Posted in இலங்கை செய்திகள்

ஐநாவில் இலங்கைக்கு பிரிட்டன் ஆப்பு -கிளறப்படும் மகிந்த தமிழ் இன அழிப்பு

ஐநாவில் இலங்கைக்கு பிரிட்டன் ஆப்பு -கிளறப்படும் மகிந்த தமிழ் இன அழிப்பு

இலங்கையில் மகிந்த அரசினால் மேற்கொள்ள பட்ட தமிழ் இன அழிப்பு

தொடர்பில் இலங்கை அரசுகள் இதுவரை எவ்வித பொறுப்புக் கூறலையும்

செய்திடாது காலம் கழித்து வந்த நிலையில் தற்போது இடம்பெறும் 46 ஆவது

கூட்ட தொடரில் இலங்கை தொடரப்பிலான பொறுப்புக் கூறல் ,மற்றும்

அதன் செயல்பாடுகள் குறித்து விரகத்தியடைந்துள்ள மனித உரிமை

ஆணையம் சர்வதேச நீதிமன்றில் , இலங்கையை பார ப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டது

இத்தகைமையை பிரிட்டனும் அந்த கோரிக்கையை ஆமோதித்து நடவடிகை

மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது
இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் இனக் கொலையாளிகளே இலங்கையில் தற்போது ஆட்சி புரிந்து

வருகின்றனர் ,இதனை மையப்படுத்தி சர்வதேசம் தீர்வு நோக்கி நகர்ந்து செல்கின்றமை கவனிக்க தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ நோயுடன் தப்பி ஓடிய தம்பதிகள் – மடக்கி பிடித்த பொலிஸ்

கொரனோ நோயுடன் தப்பி ஓடிய தம்பதிகள் – மடக்கி பிடித்த பொலிஸ்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல்லாயிரம்

மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர் ,இவ்விதம் ஜோடி ஒன்றும் இதில்

சிக்கி கொண்டது ,மேற்படி தம்பதிகளுக்கு மேற்கொள்ள பட்ட சோதனையில் நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டது

ஆனாலும் சுகாதர அதிகாரிகளுக்கு தண்ணி காட்டி விட்டு தப்பி சென்றனர் ,

இவ்வாறு தப்பி சென்றவர்களை தேடி அலைந்த போலீசார் கொஸ்வத்தை,

பொத்துஅடவன பிரதேசத்தில் வைத்து இவர்களை மீள கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

பொத்துவில் பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக வழக்கு -கோட்டா அரசு கெடுபிடி

பொத்துவில் பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக வழக்கு -கோட்டா அரசு கெடுபிடி

இலங்கை வடக்கு பகுதியில் பூர்வீக குடிகளாக வசித்து வரும் தமிழ் மக்கள்

அறவழி போராட்டம் ஒன்றை நடத்தினர் ,மேற்படி போராட்டத்தில்

கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பட்டுள்ளது

இந்த பேரணியில் கலந்து கொண்ட மக்களை சிங்கள இராணுவ

உளவுத்துறையினர் காணொளி பிடித்து சென்ற நிலையில் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

இந்த நீதிமன்ற வழக்கை மைய படுத்தி பல தமிழர்கள் கைது

செய்யப் படலாம் என ஏதிர் பார்க்க படுகிறது

முல்லைத் தீவு நீதிமன்றில் இந்த வழக்கு அரச தரப்பால் தொடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

கிரேக்க வான் பரப்புக்குள் 31 தடவை அத்துமீறி பறந்து மிரட்டி சென்ற துருக்கிய விமானங்கள்

கிரேக்க வான் பரப்புக்குள் 31 தடவை அத்துமீறி பறந்து மிரட்டி சென்ற துருக்கிய விமானங்கள்

கிரேக்க நாட்டுக்கும் துருக்கிக்கு இடையில் கடும் பனிப்போர் வெடித்துள்ளது

,இதன் உச்சமாக துருக்கிய இராணுவ சண்டை விமானங்கள் கிரேக்க

வான்பரப்புக்கள் சுமார் முப்பத்தி ஒரு தடைவைகள் உள்நுழைந்து பறந்து சென்றுள்ளன

பிரான்ஸ் மற்றும் கிரேக் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன ,


இவ்வேளையே இந்த அத்துமீறலை துருக்கிய இராணுவ விமானங்கள் மேற்கொண்டுள்ளன

இதற்கு பிரான்ஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

ஐ ஐஸ் தீவிரவாதிகள் ஆயுத களஞ்சியம் சுற்றிவளைப்பு

ஐ ஐஸ் தீவிரவாதிகள் ஆயுத களஞ்சியம் சுற்றிவளைப்பு

ஈராக்கின் வடக்கு பகுதியில் அமைந்திருந்த ஐ எஸ் தீவிரவாதிகளின் மிக இரகசிய

ஆயுத களஞ்சியம் ஒன்றை தாம் கண்டு பிடித்துள்ளதாக ஈராக்கிய உளவுத்துறை

தலைவர் தெரிவித்துள்ளார், தமக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில்

