Author: நிருபர் காவலன்
ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை
ஹிஸ்புல்லா தலைவர் கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை
ஈராக் நாட்டின் தலைநகர் அருகில் வைத்து ஈரானிய இராணுவ தளபதி முக்கிய ஐந்து சகாக்கள் , ஹிஸ்புல்லா உபதலைவர்,ஈராக்கிய இராணுவ தளபதி ,மேலும்
துணைப்படை குழு தலைவர் .
என பெரும் தலைவர்களை ஒரே ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா,இஸ்ரேல் , இணைந்து கூட்டாக படுகொலை புரிந்தது .
ஈரானின் மூளையை கொன்று விட்டோம் இனி ஈரானால் எழுந்து நடக்கவே முடியாது என இஸ்ரேல்,அமெரிக்கா துள்ளி குதிக்கின்றன .
சமீப நாட்களாக கிஸ் புல்லா எம்மை முற்றாக அழிக்க போகிறது ,அவர்களிடம் 130 ஆயிரம் ரொக்கட்டுக்கள்
உள்ளன ,அதைவிட நீண்ட தூர ஆட்லொறிகள் ,பல்குழல் எறிகணைகள் என்பன உள்ளன .
இஸ்ரேலை இல்லாது அழிக்கும் நகர்வில் இவர்கள் ஈடுபட உள்ளனர் என இஸ்ரேல் அறிவித்தது,அத்துடன் நிற்காது
,லேசர் ஆயுத உற்பத்தியை எதிர்வரும் ஆண்டுக்குள் நாம் நிறுவி விடுவோம் எனவும் அது சபதம் இட்டது .
இவை ஏவுகணைகளை இடை மறித்து சுட்டு வீழ்த்த இந்த லேசர் ஆயுத பயன் பாடு உதவும் என இஸ்ரேல் கருதுகிறது .
இப்பொழுது ஈரானை ஒரு முற்றுகைக்குள் வைத்து அந்த நாட்டையும் ,அதன் தலைவரையும் இல்லாது அழிக்கின்ற நகர்வில் இஸ்ரேல் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளன .
ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை
அடுத்து வரும் நாட்களில் இந்த முக்கியஸ்தர்களை படுகொலை புரியும் தாக்குதலை இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக நடத்த போகின்றன .
அதற்கு அமைவாக ஈரானின் முக்கிய நேச குழுக்களை அழித்து ஒழிக்கும் நகர்வில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது ,அதன்
அடுத்த குறியாக கிஸ்புல்லா தலைவர் Sheik Hassan Nasrallah குறி வைக்க பட்டுள்ளார்
இவர் இஸ்ரேலினால் இலக்கு வைக்க பட்டுள்ளார் எனவும் இவரை எச்சரிக்கையாக இருக்கும் படி ஈரான் அவசரமாக அறிவித்துள்ளது
இஸ்ரேல் எப்பொழுதும் முக்கிய அமைப்புகளின் முதன்மை மூளைகளை கொல்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது ,
அதுபோலவே இதன் தொடர் தாக்குதல்கள் ஈரான்,மற்றும் அதன் நேச படைகள் மீதுஅதன் பார்வை திரும்பியுள்ளது .
ஈரான் மீது மருத்துவ தடையை விதித்து அதன் ஊடக அந்த மக்களை பட்டினி மற்றும் ,நோயால் கொலை செய்யும்
விடயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் களத்தில் குதித்துள்ளன .
தாம் செய்யும் சர்வாதிகார போக்கை ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவையால் கண்டிக்க முடியவில்லை ,அமெரிக்காவின் ஒரு முகவராக ஐக்கிய நாடுகள் சபை
இயங்கிய வண்ணம் உள்ளது ,அது போன்றே சர்வதேச நீதிமன்றும் என கருத படுகிறது .
போர் குற்றங்கள் புரிந்தவர்கள் ,இன பாடுகொலை புரிந்தவர்கள் உல்லாசமாக திரிகின்றனர் .
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை .
பலவீனமான விடுதலைக்கு போராடும் , அமைப்புகளை ,சிறிய நாடுகளை இல்லாது அழிக்கும் நகர்விலேயே இந்த
மேற்குலகமும் ,அதன் செயல் இயக்கமும் தீவிரம் பெற்று வருகிறது .
சமீப நாட்களாக இஸ்ரேலின் விட்டு வந்த விடு கதைக்கு இப்பொழுது ஈரான் விடையை அவிழ்த்து விட்டுள்ளது .
ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை
முன்னரே தெரிவித்தோம் அல்லவா கதை மாற போகிறது என.
ஆம் , ஈரானை முற்றுகைக்குள் வைத்து அதன் தாக்குதல் வீச்சை குறைக்க வேண்டும் எனின்
அதன் ஆதரவு படைகள் ,மற்றும் அதன் முக்கிய
மூளைகளை இல்லாது அழிக்க வேண்டும் ,அதே சமவேளை அந்த மக்களை அதே அரசுக்கு எதிராக திருப்பி விட வேண்டும் .
எதிரிகளின் தாக்குதல் ,மக்கள் புரட்சி இந்த இரண்டுக்குள்ளும் அந்த நாட்டை சிக்க வைக்கும் மரண
விளையாட்டில் அமெரிக்கா,செயல் ,மற்றும் அதன் நேச நாடுகள் ஈடு பட்டு வருகின்றன .
