இந்தியா இராணுவத்தினர் 18 பேர் கொரனோவால் பாதிப்பு
இந்தியா இராணுவத்தினர் 18 பேர் கொரனோவால் பாதிப்பு
இந்தியா இராணுவத்தினர் பதினெட்டு பேர் புதிதாக பரவி வரும் கொரனோ
நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக
இராணுவம் தெரிவித்துள்ளது
இதற்கு முன்னர் 22 பேர் பாதிக்க பட்ட நிலையில் தற்பொழுது
மேலும் 18 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்
இதுவரை எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்த நோயினால் பாதிக்க
பட்டுள்ளதாக இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு
கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு
கனடா Ontario highway.வேகசாலையில் மணிக்கு 308 km/h வேகத்தில்
பென்ஸ் கார் ஒன்றை ஓட்டி சென்ற பத்தொன்பது வயது வாலிபன் கைது செய்யப் பட்டுள்ளார்
சாலையில் பெருத்த பட்டிருந்த கமராக்கள் மூலம் இவரது காரின் வேகத்தை அவதனித்த போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்
மிகவும் உயிர் ஆபத்தான வேகத்தில் இவ்விதம் கார் ஓட்டி சென்றதால் அவரது லைசன்ஸ் பறிமுதல் செய்ய பட்டுள்ளது
சனிக்கிழமை இரவு பத்து முப்பது மணியளவில் இந்த சம்பவம்
இடம் பெற்றுள்ளது ,மிகவும் உயிர் ஆபத்தான
கார் ஓடுதல் இது என்பது குறிப்பிட தக்கது

இன்று இலங்கையில் மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை இது
இன்று இலங்கையில் மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை இது
நாளைய தினம் (11) ஆரம்பமாகவுள்ள மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுக்கும் அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைகளை ஆரம்பித்தல், போக்குவரத்து சேவை
மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய முறை தொடர்பான பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு:
கொவிட் 19 வைரசு தொற்றை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுத்தல்
நாடு முழுவதிலும் கொவிட் 19 வைரசு பரவுவதை தடுப்பதற்காக தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் சூழ்நிலைக்கு அமைவான வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை 2020.05.11 ஆம்
திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக கீழ்கண்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகும்.
• மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுத்தல்
- தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையிலான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைத்து அரச நிறுவனம் அல்லது அலுவலகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- இவ்வாறு வரும் ஊழியர்களின் சேவை அடையாள அட்டையை அல்லது நிறுவனத்தின் கடிதமொன்றை அல்லது அந்த கடிதத்தின் இலத்திரனியல் பிரதியொன்றை அவசரகால
- அனுமதிப் பத்திரமாகப் பயன்படுத்த முடியும் இதில் மாவட்ட எல்லையைக் கடந்து கடமைக்கான இடத்திற்கு வருதல் அல்லது
- வெளியே செல்லும் ஊழியர்களுக்காக வைத்திய அதிகாரியின் MHO சான்றிதழைப் பெற்றுக் கொள்வது அவசியமல்ல
அரச நிறுவனத்திற்கு தனிப்பட்ட வாகனங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் வாகனங்களில் வரும் அர ஊழியர்கள் மணித்தியாளம் 8.30 இற்கு முன்னர் அலுவலக
இடத்திற்கு சமூகமளித்து, கடமையை பூர்த்தி செய்து மணித்தியாளம் 15.00 இற்கும் 16.00 மணித்தியாலத்திற்குமான காலப்பகுதியில் வெளியேறுவது அவசியமாகும். அவ்வாறு இருத்த
போதிலும் அரசாங்கத்தின் தொழிற்சாலைக்காகவும் சேவை அடிப்படை ரீதியில் முன்னெடுக்கப்படும் அரச நிறுவனத்திற்கு கால நேரம் பொருந்தாது.
தனியார் நிறுவனம் ஃ அலுவலகங்களில் தொழிலுக்காக தனியார் வாகனங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் வாகனங்களில் வரும் ஊழியர்கள் மணித்தியாளம் 8.30 இற்கும்
மணித்தியாளம் 10.00 இற்கும் இடையிலான காலப்பகுதியில் தமது சேவை இடத்திற்கு வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதுடன், கடமையை நிறைவு செய்து ஊழியர்களை அழைத்துச் செல்லும்
வாகனம் மணித்தியாலம் 16.00 இற்கும் மணித்தியாளம் 17.00 இடையிலான காலப்பகுதியில் புறப்பட வேண்டும்.
- பொதுப் போக்குவரத்து சேவை (ரயில் மற்றும் பஸ்)
பயணிகளின் போக்குவரத்தில் சுகாதார பாதுகாப்பு முறையை பின்பற்றி சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர், சாரதிகள் - நடத்துனர்கள் செயல்பட வேண்டும்.
- அத்தியாவசிய பொதுமக்கள் சேவையை வழங்கும் பொழுது மற்றும் உணவு பொருள் மற்றும் பொருள் விற்பனையை
- மேற்கொள்ளும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதன் கீழ் மருந்தகங்கள் பலசரக்கு , தொலைபேசி விற்பனை
- நிலையங்கள், புடவை விற்பனை நிலையங்கள், புத்தகம் மற்றும் பத்திரிகை விற்பனை நிலையங்கள் மற்றும் அதிஷ்ட
- இலாபசீட்டு விற்பனை கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.
- மேலே குறிப்பிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் இந்த வர்த்தக நிலையங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வது தாம்
- பதிவைக்கொண்டுள்ள அல்லது தங்குமிடத்தைக் கொண்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் அல்லது சேவையை வழங்கும் நிலையத்தில் மாத்திரமாகும்.
- பொதுமக்களின் தேவைக்காக வெளியில் செல்வதற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரதை பெற்றுள்ள தனியார் வாகனம் மணித்தியாலம் 10.30 இற்கும் மணித்தியாலம் 15.00
- இற்கு இடையிலான காலப்பகுதியில் மாத்திரம் பயணிப்பதற்கான அனுமதி வழங்க்கபடும் .இருப்பினும் இதற்கமைவாக வீட்டிற்கு வெளியே தனியான
- நடவடிக்கைகளுக்காக செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை முன்னெடுத்தல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் , அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் அல்லது மருந்து வகைகளை கொள்வனவு செய்தல் போன்;ற
தனிப்பட்ட தேவைகளுக்காக அவசரகால அனுமதிப்பத்திரமின்றி வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கத்திற்கு அமைவாகவே ஆகும்.
இதற்கமைவாக 1,2 இலக்கங்களைக்கொண்டவர்கள் திங்கட்கிழமைகளிலும் , 3,4 செவ்வாய்க்கிழமைகளிலும், 5,6 புதன்கிழமைகளிலும், 7,8 வியாழக்கிழமைகளிலும் மற்றும் 9,0
சனிக்கிழமைகளிலும் ஆகும். இருப்பினும் தனிமைப்படுத்தலுக்கு ஃ சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதார வைத்திய
அதிகாரிகளின் சான்றிதழ் கிடைக்கும் வரையில் மேற்குறிப்பிட்ட வகையில் பயணிக்க முடியாது.
- சிறிய உணவகங்கள், உணவை வழங்கும் சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் ரெஸ்டுரண்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
- அத்தோடு இவற்றை திறப்பது தொடர்பில் காலத்திற்கு அமைவாக எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.
- தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவு விநியோகம் (னுநடiஎநசல ளநசஎiஉந) சேவை நிறுவனத்திற்காக தொடர்ந்தும் செயலபட முடியும்.
- சுப்பர் மார்க்கட்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு முடிவதுடன் இதில் சம்பந்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு
- விதிமுறைகளை கடைபிடித்தல் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பொறுப்பாகும்.
- முச்சக்கர வண்டிகளில் ஆகக் கூடியவகையில் பயணிக்க முடிகின்றமை சாரதியைத் தவிர இருவர் மாத்திரமே ஆகும். இதே போன்று வாடகைக்கார் (ருடிநசஇ Piஉமஅந போன்றவை)
- வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதுடன் இதில்
- பயணிப்பதற்கு சாரதியைத் தவிர ஆகக் கூடிய வகையில் 3
- பேருக்கு மாத்திரமே ஆகும். இதன் போது சுகாதார பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட வேண்டும்.
இருப்பினும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக ஊழியர்களை அழைத்து வரும் பஸ் உள்ளிட்ட ஏனைய வாகனங்களில், ஊழியர்களை அழைத்து வரும்
பொழுது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்ப விதிமுறைகளை (அதாவது முகக்கவசம் அணிதல், கிருமிஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் , உடல் வெப்பம்
பரிசோதனை செய்தல் ) உரிய முறையில் கடைபிடித்து வாகனத்தின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு பயணிகளை அழைத்து வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
- சலூன் மற்றும் அழகு நிலையங்களை திறந்து முன்னெடுக்க முடிவதுடன் இதில் அடிப்படையாக இந்த நிலையங்களினால் அவ்வாறு முன்னெடுப்பதற்காக பிரதேச வைத்திய
- அதிகாரிகளின் சான்றிதழை பெற்றக் கொள்ள வேண்டும். மேலும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு
- அமைவாக செயல்படுவது சம்பந்தப்பட்ட நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்பாகும்.
- தனியார் வைத்திய மத்திய நிலையங்களை திறந்து
- முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதில் நிறுவனத்தினால் அவ்வாறு முன்னெடுப்பதற்கு பிரதேச வைத்திய அதிகாரிகளின் சான்றிதழைப் பெற்றுக்
- கொள்வதுடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறிக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது நிறுவனங்களின்
- உரிமையானர்களினதும் ஊழியர்களினதும் பொறுப்பாகும்.
- சுற்றுலா ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இருப்பினம் இந்த ஹோட்டல்களில்
- ரெஸ்டுரண்டுகளை திறத்தல் மீள அறிவிக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. திறக்கப்படும் அனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவை
- அமைச்சினால் 2020.04.17 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள COVID 19 இற்கான பதிலளித்தல் தொடர்பான செயற்பாட்டு வழிகாட்டிதொகுப்பு மற்றும் அதற்கமைவாக அடிக்கடி
- வெளியடப்படும் அறிவுறுத்தல் மற்றும் சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது அத்தியாவசியமாகும்.
- பொருளாதார மத்திய நிலையங்கள் உள்ளடங்கலாக
- கொழும்பு மெனிங் வர்த்தக சந்தை உள்ளிட்ட மொத்த வர்த்தகத்திற்கான சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களை முன்னெடுப்பதற்கு தொற்று நீக்கு விதிகளுக்கு அமைவாகவும்
- சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதற்கு அமைவாகவும் செயல்படுவதற்கு அனுமதி கிடைக்கின்றது.
- அனைத்து நிர்மாணப்பணிகளுக்கும் அனுமதி
- வழங்கப்படுவதுடன் நிர்மாண தொழிற்துறைக்கான பொருட்களை (கல்,மணல்,ஓடு, செங்கல் முதலானவை) ஏற்றிச் செல்வதற்கு அனுமதி கிடைக்கின்றது. இருப்பினும்
- நிர்மாணப்பணிகள் இடம்பெறும் வேலைத்தளத்திற்கு அவசியம் தேவையான ஊழியர்கள் சிலறை மாத்திரம் அழைப்பது சம்பந்தப்பட்ட முகாமையாளரின்
- பொறுப்பாவதுடன் அழைக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியாக கடிதங்களை வழங்குவது அவசியமாகும்.