குறித்த பகுதியை சுற்றிவளைத்த விசேட இராணுவ அணிகள் ,அங்கிருந்த

பெருமளவான அதி நவீன ஆயுதங்கள் மீட்டுள்ளதாகவும் ,இதன்

மொத்த பெறுமதி பல மில்லியன்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் – அதிர்ச்சியில் கிராம மக்கள்

பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் – அதிர்ச்சியில் கிராம மக்கள்

இலங்கை காத்தான் குடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர்

குழந்தை ஒன்றை பிசவைத்தார் ,மேற்படி சிசு இறந்து விட்டதாக

கூறி அந்த சிசுவை வீட்டுக்கு அருகில் குழி தோண்டி புதைத்தார்

இந்த நிலையில் உடல் நலத்தில் ஏற்பட்டா சுகயீனம் காரணமாக தனியார்

மருத்துவமனையைநாடியுள்ளார் ,,அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட

விசாரணையில் மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது ,இறந்ததாக தெரிவிக்க

பட்டு புதைக்க பட்ட சிசுவின் சடலம் தோண்டி எடுக்க பட்டு மருத்துவ

பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
மேற்படி பெண்ணின் செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 365 பேர் மரணம்

இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 365 பேர் மரணம்

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 365

பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் இதுவரை இந்த நோயினால்

பாதிக்க பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை சுமார் எழுபதாயிரத்தை கடந்துள்ளது

தொடர்ந்து வேகமாக பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த

முடியாது ஆளும் சிங்கள அரசு திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

இந்தியா வெள்ளத்தில் சிக்கி 171 பேர் மரணம்

இந்தியா வெள்ளத்தில் சிக்கி 171 பேர் மரணம்

இந்தியா வடக்கு Uttarakhand’s பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ள

பெருக்கில் சிக்கி சுமார் 171 பேர் மரணமாகியுள்ளனர்

இதுவரை இருபத்தி ஆறு சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,காணமல்

போன மிகுதி உடல்கள் மிக பட்டு வருகிறது

அனல் மின் நிலையம் ஒன்றுக்குள் பணிபுரிந்த கூலி

தொழிலாளர்களே அதிகம் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிது

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in மருத்துவம்

கழுத்து வலியால் அவதியா அப்ப இதை பண்ணுங்க

கழுத்து வலியால் அவதியா அப்ப இதை பண்ணுங்க

ஆரோக்கியமான உணவு, தூக்கம் எப்படி முக்கியமோ, அதுபோல

உடற்பயிற்சியும் முக்கியம். இந்த மூன்றையும் சரியான முறையில்

பின்பற்றினால், உடல்நலக்குறைவும் வலிகளும் வராது. இந்த வார்ம்

அப் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராகச்

செல்ல உதவும். மூளை செல்கள் புத்துயிர் பெறும். கழுத்து வலி குறைவதை உணர முடியும். இறுக்கங்கள் நீங்கும்.

வார்ம் அப் நிலையில், உட்கார்ந்தபடியே கண்களைத் திறந்து,

ஆழமாக மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும். மெதுவாக மூச்சு

கழுத்து வலியால் அவதியா அப்ப இதை பண்ணுங்க

விட்டபடியே இடதுபுறமாகக் கழுத்தைத் திருப்பி, மூச்சை உள் இழுத்தபடி பழைய நிலைக்கு வந்து, மூச்சை வெளியேவிட வேண்டும்.

கழுத்தைத் திருப்பும்போது, இரண்டு விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதேபோல், வலதுபுறம், மேல், கீழ் எனக்

கழுத்தைத் திருப்பி பயிற்சி செய்ய வேண்டும். கழுத்தை மட்டும் திருப்ப வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராகச் செல்லும். மூளை செல்கள் புத்துயிர் பெறும். கழுத்து வலி

குறைவதை உணர முடியும். இறுக்கங்கள் நீங்கும். இதனை

தொடர்ந்து செய்தால் கழுத்து வலி குறைந்து நேரான தோற்றத்தை பெற முடியும்.