மத்திய கிழக்கில் ஒரு வல்லரசாக நிமிர்ந்து நிற்கும் ஈரானை முற்றாக அழிக்கும் நகர்வில் இந்த மேற்குல வெள்ளையர் சண்டியர்கள் வரிந்து கட்டி போவது ,பயங்கரவாதம் என்ற
போர்வையில் அந்த நாடுகளின் வளங்களை , எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்கவே .
வள சுரண்டல் ஊடாக நாடுகளை அடக்கி ,ஒடுக்கி ,மிரட்டி கொள்ளை இலாபம் பெறும் இந்த கொழுத்த வெள்ளையர்களை எவர் அடக்குவது ..?
ஆசிய நாடுகளில் ,லஞ்சம் ஊழல் நேர்மையற்ற அரசாட்சி,என்பனவற்றை உருவாக்கி அந்த நாடுகளின் வளர்ச்சியை தடுத்து ,அடக்கி வருகிறது இந்த மேற்குலகம் ,.
அதற்குள் இருந்து அந்த நாடுகள் மீளாத வரை வளர்ச்சி ,மற்றும் அறிவியல் நோக்கி எப்படி அவர்களினால் நகர முடியும் ..?
எனவே முடிவில் ஈரான் நாட்டை அழிக்கும் முடிவில் இஸ்ரேல்,அமெரிக்கா,நேச நாடுகள் முனைப்பு கட்டி விட்டன ,
திட்டங்கள் போட்டு விட்டன. இனி அதற்கு ஏற்ப காரணிகளை கூறிய வண்ணம் கெடு பிடி நடத்த
போகின்றன .அது ஈரானையே வலிந்து தாக்குதல் மேற் கொள்ள வைக்கும் நெருக்கடிக்குள் தள்ளிவிட போகின்றன .
ஈரானின் அணு உலைகள் ,சோதனை ,விமான விபத்து விசாரணை என ,அடுக்கு மொழி நொண்டி சாட்டுகளை
கூறிய வண்ணம் வரிந்து கட்டி படையெடுப்பை நடத்த போகிறது உலக சண்டியர் தலைமையிலான அணிகள் .
இவர்களின் இந்த கொடும் தாக்குதல் ,இராயத்தந்திர வேட்டையில் இருந்து ஈரான் தப்புமா ..?
ஏவுகணைகள் ஈரானை நோக்கி திருப்ப பட்டுள்ளன .
அணு உலைகள் ,ஆயுத கூடங்கள் ,விமான தளங்கள் ,முக்கிய இராணுவ தளங்கள் குறி வைக்க பட்டுள்ளன .
இதில் இருந்து ஈரான் எப்படி தன்னை பாதுகாத்து கொள்ள போகிறது ..?
அமெரிக்காவின் சாதனங்களை செயல் இழக்க வைப்பதே எமது நோக்கு என என்றான் தொடர்ந்து கூறி வருகிறது ,அப்படி எனறால் சைபர் தாக்குதல் மற்றும் GPS
வழிகாட்டுதலில் இயங்கும் பொறிமுறை வழிகாட்டல் கட்டமைப்பை சிதைக்கும் முயற்சியிலும் ஈரான் ஈடுபட்டுள்ளது ,
இதனை சிதைத்தால் ஈரானின் ஏவுகணையாகலி அமெரிக்காவால் சுட்டு வீழ்த்த முடியாது .
எமக்கு உயிர் ஆபத்து இல்லை என கூறி வரும் அமெரிக்கா செய்திகள் ,ஈரானை மீளவும் ஒரு தாக்குதலை நடத்த வைக்கும்
ஆத்திரம் ஊட்டும் செயல் ,இதற்குள் சிக்கி ஈரான் தாக்குதலை நடத்தினால் அதுவே வில்லங்கத்தை உருவாக்கும்
.போர் பதட்டம் மேலும் வெடிக்கிறது ,
காட்டு தீயாக இது கரை தேடி ஓடுகிறது .
- வன்னி மைந்தன்-

தீயில் எரிந்து மூன்று இலங்கை மாணவர்கள் பலி
தீயில் எரிந்து மூன்று இலங்கை மாணவர்கள் பலி
Baku in Azerbaijan. பகுதியில் கல்வி கற்க சென்ற இலங்கை மாணவர்கள் மூவர் அவர்கள் தங்கி இருந்த வீட்டு தொடரில்
திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .
சடலங்கள் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது
என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் 12 பேர் கைது
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் 12 பேர் கைது
இலங்கை – கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற திடீர் மோதலில் சிக்கியிருவர் படுகாயமடைந்துள்ளனர் .
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சுமார் 12 பேர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர் .
பபகிடி வதை சட்டம் இடம்பெற்றால் எட்டு வருடம் கல்வி பயில தடை என புதிய சட்ட நடைமுறையை அமூல்
படுத்திய கோட்டபாய இந்த குழு மோதலுக்கு என்ன தீர்வு காண போகின்றார் ..?
மக்கள் மனதில் எழும் கேள்வி இதுவாகும் ..!
இரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்
இரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்
இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும். நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்! யோசித்துப் பாருங்கள்!
கண் பார்வை குறைய என்ன காரணம்?
கண் பார்வை குறைய என்ன காரணம்?
எந்த ஒரு பொருளும் சரியாக பராமரித்தால் பல காலம்
சிறப்பாக இயங்கும். வீட்டில் புதிய டிவி வாங்கியவுடன் அதனை தினமும் தூசிபடியாமல் துடைத்து வைக்கின்றோம். 24 – மணிநேரமும் பார்ப்பதில்லை.