- கீழ்கண்ட நிறுவனம் ஃ இடங்கள் மீள அறிவிக்கும் வரையில் திறப்பதற்கும் ,திறந்து முன்னெடுப்பதற்கும் அனுமதியில்லை
a. வாராந்த சந்தை, நாளாந்த சந்தை முதலான கூட்டு ரீதியில் வர்த்தகம் இடம்பெறும் இடங்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவில் கூடும் கூட்டு வர்த்தக சந்தை (மஹாரகம, பமுனுவ போன்றவை)
b. உடற்பயிற்சி மத்திய நிலையங்கள்
c. Spa நிலையங்கள்
d . கிளப்
e . சூதாட்ட நிலையங்கள் (புக்கி)
முள்ளிவாய்க்கால் நாளை நினைவேந்த தயாராவோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
முள்ளிவாய்க்கால் நாளை நினைவேந்த தயாராவோம் ! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
கறுப்புபட்டி அணிதல்
சுடரேற்றல்
முள்ளிவாய்க்கால் கஞ்சி
உலகத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை
மரக்கன்றுகள் வழங்குதல்
தமிழர் வரலாற்றில் முக்கியமான ஒர் கூட்டு நினைவாக அமையும் மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பின், தமிழீழத்; தேசிய துக்க நாளினை நினைவேந்திக் கொள்ள நாம் தயாராவோம் என
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
கறுப்புபட்டி அணிதல், சுடரேற்றல், முள்ளிவாய்க்கால் கஞ்சி, முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை, மரக்கன்றுகள் வழங்குதல்
என தமிழினப்படுகொலையினை நினைவேந்தும் செயற்பாடுகளுடன், இந்நாளில் சிறப்பாக உலகளாவிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வொன்றினையும்
இணையவழியூடாக ஏற்பாடு செய்துள்ளது. தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகள் என்று உலகெங்கும் உள்ள தமிழர்
தலைவர்கள், அமைப்பு பிரதிநிதிகள் ஒன்றுகூடி இதில் நினைவேந்துகின்றனர் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழுமையான விபரம் :
ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்த சாட்சியமாக விளங்கும் முள்ளிவாய்க்கால், உலகில் வாழும்
அனைத்துத் தமிழர்களின் கூட்டுநினைவிலும் நிலைத்து நிற்கும் நாளாக அமைகிறது.
உலகளாவியரீதியில் நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்;றினால், மக்கள் ஒன்றுகூடுகின்ற பொதுநிகழ்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் ஒரு
சூழலில், முள்ளியவாக்கால் இனவழிப்பின் 11வது ஆண்டு நினைவினை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் நேரடியாக ஒன்றுகூடி நினைவு கூர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
எமது மக்கள் போரே வாழ்வாகவும், வாழ்வே போராகவும் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும் விடுதலைப் பயணத்தினைத் தமது தோளேந்தி
நின்றவர்கள். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வருபவர்கள். முள்ளிவாய்க்கால நினைவுடன் மே 18இனை, தேசிய
துக்க நாளாக அனுட்டிப்பது எமது தேசிய உயிர்ப்புணர்வை வலுப்படுதும் செயன்முறையாக இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்;றினால் ஏற்பட்டுள்ள இன்றைய இந்த
நெருக்கடியினை நாம் எதிர்கொண்டவாறு, துயர்தோய்ந்த, அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவுகளை நமது வீடுகளில் இருந்தவாறு நினைவேந்துவோம்.
இந் நாளில் பின்வரும் நினைவேந்தல் செயன்முறைகளுக்கு நம்மைத் தயராக்கிக் கொள்வோம்.
- மே 18ம் நாள் திங்கட்கிழமை எமது வீடுகளில் சுடரேற்றி முள்ளிவாய்க்காலை குடும்பமாக நினைவேந்திக் கொள்வோம்.
- இந்நாளில் வேலைத்தளங்களுக்கோ, அத்தியாவசிய
- தேவைகளுக்கோ வெளியில் செல்பவர்கள் கறுப்புப்பட்டியணிந்து சென்று எமது மக்கள் பட்ட துயரினை உலகுக்கு வெளிப்படுத்துவோம்.
- ‘இன்னுமொரு முள்ளிவாய்காலை நடக்கவிடமாட்டோம்’ என்ற உறுதியினை எமது அடுத்த சந்ததிகளின் மனங்களில் நிறைய வைக்க, முள்ளிவாய்க்கால் மக்களின் அவலத்தினை
- நினைவிற் கொள்ளும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சியினை’ குடும்பமாக உண்போம். இம் «முள்ளிவாயக்கால் கஞ்சி
- என்பது எமது மக்கள் பட்ட துயரினை நாம் உள்ளுணர்ந்து
- அன்றை தினம் எமது விடுகளில் நாம் தயாரித்து உணவாக உட்கொள்ளும் கஞ்சியினைக் குறிக்கும். யூதர்கள் தமக்கென்று ஓர் தேசம் உருவாகிய பின்னரும், கஞ்சி குடித்து தமதினத்தின்;
- அவலத்தை நினைவு கொள்வதுபோல், முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட கஞ்சிக்கொட்டில்கள் குண்டுமழைக்கும் மத்தியிலும் மக்களின் பசிதீர்த்தது போல் நாமும்
- முள்ளவாயக்கால் இனவழிப்பு நினைவுநாளில் கஞ்சி உண்டு எமது மக்களின் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கால வாழ்வியலை காலாதி காலம் நினைவிற் கொள்ளவோம்.
- இந்நாளில் உலகத்தமிழர்களின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இணையவழியே (அமெரிக்கா) நியூ யோர்க் காலை 8 மணி, ஐரோப்பா மதியம் 14 மணி, இந்தியா,
- இலங்கை மாலை 5:30 மணிக்கு இடம்பெற இருக்கின்றது. இதில் தாயகம், தமிழகம், புலம்பெயர் நாடுகள் என்று உலகெங்கும்
- உள்ள தமிழர் தலைவர்கள், அமைப்பு பிரதிநிதிகள் ஒன்றுகூடி நினைவேந்துகின்றனர். இந்த இணையவழி நிகழ்வினை தமிழர் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும்
- காணலாம்.
- இந்நாளில் ஆண்டுதோறும் உலக ஆளுமைகள் பங்கு கொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையும் சிறப்புற இணையவழி மூலமாக உலகத்தமிழர்கள் காணும் வகையில்
- இடம்பெற இருக்கின்றது.
- இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மே12ம் நாள் முதல் வீட்டுத்தோட்ட மரக்கன்றுகளை தமிழர் தாயகத்தில் வழங்குவதற்கு நாடுகடந்த தமிழீழ
- அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்து வருவதோடு, வழமைபோல் நாடுகடந்த தமிழீழ அரசாங்னத்தின் அரசவை கூடி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை உணர்வுபூர்வமாக தொடங்கி வைக்க இருக்கின்றது.
முள்ளிவாயக்கால் இனவழிப்பின் தம்முயிர் ஈந்தவர்கள் நினைவுடன் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து ஓயாது
உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா துணை ஜனாதிபதிக்கு கொரனோ – ஆட்டம் காணும் அமெரிக்கா
அமெரிக்கா துணை ஜனாதிபதிக்கு கொரனோ – ஆட்டம் காணும் அமெரிக்கா
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி US Vice President Mike Pence கிக்கு தற்போது
கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளான நிலையில் தனிமை படுத்த பட்டுள்ளார் .
ஜனாதிபதி டிரம்பின் மகளுக்கு கொரனோ தொற்றியுள்ள நிலையில்
தற்பொழுது இவருக்கும் உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
மேலும்
ஒரு முக்கிய டிரம்பின் அலோகர் ஒருவரும் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளார்
24 மனைத்தியாலத்தில் முக்கிய மூவர் இந்த நோயினால் பீடிக்க பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
,இத்தனை அடுத்து டிரம்பும் இந்த நோயினால் பிடிக்க பட்டு இருக்கலாமெனவும் ,அவர் அதனை மறைத்து வருவதாக தெரிவிக்க படுகிறது

நான் திருமணம் செய்யாதது ஏன் ..? நடிகை சித்தாரா விளக்கம்
நான் திருமணம் செய்யாதது ஏன் ..? நடிகை சித்தாரா விளக்கம்
47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து நடிகை சித்தாரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகை சித்தாரா விளக்கம் சித்தாரா
கே.பாலசந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர், மலையாள நடிகை, சித்தாரா. இந்த படம் வெற்றி பெற்றதால், வாய்ப்புகள் குவிந்தன.
இதைத் தொடர்ந்து விக்ரமன் இயக்கிய புது வசந்தம், கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர், காவல் கீதம், என்றும் அன்புடன்,
ரஜினியின் படையப்பா உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளம், தமிழ் தவிர, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
இப்போது வயதாகிவிட்டதால் தொடர்ந்து, அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார், சித்தாரா. தெலுங்கிலும்
தொடர்ந்து நடித்து வரும் அவர், தமிழ், மலையாள சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். ஆனால், தான் இன்னும்
திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார் .
சித்தாரா
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் வேண்டாம் என்ற முடிவை நான்தான் எடுத்தேன். அதற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன்.
அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த முக்கிய நபர் என் தந்தை. அவர் இறந்த பிறகு, திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.
47 வயதான சித்தாரா இப்போது அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் திருமணம் செய்துகொள்வாரா என்று கேட்டதற்கு, அப்படி ஒரு
எண்ணமே தனக்கு இல்லை என்று மறுத்துள்ளார். கூடவே, வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருபோதும் அப்படி நடிக்க மாட்டேன் – ஆடம் பிடிக்கும் நடிகை
ஒருபோதும் அப்படி நடிக்க மாட்டேன் – ஆடம் பிடிக்கும் நடிகை
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், தான் ஒருபோதும் அப்படி நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
எனக்கு அது செட் ஆகாது…. ஒருபோதும் அப்படி நடிக்க மாட்டேன் –
‘மேயாத மான்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு கதாநாயகியாக
அறிமுகமானவர், பிரியா பவானி சங்கர். தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யுடன் ‘மாபியா’ ஆகிய
படங்களில் நடித்தார். தற்போது இவர், ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் இவருக்கு கமல்ஹாசனின் சினேகிதி வேடம்.
அடுத்து, விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஸ் கல்யாண் ஜோடியாக
மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார். மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக, ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்கிறார்.
பிரியா பவானி சங்கர்
“தற்போதைய பட உலகில் கொஞ்சமாவது கவர்ச்சியாக நடித்தால்தான் முன்னணி கதாநாயகியாக காலம் தள்ள முடியும்
என்று பேசப்படுகிறதே… நீங்கள் எப்படி?” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பிரியா பவானி சங்கர்
கூறியதாவது: “என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் செட் ஆகாது. அதனால் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க
மாட்டேன். கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொண்ட சில புதிய பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்”.
இவ்வாறு அவர் கூறினார்.

சொல்லாமல் வந்த காதல் .!
சொல்லாமல் வந்த காதல் .!
பெற்றவரை நீ இழந்து
பேரழகே வாடையில…..
நெஞ்சமெலாம் வேகுதடி
நினைவிழந்து சாகுதடி……
ஒற்றையிலே நீ இருந்து
ஓரமா அழுகிறியே ….
சாத்தியமா உனை காக்க
சம்பந்தம் செய்யலேயே …..
தேடி வந்த வேளையிலே – என்
தேதியில நீ இல்ல …
வேரறுத்து போகையில- நீ
வேறாகி போனாயே …
தங்கிட தான் துடித்தேண்டி
தவமாய் தவித்தேண்டி …
விதி வந்து விளையாட
விலகி நீ போனாயே …
இன்ரழுது துடித்தேண்டி
ஈர் விழியால் உடல் நனைத்தேண்டி …
என்னழகே உனை தேற்றிடவே
என்ன யான் செய்திடுவேன் …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -11/05/2019
மீனாவை கிண்டலடித்த ரஜினி
மீனாவை கிண்டலடித்த ரஜினி
அன்புள்ள ரஜினிகாந்த் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் தன்னை கிண்டலடித்தது குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கிண்டலடித்த ரஜினி…. புன்னகையுடன் பகிர்ந்த மீனா
மீனா, ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்தப் படம் அன்புள்ள ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நடிகை மீனா ரோசி என்ற
கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இதில் தான் அவர் அறிமுகம். 1984-ம் ஆண்டு வெளியான இப்படத்தை
நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் கே.நட்ராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை மீனாவின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தப் படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை பார்த்த மீனா, இந்த படத்தின் போது
தனக்கு கிடைத்த அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
அந்தப் படத்தில் லதா ரஜினிகாந்த் பாடியிருந்த கடவுள் உள்ளமே என்ற பாடலையும்
தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்தில் தனது அறிமுக காட்சியையும் பகிர்ந்துள்ளார்.
மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு
உணவில் தண்ணீர் ஊற்றுவது, பாலை நடிகை அம்பிகாவின் முகத்தில் ஊற்றுவது போன்ற காட்சிகளை பகிர்ந்து கொடுமையான சிறுமி என குறிப்பிட்டிருந்தார். மேலும் ரஜினிகாந்த் தனக்கு
சாக்லேட் வழங்கும் காட்சியையும் அதனை அவர் துப்புவதையும் பகிர்ந்தார் மீனா. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள மீனா, தான்
நடித்ததிலேயே இதுதான் மிகவும் கடினமான காட்சி, ஏனெனில் எனக்கு சாக்லேட்,இனிப்புகள் ரொம்ப பிடிக்கும் என கூறியிருக்கிறார்.
தொடர்ந்து முத்துமணி சுடரே வா.. என்ற பாடலையும் பகிர்ந்துள்ள மீனா.. ரஜினி அங்கிள் என்று கூறும் குரல் தன்னுடையது என்றும்
கூறியிருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் தன்னுடைய தாயாரிடம் எந்தக் கடையில் அரிசி வாங்குறீங்க என்று தன்னை கிண்டலடிக்கும் வகையில் கேட்டார் என்றும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.
விஜய் முன்பாக -அனிருத் குழுவில் இசையமைக்கும் -2 கை இழந்த வாலிபர்
விஜய் முன்பாக -அனிருத் குழுவில் இசையமைக்கும் -2 கை இழந்த வாலிபர்
மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவு நனவாகிறது…. லாரன்ஸின் கோரிக்கையை ஏற்ற விஜய்
மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்க, ஒரே போன் காலில் விஜய் – அனிருத்திடம் லாரன்ஸ் சம்மதம் வாங்கி உள்ளார்.
மாற்றுத்திறனாளி இளைஞனின் கனவு நனவாகிறது…. லாரன்ஸின் கோரிக்கையை ஏற்ற விஜய்
லாரன்ஸ், விஜய்
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை கடந்த சில தினங்களுக்கு முன் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி
இளைஞர் ஒருவர் வாசிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதை பார்த்த இசையமைப்பாளர் அனிருத்தும் அவரை வாழ்த்தி இருந்தார்.
இதனிடையே லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், “அந்த இளைஞர் பெயர் தான்சேன். தனது மாற்றுத்திறனாளிகள் குழுவில்
இருப்பவர். இந்த லாக்டவுன் சமயத்தில் 3 நாட்கள் பயிற்சி செய்து ‘மாஸ்டர்’ படத்தின் ஒரு பாடலை வாசித்திருக்கிறார். இவரது கனவே
அனிருத் அவர்களின் இசையில் ஒரு சிறு பகுதி வாசிக்க வேண்டும் என்பதும், விஜய் அவர்கள் முன்னிலையில் இதை வாசிக்க வேண்டும் என்பதுதான்” என்று தெரிவித்திருந்தார்.
விஜய், அனிருத், தான்சேன்
இந்நிலையில், லாரன்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க விஜய்யும், அனிருத்தும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி
தெரிவித்து லாரன்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நேற்றிரவு நண்பன் விஜயிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும்
அந்த இளைஞரை அழைத்து வந்து தன் முன்னால் வாசித்துக் காட்ட சொன்னார்.
அதே போல அனிருத்தும் அந்த இளைஞருடைய விருப்பத்திற்கேற்ப தன்னுடைய இசையில் அவரை வாசிக்க வைப்பதாக கூறியுள்ளார்.
அந்த இளைஞரின் கனவை நனவாக்கிய நண்பன் விஜய்க்கும் அனிருத்துக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி” என தெரிவித்துள்ளார்.

கொரனோ நோயால் -மனநலம் பாதிக்க பட்ட நிலையில் -மருத்துவர் சத்தியமூர்த்தி
கொரனோ நோயால் -மனநலம் பாதிக்க பட்ட நிலையில் -மருத்துவர் சத்தியமூர்த்தி
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் நகர்வாவில் இலங்கை இராணுவத்தினர் தீவிர முன் மாதிரி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் ,
இவர்களின் வேகமான செயல் பாட்டின் காரணமாக நோயினை தடுத்து நிறுத்தியுள்ளதாக முப்படை தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் நகர்வில் இவ்வாறு ஈடுபட்டு கொண்டிருக்க ,மறு முனையில் சுகாதார பிரிவினரும் தமது பணிகளை முன்னகர்த்தி வருகின்றனர் .
கொரனோ நோயால் பாதிக்க பட்ட கடல் படை இராணுவ அதிகாரி ஒருவருக்கு எலி காய்ச்சல் நோயினால் பிடிக்க பட்டு இறந்தார் என
வெற்றிகரமான செய்தியை இலங்கை இராணுவம் அறிவித்து சாதனை படைத்தனர்
தற்போது யாழ்ப்பாண போதனா மருத்துவ மனையில் கொரனோ நோயாளர்கள் எவரும் பாதிக்க படவில்லை என இவ்
வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் கவுரவ மேதகு ,மேன்மை மருத்துவ நிபுணர் சத்திய மூர்த்தி தெரிவித்து இருந்தார்
இவ்விதம் அவர் முன்னர் கூறிய நிலையில் யாழ்ப்பாணம் கொரனோ நோயற்ற நகரமாக காட்சி அளித்துள்ளதாக ,காட்சி ஊடகங்களில் வர்ண பேச்சுக்களை வீசி இருந்தார்
இவ்வாறன நிலையில் தற்போது 38 பேருக்கு மேலானவர்கள் இந்த நோயினால் பீடிக்க பட்டு இருந்தனர் எனவும் ,அவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ,தெரிவித்துள்ளார்
இவரது இந்த முன் பின் முரனான பேச்சுக்கள் ,இவர் மன நிலை குழம்பிய நிலையில் ,முன்னர் சொன்னதை மறந்து இவ்விதம்
தெரிவித்து வருவதாக மக்களை சிந்திக்க வைத்துள்ளது
கொரனோ நோயாளர்களை பராமரித்து வந்த நிலையில் அவர்களது நோயானது இவருக்கு பரவி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
அதனால் தற்போது இவர் தனிமை படுத்தலுக்கு உள்ளக நேரிட கூடும் என அஞ்ச படுகிறது,இதே மருத்துவமனையில் இறந்த
நபர்கள் சிலர் கொரனோ முறைப்படி உடல் நல்லடக்கம் செய்ய பட்டதக தெரிய வருகிறது .
லண்டன் ஜூன் ஓரம் திகதிவரை அடித்து பூட்டு – அதிரடி -ஜோன்சன் அறிவிப்பு video
லண்டன் ஜூன் ஓரம் திகதிவரை அடித்து பூட்டு – அதிரடி -ஜோன்சன் அறிவிப்பு
ஜூன் ஓரம் திகதி வரை அடித்து பூட்டு – அன்றே பாடசாலைகள் ஆரம்பம் -ஜோன்சன் அறிவிப்பு
பிரிட்டனில் நிலவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி பலநூறு மக்கள் நல்தோறும் பலியாகி வருகின்றனர் .
இவ்வேளையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை பிரிட்டன் அடித்து பூட்டும் கால எல்லை நீடிக்க பட்டுள்ளது
ஜூன் முதலாம் திகதி வரை பாடசாலைகள் ஆரம்பிக்க படும் என பிரிட்டன் பிரதமர் ஜோன்சன் அறிவித்துள்ளார்
மக்கள் பொது பாவனைகளை தவிர்க்குமாறு வேண்டுதல் விடுத்துள்ளார்
பேரூந்துகள் ,ரயில்கள்,மற்றும் டாக்சிகள் என்பனவற்றை அவர் தவிர்க்குமாறு கருதப்பட தெரிவித்துள்ளார்
மக்களை வீட்டுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் எனவும் வேண்டுதல் விடுத்துள்ளார் ,
நாளை திங்கள்ட கிழமை தடை மீள் எடுக்கப்படும் என எதிர்வு கூற பட்ட நிலையில் இந்த முடிவு
அறிவிக்க பட்டுள்ளது ,மக்கள் எதிர்ப்பின் காரணமாக இந்த நிலைக்கு இவர் சென்றுள்ளதாக நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்
Prime Minister Boris Johnson says the UK is taking "the first careful steps" in easing the #coronavirus lockdown – with people in England allowed to spend more leisure time outside from Wednesday.
— Sky News (@SkyNews) May 10, 2020
Read more: https://t.co/WHClkG61Sd pic.twitter.com/3KugYwNSze
சிரியாவில் கடும் மோதல் -35 இராணுவம் பலி
சிரியாவில் கடும் மோதல் -35 இராணுவம் பலி
சிரியாவில் அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையில் இடம் பெற்ற
மோதல்களில் கிளர்ச்சி படைகளை சேர்ந்த முப்பத்தி ஐந்து பேர் பலியாகியும்
அறுபதுக்கு மேற்பட்டவர்கள் படு காய மடைந்துள்ளதாக சிரியா அரச இராணுவம் தெரிவித்துள்ளது
சிரியாவின் Al-Manarah பகுதியில் இடம்பெற்று வெவ்வேறு தாக்குதல்களில்
இரண்டுக்கு மேற்பட்ட கிளர்ச்சி படைகளை சேர்ந்தவர்களே இவ்விதம் அரச
இராணுவ தாக்குதலில் பலியாகியுள்ளனர் ,பரஸ்பர மோட்டார் ,எறிகணை தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது
இவ்வேளை ரசியாவின் விமானம் தளம் மீதும் துருக்கிய ஆதரவு படைகள் ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

மலேசியாவில் சிக்கி தவித்த 178 பேர் இலங்கை வந்தடைந்தனர்
மலேசியாவில் சிக்கி தவித்த 178 பேர் இலங்கை வந்தடைந்தனர்
கொரனோ நோயின் காரணாமாக இலங்கை விமான பயணங்கள் இரத்து
செய்ய பட்டது ,இவ்வேளை மலேசியாவுக்கு பயணித்த இலங்கையர்கள் விமானங்கள் ஏதும் இன்றி தவித்து வந்தனர்
அதனை அடுத்து இலங்கை அரசுக்கு சொந்தமான சிறப்பு விமானம்
ஒன்று மலேசிய சென்று அங்கு தவித்து கொண்டிருந்த சுமார் 178 இலங்கையர்களை
காவியபடி ,கட்டுநாயக்க விமான தளம் வந்தடைந்துள்ளது
UL 315 என்ற இலங்கை விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்
எனினும் சுகாதார பொறிமுறை பாதுகாப்பை கருத்தில் கொண்டு 14 நாட்கள்
தனிமை படுத்தல் முகாமில் தங்க வைக்க படுவார்கள் என அறிவிக்க பட்டுள்ளது
தேர்தலை கருத்தில் கொண்டு ,அரசு இவ்வாறான செயல்பாடுகளை தீவிர படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது

பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஏற்கமுடியாது -சுமந்திரன் முழக்கம் – வீடியோ
பிரபாகரன் ஆயுதம் ஏந்தியதை ஏற்கமுடியாது -சுமந்திரன் முழக்கம் – வீடியோ
தமிழீழ தேசிய தலைவர் பிரபகாரன் ஆயுதம் ஏந்தியதை ஏற்முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெறிவித்துள்ளார்
பிரபாகரன் வேலையில்லாது ஆயுதத்தை ஏந்தியது தவறு என முழங்கியுள்ளார் .சுமந்திரனின் இந்த கள்ள தனமான பேச்சு ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது
இவருக்கு வெளிநாடுகளில் ஈழ தமிழர்கள் செருப்படி வழங்கியது இங்கே
குறிப்பிட தக்கதுடன் லண்டன் வந்து மக்களை சந்திக்காது அஞ்கை ஓட்டம் பிடித்தவர் இந்த எட்டப்பன் சுமந்திரன் என்பதும்
புலிகளினால் உருவாக்க பட்ட கூட்டமைப்பை இல்லாது ஒழிக்க வேண்டும்
என்ற கோத்தபாயவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல் பட்டு ,தமிழ் மக்கள்
வாக்கினை சிதறடித்து அந்த கட்சியை காணாமல் ஆக்கும் தீவிர செயல் பாடுகளில் சுமந்திரன் ஈடுபட்டு வருவதன் கபட நோக்கமே இதுவாகும்
சுமந்திரன் போட்டியிடும் பகுதியில் தமிழர்கள் இவரை ஒட்டு போடாது
விரட்டியடிக்க வேண்டும் என்பது வேண்டுதல் ,ஆனாலும் தேசியபட்டியல் மூலம் இவர் எம்பி ஆவர் என்பது தான் கேவலான நிலையாக உள்ளது

11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?
11 தமிழ் இளம் பெண்களுக்கு எயிட்ஸ – எங்கே செல்கிறது தமிழினம் ..?
இலங்கை வவுனியாவில் 11 இளம் தமிழ் பெண்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது
ஐரோப்பாவின் ,ஆடை தொழில் சாலை ஒன்றில் பணிபுரியும் இளம் பெண்களே இந்த நோயில் அதிகம் பாதிக்க பட்டுள்ளனர்
வறுமையின் காரணமாக தமது குடும்பங்களை காப்பாற்றிட இங்கே வேலைக்கு வரும் பெண்களை தமது வலைக்குள் வளைத்து
போடும் கும்பல் ஒன்று அவர்களுக்கும் ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுப்படுத்தி வருகின்றனர்
அவ்விதம் ஈடுபட்ட பெண்களில் அதிகமானவருக்கே இந்த உயிர் கொல்லி நோயானது உள்ளது கணடறிய பட்டுள்ளது
எனினும் வவுனியா மருத்துவமனை இதனை தெரிவிக்காது மறைத்து வருவதான குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது
இவ்விதம் விடயத்தை வெளியில் தற்போது வெளியிட்டால் ,இந்த பெண்களை தமது வலைக்குள் சிக்க வைக்க முடியாது என்ற நிலை
ஏற்பட்டு விடும் என்பதால் அரசியல் பின்பலத்துடன் மறைக்க படுவதாக
சமூக நலன் அக்கறை கொண்ட சிலர் நமக்கு தெரிவித்தனர்
இதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் இளம் பெண் ஒருவர் எயிட்ஸ் நோயால் பாதிக்க பட்டதும் ,தான் எவ்வாறு ஏமாற்ற பட்டு
இன்று சாவின் விழிப்பில் உள்ளேன் என்ற கண்ணீர் விடயத்தினை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
அப்பாவிகளின் வறுமையை பாவித்து ,இவ்விதம் ஒரு குடும்பத்தை கண்ணீரில் ஆழ்த்தி செல்லும் இந்த கொடிய கொரனோ
வியாபாரிகள் ,இவ்வாறானவர்களை இனியெனும் அழிவில் இருந்து காப்பாற்றுவார்களா ..?

கொரனோ பொய்க்கு -30 பக்கத்தில் பதில் கொடுத்த சீனா-சூடு பிடிக்கும் அமெரிக்கா சீன குடும்பி சண்டை
கொரனோ பொய்க்கு -30 பக்கத்தில் பதில் கொடுத்த சீனா-சூடு பிடிக்கும் அமெரிக்கா சீன குடும்பி சண்டை
கொரானோ கிருமிகள் சீனாவின் குவாம் மானிலத்தில் இருந்தே உலகம் முழுவதும் பரவியதாக
அமெரிக்கா குற்றம் சுமத்தியது ,
இதனை அடுத்து அமெரிக்காவே உலகில் அதிகம் நோயாளர்களை கொண்ட நாடாக உருமாற்றம் பெற்றுள்ளது ,
இந்த நோயானதை தமது நாட்டுக்கு சீனாவே பரப்பியது எனவும் ,அதனால் சீனா பல பில்லியன் டொலர்களை இழப்பீடாக தரவேண்டும் என அமெரிக்கா கோரியதுடன் ,
சீனாவுக்கு எதிரான 13 பிராதன பொய்களை கூறி உலகில் பரப்புரை புரிந்து வந்துள்ளதாக சீனா தெரிவித்து
A for 30-page பக்கத்தில் 11,000-word சொற்கள் அடங்கிய மிக பெரும் மறுப்பு அறிவிப்பை ,நெத்தியடி விளக்கத்தையும் வழங்கியுள்ளது
இந்த கொரானாவுடன் அமெரிக்கா பொருளாதாரம் அழிவு நிலைக்குச செல்லும் நிலையில் உள்ளது
ஆனால் சீனாவோ வழமை போலவே தனது நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது
சீனாவின் பொருட்கள் வரவு வீழ்ச்சியடைந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் முதல் ,இலத்திரணியல் பொருள்களை வரை இரட்டிப்பு விலையாக உயரந்துள்ளன