    Posted in சினிமா

    அண்ணாத்த ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்

    அண்ணாத்த ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்

    சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    அண்ணாத்த ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்
    ரஜினி


    சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில்

    நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால்

    படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.

    இதையடுத்து ரஜினிகாந்த் உடல்நிலையை கருதி சென்னையிலேயே மீதிப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக

    கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி

    உள்ளது. அதன்படி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என கூறப்படுகிறது.

    ரஜினி

    இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர்

    . இமான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வருகிற தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்

    Posted in சினிமா

    நஸ்ரியாவின் டான்ஸுக்கு குவியும் லைக்குகள்

    நஸ்ரியாவின் டான்ஸுக்கு குவியும் லைக்குகள்

    நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென

    ஒரு இடத்தை பிடித்தவர் நஸ்ரியா. திடீரென்று நடிப்புக்கு முழுக்கு

    போட்டுவிட்டு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்

    . இதையடுத்து சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நஸ்ரியா கடந்தாண்டு மலையாளத்தில் வெளியான டிரான்ஸ்

    படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென ஹேக்கர்களால்

    முடக்கப்பட்டது. இந்த செய்தியை நஸ்ரியாவே உறுதி செய்தார். பின்னர் அதை மீட்டெடுத்தார்.

    இந்நிலையில் தற்போது நஸ்ரியா தனது தோழியுடன் இணைந்து நடனமாடும்

    வீடியோவை பகிர்ந்துள்ளார். நஸ்ரியாவின் இந்த டான்ஸ் வீடியோ

    ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.

    Posted in உலக செய்திகள்

    ரத்த நிறத்தில் ஓடும் வெள்ளம் -பீதியில் தவிக்கும் மக்கள்

    ரத்த நிறத்தில் ஓடும் வெள்ளம் -பீதியில் தவிக்கும் மக்கள்

    இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடம் உள்ளது.

    இங்குள்ள கிராமங்களில் நேற்று ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வெள்ளத்தை

    சொல்போனில் படம் பிடித்து சமுக வலைத் தளங்களில் பதிவிட்டனர்.

    இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது

    இந்தோனேஷியாவின் பெகலோஸ்கன் நகரின் தெற்கு பகுதியில்

    பாரம்பரிய முறையில் ஆடைகளுக்கு சாயமிடும் தொழிற்சாலைகள் உள்ளது.

    அந்த சாயம் மழைநீரில் கலந்ததால்தான் வெள்ளம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்றும் தெரிய வந்தது.

    இதற்கு முன்பும் பெகலோஸ்கனில் உள்ள நதிகளும் இந்த சாய தொழிற்சாலைகளால் நிறம் மாறி இருக்கின்றன.

    இந்த முறையும் அதேபோன்ற வெள்ளம் இந்த கிராமங்களை சூழ்ந்து இருக்கிறது.

    அடுத்து மழை பெய்யும் போது நிறம் மாறிவிடும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    இந்தோனேஷியாவில் அடிக்கடி மழை பெய்துவதும் இயல்பான ஒன்று.

    சமீபத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 43 பேர் உயிரிழந்தனர்.

    அதுபோல் இப்போதும் நடந்திருக்கிறது. மழை வெள்ளத்தில் சாயம் கலந்ததால்

    இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. சமீபத்தில் இந்தோனேஷியாவில்

    ஒரு விமான விபத்து ஏற்பட்டது. எரிமலை வெடிப்பும் ஏற்பட்டது.

    இப்போது மீண்டும் மழை பெய்து ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

    Posted in உலக செய்திகள்

    சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினி- ஆதரவு யாருக்கு ..?

    சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினி- ஆதரவு யாருக்கு ..?

    சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் தன்னிடம் விசாரித்ததாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

    சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த்

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்

    இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் என்னிடம்

    விசாரித்தார். ச‌சிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது.

    ஸ்லீப்பர்செல் எம்எல்ஏவாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை, அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம்.