சூடாகிவிடும். அதனால் அதற்கு ஓய்வு கொடுக்கின்றோம். எவ்வளவு வோல்ட் மின்சாரம் பாய வேண்டுமோ அந்த அளவு
மின்சாரம் கொடுக்கின்றோம். ஆனால் நம் கண்களை பராமரிக்க என்ன செய்கின்றோம் தினமும்! யோசித்துப் பாருங்கள்!
இரவில் இது செய்தால் -கண் பார்வை குறையும்
- குழந்தைக்கு தாய்ப்பால் கிட்டாததால் கண் பார்வை குறைகின்றது.
- இரவில் தொடர்ந்து கண் விழித்து வேலை செய்தால் கண் பார்வை குறையும்.
- மலச்சிக்கல் ஏற்பட்டால் கண் பார்வை குறையும். உடல் கழிவுகள் சரியாக நீக்கப்படாவிட்டால் கண் பார்வை குறையும்.
- உடலுக்குத் தேவையான நீர்அருந்தாவிட்டால் கண் பார்வை குறையும்.
- பஸ்சில் தொடர்ந்து புத்தகம் படித்தால் கண் பார்வை குறையும்.
- அளவுக்கு மீறி டிவி பார்த்தால், சினிமா பார்த்தால், கம்ப்யூட்டர் பார்த்தால் கண் பார்வை குறையும்.
- மன அழுத்தம், சத்தான உணவுகளை உண்ணாதல், ஆங்கில மருந்து, ஊசி, மாத்திரைகளின் பக்க விளைவுகளால் கண் பாதிப்பு ஏற்படும்.
அதற்கு ஒவ்வொருவரும் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். மனதைப் பக்குவப்படுத்துவதோடு மட்டுமல்ல
நமது உடலை, உடல் உள் உறுப்புகளை நேசிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி யோகப் பயிற்சி மட்டுமே.
இதை படித்தவர்கள் இரவில் விழித்து இருந்து கணனிகள்,தொலைக்காட்சிகள், கை பேசிகள் என்பனவற்றை அதிக நேரம் பார்க்காதீங்க .
கண் பார்வை பறிபோனால் உலகம் இருளானதுக்கு ,சமன் ,
உடல் உறுப்புகளில் கண்பார்வை என்பது முக்கியம் ,இது இன்றி மனிதனால் வாழமுடியாது ,எனவே மக்களே விழிப்பாக இருங்கள்
சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் – தர்பார் பட நிறுவனம் அறிவிப்பு
சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் – தர்பார் பட நிறுவனம் அறிவிப்பு
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘தர்பார்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் – தர்பார் பட நிறுவனம் அறிவிப்பு
தர்பார் படத்தில் ரஜினி
ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா
அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம்
அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், தர்பாரில் இருக்கும் வசனத்தை நீக்க தயார் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், எங்களின் தர்பார் திரைப்படத்தில் கைதிகள்
சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும்
புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதை
புண்படுத்துவதுவாக தெரியவந்ததால், அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக் கொள்கிறோம்’ இவ்வாறு லைகா நிறுவனம் கூறியுள்ளது.
பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்
பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்
பிரபல இந்தி நடிகையும், தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்தவருமான சோனம் கபூர், விமான நிறுவனம் மீது சரமாரியாக விமர்சித்து புகார் கூறியிருக்கிறார்.
பிரபல விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்
சோனம் கபூர்
இந்தி நடிகை சோனம் கபூர். அனில்கபூரின் மகளான இவர்
தனுசுடன் ராஞ்சனா என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
சோனம் கபூர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்த மாதம் மூன்று முறை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளேன். இதில் இரண்டு முறை எனது உடமைகளை இழந்து விட்டேன். அதை வேறு விமானத்தில்
அனுப்பி வைத்து விட்டனர். இதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். இனி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இதை அந்த விமான நிறுவனத்துக்கும் டேக் செய்திருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்டுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான
நிறுவனம், லக்கேஜ் தாமதத்துக்கு வருந்துகிறோம், இது பற்றி சரியாக தகவல் அளித்துள்ளீர்களா?’ என்று கேட்டிருந்தது.
சோனம் கபூர் ட்விட்
பிரிட்டிஷ் எயர் விமான நிறுவனம் மீது சோனம் கபூர் புகார்
இதற்கு சோனம் கபூர் ‘எல்லாம் முடிந்துவிட்டது. நீங்கள்தான் இனி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மோசமான நிர்வாக செயல்பாடு’ என்று கோபமாக பதில் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த விமான நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளது. விரைவாக உங்கள் உடமைகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
நடிகை பூஜா ஹெக்டேவும் இதை ஆமோதித்துள்ளார். அவர் ‘கடந்த மாதம் எனது 2 உடமைகளை தொலைத்து
விட்டார்கள். பின்னர் கூரியர் மூலம் அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு இது வாடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
இவரது சமூக வலைதள பதிவில் இவரது ரசிகர்களும் இந்த விமான சேவையை பயன்படுத்தாமல் விலகி கொள்ளுங்கள்
என் அப்பரப்புரை புரிந்து வருகினறனர் .
அம்மணி செய்த வேலையால் பிரபல விமான சேவை நிறுவனத்திற்கு நஷ்ட்டத்தை ,அவ பெயரை ஏற்படுத்தி விட்டதாக பார்க்க படுகிறது .
