கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு
Posted in இலங்கை செய்திகள்

கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு

கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு

கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு ,லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயர் ஒன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த தோட்டத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்தே கடந்த 10 ஆம் திகதி சிசுவின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய ஆட்டோ சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது மாவனல்லை பகுதியில் இருந்து தமது தோட்டத்துக்கு வந்திருந்த பெண் ஒருவரின் பையே அது என அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய 24 வயதான பெண் கைது செய்யப்பட்ட, விசாரிக்கப்பட்டார். தனக்கும், குறித்த ஆட்டோ சாரதிக்கும் இடையில் இருந்த தகாத உறவு காரணமாகவே குழந்தை பிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவனல்லை பகுதியில் தான் வேலை செய்யும் வீட்டில் வைத்து கடந்த 5 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளதாகவும், தனது சகோதரியின் உதவியுடன் குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சடலத்தை புதைப்பதற்காகவே ஆட்டோவில் அதனை அக்கரபத்தனை பகுதிக்கு எடுத்து வந்ததாகவும் பொலிஸாரிடம் அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதிகாலைவேளையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் சடலத்தை தாய் கண்டு அக்கம், பக்கத்தினருக்கு தகவல் வழங்கியதால் அதனை செய்யமுடியாமல்போனதாக ஆட்டோ சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் பொலிஸ் பாதுகாப்புடன் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இப்பெண்ணையும், ஆட்டோ சாரதியையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், குறித்த பெண்ணின் சகோதரியையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பெண் கழுத்து நெரித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் கழுத்து நெரித்து கொலை

பெண் கழுத்து நெரித்து கொலை

பெண் கழுத்து நெரித்து கொலை ,துணியினால் கழுத்து நெரிக்கப்பட்டு மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உடுத்துறை வடக்கு, தாளையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் அதே இடத்தை சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் என தெரியவந்துள்ளது.

கழுத்து துணியால் சுற்றி நெரிக்கப்பட்டு கொலை

வீட்டில் உள்ள கழிவறைக்கு அருகாமையில் உள்ள நீர் நிரம்பிய கொள்கலன்(பரல்) உள்ளே தலைப் பகுதி நீரில் இருக்குமாறு குப்புற விழுந்த நிலையில் அதிகாலை 5.30 மணி அளவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபை வாசுதேவா பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

இதன்போது கழுத்து துணியால் சுற்றி நெரிக்கப்பட்டு சூட்சுமமான முறையில் கொலை செய்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

அத்துடன் உயிரிழந்த பெண்ணின், பெண்ணுறுப்புக்கு அண்மையாக தொடைப்பகுதியில் நகக் கீறல் காயங்களும் காணப்பட்டுள்ளதாக மருதங்கேணிப் பொலிசாருக்கு அவர் அறிக்கையிட்டுள்ளார்.

Posted in மருத்துவம்

கழுத்து வலியால் அவதியா அப்ப இதை பண்ணுங்க

கழுத்து வலியால் அவதியா அப்ப இதை பண்ணுங்க

ஆரோக்கியமான உணவு, தூக்கம் எப்படி முக்கியமோ, அதுபோல

உடற்பயிற்சியும் முக்கியம். இந்த மூன்றையும் சரியான முறையில்

பின்பற்றினால், உடல்நலக்குறைவும் வலிகளும் வராது. இந்த வார்ம்

அப் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராகச்

செல்ல உதவும். மூளை செல்கள் புத்துயிர் பெறும். கழுத்து வலி குறைவதை உணர முடியும். இறுக்கங்கள் நீங்கும்.

வார்ம் அப் நிலையில், உட்கார்ந்தபடியே கண்களைத் திறந்து,

ஆழமாக மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும். மெதுவாக மூச்சு

கழுத்து வலியால் அவதியா அப்ப இதை பண்ணுங்க

விட்டபடியே இடதுபுறமாகக் கழுத்தைத் திருப்பி, மூச்சை உள் இழுத்தபடி பழைய நிலைக்கு வந்து, மூச்சை வெளியேவிட வேண்டும்.

கழுத்தைத் திருப்பும்போது, இரண்டு விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இதேபோல், வலதுபுறம், மேல், கீழ் எனக்

கழுத்தைத் திருப்பி பயிற்சி செய்ய வேண்டும். கழுத்தை மட்டும் திருப்ப வேண்டும். இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தம் சீராகச் செல்லும். மூளை செல்கள் புத்துயிர் பெறும். கழுத்து வலி

குறைவதை உணர முடியும். இறுக்கங்கள் நீங்கும். இதனை

தொடர்ந்து செய்தால் கழுத்து வலி குறைந்து நேரான தோற்றத்தை பெற முடியும்.