    ஆர்.கே.நகர் மற்றும் தேனியில் ஒரு தொகுதி என சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இனி என்ன செய்வாய்

    இனி என்ன செய்வாய்

    பாயும் புலியாய் படை எடு
    பகைவன் நடுங்க உருவெடு
    அனலது கொதிப்பை நீ கொடு
    அகிலம் வியக்க உயிர்ப்பெடு

    பொத்துவில் முதல் பொலிகண்டி
    பொங்கின தமிழ் தொடர்வண்டி
    எவரடா கண்டார் இவ்வண்டி
    எழுந்தே ஓடும் தொடர்வண்டி

    சரிதம் எழுதிட எழுகிறார்
    சரித்திரம் படித்தே வெடிக்கிறார்
    வேரை அறுத்ததாய் நினைத்தவர்
    வெகுயென எழுச்சியில் துடிக்கிறார்

    குருதி குடித்தவன் ஆள்வதோ
    குண்டு வெடித்தவன் சிரிப்பதோ
    மாண்டவர் கனவு மாள்வதோ
    மடையனாய் தமிழன் வாழ்வதோ

    கொன்றவன் ஆட்சியில் விடுதலை
    கொடி நாட்டு உலகில் முன்னிலை
    இனமது அழித்தால் இதுவரும்
    இனியெனும் உணரட்டும் சிங்களம்

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 08-02-2021
    பொத்துவில் முதல் பொலிகண்டி
    வரலாற்று பேர் எழுச்சி கண்டு

    வன்னி மைந்தன் கவிதைகள்

      Posted in குற்ற செய்திகள் சினிமா

      செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது

      செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது

      தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், ஆபாச படம் எடுத்ததால் கைதாகி உள்ளார்.

      ஆபாச படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது
      கெஹனா வசிஸ்த்
      தமிழில் 2016-ல் திரைக்கு வந்த பேய்கள் ஜாக்கிரதை திகில் படத்தில்

      ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் கெஹனா வசிஸ்த். ஏராளமான இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்

      . இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார். கெஹனா வசிஸ்த் சமீபத்தில் ஆன்லைன் சேனல்

      தொடங்கி அதில் ஆபாச வீடியோக்களை பதிவேற்றி வந்துள்ளார். அந்த படங்களை பார்க்க ரூ.2 ஆயிரம் செலுத்தி சந்தாதாரர் ஆகவேண்டும்.

      பலர் பணம் கட்டி படம் பார்த்துள்ளனர். இதற்காக மும்பை மலாட் மல்வானி பகுதியில் உள்ள தனி பங்களாவில் இளம் பெண்களை

      வைத்து ஆபாச படங்கள் தயாரித்து வந்துள்ளார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த பங்களாவில் சோதனை நடத்தி

      அங்கிருந்த 2 ஆபாச பட நடிகர்கள். ஒரு பெண் புகைப்பட கலைஞர், ஒரு இளம் பெண் ஆகியோரை கைது செய்தனர்.

      கெஹனா வசிஸ்த்

      கெஹனாவும், கைது செய்யப்பட்டார். விசாரணையில் இதுவரை 87 ஆபாச வீடியோக்களை தயாரித்து பதிவேற்றியது தெரிய

      வந்துள்ளது. ஆபாச படம் தயாரித்த நடிகை கைதாகி இருப்பது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

      Posted in சினிமா

      பிரபல நடிகைக்கு பாலியல் மிரட்டல்

      பிரபல நடிகைக்கு பாலியல் மிரட்டல்

      மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள்

      போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இதற்கு வெளிநாட்டு பிரபலங்கள்

      பலர் ஆதரவு அளித்து வருவதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

      இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை ஜமீலா ஜமீல் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்திய விவசாயிகளுக்கு

      ஆதரவளிக்கும் ஒவ்வொருமுறையும் தனக்கு கொலை மற்றும் பாலியல் மிரட்டல்கள் வருவதாக பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      ஜமீலா ஜமீல்

      இது குறித்து நடிகை ஜமீலா ஜமீல் பதிவிட்டுள்ளதாவது: “இந்திய விவசாயிகள்

      குறித்தும், அங்கு நடைபெற்று வரும் போராட்டம் குறித்தும் கடந்த சில மாதங்களாக

      நான் பலமுறை பேசியிருக்கிறேன். ஒவ்வொருமுறை அவ்வாறு பேசும்போதும்

      நான் கொலை மிரட்டல்களையும், பாலியல் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறேன்.