சில விமான நிறுவனங்கள் பயணிகளை இவ்வாறு சீண்டி பார்ப்பதில் முன் நிலை வகிப்பது குறிப்பிட தக்கது

திடீர் விலை வீழ்ச்சியில் தங்கம்
திடீர் விலை வீழ்ச்சியில் தங்கம்
ஈரான் ,அமெரிக்கா போர் பதட்டம் காரணமாக கச்சாய் எண்ணெய் ,மற்றும் தங்கத்தில் விலை சடுதியாக அதிகரித்தது .
தற்போதும் அமெரிக்கா ,ஈரான் சமர நிலைக்கு சென்றுள்ள நிலையில்
தங்கத்தில் திடீர் வீழ்ச்சி ஏற்படவுள்ளது ,
அவசர பட்டு விலை மேலும் ஏறிடும்என எண்ணி தங்கத்தை வாங்காதீங்க.இன்று அல்லது வரும் வாரம் இந்த விலையில் கடுகதி வீழ்ச்சி இடம்பெறும் .
சாட் தெளிவாக காண்பிக்கிறது , இறங்கு வரிசையில் அதன் செயலி உள்ளது ,பின்னர் 1500 தட்டிய பின் மேல் ஏறுவரிசையில் விலை அதிகரிக்கும்
இன்றைய நிலவரப்படி gold trader so happy sell will hit nearly 1528 அல்லது 1516 எட்டி பிடிக்கும் .வாழ்த்துக்கள்
நமது கணிப்பு சரியானதா இல்லையா என்பதை வரும் வாரம் வரை காத்திருந்து பாருங்கள் .

ஈரான் ஆதரவு படைகள் மீது அகோர வான் தாக்குதல் – பலர் பலி
ஈரான் ஆதரவு படைகள் மீது அகோர வான் தாக்குதல் – பலர் பலி
கிழக்கு சிரியாவில் தளம் அமைத்து எதிரிகளுக்கு எதிராக போராடி வரும் ஈரானின் பின்புலத்தில் இயங்கும்
ஈரான்,ஈராக்கிய ஆதரவு குழு மீது திடீர் வான் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவர்களது வாகன தொடர் அணியை கண்காணித்து துரத்தி சென்று உளவு விமானம் மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்த
பட்டுள்ளது ,இதில் சம்பவ இடத்தில எட்டு பேர் பலியாகியும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் .
இந்த தாக்குதலை இஸ்ரேல் வான்படையின் நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது .
இதே அரசு தம்மீது பெரும் தகுதல்களை நடத்திட ஈரான்,ஈராக்கிய ஈரானின் ஆதரவு குழுக்கள் முயற்சித்து
வருவதாக இஸ்ரேல் உளவுப்படையான மொசாட் மூலம் தகவல் கிடைக்க பெற்றதை அடுத்து இஸ்ரேல் இதனை அறிவித்திருந்தது .
இவ்வாறு அறிவித்து சில நாட்களில் இஸ்ரேல் வலிந்து தாக்குதலை மேற்கொண்டு குறித்த குழுவை தாக்கி அழித்துள்ளதாக நம்ப படுகிறது
தொடரும் இந்த போர் எப்பொழுது முடிவடையும் …? இதன் ஊடாக நாங்கள் தாக்குதலை தொடுக்க போகிறோம்
என்பதை இஸ்ரேல் வெளிப்படையாக அறிவிப்பதாக இந்த தாக்குதல்கள் எடுத்து கண்ணப்பிக்கின்றன .
ஈரான் ஆதரவு படைகள்

பொலிஸ் அதிகாரியை ஜீப்பினால் இடித்த நபர்
பொலிஸ் அதிகாரியை ஜீப்பினால் இடித்த நபர்
இலங்கை -குருநாகல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் மீது வேகமாக ஜீப்பை ஒட்டி வந்த நபர் தனது கட்டு பாட்டை இழந்த நிலையில் அவர் மீது மோதியுள்ளார் .
இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் .
குற்றவாளி கைதுசெய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுளளார் .
சாரதிகளின் அலட்சிய போக்கின் காரணமாக இலங்கையில் இவ்வாறு தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு நாள்தோறும் பலர் பலியாகியும் ,காயம் அடைந்தும் வருவது குறிப்பிட தக்கது
இலங்கை ஓடி வரும் சீன உயர் குழு
இலங்கைக்கு ஓடி வரும் சீன உயர் குழு
இலங்கையில் ஏழாவது ஜனாதிபதியாகி பதவி ஏற்றுள்ள கோட்டபாயவை சந்தித்து பேசிட சீனாவின் உயர் பீட குழு ஒன்று எதிர் வரும் வாரம் வருகிறது .
இங்கே வரும் இந்த குழு முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் உடன் படிக்கையில் கைச்சாத்திடுவதுடன் ,சீனாவுக்கு
வருமாறு கோட்டபாயவுக்கு அழைப்பு விடுக்க படும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .
இதே கால பகுதியில் ஆசியாவுக்கு பொறுப்பான பிரதி அமெரிக்கா அதிகாரியும் வருகை தரவுள்ளார் .
இவர்களிடம் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறவுள்ள மனித உரிமை அமர்வில் தம்மை காப்பாற்றும் படி
இலங்கை வேண்டுகோள் விடுக்கலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது .
தங்க கொள்ளையர்கள் மூவர் கைது
இலங்கையில் – தொடர் தங்க கொள்ளையில் ஈடுபட்ட குழுவொன்று
காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
கைதானவர்க்ள தீவிர விசாணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர் ,விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
மேலும் பல கொள்ளை சம்பவம் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனவும் கருத படுகிறது
100 அடி பள்ளத் தாக்கில் வீழ்ந்த வான்
100 அடி பள்ளத் தாக்கில் வீழ்ந்த வான்
இலங்கையில் – இன்று காலை வான் ஒன்று சாரதியின் காட்டாது பட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து
விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கை வரும் அமெரிக்கா அதிகாரி
இலங்கை வரும் அமெரிக்கா அதிகாரி
அமெரிக்காவின் ஆசிய நாடுகளுக்கான முதன்மை துணை உதவி செயலர் இலங்கை வருகிறார் ,
இவர் இலங்கையில் இடம்பெறும் தை பொங்கல் தமிழர் விழாவை முன்னிட்டு இலங்கையில் தங்கி இருப்பார் .
இவ்வேளையில் கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சில் ஈடுபடுவார் என தெரிவிக்க பட்டுள்ளது
,கோத்தபாய அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் இலங்கை வரும் முதல் அமெரிக்கா உயர் அதிகாரி இவர் என்பது குறிப்பிட தக்கது
தமிழர் பகுதியில் எரிபொருளுக்கு தாட்டு பாடு இல்லை -ஆளுநர்
தமிழர் பகுதியில் எரிபொருளுக்கு தாட்டு பாடு இல்லை -ஆளுநர்
இலங்கை தமிழர் தாயாக பகுதியான வடக்கு பகுதியில் எரிபொருளுக்கு தட்டு பாடு இல்லை எனவும் இதனால்
மக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என வடக்கு ஆளுநர் திருமதி சாள்ஸ் தெரிவித்துள்ளார் .
ஈரான்,அமெரிக்கா முறுகல் உச்சம் பெற்ற நிலையில் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார் .
மக்கள் நெருக்கடிக்கு உள்ளாகி அச்சம் கொள்ளாது இயல்பு வாழ்வுக்கு திரும்புமாறு வேண்டு கொள் விடுக்க பட்டுள்ளது
14 ஆயிரம் வீடுகள் கட்டும் மகிந்த
இலங்கையில் ஆளும் மகிந்த அரசாட்சியில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 14 ஆயிரம் வீடுகள் கட்டும் படி மகிந்த
வேண்டுகோள் விடுத்துளளார் .
அமைச்சரவையில் வைக்க பட்ட தீர்மானத்திற்கு அமைய ஒரு வீடு சுமார் ஆறு லடசம் ரூபா செலவில் இந்த வீடுகள் கட்ட படுகின்றன
சுனாமி வீட்டுத்திட்டத்தில் மோசடி செய்த மகிந்தா இதுவரை அந்த பாத்திக்க பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி தரவில்லை .
இவ்வாறான நிலையில் மீளவும் வீட்டு திட்ட ,அபிவிருத்தியில் கையாடல் இடம்பெற கூடும் என்றே அடித்து கூற படுகிறது
வீட்டு திட்டங்களை என சர்வதேச நாடுகள் ஒதுக்கிய நிதியை மகிந்த ஆட்சியில் காணாமல் போனது ,
மீள சகோதரன் கோட்டா ஆட்சியில் இவையும் காணாமல் போகும் நிலை உருவாகும் என மக்கள் அச்சம் கொள்கின்றனர்
தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
தர்பார் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் தர்பார்படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
தர்பார் படத்தைஇணையதளங்களில் வெளியிட தடை – ஐகோர்ட்டு உத்தரவு
ரஜினிகாந்த்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. வழக்கம் போல ரஜினி ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
தர்பார் படம் இன்று வெளியானதையொட்டி தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்தனர். இந்தியாவில் மட்டும், 4,000 தியேட்டர்களில், ‘தர்பார்‘ படம் வெளியானது.
பொங்கல் பண்டிகைக்கு, ஒரு வாரம் முன்னதாகவே வெளியான ‘தர்பார்’ படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு
இதனிடையே, தர்பார் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை கோரி அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை
ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,
தர்பார் படத்தை 1,370 இணையதளங்களில்வெளியிட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது – தீபிகா
குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது – தீபிகா
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, நினைத்த நேரத்தில் குழந்தைபெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது – தீபிகா படுகோனே காட்டம்
தீபிகா படுகோனே
இந்தி நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியில் இருக்கும் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர்.
அவ்வப்போது கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் தீபிகா, நான் கர்ப்பமானால், அதை மறைக்க முடியாது; ஒன்பது மாதமானால், நான் சொல்லாமலேயே என்
உடம்பும், வயிறும் உங்களுக்கு காட்டி விடப்போகிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை; மறைக்கவும் வாய்ப்பில்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், சபாக் இந்தி திரைப்படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் பிசியாக இருக்கும் தீபிகா படுகோனே, சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை
சந்தித்தார். அவரிடத்தில் கர்ப்பம் தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதனால் கடும் கோபம் அடைந்த தீபிகா படுகோனே கூறியதாவது:- நான் இப்போது கர்ப்பம் தரிக்கும் நிலையில் இல்லை. சினிமாவில் என்னுடைய முழு கவனமும் இருக்கிறது.
தீபிகா படுகோனே
நானும், ரன்வீரும் சினிமாவில் நடிப்பதைதான் முழு நேர வேலையாக கொண்டிருக்கிறோம். குழந்தைகள் மீது எங்களுக்கு ஆர்வமும், பாசமும் உண்டு.
எங்களுக்கும் குழந்தைகள் வேண்டும் தான். அதற்காக, நினைத்த நேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ளமுடியாது. எப்போது, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமோ,
அப்போது, முடிவெடுத்து செயல்படுவோம். அதை உங்களிடமும் தெரிவிக்கிறேன். அடுத்த ஒன்பதாவது
மாதத்தில், நான் சொல்லவில்லை என்றாலும், அதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்
5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளம் இரண்டின் மீது ஈரான் 22 ஏவுகணைகளை வீசியது ,இதில் இரண்டு வெடிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்தது ,
அங்கு எவரும் கொலை செய்யப்படவோ காயமடையோவோ இல்லை என அமெரிக்கா வழமையாக கூறுவது போன்று சொல்வதெல்லாம் ,உண்மையே என சொன்னது …?
எமது நோக்கு அங்குள்ள இராணுவத்தினரை கொல்வது அல்ல ,அங்குள்ள அமெரிக்கா படைகளின் முக்கிய சாதனங்களை அழிப்பது ,செயல் இழக்க வைப்பது ,
அதற்காகவே நாங்கள் அந்த இலக்கை தெரிவு செய்தோம் . அமெரிக்கா இராணுவத்தை படுகொலை செய்வதாயின் எமது இலக்கு தெரிவு வேறாக இருந்திருக்கும் 48
மணித்தியாலத்திற்குள் முதலாவதாக 500 இராணுவத்தை கொன்று இருப்போம் ,அதன் பின்னர் நான்காயிரம் முதல் ஐயாயிரம் படைகளை கொன்று குவித்திருப்போம் .
அதனை செய்து முடிக்க எம்மால் இயலும் நாம் அதனை செய்யவில்லை, எமது இலக்கு அதுவல்ல .
எமது நாட்டுக்கு அமெரிக்கா பாயங்கர வாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ,எனவே இங்கிருந்து அவர்கள் முற்றாக விலக வேண்டும் என்பதே எமது கொள்கை நிலைப்பாடு .
அது தவறின் அவர்கள் நாம் முன்னர் தெரிவித்தது போன்று அங்கு நடக்கும் என மீளவும் மிரட்டல் விடுத்துள்ளார் .
அதேவேளை அந்தர் பெல்ட்டி அடித்து கதையை மாற்றியுள்ளார் .அதாவது உங்களை கொல்வதை விட
5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்
உங்கள் சாதனங்களை அழித்தால் நீங்களாகவே கிளம்பி விடுவீர்கள் என்பது அவரது புதிய நிலைப்பாடாக மாற்றம் பெற்றுள்ளது .
அப்படியானால் இனிவரும் காலங்களில் அமெரிக்காவின் முக்கிய ராடார் நிலையங்கள் மீது தாக்குதல் தொடுக்க
படலாம் எனவும் ,அவர்கள் விமானங்கள் ,ஏவுகணைகள் உள்ள பகுதி அழிக்க ஈரான் தயராகி வருகிறது .
இதனை முன் எச்சரிக்கையாக மீளவும் ஈரான் அமெரிக்காவிற்கு தெரிவிக்கிறது ,இது ஒரு சாதாரண மிரட்டல் என அமெரிக்கா கருதினால் அது தவறான ஒரு
கணிப்பாக அமையும் ,இப்பொழுதே அமெரிக்கா ஈரான் தொடர்பாக தவறான கணிப்பை செய்ததன் விளைவே இந்த பெரும் முறுகளுக்கு காரணம் என இராணுவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர் .
அது தவிர ஐக்கிய நாடுகள் சபையில் எமது சுய பாதுகாப்பிற்காக நாங்கள் ஈரான் தளபதி சுலைமானியை படு கொலை செய்தோம் என அமெரிக்கா தெருவித்தது ,
ஆனால் எமது இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது ,அது பெரும் படுகொலையை புரிந்திட முயன்றது என அமெரிக்கா தெரிவிக்க
அதற்குபதிலடியாக ஐக்கிய நாடுகள் சபையோ ஈரான் தமது சுய பாதுகாப்பிற்கு இந்த தாக்குதலை மேற்கொண்டது என
அமெரிக்காவின் விளக்கத்தை அப்படியே வழங்கியுள்ள நிகழ்வு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .
செம காமெடியாக இது அமைந்துள்ளது ,அதாவது ஐக்கிய நடுகள்சபை அமெரிக்கா மீதே தவறு என்பதை சொல்லலாமால் சொல்லி விட்டது .
ஈரானில் வைத்து பயணிகள் விமானத்தை ரசியாவே சுட்டு வீழ்த்தியது என்றது ,ஆனால் இதில் ஒரு மர்மம் உள்ளது
,எதியோப்பிய ,கொலண்ட்,மலேசிய விமானங்கள் வீழ்ந்த பொழுது அதில் பயணித்த பயணிகள் உடல்கள் சுக்குநூறாகின .
ஆனால் இங்கே நிகழ்வு அப்படியான ஒன்றாக தெரியவில்லை ,அறுபதுக்கு மேற்பட்ட மனித உடல்களில் எதுவித காயங்களும் இன்றி மீட்க பட்டுள்ளனர் .
அப்படி என்றால் அதிர்வில் அவர்கள் இறந்திருக்க வேண்டும் ,என்றே நோக்க முடிகிறது .
இவர்கள் கூறுவது போன்று ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பின் அந்த விமானம் முற்றாக வெடித்து சிதறி இருக்கும்..?
,எரிபொருள் தங்கியினால் உடல்கள் எரிந்து சாம்பலாகி இருக்கும் அல்லவா ..?
அப்படி அதற்கு சாத்தியம் உள்ளது எனின் எப்படி இந்த உடல்கள் முழுமையாக கிடைக்க பெற்றிருக்க முடியும் ..?
இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு விமானத்தை இறக்கிட முன் எரிபொருளை விமானி ஊற்றி இருப்பாரா .?
இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன .அத்துடன்
இப்பொழுது அமெரிக்கா ஈரான் ரசியாவின் ஏவுகணையை பாவித்து விமானம் மீது தாக்கல் நடத்தியது என்றும் அது
தவறுதலாக விமானத்தில் பட்டு விட்டது ,இது ஒரு விபத்து என தெருவித்து சடைகிறது ,ஏன் இந்த அவசர சடையல் ..?
5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்
எது எப்படியோ மத்திய கிழக்கில் ஈரான் கூட்டணியுடன் பின் கதவு வழியாக ரசியா நுழைகிறது .
ஆடுகளம் பலமாக தலைகீழ் நிலையை அமெரிக்காவிற்கு ஏற்படுத்த போகிறது
ஈரான் கூறிய புதிய கருத்து அமெரிக்கா சாதனங்கள் என்றால் ,அமெரிக்காவிடம் தற்போது அங்கு இல்லாத அந்த
புதிய தொழில் நுட்பத்தை ஈரான் பயன் படுத்த போகிறதா ..?
என்ற சந்தேகம் வலுத்துள்ளது .
இதுவரை தமக்கு சிறிய சேதம் ஏற்பட்டது ,என கூறிய உலக சண்டியர் அமெரிக்கா ,அந்த விமான தளத்தின் சேதங்களை காண் பிக்கவே இல்லை .
அப்படி என்றால் ஈரான் கூறியதன் படி அவர்களது வான் மறிப்பு ஏவுகணைகள் செயல் இழக்க வைக்க பட்டுள்ளன .
அல்லது ஈரானின் பலாஸ்டிக் ஏவுகணை ,செய்மதியுடன் கூடிய புதிய சிக்கனல் வழிகாட்டி மேம்பட்ட தொழில் நுட்பம் இந்த ஏவுகணையில் ஈரான் பொருந்தியுள்ளது .
அதனால் தான் என்னவோ அமெரிக்காவின் ரேடார்களில் இந்த ஏவுகணை வரவு காண்பிக்க படமால் போயுள்ளது ,
அதனால் அமெரிக்காவினால் இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியாது தோற்று போயுள்ளது .
இஸ்ரேல் அவசர அவசரமாக லேசர் ஏவுகணை அறிவிப்பை நேற்று வெளியிட்டதில் இருந்து ,அதாவது ஈரானால்,ஈராக்கிய இரண்டு
விமான தளங்கள் தாக்கிய சில மணித்துளிகளில் அந்த விடயத்தை அது அறிவித்திருந்தது .
இப்பொழுது ஈரானின் இராணுவ தளபதி சாதனங்களை அழித்தல் எமது பிரதான நோக்கு என்பதாக தெரிவித்துள்ளது
அமெரிக்கா தோல்வியை சந்தித்துள்ளதை இடித்துரைக்கிறது .
நேற்றைய தினம் அமெரிக்கா ஜனாதிபதி பேயறைந்த முகத்துடன் வாடிய நிலையில் ,சோரவிழந்து காணப்பட்டார் .
ஈரான் கூறியது போல அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்து விட்டோம் என்பது டிரம்பின் முகத்தில் அதன் வலியை காண முடிந்தது .
அதுபோலவே இராணுவ தளபதிகள் முகத்திலும் அந்த அறை ,அதை அவர்கள் முகத்தை சிவக்க வைத்ததை அவதானிக்க முடிந்தது .read more
எரிபொருள் வரும் நாட்களில் அதிக விலையை எட்டி பிடிக்கும், இப்பொழுதே கலன்களில் வாங்கி வைத்து
கொள்ளுங்கள் ,நிலவரம் ,கலவரமாக மாற்றம் பெற போகிறது .பெரும் பதட்டம் ஏற்பட போகிறது .
களம் தடம் மாறி செல்கிறது ,இரு வல்லரசுகள் போட்டி இப்பொழுது ஆரம்பித்துள்ளது
இலங்கையில் எரிபொருள் பதுக்கல் இடம்பெற்றாலும் இடம்பெறலாம் .அங்கும் போராட்டமும் அரசுக்கு எதிராக வெடித்தாலும் வெடிக்கலாம் .
ஈரான் தாக்குதல் இலங்கையை பாதிக்க போகிறது ,தேர்தல் நேரம் கோட்டா காணாமல் போனாலும் போகலாம் .
- வன்னி மைந்தன் –

மாணவிக்கு ஆசிரியர் புரிந்த செயல்
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 19 வயதான மாணவி ஒருவரை
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியரான வவுனியா நகர சபையின் முன்னாள் பிரதித் தலைவர் நேற்று
(08) மாலை சந்தேகத்தின் பேரில் செட்டிக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகப்படுத்த குறித்த ஆசிரியர் முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் வசிக்கும் 41 வயதான ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்த உள்ளதாக சம்பவம் தொடர்பில்
மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுமையான பழிவாங்கல் தொடரும் – பிணமாகும் அமெரிக்கா -ஈரான் அறிவிப்பு
கடுமையான பழிவாங்கல் தொடரும் – பிணமாகும் அமெரிக்கா -ஈரான் அறிவிப்பு
ஈரான் தனது பிராந்திய பகுதியில் நிலை கொண்டுள்ள அமெரிக்காபடைகள் மீது கடுமையான பழிவாங்கல் தாக்குதல் விரைவில் தொடரும் என அதிரடியாகஅறிவித்துள்ளது .
அமெரிக்கா அரச பயங்கரவாத இராணுவத்தால் பாடுகொலை செய்ய பட்ட சுலைமானியின் புரட்சிகர
படையின் தற்போதைய தளபதி காணி IRGC commander Ghaani இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார் .
நாம் எமது பெறுமதி வாய்ந்த ஒருவரை அமெரிக்கா பயங்கரவாதிகளின் கோர தாக்குதலில் பறி கொடுத்துள்ளோம் ,நாம் நேற்று நாடத்திய ஏவுகணை
தாக்குதலில் தமது படையினருக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்து வருகிறது .
எனவே விரைவில் அமெரிக்கா படைகள் பிணங்கள் கையளிக்க படும் என அவர் மீளவும் சூளுரைத்துள்ளார்
,மூன்றாம் உலக போர் வெடித்து விடுமோ என்ற அபாயம் எழுந்துள்ள நிலையில்
டிரம்பின் பேச்சு நழுவலாக அமைந்த நிலையில் ஈரான்
கடுமையான பழிவாங்கல் தொடரும் – பிணமாகும் அமெரிக்கா -ஈரான் அறிவிப்பு
மீளவும் தனது கூற்றை முன்னோக்கி நகர்த்தி கடுமையான பழிவாங்கல் இடம்பெறும் என அதிரடியாக அறிவித்துள்ளது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் கடைசி சிப்பாய் இருக்கும் வரை அவர்களுக்கு எதிராக எமது பழிவாங்கும்
துடைத்தழிப்பு தாக்குதல் வேகம் பிடிக்கும் என அவர் முழங்கியுள்ளார் .
ஈரான் பாராளுமன்றம் அமெரிக்கா படைகள் அந்த மண்ணில் இருந்து அகற்ற படவேண்டும் என அறிவித்திருந்த நிலையில் அங்கிருந்து தாம் வெளியேற
மாட்டோம் என அமெரிக்கா தெரிவித்து வருவதும் மேலும் முறுகளை உக்கிரமடைய செய்துள்ளது
ஈரான் ,ஈராக் குறிப்பாக மத்திய கிழக்கு பகுதி ஊடக விமானங்களை பறக்க பல நாடுகள் விமான நிறுவனங்கள் தடை வித்துள்ளன .
இதனால் விமான போக்குவரத்து பயண நேரம் அதிகரிக்க படுவதுடன் செலவுகளும் அதிகரிக்க படுகிறது ,ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடுக்கு நிலையில் விமான
பறப்புக்கள் தடுக்க படுவதுடன் உலக மக்கள் வான் பறத்தல் பெரும் தர்ம சங்கட நிலைக்கு தள்ள பட்டுள்ளது
அமெரிக்கா படைகள் அவர்களது குடும்பங்கள் பிணமாகவும் ,அங்கம் இழந்த நிலையிலும் அதன் போர் வடுவை சுமந்த படி அனுப்பி வைக்க படுவார்கள் எனவும்
,அவர்களது குடும்பங்கள் ,குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்த படும் ,காரணம் அவர்கள் யாவரும் அமெரிக்கா பயங்கரவாதிகள் என ஈரான் திடமாக அறிவித்துள்ளது .
எமது வீரியமான ஏவுகணை தாக்குதல் பலமாக அமெரிக்கா பயங்கரவாதிகள் இராணுவ நிலைகள் மீது தொடுக்க படும் என புரட்சி படை அறிவித்துள்ளது ,பல் நாட்டு படைகள்
மத்தியிலும் ,நாடுகள் மத்தியிலும் பதட்டத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது .
நேட்டோ படைகளை வைத்து ஈரானை தாக்கி அழிக்கும் நகர்வில் அமெரிக்கா செயல்பட உள்ளதை அவரது நேற்றைய பேச்சின் வெளிப்பாடாக இருக்கிறது .
எனவே நேட்டோ படைகளை முன் நகர்த்தி பின்னால் தாம் நின்று ஈரான் மீது தாக்குதல் ஒன்றை தொடுக்கலாம் என்ற
சந்தேகம் இப்போது போரியல் வல்லுனர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது
ஈரான் போரை தொடர்ந்தால் ,தொடர் தாக்குதலை தொடுத்தால் அமெரிக்காவும் தாக்குதலை தொடுக்க வேண்டி வரும் என்பதே நியதியாக உள்ளது ,முடிவில்லாத போராக
அமெரிக்கா ஜனாதிபதி புரிந்த வேலையால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,அமெரிக்கா நேச நாடுகள் அமெரிக்காவை
ஈராக்கில் தவிக்க விட்டு செல்லும் நிலை அதிகரித்து காண படுகிறது .
இது டிரம்பின் தேர்தல் தோல்விக்கு ஒரு காரணமாக அமைய பெற போகிறது .,ஈரான் கூற்று மத்திய கிழக்கிலும்
அமெரிக்காவிற்கு உள்ளும் தாக்குதல் நடத்த படும் என்பதில் குறியாக உள்ளது .
அப்பாவி மக்கள் பலியாக போகின்றனர் என்பதே வருங்காலம் எடுத்துரைக்க போகிறது .read more
ஈரான் பழிவாங்கல் தாக்குதல் தொடர போகிறது ,வெடி குண்டுகளால் மத்திய கிழக்கு அதிர போகிறது .
இதன் மூலம் போர் பிரகடனத்தை ஈரான் அறிவிக்கிறது .
- வன்னி மைந்தன்