அமெரிக்காவின் பதின் மூன்று பொய்களுக்கு சீனா வெளியுறவு மையம் வழங்கியுள்ள இந்த நீண்ட பதில் மறுப்பு தெளிவு அமெரிக்காவை கதி கலங்க வைத்துள்ளது
இவற்றை டிரம்ப் படித்து நிமிர எத்தனை நாள் பிடிக்குமோ ..? கொரனோ விவகாரம் கோழி சண்டை விவகாரமாக இப்போது மாறியுள்ளது

காட்டி கொடுப்பில் ஈடு படும் புலிகள் தளபதி
காட்டி கொடுப்பில் ஈடு படும் புலிகள் தளபதி
இலங்கையில் இறுதி போர் உக்கிரம் பெற்று ,அந்த போரானது முடிவுற்ற நிலையில் அங்கிருந்து தப்பித்து
வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்தனர் விடுதலை புலிகளின் முக்கிய படைத்துறை தளபதிகள்
அவ்வாறு இங்கு வந்திருந்த தளபதிகளில் சிலர் இலங்கை சென்று ,அவர் தம் காட்டி கொடுப்பு பணிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,
மேலும் விடுதலை போராட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் எனவும் ,போரால் பாதிக்க பட்ட போராளிகள் ,மற்றும் மக்களுக்கு
உதவிகளை செய்திட வேண்டும் என கூறிய படி வெளி நாட்டு மக்களிடம் பணத்தை பெற்று உதவிகள் இடம்பெற்று வருகின்றன
இதற்கு அனைத்துலக எனப்படும் விடுதலை புலிகளின் அமைப்பு மக்களிடம் நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளது
அவ்வாறான பணத்தில் கஞ்சா அருள் எனப்படும் புத்தூரை சேந்த நபர் ஊடக உதவி திட்டங்களை வழங்கி வருகின்றனர்
இவ்வாறு மக்களுக்கு உதவுவதாக தெரிவித்து அவர்களுக்கு வழங்க படும் நிதியில் அரைவாசி பகுதியினை இவர் சுருட்டி கொள்வதுடன்
,அவ்விதம் உதவி பெற்றவர்களை சில வாரங்கள் கழிய சென்று மிரட்டி வழங்கிய பணத்தையும் சுருட்டி விடும் செயலில் ஈடுபட்டுள்ளார் .
இவர் இலங்கை அரசபுலானய்வு துறையின் நேரடி முகவராக செயலாற்றி வருகின்றார்
கஞ்சா அருள் என்றால் யாழ்பாணம் அதிர்கிறது ,அது மட்டுமல்ல வேறு பல விடயங்களையும் இவர் நடத்திய வண்ணம் உள்ளார்
இவரை பகைத்திட முடியாத நிலையில் அப்பாவி மக்கள் வாய்களை மூடி மவுனமாக உள்ளனர் ,
விடுதலையின் எழுச்சிக்கு திறம்பட செயலாற்றிய அணைத்துலக கட்டமைப்பு ,மக்கள் நலன் கருதி வழங்கிய இந்த நிதியினை
தவறான முறையில் கையாடல்புரிந்து வருகிறது,
சுவிஸில் உள்ள ரகுபதி ஊடக வழங்க படும் இந்த நிதியே இவ்விதம் சுரண்ட படுகிறது
சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது வெள்ளி பணத்தை அள்ளி வழங்கி வரும் இவ்வேளையில் இந்த முறைகேடான செயல்பாடுகள் இடம்பெற்று வருகிறது
நேரிய சிந்தையில் ,தியாகங்களை புரிந்து செயல் பட்டு வந்த அனைத்துலகம் , இதனை கவனத்தில் எடுத்து பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்
இவர்கள் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் இவ்வாறான கயவர்களை இனம் கண்டு ,தமது அமைப்புக்கு வீச படும்
கறையினை கழுவ வேண்டும் என்பதே ஈழ தேசிய மக்கள் அவாவாக உள்ளது
சமூகத்தை காப்பதாக கூறிய வண்ணம் ,அதே சமூகத்திற்கு கஞ்சா ,மற்றும் போதைவஸ்துக்ளைவழங்கி ,போரிடும் சிந்தையை
சிதைத்து ,குற்றவியல் சமூகமாக மாற்றி வரும் இந்த கஞ்சா அருள் துடைத்து அழிக்க
பட வேண்டிய ஒருவராகும் ,
மேற்படி குற்றவியல் விடயத்தினை கவனத்தில் எடுத்து செயலாற்றுமா ..?சுவிஸ் ரகுபதி தலைமையிலான குழுவினர் ..?

சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் பலி – திருமலையில் சோகம்
சுவர் இடிந்து வீழ்ந்து சிறுவன் பலி – திருமலையில் சோகம்
இலங்கை திருகோணமலை கிண்ணியா பகுதியில் வீட்டின் சுவர் திடீரென இடிந்து வீழ்த்தில்
நமக்கு வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார்
மேலும்
இவருடன் கூடி நின்ற சகோதரன் பலத்த காயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
கைவிடப் பட்ட பழைய மண் வீடு ஒன்றை சிறுவன் கடந்து செல்லும் பொழுதே,
இவன் மீது அந்த மண் சுவர் இடிந்து வீழ்ந்து உயிரை பறித்துள்ளது ,பெற்றவர்களின்
அலட்சிய போக்கே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்

அதிவேக வீதிகள் அனைத்தும் நாளை திறப்பு
அதிவேக வீதிகள் அனைத்தும் நாளை திறப்பு
சகல அதிவேக வீதி கட்டபைப்பும் திங்கட்கிழமையிலிருந்து மீள திறக்கப்பட
விருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர்
நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் சுற்றுவட்ட வீதி மற்றும் கொழும்பு –
கட்டுநாயக்க வீதி திங்கட்கிழமை தொடக்கம் திறக்கப்படும் என்றும்
கட்டுப்பாடுகளுடனேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.