      நானும் ஒரு சக மனிதர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மிரட்டுங்கள்’

      என்று தெரிவித்துள்ளார். நடிகை ஜமீலா ஜமீலின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      மக்கள் எழுச்சியை கிளப்பியது நானே – சுமந்திரன் முழக்கம் – கொதிப்பில் தமிழர்கள்

      மக்கள் எழுச்சியை கிளப்பியது நானே – சுமந்திரன் முழக்கம் – கொதிப்பில் தமிழர்கள்

      இலங்கையில் 12 ஆண்டு சிங்கள ஆளும் சர்வதிகார அடக்குமுறைக்கு

      பின்னர் தமிழ் மக்கள் பெரும் எழுச்சியுடன் கூடிய போராட்டம் ஒன்றை

      நடத்தியுள்ளனர் ,அந்த போராட்டத்தை கண்டு சிங்களம் மட்டும் அல்ல உலகமும் திரும்பி பார்த்துள்ளது

      இவ்வாறான இந்த ஒன்று பட்ட போராட்டத்தை தாமே நிகழ்தியதாக அரசியல்

      வியாபாரி நாரதர் சுமந்திரன் தெரிவித்துள்ளார் ,அந்த மக்கள் முன்பு பேசும்

      பொழுது இந்த கூட்டத்தில் அதிகம் பேசாதே ,சாணக்கியன் தனிமனித

      விடயம் பேசாதே என அங்கிருந்து மக்கள் சிலர் நேர்வாதமாக பேசியதும் ,

      மைக்கை கொடுத்து விட்டு சுமந்திரம் ஓட்டம் பிடித்த காட்சிகளும் பதிவாகியுள்ளது

      சுமந்திரனின் இந்த திமிர் பேச்சு மக்கள் மத்தியில் விசனத்தை கிளப்பியுள்ளது

      Posted in உலக செய்திகள்

      இந்தியா வெள்ளத்தில் சிக்கி 150 பேர் மரணம் – 100 பேரை காணவில்லை –

      இந்தியா வெள்ளத்தில் சிக்கி 150 பேர் மரணம் – 100 பேரை காணவில்லை – வீடியோ

      இந்தியா வடக்கு உத்தரகண்டா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில்

      சிக்கி நூற்றி ஐம்பது பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் அதே சம அளவான மக்கள் காணாமல் போயுள்ளனர் .

      இந்த உயிர்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது ,

      இது குறித்த காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் 93 வயதில் எம், ஏ, தேர்வு எழுதிய பாட்டியம்மா

      இலங்கையில் 93 வயதில் எம், ஏ, தேர்வு எழுதிய பாட்டியம்மா

      இலங்கையில் 93 வயதுடைய ,விதானகே லீலவதி எஸ்லின் தர்மரத்னே,

      என்ற நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் முதுமை மாணி பட்டம் பெற வேண்டும்

      என்ற நிலையில் டி.எஸ்.சேநாயக்க கல்லூரியில் அமைக்க பட்ட தேர்வு மையத்தில் பரிட்சையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்

      இவர் பாலி மொழியில் தேர்வு எழுதியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது ,


      இவரது கனவு இந்த வயதில் நனவாகிறது என்பதே தேர்வு மைய பொறுப்பதிகாரிகள் கருத்தாக உள்ளது

      கல்வி கற்பதற்கு வயதில்லை என்பது இது தான் போலும்

      Posted in உலக செய்திகள்

      தென் கொரியாவில் பறவை காய்ச்சல் – 26 மில்லியன் கோழிகள் அழிப்பு

      தென் கொரியாவில் பறவை காய்ச்சல் – 26 மில்லியன் கோழிகள் அழிப்பு

      தென் கொரியாவின் பல முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில்

      உள்ள பண்ணைகளில் கோழிகளுக்கு புதுவகை கோழி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது


      இதுவரை நடத்த பட்ட சோதனைகளில் இந்த வைரஸ் தொற்று பரவல் கண்டு பிடிக்க பட்டுள்ளது

      இதனை அடுத்து இதுவரை இருபத்தி ஆறு மில்லியன் கோழிகள் அழிக்க பட்டுள்ளன

      ,இதனால் ஐம்பது வீத முட்டை விற்பனை பாதிக்க பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

      163 கோழிகளில் நடத்த பட்ட சோதனை மூன்று வேறு நோயானது பரவியுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது ,

      மேற்படி நோயானது ஆசிய நாடுகள் தாண்டி ஐரோப்பாவுக்குள்ளும் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது