மீனாவை கிண்டலடித்த ரஜினி

Spread the love

மீனாவை கிண்டலடித்த ரஜினி

அன்புள்ள ரஜினிகாந்த் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் தன்னை கிண்டலடித்தது குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கிண்டலடித்த ரஜினி…. புன்னகையுடன் பகிர்ந்த மீனா
மீனா, ரஜினிகாந்த்


ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்தப் படம் அன்புள்ள ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நடிகை மீனா ரோசி என்ற

கதாப்பாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இதில் தான் அவர் அறிமுகம். 1984-ம் ஆண்டு வெளியான இப்படத்தை

நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் கே.நட்ராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை மீனாவின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப் படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை பார்த்த மீனா, இந்த படத்தின் போது

தனக்கு கிடைத்த அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

அந்தப் படத்தில் லதா ரஜினிகாந்த் பாடியிருந்த கடவுள் உள்ளமே என்ற பாடலையும்

தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்தில் தனது அறிமுக காட்சியையும் பகிர்ந்துள்ளார்.

மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

உணவில் தண்ணீர் ஊற்றுவது, பாலை நடிகை அம்பிகாவின் முகத்தில் ஊற்றுவது போன்ற காட்சிகளை பகிர்ந்து கொடுமையான சிறுமி என குறிப்பிட்டிருந்தார். மேலும் ரஜினிகாந்த் தனக்கு

சாக்லேட் வழங்கும் காட்சியையும் அதனை அவர் துப்புவதையும் பகிர்ந்தார் மீனா. இதுதொடர்பாக பதிவிட்டுள்ள மீனா, தான்

நடித்ததிலேயே இதுதான் மிகவும் கடினமான காட்சி, ஏனெனில் எனக்கு சாக்லேட்,இனிப்புகள் ரொம்ப பிடிக்கும் என கூறியிருக்கிறார்.

தொடர்ந்து முத்துமணி சுடரே வா.. என்ற பாடலையும் பகிர்ந்துள்ள மீனா.. ரஜினி அங்கிள் என்று கூறும் குரல் தன்னுடையது என்றும்

கூறியிருக்கிறார். மேலும் ரஜினிகாந்த் தன்னுடைய தாயாரிடம் எந்தக் கடையில் அரிசி வாங்குறீங்க என்று தன்னை கிண்டலடிக்கும் வகையில் கேட்டார் என்றும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *