கங்கள் அறிவிப்பு

பதட்டம் அவசர இலக்கங்கள் அறிவிப்பு

பதட்டம் அவசர இலக்கங்கள் அறிவிப்பு ,அடுத்து வரும் நாட்களில் நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இன்று (21) மாலை 4 மணியளவில் வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கலகத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தேவைக்கேற்ப கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் வீதித் தடைகள் உள்ளதாகவும், எனவே முடிவுகள் வெளியாகும் வரை பாதுகாப்புத் திட்டம் நாட்டில் முழுமையாகச் செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் ஒரு வார காலத்திற்குள் எந்தவொரு நபரும் வாகனங்களிலோ அல்லது பாதயாத்திரையிலோ ஊர்வலம் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், சகல மக்களும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

ஒரு பிரஜை என்ற வகையில், சட்டத்தை அமைதியாகக் கடைப்பிடித்து, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை காவல்துறைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமைதியை சீர்குலைக்கும் செயல் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

119
118
107 (வடக்கு, கிழக்கிற்கு)

011 202 7149
011 201 3243
111 239 9104 – (தொலைநகல் எண்)

மாடியில் வாக்களிப்பு பலரும் ஏறாமல் விட்டனர்
Posted in இலங்கை செய்திகள்

மாடியில் வாக்களிப்பு பலரும் ஏறாமல் விட்டனர்

மாடியில் வாக்களிப்பு பலரும் ஏறாமல் விட்டனர்

மாடியில் வாக்களிப்பு பலரும் ஏறாமல் விட்டனர் ,தேயிலை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வேண்டியவர்கள் பவரும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

இந்த நிலைமை, நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் நிவ்வெளி வாக்களிப்பு நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது.

தேயிலை தொழிற்சாலையின் மேல் மாடியில் வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தமையால், அந்த படிகடிகளில் ஏறமுடியாத வயது முதிந்தவர்கள், பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம்

வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி மரணம் ,வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பிற்பகல் உயிரிழந்ததாக புலஸ்திபுர பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை புலஸ்திபுர விஜிதா ஆரம்ப பாடசாலையின் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் சார்ஜன்ட் 53419, எச்.எம். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் புலஸ்திபுர பொலிஸ் அதிகாரி ஒருவர் எமது விசாரணையின் போது ரத்னபால பொலிஸ் உத்தியோகத்தர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த திடீர் மரணம் தொடர்பில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.நிஷான் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு தயார்
Posted in இலங்கை செய்திகள்

பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு தயார்

பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு தயார்

பொதுத்தேர்தலுக்கு தேர்தல் ஆணைக்குழு தயார் .,புதிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கலைத்தால் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிய ஜனாதிபதியின் நியமனத்தின் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் அந்தந்த அரசியல் கட்சிகள் தனித்தனியாக கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.

இதனிடையே அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் நான்கு தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

பொதுத் தேர்தல், எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகிய நான்கு தேர்தல்கள் ஆகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனுக்களை ரத்து செய்யுமாறு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக சட்டத் துறைகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிகிறது.

வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டால் உடனடியாக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்து.

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு ,இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கும் சென்று மக்கள் தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கொத்மலை தேர்தல் தொகுதியில் 88,219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் 8,500 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 1,748 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு, மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யார் ,இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (21) நடைபெறுகிறது.

இந்நிலையில், இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதிதுவப்படுத்தி போட்டியிட்ட ஜே.ஆர். ஜயவர்தன தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவை தோற்கடித்து 52.91% வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார்.

இரண்டாவது ஜனாதிபதி தேர்தல் 1988 ஆம் ஆண்டு நடைபெற்றதுடன், அதில் சிறிமாவோ பண்டாரநாயக்கவை தோற்கடித்து ரணசிங்க பிரமதாச 50.43% வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றார்.

1993 ஆம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதலில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரமதாச உயிரிழந்த நிலையில், அப்போது பிரதமராக பதவி வகித்த டீ.பீ. விஜேதுங்க நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவானார்.

அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 62.26% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் காமினி திசாநாயக்க கொலை செய்யப்பட்ட பின்னர் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அவரது பாரியார் ஸ்ரீமா திசாநாயக்க போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து 51.12% வாக்குகளை பெற்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் இலங்கையின் ஜனாதிபதியானார்.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 50.02% வாக்குகளை பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்தே வெற்றிப்பெற்றார்.

அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து சரத் பொன்சேக்கா போட்டியிட்டார். அந்த தேர்தலில் 57.88% வாக்குகளை பெற்ற மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியானார்.

இந்நிலையில், 7 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், அதில் மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 47.58% வாக்குகளை மட்டுமே பெற்றார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ 52.25% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமாரதிசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள்

முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள்

முல்லைத்தீவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ,ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்று (21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர்.

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடு எரிந்து பெண் ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

வீடு எரிந்து பெண் ஒருவர் உயிரிழப்பு

வீடு எரிந்து பெண் ஒருவர் உயிரிழப்பு

வீடு எரிந்து பெண் ஒருவர் உயிரிழப்பு ,யாழ்ப்பாணம்-நீர்வேலியில் வயோதிப பெண்ணொருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

தனிமையில் வசித்து வந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் வீடு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இதனால் தீயில் சிக்கி குறித்த பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எரிந்த நிலையில் வீட்டுக்கு வௌியில் காணப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் வாசலிலே மிளகாய் தூள் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

குறித்த சம்பவ இடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினர், தடயவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வீட்டுக்கு யாராவது தீ வைத்தார்களா, அல்லது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தீப்பற்றி எரிந்ததா? என்ற கோணத்தில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு

கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு ,ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.

இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

களுத்துறை – 32%
கம்பஹா – 25%
கேகாலை – 15%
நுவரெலியா – 30%
இரத்தினபுரி – 20%
அம்பாறை- 30%
மன்னார்- 29%
முல்லைத்தீவு – 25%
வவுனியா – 30%
கொழும்பு – 20%
கண்டி – 20%
காலி – 18%
மாத்தறை – 30%
மட்டக்களப்பு – 17%
குருநாகல் – 30%
பொலனறுவை – 38%
மொனராகலை – 21%
பதுளை – 21%
மாத்தளை – 22%
ஹம்பாந்தோட்டை – 25%
யாழ்ப்பாணம் – 22%
கிளிநொச்சி – 27%
புத்தளம் – 23%
அனுராதபுரம் – 30%
திருகோணமலை – 30%

தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

தேர்தலை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் ,ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (21) விசேட பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில், பயணிகள் அதிகாலையில் வந்து தங்களுடைய இடங்களுக்கு செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3300 பஸ்களும் இன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்

விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி

விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி,கொலண்ட் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் புங்கிடுதீவை சேர்ந்த தமிழ் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார் .

இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது .

விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி
விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி

தனது வாகனத்தில் வீடு நோக்கி வருகை தந்து கொண்டிருந்த பொழுது ,அல்கமார் ,ரவுண்ட போர்ட் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதுண்டு பலியாகியுள்ளார் .

பலியானவர் ஒரு பெண் குழந்தையின் தந்தையான டியே மாஸ்டர் என அழைக்க படும் சஞ்சிஜீவ் அமிர்தராஜா என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

குறுகிய காலத்தில் மிக பெரும் சாதனைகளை படைத்து மக்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்த ஒருவராக சஞ்சிஜீவ் அமிர்தராஜா காண படுகின்றார் .

இசைதான் அவனது உலகம்,வாழ்வியலின் தத்துவத்தின்
தந்தை என மக்களால் அறியப்பட்டவர்,வாழ்க்கை
புனிதமானது.வாழ்ந்து காட்டுவதே…சிறப்பு என்று.. தினம்.. சொல்லு பவன்..

அவ்வாறான அற்புத திறமையான ஒருவனை எமது மண் இழந்து நிற்பதாக நெதர்லாந்து வாழ் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர் .

பல கனவுகளை சுமந்து ,இசையோடு பயணித்தவன் ,இன்று இளம் வயதில் குடும்பத்தை தவிக்க விட்டு மறைந்துவிட்டான் .

இவர் கொலண்ட் நாட்டில் வசித்து வரும் பாவலர் புங்கையூர் ராஜாவின் அருமை புதல்வனாவார் .

நாடகம் , பாடல் ,கவிதை , என பல்வேறு பட்ட ,கலை பண்புகளை சுமந்து பயணிக்கும் படைப்பாளி புங்கையூர் ராஜா ஒருவர் ,தனது மகனை இழந்து கண்ணீரில் தவித்து வருகிறார் .

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இவ்வேளை ஆறா துயரில் தவிக்கும் குடும்பத்தினருடன் எதிரி இணையமாகிய நாமும் பங்கெடுத்து .கொள்கிறோம் .

தகவல் குடும்பத்தினர் .

  • வன்னி மைந்தன் –
ஹிஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ மையத்தை ஏவுகணைகள் மூலம் அழித்தது
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ மையத்தை ஏவுகணைகள் மூலம் அழித்தது

ஹிஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ மையத்தை ஏவுகணைகள் மூலம் அழித்தது


ஹிஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவ மையத்தை ஏவுகணைகள் மூலம் அழித்தது
,லெபனான் எதிர்ப்பு இயக்கம் ஹிஸ்புல்லா வெள்ளிக்கிழமை காலை இஸ்ரேலிய ராணுவ மையத்தை ஏவுகணைகள் மூலம் அழித்தது.

வெள்ளிக்கிழமை காலை கலிலியில் உள்ள மெட்டுலாவில் உள்ள இஸ்ரேலிய ராணுவ மையத்தை நோக்கி ஹிஸ்புல்லா 3 ஏவுகணைகளை வீசியது.

ஹெஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்கிரமிக்கப்பட்ட ஷெபா பண்ணைகள் மீதும் ஒரு தொட்டி எதிர்ப்பு ஏவுகணை ஏவப்பட்டதாக சியோனிஸ்ட் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காசா மற்றும் தெற்கு லெபனான் மீதான ஆக்கிரமிப்பு ஆட்சியின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் எதிர்ப்பு இயக்கமான ஹெஸ்பொல்லா கடந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் இருந்து இஸ்ரேலிய ஆட்சியின் இராணுவ நிலைகளுக்கு எதிராக வழக்கமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான அதன் தீவிரமான அட்டூழியங்களுக்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு நிறுவனத்திற்கு எதிராக ஹமாஸ் முன்னோடியில்லாத நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர், அக்டோபர் 7 அன்று முற்றுகையிடப்பட்ட காசா மீது இஸ்ரேல் அதன் கொடூரமான போரை நடத்தியது.

மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தின் மீது இஸ்ரேல் முழுமையான முற்றுகையை விதித்து, அங்கு வாழும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்கு எரிபொருள், மின்சாரம், உணவு, தண்ணீர் ஆகியவற்றைத் துண்டித்துள்ளது.

அமெரிக்கா பறந்தார் பசில்
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்கா பறந்தார் பசில்

அமெரிக்கா பறந்தார் பசில்

அமெரிக்கா பறந்தார் பசில் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் சென்றதாக விமான நிலைய கடமை முகாமையாளர் தெரிவித்தார்.

அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் (EK-649) துபாய்க்குப் புறப்பட்டார்.

இந்த விமானத்தை அணுகுவதற்காக அவர் USD 206 செலுத்தியதாகவும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ‘கோல்ட் ரூட்’ முனையத்தில் வசதியைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

பசில் ராஜபக்ச முதலில் டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்றும், அவர் எப்போதும் அமெரிக்கா செல்வதற்கு இந்த விமானப் பாதையையே பயன்படுத்துவார் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு ,தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடத்தை வீதி, களுபோவில பிரதேசத்தில் இன்று காலை 6.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது வலது தோள்பட்டைக்கு அருகில் 02 துப்பாக்கிச் சூட்டுக்களுடன் படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நகர சபை ஊழியர் ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் பிரதிபலனாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.